எந்திரன் வெற்றியால் ஜெலுசில் விற்பனை அதிகரிப்பு!

98
ஜெலுசில் விற்பனை அதிகரிப்பு

டந்த 2010 October 1 ம் தேதியிலிருந்து ஜெலுசிலின் விற்பனை பல மடங்கு உயர்ந்து விட்டதாக செய்திகள் உலவி வருகின்றன. Image Credit

ஜெலுசில் விற்பனை அதிகரிப்பு

ஜெலுசில் நிறுவனத்தினர் இந்தத் திடீர் விற்பனை உயர்விற்கு காரணம் புரியாமல் குழம்பி உள்ளனர்.

இந்தத் திடீர் விற்பனை உயர்வை நம்பி மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தலாமா வேண்டாமா! என்று பலத்த விவாதங்களை நடத்தி வருவதாக டுபாக்கூர் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது 😀 .

அதுவும் அதிகமாக சினிமாத்துறையினரும் பல தமிழ் வலைப்பதிவர்களும் மாத்திரை கட்டுபடியாகாது என்று பாட்டில் பாட்டில்களாக வாங்கிச் செல்வதால் ஒன்றும் புரியாமல் மருந்துக் கடையினர் மண்டை காய்ந்து போய் இருக்கின்றனர்.

ரஜினி ரசிகர்கள் மட்டும் ஜெலுசில் விற்பனை அதிகரிப்பு காரணத்தை அறிந்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம் 😉 .

எந்திரன் படம் வரும் முன்பே கரித்துக்கொட்டிக்கொண்டு இருந்தவர்கள் படம் வெளிவந்த பிறகு ரஜினியை பஜ்ஜி ஆக்கலாம் என்று காத்து இருந்தவர்களுக்கு வந்த படம் தலையில இடிய இறக்குன மாதிரி ஆகி விட்டது.

ரஜினியை பிடிக்காதவர்கள் என்னவெல்லாம் நினைத்து இருப்பார்கள் அவை எப்படி புஸ்வானம் ஆனது என்று பார்ப்போம்.

ஹையா! ஜாலி

150 கோடியில் படத்தை எடுத்து அறிமுகப்பாடல், பன்ச் வசனங்கள், இருபது பேரை அடிக்கும் காட்சிகள் என்று வைத்து இருப்பார்கள்.

படத்தைப் பார்த்துக் கண்டபடி திட்டலாம் ஹையா! ஜாலி என்று ரஜினியை திட்டத் தலைப்பெல்லாம் தயார் செய்து வைத்து இருந்தவர்களுக்கு இப்படியொரு ஆப்பு வரும் என்று கனவிலும் நினைத்து இருக்கமாட்டார்கள்.

கவர்ச்சி காட்சிகள் இருந்தால் அதை வைத்துக் கேவலப்படுத்தலாம் என்று இருந்தவர்களுக்கு சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது சிரிப்பாக உள்ளது.

எப்படி எல்லாம் திட்டம் போட்டு அத்தனையும் புஸ்வானம் ஆனதில் ஏகக்கடுப்பில் இருக்கிறார்கள் பலர்.

பல பேர் எப்படி ரஜினியை திட்டுவது என்று புரியாமல் “ஷங்கர் கதையில் லாஜிக் இல்லை சன் டிவி ரொம்ப ஓவராக செய்து கொண்டு இருக்கிறது” என்று இப்படிக்கூற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

விவேக் காமெடி

எனக்கு இதைப்பார்த்தால் சாமி பட விவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.

அதில் விவேக்கை ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி பிடித்து லைசென்ஸ் RC இன்சூரன்ஸ் என்று ஒவ்வொன்றாக கேட்டு லஞ்சம் வாங்க மடக்குவார்.

ஆனால், விவேக் எல்லாவற்றையும் தயராக வைத்து இருப்பார்.

ம்ம்ம் இவனை எப்படித்தான் மடக்குவது! என்று அந்தப் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக நடித்து இருப்பவர் கொடுக்கும் முகபாவனைகள் சிறப்பாக இருக்கும்.

அது மாதிரி இதில் அந்த அதிகாரி இடத்தில் நம்ம வலைப்பதிவர்களை நினைத்துப் பார்த்தேன் செம காமெடியாக உள்ளது.

ஹா ஹா ஹா ரொம்ப பாவம் தான் போங்க! 🙂 .

குசேலன்

குசேலன் படம் தோல்வி அடைந்ததால் ரஜினி மீது இருக்கும் வெறுப்பில் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்று எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவு நடந்து கொண்டார்கள்.

இவர்களால் ரஜினி ரசிகன் என்பதால் கிண்டலுக்கு ஆளாகி கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.  

தற்போது எனக்கு விமர்சனங்களை எதிர்கொள்ள இந்தப்பிரச்சனைகளே உறுதுணையாக இருக்கின்றன.

இந்த ஒன்றுக்காக அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙂 .

அந்தச் சமயத்தில் எல்லாம் எந்திரன் படம் மட்டும் வந்து வெற்றி பெற்றால் இவர்களை எல்லாம் உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

அந்த அளவிற்கு பல வலைப்பதிவர்களால் மனதளவில் காயப்பட்டு இருந்தேன். இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரை போட்டு இவர்களைக் கடுப்பேத்த வேண்டும் என்று கறுவிக்கொண்டு இருந்தேன் 🙂 .

ஆனால், தற்போது இவர்களை எல்லாம் நாம் என்ன கிண்டல் செய்வது… அவர்கள் தான் அப்படி நடந்து கொண்டார்கள் நாம் ஏன் அவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரை கூட நண்பர்களின் திருப்திக்காகத்தான்.

எந்திரன் படம் சுட்டி டிவி க்காக எடுக்கப்பட்டது ராமநாராயணன் படம் போல உள்ளது என்று (விமர்சனம் எழுதி)  கூறி வயித்தெரிச்சலை தணித்துக்கொண்டு உள்ளார்கள் 🙂 .

இந்திய திரையுலகில் இந்தப்படம் ஒரு பெரிய சாதனை தான் என்பதை நியாயமாக பேசும் எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் அதனால் இவர்களின் அதிபுத்திசாலி கண்டுபிடிப்புகள் எடுபடாது.

மற்ற மாநிலங்களில் பெரிய வெற்றி

ஆந்திராவில் படம் சூப்பர் ஹிட் ஹிந்தியில் முதலில் வரவேற்பு குறைவாக இருந்து தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் எந்திரன் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படமாகும் நேரடிப்படமல்ல.

தமிழ்நாடு தான் முக்கியம் இதெல்லாம் போனஸ் தான் 🙂 .

நண்பர் அருண் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.. “கிரி! நீங்க முன்பு போல கோபமாக எழுதுவதில்லை இவர்களுடன் சண்டை போடுவதில்லை” என்று 🙂 காரணம் இது தான்.

நான் ரஜினியை ரசிக்கிறேன் எனக்கு பிடித்து இருக்கிறது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது.

அவர்கள் திட்டினால் திட்டிவிட்டு போகட்டும் அதனால் நமக்கென்ன இழப்பு ரஜினிக்கென்ன இழப்பு!

நாம் எதற்கு தேவையில்லாமல் டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்க வேண்டும். ரஜினியை பிடிக்க ஆயிரம் காரணம் இருப்பது போல அவர்களுக்கு பிடிக்காமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கும்.

இவர்கள் திட்டுவதால் கிண்டல் அடிப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ரஜினி மேலும் மேலும் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறார்.

வட இந்திய ஊடகங்கள்

எப்போதும் தென் பகுதி மக்களை நக்கலாகப்பேசும் வட இந்திய ஊடகங்கள் ரஜினியை கொண்டாடி வருகின்றன.

தமிழனின் (திரைப்படங்களின்) பெருமையை வட இந்தியாவில் (மட்டுமல்ல) நிரூபித்து இருக்கிறார். 

ஒரு சின்ன வருத்தம் இந்த வெற்றியில் ஷங்கரின் முக்கியப்பங்கு உள்ளது ஆனால், வட இந்திய ஊடகங்கள் ரஜினியை மட்டுமே தூக்கி வைத்துப் பேசிக்கொண்டு இருக்கின்றன.

இந்தியப்படங்கள் என்றால் அது நாம் தான் என்று மார் தட்டிக்கொண்டு இருந்த பல கான்களின் நினைப்பில் ரஜினி இடியை இறக்கி இருக்கிறார்.

கேரளா ஆந்திர மாநிலங்களில் அவர்களுடைய படங்களை விட இந்த டப்பிங் படம் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது.

இது மாதிரி தமிழனின் பெருமையை எந்திரன் படம் மூலம் உயர்த்திய செய்திகளை நான் கூறினால் இந்த ஒரு இடுகை (post) போதாது.

அதனால் மக்களே! திட்டுறவங்க திட்டிட்டே இருங்க! ரசிக்கிறவங்க ரசிச்சுட்டே இருங்க! நான் ரசிக்கிறேன் 🙂 DOT

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

98 COMMENTS

  1. கிரி, சிக்சும் போறுமா வெளுத்து வாங்குவீங்கன்னு நெனச்சுட்டு வந்தேன். ஆனா இதவிட “சுருக்”ன்னு குத்த முடியாது. இந்த படத்துல ரஜினிய ஒரு சதவீதம் கூட குறை சொல்ல முடியாம போச்சேன்னு பொலம்புறத நெனச்சா, நமக்கு சரி ஜாலிதான் போங்க… வேற வழியில்லாம லாஜிக், விளம்பரம், திரைக்கதை, அது இதுன்னு பேசிட்டிருக்காங்க.

    ஆனா படத்தோட ஓப்பனிங் + கலக்ஷன் + வரவேற்பப் பாத்தா… சென்னை 28 படத்துல சிவா, ப்றேம்ஜி எல்லாம் சின்ன பசங்க கூட பீச்ல கிரிக்கெட் வெளையாடும்போது “எப்பிடி போட்டாலும் அடிக்கிறான்டா”-ன்னு பொலம்புவானுங்களே… அப்பிடி ஆயிப்போச்சு இவங்க நெலம. இவங்க என்னதான் பிளான் பண்ணாலும் படத்துக்கு படம் ரஜினி லெவல் சிக்சும் போறுமா எகிறிட்டே இருக்கா… அவங்களும் என்னதான் பண்ணுவாங்க பவம்? இதுல அவங்க இஷ்ட நடிகர்கள் வேற மண்ணைக் கவ்விட்டே இருக்காங்க. சும்மா ஜெலுசில்-ன்னு சொல்றிங்களே, அவங்க இடத்துல இருந்து நீங்களே யோசிச்சு பாருங்க, அவங்க கஷ்டம் புரியும்! 🙂

    • ஜாலி ஜாலி ஜாலி ….

      என்னைய (ரஜினி) அழிக்க யாராலும் முடியாது ..!

  2. வணக்கம் தலைவா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. வலைபதிவாளர்களுக்கு மட்டுமல்ல வயித்தெரிச்சல் சில இயக்குனர்களுக்கும் வயித்தெரிச்சலாகத்தான் இருக்கும் ஏனென்றால் இப்படி ஒரு பிரம்மாண்ட படம் நம்மால் தர இயலுமா என்றும் சங்கர் தந்து விட்டாரே என்றும் வயிறெரிவார்கள்.நானும் ஜெலுசில் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தேன்.எந்திரன் பார்த்ததிலிருந்து உபயோகிப்பதில்லை ஏனென்றால் என் வயிற குளிர்ந்துவிட்டது.
    நன்றி

  3. சீரியஸாவே சொல்றேன் படம் போரடிக்காம போகுது தான், ஆனா வாங்குன விலையில் பாதி கூட சம்பாரிக்காம தியேட்டர் காரங்க வாயிலயும் வயித்தலும் அடிச்சிகிறாங்க!

