சூரியனை விட நட்சத்திரம் மிகப்பெரியது

35
சூரியனை விட நட்சத்திரம் மிகப்பெரியது

ள்ளியில் படிக்கும் போது சூரியனை விட நட்சத்திரம் மிகப்பெரியது என்று ஆசிரியர் கூற கேட்டுப் படித்து இருக்கிறேன் (சூரியனும் நட்சத்திரம் தான்) ஆனால், இவ்வளோ பெரிதாக இருக்கும் என்று நினைத்தது இல்லை.

அளவில் கூறுவதால் அதன் உண்மையான வித்யாசத்தை நம்மால் சரியாகக் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. படமாக விளக்கும் போது எளிதாகிறது.

நம்முடைய இணையதளங்களுக்கு IP தான் முகவரியாகக் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக என் தளத்திற்கு 72.14.235.121. இதைப் போல இணையத்தில் கணக்கிலடங்கா தளங்கள் உள்ளன.

இதில் நமக்குத் தேவையானவற்றை மட்டுமே நினைவு வைத்துக் கொள்வது என்றாலே சிரமம் அதற்காகத் தான் அந்த IP களுக்குப் பெயர் கொடுத்து எளிதாக்கி உள்ளனர்.

நமக்கும் 72.14.235.121 என்ற எண்ணை நினைவு வைத்துக் கொள்வதை விட www.giriblog.com என்று நினைவு வைத்துக் கொள்ள எளிதாக உள்ளது.

சூரியனை விட நட்சத்திரம் மிகப்பெரியது

இதைப் போலத் தான் கீழே உள்ள படங்களும், நமக்குச் சூரியனை விட நட்சத்திரம் இத்தனை 1000 மடங்கு பெரிது என்று மிகச் சரியாக எண்களில் கூறினாலும் நம்மால் அதன் வித்யாசத்தைப் புரிந்துகொள்வது சிரமமே.

இதைப் போலப் படங்களாகப் பார்த்தால் ஒப்பிட்டுப் பார்க்கவும் எளிதாக உள்ளது.

ANTARES IS THE 15 TH BRIGHTEST STAR IN THE SKY .

IT IS MORE THAN 1000 LIGHT YEARS AWAY.

HUMAN BEINGS NEVER EVER FIGURE OUT ANYWHERE HERE

AND WE ARE NOTHING IN COMPARISON TO THE SIZE OF THE UNIVERSE.

தொடர்புடைய கட்டுரை

மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

35 COMMENTS

 1. தெரிந்த விவரங்கள் என்றாலும் நீங்கள் சொன்னாற் போல இந்தப் படங்கள் ஒப்பிட்டுத் தெளிய உதவுகின்றன. நல்ல பதிவு கிரி.

 2. தெரிந்தது, பார்த்த படங்கள், இருப்பினும் உங்கள் விளக்கம் நன்றாக இருக்கு

 3. அதைவிடவெல்லாம் பெருசு மனிதன் மனது !

 4. ஒரு மாதத்திற்கு முன் NGC ஸ்பேஸ் ஸ்பெஷல் ப்ரோகிராம் போட்டிருந்தார்கள்.

  அருமையான ப்ரோகிராம்!
  இதே போல் நமக்கு அருகாமையில் உள்ள நட்சத்திரம்,
  பெரியது, சிறியது என கலக்கி விட்டார்கள்.

  படங்களுக்கு நன்றி

 5. படிக்கிறப்ப சரியாப் படிக்காம, இப்ப படிச்சு பதிவு 🙂

  நல்லாருக்கு கிரி!

 6. //கோவி.கண்ணன் on 8:48 AM, April 29, 2009 said…
  அதைவிடவெல்லாம் பெருசு மனிதன் மனது !//

  @கோவி.கண்ணன்
  கடவுள், ஆத்திகம் பற்றி எதாவது பதிவு வந்தால் எங்கிருந்தாலும் உடனே வந்து நாத்திகம்/ அறிவியல் பேசுறிங்க. நம்ம நண்பர் அறிவியல் பற்றி ஒரு பதிவு போட்ட உடனேய “அதைவிடவெல்லாம் பெருசு மனிதன் மனது” சொல்றீங்க. மனசுனு ஒன்னு நம்ம உடம்பலேய இல்ல ஆனா நாம எல்லாரும் நம்ம மனச்சாட்சி படி தான் நடக்கறோம். அதே மாதிரித்தான் கடவுள் நம்பிக்கையும். 🙂

 7. கிரி

  நன்றி………..படம் வரைந்து பாகம் குறித்து, விளக்கம் அளித்ததற்கும்

  சுருங்க சொல்லி…….. விளங்க வைத்ததற்கும்……………..

