ரஜினிக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா?

106
ரஜினிக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா?

ஜினி சம்பாதிப்பது, என்னை வாழ வைத்த மண் தமிழ்நாடு ன்னு சொல்ல வேண்டியது. Image Credit

ஆனால்,  சொத்து வாங்குவது மட்டும் பெங்களூரில், நல்லா ஊரை ஏமாத்துறான்யான்னு சொல்லுறாங்க மற்றும் சொல்லிட்டு இருக்காங்க.

ஒவ்வொரு முறை ரஜினி படம் வரும்போதும், அவர் பேச்சு அடிபடும் போதும் இந்தப் பிரச்சனை எழுகிறது.

ரஜினிக்கு ஒரு நியாயம்!

ரஜினி இந்தியால தானே சொத்தை வாங்குகிறார், பாகிஸ்தானிலோ ஆப்கானிஸ்தானிலோ வாங்கவில்லையே.

அட! அவர் ஜப்பான்லையே வாங்கட்டும் அப்படியே வாங்கினாலும் அது அவரது விருப்பம். இதில் இவர்களுக்கென்ன பிரச்சனை.

அவர் என்ன அரசியல்வாதிகள் போல ஊர் சொத்தைக் கொள்ளை அடித்து, அடுத்தவனை இம்சித்து மிரட்டி இடம் வாங்கினாரா?

இவரின் இந்த நிலை எதோ திடீரென்று இரண்டு நாளில் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல.

நடத்துனராக இருந்து, நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னை வந்து இருக்க இடம் இல்லாமல் பிளாட்பாமில் படுத்து 30 வருடம் திரை துறையில் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்.

கொள்ளை அடித்துச் சேர்த்த பணம் அல்ல

எதோ இரண்டு படம் ஓடியதாலோ அல்லது MLA MP னு ஆகி ஊர் பணத்தைக் கொள்ளை அடித்துச் சேர்த்த பணம் அல்ல.

தற்போது பலர் பெங்களூரில், ஹைதராபாத்தில், அமெரிக்காவில், சிங்கப்பூரில் மற்றும் பல வெளி நாடுகளில் வேலை செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கு இருப்பவர்களிடம் அந்தப் பகுதி மக்கள் “நீங்கள் இங்கே தானே சம்பாதிக்கிறீர்கள்!

நீங்கள் அனைத்து பணத்தையும் இங்கே தான் முதலீடு செய்ய வேண்டும்!” என்றால் ஒத்துக்கொள்வார்களா?!

சம்பாதிக்கிறது எங்க இடத்துல ஆனா சொத்து வாங்குறது தமிழ் நாட்டுலயான்னு கேட்டா யாராவது ஒத்துக்கொள்வார்களா?

அப்ப ரஜினிக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா?

ரஜினி சம்பாதிக்கிறார், வரி கட்டுகிறார், அவருக்குப் பிடித்த இடங்களில் இடம் வாங்குகிறார், இது எப்படித் தவறாகும்?

நாம் எப்படியொரு வேலையில் இருக்கிறோமோ அதே போல அவர் நடிப்பதும் ஒரு வேலையே.

ஒரே வித்யாசம் நம்மவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள், அவர் கோடிகளில் சம்பாதிக்கிறார்.

நாங்க என்ன ரஜினி மாதிரி டிக்கெட் விலை 300 400 வைத்து ஏமாத்திட்டா இருக்கிறோம்னு யாராவது கேட்டால்..

இங்கே நடப்பது எதுவும் கட்டாயபடுத்துதல் கிடையாது, விரும்பினால் வாங்கலாம் இல்லை என்றால் வாங்க தேவையில்லை.

கோடிகளில் பணம் போட்டுப் படம் எடுப்பவர்கள், தங்கள் பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று நினைப்பது.. ஒரு வியாபாரி தன் பொருளை விற்கும் போது என்ன வழிமுறைகளைப் பின்பற்றுவாரோ அதைப் போலத் தான்.

படம் வெளிவந்து இரண்டாவது நாளே திருட்டு DVD வந்து விடுகிறது அல்லது விவேக் ஒரு படத்தில் கூறுவது போலப் படம் எடுக்கும் போதே தயார் ஆனாலும் வியப்பதிற்கில்லை.

எனவே, போட்ட பணத்தை எவ்வளோ சீக்கிரம் எடுக்க முடியுமோ அவ்வளோ சீக்கிரம் எடுக்க நினைப்பது பணம் போட்ட தயாரிப்பாளரின் நிலை.

அதனாலேயே தற்போது படங்களை அதிகத் திரை அரங்குகளில் வெளியிடுகிறார்கள்.

ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?

இது அனைத்து நடிகர்களுக்கும் நடப்பது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?

டிக்கெட் விலை வித்யாசப்படலாமே தவிர இது ரஜினி மட்டுமே செய்யும் ஒன்று என்று யாரும் கூற முடியாது.

ரசிகர்களை வைத்துச் சம்பாதிக்கிறார் அதில் சம்பாதிக்கும் பணத்தை ரசிகர்களுக்குச் செலவு செய்ய வேண்டியது தானே என்ற குற்ற சாட்டு.

ரஜினி கொடுக்கலாம் என்று நாம் கூறலாமே தவிர, கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று கூற மற்றவர்களுக்கு உரிமை கிடையாது.

இத்தனை கேள்வி கேட்பவர்கள் ஏன் ஊரைக் கொள்ளை அடித்து, போடாத சாலையைப் போட்டதாகக் கணக்கு காட்டும், செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை வாக்கும் போட்டவன் என்கிற முறையில் கேட்கும் உரிமை இருந்தும் ஏன் கேட்பதில்லை?

ஏன்னா! எவனைக் கேட்டால் பிரச்சனை இல்லையோ அவனைத் தான் போட்டுக் காய்ச்ச முடியும். இவர்களை எல்லாம் கேட்டால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்று தெரியும்.

கேள்வி கேட்கறது தவறுன்னா சொல்றேன், கேட்குற கேள்வி நியாயமா இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

106 COMMENTS

  1. ஜோ நீங்க இவ்வளோ தூரம் விளக்கம் கொடுக்கவே தேவையில்லை, அதை நானே முதல் பாராவில் கூறி இருக்கிறேன்.

    இப்படி கூறினால் இங்கே தான் இடம் வாங்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

    //அதற்கு மேலே ஒன்றும் சொல்ல முடியாது ..தலையிலடித்துகொள்வதைத் தவிர.//

    நீங்க ஏங்க அவ்வளோ கஷ்ட படுறீங்க…கண்டுக்காம விட்டுடுங்க

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜோ.

  2. Bleachingpowder உங்கள் வருகைக்கு நன்றி

    ————————-

    //கோவி.கண்ணன் said…
    ரஜினி வாழ்க !//

    ஹா ஹா ஹா கோவி கண்ணன் உங்கள் வருகையை நான் உடனடியாக எதிர்பார்த்தேன், நீங்க கொஞ்சம் லேட்.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! நன்றி 🙂

  3. தனக்குக் கிடைத்த பேரையும் புகழையும் ஒரு படத்திற்கு 100 கோடி, 50 கோடி என்று விற்பனை செய்யும் ரஜினி சார் வாழ்க.

    ‘ஏழேங்கெ கஷ்டப்படுறாங்க..’ ன்னு சினிமாவில் வசனம் வைக்காமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் 50 கோடி, 100 கோடி எல்லாம் ஏழெங்கெ விடம் வசூல் செய்யப்படப் போகும் பணம் தான்.

  4. // கோவி.கண்ணன் said…
    தனக்குக் கிடைத்த பேரையும் புகழையும் ஒரு படத்திற்கு 100 கோடி, 50 கோடி என்று விற்பனை செய்யும் ரஜினி சார் வாழ்க.//

    கோவி கண்ணன் உங்களுக்கு தான் எவ்வளோ பரந்த மனசு :-))))

    //’ஏழேங்கெ கஷ்டப்படுறாங்க..’ ன்னு சினிமாவில் வசனம் வைக்காமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் 50 கோடி, 100 கோடி எல்லாம் ஏழெங்கெ விடம் வசூல் செய்யப்படப் போகும் பணம் தான்.//

    இந்த வசனம் இல்லாம தமிழ் படமே எடுக்க முடியாதே ஹி ஹி ஹி ஹி

    ————————————-

    // Sen22 said…
    அருமையான ஒரு அலசல்….//

    நன்றி செந்தில் உங்கள் வருகைக்கும் சேர்த்து

  5. // இவன் said…
    இதில விஜய் பத்தின ஒரு உள்க்குத்தும் இல்லையே??//

    நீங்க ஏங்க விஜய்க்கு எல்லாம் போறீங்க..நம்ம சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் போதாதா அதற்க்கு :-))

  6. // ஜோ / Joe said…
    கிரி,
    ‘சட்டம்’ ,’தார்மீகம்’ ரெண்டுக்கும் வேறுபாடு இருக்குங்க .

    யாரும் இங்கே சட்டப்படி தவறு காணவில்லை//

    உங்கள் நாகரீகமான கருத்திற்கு நன்றி ஜோ.

    ரஜினியும் நிறைய உதவி பண்ணுறாருங்க..நாம் ஊடகங்கள் சொல்வதை வைத்தே பேசுகிறோம். உங்களுக்கும் எனக்கும் அவர் உதவி எதுவும் பண்ணவில்லை என்று உறுதியாக தெரியுமா?

    ஜோ இந்த பதிவை பார்த்து என்னை பற்றி எந்த முடிவிற்கும் வந்துடாதீங்க..:-)))

  7. // இவன் said…
    நானே அனுப்பி வைக்கிறேன் ஆட்டோவ addressஅ சொல்லுங்க கிரி//

    என்ன ஒரு வில்லத்தனம் ம்ம்ம்

  8. கிரி சார்,

    உங்கள் தலைப்பை வைத்தே……

    எல்லோரைப் போல் அவரும் சராசரி ஆள் என்று சொல்லிவிட்டால். அதன் பிறகு வான் அளவில் புகழ்வது, துதிபாடுவது எல்லாம் கூட தேவையற்றதே என்றும் சொல்லிவிடலாம். ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா ?

  9. //குறைந்த பட்சம் தான் தமிழர்கள் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை தமிழர்கள் பகுதியிலே அவர்கள் பயனுறும் வண்ணம் முதலீடு செய்யலாமே என்று தான் விமர்சனம் வைக்கப்படுகிறது .//

    ஜோ நான் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்..விமர்சனம் விமர்சனமாக இருந்தால்.

    சரி அரசியல் வாதிகள் இதை விட மோசமாக செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களை ஏன் கேட்பதில்லை?

    //ரஜினி என்ற நடிகனை எந்த கோணத்தில் ரசிக்க வேண்டுமோ அந்த கோணத்தில் நன்றாகவே ரசிப்பவன் தான்.//

    நானும் 🙂

  10. // கோவி.கண்ணன் said…
    கிரி சார்,
    உங்கள் தலைப்பை வைத்தே……
    எல்லோரைப் போல் அவரும் சராசரி ஆள் என்று சொல்லிவிட்டால். அதன் பிறகு வான் அளவில் புகழ்வது, துதிபாடுவது எல்லாம் கூட தேவையற்றதே என்றும் சொல்லிவிடலாம். ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா ?//

    கோவி சார் இத்கேல்லாம் ரொம்ப பீல் பண்ணாதீங்க சார்

    இப்படி அநியாயத்துக்கு பீல் பண்ணுறீங்க ..என்னமோ போங்க

  11. // VIKNESHWARAN said…
    இப்படி நாக்கப் புடுங்கிகற மாதிரி கேட்க்கும் அளவுக்கு என்னங்க கொள வெறி??//

    “கொல வெறி” :-))

    அட! நீங்களே பாருங்க எப்படி காண்டுல இருக்காங்கன்னு ..கொலை வெறி எனக்கா மற்றவங்களுக்கானு தெரியல :-))

    எதோ நம்மால முடிந்தது. :-)))

  12. // இவன் said…
    அது சரி அந்தாள நான் மறந்திட்டேனே//

    இதற்காக நீங்க பலரிடம் இருந்து கண்டன கணைகளை எதிர்பார்க்கலாம் :-))

    //வில்லன் இல்லாம படம் ஹிட்டாகாதுங்கண்ணா//

    ஹிட் ஆகலைனாலும் நாங்க படத்தை ஓட்டிடுவோம்

  13. // Joe said…
    Rajini has sold his investments in Karnataka, after the cauvery water issue.//

    நான் கூட கேள்வி பட்டேன், ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

    //I too, don’t like the hero-worship in his movies but then every other actor is doing too! Money, money, money!//

    உண்மை தாங்க..உலகமே அப்படி தான் இருக்கு..இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா….பரத் 1 கோடி வாங்குறாராம் ,,என்னத்தை சொல்றது ..

    நான் ரஜினி ரசிகன் தாங்க ஜோ வெறியன் கிடையாது….