    கிரி நீங்க சின்ன பப்பா இல்ல தான!
    மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, எந்திரனை விட நூறு மடங்கு செலவு பண்ணி எடுக்கும் படத்திற்கு கூட எங்கேயாவது ௫௦௦ ருபாய்க்கு டிக்கெட் விக்கிறானுங்களா?, ரஜினிக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!

    உண்மையில் ஸ்டொமக் பர்னிங் உங்களுக்கு தான் கிரி, கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க!

  4. ராஜேஷ் V, முத்து, mrs.krishnan, எஸ். கே, ராஜேஷ் K, டேவிட், இளவரசன் மற்றும் அருண் வருகைக்கு நன்றி

    @முத்து ஹி ஹி ஹி 🙂

    @இளவரசன் நீங்க நிறுத்திட்டீங்க அவங்க ஆரம்பித்துட்டாங்கன்னு சொல்றீங்க! ரைட்டு 😉

    @அருண் வாங்க வாங்க அருண் ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க. முதலில் எந்திரன் படம் (திரையரங்கிலோ அல்லது திருட்டு DVD லையோ) பார்த்தற்கு நன்றி. நீங்கெல்லாம் பார்ப்பீங்கன்னு எதிர் பார்க்கவே இல்லை. அதோட படம் வேற நல்லா இருக்குனு சொல்லிட்டீங்க. நன்றி

    //கிரி நீங்க சின்ன பப்பா இல்ல தான!//

    ஹி ஹி ஹி கண்டிப்பா இல்ல எனக்கே ஒரு பையன் இருக்கான்

    //மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, எந்திரனை விட நூறு மடங்கு செலவு பண்ணி எடுக்கும் படத்திற்கு கூட எங்கேயாவது ௫௦௦ ருபாய்க்கு டிக்கெட் விக்கிறானுங்களா?//

    அருண் முதலில் அவர்கள் படத்து வெளியீடையும் நம்ம படத்து வெளியீடையும் ஒப்பிடவே முடியாது. அப்புறம் நீங்கள் கூறும் விஷயம் எனக்கு ஏற்புடையதே! எனக்கும் உடன்பாடு இல்லை.

    //ரஜினிக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!//

    🙂 கண்டிப்பாக இல்லை.

    //உண்மையில் ஸ்டொமக் பர்னிங் உங்களுக்கு தான் கிரி, கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க!//

    அருண் இதை எதை வைத்து சொன்னீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல! எனக்கு எதுக்குங்க வயித்தெரிச்சல் இருக்க போகுது. நான் சந்தோசமா இருக்கேன்.. குசேலன் சமயத்துல என்றால் கூட நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளலாம். இப்ப தான் படம் பட்டய கிளப்புதே! நான் எப்போதும் பிராக்டிகலா தான் எழுதுவேன் அருண் ரஜினி பிடிக்கிறது என்பதற்காக கண்டபடி எல்லாம் எழுத மாட்டேன் உங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

    அப்புறம் அடிக்கடி வாங்க அருண்! விவாதம் வைக்கிற மாதிரி ஒரு பதிவும் எழுதல …ம்ம்ம் அதை நான் ஒத்துக்கிறேன்.

    @நண்பர்களுக்கு பின்னூட்டம் இடுறவங்க அருண் (பற்றி தெரியாதவங்க) இப்படி கூறி இருப்பதை பார்த்து அருண் ஒரு ஜெலுசில் பார்ட்டின்னு நினைத்துக்காதீங்க! இவர் நடிகர்களுக்கே எப்போதும் எதிர் தான். அது ரஜினியா இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர் இப்படித்தான் கூறுவார்.

    அதனால் தவறாக புரிந்து கொண்டு எதுவும் பின்னூட்டம் அளித்து விடாதீர்கள்.

  5. தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என ஆனந்த விகடன் பாராட்டி உள்ளது..குமுதம் இதுவரை எந்த பட விமர்சனத்துக்கும் பயன்படுத்தாத சூப்பர் என்ற முத்திரையை கொடுத்துள்ளது…ரஜினி எதிர்ப்பாளர்கள் மற்றும் தன்னை சமூக சீர்சிருத்தவாதிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இதற்கு என்ன சொல்ல நினைக்கிறார்கள்..அவர்கள் வாய் பொத்தி மொக்கை பதிவு எழுதட்டும்..எந்திரன்- ஆனந்த விகடன் விமர்சனம் படிக்க-http://sathish777.blogspot.com/2010/10/7102010.html

  6. அட்ரா சக்கை அட்ரா சக்கை…அட்ரா…அட்ரா…அட்ரா 🙂

    நமட்டு சிரிப்பு இல்லை கிரி, ஐ.எஸ்.டி கால் போட்டு போட்டு “மேமேமே…மேமே ரோரோரோபோ” …:-) என்று சத்தமாகவே சிரித்தேன், தலைவர் ரசிகர் இல்லாத என் நண்பர்களிடம் :-).

    சரி, என்னதான் சொன்னாலும் ரஜினியை திட்டி பதிவுகள் இல்லாவிட்டால், “ஜோக்கர்” இல்லாத திரைபடம் போல் ஆகிவிடாதா பதிவுலகம் 🙂 ??? அப்புறம் நமக்கேது என்டடைன்மெண்டு (நேற்றுதான் துரோகி படம் பார்த்தேன்)

    //நண்பர்களின் திருப்திக்காகத்தான்//

    திருப்தி…திருப்தி…திருப்தி 🙂

  7. //உண்மையில் ஸ்டொமக் பர்னிங் உங்களுக்கு தான் கிரி, கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க!//

    அருண் இதை எதை வைத்து சொன்னீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல! எனக்கு எதுக்குங்க வயித்தெரிச்சல் இருக்க போகுது. //

    அந்த வார்த்தை பயன்படுத்தக்காரணம் நீஙக் பொதுவா ஜெலுசில் விற்பனை அதிகரிப்பு என்று சொன்னதால் தான்!

    ரஜினின்னு இல்ல, சாதாரணமா நடிகர்ன்னு பார்த்தா நிச்சயம் அதில் உழைப்பு இருக்கு, அதில் ரஜினிய்யொட அர்பணிப்பை நிச்சயம் பாராட்டுறேன்!, முக்கியமா இந்த படத்தில் பெரிதா ஹீரோயிஷம் காட்டாம கதாபாத்திரமா நடித்திருப்பது பாராட்டதக்கதுன்னு கூட சொல்லலாம்!

    இது ஒரு சினிமாப்படம், ஒரு எண்டர்டெயினர், நாம அதை பார்த்து சாதிக்கபோறது ஒன்னுமில்ல, வேலைப்பளுவின் இடையில் சிறு மாற்றம் விரும்பி போறோம், ஆனா தெலுங்குல ஹிட்டு, குஜராத்தில ஹிட்டுன்னு சொன்னா அதுக்கு இன்னொரு அர்த்தம் ”நான் தான் டாப்பு, மத்ததெல்லாம் டூப்பு”, அப்படினா உங்களுக்கு ஸ்டொமக் பர்னிங் இருக்குன்னு தானே அர்த்தம்! 🙂

    //@நண்பர்களுக்கு பின்னூட்டம் இடுறவங்க அருண் (பற்றி தெரியாதவங்க) இப்படி கூறி இருப்பதை பார்த்து அருண் ஒரு ஜெலுசில் பார்ட்டின்னு நினைத்துக்காதீங்க! இவர் நடிகர்களுக்கே எப்போதும் எதிர் தான். அது ரஜினியா இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர் இப்படித்தான் கூறுவார்.//

    ஆரோக்கியமா விவாதம் பண்ணி ரொம்ப நாளாச்சு தல, நான் ரெடியா தான் இருக்கேன்!, நண்பர்கள் பக்க கருத்தையும் எதிர்பார்க்கிறேன்!

  8. அதனால் மக்களே! திட்டுறவங்க திட்டிட்டே இருங்க! ரசிக்கிறவங்க ரசிச்சுட்டே இருங்க! நான் ரசிக்கிறேன்

    கரெக்ட் கிரி

    இடுகை டைட்டில் நல்லாருக்கு

  9. வணக்கம் கிரி சார். ஏற்கனவே பல அலசல்களை அசத்தலாக கொடுத்து இருக்கீங்க..!! இதுவும் அப்படித்தான் இருக்குமுனு நினைக்கிறேன். முழுவதும் படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன். பிரவின் உள்ளேன் தல.

  10. வெளிநாட்டு இணையதளத்தில் இந்தப் படம் தெளிவாகவும், முழுமையாகவும் கிடைப்பதாகத் தெரிகிறது. 2 மணி 50 நிமிடங்கள் இத் திரைப்படம் இணையதளத்தில் ஓடுவதாக, இதைப் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் “தினமணி’ அலுவலகத்துக்குத் தெரிவித்தன

  11. ////////ஒரு சின்ன வருத்தம் இந்த வெற்றியில் ஷங்கரின் பங்கும் உள்ளது ஆனால் வட இந்திய ஊடகங்கள் ரஜினியை மட்டுமே தூக்கி வைத்துப் பேசிக்கொண்டு இருக்கின்றன. ///////////

    ஷ‌ங்க‌ர் ம‌ட்டும் யோக்கிய‌மா? க‌தை, திரைக்க‌தை, வ‌ச‌ன‌த்தில் சுஜாதாவின் ப‌ங்க‌ளிப்பு என்ன‌ என்ப‌தை அவ‌ர் க‌டைசி கால‌ க‌ட்ட‌த்தில் எழுதிய‌ “க‌ற்ற‌தும் பெற்ற‌தும்” ம‌ட்டுமே ப‌டித்த‌ வாச‌க‌ன் கூட‌ உண‌ர்வான். வ‌ச‌ன‌த்தில் மூன்று பேரில் ஒரு பெய‌ராக‌ சுஜாதாவை போட்டு கேவ‌ல‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு, க‌ம‌ல் ” த‌சாவ‌தார‌த்தில்” சுஜாதா பெய‌ரையே போடாம‌ல் கெள‌ர‌வித்த‌து எவ்வ‌ள‌வோ மேல்(டாட்).

    ச‌ரி அத‌ விடுங்க‌………

    நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ப‌டி “சி” சென்ட‌ரில்தான் முத‌ல் நாள் முத‌ல் ஷோ ப‌ட‌ம் பார்த்தேன். ந‌ன்றாக‌ ர‌சித்து பார்த்தார்க‌ள். க்ளைமேக்ஸில் ரோபோவை செய‌லிழ‌‌க்க‌ச் செய்து சோக‌மாக‌ முடித்த‌தை யாராலும் ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை (ப‌ல‌ரும் த‌லையை சொரிந்து கொண்டுதான் தியேட்ட‌ரை விட்டு வெளியேறினார்க‌ள்). ப‌ட‌த்தின் க‌ல‌வையான‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு இந்த‌ நெக‌ட்டிவ் க்ளைமாக்ஸ்தான் கார‌ண‌மோ என்று தோன்றுகிற‌து. லாஜிக் ப‌டி இந்த‌ க்ளைமாக்ஸ் ச‌ரியாக‌ இருக்க‌லாம் ஆனால் ச‌யின்ஸ் ஃபிக்ஸ‌னில் லாஜிக்கோ கோர்ட்டோ தேவையில்லையே……. எப்ப‌டி வேண்டுமாலும் ப‌ட‌த்தை முடிக்க‌லாம்.

