I Saw The Devil (2010) | கொடூர வில்லன்

10
I Saw The Devil

I Saw The Devil படத்தில் வில்லன் தான் நாயகன் 🙂 இப்படம் முழுக்க பட்டையக் கிளப்புவது, வில்லனாக நடித்து இருக்கும் Choi Min-sik. யப்பப்பா! ரணகளம் என்றால் அப்படியொரு ரணகளமாக நடித்து இருக்கிறார்.

படம் பார்ப்பவர்கள், இவனைப் போட்டுத் தள்ளனும்டா என்று கொலை வெறியோடு கோபமாகி இருப்பார்கள். அந்த அளவிற்கு பீதியைக் கிளப்பி இருக்கிறார்.

பயமே தெரியாதவன்! எதைப் பற்றியும் கவலைப்படாதவன்!! எதற்கும் துணிந்தவன்!!! இப்படிப்பட்ட ஒருவன் சைக்கோ கொலைகாரனாக இருந்தால் என்ன நடக்கும்.

இவனால் தன்னுடைய காதலியை இழந்து தாறுமாறான கோபத்தில் இருக்கும் ஒருவன் இவர்கள் இருவருக்கும் நடக்கும் யுத்தமே படத்தின் கதை.

துவக்கமே அதிரடி

சில படங்கள் கதை ஆரம்பிக்க ரொம்ப நேரம் ஆகும், சில நிமிடங்களில். I Saw The Devil இரண்டாவது வகை.

பனி பெய்துகொண்டு இருக்கும் நள்ளிரவு, ஒரு பெண் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சி.

துவக்கத்திலேயே வில்லன் எப்படிப்பட்டவன் என்பதை தெளிவாகக் கூறி விடுவதால் படம் முழுக்க பயமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவன் விருப்பப்பட்டு! கொலை செய்வது பெண்களை, பொழுது போகாமல்!! கொலை செய்வது ஆண்களை.

பெண்களைக் கொலை செய்யும் முன்பு வன்புணர்வு (RAPE) செய்து பின் கொலை செய்து விடுவான்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் காதலன் (Lee Byung-hun) இறந்த காதலி படத்தின் முன்பு சத்தியம் செய்து இருப்பார்.

நீ அடைந்த வலியை விட பல மடங்கு வலியை உன்னை இப்படி செய்தவனுக்கும் உணர வைப்பேன்” என்று.

காவல்துறை துறை அதிகாரியாக இருப்பதால், யார் யார் இந்த வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று ஒரு பட்டியல் எடுத்து அதில் ஒவ்வொருவராகப் பார்த்து விசாரிக்கும் போது அதில் மாட்டும் முதல் நபரை அவர் விசாரிக்கும் முறை அதகளம்.

Lee Byung-hun மனது முழுதும் மரத்துப்போய் எண்ணம் முழுவதும் பழிவாங்குவதிலேயே இருக்கும். சிரிப்பு எல்லாம் தொலைந்து போய் ஒரு இயந்திரம் போல மாறி இருப்பார்.

தவறான கணிப்பு

தன் காதலி அனுபவித்த வேதனையை விட பல மடங்கு அதிகமாக வில்லன் Choi Min-sik பட வேண்டும் என்று அவரைத் தர்ம அடி அடித்து, வேண்டும் என்றே தப்பிக்க வைத்து மீண்டும் தவறு செய்யும் போது சரியான நேரத்தில் வந்து அடி பின்னி எடுப்பார்.

நிஜமாகவே வித்யாசமாக இருக்கும் ஆனால் இவ்வாறு தப்பிக்க விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின் உணருவார்.

Lee Byung-hun பேசுவதை ஒரு பக்க A4 தாளில் எழுதி விடலாம் ஆனால், படம் முழுவதும் அதிரடியாக இருக்கும் இவரது நடிப்பு.

இவர் ஒரு மாடல், பாடகர் என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டவர்.

வில்லன் Choi Min-sik வாங்கிய அடிக்காக மருத்துவமனைக்குச் சென்று அங்கே இருக்கும் ஒரு (Nurse) பெண்ணைப் பார்த்து வன்புணர்வு செய்யத் தயாராகி விடுவார்.

என்ன ஆகப்போகிறதோ! என்று அனைவரும் பயத்துடன் இருக்க…. என் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண் பயந்து எழுந்து சென்று விட்டார் 🙂 .