  14. //நடிப்புத்துறை மக்களுக்கான சேவைத் துறையா என்ன?//

    நடிப்பை பொழுதுக்காக மட்டுமே அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து….

    //நான்கு படங்களை எந்த மனிதரும் பார்க்காமல் தியேட்டரை விட்டு ஓட்டினால் அவர் தானாகவே தமிழகத்தை விட்டு ஓடி விடப் போகிறார்//

    சரியா சொன்னீங்க… அவரும் யாரையும் வந்து என் படத்த பாருங்க! படத்த பாருங்கன்னு! சொல்லவில்லையே.

    //ஆனால் சிறிதும் கூச்ச நாச்சமில்லாமல்,அரசுப் பணத்தை,மக்களின் வரிப் பணத்தை தங்கள் சொத்துக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் நபர்கள்,நடிகர்களைப் பற்றி பேசவும் தகுதியற்றவர்கள்.நடிகர்கள் உடலுழைப்பால்,திறமையால் மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிறார்கள்//

    நெத்தியடியா சொன்னீங்க 🙂 முக்கியமா கட்சி பேரை பிரபலப்படுத்த ..வேண்டும் என்றே படத்திற்கு பிரச்சனை செய்பவர்கள்

    தங்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க.

    //இன்று தமிழகத்திலிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளின் தகுதியையும்,அவர்களின் ஆரம்பகால வாழ்வாதாரத் துறையையும்,அவர்களின் இன்றைய சொத்துக்களையும் பாருங்கள்//

    இப்ப இருக்கிற ஒருத்தர் கூட கொள்ளை அடிக்காம சொத்து சேர்க்கவில்லை….

    கண் முன்னாடி ஒருத்தன் நம்ம பெட்டிய தூக்கிட்டு போறான் அவனை விட்டுட்டு ..பின்னாடி இருக்கிறவன் பெட்டிய தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுறதுன்னு யோசிக்கிறவங்களை என்ன பண்ணுறது

    //உண்மையான வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அரசியல்வாதிகளும்,அவர்களின் அடிவருடிகளும்தான்..//

    சந்தேகமே இல்லை

    //இது போன்ற கொள்ளையர்களை நாம் தலைவர்களாகக் தலையில் வைத்துக் கூத்தாடும் போது,ரஜினியைப் பற்றிப் பேசவும் தகுதியில்லை//

    நறுக்குன்னு கேட்டீங்க..இதுல வோட் போடுறதும் இல்ல..அதுனால அதற்கும் தகுதி இல்லை.. நல்லவன் வரலை நல்லவன் வரலை ன்னு அழ வேண்டியது..போய் வோட் போட்டா தானே!

    //படத்தை ஓடவிடாமல் ஊற்ற வைத்தால்,வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து நஷ்ட ஈடு செய்ததையும் பலர் அறிவார்கள்…//

    இந்த மாதிரி அராஜகம் செய்வது அரசியல் வாதிகள் தான்.. ஆனால் தாளிக்கப்படுவதோ என்னவோ ரஜினியை போன்றவர்களே ..

    உங்கள் வருகைக்கு நன்றி அறிவன்.

    தற்போது என் பதிவுகள் உங்கள் புதிய பயர் பாக்ஸ் ல் சரியாக தெரியும் என்று நம்புகிறேன்.

  15. // siva said…
    கிரி நண்பா,
    தேர்தல் நேரத்தல லூஸ்தனமா வாய்ஸ் கொடுக்கிறது
    தான்தான் தமிழ் நாட்ல எதிர் காலம் என கேன ரசிகர்களை
    எதிர்பார்ப்பை உருவாக்குவது//

    சிவா நீங்க கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக “கேன ரசிகர்களை” என்று கூறுவது எல்லாம் ரொம்ப ஓவர்.

    அப்படி பார்த்தால் எல்லோருமே கேனயங்க தான்.

    //ஏன் கிரி யாரு யாரோட சம்மந்தப்படுத்தனும் ஒரு வரையர இல்ல//

    சரி தான். நான் மறுக்க வில்லை..அதை நீங்க KB இல்ல கேட்கணும் அதுக்கு ரஜினி என்ன பண்ணுவாரு.. நீங்க சொல்வதை பார்த்தால் ரஜினி தான் அப்படி சொல்ல சொன்ன மாதிரி இருக்கு :-))

    இந்த மாதிரி தாங்க யாரோ செய்கிற தவறுக்கெல்லாம் அவரை தவறாக புரிந்து கொண்டு திட்டிட்டு இருக்காங்க ..அதே மாதிரி நீங்களும் திட்டறீங்க.. அதெப்படிங்க அவரு பண்ணுற நல்லதை கண்டுக்க மாட்டேங்குறீங்க..நாகரீகமான பேசினதை நினைவில் வைத்துக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் சின்னதா ஒண்ணு கிடைத்தால் அதை மட்டும் பூத கண்ணாடி வைத்து பெரிசாக்கி போட்டு தாக்குறீங்க..

    என்ன கொடுமை சிவா.

  16. // ஜெகதீசன் said…
    நானும் வந்துட்டேன்… 🙂
    வாழ்க ரஜினி….
    :P//
    வாங்க ஜெகதீசன் நீங்க இரண்டு பெரும் இவ்வ்வ்ளோ நல்ல்ல்ல்ல்ல்வங்கன்னு இன்னைக்கு தான் தெரியும் :-)))))

    // இவன் said…
    //இதற்காக நீங்க பலரிடம் இருந்து கண்டன கணைகளை எதிர்பார்க்கலாம் :-))//
    அய்யய்யோ
    தானயத்தலைவர் J.K.ரித்தீஷ் வாழ்க

    //ஹிட் ஆகலைனாலும் நாங்க படத்தை ஓட்டிடுவோம்//

    நீங்க என்ன சிம்பு உறவுக்காரரா??//

    ஹி ஹி ஹி ஹி இந்த லிஸ்ட் ல ஏகப்பட்ட பேர் இருக்காங்க …

  17. ரஜினி கர்நாடகாவில் உள்ள தன் சொத்துகளை விற்க சொல்லிவிட்டதாகவும், தமிழ்நாட்டில் பல இடங்களில் சொத்து வாங்க ஆரம்பித்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

    அவர் அங்க வாங்குனா தான் பிரச்சனை பண்ணுவாங்கன்னு இல்ல. இங்க காஞ்சிபுரம் பக்கம் ஒரு இடம் வாங்குனாரு. அதற்கும் அமைச்சர் பதில் சொல்லுற அளவுக்கு பிரச்சனை பண்ணிட்டாங்க…

  18. ஆமாங்க நானும் கேள்வி பட்டேன்..ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால் அங்கே உள்ளவர்கள்..அப்புறம் இங்கே எதுக்கு உன் சொத்து வைத்து இருக்கேன்னு பிரச்சனை செய்ததால்….அங்கு தன் சொத்துகளை கொஞ்சம் கொஞ்சம் விற்று வருவதாகவும் கேள்வி பட்டேன்.

    எங்கே போனாலும் அடின்னா எப்படிங்க….

    //அதற்கும் அமைச்சர் பதில் சொல்லுற அளவுக்கு பிரச்சனை பண்ணிட்டாங்க…//

    இவங்க பிரபலம் ஆக ஒரே வழி ..ரஜினிய திட்டுறது தான்.. அப்போது தான் அனைத்து பத்திரிகைகளும் வரிந்து கட்டி கொண்டு எழுதுவாங்க…

    அதனால ஆளாளுக்கு போட்டு ரஜினிய காச்சுறாங்க.

    விட்டா இங்க ஏன் ஒண்ணுக்கு போறே ..கர்நாடகா போய் போக வேண்டியது தானேன்னு சொல்லுவாங்க போல ..

    உங்கள் வருகைக்கு நன்றி சரவணகுமரன்

  19. //இத்தனை கேள்வி கேட்பவர்கள் ஏன் ஊரை கொள்ளை அடித்து, போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டும், செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை வாக்கும் போட்டவன் என்கிற முறையில் கேட்கும் உரிமை இருந்தும் ஏன் கேட்பதில்லை?//

    நல்ல கேள்வி. பதிலும் பதிவிலேயே சொல்லிட்டீங்க!

  20. உங்க எல்லா கேள்வியும் சரி தாங்க .ஆனா ஒரு அடிப்படை வேறுபாட்டை மறந்திட்டீங்க ..இதே கர்நாடகாலிருந்து பிரகாஷ்ராஜ் , அர்ஜூன் போன்றவங்களும் இங்கே இருக்காங்க .அவங்க கர்நாடகத்தில் எல்லாவற்றையும் கொண்டு போனாலும் யாரும் கேட்க மாட்டாங்க ..ஏன்னா அவங்க “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே” ,”என் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா.. என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா” “வாழ்வை நீ தேடி வடக்கே சென்றால் ,நாங்கள் வாழ்வதெங்கே ” “உயிர் போனால் இங்கே தான் ஓடி விட மாட்டேன் ” என்றெல்லாம் உசுப்பிவிட்டு கைதட்டு வாங்குவதில்லை .

    இதெல்லாம் ரஜினிக்கு தெரியாமலே கவிஞர்களும் வசனகர்த்தாக்களும் எழுதிவிட்டார்கள் ..அதற்கு ரஜினி பொறுப்புகிடையாது என்று ஒரு அறிவுபூர்வமான விளக்கம் வரும் .அப்போ அதற்கு மேலே ஒன்றும் சொல்ல முடியாது ..தலையிலடித்துகொள்வதைத் தவிர.

  21. ரொம்ப சரியா சொன்னீங்க.. சிங்கபூர்,அமெரிக்காவ விடுங்கள். சென்னைல வேலை பார்க்கும் தென்மாவட்ட மக்களே அவர்கள் ஊரில் வீடு நிலம் வாங்க தான் விருப்புவார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.

  22. //ராமலக்ஷ்மி said…
    //இத்தனை கேள்வி கேட்பவர்கள் ஏன் ஊரை கொள்ளை அடித்து, போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டும், செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை வாக்கும் போட்டவன் என்கிற முறையில் கேட்கும் உரிமை இருந்தும் ஏன் கேட்பதில்லை?//

    நல்ல கேள்வி. பதிலும் பதிவிலேயே சொல்லிட்டீங்க!//

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி

  23. //எதோ இரண்டு படம் ஓடியதாலோ அல்லது MLA MP னு ஆகி ஊர் பணத்தை கொள்ளை அடித்து சேர்த்த பணம் அல்ல.//

    இதில விஜய் பத்தின ஒரு உள்க்குத்தும் இல்லையே??

  24. //பெத்த ராயுடு said…
    //அப்படி பார்த்தால் எல்லோருமே கேனயங்க தான்.//

    Why?//

    எல்லோரும் அவங்கவங்க வேலைய பார்க்காம யாருக்கோ பேசிட்டு இருப்பது. விமர்சனம் என்கிற பெயரில் போட்டு காய்ச்சுவது.

    ஒருவருக்கு தவறு என்று படுவது மற்றவருக்கு சரி என்று படலாம். நாம அடுத்தவனை கேனயன் என்று கூறினால், அவன் பார்வையில் நாம் கேனயன்.

    //As reported JV and Reporter, both Rajini and Vikram bought land in the same village near Sriperumpudhur. Read the following and make your own conclusion.

    * Rajini undervalued the property; paid lower stamp duty and incurred loss to government exchequer; had the registering done in “his home in Chennai” with the connivance of the registrar and clerk which is against the law.

    * Vikram paid the actual price, paid the proper stamp duty, went to the registrar office of that Taluk, waited in queue to get the property registered.//

    நீங்கள் இடம் வாங்கும் போது வில்லங்கம் இல்லாமல் கட்டினீர்களா? கட்டுவீர்களா?

    நீங்கள் எதையும் கூறுவது ஊடகங்கள் கூறுவதை வைத்தே….நீங்கள் சென்று எதையும் ஆராயவில்லை.

    இதே ஜு வீ நாளைக்கு ரஜினி செய்தது தவறு இல்லை என்று சொல்லும், அப்போது என்ன சொல்வீர்கள்.

    நாம் ரஜினியை (என்று இல்லை எவரையும்) கேட்கும் முன்பு நாம் முதலில் ஒழுங்கா என்று பார்க்க வேண்டும்.

    எத்தனை பேர் ஒழுங்கா ஸ்டாம்ப் டூட்டி கட்டுறாங்க? ரஜினியை மட்டும் கேள்வி கேட்குறீங்க?

    உங்கள் வருகைக்கு நன்றி பெத்தராயுடு

  25. //இப்படி கூறினால் இங்கே தான் இடம் வாங்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?//

    கிரி,
    ‘சட்டம்’ ,’தார்மீகம்’ ரெண்டுக்கும் வேறுபாடு இருக்குங்க .

    யாரும் இங்கே சட்டப்படி தவறு காணவில்லை.