    என்னுடைய‌ ஐடியா என்ன‌ வென்றால் க‌டைசியில் ” ரோபோ” ர‌ஜினியின் விருப்ப‌த்தை நிறைவேற்றி சிட்டிக்கு ஒரு ” ரோபோ” ஐஸ்வ‌ர்யாவை செய்து கொடுத்து முத‌லிர‌வுக்கு அனுப்பி ந‌ம்மையும் ஜாலியாக‌ தியேட்ட‌ரை விட்டு அனுப்பி இருக்க‌லாம். உற்சாக‌ம் தியேட்ட‌ர் கூரையை பிச்சிருக்கும். (உம்: நியூ ப‌ட‌த்தில் க்ளைமாக்ஸ் இர‌ட்டை வேட‌ சூர்யா)

    பூம் பூம் ரோபோ பாட‌லை “மாண்டேஜ் சாங்” மாதிரி செய்து அச‌த்திவிட்டார்க‌ள், இந்த‌ பாட‌ல் ப‌ட‌த்தில் இருக்காது என்ற‌ ந‌ம்பிக்கை புஸ்ஸ்ஸ்……..நீங்க‌ சொன்ன‌மாதிரி குழ‌ந்தைக‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை அனைவ‌ரையும் க‌வ‌ரும் பாட‌ல் இதுதான்.

    கிளிமாஞ்சாரோ பாட‌ல் தேவையில்லாத‌து, அந்த‌ பாட‌லை வைப்ப‌த‌ற்காக‌வே க‌லாப‌வ‌ன்ம‌ணி. கொசுவுட‌ன் பேச்சுவார்த்தை, இதையெல்லாம் நீக்கிவிட்டால் இர‌ண்டாம் பாதி திரைக்க‌தையில் தொய்வு இருக்காது.

    ர‌ஜினியின் பாடிலாங்குவேஷ் ரிய‌லி சூப்ப‌ர். அத‌னால் தான் அவ‌ர் சூப்ப‌ர் ஸ்டார். ர‌ஜினி இன்ற‌ல்ல‌ நேற்ற‌ல்ல‌ என்றுமே அவ‌ர் இய‌க்குன‌ர்க‌ளின் ந‌டிக‌ர் என்ப‌தை அவ‌ர் ந‌டிப்பை கூர்ந்து க‌வ‌னிப்ப‌வ‌ர்க‌ள் அறிவார்க‌ள். க‌ம‌லை எல்லாம் அந்த‌ வில்ல‌த்த‌ன‌மான‌ கேர‌க்ட‌ரில் நினைத்து கூட‌ பார்க்க‌ முடியாது………

    வால்பைய‌ன் “திரு.அருண்” கூறுவ‌து போல‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ விலைக்கு விற்றுள்ளார்க‌ள். எங்க‌ ஊரில் பெட்டி 55 இல‌ட்ச‌ம், ஆனா சுத்து ப‌ட்டில் 30 கி.மிட்ட‌ருக்கு வேறெங்கும் ரிலீஸ் ஆகாத‌தால் தியேட்ட‌ர் ஓன‌ர் ரிலீஸ் அன்று காலையிலேயே செம‌ குஷியாக‌ இருந்தார்.

    வ‌ட‌க்கிலும் ந‌ல்ல‌ ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு, ராஜ‌ஸ்தான் ஜோத்பூரில் உள்ள‌ என்னுடைய‌ இந்தி ந‌ண்ப‌ர் ப‌ட‌த்தை பார்த்துவிட்டு வெகுவாக‌ பாராட்டினார். தியேட்ட‌ரிலும் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பு கிடைத்த‌தாம்.

    இந்த‌ சாத‌னையை எப்ப‌டி முறிய‌டிப்ப‌து என்ப‌து தான் ர‌ஜினி முன்னால் உள்ள‌ பெரிய‌ பிர‌ச்ச‌னை. இதை த‌விர்க்க‌ அர‌சிய‌லுக்கு வ‌ந்துவிட‌வேண்டும்.

  12. ஹாய்! ஹி! ஹி! ஹி!

    ஷாருகஹன், விஜய், கமல், இவர்களை வைத்து “எந்திரன்” எடுக்க ஷங்கர் ஆரம்பத்தில் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிந்திருப்பார்.

    ரஜினியை தவிர யார் நடித்திருந்தாலும் ஷங்கர்,சன் டிவி அனைவருக்கும் தோல்வியே கிடைத்திருக்கும்.

    “ரஜினி” என்ற மந்திர சொல்லே எந்திரனின் இத்தகைய வெற்றிக்கு காரணம் இதை உலகம் இப்போது உணர்திருக்கும்.

  13. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி பொத்திகிட்டு இருப்பாங்கன்னு பாத்தா அங்கங்க ஒன்னுரெண்டு காமடி பீசுகள் அப்பப்ப வாந்தி எடுத்துகிட்டுதான் இருக்கிறாங்க. அவங்க வாந்திய அவங்க எடுக்கிறாங்க; இதால நமக்கோ எந்திரனுக்கோ ரஜினிக்கோ ஒன்னும் ஆக போறதில்ல 🙂 dot

  14. ஆர்.கே.சதீஷ்குமார், சிங்கக்குட்டி, சரவணன், பிரவின், babau, வித்யா, காத்தவராயன், Hari hara krishnan, sivaparkavi தினேஷ் மற்றும் ஜீவதர்ஷன் வருகைக்கு நன்றி

    @ஆர்.கே.சதீஷ்குமார் இடுகையா போட்டு நொறுக்கிட்டு இருக்கீங்க போல 🙂

    @சிங்கக்குட்டி ஹி ஹி ஹி அதுவும் ரைட்டு தான்.. ஒரே மாதிரி இருந்தால் போர் அடிக்குமே

    @அருண்

    //ரஜினின்னு இல்ல, சாதாரணமா நடிகர்ன்னு பார்த்தா நிச்சயம் அதில் உழைப்பு இருக்கு, அதில் ரஜினிய்யொட அர்பணிப்பை நிச்சயம் பாராட்டுறேன்!, முக்கியமா இந்த படத்தில் பெரிதா ஹீரோயிஷம் காட்டாம கதாபாத்திரமா நடித்திருப்பது பாராட்டதக்கதுன்னு கூட சொல்லலாம்//

    இங்க தான் நிற்கறீங்க நீங்க! 🙂 ரஜினியை பிடிக்கவில்லை என்றாலும் அவர் நன்றாக செய்து இருக்கும் போது பாராட்டுகிறீர்கள் பார்த்தீர்களா! I Like it 🙂 இது பல பேரிடம் இல்லை.

    //தெலுங்குல ஹிட்டு, குஜராத்தில ஹிட்டுன்னு சொன்னா அதுக்கு இன்னொரு அர்த்தம் ”நான் தான் டாப்பு, மத்ததெல்லாம் டூப்பு”, அப்படினா உங்களுக்கு ஸ்டொமக் பர்னிங் இருக்குன்னு தானே அர்த்தம்!//

    ஹா ஹா அருண் அது அப்படி அர்த்தமல்ல. ரஜினியின் ரசிகனாக பெருமை என்றாலும் அதை விட ஒரு தமிழன் படம் வட இந்தியாவை கலக்குகிறது என்பதில் தான் எனக்கு அதிக சந்தோசம். நம்மை கேவலமாக நினைப்பவர்கள் நம்மை புகழ வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார்களே! இவர்கள் ஒரு விருது கொடுப்பார்களே! இந்தி(ய) விருது என்று viவருடாவருடம் துபாய் சென்று…. முழுவதும் ஹிந்தி படமாக இருக்கும். தென் பகுதி படங்களை கொஞ்சம் கூட மதிக்கமாட்டார்கள். கடந்த முறை மம்மூட்டி கூட கடுப்பாகி திட்டி இருந்தாரே!

    இந்த மாதிரி உள்ளவர்களின் இடத்தில் நம் படம் அனைவராலும் புகழப்படுகிறது என்றால் நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. நம்ம படங்களை மதராசி படம் என்று நக்கலடித்து வந்தார்கள்… தற்போது அவர்களது ஊடகங்களே நம்மை தூக்கி வைத்து எழுதிக்கொண்டுள்ளன. இப்போது கூறுங்கள் நான் பெருமைப்படுவதில் என்ன தவறு! சோ நோ ஸ்டமக் பர்னிங் ஒன்லி என்ஜாயிங் 🙂

    ரஜினி படம் வெளிமாநிலங்களில் ஓடுவதை நினைத்து எனக்கு சந்தோசம் என்பது முதலில் தமிழனாக அப்புறம் தான் ரஜினி.

    //ஆரோக்கியமா விவாதம் பண்ணி ரொம்ப நாளாச்சு தல, நான் ரெடியா தான் இருக்கேன்!, நண்பர்கள் பக்க கருத்தையும் எதிர்பார்க்கிறேன்//

    ஹி ஹி அருண் இதெல்லாம் நடக்கிற காரியமா! ஹிந்து முஸ்லிம் பிரச்சனை எப்படி முடிவே கிடையாதோ அதே போல் இந்த பிரச்சனைகளும் என்று முடிவு கிடையாது. நீங்க சொன்ன மாதிரி ஆரோகியமா விவாதம் செய்தால் நன்றாக இருக்கும் ஆனால் அது நெம்ப கஷ்டம் தான் 🙂

    @காத்த‌வ‌ராய‌ன்

    //ஷ‌ங்க‌ர் ம‌ட்டும் யோக்கிய‌மா? //

    Good Question 🙂 ஆனால் இது பற்றி எந்திரன் விமர்சனத்திலேயே கூறி விட்டேன்.. ஒவ்வொருமுறையும் இதை கூறிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

    //நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ப‌டி “சி” சென்ட‌ரில்தான் முத‌ல் நாள் முத‌ல் ஷோ ப‌ட‌ம் பார்த்தேன். ந‌ன்றாக‌ ர‌சித்து பார்த்தார்க‌ள்//

    எனக்கு நம்பிக்கை இல்லை. முதல் ஒரு வாரம் கிடைக்கும் வரவேற்ப்பை இதைப்போல படத்திற்கு இறுதியாக வைத்துக்கொள்ள முடியாது. இன்னும் கொஞ்ச நாள் சென்றால் C சென்டரில் மற்ற வகுப்புகளை ஒப்பிடும் போது கூட்டம் குறைந்து விடும் என்றே நான் கருதுகிறேன் ஆனால் மற்ற வகுப்புகளில் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

    //லாஜிக் ப‌டி இந்த‌ க்ளைமாக்ஸ் ச‌ரியாக‌ இருக்க‌லாம் ஆனால் ச‌யின்ஸ் ஃபிக்ஸ‌னில் லாஜிக்கோ கோர்ட்டோ தேவையில்லையே//

    அப்படின்னு ஆங்கிலம் படம் என்றால் நம்ம ஆளுங்க ஏற்றுக்கொள்வார்கள்.. தமிழ் படம் என்றால் கொந்தளித்து விடுவார்கள்.. 😉

    //என்னுடைய‌ ஐடியா என்ன‌ வென்றால் க‌டைசியில் ” ரோபோ” ர‌ஜினியின் விருப்ப‌த்தை நிறைவேற்றி சிட்டிக்கு ஒரு ” ரோபோ” ஐஸ்வ‌ர்யாவை செய்து கொடுத்து முத‌லிர‌வுக்கு அனுப்பி ந‌ம்மையும் ஜாலியாக‌ தியேட்ட‌ரை விட்டு அனுப்பி இருக்க‌லாம்.//

    இதை செய்து இருந்தா அவ்வளவு தான்…. இதை வைத்தே படத்தை நாறடித்து விடுவாங்க 🙂 திட்டறதுக்கு நல்ல வசதியான விசயமாக இருக்கிறது.

