சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்யராஜ்

94
சத்யராஜ்

ஜினியின் வருத்தம் குறித்துச் சத்யராஜ் கருத்துத் தெரிவிக்கையில்..

சத்யராஜ்

“ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.”

இப்படிக் கூறி இருக்காரு புரட்சி தமிழன். Image Credit

தமிழுக்காகவும் தமிழ் நாட்டு மக்களுக்காகவும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருப்பவருக்கு இந்தக் கோவம் கூட இல்லை என்றால் அப்புறம் என்ன புரட்சி தமிழன்!

இவ்வாறு கூறி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்!.

இதைக் கல்வெட்டில் பொறித்து வருங்காலச் சந்ததியினர் தெரிந்து கொள்ள “சிபி” அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருப்பதாகக் கேள்வி 🙂 .

இதைச் சொன்னாரே இதோட அவர் நிறுத்தி இருந்தா பரவாயில்ல ஆனால், சைக்கிள் கேப்ல லாரி ஒட்டுனாருங்க பாருங்க அந்தக் கொடுமைய தான் சகிக்க முடியல..

சரி அப்படி என்ன தான் சொன்னாரு..

பின் வைக்க மாட்டேன்

“என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்.

இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.”

இவரு எந்தப் பக்கம் வேணாலும் காலை வைக்கட்டும் அது பிரச்சனை இல்ல..அதுக்கு அடுத்த மேட்டரை கவனிங்க.

ஏங்க! இவரு படம் தமிழ்நாட்டுல ஓடுறதே பெரிய விஷயம் இதுல அடுத்த மாநிலத்துல!

இந்தப் பிரச்சனை இவருக்கு வந்து இருந்தால்… தன்னுடைய சம்பளத்தை!! குறைத்து கொண்டு இருப்பாராம்.

இவர் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது.. படமே நடிக்காமல் இருக்க வேண்டும்.. அப்பத் தான் தயாரிப்பாளர் தப்பிப்பார்.

நல்லா இருங்கப்பா!

அப்படியே சத்யராஜ் “பெரியார்” என்ற ஒரு நல்ல படத்தைத் தந்ததைத் தவிர “தமிழுக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும்” என்ன புரட்சி பண்ணுனாருன்னு யாராவது சொன்னா நானும் தெரிஞ்சுக்கிறேன் !

Read: சத்யராஜ் மன்னிப்பும் தக்காளிச் சட்னியும்!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

94 COMMENTS

  1. நம்ம ஊர்ல அதிகம் கேவலப்படுத்த வார்த்தைகள் இரண்டு
    1. “புரட்சி”
    2. “தளபதி”

    கவுண்டமணி பாணியில் சொல்லனும்னா “இந்த புரட்சிகாரனுங்க தொல்லை தாங்கமுடியலைடா சாமீ.

  2. //sharevivek said…
    அருமை
    இன்னும் நிறைய எதிர்பார்த்து//

    நன்றி sharevivek. போட்டு தாக்கிடலாம், ரஜினியை விமர்சிக்கும் ஆளுகளை பாருங்க..சத்யராஜ் டி ராஜேந்தர் சரத்குமார் விளங்குன மாதிரி தான். எனக்கு என்ன ஆச்சர்யம்னா பா ம க பெரிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கேப்டன் வாயே திறக்கவில்லை. இவர்கள் தற்போது உஷாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. முதல் இருவரை தவிர சரத்துக்கு தான் தற்போது பெரிய பிரச்சனை அவசரப்பட்டு பேசி மாடிக்கொண்டேமே என்று..இவரு கட்சி விளங்குன மாதிரி தான் போங்க.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  3. //விஜய் ஆனந்த் said…
    ஹிஹிஹி!!!
    அவரு எத்தன கதாநாயகிங்களோட சேந்து எம்மாம்பெரிய புரட்சியெல்லாம் பண்ணியிருக்காரு!!! இப்படி கேட்டுட்டீங்க????//

    ஹா ஹா ஹா ஹா முக்கியமா நமீதா கூட ..இவரு என்னமோ காந்திமதி கூட நடிக்கிற மாதிரி ரஜினிய தன் படங்கள்ல கிண்டல் பண்ணிட்டு இருக்காரு..