  26. //ஏன்னா! எவனை கேட்டால் பிரச்சனை இல்லையோ அவனை தான் போட்டு காய்ச்ச முடியும்..இவர்களை எல்லாம் கேட்டால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்று தெரியும்..//

    நானே அனுப்பி வைக்கிறேன் ஆட்டோவ addressஅ சொல்லுங்க கிரி

  27. // கார்த்திக் said…
    கிரி இவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா இவங்க கேள்வி கேட்டுகிட்டே தான் இருப்பாங்க தலைவர் சொன்ன மாதிரி இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்//

    உண்மை தான் கார்த்திக். பதிவை போட்டுவிட்டு பதில் கூறாமல் இருந்தால் நியாயம் இல்லையே..

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி கார்த்திக் ..உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

  28. கிரி,
    நீங்கள் சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர் பற்றியெல்லாம் குறிப்பிட்டதால் சொல்ல வேண்டியதாயிருக்கிறது ..நான் உட்பட சிங்கையில் வந்திருக்கு பலபேரும் பணம் சம்பாதிக்கவே வந்திருக்கிறோம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுகிறோம் ..இங்கே சேவை செய்வதற்காகவோ ,அல்லது நான் சிங்கையில் ஒருவன் ,நீங்கள் தான் கடவுள் என்றெல்லாம் பில்டப் பண்ணுவது கிடையாது.

    ஆனால் ரஜினியின் கதையே வேறு .மேற் சொன்ன வசனங்களை விடுங்கள் ..தமிழக அரசியலிலேயே மறைமுகமாகவும் ,நேரடியாகவும் அவர் ஈடுபட்டிருக்கிறார் ..தமிழகத்தையே காப்பாற்றும் வல்லமை உள்ளவர் ,தமிழக மக்களே அவரைத்தான் நம்பியிருக்கிறார் போல ஊடகங்கள் அவரை ஏற்றி விடுகின்றன ..அவர் அதை ஒப்புக்கொள்ளுகிறாரா என நீங்கள் கேட்கலாம் ..ஒப்புக்கொள்ளவில்லையே தவிர மறுக்கவில்லை ..இன்னும் சொல்லப்போனால் அந்த இமேஜை தன் படங்களில் உயயோகித்து காசாக்குகிறார் ..வருவாரா வரமாட்டாரா என ரசிகர்களை பரவச எதிர்பார்ப்பு நிலையிலே வைத்துக்கொண்டு தன் வணிக வெற்றிக்கு உபயோகப்படுத்துகிறார் .

    ஆக ,தமிழகத்தையே காக்க வந்த ரட்சகர் அல்லது தமிழுக்கும் தமிழருக்கும் தான் தன் உயிரை கொடுக்க வேண்டும் என சொல்லுபவர் ,குறைந்த பட்சம் தான் தமிழர்கள் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை தமிழர்கள் பகுதியிலே அவர்கள் பயனுறும் வண்ணம் முதலீடு செய்யலாமே என்று தான் விமர்சனம் வைக்கப்படுகிறது .

    அவர் உதவி செய்வதெல்லாம் கொசுறு ..அவர் இலவசமாக எதையும் கொடுக்கவும் வேண்டாம் .ஆனால் தமிழ் ,தமிழன் ,உயிர் மூச்சு என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மை முதலீட்டை வேறு மாநிலங்களில் செய்வது ஏன் ?

    கர்நாடகாவில் என்ன காட்மண்டுவில் கூட நிலம் வாங்குங்கள் ..சட்டப்படி யாரும் குறை சொல்ல முடியாது ..ஆனால் இந்த பம்மாத்து வசனங்களையும் பாடல்களையும் பேசாமல் இருங்கள் ..பேசி விட்டு தார்மீக உணர்வு கூட இல்லையென்றால் விமர்சனம் வரத்தான் செய்யும் .

    அப்புறம் உங்களை முடிவு பண்ணுறதுக்கு என்ன இருக்கு ..நீங்களும் என்னைபபற்றி முடிவுபண்ணாதிருங்கள் ..நான் ரஜினி ரசிகன் இல்லை தான் ..ஆனால் ரஜினியை ரசிக்காதவன் அல்ல .. ரஜினி என்ற நடிகனை எந்த கோணத்தில் ரசிக்க வேண்டுமோ அந்த கோணத்தில் நன்றாகவே ரசிப்பவன் தான்.

  29. இப்படி நாக்கப் புடுங்கிகற மாதிரி கேட்க்கும் அளவுக்கு என்னங்க கொள வெறி??

  30. //சரி அரசியல் வாதிகள் இதை விட மோசமாக செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களை ஏன் கேட்பதில்லை?//

    ஏன் கேட்கவில்லை ? ரஜினிக்கு சம்பந்தமில்லையாத செய்திகள் உங்கள் காதில் கேட்பதில்லை போலும் :))

    மேலும் ,ரஜினியே நடிகன் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகி விட்டவர் என்கிறேன் நான் .அரசியல் கட்சியில் இருந்தால் தான் அரசியல்வாதி என்று நான் நினைக்கவில்லை ..அரசியல் செல்வாக்குள்ளவர்கள் கூட அரசியல்வாதி தான் .. ரஜினி வெறும் நடிகனாக ,வெறும் கதாபாத்திரத்தில் தோன்றும் கலைஞனாக இருந்தால் இவை நடந்த்திருக்காது ..ஆனால் ரஜினி படத்தில் வரும் கதாபாத்திரமே ரஜீனி என்ற மனிதனைத் தான் குறிக்கும் நிலை வந்த பிறகு அவர் அரசியல்வாதியாகி விட்டார் என்று தான் அர்த்தம்.

  31. //நீங்க ஏங்க விஜய்க்கு எல்லாம் போறீங்க..நம்ம சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் போதாதா அதற்க்கு :-))//

    அது சரி அந்தாள நான் மறந்திட்டேனே

    //என்ன ஒரு வில்லத்தனம் ம்ம்ம்//
    வில்லன் இல்லாம படம் ஹிட்டாகாதுங்கண்ணா

  32. Rajini has sold his investments in Karnataka, after the cauvery water issue.

    I too, don’t like the hero-worship in his movies but then every other actor is doing too! Money, money, money!

  33. //இத்தனை கேள்வி கேட்பவர்கள் ஏன் ஊரை கொள்ளை அடித்து, போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டும், செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை வாக்கும் போட்டவன் என்கிற முறையில் கேட்கும் உரிமை இருந்தும் ஏன் கேட்பதில்லை? ஏன்னா! எவனை கேட்டால் பிரச்சனை இல்லையோ அவனை தான் போட்டு காய்ச்ச முடியும்..இவர்களை எல்லாம் கேட்டால் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்று தெரியும்..
    //
    ரொம்ப நல்லா சொன்னீங்க..

    ரஜினி ஒரு நடிகர்;என் படத்தை வந்து எல்லாரும் பாருங்கள் என்று யாருக்கும் அழைப்பு விடுத்து வேண்டுகிறாரா என்ன?அல்லது நடிப்புத்துறை மக்களுக்கான சேவைத் துறையா என்ன?

    நான்கு படங்களை எந்த மனிதரும் பார்க்காமல் தியேட்டரை விட்டு ஓட்டினால் அவர் தானாகவே தமிழகத்தை விட்டு ஓடி விடப் போகிறார்.

    ஆனால் அரசியல் வா(வியா)திகள் செய்வது என்ன?
    அரசியல் என்பது நாட்டை நிர்வகிக்க நல்ல கோட்பாடுகள் எனக்கு இருக்கின்றன;என்னுடைய பங்களிப்பு நாட்டையும்,மக்களையும் முன்னேற்றுவதில் இருக்கும் என்ற நம்பிக்கையும்,உறுதியும் இருப்பவர்கள் இருக்க வேண்டிய துறை.

    ஆனால் சிறிதும் கூச்ச நாச்சமில்லாமல்,அரசுப் பணத்தை,மக்களின் வரிப் பணத்தை தங்கள் சொத்துக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் நபர்கள்,நடிகர்களைப் பற்றி பேசவும் தகுதியற்றவர்கள்.நடிகர்கள் உடலுழைப்பால்,திறமையால் மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிறார்கள்.

    இன்று தமிழகத்திலிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளின் தகுதியையும்,அவர்களின் ஆரம்பகால வாழ்வாதாரத் துறையையும்,அவர்களின் இன்றைய சொத்துக்களையும் பாருங்கள்..இவர்கள் அமைச்சர்,மாவட்டம்,வட்டம் என்று கொள்ளைப்பங்குக்கு ஒரு கூட்டத்தையே வைத்திருக்கிறார்கள்.என் நண்பர் ஒருவர் தற்போது இந்தியா சென்று,திருச்சியில் ஒரு சொத்து வாங்க விசாரித்ததில் எல்லா நகர்ப்பகுதிகளிலும் ஒரு கட்சியின் கவுன்சிலர்கள்தான் ரியல் எஸ்டேட் துறையில் தாதாக்களாக வலம் வருகிறார்கள் என்று சொல்கிறார் !

    இவர்கள் ஊரார் சொத்தைக் கொள்ளையடிப்பதும்,திருட்டுத்தனமாக சொத்தையே தங்கள் பெயருக்கு,சொத்தின் சொந்தக்காரர்களுக்கே தெரியாமல் மாற்றிக் கொள்வதும் சாதாரணமாக நடைபெறுவதாகவும் சொன்னார்.

    உண்மையான வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அரசியல்வாதிகளும்,அவர்களின் அடிவருடிகளும்தான்..

    இது போன்ற கொள்ளையர்களை நாம் தலைவர்களாகக் தலையில் வைத்துக் கூத்தாடும் போது,ரஜினியைப் பற்றிப் பேசவும் தகுதியில்லை.

    அவர் உழைக்கிறார்;ஊதியம் வாங்குகிறார்,இன்னும் சொல்லப் போனால் மக்களிடம் கூட நேரடியாக அவர் வாங்கவில்லை.

    படத்தை ஓடவிடாமல் ஊற்ற வைத்தால்,வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து நஷ்ட ஈடு செய்ததையும் பலர் அறிவார்கள்…

  34. கிரி நண்பா,
    நான் ஜோ சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.

    தேர்தல் நேரத்தல லூஸ்தனமா வாய்ஸ் கொடுக்கிறது
    தான்தான் தமிழ் நாட்ல எதிர் காலம் என கேன ரசிகர்களை
    எதிர்பார்ப்பை உருவாக்குவது.

    நேத்து வரை என்னமோ பசிக்கு குடும்பத்தோட மயிலபூர்ல
    பிச்சை எடுத்து கஸ்ட பட்டதற்காக ரஜினி குசேலன் கவுரவ வேடம் போட்டாரம் அதனால ரஜினி விவேகானத்தறுக்கு
    சம்ம் போல பாலசந்தர் குசேலன் பாடல் வெளீட்டில் பேசி இருக்கார்.

    ஏன் கிரி யாரு யாரோட சம்மந்தப்படுத்தனும் ஒரு வரையர இல்ல.

    “நான் ரஜினி ரசிகன் இல்லை தான் ..ஆனால் ரஜினியை ரசிக்காதவன் அல்ல” :-)) super Joo

    ரஜினி படம் ( Photo) எல்லாம் நல்லா இருக்கு

    என்ன கொடுமை கிரி இது.

    புதுவை சிவா

  35. //
    ஹா ஹா ஹா கோவி கண்ணன் உங்கள் வருகையை நான் உடனடியாக எதிர்பார்த்தேன், நீங்க கொஞ்சம் லேட்.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! நன்றி 🙂
    //
    நானும் வந்துட்டேன்… 🙂
    வாழ்க ரஜினி….
    😛

  36. //இதற்காக நீங்க பலரிடம் இருந்து கண்டன கணைகளை எதிர்பார்க்கலாம் :-))//
    அய்யய்யோ
    தானயத்தலைவர் J.K.ரித்தீஷ் வாழ்க

    //ஹிட் ஆகலைனாலும் நாங்க படத்தை ஓட்டிடுவோம்//

    நீங்க என்ன சிம்பு உறவுக்காரரா??

  37. // மருதநாயகம் said…
    நடசத்திர பதிவரா செலெக்ட் ஆயிட்டீங்க போல பதிவுகள் எல்லாம் இப்பவே தயாராகிட்டு இருக்குது வெரிகுட் வெரிகுட் உங்கள் வாரம் எப்போது என்று சொல்லுங்க சுற்றம் சூழ வந்து கும்மி அடிச்சுட்டு போறோம்//

    ஏங்க மருதநாயகம்! ஏங்க இப்படி என்னை ஓட்டுறீங்க ..

    நட்சித்திர பதிவராவா! அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க..நான் எப்போதும் இந்த மாதிரி ஏதாவது போட்டு நோண்டிட்டு இருப்பேன்..

    கும்மி அடிக்க நீங்க இல்லாமையா..நான் பிளாக்கர் கணக்கு தொடங்கி 3 வருடம் ஆனாலும் பதிவு எழுத தொடங்கியது என்னமோ இந்த மார்ச் மாதம் தான்..வெட்டியா இருந்ததால் இத்தனை பதிவு போட்டு விட்டேன் ஹி ஹி ஹி ஹி

    மற்றபடி நட்சத்திர பதிவு எல்லாம் ஏற்பாடு செய்யலைங்க..அப்படி செய்து இருந்தா நான் எப்படி வெளியிடுவேன்..