    //க‌லாப‌வ‌ன்ம‌ணி. கொசுவுட‌ன் பேச்சுவார்த்தை, இதையெல்லாம் நீக்கிவிட்டால் இர‌ண்டாம் பாதி திரைக்க‌தையில் தொய்வு இருக்காது//

    உண்மை தான்.. கொசு விஷயம் குழந்தைகளை கவர வைத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    @Hari hara krishnan அது விஜய் இல்லைங்க அஜித் 🙂

    @தினேஷ் ஒரே குஷ்டமப்பா! 🙂

    @ஜீவதர்ஷன் 😀

  15. //ரஜினியை பிடிக்கவில்லை என்றாலும் அவர் நன்றாக செய்து இருக்கும் போது பாராட்டுகிறீர்கள் பார்த்தீர்களா! I Like it //

    என்னாங்க கிரி இது! எனக்கு ரஜினிக்கும் வாய்க்கா தகராறா என்ன? எனக்கு எப்போ ரஜினியை பிடிக்காதுன்னு சொன்னேன்! ரஜினி அவரோட வேலையை பார்க்கிரார், அதுக்கு ஏன் நான் ரசிகனாகனும் என்பது தான் என் மனநிலை! இது விளையாட்டு துறைக்கும் பொருந்தும்!

    //ஹிந்து முஸ்லிம் பிரச்சனை எப்படி முடிவே கிடையாதோ அதே போல் இந்த பிரச்சனைகளும் என்று முடிவு கிடையாது.//

    ரஜினி ரசிகர், கமல் ரசிகரிடம் பேசினால் விவாதம் முடிவடையாது, நான் தான் யாருக்கும் ரசிகர் இல்லையே, அதனால நிச்சயம் விவாதம் ஆரோக்கியமா இருக்கும்!

  16. @அருண்

    //என்னாங்க கிரி இது! எனக்கு ரஜினிக்கும் வாய்க்கா தகராறா என்ன? எனக்கு எப்போ ரஜினியை பிடிக்காதுன்னு சொன்னேன்! ரஜினி அவரோட வேலையை பார்க்கிரார், அதுக்கு ஏன் நான் ரசிகனாகனும் என்பது தான் என் மனநிலை! இது விளையாட்டு துறைக்கும் பொருந்தும்!//

    ஹா ஹா ஹா சரி தான்! நான் தான் மறந்து கூறி விட்டேன் இது பற்றி ஏற்கனவே கூறி இருக்கீங்க.

    //ரஜினி ரசிகர், கமல் ரசிகரிடம் பேசினால் விவாதம் முடிவடையாது, நான் தான் யாருக்கும் ரசிகர் இல்லையே, அதனால நிச்சயம் விவாதம் ஆரோக்கியமா இருக்கும்!//

    🙂 உங்களை நான் நம்புறேன்.

  17. நன்றி கிரி. உங்களோட விமர்சனம் படிச்சேன். நடுநிலையா எழுதி இருக்கீங்க.
    இதுலயும் நீங்க நல்லா எழுதி இருக்கீங்க.தலைவர் படம் பாக்ஸ் ஆபீஸ்ல இருந்த எல்லா ஹிந்தி படத்தையும் ஓரங்கைடியசு. இனி ஹிந்தி படம் மட்டும் இந்தியாவுல இல்லன்னு எல்லாருக்கும் புரிஞ்சி இருக்கும். இன்னும் எழுதணும். ஆனா தமிழ் அடிக்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மடன்.

  18. இது ஒரு சினிமாப்படம், ஒரு எண்டர்டெயினர், நாம அதை பார்த்து சாதிக்கபோறது ஒன்னுமில்ல, வேலைப்பளுவின் இடையில் சிறு மாற்றம் விரும்பி போறோம், ஆனா தெலுங்குல ஹிட்டு, குஜராத்தில ஹிட்டுன்னு சொன்னா அதுக்கு இன்னொரு அர்த்தம் ”நான் தான் டாப்பு, மத்ததெல்லாம் டூப்பு”, அப்படினா உங்களுக்கு ஸ்டொமக் பர்னிங் இருக்குன்னு தானே அர்த்தம்!
    வால் பையன் சார்,
    பிளாக் படித்தும் கமெண்ட் போட்டும் என்ன சாதனை செஞ்சீங்க அதே சாதனை நாங்க படம் பார்த்து செஞ்சோம்
    படம் நல்ல போகுது அதை சொன்ன உங்களுக்கு என் சார் வைத்தெரிச்சல்
    ரஜினியிடம் உள்ள தன அடக்கம் திரை உலகை விடுங்க வேற எங்கேயும் கூட பார்க்க முடியாது. அந்த மாதிரி மனிதர்களை பார்ப்பது அரிது. சிவாஜி வெற்றி விழா ஆகட்டும் மற்றும் எந்த மேடையிலும் ரஜினி மாதிரி தன்னடக்கத்துடன் இருக்கும் நபரை பார்க்க முடியாது. முற்பது வருடங்களாக முதல் இடத்தில இருந்தும் அளவிட முடியாத பணம் பெயர் புகழ் பவர் இருந்தும் இப்படி இருக்கிறார்.

  19. சிங்கையில்கூட ஜெலுசில் கிடைக்கவில்லை..இதுதான் காரணமா?

    நான் அஞ்சுவாட்டி பாத்தாச்சு…வரும் சனி, ஞாயிறும் பார்க்க உள்ளேன்.

  20. //பிளாக் படித்தும் கமெண்ட் போட்டும் என்ன சாதனை செஞ்சீங்க அதே சாதனை நாங்க படம் பார்த்து செஞ்சோம்//

    இதுவும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் தான் தல!, இதுல நான் சாதிச்சேன்னு சொல்லவேயில்ல, மேலும் இதுல பாலாபிஷேகம், பீராபிஷேகம் பண்ன வாய்ப்பேயில்ல, இருந்தா அதையும் நீங்க பண்ணுவிங்க, நான் மாட்டேன்!

    //சிவாஜி வெற்றி விழா ஆகட்டும் மற்றும் எந்த மேடையிலும் ரஜினி மாதிரி தன்னடக்கத்துடன் இருக்கும் நபரை பார்க்க முடியாது.//

    அடக்கத்துடன் இருக்க வேண்டியது ஒரு மனிதனின் கடமை, அவன் தான் மனிதன், ஒரு மனிதனாக ரஜினியை நான் ஒன்றுமே சொன்னதில்லையே!, நடிகனாக பார்த்தால் எல்லா நடிகரையும் போல் ரஜினியும் ஒரு நடிகன், அதற்கு இருக்கும் ஆர்ப்பாட்டம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியலையா நண்பா!

  21. கிரி,

    நீங்கள் சொல்வது ரொம்ப சரி, முதன் முறையாக உங்களது பிளாக் படிக்க வாய்பு கிடைத்தது. ரொம்ப சந்தோசம்.

  22. அண்ணே ….. இப்போ தான் டவுன் லோடிங் … பாத்திட்டு சொல்றேன் ….. நான் கூட வால்பையன் போல தான் எனக்கு குறிப்பிட்ட யாரையும் பிடிக்காது !!!!

  23. “அடக்கத்துடன் இருக்க வேண்டியது ஒரு மனிதனின் கடமை, அவன் தான் மனிதன், ஒரு மனிதனாக ரஜினியை நான் ஒன்றுமே சொன்னதில்லையே!, நடிகனாக பார்த்தால் எல்லா நடிகரையும் போல் ரஜினியும் ஒரு நடிகன், அதற்கு இருக்கும் ஆர்ப்பாட்டம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியலையா நண்பா!”

    நிஜமாகவே சொல்லுங்கள் சாதாரண மனிதரை இருக்கும் நமக்கு கொஞ்சம் பணம் புகழ் பவர் புப்ளிசிட்டி கிடைத்தால் கிட்ட திட்ட 99 % பேர் நிலை தடுமாறு வார்கள். அகங்காரம் ஆணவம் தலை விரித்து ஆடும் இது எல்லாம் இருந்தும்” எல்லாம் இறைவன் செயல்” என்று கூறும் ஈகோ இல்லாத ஒரே மனிதர் எங்கள் சூப்பர் ஸ்டார். நாங்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு எல்லை அற்றது. அவரை போல் நல்ல மனிதர்களை காண்பது அரிது. சும்மா எல்லோரும் இங்கு நல்லவர்கள் என்று டூப் உடாதீங்க சார். நண்பரே இந்த ஆர்பாட்டம் தான் உங்களை நெருட செய்கிறதோ. இது கடவுளின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்காது. பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய செய்திருக்க வேண்டும். எது அதிகம் எது கம்மி என்று எதை வைத்து முடிவு செய்வீர்கள்?

    “இதுவும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் தான் தல!, இதுல நான் சாதிச்சேன்னு சொல்லவேயில்ல, மேலும் இதுல பாலாபிஷேகம், பீராபிஷேகம் பண்ன வாய்ப்பேயில்ல, இருந்தா அதையும் நீங்க பண்ணுவிங்க, நான் மாட்டேன்!”

    இதே போல் நான் இந்த அபிஷேகம் செய்வதாக எங்கே சொன்னேன். கற்பனை குதிரையை கட்டி போடுங்க சார்.
    எங்களுக்கு ரஜினி மேல் இருக்கும் அபிமானம் பற்றி யாருக்கும் எந்த கவலையும் வேண்டாம் வைத்தேரிச்சலும் வேண்டாம்.
    ரஜினி ரசிகனாய் இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

  24. hmm…. நல்ல சொன்னீங்க கிரி … பிடிச்ச பாருங்க… இல்லேன்னா விடுங்க…

  25. //இது கடவுளின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்காது. பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய செய்திருக்க வேண்டும்.//

    இங்க தான் பிரச்சனையே!
    நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூடவே தனிமனித துதியும் செய்யாதவன்!

    ரஜினி தலைகனம் இல்லாதவர் என்பது அவரது விருப்பம்! ரஜினியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் மற்றவர்களுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு நன்கு தெரியும்!, புகழ்வெறியை வெளி காட்டி கொள்வதில்லையே தவிர மற்ற விசயங்களில் எல்லாரையும் போல ரஜினியும் சராசரி தான் என்பதும் தெரியும்!

    திரையில்/மேடையில் தெரியும் ரஜினி மட்டுமே உங்களுக்கு தெரியும்!

  26. “இங்க தான் பிரச்சனையே!
    நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூடவே தனிமனித துதியும் செய்யாதவன்!”
    அது உங்க இஷ்டம் நான் என்ன சொல்றது

    “ரஜினி தலைகனம் இல்லாதவர் என்பது அவரது விருப்பம்! ரஜினியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் மற்றவர்களுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு நன்கு தெரியும்!, புகழ்வெறியை வெளி காட்டி கொள்வதில்லையே தவிர மற்ற விசயங்களில் எல்லாரையும் போல ரஜினியும் சராசரி தான் என்பதும் தெரியும்!”
    நிறைய மனிதர்களை நேரில் பார்கிறோம் பேசுகிறோம் இதை வைத்து யாரையும் எடை போட முடியாது

    “திரையில்/மேடையில் தெரியும் ரஜினி மட்டுமே உங்களுக்கு தெரியும்!”
    கரெக்ட் சார் எனக்கு இது தான் தான் தெரியும். நீங்கள் ரஜினியுடன் நெருங்கி பழகி இருப்பேங்க போல. அப்பிடீன்னு ரஜினி உங்கள் நண்பர் இல்லை என்றால் நன்கு தெரிந்தவராக இருப்பவர் இல்லையா?. இப்படி நன்கு தெரிந்தவர் அல்லது நண்பரை பற்றி பொது இடத்தில கூறுவது நியயமா அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில்.
    To speak ill of others is a dishonest way of praising ourselves
    Croff M Pentz

  27. //நன்கு தெரிந்தவர் அல்லது நண்பரை பற்றி பொது இடத்தில கூறுவது நியயமா அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில்.//

    எல்லாரையும் போல சராசரின்னு தானே சொன்னேன்! எங்கேயாவது தப்பா சொல்லியிருக்கேனா என்ன!?