    ஐயோ சாமி “சத்யமா” தாங்க முடியல

  4. //linux said…
    நம்ம ஊர்ல அதிகம் கேவலப்படுத்த வார்த்தைகள் இரண்டு
    1. “புரட்சி”
    2. “தளபதி”

    கவுண்டமணி பாணியில் சொல்லனும்னா “இந்த புரட்சிகாரனுங்க தொல்லை தாங்கமுடியலைடா சாமீ.//

    தமிழ் தமிழ் னு முழங்கிட்டே இருக்காரு இவரு தமிழுக்காக என்ன பண்ணினாருன்னு தான் எனக்கு புரியல..

    மேடையில என் பொண்டாட்டி கூட தானே படுக்கிறேன் அடுத்தவன் பொண்டாட்டி கூடவா படுக்கிறேன் ன்னு தமிழ் நாகரீகத்தோட பேசுறாரு ..என்ன மயிருக்கு னு தமிழ் ல இருக்கிற எல்லா நல்ல வார்த்தையும் பொது நிகழ்ச்சியில் பயன்படுத்தும் இவர் புரட்சி தமிழன் தான் என்ன சொல்றீங்க? :-)))

    உங்கள் வருகைக்கு நன்றி லினக்ஸ் ..உங்களுக்கு லினக்ஸ் ரொம்ப பிடிக்கும் போல 🙂

  5. //ஜோசப் பால்ராஜ் said…
    திட்டுனவங்க மேல எல்லாம் உங்களுக்கு வெறுப்பு அதான் இப்டி பொறுமையா போட்டு தாக்குறீங்க.//

    ஹா ஹா ஹா நாங்க எப்போதும் பொறுமையா தான் அடிப்போம். அவசரப்பட்டு திட்டி விட்டு அப்புறம் திட்டிட்டோமேன்னு தவற ஒத்துக்க வெட்கப்பட்டு (கோவி கண்ணன் நச்சுனு கூறிய பதிவு 🙂 ) ஒத்துக்காம இருக்காங்க.. இப்ப எங்க டர்ன்..ஒவ்வொருத்தரா போட்டு தாக்குறேன் பாருங்க (கேனத்தனமா பேசியவர்களை மட்டும்)

    //சினம் வெறுப்பு குறித்த கோவி.க அண்ணண் பதிவ படிச்சோம்ல , இங்க கூட உபயோகிக்கலன்னா எப்டி //

    :-))))))))))ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

    //உங்க பதிவுக்கு என் பதில் பின்னூட்டமா வராது, பதிவு சீக்கிரம் எழுதறேன்.//

    என்ன வேணா எழுதுங்க. ரஜினிய திட்டுறேன் பேர் வழின்னு சத்யராஜ் போன்றவர்களை உயர்த்தி பேசிடாதீங்க :-))

  6. கோவை விஜய்.. உங்களின் சுற்று புற சூழல் ஆர்வத்தை நினைத்து எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. கடந்து ஒரு வாரமாக அனைவரும் ரஜினி குறித்து பதிவு போடுவதில் காட்டிய (என்னையும் சேர்த்து) ஆர்வத்தை இதிலும் காட்டி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இது குறித்து நானும் இன்று பதிவு போடுவதாக இருந்தேன், ஆனால் நாளை போட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதி (ஓரளவிற்காது மறக்காமல் இருப்பார்கள்) இன்று பதிவு போடவில்லை.

    உங்களின் மனம் தளரா முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  7. //வெங்கட்ராமன் said…
    அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

    காதல் புரட்சி :-))) அப்பாவும் பய்யனும் இப்படி இருக்க வேண்டும் என்று புரட்சி கர கருத்துக்கள் கூறுகிறாங்க..அப்ப கண்டிப்பா புரட்சி தமிழன் தான்..

  8. //Indian said…
    அண்ணே, கட்-அவுட் கால நக்கறதப் பத்தி உங்க கருத்து என்ன?//

    இந்தியன் அண்ணே! நீங்க என்னோட இந்த பதிவு மட்டும் தான் படித்து இருக்கீங்கன்னு நீங்க கேட்குற கேள்வியில தெரியுதுண்ணே..

    எனக்கு இந்த கட் அவுட் க்கு பால் ஊத்துறது ..மண் சோறு சாப்பிடறது காலை நக்குறது இதை எல்லாம் ஆதரிச்சு பேசுற ஆளுன்னு என்னை தவறா நினைத்து இருந்தா தயவு செய்து அந்த எண்ணத்தை மாத்திக்குங்கன்னே. ரஜினிக்கு ரசிகனாக இருந்தால் எல்லோரும் அப்படி தான் என்ற குறுகிய எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் அண்ணே.