    ரொம்ப விளக்கிட்டேன் போல இருக்கு ஹி ஹி ஹி

  38. // முகுந்தன் said…
    //Rajini has sold his investments in Karnataka, after the cauvery water issue//
    yes yes . He sold it to Latha Rajinikanth :-)//

    ஹா ஹா ஹா ஹா அப்படி எல்லாம் சொல்லப்படாது..

    சரி சிங்கையில் நான் ஒருவன் தான் தலைக்கு ரசிகன் போல..கோவி கண்ணன் வந்தாரு ஜெகதீசன் வந்தாரு ..இப்படி நீங்க உங்க பங்குக்கு வாரிட்டு போறீங்க.:-)))

    ஆனா நாங்க இதற்கெல்லாம் அசர மாட்டோம் ..சிங்கம்ல ..குசேலன் ல பாய்ந்து வர போறோம் பாருங்க 🙂

    சிங்கம் எப்போது சிங்கிளா தான் இருக்கும் :-)))) பார்த்தீங்களா

  39. // முகுந்தன் said…
    //எத்தனை பேர் ஒழுங்கா ஸ்டாம்ப் டூட்டி கட்டுறாங்க? ரஜினியை மட்டும் கேள்வி கேட்குறீங்க?//
    இதே மாதிரி நாளைக்கு ஒரு திருடனோ கொலைகாரனோ சொன்னால் நீங்க ஒத்துப்பீங்களா?//

    நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க ….அப்புறம் நான் கண்டிப்பா அதற்க்கு பதில் சொல்றேன் 🙂

    //எதனால என்ன கமல் ரசிகர்னு சொல்லாதீங்க//

    நான் எங்கங்க சொன்னேன் ..நீங்க தான் சொல்றீங்க :-)))

    //எனக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும்.
    ஆனா அது வேற இது வேற..//

    ஆமா! எல்லோரும் இதை ஒண்ண சொல்லிடுங்க….எனக்கு முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுவது வரை பிடிக்கும்னு சொல்றது அப்புறம் ..

    உங்களை இரண்டு நாள் முழுவதும் வருங்கால சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் படம் 20 முறை பார்க்கும் படி ஆணை இடுகிறேன்.

    //Rajnikanth as an actor is terrific.even my 4 year old son( me too)is crazy of him.//

    பார்ரா! இந்த முகுந்தன் அடங்க மாட்டாரு போல இருக்கே :-))

  40. // சினிமா நிருபர் said…
    அதற்கு உங்களது எழுத்துக்கள்தான் முக்கிய காரணம். //

    எனக்கு நிறைய எழுதணும் விவாதிக்கணும் என்று ரொம்ப ஆசை (நாகரீகமாக) அதற்க்கு இந்த பதிவுகள் ஒரு வடிகாலாக இருக்கிறது.

    பலரிடம் விவாதம் செய்தாலும், அதை மனதில் எல்லாம் வைத்துக்கொள்ளாமல் திரும்ப அவர்களிடம் எப்போதும் போல பேசிடுவேன். முறைச்சுட்டே இருப்பது எல்லாம் எனக்கு ஒத்து வராது. அதுவும் பலர் திரும்ப வர காரணமாக இருக்கலாம்.

    //சினிமாத்துறை, பொதுத்துறை, கல்வித்துறை, கலாச்சாரத்துறை என எல்லா துறைகளிலும் //

    எனக்கு இந்த துறை என்று இல்லைங்க ..உண்மையிலேயே நான் எந்த வட்டத்துக்குள்ளும் சிக்க விரும்பவில்லை..அனைத்து விசயங்களிலும் எனக்கு விருப்பம் உண்டு. காமெடி மொக்கை சீரியஸ் விளையாட்டு செண்டிமெண்ட் அழுகை னு என் பதிவுகள் தமிழ் சினிமா மாதிரி தான்..எல்லாமே இருக்கும்.. அதற்காக ரித்தீஷ் படம் மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேட்கப்படாது :-)))

    //இன்னும் பல நூறு பதிவுகளை பதித்து, பல ஆயிரம் வாசகர்களை பெற வாழ்த்துகள் கிரி//

    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நிருபர். உங்களை போல கூறும் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளே என்னை மேலும் எழுத தூண்டுகிறது. இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அளவுக்கு எழுதி இருக்க மாட்டேன்.

    உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  41. // முகுந்தன் said…
    //உங்களை இரண்டு நாள் முழுவதும் வருங்கால சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் படம் 20 முறை பார்க்கும் படி ஆணை இடுகிறேன்.
    //
    ஏனுங்க மரண தண்டனை ஒழிப்பு போராட்டம் எங்கங்க நடக்குது?//

    ஹா ஹா ஹா ஹா அந்த பயம் இருக்கட்டும்..நாங்க எல்லோரையும் பயமுறுத்த இந்த அதி பயங்கர ஆயுதம் வைத்து இருக்கோம்..இது தசாவதாரம் ல வரும் கிருமியை விட மோசமானது :-)))

  42. // Thekkikattan|தெகா said…
    கிரி,
    “ரோல் மாடல்கள்” இது போன்ற தவறுகள் செய்யும் பொழுது இப்படி பொறுப்பற்ற தனமாக நாமும் மற்றவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன்னு சொல்லி விட முடியுமா… சத்தியம் பேசணும் :-).//

    நீங்க கேட்பதை நான் ஆமோதிக்கிறேன்..அதற்காக சும்மா ஒருத்தனை போட்டு எல்லோரும் நொங்கு எடுத்தா எப்படிங்க..ஒரு வரை முறை வேண்டாமா.

    //இந்தாங்க இந்தப் பதிவையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க…//

    நாம் இரண்டு பெரும் ஏறக்குறைய ஒரே பதிவை தான் போடுறோம் போல ..சில மாற்றங்களுடன் ஹா ஹா ஹா

    //நல்ல, நல்ல கேள்விகள் எழுத்து நடையெல்லாம் வைத்து இப்படி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்களே ;-).//

    அது சரி..:-)

  43. // தீரன் said…
    தமிழர்களின் பெயரை பயன்படுத்தி தான் பிழைப்பு நடத்துகிறார். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் யாரும் அவர்களின் ஊனை உறிஞ்சிக்கொண்டு பிழைப்பு நடத்துவதில்லை.//

    அப்படி என்ன தான் உறிஞ்சிட்டாறு? யார் வீட்டிலாவது போய் கொள்ளை அடித்தாரா இல்லை சொத்தை ஏமாற்றி வாங்கிட்டாரா?

    //அவரை தலையில் தூக்கிக்கொண்டு ஆடவேண்டிய அவசியம் என்ன வந்தது?. //

    என்னங்க இது..ஒருத்தரை பிடிக்க பல காரணங்கள் உண்டு…உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அது தவறாகி விடுமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உங்களுக்கு சரி என்று படுவது எனக்கு தவறாக படலாம் அல்லவா?

    //என்னை பொறுத்த வரை, ரஜினியை குறை கூற வில்லை//

    தீரன் சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு …உங்களுக்கு ரொம்ப குசும்புங்க :-)))

    //ஒரே கேவலம், நம் தமிழர்களிடம் அந்த பற்று இல்லை , எவன் எவனையோ தூக்கி வெய்துக் கொண்டு ஆடுவதே, வாடிக்கை ஆகிவிட்டதை நினைத்து வருத்தமே//

    நம்ம ஊர் அரசியல்வாதிகளை தூக்கி தலையில் வைத்து ஆடும் நபர்களுக்கு இவ்வாறு இருப்பவர்கள் எவ்வளோ மேல்.

    உங்கள் முதல் கொலை வெறி வருகைக்கு நன்றி :-)))

  44. கிரி இவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா இவங்க கேள்வி கேட்டுகிட்டே தான் இருப்பாங்க தலைவர் சொன்ன மாதிரி இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

  45. //அப்படி பார்த்தால் எல்லோருமே கேனயங்க தான்.//

    Why?

    //அவர் அங்க வாங்குனா தான் பிரச்சனை பண்ணுவாங்கன்னு இல்ல. இங்க காஞ்சிபுரம் பக்கம் ஒரு இடம் வாங்குனாரு. அதற்கும் அமைச்சர் பதில் சொல்லுற அளவுக்கு பிரச்சனை பண்ணிட்டாங்க.//

    Two different people; two different popularities; two different principles; two different role models.

    As reported JV and Reporter, both Rajini and Vikram bought land in the same village near Sriperumpudhur. Read the following and make your own conclusion.

    * Rajini undervalued the property; paid lower stamp duty and incurred loss to government exchequer; had the registering done in “his home in Chennai” with the connivance of the registrar and clerk which is against the law.

    * Vikram paid the actual price, paid the proper stamp duty, went to the registrar office of that Taluk, waited in queue to get the property registered.

  46. //கேள்வி கேட்கறது தவறுன்னா சொல்றேன், கேட்குற கேள்வி நியாயமா இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.//

    இன்னும் உங்களுக்கு அந்த ‘நோய்’ விட்டுபோகலையா!!??

  47. நடசத்திர பதிவரா செலெக்ட் ஆயிட்டீங்க போல பதிவுகள் எல்லாம் இப்பவே தயாராகிட்டு இருக்குது வெரிகுட் வெரிகுட் உங்கள் வாரம் எப்போது என்று சொல்லுங்க சுற்றம் சூழ வந்து கும்மி அடிச்சுட்டு போறோம்

  48. நல்ல பதிவு கிரி.

    நான் வலைபதிவுலகில் நுழைந்தபோது உங்களது வலைப்பூவுக்கு வந்த வாசகர்களின் எண்ணிக்கையை விட இன்று பல மடங்கு அதிகமான வாசகர்கள் வந்து செல்கிறார்கள், பின்னூட்டமிடுகிறார்கள் என்றால்… அதற்கு உங்களது எழுத்துக்கள்தான் முக்கிய காரணம்.

    சினிமாத்துறை, பொதுத்துறை, கல்வித்துறை, கலாச்சாரத்துறை என எல்லா துறைகளிலும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள். உங்களிடம் பேசியதில்லை. நேரில் பார்த்ததில்லை என்றாலும் உங்களது எழுத்து ஆர்வம் பிடித்திருக்கிறது. மாறி வரும் சென்னை என்ற பகுதியை ஆரம்பித்து, அதில் சென்னைவாசிகளின் தலையாய பிரச்னைகளையும் ஒரு பத்திரிகையாளன் போல அலசி ஆராய்ந்து வெளியிட்டீர்கள். உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த பரிசு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள்.

    இன்னும் பல நூறு பதிவுகளை பதித்து, பல ஆயிரம் வாசகர்களை பெற வாழ்த்துகள் கிரி.

  49. //எத்தனை பேர் ஒழுங்கா ஸ்டாம்ப் டூட்டி கட்டுறாங்க? ரஜினியை மட்டும் கேள்வி கேட்குறீங்க?//

    இதே மாதிரி நாளைக்கு ஒரு திருடனோ கொலைகாரனோ சொன்னால் நீங்க ஒத்துப்பீங்களா?
    எதனால என்ன கமல் ரசிகர்னு சொல்லாதீங்க . எனக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும்.
    ஆனா அது வேற இது வேற..

  50. //உங்களை இரண்டு நாள் முழுவதும் வருங்கால சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் படம் 20 முறை பார்க்கும் படி ஆணை இடுகிறேன்.
    //

    ஏனுங்க மரண தண்டனை ஒழிப்பு போராட்டம் எங்கங்க நடக்குது?

  51. கிரி,

    //எத்தனை பேர் ஒழுங்கா ஸ்டாம்ப் டூட்டி கட்டுறாங்க? ரஜினியை மட்டும் கேள்வி கேட்குறீங்க?//

    “ரோல் மாடல்கள்” இது போன்ற தவறுகள் செய்யும் பொழுது இப்படி பொறுப்பற்ற தனமாக நாமும் மற்றவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன்னு சொல்லி விட முடியுமா… சத்தியம் பேசணும் :-).

    இந்தாங்க இந்தப் பதிவையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க…

    ஆன்மீகம் சினிமா சந்தையில்…!

    நல்ல, நல்ல கேள்விகள் எழுத்து நடையெல்லாம் வைத்து இப்படி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்களே ;-).