  28. ///ரஜினியை நேரில் பார்த்தவன் என்ற முறையில்///

    வாங்க‌ அருண் சார் வாங்க‌……….

    ஒரு சாதார‌ண‌ ந‌டிக‌னை அப்ப‌டி நேரில் போய் ச‌ந்திக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் தான் என்ன‌? ஊரு உல‌க‌த்துல‌ வேற‌ சாதார‌ண‌ ந‌டிக‌னா இல்லை நேரில் ச‌ந்திக்க‌? இல்ல‌ அந்த‌ சாதார‌ண‌ ந‌டிக‌ன் உங்க‌ளை ச‌ந்திக்க‌ வ‌ந்தாரா?

    இந்த‌ கேள்விக்கு ப‌தில் சொல்லுங்க‌ அப்புற‌ம் ஆர‌ம்பிக்க‌லாம் ஆரோக்கிய‌மான‌ விவாத‌த்தை (டாட்).

    அதுவ‌ரைக்கும் கொஞ்ச‌ம் உங்க‌ ஊரு மேட்ட‌ர‌ ப‌த்தி பேசுவோம். ஈரோடு அபிராமி தியேட்ட‌ரில் எந்திர‌ன் ரிலீஸ் ஆக‌ல‌ போல‌…….(ஈரோடே ம‌ண்ட‌ காஞ்சி போயி கிட‌க்கு போல‌) ராஜாதி ராஜாக்கு பிற‌கு ர‌ஜினி ப‌ட‌ம் அபிராமி தியேட்ட‌ர் கைய‌விட்டு போயிருக்கு. என‌க்கு தெரிந்து க‌ட‌ந்த‌ 25 வ‌ருட‌ங்க‌ளில் முத‌ல்முறையாக‌ ஈரோடு ராய‌ல் தியேட்ட‌ரில் ர‌ஜினி ப‌டம். ச‌ன் பிக்ஸ‌ர்ஸ் பிஸின‌ஸ் ப‌ண்ணுறேன்னு ஏக‌ப்ப‌ட்ட‌ குழ‌ப்ப‌ம் செஞ்சி வ‌ச்சிருக்கானுக‌ எல்லா ஊருல‌யும்.

  29. //ஒரு சாதார‌ண‌ ந‌டிக‌னை அப்ப‌டி நேரில் போய் ச‌ந்திக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் தான் என்ன‌? ஊரு உல‌க‌த்துல‌ வேற‌ சாதார‌ண‌ ந‌டிக‌னா இல்லை நேரில் ச‌ந்திக்க‌? இல்ல‌ அந்த‌ சாதார‌ண‌ ந‌டிக‌ன் உங்க‌ளை ச‌ந்திக்க‌ வ‌ந்தாரா?//

    நான் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்தேன், ரஜினி அங்கே ரெகுலர் விசிட்டர், அங்கே என்னை ரஜினிக்கு நல்லா தெரியும், அதே போல் பலருக்கு!

    அபிராபி தியேட்டரில் ரிலீஸ் ஆகாததுக்கு காரணம் சன் பிக்சர்ஸ் பிராபளம்னு பேசிகிட்டாங்க!, முழு விபரம் தெரியல

  30. அருண் சார் நீங்க‌ சொன்ன‌து மிக‌வும் ச‌ரியே……..

    ர‌ஜினி ச‌ராச‌ரி ம‌னித‌ராக‌ இருக்க‌ ஆசைப்ப‌டுகிறார் என்று நாங்க‌ள் (நான்) நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவ‌ர் ச‌ராச‌ரி ம‌னித‌ர் தான், அவ்வாறு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெளிவுப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றி.

    இவ்வ‌ள‌வு உய‌ர‌த்தில் இருந்து கொண்டு இவ்வ‌ள‌வு ச‌ராச‌ரியாக‌ இருப்ப‌து அவ்வ‌ள‌வு சாதார‌ண‌மா? (டாட்).

  31. //இவ்வ‌ள‌வு உய‌ர‌த்தில் இருந்து கொண்டு இவ்வ‌ள‌வு ச‌ராச‌ரியாக‌ இருப்ப‌து அவ்வ‌ள‌வு சாதார‌ண‌மா? //

    நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்!
    திரை/மேடை தவிர ரஜினி சராசரின்னா எல்லா விசயத்திலும்னு அர்த்தம்!
    நான் சொல்வது புனித பிம்பத்திற்கு அப்பாற்பட்டது நண்பரே!, நீங்க ரஜினியை கடவுள் மாதிரியே பாக்குறதால நான் சொல்ல வர்றதே உங்களுக்கு புரியல!

  32. பாலாபிஷேக‌ம் செய்து, அறிமுக‌ காட்சியில் ம‌ல‌ர்தூவி, ர‌ஜினியை க‌ட‌வுளாக‌ வ‌ழிப‌டும் ஒரு ர‌சிக‌னை அதே தின‌ம் ச‌த்ய‌ம் தியேட்ட‌ரிலோ, பி.வி.ஆரிலோ, அவ்வ‌ள‌வு ஏன் ஒரு மாத‌ம் க‌ழித்து அவ‌ன் பாலாபிஷேக‌ம் செய்த‌ அதே தியேட்ட‌ரில் போய் விட்டுவிட்டு அவ‌ன‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளை க‌வ‌னியுங்க‌ள்…. உன்மை புல‌ரும். இது சூழ்நிலை ம‌ற்றும் ம‌ன‌நிலை சார்ந்த‌து.

    இன்னும் நுணுக்க‌மாக‌ சொல்ல‌ப்போனால் திருவிழா இசைக்கும், ம‌ன‌தை வ‌ருடும் பாட‌லின் இசைக்கும், கால்க‌ள் “சில‌நேர‌ம்” தானாக‌ தாள‌மிடுவ‌து போல‌த்தான் இதுவும். “அதே நேர‌ம்” இர‌ண்டுக்கும் உங்க‌ள் கால்க‌ள் ஒரே மாதிரியும் த‌ள‌மிடுவ‌தில்லை.

    சாதார‌ண‌ ந‌டிக‌னுக்கும் ர‌ஜினிக்கும் உள்ள‌ வேறுபாடு இதில்தான் உள்ள‌து, அத‌ன் வெளிப்பாடு தான் புனித‌ பிம்ப‌ம் போன்று உங்க‌ளுக்கு தோற்ற‌ம‌ளிக்கிற‌து. அது ர‌சிக‌னுக்கு உன்மையிலேயே சூழ்நிலை ம‌ற்றும் ம‌ன‌நிலை சார்ந்த‌ ஏதோ ஒன்று (உங்க‌ள் பாஷையில் புனித‌ பிம்ப‌ம்) அத‌ற்கு அவ‌ன் விளக்க‌ம் தேடிக்கொண்டிருப்ப‌தில்லை.

    ர‌சிக‌ர்க‌ள் ர‌ஜினியை உன்மையிலேயே க‌ட‌வுளாக‌ துதித்திருந்தால் அவ‌ரை என்றோ பூஜை அறைக்கு கொண்டு சென்றிருப்பார்க‌ள் (டாட்).

  33. கிரி சார் பட்டய கிளப்பிட்டீங்க…நம்ம கவுண்டர் சொல்லுறது போல “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை”

  34. வால் சார்,நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ரஜினி தான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு..நீங்க நம்பினா நம்புங்க இங்க நான் நாலு இந்திகாரர்களோட உட்கார்ந்திருக்கும்போது ஒரு வடஇந்திய(சஹாரா) டிவி சேனலில் ரஜினியின் மாஸ் பற்றியும் எந்திரனின் ஓபனிங் வசூல் திரி இடியட்ஸ் மற்றும் மை நேம் இஸ் கான் படங்களின் ஒபனிங்கை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் சொன்னார்கள்..ஒரு தமிழனாய் பெருமை பட்டேன்…

  35. டெக் ஷங்கர், மதன், பிரதீப், ராவணன், செல்வம், ராஜ், தமிழ் மற்றும் நிர்மல் வருகைக்கு நன்றி

    @மதன் நீங்கள் உங்க பெயரைத்தவிர மற்றது எல்லாம் 99% பிழையில்லாமல் எழுதி இருக்கீங்க 🙂

    @பிரதீப் கோதாவுல இறங்கிட்டீங்க போல 🙂

    @ராவணன் அதுக்குள்ளயா! 😮

    @ராஜ் கவுண்டர் காமெடி போட்டால் தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்க.. 🙂 சரி! படம் பார்த்துட்டு படம் எப்படி இருக்குனு “உண்மைய” சொல்லுங்க

    @தமிழ் அதே! 🙂

    @நிர்மல் அது கவுண்டரா சொன்னாரு 🙂

    @அருண்

    காத்தவராயன் கூறிய

    //பாலாபிஷேக‌ம் செய்து, அறிமுக‌ காட்சியில் ம‌ல‌ர்தூவி, ர‌ஜினியை க‌ட‌வுளாக‌ வ‌ழிப‌டும் ஒரு ர‌சிக‌னை அதே தின‌ம் ச‌த்ய‌ம் தியேட்ட‌ரிலோ, பி.வி.ஆரிலோ, அவ்வ‌ள‌வு ஏன் ஒரு மாத‌ம் க‌ழித்து அவ‌ன் பாலாபிஷேக‌ம் செய்த‌ அதே தியேட்ட‌ரில் போய் விட்டுவிட்டு அவ‌ன‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளை க‌வ‌னியுங்க‌ள்…. உன்மை புல‌ரும். இது சூழ்நிலை ம‌ற்றும் ம‌ன‌நிலை சார்ந்தது‌//

    இந்த விஷயம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதெல்லாம் முதல் இரண்டு அல்லது நான்கு நாட்கள் தான். அதன் பிறகு அவனவன் அவன் வேலைய பார்க்கப் போய்டுவான். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அதோடு முடித்து விடுகிறார்கள்.. இதெல்லாம் செய்ய மாட்டோம் நாங்க ரொம்ப டீசென்ட் என்று சொல்லும் என்னைபோன்றவர்கள் இணையத்தில் எழுதி சண்டை போட்டுக்கொண்டுள்ளோம். என்ன நான் கொஞ்சம் சண்டை வராத மாதிரி எழுதுறேன் அவ்வளோ தான் 🙂

    இதுல ஒரு விஷயம் கூற விரும்புகிறேன்

    முதலில் ஒரு விஷயம் சரி தவறு என்பது அவரவர் எண்ணங்கள் சார்ந்த விஷயம். இப்ப உங்களுக்கு கடவுள் பிடிக்காது! ஏன் பிடிக்காது? அது சரி இல்லை.. என்று நான் கூற முடியுமா! அது நியாயமா! ஒருத்தர் தூக்குத்தண்டனையை எதிர்க்கிறார் நான் ஆதரிக்கிறேன். இது மாதிரி பல கூறலாம்.

    இந்த பால் ஊத்துற விஷயம் என்னைப்பொறுத்தவரை மிக மிக தவறான செயல் எனக்கு சுத்தமா பிடிக்காது. இப்ப இதே பார்த்தீர்கள் என்றால் நான் முதல் நாளில் திரையரங்கில் விசில் அடிப்பேன் சத்தம் போடுவேன் இந்த அளவில் என் கொண்டாட்டம் இருக்கும் ஆனால் இதே விஷயம் இன்னொருவருக்கு மிக கேவலமான ஒரு விசயமாகத் தோன்றும். என்னடா! இவங்க திரையரங்கில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று.