Choi Min-sik பயமுறுத்தும் உடல்மொழி

எங்கு சென்றாலும் எப்படி நம்மைக் கண்டு பிடிக்கிறான்? என்று Choi Min-sik செம கடுப்பில் இருப்பார்.

இப்படி நம்மைத் தப்பிக்க விட்டுத் தப்பிக்க விட்டு அடி சாத்துறானே என்று உச்சக்கட்ட கோபத்தில் இருப்பார்.

Choi Min-sik உடல்மொழி அசத்தலாக இருக்கும்.

எதிராளிகளிடம் பேசும் முறை, எதற்கும் பயப்படாதது, பேசியே ஒருவரை பயமுறுத்துவது, யாருக்கும் கருணை காட்டாதது, எதைப் பற்றியும் கவலைப்படாதது என்று  ரணகளமாக மிரட்டி இருப்பார்.

எத்தனையோ வில்லன்களை இதை விடக் கொடூரமாக நடந்து கொண்ட வில்லன்களைப் பார்த்து இருந்தாலும் “தி பெஸ்ட்” என்று இவரைத்தான் கூற முடிகிறது.

இவர் அளவிற்கு வேறு யாரும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

பின்னணி இசை பரபரப்பை அதிகப்படுத்தும். மரண பயம் ஏற்படுத்தும்.

தப்பிக்க விடும் சமயங்களில் அனாவசிய கொலைகள் நடந்து விடும். இருந்தும் Lee Byung-hun ஏன் இவ்வாறு செய்தார் என்று கொஞ்சம் கடுப்பாக இருந்தது.

வெட்டப்படும், அடிக்கப்படும் காட்சிகள் எல்லாம் நிஜம் போலவே இருக்கும். எப்படி எடுத்தார்கள்? என்று வியப்பாக இருந்தது!

எனக்கு எந்த ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் கடைசியில் ஒரு ஜஸ்டிஸ் இருக்க வேண்டும் ஆனால், இதில்  “இருக்கு ஆனால் இல்லை” என்பது போலத்தான் உள்ளது.

இது வரை ஹாரர் படங்களை இணையத்திலே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு முதல் முறையாகத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

I Saw The Devil 2010 லேயே வெளியாகி விட்டது.

நானும் இணையத்தில் பல மாதங்களுக்கு முன்பே தரவிறக்கம் செய்து பார்த்து விட்டேன். இப்படம் சிங்கப்பூர் திரையரங்கில் கடந்த செப்டம்பர் 15 2011 ல் வெளியானது.

Directed by    Kim Ji-woon
Produced by    Kim Hyung-woo, Jo Sung-won, Kim Jae-young, Kim Jung-hwa
Written by     Park Hoon-jung
Starring       Lee Byung-hun, Choi Min-sik
Music by       Mowg
Cinematography  Lee Mo-gae
Editing by      Nam Na-young
Release date(s) August 12, 2010 (South Korea), March 4, 2011 (United States)
Running time   144 minutes
Country         South Korea
Language            Korean

Read: குலை நடுங்க வைத்த “Hostel” – திரைவிமர்சனம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. கிரி, கடந்த 10 வருடங்கள்ல வந்த horror /thriller படங்கள்ல பாத்திங்கன்னா கொரியன் படங்களோட பங்கு முக்கியமானது

    there are lot of movies better than I saw the devil, below are my favorites

    – old boy (not a horror movie)
    – A Tale of Two Sisters (Horror)
    – Memories of Murder (One of my best, not so much explicit scenes like i saw devil/chaser but most chilling screen play)
    – The Chaser

    one of the movies i saw in recent times is more creepier than above is

    – El Orfanato (spanish film)

    Check these out when you have a time.

    Cheers

  2. நீங்கள் ஹாரர் பட ரசிகர் என்பதால் உங்களுக்கு இதை சொல்கிறேன். seed என்று ஒரு படம் முடிந்தால் பார்க்கவும். அதில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணை நாற்காலில் கட்டி போட்டு கொலையாளி ஒரு சுத்தியலை வைத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவள் தலையில் அடித்து கொலை செய்யும் காட்சி வயிற்ரை புரட்டி எடுக்கும். இதை பத்து நிமிஷம் ரோலிங் கேமரா ஷாட் வகையில் காட்டி நம்மை வாந்தி எடுக்க வைத்திருப்பார் டைரக்டர்.தலையில் ஆணி அடிப்பது போன்ற சில உப கொலை வகைகளும் உண்டு. பார்த்து விட்டு அதற்க்கும் பதிவு எழுதவும்.