  52. உங்களுடைய கேள்வி பார்ப்பதற்கு நியாயமாக இருப்பது போல் தோன்றினாலும், ரஜினி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யட்டும், தமிழர்களின் பெயரை பயன்படுத்தி தான் பிழைப்பு நடத்துகிறார். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் யாரும் அவர்களின் ஊனை உறிஞ்சிக்கொண்டு பிழைப்பு நடத்துவதில்லை. அப்படி இருக்க, சிலவற்றை எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. “உப்பிடவனை உள்ளவரை நினை”. அப்படியே நீங்கள் கூறவது போல், ரஜினி ஒரு வேலை தான் பார்க்கிறார், அவர் மீது எந்த தவறும் இல்லை என்றால், அவரை தலையில் தூக்கிக்கொண்டு ஆடவேண்டிய அவசியம் என்ன வந்தது?. என்னை பொறுத்த வரை, ரஜினியை குறை கூற வில்லை. அவர் தன்னுடைய பற்றை கர்நாடகா விடம் வெய்திருப்பதை குறை கூற யாருக்கும் யோக்கியம் இல்லை. ஒரே கேவலம், நம் தமிழர்களிடம் அந்த பற்று இல்லை , எவன் எவனையோ தூக்கி வெய்துக் கொண்டு ஆடுவதே, வாடிக்கை ஆகிவிட்டதை நினைத்து வருத்தமே!

  53. //தனக்குக் கிடைத்த பேரையும் புகழையும் ஒரு படத்திற்கு 100 கோடி, 50 கோடி என்று விற்பனை செய்யும் ரஜினி சார் வாழ்க.

    ‘ஏழேங்கெ கஷ்டப்படுறாங்க..’ ன்னு சினிமாவில் வசனம் வைக்காமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் 50 கோடி, 100 கோடி எல்லாம் ஏழெங்கெ விடம் வசூல் செய்யப்படப் போகும் பணம் தான்.//

    ரிச் பிகம்ஸ் ரிச்சர்;புவர் பிகம்ஸ் புவரர்.

  54. நிறைப் பேர் பேசிட்டாங்க. கடைசியா வந்து குழப்பாம இருந்தாலே பெருசு 😉

    ரசினிகாந்து இடம் வாங்கினது, முதலீடு பண்ணது எல்லாம் ரொம்ப முன்னாடி. ஆனா இப்ப ஏன் பெருசா சொல்றாங்க? அரசியல்ல குரல் குடுத்ததுனால தான். இப்ப நம்ம ஜெ. கொடைநாடு போனது, இசுடாலின் இலண்டன் போனதுன்னு எல்லாத்தையும் அரசியலாக்குறோம், இல்லையா? இதுதாங்க காரணம்… அரசியல்.

  55. //தமிழ்ப்பறவை said…
    ரிச் பிகம்ஸ் ரிச்சர்;புவர் பிகம்ஸ் புவரர்//

    குறைகள் மட்டுமே காணுவது வாழ்க்கை இல்லை.

    உங்கள் வருகைக்கு நன்றி தமிழ் பறவை.

  56. //முகவை மைந்தன் said…
    ரசினிகாந்து இடம் வாங்கினது, முதலீடு பண்ணது எல்லாம் ரொம்ப முன்னாடி. ஆனா இப்ப ஏன் பெருசா சொல்றாங்க?//

    இப்ப எங்க சொல்றாங்க..வாங்குனதுல இருந்து சொல்லிட்டு தான் இருக்காங்க.

    //இப்ப நம்ம ஜெ. கொடைநாடு போனது, இசுடாலின் இலண்டன் போனதுன்னு எல்லாத்தையும் அரசியலாக்குறோம், இல்லையா? இதுதாங்க காரணம்… அரசியல்.//

    ஹா ஹா ஹா ஏங்க இருந்தாலும் இது ரொம்ப ஓவர்ங்க..அவங்க கட்சி நடத்துறாங்க, தேர்தல்ல நின்னு மக்கள் கிட்ட வாக்குறுதி கொடுத்து ஜெய்த்து இருக்காங்க, அவர்களை கேட்க உரிமை இருக்கு, ஆனா கருத்து சொன்னவங்களை எல்லாம் அரசியவாதின்னா ..நான் கூட தான் கருத்து சொல்றேன் அப்ப நான் அரசியல்வாதியா, அவர் பிரபலம் என்பதால் செய்தித்தாள்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க அவர் சொன்னதை பெரிசு படுத்தி கூறுகிறது. அவ்வளோ தான் வித்யாசம்.

    சும்மா ஏதாவது காரணம் சொல்லவேண்டும் என்றால் சொல்ல கூடாது?

    // முகவை மைந்தன் said…
    நிறைப் பேர் பேசிட்டாங்க. கடைசியா வந்து குழப்பாம இருந்தாலே பெருசு ;-)//

    அது சரி :-)))))

  57. “சரிங்க ஜோ” அப்படீன்னு ஒத்தை வார்த்தையில ஒரு ஆரோக்கியமான விவாதத்தை பதிலே சொல்லாம முடிச்சுட்டீங்க. அதுக்குப் பிறகு ஜோ எழுதவே இல்லை. உங்கள் நிலைப்பாடு கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு.

  58. கிரி said…
    //செல்வ கருப்பையா said…
    “சரிங்க ஜோ” அப்படீன்னு ஒத்தை வார்த்தையில ஒரு ஆரோக்கியமான விவாதத்தை பதிலே சொல்லாம முடிச்சுட்டீங்க. அதுக்குப் பிறகு ஜோ எழுதவே இல்லை. உங்கள் நிலைப்பாடு கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு.//

    வாங்க செல்வா கருப்பையா.

    //அரசியல் கட்சியில் இருந்தால் தான் அரசியல்வாதி என்று நான் நினைக்கவில்லை ..அரசியல் செல்வாக்குள்ளவர்கள் கூட அரசியல்வாதி தான்//

    இதற்க்கு மேலே முகுந்தனுக்கான பதிலில் கூறி இருக்கிறேன்.

    ஊரை கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பவனும், சுயமாக சம்பாதிக்கும் ஒருவரையும் ஒரே அளவில் வைத்தால் அதை நான் என்ன சொல்வது.

    தனது படத்தை ஓட விடாமல் தடுத்து நஷ்டம் ஏற்படுத்தினால் ஒருத்தர் கண்டிப்பாக அதை எதிர்த்து குரல் கொடுப்பார் அது அரசியலா? நான் இவருக்கு வோட் போட போகிறேன் என்று கூறுவது தன் கருத்தை வெளிப்படுத்துவது உடனே அவர் அரசியல்வாதி என்று ஆகி விடுமா?

    சரிய்யா? அவர் அப்படியே இருக்கட்டும். இவ்ளோ நியாயம் பேசும் எல்லோரும் அவர் நல்லது செய்யும் போது என் பாராட்டுவதில்லை? குறை கண்டு பிடிக்க மட்டும் லைன் கட்டி நிக்கிறாங்க.

    தற்போது கூட தன் படத்தில் நடித்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு 15 லட்சம் கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் ஒரு பணமா என்று கேட்டால்? என்னிடம் பதில் இல்லை. நமக்கு இது தெரிந்ததால் சொல்கிறோம். இதை போல பல உதவிகள் செய்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் உண்மை நிலை நமக்கு உறுதியாக தெரியாத போது அனுமானத்தில் கூறுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது.

    தரமான விமர்சனம் என்றால் என்ன? நிறை மற்றும் குறைகளை கூறுவது தான். குறைகளை மட்டுமே கூறி கொண்டு இருந்தால்?

    அரசியல்வாதி ஆவதற்கு முன்னாடியே இந்த வாங்கு வாங்கும் இவர்கள்… அரசியல்வாதி ஆனால்?

    நான் கேட்குறது குறைகளை கூறுங்கள், ஆனால் ஒருதலை பட்சமாக அல்ல.

    உங்கள் வருகைக்கு நன்றி செல்வ கருப்பையா

  59. //ஊரை கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பவனும், சுயமாக சம்பாதிக்கும் ஒருவரையும் ஒரே அளவில் வைத்தால் அதை நான் என்ன சொல்வது.
    //

    ஹிஹி !

    ரஜினி – திருப்பதி உண்டியல் விருப்பத்துடனேயே பக்தர்கள் அதில் பணத்தை போடுகிறார்கள்

    அரசியல் வாதிகள் – கோவில் உண்டியலை உடைக்கும் கடவுள்கள்.

    சரியா கிரி சார் ?
    🙂

  60. கிரி, ரஜினி பற்றி ஒரு ஆருடம் நேரம் கிடைத்தால் படிங்க ! இந்த பதிவுக்கு தொடர்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்.
    🙂

  61. ஏதாவது சொல்ல வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு என்னால் பதில் கூற முடியாது கோவி கண்ணன்.

    காலையிலே வந்தவுடன் பார்த்துட்டு பதில் போடும் போதே உங்கள் கொலை வெறி தெரிகிறது :-))) உங்களிடம் நான் எது கூறினாலும் அது வேலைக்கு ஆகாது என்று :-))

    வாதத்திற்கு பதில் உண்டு விதண்டாவாதத்திற்கு!

    //சரியா கிரி சார் ?//

    நீங்கள் பெரிய ஆள்! நீங்க சொல்வதை எல்லாம் சரியா தவறா என்று பார்க்கும் அளவுக்கு இன்னும் அனுபவம் இல்லைங்க ..

  62. // Vidhya said…
    கிரி நான் உங்கள் பக்கம்… ஒரு மனிதன் பொது வாழ்கைக்கு வந்து விட்டால் உடனே அவனை குறை கூறுவது நமது வாடிக்கை ஆகி விட்டது…
    என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுதான்//

    அது மட்டும் அல்ல.. ஒருத்தன் பிரபலம் ஆனால் நம்மாளுகளுக்கு இறுப்பு கொள்ளாது வயிறு எரியும். ஏதாவது நொல்லை நொட்டைனு சொல்லிட்டே இருப்பாங்க, இதே இவங்க பிரபலம் ஆகி யாராவது இப்படி சொன்னா ஒத்துக்க மாட்டாங்க..

    //இதே கேள்வியை நம்மிடம் யாரும் கேட்டால் சும்மா இருப்போமா…? //

    கொந்தளிச்சுடுவோம் இல்ல….அடுத்தவனுக்கு தான் தர்மம் நியாயம் எல்லாம்..நமக்குன்னு வரும் போது அதெல்லாம் பார்க்க கூடாது :-)))) கேட்டா நான் என்ன இந்த மாதிரி வசனம் பேசிட்டா இருக்கேன்னு கேட்க வேண்டியது..

    //அவர் தமிழகம் என்னை வாழ வைத்தது என்று கூறியதற்காக அவர் தமிழ் நாட்டிற்கு ஏதும் அடிமை சாசனம் எழுதி கொடுக்கவில்லையே :-)//

    நெத்தியடி. இவங்க ரஜினி தன் சொத்தை முழுவதையும் எழுதி கொடுத்தா கூட, உன் அண்ணன் கிட்டே இருக்கே அது என்ன? னு கேட்கற ஆளுங்க.

    ரஜினி என்ன பொது சேவையிலா ஈடுபட்டு இருக்காரு? இவர் என்னமோ முதல் அமைச்சர் மாதிரி நீ ஏன் மக்களுக்கு அது பண்ணல இது பண்ணல ன்னு கேட்டுட்டு இருக்காங்க….ரஜினி என்ன தான் பண்ணனும்னு தெரியல..ஆனா ஒண்ணு என்ன பண்ணினாலும் குறை சொல்கிறவர்கள் சொல்லிட்டே இருப்பாங்க. விட்டா அடுத்த தேர்தல்ல ரஜினியை பிரிட்ஜ் கொடுக்க சொல்லி (டிவி மாதிரி) கேட்பாங்க போல ஹி ஹி ஹி

    வித்யா உன்னோட கருத்தை கூறியதிற்கு மிக்க நன்றி.

  63. உங்கள் வருகைக்கு நன்றி பெத்தராயுடு, ஒரு சில விசயங்களில் எண்ணங்கள் வேறு என்றாலும் மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொடர்ந்து வாருங்கள்.

  64. //ரஜினி என்ன பொது சேவையிலா ஈடுபட்டு இருக்காரு? இவர் என்னமோ முதல் அமைச்சர் மாதிரி நீ ஏன் மக்களுக்கு அது பண்ணல இது பண்ணல ன்னு கேட்டுட்டு இருக்காங்க….//

    கிரி,
    அவங்க மட்டும் தான் கேட்கிறார்களா ?

    ரஜினி பாட்டு எதையுமே கேட்டதில்லையா ? அவர் நிறைய செய்வதாகத் தானே பாடல்களிலெல்லாம் வருகிறது.
    அது அந்த பாத்திரத்திற்கான பாட்டு என்று சொல்லிவிடாதீர்கள்.
    🙂

  65. கோவி.கண்ணன் said
    //ரஜினி பாட்டு எதையுமே கேட்டதில்லையா ?//

    அது சரி 🙂

    //அவர் நிறைய செய்வதாகத் தானே பாடல்களிலெல்லாம் வருகிறது.
    அது அந்த பாத்திரத்திற்கான பாட்டு என்று சொல்லிவிடாதீர்கள்.//

    சரி நீங்க தானே சொல்றீங்க..திரைப்படத்தை பொழுது போக்காக பாருங்கன்னு அப்புறம் ஏங்க போய் ஆராய்ச்சி பண்ணுறீங்க? :-))

  66. //கிரி said…

    சரி நீங்க தானே சொல்றீங்க..திரைப்படத்தை பொழுது போக்காக பாருங்கன்னு அப்புறம் ஏங்க போய் ஆராய்ச்சி பண்ணுறீங்க? :-))
    //

    கிரி,

    நீங்கள் சொல்லி இருந்ததற்குத்தானே மறுமொழி இட்டு இருந்தேன். அதன் தொடர்பில் எதையும் சொல்லவில்லை நீங்கள் !