    இப்ப என்னோட பார்வையில் பால் ஊத்துவது தவறு..ஆனால் விசில் அடிப்பதும் கத்துவதும் தவறு இல்லை.. இன்னொருவர் பார்வையில் பால் ஊத்துவது விசில் அடிப்பது கத்துவது எல்லாமே தவறு 🙂 அமைதியா பார்க்கணும் படம் முடிந்து அமைதியா செல்லனும்.

    இதிலே பார்த்தீர்களா! எவ்வளவு எண்ணங்கள் என்று.. ஒருவருக்கு சரி என்று படுவது இன்னொருவருக்கு தவறு என்று படுகிறது. நான் இதிலே ஒவ்வொரு வகையையும் கூறி இருக்கிறேன்.

    நாம் எது சரி தவறு என்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம்! நாம் நம் விருப்பங்களை கூறலாமே தவிர (பிடிக்கும் பிடிக்காது என்று) நீ செய்வது சரி தவறு என்று ஃபோர்ஸ் செய்ய முடியாது. ஏன் என்றால் அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்.

    இதற்காக நீங்கள் தீவிரவாதிகள் கூட அவர்கள் செயல் நியாயம் என்று பேசுவார்கள் என்கிற ரீதியில் கூறி விடாதீர்கள்.. இது வேறு அது வேறு 🙂

  36. கலக்கல் கிரி!

    உங்களுக்கு இன்னொரு ஜோக்….

    ரஜினிய பிடிக்காதவங்க கோஷ்டி, எந்திரன் ரிலீஸுக்கு முன்னாடி ஆஞ்சநேயர்கிட்ட வேண்டிக்கிட்டாங்களாம்… “ஆஞ்சநேயா! எந்திரன் மட்டும் நல்லா ஓடாம ஊத்திகிச்சுனா உனக்கு வடை மாலை சாத்துரேன்”.

    ஆஞ்சநேயர்: ஐயோ! வட போச்சே!!!!!

  37. “நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்!
    திரை/மேடை தவிர ரஜினி சராசரின்னா எல்லா விசயத்திலும்னு அர்த்தம்!”

    சராசரி அப்படினா வாயால சாப்பிடறது காலால நடக்கிறது கண்ணால பார்கிறது இதுவா?. எண்ணத்திலும் செயலிலும் ரஜினி உயர்ந்து இருக்கிறார். ஈகோ இல்லை யாரையும் வெறுப்பதில்லை எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறார் தன்னை நிந்திப்பவர்கள் உட்பட , இமாலய வெற்றியை கூட தன்னால் எதுவும் நடப்பதில்லை எலாம் இறைவன் செயல் என்று நினைப்பவர் எங்கள் ரஜினி. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்

    “நான் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்தேன், ரஜினி அங்கே ரெகுலர் விசிட்டர், அங்கே என்னை ரஜினிக்கு நல்லா தெரியும், அதே போல் பலருக்கு!”
    ரஜினிக்கு உங்களை தெரிந்து இருக்கிறது என்பது உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம். இந்த பழக்கத்தை வாய்த்த ரஜினி பற்றி எல்லாம் தெரியும் என்று சொன்னீங்க?.
    நான் குடுத்த வீடியோ லின்க்ல திரு சோ அவர்கள் ரஜினி பற்றி பேசியது பாருங்க . சோவை விட உங்களுக்கு ரஜினி பற்றி அதிகம் தெரியும் என்று நான் நம்பா தயாராக இல்லை

    @பிரதீப் கோதாவுல இறங்கிட்டீங்க போல 🙂
    நிச்சயமா பின்ன விடு விடுவோமா

  38. @விஜய் செம காமடி! நல்லா இருக்கு 🙂

    @பிரதீப்
    “ரஜினிக்கு உங்களை தெரிந்து இருக்கிறது என்பது உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம்”

    பிரதீப் இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை தான். ரஜினி ரசிகர்களுக்கு வேண்டும் என்றால் (அது கூட அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது) இது ஏற்புடையதாக இருக்கலாம் அருண் போன்றவர்களுக்கு ஒப்பானது அல்ல. அவருக்கு இது ஒரு பெரிய விசயமே இல்லை. நமக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு விஷயம் மற்றவருக்கும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

  39. //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்//

    அது தான் ரஜினி தலைக்கு பின்னாடி ஒளிவட்டத்தை காட்டுதுன்னா அந்த எழவு நம்பிக்கை எனக்கு தேவையில்லை!

    சோ மட்டுமல்ல, பொதுவில் யாரை பேச சொன்னாலும் அப்படி தான் பேசுவாங்க, வரிசையா கருணாநிதியை புகழ்ந்து பாராட்டு விழா நடத்துராங்களே,அது மாதிரி தான் சோவின் பேச்சும், மேலும் சோ ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்பதை கருத்தில் கொள்க!

  40. எந்திரன் படமும் சூப்பர் .
    விமர்சனமும் சூப்பர் .

  41. “அது தான் ரஜினி தலைக்கு பின்னாடி ஒளிவட்டத்தை காட்டுதுன்னா அந்த எழவு நம்பிக்கை எனக்கு தேவையில்லை!”
    நஷ்டம் கடவுளிக்கில்லை

    “சோ ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்பதை கருத்தில் கொள்க!”
    இதை நான் நம்ப வில்லை.

    “பிரதீப் இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை தான். ரஜினி ரசிகர்களுக்கு வேண்டும் என்றால் (அது கூட அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது) இது ஏற்புடையதாக இருக்கலாம் அருண் போன்றவர்களுக்கு ஒப்பானது அல்ல. அவருக்கு இது ஒரு பெரிய விசயமே இல்லை. நமக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு விஷயம் மற்றவருக்கும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.”
    நீங்க சொல்வது மிக சரி ஆனால் கொம்பு இருக்கா என்று கேட்டால் இப்படி தான் சார் பதில் varum

  42. வணக்கம் தோழரே. நான் இன்னும் படம் பாக்கல. நீங்க சொன்னதிலிருந்தே படத்தை உடனே பாக்கனுன்னு தோனுது. படத்தை பாத்துட்டு கருத்தை சொல்றேன்.

    உங்க பதிவு ரொம்பவே அழகா இருந்துது. வாழ்த்துக்கள்.

  43. எந்திரன் second half நம்ப ராமநாராயணன் டைரக்ட் பண்ணினாரமே

    அப்படியா சொல்லவே இல்ல !!!!!!!!!

    hahhaha

  44. அட ஏங்க நீங்க வேற நாங்களே படம் பாத்து செம வெறுப்புல இருக்கோம்

    வால்பையன் சொல்றத கண்டிப்பா ஆதிரிகிறோம்

  45. ஜி
    சன் ஏதோ சதி திட்டம் போட்ற மாறியே இருக்கு .எந்திரனின் வெற்றி அவுங்களோட பேராசைய நிச்சயம் கெளப்பி விடும் , அடுத்து அடுத்து படங்கள் தலைவரை சன் அல்லது cloud nine அல்லது redgiant நிறுவனங்கள் தான் எடுக்க முயற்சி செய்யும் .அப்படி இல்லேன்னா சன் எதிர்மறையாக செயல்படும் என்று எனக்கு ஒரு பயம் இருக்கு .
    படம் வசூல் மழை பொழிந்தாலும் – அருண் சார் சொல்லுற மாறி நகரங்கள் தவிர்த்து இருக்குற சிறு தியேட்டர் லாம் எப்படி காசை எடுக்க போகிறார்கள் என்று பாக்கணும் .டிக்கெட் விலை குறைந்த உடன் அடுத்த வாரங்களில் மீண்டும் ஒரு கூடம் வர ஆரம்பிக்கும்

  46. @ வால்பையன்
    ——————————-
    உங்களுக்கு என்ன problem ? you might have worked in a five star hotel. In that hotel you might have watched rajini drinking alcohol, smoking cigarattes or some other things. If you have read books about famous personalities, there are lot of negative things mentioned about mahatma gandhi, subash chandra bose, vivekananda, jawaharlal nehru and ambedkar. But, people are talking only about the good things done by them.

    If there is a white paper with black dot, one category of the people used to give importance to the black dot in the white paper and other category of the people used to give importance to the white region sorrounding the black dot. You comes under the first category of people.

    rajesh.v

  47. கிரி ,
    படம் பார்த்துட்டேன் …,உங்க விமர்சனத்தை மறுபடியும் ஒரு தடவை படித்தேன் …,உங்கள் விமர்சனத்தில் என்னக்கு சில வரிகளில் முரண்பாடு உண்டு …,”இரும்பிலே ஒரு இருதயம் ” மிக சிறப்பாக கதையோடு ஒன்றி தான் எடுக்க பட்டிருக்கு ..,போலவே எனக்கு ஒரே வருத்தம் ..,இந்த படத்தில் கடைசியாக வரும் ” நான் சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன் …,என்று ரோபோ சொல்லும் போது வரும் தீம் THE TERMINAL படத்தில் ஜான் வில்லியம்ஸ் போட்ருப்பார் …,

  48. @ ராஜேஸ்

    தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிரதெல்லாம் கேரக்டர் கிடையாது, அது ஹேபிட்ஸ்.
    நீங்க சொல்லும் பிதத்தில் நான் யாரையும் அனுகுவதில்லை

    //mahatma gandhi, subash chandra bose, vivekananda, jawaharlal nehru and ambedkar.//

    இவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவதையும் நான் மறுக்கிறேன், யாரையாவது தலைவனாக வைத்து தான் மனிதனால் வாழமுடியுமா? சுயமா அறிவு நமக்கு இல்லையா?

    🙂

    இந்த சிரிப்பு உங்கள் தத்துவத்துக்கு!

  49. அண்ணே !!! படம் பாத்தேன் ….. … எனக்கு சில கேள்விகள் …

    1 . எல்லோரையும் அடிச்சு துவம்சம் பண்ணும் ரோபாவை சும்மா கோடாலியால வெட்ட முடியுமா?

    2 அப்படி வெட்டி போட்ட நிக்கலை எடுத்து மறுபடியும் ஒட்டி பழையபடி ஆக்க முடியுமா?

    3 . அப்படி செஞ்சாலும் அதனுடைய மெமரி அப்படியே இருக்குமா?

    4 . இப்படி எல்லாம் லாஜிக் பாக்கலேன்னாலும் ஹீம் எனக்கு ஒரு பழைய விட்டாலாச்சார்யா படம் பாத்தமாதிரி அனுபவம்..

    ஆனா பாருங்க இந்த படத்தோட வசூல் சாதனை பாத்தா ரஜினி தவிர வேற யார் , சாருக்கான் உட்பட நடிச்சிருந்தாலும் நெருங்கி கூட இருக்க முடியாது !!!! அங்கே தான் உங்க தலைவர் நிற்கிறார் !!!