    எனக்கும் அதற்கும் வெகு தூரம் அண்ணே..அப்படி பட்ட ஆளுங்க கிட்ட இருந்து தெறித்து ஓடி விடுவேண்ணே..

    ஒன்று நல்லா புரிந்துக்குங்க அண்ணே …ரஜினி யை ஆதரிப்பவன் எல்லாம் முட்டாள் எதிர்ப்பவன் எல்லாம் புத்திசாலின்னு ஏதாவது நினைத்து இருந்தால் (இருந்தால் தான் சொல்றேன்) தயவு செய்து மாத்திக்குங்க அண்ணே…

    என்னோட எல்லா பதிவுகளையும் படிங்க அண்ணே (விருப்பம் இருந்தால்) ..நீங்க எல்லோரும் தரம் தாழ்ந்து அசிங்கமா விமர்சித்த மாதிரி ஒரு பதிவை கூட என் பதிவில் கண்டு பிடிக்க முடியாதுண்ணே..எனக்கு பிடிக்க வில்லை என்றாலும்.

    இப்ப சொல்லுங்கண்ணே அசிங்கமா பேசுறது யாருங்கண்ணே?

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி இந்தியன் அண்ணே. பதிவுகள் பிடித்து இருந்தா!! அப்பப்ப வாங்கண்ணே..

    நிறையா அண்ணன் போட்டு இப்பவே கண்ணை கட்டுது ..:-)

  9. ரஜினி கிட்ட எத எல்லாம் பாக்கக் கூடாதோ அதை எல்லாம் சத்தியராஜ் கிட்ட பாக்கலாம், திட்டலாம்னு சொல்றீங்க. நல்ல நடுநிலைமை. ரஜினியை உயர்த்த சத்திய ராஜை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

  10. //Bleachingpowder said…
    தமிழ் தமிழ்னு வாய் கிழிய பேசுற இந்தாள் எத்தனை படத்துல தமிழ் பொண்ணுங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு//

    ஊருக்கு தான் உபதேசம்.

    //சரி தொலஞ்சு போ, நீ தயாரிச்ச “லீ” படத்திலயாவது ஒரு தமிழ் பொண்ண நடிக்க வச்சிருக்கலாம்ல அதுவும் கிடையாது நிலானு டெல்லி பொண்ண கூட்டிட்டு வந்தாரு இந்த புரட்சி தமிழன்//

    :-)))))))))))

    கழுவு கழுவுன்னு கழுவறீங்க ஹி ஹி ஹி ஹி

  11. //Syam said…
    உம்மா உம்மம்மா பாட்டு எல்லாம் பாடி ஆடி தமிழுக்கு எம்ம்புட்டு பெரிய சேவை செஞ்சு இருக்காரு…நீங்க என்னானா இப்படி சொல்லிடீங்களே… :-)//

    ஹா ஹா ஹா

    //நம்ம மக்கள் கேனையனா இருக்கற வரைக்கும், ரஜினி, சத்யராஜ் எல்லோரும் இப்படி தான் காமடி பண்ணிட்டு இருப்பாங்க//

    ரஜினி தெளிவாக பேசாமல் இருக்கலாம் ஆனால் சத்யராஜை போல அசிங்கமான வார்த்தைகளை மேடைகளில் ரஜினி பயன்படுத்த மாட்டார்..தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார்.

  12. //
    ரஜினியை உயர்த்த சத்திய ராஜை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?
    //
    ஏன்னா ரஜினியப் பத்தி ஓவரா பில்டப் குடுத்துட்டு இருந்தாங்க. இப்ப அதெல்லாம் வெறும் டப் ஆயிடுச்சு. இப்ப அப்படியெல்லாம் பேசினா எல்லோரும் சுத்தி நின்னு கெக்கே பிக்கே ந்னு சிரிக்கிறாங்களாம். அதனால மத்தவங்கள திட்டி அவங்கள ரட்சிக்க வந்தவர் இமேஜ ஏத்த முயற்சிக்கிறாங்களாம்.

  13. //
    //சரி தொலஞ்சு போ, நீ தயாரிச்ச “லீ” படத்திலயாவது ஒரு தமிழ் பொண்ண நடிக்க வச்சிருக்கலாம்ல அதுவும் கிடையாது நிலானு டெல்லி பொண்ண கூட்டிட்டு வந்தாரு இந்த புரட்சி தமிழன்//

    :-)))))))))))

    கழுவு கழுவுன்னு கழுவறீங்க ஹி ஹி ஹி ஹி
    //
    கட் அவுட் கழுவி நக்கின மாதிரியே!!!!!!!!!!!