    அப்போ உங்களுக்கு திரைப்படம் வெறும் பொழுது போக்குச் சாதனம் என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ?

  67. // கோவி.கண்ணன் said…
    நீங்கள் சொல்லி இருந்ததற்குத்தானே மறுமொழி இட்டு இருந்தேன். அதன் தொடர்பில் எதையும் சொல்லவில்லை நீங்கள் !//

    நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை….அதை பொழுது போக்காக தான் எடுத்துக்கொள்கிறார்கள், நானும் அப்படி தான். ஆனால் ஒருவர் அதில் நம்மை கவர்வது வியப்பேதுமில்லையே..பிடித்திருக்குன்னு கூறினால் திரை படத்தை திரைப்படமா பாருங்கன்னு சொல்றீங்க….நான் ரசிகன் வெறியன் கிடையாது.

    //அப்போ உங்களுக்கு திரைப்படம் வெறும் பொழுது போக்குச் சாதனம் என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ?//

    யாருங்க சொன்னாங்க. எனக்கு முழு பொழுதுப்போக்கு தான் அதனாலேயே எனக்கு ரஜினி பிடித்து இருக்கு..ரஜினி படத்திற்கு சென்றால் அனைத்து கவலையும் மறந்து என்னால் இருந்து வர முடிகிறது, ரஜினி படம் என்றில்லை என்னை சந்தோசப்படுத்தும் அனைத்து படங்களும். ரஜினி எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்து இருக்கு, உங்களுக்கு அவரை பிடிக்காததற்கு 1000 காரணங்கள் இருப்பது போல எனக்கு பிடிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது.

    எதோ ஒரு முடிவோட கேள்வி கேட்குற மாதிரி இருக்கு ஹி ஹி ஹி ஹி

  68. கிரி நான் உங்கள் பக்கம்… ஒரு மனிதன் பொது வாழ்கைக்கு வந்து விட்டால் உடனே அவனை குறை கூறுவது நமது வாடிக்கை ஆகி விட்டது…
    என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுதான்… அவரவர் வாழ்கையில் கஷ்டப்பட்டு காசு சேர்ப்பது பிறர் பேசுவதற்காக அல்ல… அதில் இடம் வாங்குவதோ விற்பதோ அவரவர் இஷ்டம்… இதை நீ இங்கு தான் வாங்க வேண்டும் என்று கூறுவது தவறு.. அல்லது இங்கு ஏன் வாங்கவில்லை அங்கு ஏன் வாங்கினாய் என்று கேட்பது மிகவும் தவறு… இதே கேள்வியை நம்மிடம் யாரும் கேட்டால் சும்மா இருப்போமா…?
    அவர் தமிழகம் என்னை வாழ வைத்தது என்று கூறியதற்காக அவர் தமிழ் நாட்டிற்கு ஏதும் அடிமை சாசனம் எழுதி கொடுக்கவில்லையே 🙂

  69. //நீங்கள் இடம் வாங்கும் போது வில்லங்கம் இல்லாமல் கட்டினீர்களா? கட்டுவீர்களா?

    நாம் ரஜினியை (என்று இல்லை எவரையும்) கேட்கும் முன்பு நாம் முதலில் ஒழுங்கா என்று பார்க்க வேண்டும்.

    எத்தனை பேர் ஒழுங்கா ஸ்டாம்ப் டூட்டி கட்டுறாங்க? ரஜினியை மட்டும் கேள்வி கேட்குறீங்க?

    உங்கள் வருகைக்கு நன்றி பெத்தராயுடு
    //

    Certainly I didn’t. When I ponder whether I should cheat “my government” in future, at least the deed of Vikram inspires me to be honest. The effect of being a positive role model.

    //நீங்கள் எதையும் கூறுவது ஊடகங்கள் கூறுவதை வைத்தே….நீங்கள் சென்று எதையும் ஆராயவில்லை.

    இதே ஜு வீ நாளைக்கு ரஜினி செய்தது தவறு இல்லை என்று சொல்லும், அப்போது என்ன சொல்வீர்கள்.
    //

    Quite possible, like a declaration of “even god cannot save the state” can be later changed into an appreciation of “Dhairiyalakshmi”.

    Nothing more to add.

  70. ரொம்ப கரைக்டா சொன்னீங்க கிரி ..இந்த கேள்விய வெங்கடேஷ் என்னை கேட்டான் ..ஏன்னா இவரு தமிழனாம் … கையொப்பத்தை தமிழ்ல போடாதவன்னெல்லாம் தமிழ்னு சொல்லிகாறான் … அவனுக்கும் இதே பதிலை தன்ன நான் தந்தேன் … நீங்க சொன்ன மாதிரி இவன் சம்பாதிக்கறது சென்னைல மண்ணு வாங்கி வீடு கட்டுறது பாண்டிச்சேரி ல … தமிழன அடிகரவன விட்டுடுவானுக …சும்மா இருக்கறவர தான் சீண்டுவானுகா .. அப்பா தான் இவனுக பெமௌஸ் ஆகா முடியும்

  71. //இளவேனில் said…
    கையொப்பத்தை தமிழ்ல போடாதவன்னெல்லாம் தமிழ்னு சொல்லிகாறான் //

    ஹி ஹி ஹி அந்த லிஸ்ட் ல நானும்..ஆனா நான் சத்யராஜ் மாதிரி தமிழன் தமிழன்னு சொல்றது இல்ல..:-)))

    வாங்க சக்தி..ரொம்ப நாளா ஆளையே காணோம் ..ரஜினி செய்தி போட்டா தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்க..

    உங்கள் வருகைக்கு நன்றி

  72. சபாஷ் கிரி …ரெம்ப அருமையா பதில் சொல்லிடீங்க …..நான் ரெம்ப நாளா நினைச்சுட்டு இருந்தத அப்டியே சொல்லி இருக்கீங்க….தேங்க்ஸ்

  73. //A.VinothKumars said…
    சபாஷ் கிரி …ரெம்ப அருமையா பதில் சொல்லிடீங்க …..நான் ரெம்ப நாளா நினைச்சுட்டு இருந்தத அப்டியே சொல்லி இருக்கீங்க….தேங்க்ஸ்//

    நன்றி வினோத்.

    தாமத பின்னூட்ட வெளியீட்டிற்கு மன்னிக்கவும், நான் ஊரில் இருந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.

  74. ம்ம்ம்ம்…. கிரி உங்கள் வருகைக்கு நன்றி. அருமையான அலசல். ஆனால் ரசிகர்களை உசுப்பேத்துகிறார்னு சொல்லிட்டுதான் இருப்பாங்க. ஷ்ஷ்ஷ்….யப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே…

  75. //Vijay said…
    ம்ம்ம்ம்…. கிரி உங்கள் வருகைக்கு நன்றி. //

    என்னங்க என் பதிவிற்கு வந்துட்டு எனக்கே சொல்லுறீங்க..:-))))

    //ஆனால் ரசிகர்களை உசுப்பேத்துகிறார்னு சொல்லிட்டுதான் இருப்பாங்க//

    ஏதாவது சொல்லலைனா இவங்களுக்கு தூக்கம் வராது..ரஜினியை கிண்டல் செய்தால் அவர்கள் பாணியில் அது அறிவு முதிர்ச்சியான செயல்..ரஜினி க்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இவர்கள் பார்வையில்..இதை எல்லாம் கண்டுக்காம இருக்க தான் நினைக்கிறேன்..ஆனா அப்பப்ப பொறுமை இழந்து இப்படி ஒரு பதிவு போட்டு விடுகிறேன் 🙂

    “உங்கள் வருகைக்கு நன்றி” விஜய் 🙂

  76. //Gopikrishnan said…
    yarum rajini ya thaakum nokathula pesuradhu ilainga..//

    நானும் அந்த மாதிரி நோக்கத்தோடு பேசுபவர்களை பற்றி சொல்லலைங்க

    //Innaikum ennai vaala vaikum deivangal aagiya tamil makkaley nu dhan petcha aarambikarar//

    அதிலென்ன தப்பு உண்மை தானே!

    //selvam kozhikum karnataka vey…amaidhiyaana rishikeshey apadi nu aarambikaradhu ila//

    நீங்கள் எல்லாம் தான் லாஜிக் பார்க்குறவங்க, நீங்களே லாஜிக் இல்லாம சொல்லலாமா?

    //ipadi pesi pesi kanmoodi thanama irukara rasigar gala kaalam kaalama katti vaikaradhu dhaan thapu//

    அதெல்லாம் அந்த காலங்க கட்டி வைக்கிறது ஒட்டி வைக்கிறது எல்லாம்..இப்பெல்லாம் அவனவன் பொழைப்பை பாத்துட்டு போயிட்டு இருக்கான்..மொத நாள் பண்ணுற செலவை தவிர.

    //ivalo yokkiam naa oru padathulayavadhu nan karnataka manna vitu vara maten apadi nu sollatum//

    எதுக்கு சொல்லணும்?

    //neenga solra madhiri nalla dialogue ga rasigar gal yethukarangala nu paakalam//

    ரசிகர்கள் எல்லாம் என்றோ ஏத்துக்கிட்டாங்க..

    //ungalayey nambi yemandhu pora rasigargala nal vali paduthunga…paal abishegam panra neratha kudumbathukaga selavu panna sollunga..//

    இப்பவும் ரஜினி கூறுவது முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று தான். பிறந்த நாளுக்கு தன்னை தேடி வரும் ரசிகர்களுக்கு விபத்து ஏற்படுகிறது என்று தான், தன் பிறந்த நாளில் யாரையும் வர வேண்டாம் என்று கூறி விடுகிறார். நீங்கள் கூறுவதை போல பால் அபிஷேகம் பண்ணுவதை கண்டிப்பாக கூறி தடை செய்யலாம் (எனக்கு இதை போல விசயங்களில் உடன்பாடு கிடையாது), ஆனால் அதற்க்கு ரசிகர்கள் எந்த அளவு செவி சாய்ப்பார்கள் என்று தெரியவில்லை.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோபி கிருஷ்ணன்.

  77. //கிரி நீங்க என்னை எதிர்பார்த்து இருக்க மாட்டிங்க//

    நான் அனைவரையும் எதிர்பார்க்கிறேன் 🙂

    //நீங்கள் ரஜினியை தலைவரா பாக்குறிங்க அதன் பிரச்சனையே//

    நீங்க அதை தவறா புரிந்து கொள்கிறீர்கள் அது தான் பிரச்சனையே. நான் தலைவர் என்று கூறுவது ரஜினியை எனக்கு பிடிக்கும் என்பதாலும் ஒரு ஜாலிக்காக மட்டுமே, அதற்காக கொடி பிடித்து கொண்டு போவேன் என்று நினைக்க வேண்டாம். கண்மூடி தனமாக நடந்து கொள்ளும் சராசரி ரசிகன் (வெறியன்)அல்ல நான்.

    //ரஜினி எங்க வேண்டுமானலும் நிலம் வாங்கட்டும். அது ஒன்னும் பிரச்சனை இல்லை.//

    பதிவே அதை பற்றியது தான். பிரச்சனையே நீங்கள் (என்றால் நீங்கள் இல்லை) இவ்வாறு கூறுவதாலேயே இந்த பதிவை போட்டேன்.

    //கீழ் வரும் கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன்//

    நான் பதிவின் ஆரம்பித்திலேயே தெளிவாக கூறி இருக்கிறேன், இது ரஜினி சொத்து வாங்குவது பற்றியது சம்பந்தப்பட்டது மட்டுமே என்று. நீங்கள் அதை விடுத்து அனைத்து கேள்விகளையும் கேட்டு உள்ளீர்கள். இதற்க்கு நான் பதில் கூறாமல் இருக்க தான் நினைத்தேன் (எனென்றால் விவாதம் என் பதிவை பற்றி அல்லாமல் வேறு திசையில் செல்லும் என்பதால்), நான் அவ்வாறு பதில் கூறாமல் இருந்தால் அது உங்களை (மற்றவர்களை) பல விதத்தில் நினைக்க வைக்கும் அதற்காகவே கூறுகிறேன். இதன் பிறகு நீங்கள் இந்த பதிவு சம்பந்தமாக அல்லாமல் வேறு கேள்வி கேட்டால் நான் பதில் தர மாட்டேன், தவறாக நினைக்க வேண்டாம். இது அனைவருக்கும் பொருந்தும்.