  50. அண்ணே எனக்கு இன்னொரு சந்தேகம் கூட ….. நம்ம ரஹ்மான் ஒரு பேட்டியில இந்த படம் இசையமைக்க 22 மணி நேரம் வேலை செஞ்சி ,2 மணி நேரம் தான் தூங்க முடுஞ்சிதுன்னு சொல்லி இருந்தார் ஆனா கேட்டா அப்படி தெரியல… மாத்தி செஞ்ச மாதிரி இருக்கு 🙂

  51. வினோத், அருணாசலம், குண லக்ஷ்மி, ராஜா, சுனில், சங்கர் மற்றும் ராஜ் வருகைக்கு நன்றி

    @ராஜா சந்தோசமா! 🙂 இப்ப திருப்தியா

    @சுனில் சரியா சொன்னீங்க! சன் ருசி கண்ட பூனை மாதிரி ஆகி இருப்பாங்க. இனி ரஜினியை தங்களது அடுத்த படத்தில் நடிக்க வைக்க கண்டிப்பா முயற்சி பண்ணுவாங்க.. ரஜினி மறுபடியும் சன் தயாரிப்பில் நடிக்கபோவதை நான் விரும்பவில்லை பலரின் நிலையும் இதே போல் தான் இருக்கும். படம் தொடர முடியாம கஷ்டப்பட்ட போது உதவி செய்தாங்க அதற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வசூல் கொடுத்தாச்சு. இரண்டிற்கும் சரியா போச்சு! இனி ரஜினி கண்டிப்பாக இவங்க படத்துல நடிக்க கூடாது. இருப்பினும் இனி என்ன நடக்கும் என்று யாம் அறியோம் பராபரமே! 🙂

    @சங்கர் நான் எழுதியதை மறுபடியும் ஒரு முறை படிங்க.. நான் கதையோடு ஒன்றி வரவில்லை என்று கூறவில்லை. எடுக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்று தான் கூறி இருக்கிறேன். அதில் ஐஸ் நடனம் மட்டுமே சிறப்பு.

    அப்புறம் நீங்க ஹாலிவுட் படமெல்லாம் நீங்க நிறைய பார்ப்பீங்கன்னு ஒத்துக்குறேன் 😉

    @ராஜ் படத்தை பார்த்தால் அனுபவிக்கனும் ஆராயப்படாது 😀 நாங்க இப்ப சொன்னமா படத்துல எந்த லாஜிக் பிரச்சனையும் இல்லைன்னு. நீங்க சொன்னது கொஞ்சம் தான்….அப்புறம் ராஜ் உலகத்திலே எல்லோரையும் திருப்தி படுத்துற மாதிரி யாராலையும் படம் எடுக்க முடியாது. ஏதோ! இந்தியாவில் மற்ற விடங்களை விட இது பெரும்பான்மையான மக்களுக்கு பிடித்து இருக்கிறது என்ற விசயமே ரொம்ப பெரிய விஷயம் தான். ஒருத்தருக்கு ராமநாராயணன் படம் மாதிரி இருக்குன்னா உங்களுக்கு விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்கு எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் அவ்வளவே.

    ரகுமான் பற்றி கூறி இருந்தீங்க.. ரகுமான் இடத்துல வேற ஹாலிவுட் இசை அமைப்பாளர் பெயர் இருந்தால் இதைப்போல சந்தேகங்கள் வந்து இருக்காதோ என்னவோ! 😉 Opinions differs

  52. @ வால் பையன்

    இவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவதையும் நான் மறுக்கிறேன், யாரையாவது தலைவனாக வைத்து தான் மனிதனால் வாழமுடியுமா? சுயமா அறிவு நமக்கு இல்லையா?

    ===============================================================
    i like rajini . i am his fan and I like some of his qualities. further, i know what are his negative points.
    god has given 2 kilograms of brain to everyone. They should know what is good and what is bad.

    for your information, I am an atheist and i dont believe in god. But, i never told others that i am atheist and i dont believe in god. I keep that matter to myself. Further, i dont tease the persons who believe in gods (like sathyaraj and some other personalities). If someone offered me vibuthi or kumkum , i will apply it on my forehead and i dont argue with that people that there is no god and applying vibuthi or kumkum on head is a stupid thing.

    But, you are propagating your opinion to others that too in other blog. Even the matter posted here is not about rajini’s character. You want others to think you are intelligent /different person or you want others to know that rajini has negative sides. you told ‘சுயமா அறிவு நமக்கு இல்லையா?’. Then why you are giving comments like this . You leave the matter to the people to decide what is good and what is bad in each and everything in this world and also in every person.

    @ val paiyan
    you told தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிரதெல்லாம் கேரக்டர் கிடையாது, அது ஹேபிட்ஸ்.
    நீங்க சொல்லும் பிதத்தில் நான் யாரையும் அனுகுவதில்லை

    Who told you smoking is a habit? in this world the smokers are letting out smokes which is equal to the smokes coming out from the vehicles. Our duty is not only to give good education to our children. We should also give clean earth, clean air and pure water to our future generation. Smokers are polluting the air which is an asset kept for the future generations . polluting air should not be considered as a habit.

    rajesh.v

  53. // Smokers are polluting the air which is an asset kept for the future generations .//

    ஆக்ஜிசனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது கூடத்தான் தப்பு! எல்லாரும் செத்து போயிருவோமா!

    நீங்க கடவுள் மறுப்பாளர் என்பதை சொல்ல விருப்புவதில்லை என்றால் இங்கே கூட சொல்லியிருக்கக்கூடாது, உங்களுக்கு ஏற்பட்ட அதே சூழ்நிலை தான் எனக்கும் நண்பரே!

  54. @ வால் பையன்,

    thanks for your reply and calling me நண்பரே!

    do you have any blog? if you have blog, please give me the link. நாம பழகலாம்………

    in my reply, i had done a mistake. Could you find it?

    rajesh.v

  55. அண்ணே !!!
    நான் ஏன் விட்டலாச்சார்யா படம் மாதிரி இருக்குன்னு சொன்னேன்னா … கிளைமேக்ஸ்ல வில்லன் ரஜினி சும்மா கைய தூக்கினா போலிஸ் பறந்து போறதெல்லாம் தான் ..அத விட முக்கியம் ரஜினி கிட்ட இருக்கிற டெக்னாலஜி மத்தவங்க கிட்ட அதாவது பொதுவா இல்லே !!! ஏன்னா உங்களுக்கே தெரியும் இந்த அளவு ரோபோ தயாரிக்க முடியும்னா அதே அளவு மத்த இடத்திலும் முன்னேற்றம் இருக்கும் ஆனா இங்கே அது மிஸ்ஸிங் !!! அப்புறம் ரஹ்மான் பத்தி ஏன் சொன்னேனா , வழக்கமா ரஜினி பட பாட்டெல்லாம் எல்லா லெவலையும் ரீச் பண்ணும் ஆனா இந்த படத்தோட பாட்டு அப்படியான்னு நீங்க தான் சொல்லணும் !!! ஆனா உங்க தலைவர் மட்டுமே சாதிக்க முடியுங்க இப்படி பட்ட படத்தை கூட சூப்பர் ஹிட்டாக்க !!! இது வஞ்ச புகழ்ச்சி இல்லை முழுக்க முழுக்க உண்மை !!!

  56. / dr.suneel:டிக்கெட்
    விலை குறைந்த உடன் அடுத்த
    வாரங்களில் மீண்டும் ஒரு கூடம் வர
    ஆரம்பிக்கும்/

    Idhudhan sir nijam. Enaku therindha pala kudumbangal (rajini rasigargal alla) vilai kuranjadhum parkanumnudhan sollittu irukanga.

    Nadunilayanavanga inimedhan parka povanga.

  57. //// @சங்கர் நான் எழுதியதை மறுபடியும் ஒரு முறை படிங்க.. நான் கதையோடு ஒன்றி வரவில்லை என்று கூறவில்லை. எடுக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்று தான் கூறி இருக்கிறேன். அதில் ஐஸ் நடனம் மட்டுமே சிறப்பு.////

    ரைட் தல …., எனக்கு என்னமோ நல்ல இருந்த மாதிரி தான் தெரியுது…தலைவர் ஸ்டைலுக்கு முன்னாடி ஐசு எல்லாம் தூசு …,

    /// அப்புறம் நீங்க ஹாலிவுட் படமெல்லாம் நீங்க நிறைய பார்ப்பீங்கன்னு ஒத்துக்குறேன் ///

    ஐயையோ தல …,நான் கடைசியா பார்த்த ஹாலிவுட் படம் ஷோலே ….,;-)

  58. ஆமா நீங்க மட்டும் எப்படி கண்ணடிக்கிற மாதிரி சிரிப்பான் போடுறீங்க சொல்லி குடுங்க தல

  59. @ராஜ் நான் தான் எந்திரன் முன்னோட்டத்திலேயே கூறி விட்டேனே .. இதன் பாடல்கள் மற்றும் படம் A மற்றும் B சென்டருக்கு தான் என்று 🙂 இந்த படத்துல எம்பேரு படையப்பா! இளவட்ட நடையப்பா என்று வைத்தால் நன்றாக இருக்குமா!

    @சங்கர் ஹி ஹி ஹி அது சப்பை மேட்டர். நீங்க சரியாத்தான் சிரிப்பான் போட்டு இருக்கீங்க ஆனா சின்னதா தப்பு பண்ணிட்டீங்க..

    “ஹாலிவுட் படம் ஷோலே ….,;-)”

    இதுல பாருங்க நீங்க உங்க சிரிப்பானுக்கு முன்னாடி இடம் விடல “….,;-)” என்று இருக்கு.அது தான் மேட்டர். அது வேற எதோ என்று நினைத்து விட்டது. இடம் விட்டு சிரிப்பான் போடுங்க செமையா கண்ணடிக்கும் 😉

    ரைட்டா!

  60. கிரி!
    இணைய தகவல்கள் கண்ணுல மாட்டுச்சுன்னு வந்தா இங்கே வந்து மாட்டிகிட்டேன்.

    எந்திரனை இணையத்துல கலக்கிட்டாங்க போல இருக்குது.நான் திரையரங்குத்தில் இரண்டாம் நாள் எனது 2 சென்ட் கொடுத்து விட்டேன்.இருந்தாலும் தமிழகத்தில் ஆரம்பமாகும் ஒரு புதிய monopoly உடைக்க இணையத்துல எந்திரன் சுத்தறது நல்லது என நினைக்கிறேன்.நீங்க?

  61. 150 ௦ கோடி பணம் ஒரு வீண் செலவு
    நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
    ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
    சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

    அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை

    சூர்யா – அஹரம் – விதை
    http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

  62. அல்லோ மிஸ்டர் வைத்தியநாதன் டெல்லில நாம ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம்!

  63. உங்களுக்கு எப்பவுமே மொக்கப் படங்கள்தான் பிடிக்கும் போல… அதுவும் பல திரைப்படங்களை (உதா: ஷொர்ட் சர்கிட் )காப்பியடித்து ஒரே படமா கொடுத்திருக்கும் எந்திரனுக்காக … ஹ்ம்ம் ஆனாலும் உங்க நகைச்சுவையுணர்வு… நல்லா இருக்கு 🙂

  64. @ராஜேஷ் படிச்சுட்டேன்

    @ராஜ நடராஜன் இனி என்ன சுத்துனாலும் ஒண்ணும் பயனில்லை.. அவங்க போட்டதுக்கு மேல எடுத்துட்டாங்க!

    @ராஜகோபால் இப்பவே கண்ணை கட்டுது! இன்னும் எத்தனை நாள் தான் இதே வசனத்தை கூறிட்டு இருப்பீங்க. நீங்க சொல்வது நல்ல விஷயம் தான் மறுக்கவில்லை. அவதார் கூட இரண்டாயிரம் கோடி போட்டு எடுத்தாங்க ..அப்படிப் பார்த்தால் அது கூட வீண் தான் (உடன் அதோட ஒப்பிடாதீங்கன்னு சொல்லாதீங்க… செலவு செலவு தான்)

    எல்லாமே இருக்கனுங்க! நீங்க சொல்றமாதிரி பார்த்தால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் தான் இருக்கணும். உங்களுக்கு எந்திரன் பட்ஜெட் ரொம்ப அதிகமா தெரியுது. இன்னும் சிலருக்கு சந்திரமுகி பட்ஜெட் கூட அதிகமாத்தான் இருக்கும். இன்னும் சிலர் நீங்க ஏன் Zodiac சட்டை போடுறீங்க சரவணா ஸ்டோர்ஸ் சட்டை போட்டா என்ன? சத்யம் திரையரங்குல போய் ஏன் படம் பார்க்கறீங்க சைதாப்பேட்டை ராஜ் ல போய் பார்த்தால் என்னன்னு? போயிட்டே இருக்கும். போங்க சார்! போர் அடிக்காதீங்க.

