இன்ஸ்டன்ட் மரம் வளர்ப்பு

23
Greenary இன்ஸ்டன்ட் மரம் வளர்ப்பு

 ரசாங்கம் / பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலையைத் தனி மனிதர்கள் ஆர்வமாகச் செய்து வருகிறார்கள். அர்ஜுனன் என்பவர் இன்ஸ்டன்ட் மரம் வளர்ப்பு கூறுகிறார்.

என்னதான் தனி மனிதர்கள் தங்களின் கடும் முயற்சியில் சாதிக்க முடிந்தாலும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரியளவில் சாதிக்க முடியாது.

லட்சத்தில் / கோடியில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். Image Credit

இன்ஸ்டன்ட் மரம் வளர்ப்பு

ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று விருப்பம்.

எது செய்தாலும் உடனே விடை தெரிய வேண்டும், யாருக்கும் காத்திருக்க பொறுமையில்லை.

இதனாலோ என்னவோ அர்ஜுனன் மரம் வளர்க்க ஆகும் காலத்தை எப்படி குறைத்து பயன் பெறுவது என்று யோசித்து ஒரு எளிமையான முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

நன்றி கல்கி மற்றும் பாலஹனுமன்

இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது.

எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும்.

அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.

செப்பறை வளபூமி பசுமை உலகம்

மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.

என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு.

ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வர்றேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

6 அடி உயரமுள்ள மரக்கிளை

அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.

உங்கள் வீட்டில் இடம் இருந்தால்,  ஒரு மரமாவது வையுங்கள்.. அட! முடியாத பட்சத்துக்கு ஒரு செடியாவது வைங்க. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

தொடர்புடைய கட்டுரை

மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

 1. நல்ல ஒரு சேவை.

  நாம் அடுத்த தலைமுறைக்கு கண்டிபாக செய்ய வேண்திய கடமை நமக்கு உண்டு.

  நான் என் பங்குக்கு கடந்த ஒரு வருடம் இதுவரை 6 மரங்களை நட்டு உள்ளேன்.

  அனைவரும் வருடத்துக்கு 2 மரம் நட்டு வந்தால் நாம் நம் நாட்டையும் நம் சமுதாயத்தையும் காக்கலாம் மழை வரமும் பெறலாம்.

 2. மிக பயனுள்ள தகவல் கிரி..
  இனிமேலாவது மக்கள் மற்றும் அரசாங்கம் மரங்கள் நடுகிறார்களா பார்ப்போம்..(பாஸ்ட் foods போல..instant trees )

 3. நான் என் பங்குக்கு 5 மரம் வைத்து வளர்த்து வருகிறேன்

 4. வணக்கம் கிரி அவர்களே

  அருமையான பதிவு அவசியமான பதிவும்கூட என் மனதிலும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்து ஒரு பதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அது உங்களின் பதிவு மூலம் பூர்த்தியாகியது

  நன்றி,.

 5. ரொம்ப நல்ல கருத்து
  அர்ஜுனன் சார் கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  – அருண்

 6. சிறு வயதில் 5 ஆம் பாட புத்தகத்தில் மரம் நடுவிழா என்ற ஒரு பாடம் இருக்கும். அதில் மரம் வளர்பதினால் உண்டாகும் நன்மையை பற்றியும், அவைகளின் அத்தியாவசத்தை பற்றியும் தெளிவாக கூறியிருப்பார்கள். சிறு வயதிலே மரம், செடி கொடிகளின் மீது ஏற்பட்ட காதலினால் இவைகளுடன் என்னுடைய அதிக அளவனான நேரத்தை கழித்தேன். அந்த வசந்த நாட்கள் மீண்டும் திரும்பாது. நான் இயற்கையின் காதலன். என்னுடைய கடந்த காலத்தை நான் இயற்கையுடன் செலவு செய்துள்ளேன்..
  உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் முதியவர் மரங்களின் மீது காட்டும் பரிவையும், பாசத்தையும் காண்பதர்காகவே அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்பேன். மரங்களை வெறும் ஜெட பொருளாகவும், வியாபாரமாகவும் பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் அவைகளை ஒரு உயிராக பார்க்கும் அர்ஜுனனை நான் நேசிக்கிறேன்.. . நிஜத்தில் அர்ஜுனனை அந்த முதியவர் இடத்தில நான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..