    //1, நெய்வேலி பிரச்சனையில் ரஜினி எடுத்த முடிவு சரியா?//

    ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்க்கு அவருக்கு விருப்பமும் இல்லை. நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தினால் மிக பெரிய பிரச்சனை ஆகும் என்று கருதியே அவ்வாறு செய்தார். போராட்டத்தை சென்னையிலயே வைத்து கொள்ளலாம் என்று தான் கூறினார். இவர்களும் நெய்வேலிக்கு ஏதோ சுற்றுலா போய் வந்தது போல போய் விட்டு வந்தது தான் மிச்சம் ஒன்றையும் சாதிக்க வில்லை. சும்மா வாய் சவடால் தான் அனைவரும் விட்டார்கள், அதனால் ஒரு பயனும் இல்லை. அரசியவாதிகள் சண்டையும் திரைத்துறை சண்டையும் ஒன்று கிடையாது.

    //2, அவரை வாழ வைக்கும் ரசிகர்களை இன்னும் விசிலடிச்சான் குஞ்சிகளாக வைத்து இருப்பது முறையா?//

    ரஜினி ரசிகர்கள் எல்லாம் தற்போது பெரியவர்கள் ஆகி விட்டார்கள். இவர்கள் யாரும் விசலடிச்சான் குஞ்சுகளாக இல்லை, ரஜினி படம் வெளிவரும் போது அடிக்கும் விசிலை தவிர :-). பொதுவாக திரைப்பட ரசிகர்கள் (நீங்கள் யாரை எல்லாம் அப்படி கூறுகிறீர்களோ அவர்கள்) எல்லாம் உங்கள் கூற்றுப்படி விசிலடிச்சான் குஞ்சுகள் தான், ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல.

    //3, கமல் போல் ரசிகர்மன்றங்களை ஏன் இன்னும் நற்பணிமன்றங்களாக மாற்றாமல் வைத்து இருக்கிறார்?//

    நற்பணி மன்றங்களாக மாற்றி விட்டால், அப்படியே எல்லோரும் நற்பணி செய்து விடுவார்களா? அல்லது இரவு பகல் பாராது செய்து கொண்டு இருக்கிறார்களா?. ரசிகர் மன்றம் நற்பணி மன்றம் எல்லாம் ஒன்று தான். பெயர் தான் வேறு. உதவி செய்கிறவர்கள் எங்கு இருந்தாலும் செய்வார்கள். அது ரசிகர் மன்றமாக இருந்தாலும் சரி நற்பணி மன்றமாக இருந்தாலும் சரி. ரஜினி ரசிகர்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    //பக்கத்து ஸ்டேட் சிரஞ்சிவி கூட ரத்த தானம் தர மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தும் போது இவர் ஏற்படுத்தாது ஏன்?//

    ரஜினி அதை போல செய்ய வேண்டும் என்பது என் விருப்பமும், இதற்க்கு காரணம் எனக்கு தெரியாது.

    //எயிட்ஸ் விளம்பரத்தில் தன் ஈமெஜ் பார்க்காமல் கமல் நடிக்க ரஜினி எந்த பொதுமக்கள் பயன் பெரும் எந்தவிளம்பர படத்திலும் அவர் சமீபத்தில் நடி்க்காதது ஏன்?//

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. ரஜினி (அஜித் கூட) எந்த விளம்பரத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்து வைத்து இருக்கிறார். அதை எப்படி தவறு என்று கூற முடியும். அப்படி பார்த்தால் ரஜினி பாபா படம் நஷ்டம் அடைந்த போது தன்னுடைய பணத்தை விநியோகஸ்தர்களுக்கும் திரைப்பட அதிபர்களுக்கும் திருப்பி கொடுத்தார், கமல் ஏன் கொடுக்க கூடாது என்று கேட்க முடியுமா?

    //கர்நாடகத்தில் ஒரு தமிழன் என்பதாலேயே அவன் நடித்த படங்கள் அங்கு வெளி வர வேண்டும் என்றால், அதற்க்கு ரிலிஸ் தேதி அவர்களே அறிவிக்கின்றார்கள். கன்னடத்தில் இருந்து யார் வந்தாலும் நாம் நடிக்க வைக்கிறோம் கைதட்டுகிறோம் அவருக்காக பதிவு எழுதிகிறோம்//

    சரி …

    //ஆனால் கார்நாடக்த்தில் தமிழன் சொந்த நாட்டிலே இரண்டம் தர குடிமக்களாக நடத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா?//

    அதுக்கு ரஜினி என்ன செய்வார்? என்னமோ ரஜினி போய் எல்லோரையும் அப்படி சொல்ல சொன்னது போல கூறுகிறீர்களே?

    //நாம் கன்னட நடிகர் நடிகைகளை கொண்டாடுவோம், சிங்கள டைரக்டர் தமிழர்களை இழிவு படுத்தி படம் எடுத்தால் நாம் அவர்களுக்கு கே கே நகரில் லேபில் பிரிண்ட் போட்டு
    தருவோம் எனென்றால் நாம் தமிழர்கள் அல்லவா?//

    சரி அதுக்கு என்ன பண்ண சொல்கிறீர்கள்? இனிமேல் அப்படி செய்யாதீங்க. கண்டுக்காம விட்டுடுங்க, லேபில் பிரிண்ட் போட்டு தராதீங்க, உங்களுக்கு ரஜினி பிரச்சனையா இல்லை ரஜினி கன்னட நபராக இருப்பது பிரச்சனையா?

    //ஜோ, மற்றும் முகுந்தன் சொல்வது போல் கேமரா பார்த்த வாய்சவடால் விட்டு தமிழக இளைஞர்களை ஒரு குறிகிய வட்டத்துக்குள் யோசிக்க வைக்ககூடாது…//

    மாஸ் நடிகர்கள் என்றால் இவை எல்லாம் இருக்க தான் செய்யும். இவை தவிர்க்க முடியாதது. ரஜினி ஒன்றும் உலகை திருத்த வந்த உத்தமர் அல்ல. சாதாரண பொழுது போக்கு நடிகர்.

    //பேர் புகழ் வைத்து நாம் வாழும் காலத்திலேயே சமுகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் ,அல்லது அரசியலுக்கு உள்ளாக வந்தாவது நல்லது செய்யட்டும்//

    ரஜினி நல்லது செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? எதை வைத்து ரஜினி எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறீர்கள். இது பற்றி ஏற்கனவே நான் போதுமான அளவு பழைய பின்னூட்டத்தில் கூறி விட்டேன். அதே மாதிரி இப்ப சம்பாதித்து பேர் புகழ் வைத்து இருக்கிற தமிழ் நடிகர்கள் செய்த கொஞ்ச நல்லதை சொல்லுங்க நானும் தெரிந்து கொள்கிறேன் (கமலையும் சேர்த்து)

    //அதை விடுத்து கேமரா முன்னால் பேசிக் கொண்டு இருந்தால் எல்லோருக்கும் கோபம்தான் வரும். இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டுவேன் //

    அடேங்கப்பா! உங்களுக்கு ரொம்ப தான் கோபம் வருதுங்க. ஊரெல்லாம் கொள்ளை அடித்து உலையில போட்டுட்டு இருக்காங்க, தமிழன் தமிழன் ன்னு சொல்லி தமிழ்நாட்டையே நாத்தம் பண்ணிட்டு இருக்காங்க, இப்படி பக்கத்துலையே தமிழ் பேரை சொல்லி ஏமாத்துறவங்க கொள்ளை அடிக்கிறவங்க உங்களுக்கு பெரிசா தெரியல, ஆனால் பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்தவன் உபத்ரம் பண்ணலைனாலும் உதவி செய்யலைன்னு கோப படுறீங்க. நல்ல நியாங்க உங்க நியாயம்.

    நீங்கள் எதற்கு எல்லாவற்றையும் கமலுடன் ஒப்பிடுகிறீர்கள், ஒவ்வொருவரும் தனி தனியாக சிறந்தவர்கள் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. எந்த திறமையும் இல்லாத ஒருத்தன் எப்போதும் நிலைத்து இருக்க முடியாது. என்னாலையும் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கமலை இழுத்து இருக்க முடியும் மற்றும் கமல் பற்றி பல கேள்விகளை என்னாலும் கேட்க முடியும், ஆனால் அது நாகரீகம் இல்லை. ஒருவரை பற்றி பேசும் போது மற்றவரை இழுப்பது என்பது சரியாக நான் கருதவில்லை.

    உங்களின் கொலை வெறி கருத்திற்கு நன்றி ஜாக்கி சேகர் 🙂

  78. ஏதாவது சொல்லலைனா இவங்களுக்கு தூக்கம் வராது..ரஜினியை கிண்டல் செய்தால் அவர்கள் பாணியில் அது அறிவு முதிர்ச்சியான செயல்..ரஜினி க்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இவர்கள் பார்வையில்..இதை எல்லாம் கண்டுக்காம இருக்க தான் நினைக்கிறேன்..ஆனா அப்பப்ப பொறுமை இழந்து இப்படி ஒரு பதிவு போட்டு விடுகிறேன் 🙂

    yarum rajini ya thaakum nokathula pesuradhu ilainga..

    Innaikum ennai vaala vaikum deivangal aagiya tamil makkaley nu dhan petcha aarambikarar.. selvam kozhikum karnataka vey…amaidhiyaana rishikeshey apadi nu aarambikaradhu ila..ipadi pesi pesi kanmoodi thanama irukara rasigar gala kaalam kaalama katti vaikaradhu dhaan thapu..

    ivalo yokkiam naa oru padathulayavadhu nan karnataka manna vitu vara maten apadi nu sollatum..neenga solra madhiri nalla dialogue ga rasigar gal yethukarangala nu paakalam…

    தமிழகத்தையே காப்பாற்றும் வல்லமை உள்ளவர் ,தமிழக மக்களே அவரைத்தான் நம்பியிருக்கிறார் போல ஊடகங்கள் அவரை ஏற்றி விடுகின்றன ..அவர் அதை ஒப்புக்கொள்ளுகிறாரா என நீங்கள் கேட்கலாம் ..ஒப்புக்கொள்ளவில்லையே தவிர மறுக்கவில்லை ..இன்னும் சொல்லப்போனால் அந்த இமேஜை தன் படங்களில் உயயோகித்து காசாக்குகிறார் ..வருவாரா வரமாட்டாரா என ரசிகர்களை பரவச எதிர்பார்ப்பு நிலையிலே வைத்துக்கொண்டு தன் வணிக வெற்றிக்கு உபயோகப்படுத்துகிறார் .

    I agree

    neenga sambadhicha panatha kuduka venam…ungalayey nambi yemandhu pora rasigargala nal vali paduthunga…paal abishegam panra neratha kudumbathukaga selavu panna sollunga..

  79. கிரி நீங்க என்னை எதிர்பார்த்து இருக்க மாட்டிங்க.நீங்கள் ரஜினியை தலைவரா பாக்குறிங்க அதன் பிரச்சனையே, ரஜினி எங்க வேண்டுமானலும் நிலம் வாங்கட்டும். அது ஒன்னும் பிரச்சனை இல்லை.

    கீழ் வரும் கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன்

    1, நெய்வேலி பிரச்சனையில் ரஜினி எடுத்த முடிவு சரியா?

    2, அவரை வாழ வைக்கும் ரசிகர்களை இன்னும் விசிலடிச்சான் குஞ்சிகளாக வைத்து இருப்பது முறையா?

    3, கமல் போல் ரசிகர்மன்றங்களை ஏன் இன்னும் நற்பணிமன்றங்களாக மாற்றாமல் வைத்து இருக்கிறார்?

    4. பக்கத்து ஸ்டேட் சிரஞ்சிவி கூட ரத்த தானம் தர மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தும் போது இவர் ஏற்படுத்தாது ஏன்?

    5.எயிட்ஸ் விளம்பரத்தில் தன் ஈமெஜ் பார்க்காமல் கமல் நடிக்க ரஜினி எந்த பொதுமக்கள் பயன் பெரும் எந்தவிளம்பர படத்திலும் அவர் சமீபத்தில் நடி்க்காதது ஏன்?

    கர்நாடகத்தில் ஒரு தமிழன் என்பதாலேயே அவன் நடித்த படங்கள் அங்கு வெளி வர வேண்டும் என்றால், அதற்க்கு ரிலிஸ் தேதி அவர்களே அறிவிக்கின்றார்கள்

    கன்னடத்தில் இருந்து யார் வந்தாலும் நாம் நடிக்க வைக்கிறோம் கைதட்டுகிறோம் அவருக்காக பதிவு எழுதிகிறோம்
    ஆனால் கார்நாடக்த்தில் தமிழன் சொந்த நாட்டிலே இரண்டம் தர குடிமக்களாக நடத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா?

    நாம் கன்னட நடிகர் நடிகைகளை கொண்டாடுவோம், சிங்கள டைரக்டர் தமிழர்களை இழிவு படுத்தி படம் எடுத்தால் நாம் அவர்களுக்கு கே கே நகரில் லேபில் பிரிண்ட் போட்டு
    தருவோம் எனென்றால் நாம் தமிழர்கள் அல்லவா?