 8. ஆரஞ்சுப் பழங்களை எங்கிருந்து வாங்கினீங்க:)

  அசகு பிசகு இல்லாமல் கோளங்கள் ஒரே வட்டமாகவா இருக்குது?கடலைப் பார்த்தா உருண்டு புரண்டுகிட்டே இருக்குது.இமயமலையப் பார்த்தா மலைமாதிரி நிற்கிறானேங்கிற மாதிரி உர்ருன்னு நிக்குது.காத்த கண்ணுலயே பார்க்க முடியல.நான் மட்டும் சும்மாவான்னு நெருப்பு அனல் கக்குது.

  என்னமோ நடக்குது ஒலகத்துல!ஒண்ணுமே புரியல!

 9. //@கோவி.கண்ணன்
  கடவுள், ஆத்திகம் பற்றி எதாவது பதிவு வந்தால் எங்கிருந்தாலும் உடனே வந்து நாத்திகம்/ அறிவியல் பேசுறிங்க. நம்ம நண்பர் அறிவியல் பற்றி ஒரு பதிவு போட்ட உடனேய “அதைவிடவெல்லாம் பெருசு மனிதன் மனது” சொல்றீங்க. மனசுனு ஒன்னு நம்ம உடம்பலேய இல்ல ஆனா நாம எல்லாரும் நம்ம மனச்சாட்சி படி தான் நடக்கறோம். அதே மாதிரித்தான் கடவுள் நம்பிக்கையும். :-)//

  தப்பு தப்பு தப்பு, நான் இறை நம்பிக்கையை குறைச் சொல்லியது இல்லை. தனிமனித இறை நம்பிக்கைகளைக் குறை சொல்ல யாருக்கும் உரிமையும் இல்லை. நான் கேள்விக்க்கு உட்படுத்துவது மதம் சார்ந்த நம்பிக்கைகள் மட்டுமே.

  உலகில் பிரிவினை வாதங்களுக்கு அடிப்படைகள் மதம், இனம், பிறகு சாதி, இவை அணைத்தும் மதத்தினால் கட்டமைக்கப்படுகிறது அல்லது பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மைதானே ?

 10. விளக்கங்களுக்கு நன்றி.

  //உலகில் பிரிவினை வாதங்களுக்கு அடிப்படைகள் மதம், இனம், பிறகு சாதி, இவை அணைத்தும் மதத்தினால் கட்டமைக்கப்படுகிறது அல்லது பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மைதானே ?//

  உண்மை, கலப்பு திருமணங்கள் மூலம் சிறிதளவு கட்டவிழத்து விடலாம்

 11. ம்…அண்டவெளி பற்றி படிக்க வெளிக்கிட்டா மேலும் பல அபூர்வ தகவல்கள் கிடைக்கும் கிரி…டிஸ்கவரி, ஜீயோ சனல்களில் இது பற்றி தகவல் வரும் போது நான் விடுவதில்லை…:-))

 12. வாரான்!வாரான் பூச்சாண்டி ன்னு பயமுறுத்த வேண்டாம்.திருடறது எனக்கும் புடிக்கும்.சொல்லுங்க நகை இருக்குற இடத்தை:)

 13. மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி கிரி.இது மாதிரி பதிவுகளையும் எழுதுங்க.ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.

 14. இதை நான் முன்பே பார்த்திருந்தாலும்,கண்டதையும் பார்க்கும் பதிவுகளில் எரிக்கும் மே மாதச் சூரியனே குளுமையாகத் தெரிகிறார்,கிரி.நன்றி.

 15. சாதா ஸ்டார்களே இவ்வ்வ்வளவு பெரிசுனா சூப்பர் ஸ்டார் எவ்வளவு பெரிசா இருக்கும்?