  3. Giri, I am known for my passion for horror among my friends and my best horror film is REC. I don’t know how you watch horror movies but I strictly watch horror movies alone, with headphones over my ears and the only light in the room would be from the monitor/laptop screen. Why I like REC is, of all the horror movies I have so far watched, REC was the only one which frightened me a little. I am trying to download ‘I Saw The Devil’ but no healthy torrents so far available.

  4. கிரி, ஒரு வழியாக படத்தை தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்பதி.

    வில்லன்னா இவர் தாங்க வில்லன். மிரட்டலான நடிப்பு. எவ்வளவு அடி வாங்கினாலும் சைகொத்தனம் ஜாஸ்தி ஆகுதே தவிற, ஒன்றுக்கும் ஆளு அசறதா தெரியவில்லை. எனக்கு ரொம்ப பிடித்த காட்சி: க்ளைமாக்ஸ்சில் வில்லன் திருந்திட்டாருன்னு நாயகன் நினைகிறப்போ நம்ம ஆளுவோட சுயருபம் வெளியவரும். அபார நடிப்பு. ஒரு அசத்தலான கதாபாத்திரம்.

    நம்ம தமிழ் படம் மாதிரி எங்க தன் காதலியின் தந்தையையும் தங்கையையும் காப்பாற்றி விடுவாரோன்னு நினைச்சேன். நல்ல வேளை இல்லை.

    என்னை பொருத்த வரைக்கும் வில்லன்தான் கடைசியில் ஜெயித்தார். இந்த படத்திற்கு இது தான் சரியானதும்கூட.

    இப்போ ‘Memories of Murder’ படத்தை தரவிறக்கம் செய்திருக்கிறேன்.

  5. @ரமேஷ் வேல் நீங்க கூறியதில் ஸ்பானிஷ் படம் இன்னும் பார்க்கவில்லை.

    @Karl Marx Seed படம் பார்த்து விட்டேன். இந்தப்படம் பயங்கரமா இருக்கும் ஆனால் ரசிக்கும்படி இருக்காது 🙂 ஆரம்பத்திலேயே பீதியை கிளப்புவார்கள்.

    @Barney எனக்கு பெரிய டிவியில் உடன் எவருமில்லாமல் (நல்லா ஆடியோ சிஸ்டம் உடன்) பார்க்க ரொம்ப விருப்பம் 🙂

    நீங்க நான் கூறியதற்காக “I saw the devil ” பார்த்ததற்கு நன்றி. வில்லன் செம. பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.

    இன்னும் சில நல்ல படங்கள் பற்றி நேரம் இருக்கும் போது எழுதுகிறேன். இதை நிறைய எழுதுனா மற்றவங்க டென்சன் ஆகிடுவாங்க 😉

    @தினேஷ் தரவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கிறது. பார்த்து விட்டு கூறுகிறேன்.

  6. செம்ம படம் கிரி… ஹீரோ வில்லன் ரெண்டு பெரும் அசத்தலா நடிச்சிருக்காங்க. அந்த வில்லன் நடிகர இங்க போட்டோல பாத்தா கூட பயமா இருக்குது. 🙂

    ஹாஸ்டலும் பாத்துட்டேன். எனக்கு ஹாஸ்டல விட “I Saw the Devil” ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அடுத்தடுத்த நாள்ல இந்த ரெண்டு ஹாரர் படத்தையும் நான் மட்டும் தனியாவே உக்காந்து (அதுவும் ராத்திரியில) பார்த்துட்டேன். 🙂

    எனக்கு ஒரு சாதாரண த்ரில்லர் படத்த ராத்திரியில பாத்தா அன்னிக்கு தூக்கம் கோவிந்தாதான். அதுவும் தனியா உக்காந்து பாத்தேன்னா அவ்ளோதான். ஆனா நல்ல வேலையா இந்த ஹாரர் படங்கள் அந்த மாதிரி எந்த பாதிப்பும் ஏற்படுத்தலை. 🙂

  7. அநேகம் கொரியன் படங்களையும் பாத்தாச்சு. இந்தப் படம் ரொம்பவே அருமை. ரமேஷ் சொன்ன மாதிரி CHASER இன்னும் அழகு.

    இந்த வரிசையில் மேலும் பரிந்துரைகள் இருந்தா சொல்லவும்.

    கொரியன் படங்களில் ஆட்களைக் கொல்ல சுத்தியால் மண்டையில் அடிப்பது கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு. திகிலான டேஸ்ட்டு அவங்க்ளுக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here