    உதவி செய்வதை நான் கேவலப்படுத்தவில்லை ஆனால் அதற்கும் ஒரு லிமிட் இருக்கு. நல்லவனா இருங்க.. அநியாயத்துக்கு நல்லவனா இருக்காதீங்க. உங்க அளவிற்கு நான் நல்லவன் அல்ல.

    @பன்னிக்குட்டி ராமசாமி ஏய்! நீ ரொம்ப பேசுற.. ஓகே குறைச்சுக்குறேன் 😀

    @இனியவள் புனிதா ஹி ஹி ஒரு சின்ன திருத்தம் மொக்கை படமும் பிடிக்கும் ஆனால் எனக்கு எந்திரன் மொக்கை படமல்ல உங்களுக்கு இருக்கலாம் 🙂 நகைச்சுணர்வு நல்லா இருக்குனு சொன்னீங்க சரி! நான் எழுதியது நகைச்சுவையா இருக்கு என்கிற அர்த்தத்திலா! இல்ல எந்திரன் படம் நல்லா இருக்குன்னு சொன்னது நகைச்சுவையா இருக்கு என்ற அர்த்தத்திலா! 😉

  65. வால்பையன், எங்க தலைவருக்கு ஏன் தெரியுமா இவ்வளோ ரசிகர்கள்? அவர்கிட்டே இருக்கும் கேட்ட பழக்கங்கலகுட ஒப்பான சொல்லகூடிய குணம் தான்! ரஜினி என்கிற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள விட ரஜினி என்கிற மனிதனுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம்!

  66. // ரஜினி என்கிற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள விட ரஜினி என்கிற மனிதனுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம்! //

    நடிப்பையாவது ரசிக்க ஒரு லாஜிக் இருக்கு, தனிமனித வாழ்க்கையை ரசிக்க என்ன இருக்கு!? இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்!

    நமக்கு எதுக்கு தலைவன், நமக்கு அறிவு இல்லையா? நமக்கு யாராவ்து வந்து சொல்லனுமா என்ன செய்யனும்னு!? நாமெல்லாம் மனிதர்களா அல்லது ஆட்டு மந்தைகளா!? இது எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும்!

    • தலைவன் ஆட்டு மந்தைக்கத்தான் இருப்பான் என்று சொல்லும் உங்கள் அறிவுக்கு…… என்ன என்று சொல்ல?

      ஸ்போர்ட்ஸ் டீம்க்கு எல்லாம் கேப்டன் இருக்கார், அதுக்கு டீம் மெம்பெர்ஸ்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அர்த்தம் இல்ல. டீம் எ இக்கட்டான சமயதலே முன்னாடி நின்னு கொண்டு போகணும் அதுக்குத்தான்.

      சரி உடுங்க நீங்கதான் ரொம்ப………

  67. //தலைவன் ஆட்டு மந்தைக்கத்தான் இருப்பான் என்று சொல்லும் உங்கள் அறிவுக்கு…… என்ன என்று சொல்ல?//

    உங்க புரிதலை நினைச்சு புல்லரிக்குது!

    டீமுக்கு தலைவன் இருப்பான், அதுக்கு தான் நடிகர் சங்கம், அதுக்கு ஒரு தலைவன், நீங்களும் நடிகரா, எனக்கு தெரியாதுங்க நண்பா!

  68. ஒன்னுமே சாதிச்சு கிழிக்கல. ஆனா அதுக்குள்ள சொம்பத் தூக்கிட்டு ” யேய் நீ இத்த செய்யாத, நீ அத்த செய்யாத”ன்னு சொல்ல வந்துட்டாங்கப்பா.

    இவங்களுக்கெல்லாம் என்ன நெனப்புன்னா, ஒலகத்துலே இவங்க மட்டுந்தான் அறிவாளி, மத்தவங்கெல்லாம் முட்டாள்”ன்னு.

    போங்க பிரதர்ஸ். என்ன செய்யனும் என்ன செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஒங்க புள்ளகுட்டிக்கு சொல்லிக்குடுங்க. நாங்களும் பல ரஜினிப் படத்த பாக்காம தூக்க வெச்சிருக்கோம். அதேப் பிடிச்சிருந்தா பாத்திருக்கோம்.

    யாருக்கவதும் அட்வைஸ் பண்ணனுமுன்னு தோனுச்சுன்னா, மக்கள்கிட்ட ஓட்டு வாங்கி கொள்ளையடிக்கிறானுங்க பாரு, அரசியல் வியாதி அவங்கிட்ட போயி அள்ளிவிடுங்க. ஆமா ஒங்க ஊருப்பக்கத்துலதான ராஜான்னு ஒரு அசகாய சூரன் அரசியல்வியாதி இருக்கார். ஸ்டார்ட் யுவர் ஒர்க் மேன்.

    அங்கெல்லாம் விட்டுடறது. சும்மா 3 வருசத்தக்கு ஒரு முற ஒரு டைம் பாஸ் செஞ்சுட்டு உருப்படியா வேலை பாக்குற ரஜினி ரசிகர்கள்தான் இவங்களுக்கு கெடைப்பாங்க. ஏன்னா அங்கெல்லாம் ஆட்டினா வாலை வெட்டிடுவாங்கல்ல.

    இதுல, என்னமோ எல்லா ரஜினி ரசிகர்களும் வெட்டியான் வேலைப்பாக்குறதா நெனப்பு.

    பிரதர், dont worry about us. we know how to lead our life. சொம்ப தூக்கி ஓரம் வையுங்க.

  69. //யாருக்கவதும் அட்வைஸ் பண்ணனுமுன்னு தோனுச்சுன்னா, //

    விவாதத்திற்கும், அட்வைஸுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா!?

    கிரி அப்பவே சொன்னாரு, நான் தான் கேட்கல!

  70. //தனிமனித வாழ்க்கையை ரசிக்க என்ன இருக்கு!? //

    தனிமனித ஒழுக்ககேட்டினால்தன் இன்று நாட்டில் நடுக்கும் பல குழப்பங்கள் மற்றும் ப்ரிசினைகளும்!

    உங்கள் நேரத்துக்கு நன்றி நண்பா!

  71. //தனிமனித ஒழுக்ககேட்டினால்தன் இன்று நாட்டில் நடுக்கும் பல குழப்பங்கள் மற்றும் ப்ரிசினைகளும்!

    உங்கள் நேரத்துக்கு நன்றி நண்பா!//

    மற்றவருக்கு தொந்தரவு தரும் சின்ன புன்னகையும் தவறு தான், நீங்க எதை ஒழுங்கம் என்கிறீர்கள் என்று தெரியவில்லை!

    உங்கள் பார்வையில் தனி மனித ஒழுங்கத்தை பார்த்தால் இங்கே எவனுமே யோக்கியன் இல்லையே நண்பா!

  72. கிரி! மீண்டும் வணக்கம்.போன பின்னூட்டத்துக்கு என்ன பதில் போட்டீங்கன்னு தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ஒரு கொசுறு தகவலும் கேட்கலாம் என மீண்டும் வந்தேன்.

    முந்தைய உங்களின் Diplomatic பின்னூட்டத்துக்கு நன்றி.இருந்தாலும் எனக்கு வயித்தெரிச்சல்தான்:)
    . (பிளாக்கிற்கு பின்னாலான தளமாற்றம் காரணங்கள் நான் அறியேன்.ஆனால் அரசல் புரசலா உங்கள் மறுமொழிகள் சில படிக்கும் போது ஏதோ சில பக்கிகளின் வில்லங்கம் என புரிகிறது.The other side of blogging nonsense எனது ஸ்பெல்லுக்கு கூட சிரிக்கும் அனானி தகராறும் உங்கள் பின்னூட்டமும் நினைவுக்கு வருகிறது)

    சரி அதை விடுங்க!
    அடுத்து என்னோட ஞாபகத்துக்கு ஒரு சின்ன பரிட்சையாரோ சொன்னாங்கன்னு kickman டாட்காமை நிறுவினால் அலுவலகத்தில் தெரியும் .டாட்.காம் வீட்டில் தெரிவதில்லை.நீங்கள் முன்பு இணையத்தில் சேமிக்கும் தளமொன்று குறிப்பிட்டிருந்தீர்கள்.நுனிப்புல் மேய்ந்த காரணத்தால் புக்மார்க் செய்ய மறந்து விட்டேன்.இப்பொழுது இரண்டு இடத்திலும் தேட வேண்டிய நிலை உள்ளதால் உங்களின் உதவி கேட்டும் மறுமொழி கேட்டும்.

    பின்னூட்டம் போட்டு விட்டேன்.எப்ப திரும்ப வருவேன்னு எனக்கே தெரியாது:)

  73. @அருண் என்ன எவ்வளோ லேட் 🙂

    @VJR உங்களோட போஸ்ட் படித்தேன் செம காமெடி! 🙂

    @ராஜ நடராஜன் என்னோட பேர் ல யாரோ கமெண்ட் போடுகிறார்கள் என்று கூறுகிறீர்களா! நான் பின்னூட்டம் போடுவதே ரொம்ப குறைவு! அப்படியே அவர்கள் என் பெயரில் போட்டாலும் அவர்கள் எதிர் பார்க்கிற அளவிற்க்கெல்லாம் அந்த பிரச்சனைக்களுக்கு நான் வொர்த் இல்ல 😉 அதைப்போல சண்டைகளில் ஈடுபாடுமில்லை.

    நீங்க புக்மார்க் பண்ணுற தளம் பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். கூகிள் க்ரோம் ல கூட நீங்க உங்களுக்கு தேவையானவற்றை புக்மார்க் எளிதாக செய்யலாம்.

    மேலும் சந்தேகம் என்றால் கேளுங்கள்..உதவத் தயார் 🙂

  74. நீயே ஒரு சொம்பு என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுகிறாய் நண்பா.

  75. நல்ல காமெடிப்பா கமெண்ட்ஸ் ஜாலிய இருக்கு அருண் வேற நல்ல பதில் எழுதறது .
    அருண் ( வால்பையன்) நான் பாலா http://redhillsonline.blogspot.com
    டைம் இருந்த இப்படி வருவேன். அவ்வளவே . நீங்க எல்லாம் கலக்குறீங்க !!!

  76. ….கிரி..வெரி சூப்பர் கமெண்ட்…..உண்மை எதுவோ அதை கரெக்டா சொல்லியதற்கு ரஜினி ரசிகர்கள் சார்பாக மிக்க நன்றி………

    நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்….ஆனால் கைவிடமாட்டான்*******
    கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான்…ஆனால் கைவிட்டுவிடுவான்********

    அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி………

    உங்களுடன் என்றும் சமுக சேவையில்……..

    ரஜினிகாந்த் முரட்டு பக்தர்கள் குழு……
    ரஜினிகாந்த் புகழ் பரப்பு குழு…..
    ரஜினிகாந்த் விசுவாசப்படை…….
    ரஜினிகாந்த் மக்கள் நல இயக்கம்…..
    ரஜினிகாந்த் தொழிலாளர்கள் இயக்கம்………………>>>>>>>>மதுரை________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here