 16. சூப்பர்! எனக்கு வான்வெளி பற்றி படிக்க ரொம்ப புடிக்கும் நீங்க படங்களோட வேற போட்டுட்டீங்க 🙂

  ரொம்ப நன்றி!

 17. ராமலக்ஷ்மி, ஞானசேகரன், கோவி கண்ணன், பாலா, அருண், வெயிலான், அருண், சுரேஷ், கோபி, ராஜ நடராஜன், அருண், டொன் லீ, பிரேம்ஜி, அன்புடன் அருணா, ஷண்முகப்ரியன், விக்னேஸ்வரன், ஆகாய நதி, கீழை ராஸா, நசரேயன் மற்றும் Jose வருகைக்கு நன்றி

  @அருண்

  நீங்க சொன்ன பிறகே கவனித்தேன் 🙂

  @ விக்னேஸ்வரன்

  “கிழ சில்பாஷெட்டி” யா “கீழே” சில்பாஷெட்டியா :-))) பாருங்க அண்டத்தை பற்றி பார்க்க சொன்னா சில்பாஷெட்டிய பார்த்துட்டு இருக்கீங்க.

  அண்டத்தில் அனைத்தும் அடக்கம் அதுவே இந்த விளக்கம் :-)))

  @கீழை ராஸா

  சரியா சொன்னீங்க 😉

  @நசரேயன்

  நசரேயன் எங்க உங்களை ரொம்ப நாளா பதிவுலகத்தில் காணோம்.. வேலை அதிகமா!!!!

 18. Giri,

  I forgot to mention that recently I read an article in ToI, Bangalore, which mentioned that both ESA & NASA are, for the first time, planning to send probes to SUN to measure its surface, atmosphere & do other experiments. ESA probe is expected to go near SUN by about 20 Million miles whereas NASA Probe will go still farther – about 4 Million miles – to do their job.

  It is, obviously going to be an engineering challenge to build heat shields, etc. to protect these probes from the enormous heat in SUN's atmosphere.

  I am really excited because till now mankind could only look at a star from a distance. Now, we are attempting to go near & even do some experiments. Wow.

  Arun

 19. astronomyயையும் ஒரு கை பார்த்தாச்சு.

  பூமியில் இருந்து பார்க்கும் போது பிரகாசமாக தெரியும் நட்சத்திரம்
  Sirius என்பது மட்டும் தெரியும். (இரவு வானில்)

  ஆனால் Antares உடன் ஒப்பிடும்போது ஒரு sun துணிக்கையாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
  Antares பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் இருப்பதால் இவ்வளவு பெரிதாக இருந்த போதும் குறிப்பிட்ட சில காலப்பகுதியில் மட்டுமே வெற்று கண்ணால் பார்க்கலாம்.

  படத்தில் பார்த்து ஒப்பிடும் போது தெளிவான விளக்கம் கிடைக்கிறது.

  After blogging about SuperStar its quite natural to move on to blog about ‘STARS’, isn’t it?
  அட‌

 20. இந்து சமயத்தின் படி புனர்பூச நட்சத்திரம் தான் Pollux. hindu astronomy/astrologyயும் interest தான்.

  “அங்க கூட்டமாக தெரியும் நட்சத்திரத்தை பார். அது தான் கார்த்திகை பெண்கள்.
  அவர்கள் தான் முருகனை வளர்த்தார்கள்” என்று சிறு வயதில் பாட்டி கதை சொல்லும் போது
  நன்றாக தான் இருந்தது. (கற்பனை கதையாக இருந்தாலும் கூட‌)

  இந்த stars எல்லாம் கி.மு நூற்றாண்டிலேயே இந்திய வானியல் மேதைகள் கண்டுபிடித்து விட்டார்கள்.
  ஆனால் நாம் தான் அவற்றை கண்டு கொள்ளமாட்டோமே.
  வெள்ளைகாரன் சொன்னால் தான் ஒத்துக்கொள்வோம்.

  Aryabhataa,baskariya போன்றோரை எத்தனை பேருக்கு தெரியும்.

