மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

2
Akira Miyawaki மியாவாக்கி காடு வளர்ப்பு முறை

யற்கையில், மரங்கள் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை பற்றிக் கேள்விப்பட்டு இருக்கலாம்.

“மியாவாக்கி” காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

ஜப்பானை சேர்ந்த Akira Miywaki என்பவர் உருவாக்கிய முறையே அவரது பெயரால் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

இம்முறையில் வளர்க்கப்படும் மரங்கள் வழக்கமாக வளரும் மரங்களை விட 7 / 10 மடங்கு வேகத்தில் வளரும். அதாவது வளர 10 வருடங்கள் எடுக்கும் மரங்கள் ஓரிரு வருடங்களில் வளர்ந்து விடும். அபரிமிதமான வளர்ச்சி.

மழைப் பொழிவை மீட்டுக் கொண்டு வருவது இதனுடைய ஆகச் சிறந்த பயன்.

நடுவதற்குண்டான முன்னேற்பாடுகள் மட்டுமே கொஞ்சம் சிரமம், பின்னர் வளர்ப்பு எளிதாகி விடும். முழுக்க இயற்கையானது (Organic) என்பதால், இதன் பிறகு எந்தச் செலவுமில்லை.

தற்போது இம்முறையில் இந்தியாவின் பல மாநிலங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. கேரளா அதிகளவில் செய்து வருகிறது, குறிப்பாக அரசாங்கமே இதில் ஈடுபாடு காட்டி வருகிறது.

தமிழகத்திலும் பல இடங்களில் அவரவர் வைத்துள்ள இடத்திற்கு ஏற்ப காட்டை அமைத்து வருகிறார்கள். மியாவாக்கி முறைக்குக் குறைந்த இடமே போதுமானது என்பதால், எவரும் இதை முயற்சிக்கலாம். தன்னார்வலர்கள் இம்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கோவை போன்ற இடங்களில் தன்னார்வலர்கள் இம்முறையிலேயே பெரியளவில் மரக்கன்று நட்டு வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

ஜப்பான்

ஜப்பானில் மரம் வளர்ப்பதற்கான நிலப்பரப்புக் குறைவு என்பதாலே, இம்முறை மிக விரைவில் வெற்றி பெற்றுள்ளது. இதனுடைய வளர்ச்சி பெரியளவில் இருப்பதும் மிக முக்கியக் காரணம்.

இனி யாரவது ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் மரம் வளர்க்கிறேன் என்று பழைய முறையில் மரம் வளர்த்தால், அவர்களை நினைத்துப் பரிதாபப்பட மட்டுமே முடியும்.

ஏனென்றால், பழைய முறையில் முக்கி முக்கி வளர்ப்பதை மிக எளிதாக இம்முறையில் செய்து விடலாம் அதோடு இதில் உடனடியாகப் பழைய முறையை விட மிகப்பெரிய பலனையும் பெற்று விடலாம். நாம் நட்ட மரத்தின் பலனை நாமே காணலாம்.

எனவே, இனி மரக்கன்று பெரியளவில் நட எவரும் திட்டமிட்டால், தயவு செய்து பழைய முறையில் நட்டு உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.

Hard Work என்பதை விட Smart Work தான் சிறந்தது.

மியாவாக்கி காடு வளர்ப்பு முறையைத் தங்களுடைய நிறுவன இடத்தில் செயல்படுத்திய ஒரு தனியார் நிறுவனத்தின் அனுபவங்களைப் பாருங்கள். மிகச் சுவாரசியமாக உள்ளது.

இந்த முறை குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடையே இல்லையென்பது வருத்தமளிக்கிறது. இது தெரியாமல் வழக்கமான முறையில் வளர்த்துச் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மியாவாக்கி முறை பற்றி உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி மற்றவர்களையும் ஆர்வமூட்டுங்கள். காலத்தைச் சேமிக்க மட்டுமல்ல மழைப் பொழிவையும் மீட்க  மியாவாக்கி காடுகள், மியாவாக்கி மரம் வளர்ப்பு முறை உதவும்.

தமிழகம் பசுமைத் தமிழகமாக மாற உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

கொசுறு

இக்காடு வளர்ப்பு குறித்த செய்முறை விளக்கங்கள் YouTube ல் ஏராளம் உள்ளன.

தொடர்புடைய கட்டுரை

மரக்கன்று நடுதல் என்ற வெட்டி வேலை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. எதை நோக்கி பயணிக்கிறேன் என்று தெரியாமலே, என் நாட்காட்டியில் தேதிகள் கிழித்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கட்டுரையை படிக்கும் பொன்னான வாய்ப்பு.. என்னுடைய பயணம் என்ன என்பதை நான் தீர்மானித்து விட்டேன்.. மியாவாக்கியின் அறிமுகம் எனக்கு கலங்கரை விளக்கம்..

    இவரை குறித்து நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.. இனி நிச்சயம் என்னுடைய தேடல் இவரை குறித்து இருக்கும்.. இவரை குறித்த புத்தகங்கள் ஏதேனும் தமிழில் இருக்குமானால் தெரிவிக்கவும்.. எதிர்காலத்தில் மியாவாகியின் காட்டிற்கு நிச்சயம் உங்களை எதிர்காலத்தில் அழைத்து செல்கிறேன்… தகவலுக்கு நன்றி கிரி..

  2. நன்றி யாசின். நீங்க காடு வளர்ப்பில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதே எனக்கு தற்போது தான் தெரியும்.

    காடு வளர்த்தால் கூறுங்கள், வந்து பார்க்கிறேன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here