 7. நல்ல பயனுள்ள பதிவு. தகவலுக்கு நன்றி கிரி.

 8. நல்ல பதிவு.

  இந்த லிங்க் தப்பா இருக்கு, சரி பண்ணிடுங்க. க்ளிக் பண்ணா உங்க ப்ளாக்குக்கே திரும்ப வருது.

 9. கிரி,

  திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் ரோட்டின் ஒருகரையில் இருந்த மரம் அத்தனையும் வெட்டிவிட்டார்கள். கிட்ட தட்ட 60 கிமீ தூரத்திற்கு. ஒரு கிலோமீட்டருக்கு 50 மரம் என்றாலும் 3000 மரம் அம்பேல்.

 10. நானும் என் வீட்டில் 2 மரங்களை வைத்திருக்கிறான்.

 11. திருநெல்வேலி வண்ணார்பேட்டை நெடுன்சாலைஇல் இருந்த நாவல் மரங்களை வெட்டி ஒன்று கூட இல்லாமல் ஆகீடனுங்க.

  மரம் இல்லாமல் மனிதன் இல்லை
  மனிதன் இல்லாமல் மரம் ஊண்டு
  மரம் வளருங்கள் இல்லை இல்லை காடு வளருங்கள்

 12. கிரி, இந்த மழை நீர் சேகரிப்பு இன்னும் எடுத்த மாதிரி தெரியலையே?? அப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்களா? சந்தேகமாக இருக்கு.

  மரம் நடுவது நல்லது தான் அதையும் சரியான பிளான் பண்ணி சாலையை மற்றும் நடைபாதையை விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி நட்டால் பல ஆண்டுகளுக்கு அதன் மீது கைவைக்காமல் இருக்கலாம் அதோடு கிளை கழித்துவிடும் செலவை எப்படி ஈடு கட்டுவது போன்றவையும் யோசித்து செயல்படலாம்.அதே போல் மண் வளத்தை பாதிக்கும் கருவேல மரங்களை வெட்டிவிடலாம்.

 13. Typed with Panini Keypadமண்ணுக்கு போராடும் மக்களே மரம் நடடுவோம் மாதவம் செய்வோம் மறுபிரவிக்கு .புண்ணியம் தேடி காசிக்கும் வேண்டாம் கடவுளைத்தேடி கோவிலுக்கும் வேண்டாம் காசைத்தேடி தேடி கடைசியில் களங்கின்று கடமையை செய்யாத கையாலாகதவனாய் நோகவும் வேண்டாம் கண்று நட்டு கடமையை செய்தோமென்று தலைமுறைக்கு தண்ணீர் தந்த தனனிகரில்லா தானத்தை செய்தோமென மகிழ்வாயாக.

 14. எனக்கு மிகவும் பிடித்தது மரம் நடுவது. நான் இதுவரை நான்கு மரங்களை வளர்த்துள்ளேன். எனக்கு தெரிந்து ஓதிய மரம், நோசில்லி மரம் போன்ற சில மரங்கள் தான் கிளை வைத்தால் வளரும். இது போன்று மரங்களை பயிர் செய்து தருபவர்கள் யாராவது சென்னயில் உள்ளார்களா. இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

 15. ஒவ்வொரு தலைவரின் பிறந்த நாளிலும் 66 இலட்சம் மரம், 67 இலட்சம் மரக் கன்றுகள் நடுவதாகச் சொல்லி இலட்சக்கணக்கில் செலவு செய்து விழா நடத்துகிறார்கள். அப்படி நட்டிருந்தால் இந்நேரம் தமிழ்நாடே அமேசான் காடாக மாறியிருக்கும். நம் அரசியல்வாதிகள் வாய்ச் சொல்லில் வீரர்கள். தி.மு.க. தேர்தல் தேர்தல் அறிக்கையில் 103 – ஆம் பக்கத்தில் 376 – வது அறிக்கையாக மரம் நடும் திட்டத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 16. என்னக்கு Mr அர்ஜுனன் அவர்களின் போன் நம்பர் வென்னும், யாரிடமாவது இருத்தல் தயவுசேது பகிரவும்.

  நன்றி

 17. Very fraud person.He uses publicity for this for doing money.ask that person any question never he answered. U s no.9791426281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here