இத்தாலியில் சமீபத்தில் ஒரு சொகுசு கப்பல் பாறையில் மோதிக் கவிழ்ந்து அதில் 11 பேர் இறந்து விட்டார்கள் மற்றும் 21 பேரைக் காணவில்லை. Image Credit
இந்த விபத்து நடந்த போது கப்பல் கேப்டன் Francesco Schettino பயணிகளைக் காப்பாற்ற முயற்சிக்காமல் முதல் ஆளாக இவர் ஒரு படகில் தப்பித்து கரைக்கு வந்து விட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோர படையினர் விரைந்து வந்து கப்பலில் சிக்கி உள்ளவர்களை மீட்க உதவினர்.
Gregorio De Falco
அப்போது கடற்படை அதிகாரி Gregorio De Falco கப்பலை தொடர்பு கொண்டு கேப்டனை விசாரிக்க அவர்கள் அங்கே இல்லை.
அங்கே உள்ள மற்ற பணியாளரிடம் கப்பல் கேப்டனின் தொலைபேசி எண்ணைப் பெற்று அதில் தொடர்பு கொண்டு பேசிய போது தான் கப்பல் கேப்டன் தப்பித்து கரைக்கு வந்தது தெரிய வந்தது.
இதனால் கடுப்பான Gregorio De Falco கப்பல் கேப்டனை கடுமையாக திட்டி “இப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளீர்களே!
பயணிகள் அங்கே தவிக்கும் போது நீங்கள் எப்படி இங்கே வரலாம்” என்று திட்டியவுடன் கேப்டன் “சாரி இது ராங் நம்பர்” என்று கூறி தப்பிக்க முயல.
ஆனால், விடாது கருப்பாக மறுபடியும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்தி “நீ மட்டும் இப்ப கப்பலுக்கு வரல உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.
இவர்கள் பேசிய உரையாடல் வெளியே கசிய பெரும் பரபரப்பு ஆகி விட்டது.
டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த போது அதிலிருந்து தப்பிக்காமல் (தப்பிக்க வாய்ப்பிருந்தும்) கப்பல் கேப்டன் ஸ்மித் அதிலேயே இறந்தது குறிப்பிடத்தக்கது.
Get back on board, damn it!
கேப்டனை பின்னர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் ஆனால் Gregorio De Falco கூறிய Get back on board, damn it! என்று கூறியது மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது.
இணையத்தில் இதை வைத்து facebook தளம் ஆரம்பிக்கப்பட்டு அது சக்கை போடு போடுகிறது.
டி ஷர்ட்
இந்த வாசகத்தை டி ஷர்ட் ல் வைத்து ஒரு நிறுவனம் விற்பனை செய்ய அது மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது. இதற்கு பல்வேறு நாட்டில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றனவாம்.
பலர் இறந்த நிகழ்வை வைத்து இப்படி காசாக்குகிறீர்களே! என்று திட்டுகளும் வந்தன.
அதற்கு அந்நிறுவன அதிகாரி “நாங்கள் Gregorio De Falco வை ஹீரோ போலத்தான் பார்க்கிறோம்.
நெருக்கடியான நேரத்தில் தன் பொறுப்பை மறந்து விலகி ஓடிய கேப்டனை Gregorio De Falco சரியான முறையில் கையாண்டு இருக்கிறார் அது எங்களை மிகவும் கவர்ந்தது.
அதுமட்டுமல்லாமல் தற்போது இத்தாலி நெருக்கடியான சூழலில் உள்ளது தங்களுடைய பொறுப்புகளை உணராமல் தப்பிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த வாசகம் பொருந்தும்” என்று கூறி இருக்கிறார்.
இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ரவுண்டு கட்டி அடிக்கும் தற்போது இது!
டி ஷர்ட் தலைப்பு நாகரீகமாக இருந்தாலும் உண்மையில் Gregorio De Falco கூறியது Vada a bordo, cazzo அதாவது Get on board, d**k ஆனால் இத்தாலியில் இதையே அப்படியே டி ஷர்ட்டில் வைத்து விட்டார்கள் 😀 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.