    ஜோ, மற்றும் முகுந்தன் சொல்வது போல் கேமரா பார்த்த வாய்சவடால் விட்டு தமிழக இளைஞர்களை ஒரு குறிகிய வட்டத்துக்குள் யோசிக்க வைக்ககூடாது…

    பேர் புகழ் வைத்து நாம் வாழும் காலத்திலேயே சமுகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் ,அல்லது அரசியலுக்கு உள்ளாக வந்தாவது நல்லது செய்யட்டும்
    அதை விடுத்து கேமரா முன்னால் பேசிக் கொண்டு இருந்தால் எல்லோருக்கும் கோபம்தான் வரும். இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டுவேன்

  80. //jackiesekar said…
    நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால் இது பற்றி விவாதிப்போம்//

    கண்டிப்பாக ஜாக்கிசேகர். நானும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதை விட உங்கள் புகைப்பட அனுபவம் மற்றும் திருவண்ணா மலை நீங்கள் சென்று வந்ததை பற்றி அதிகம் விசாரிப்பேன் 🙂

    //என் கருத்தை நீங்கள் கொலை வெறி என்று கருதி விட்டீர்கள். இனி இது போல் கொலைவெறியை உங்கள் பின்னுட்டத்டதில் பார்க்க மாட்டிர்கள்//

    அட! சும்மா தமாசுக்கு சொன்னேங்க (உண்மையாகவே) இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிடாதீங்க, நான் உங்களை போல ஆகி இருந்தால் எவருக்குமே பதில் கூறி இருக்க மாட்டேன். ஒரு நகைச்சுவைக்காக வடிவேல் பாணியில் கூறி உங்களை அமைதி படுத்த கூறினேன், அது வேறு மாதிரி ஆகி விட்டது போல. நான் அப்படி கூறியது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    தொடர்ந்து வாருங்கள் ஜாக்கி சேகர், உங்கள் கருத்தை கூறுங்கள். ஆரோக்யமான விவாதத்தை என்றும் வரவேற்கிறேன். அதனாலேயே இத்தனை பின்னூட்டங்கள் என்று கருதுகிறேன். கருத்து மோதல்கள் இருக்க தான் செய்யும் அதற்காக உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை, தொடர்ந்து வாங்க.

  81. // M Arunachalam said…
    I read your post & liked it.//

    நன்றி அருணாச்சலம்.

    //I feel you are simply wasting your time by answering to "closed minds". //

    என்னுடைய ஒய்வு நேரங்களையே இதற்க்கு பயன்படுத்துகிறேன், அதனால் எனக்கு பிரச்சனை இல்லை.

    //As Thalaivar says "Be a deaf frog" and keep writing more posts.//

    பதிவை போட்டு விட்டு இப்படி இருந்தால் அது சரி இல்லையே அருணாச்சலம். அதுவும் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும். நாம் கூறுவது தான் சரி என்று நினைக்க முடியாது. அதனால் அவர்கள் அவ்வாறு கூறுவதை நான் தவறாக நினைக்கவில்லை.

    உங்கள் அன்பிற்கு நன்றி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து. பதிவுகள் பிடித்து இருந்தால் தொடர்ந்து வாங்க.

  82. Hello Mr. Giri,

    I read your post & liked it.

    I feel you are simply wasting your time by answering to "closed minds". As Thalaivar says "Be a deaf frog" and keep writing more posts.

    Arun

  83. நன்றி கிரி, தாங்கள் ரஜினி நிலம் வாங்குவது சம்பந்தமாக என்று முதலிலேயே எழுதி விட்டீர்கள். நீங்கள் ரஜினியை எந்த இடத்தில் வைத்து இருக்கிறீர்கள் என்பதை கேள்விகள் மூலம் கேட்டேன்.பதில் உங்கள் கருத்தை முன் வைத்து இருக்கிறீர்கள்.நீங்கள் ஒரு லாக் பயின்டில் கண்டுக்காம போங்க என்றீர்கள், தமிழ் கூறும் நல்லுலக மனிதர்களுக்கு தெரியும்.நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால் இது பற்றி விவாதிப்போம் , என் கருத்தை நீங்கள் கொலை வெறி என்று கருதி விட்டீர்கள். இனி இது போல் கொலைவெறியை உங்கள் பின்னுட்டத்டதில் பார்க்க மாட்டிர்கள்.
    நன்றியுடன்/ ஜாக்கிசேகர்

  84. //jackiesekar said…
    கிரி நீங்கள் பத்தோடு பதினொன்று என்று நினைத்தேன்//

    அய்யயோ ஜாக்கி சேகர் என்னை இப்படி நினைத்து விட்டீங்களே ..அப்போ இத்தனை நாளா என்னை திட்டிட்டு தான் இருந்தீங்களா! அவ்வ்வ்வ்வ்வ்

    //நீங்கள் கோபத்தோடு எழுதி விட்டிர்களோ என்று நினைத்து விட்டேன். எப்படி இருந்தாலும் நீங்கள் என் இனிய நண்பர்தான்//

    பாருங்க என்னோட வலைப்பதிவு தலைப்பு கூட “மனசாட்சி” தான் ஹி ஹி ஹி, கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும், அதற்காக உங்களை பிடிக்கலைனு ஆயுடுமா.. நான் மனசுல எல்லாம் வஞ்சம் வைத்து பேச மாட்டேங்க..எது நடந்தாலும் அதோடு விட்டு விடுவேன். அதையே மனசுல வைத்து பேசாம எல்லாம் இருக்க மாட்டேன். உங்க மேல எனக்கு என்னங்க கோபம் இருக்க போகுது? நீங்க என்னோட சொத்தை பிடுங்கிட்டீங்களா என்ன? :-))))

    தொடர்ந்து வாங்க உங்க கருத்துக்களை கூறுங்க, இங்க இல்லேன்னா வேற பதிவுல. சரியா! :-))

  85. கிரி!வணக்கம்! வீட்டுக்குப் போக மணியடிச்சுட்டாங்க!நான் அப்புறமா திரும்ப வாரேன்.

  86. //தாமிரா said…
    என்னா கோவம்.. ரஜினி கூட இவ்வளவு கோர்வையாக அவர் பக்க நியாயத்தை சொல்லுவாரா என்பது சந்தேகம்தான். வாழ்த்துக்கள் கிரி.//

    நன்றி தாமிரா. சஹாரா பாலைவனத்துல இருக்கிறவனுக்கு தண்ணீர் கொடுத்த மாதிரி ஆறுதல் கூறிட்டீங்க :-))) இதுல என் கூட சண்டை போட்டவங்க தான் அதிகம், சப்போர்ட் க்கு வந்தவங்கள விட 😉 ஆனாலும் எத்தனை கேள்வி கேட்டாலும் நானும் சளைக்காம சொல்லிட்டு தான் இருக்கேன் ஓரளவுக்கு நியாயமா. பதிவுலகில் ரஜினி ரசிகர்கள் நிறைய இருந்தாலும் சப்போர்ட்டுக்கு வர பயப்படுறாங்க ஏன் என்று எனக்கு தெரியவில்லை 😉 யார் வந்தாலும் வராவிட்டாலும் சிங்கிளா அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன் 😉 உங்கள் அன்பிற்கு நன்றி.

    //ராஜ நடராஜன் said…
    கிரி!வணக்கம்! வீட்டுக்குப் போக மணியடிச்சுட்டாங்க!நான் அப்புறமா திரும்ப வாரேன்.//

    வாங்க வாங்க 🙂

  87. கிரி நீங்கள் பத்தோடு பதினொன்று என்று நினைத்தேன் ,தாங்கள் அப்படி அல்ல, கடவுளுக்கு நன்றி. நீங்கள் கோபத்தோடு எழுதி விட்டிர்களோ என்று நினைத்து விட்டேன். எப்படி இருந்தாலும் நீங்கள் என் இனிய நண்பர்தான்

  88. என்னா கோவம்.. ரஜினி கூட இவ்வளவு கோர்வையாக அவர் பக்க நியாயத்தை சொல்லுவாரா என்பது சந்தேகம்தான். வாழ்த்துக்கள் கிரி.

  89. கஷ்டப்பட்டு அவர் சம்பாதிச்சு,ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்து தமிழ் நு ,பெருந்தன்மையா அவர் பாடினா ,இவன் தப்ப நினச்சுகிட்டு,இவன் சொத்தை அவர் புடுங்கின மாதிரி நினசுகிறான்.அட வெண்ணைகளா…உழைத்தவர் உயர்வர்..சும்மா எவனும் காசு தரல.பாபா வுக்கு வியர்வை ரஜினி சிந்தலையா …அப்போ எவ்ளோ சொத்து வாங்குனாரு..?இவனுக்கு சம்பாதிக்க துப்பு இருக்காது.அடுத்தவன் சம்பாதிச்சா ,வைதேரிச்சல் ல, வேகரனுக.அரசியல்வாதி உடன்பிரப்பெனு கண்ணாடி மாளிகை உம் உலகம் பூர சொத்து சேர்ப்பதும் கேட்க மாட்டீங்களே..ஏன்னா அங்க சொன்னா டங்குவாறு அந்துடுமே ..

  90. வாங்க ஓம் சதீஷ். ரஜினி எது செய்தாலும் குறை கண்டு பிடிப்பதையே ஒருசிலர் வேலையா வைத்து இருக்காங்க. எதிலும் குறை மட்டுமே காண்பவர்களிடம் என்ன விளக்கினாலும் அதில் பயனில்லை தான். விமர்சனம் என்பது நிறை குறை இரண்டும் சேர்ந்தது என்பதை உணராமல் ரஜினியை திட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

  91. நூறாவது கமெண்டா இருக்கட்டுமேன்னு எழுதறேன்.
    உங்கள் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை.
    நான் வழிமொழிகிறேன்!

  92. //selvakkumar said…
    நூறாவது கமெண்டா இருக்கட்டுமேன்னு எழுதறேன்.
    உங்கள் கேள்விகள் அனைத்தும் நியாயமானவை.
    நான் வழிமொழிகிறேன்!//

    நன்றி செல்வகுமார்.

  93. vanakam Giri avargale!

    Ithu than muthan murai ungal pathivai padipathu. Oru pinotathil, rajini rasigargal yarum thunaiku varavillai endru sonnergal, atharkagavae intha pathivu. Neram inmaiyal sila karuthukal mattum.

    Regarding ads:

    Rajini has acted in polio drops ads well back in early 90’s.

    There is a video in youtube, showing THALAIVAR(Ivaru thalaivar ilaena apuram antha paeruku artham illa) lend his vote for “full body donation”.

    Giri you said Ajith too not acting in ads but its not true(He acted in coffee ads-brand vandame). All actors who has media value acted in ads, other than the Rajini, Kamal(commercial purpose).

    Please note Rajini opposers, He never publicize his well-fare activities in public like others do.{One actor(who’s 1=10) donated chapels and given news to media }

    I’m, millions of Rajini fans, always there to support him. Don’t worry my friend(!) Giri.

    YAMIRUKA BAYAM YAEN! by Superstar

    – Sakthi

  94. //Sakthi said…
    Ithu than muthan murai ungal pathivai padipathu. Oru pinotathil, rajini rasigargal yarum thunaiku varavillai endru sonnergal, atharkagavae intha pathivu.//

    நன்றி சக்தி

    //Giri you said Ajith too not acting in ads but its not true(He acted in coffee ads-brand vandame). //

    நீங்கள் கூறுவது சரி தான். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    //I’m, millions of Rajini fans, always there to support him. Don’t worry my friend(!) Giri//

    நன்றி சக்தி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து. நீங்களும் நண்பர் தான் சந்தேகம் வேண்டாம் 🙂

  95. என்னை நண்பராக ஏற்றமைக்கு மிக்க நன்றி அன்பரே! உங்கள் பதிவுகளிலும், பின்னுட்டங்களுக்கு நீங்கள் பதில் அளிக்கும்போதும் எழுத்துகளில் மிகுந்த முதிர்ச்சியும் பொறுமையும் தெரிகிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

  96. //Sakthi said…
    என்னை நண்பராக ஏற்றமைக்கு மிக்க நன்றி அன்பரே!//

    அட! என்னங்க சக்தி இதுல என்ன பெரிய விஷயம்.

    //உங்கள் பதிவுகளிலும், பின்னுட்டங்களுக்கு நீங்கள் பதில் அளிக்கும்போதும் எழுத்துகளில் மிகுந்த முதிர்ச்சியும் பொறுமையும் தெரிகிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!//

    நன்றி சக்தி. கூடுமானவரை அவசரப்படாமல் அமைதியாகவே பதில் தர முயற்சிக்கிறேன் நாகரீகமாக.

    உங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்.

  97. தலைவர் என்ன செய்தாலும் அதை பழித்து பேசும் ஒரு கும்பல் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. தலைவரின் புகழ் செல்வாக்கு இது வரைக்கும் எந்த நடிகனும் அடையாதது., அடைய போவதும் இல்லை. யார் என்ன சொன்னாலும், தலைவர் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கு உலகம் அறிந்த ஒன்று,.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here