 21. //M Arunachalam on 10:59 AM, April 30, 2009 said…
  It is, obviously going to be an engineering challenge to build heat shields, etc. to protect these probes from the enormous heat in SUN's atmosphere//

  தலை சுத்துது.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

  //I am really excited because till now mankind could only look at a star from a distance. Now, we are attempting to go near & even do some experiments. Wow//

  இவங்க ஆர்வத்துக்கு ஆராய்ச்சிக்கும் ஒரு அளவே இல்லாம போச்சே..இதை எல்லாம் எப்படி தான் பண்ணுறாங்களோ..எனக்கும் இதை போன்ற விசயங்களை தெரிந்து கொள்வதில் ரொம்ப ஆர்வம், ஆனா இதில் பல விஷயங்கள் ரொம்ப அட்வான்சா இருப்பதால் நம்ம மண்டைல ஏற மாட்டேங்குது..என் இந்த பதிவு மாதிரி சொன்னா தான் புரியுது :-))

  ===================================================================

  //வாசுகி on 8:39 PM, April 30, 2009 said…
  astronomyயையும் ஒரு கை பார்த்தாச்சு//

  😉

  //இந்த stars எல்லாம் கி.மு நூற்றாண்டிலேயே இந்திய வானியல் மேதைகள் கண்டுபிடித்து விட்டார்கள்.//

  ஆஹா! வாசுகி எப்படி இப்படி 🙂

  //Aryabhataa,baskariya போன்றோரை எத்தனை பேருக்கு தெரியும்//

  எனக்கு என்னோட நண்பன் பாஸ்கரை மட்டும் தான் தெரியும் ஹி ஹி ஹி

 22. கிரி சார்… வலைமனைக்கு வந்ததற்கும் …. பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க….தலைவரை பற்றிய உங்கள் பதிவுகள் மிகவும் அருமை

 23. கிரி, நல்ல பதிவு!… ஆனால் இதில் ஏதோ உள் குத்து இருப்பது போல தெரியுதே!!(சூரியனை விட சூப்பர்ஸ்டார் …)
  பாத்துங்க தேர்தல் நேரம் வேற… சிங்கைக்கு ஆட்டோ அனுப்ப போறாய்ங்க!
  ஏதோ என்னால முடிஞ்சது.. வ்வ்வ்வ்வர்ட்டா! :))))

 24. //Sukumar Swaminathan said… தலைவரை பற்றிய உங்கள் பதிவுகள் மிகவும் அருமை//நன்றிங்க சுகுமார் சுவாமிநாதன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து ================================================================//KADUVETTI said… WE KNOW ABOUT THIS IN SCHOOL DAYS :))))))))//வாங்க காடுவெட்டி ..எனக்கெல்லாம் பள்ளி நாட்களில் அவ்வளவா தெரியல..லேட் பிக் அப் ;-)உங்கள் முதல் வருகைக்கு நன்றி=================================================================//Vijay said… கிரி, நல்ல பதிவு!… ஆனால் இதில் ஏதோ உள் குத்து இருப்பது போல தெரியுதே!!(சூரியனை விட சூப்பர்ஸ்டார் …)பாத்துங்க தேர்தல் நேரம் வேற… சிங்கைக்கு ஆட்டோ அனுப்ப போறாய்ங்க!ஏதோ என்னால முடிஞ்சது.. வ்வ்வ்வ்வர்ட்டா! :))))//ஆஹா! பல பிரச்சனைகள் இப்படி தான் ஆரம்பிக்குதா..நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!

 25. @கோவி.கண்ணன்
  //உலகில் பிரிவினை வாதங்களுக்கு அடிப்படைகள் மதம், இனம், பிறகு சாதி, இவை அணைத்தும் மதத்தினால் கட்டமைக்கப்படுகிறது அல்லது பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மைதானே ?//

  உலகில் மனிதனை ஒழுங்கு படுத்த உதவுவது மதம், அந்த மதத்தை ஒழுங்காக பதுககபடததால் வந்ததுதான் ஜாதி மற்றும் அதனை சார்ந்த பிரிவுகளும். மனிதனின் வாழ்கைக்கு மிகவும் முக்கியம் இறைவனும், இறை நம்பிக்கையும் அதை மனிதனுக்கு அறியபடுதுவது மதம்.

  வீடிற்குள் எலி வராமல் இருக்க வீட்டை இடிக்க முடியாது… அதை ஒழுங்காக கட்டி, ஓட்டைகளை அடித்தால் போதும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here