    (ஆமா கிரி சந்துல இவர வாரிட்டீங்களே)

  14. // Xavier said…
    ரஜினி கிட்ட எத எல்லாம் பாக்கக் கூடாதோ அதை எல்லாம் சத்தியராஜ் கிட்ட பாக்கலாம், திட்டலாம்னு சொல்றீங்க.நல்ல நடுநிலைமை//

    யாருங்க சொன்னாங்க..நான் எதுவும் என் பதிவில் அப்படி குறிப்பிடவில்லையே.

    //ரஜினியை உயர்த்த சத்திய ராஜை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?//

    இப்ப என்ன கேவலமா விமர்சனம் செய்தேன்….தமிழ் தமிழ் னு சொல்றாரே அப்படி தமிழுக்கு என்ன செய்து இருக்காருன்னு கேட்டேன்?

    உங்களை ஒன்று கேட்கிறேன்..ரஜினி மன்னிப்பு கேட்டு விட்டதாக கூறி புரிந்து கொள்ளாமல் அனைவரும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்களே நாய் கன்னட பொறுக்கி என்றெல்லாம் அதை எந்த கணக்குலங்க சேர்த்துக்கிறது. ஒரு நான்கு நாட்கள் எப்படி எல்லோரும் கேவலமா பேசினாங்க! அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதப்ப இது கண்டிப்பா கேவலமான விமர்சனம் தான்.

    நான் ஒரு பதிவு அதுவும் நாகரீகமாக போட்டதற்கே உங்களுக்கு இவ்வளோ கோபம் வருதே.. நான்கு நாட்கள் கூட்டத்தோடு திட்டினால் பிரச்சனை இல்லை என்று அசிங்க அசிங்கமா பதிவு எழுதியவர்களை யார் கேட்பது.

    இப்போது கொஞ்சம் பேர் ரஜினி கூறியதில் தவறு இல்லை என்று புரிந்து கொண்டார்கள், இருந்தாலும் அவர்கள் திட்டிய சொற்களை திரும்ப பெற முடியுமா?

  15. //
    ரஜினி தெளிவாக பேசாமல் இருக்கலாம் ஆனால் சத்யராஜை போல அசிங்கமான வார்த்தைகளை மேடைகளில் ரஜினி பயன்படுத்த மாட்டார்..தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார்.
    //

    இந்த அளவுக்கு காவடி தூக்க உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன?
    அல்லது உங்களுக்கும் சத்தியராஜுக்கும் என்ன?

  16. //Pisasu said…
    அதனால மத்தவங்கள திட்டி அவங்கள ரட்சிக்க வந்தவர் இமேஜ ஏத்த முயற்சிக்கிறாங்களாம்.//

    யாரும் யாரோட இமைஜை ஏத்தவும் முடியாது இருக்கவும் முடியாது..அது அவங்கங்க நடந்துக்கிற முறையில் தான் இருக்கு.

    //ஆமா கிரி சந்துல இவர வாரிட்டீங்களே//

    நான் இவர வாருறதா..ஹி ஹி

    சத்யராஜ் பதிவு போட்டதால அவரை மாதிரியே காமெடி பண்ணுறீங்க

    உங்கள் வருகைக்கு நன்றி.

  17. //முகுந்தன் said…
    நான் உங்களுக்கு முழு ஆதரவு (அத வெச்சு ஆனா ஒன்னும் பண்ண முடியாது :-))//

    ஹா ஹா ஹா

    //முதல்ல தன்னோட பின்னாடி சுத்தமா இருக்கனு பாத்துட்டு அடுத்தவன்
    போடும் குப்பைய சுத்தம் பண்ணனும்.//

    முகுந்தன் சொன்னாலும் சொன்னீங்க நூத்துல ஒரு வார்த்தை.. இதெல்லாம் இவருக்கு தெரியாது..இவரோட படத்துல ரஜினிய கிண்டல் பண்ணுவாரு ஆனால் ஆனால் அதே தப்பை இவரும் பண்ணுவாரு ..என்னமோ போங்க!

  18. //Pisasu said…
    //இந்த அளவுக்கு காவடி தூக்க உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன?
    அல்லது உங்களுக்கும் சத்தியராஜுக்கும் என்ன?//

    இந்த அளவுக்கு ரஜினிக்கு ஆபாசமா எதிர்ப்பு தெரிவிக்க பதிவு போட்ட அனைவருக்கும் எதுவோ அதே தான் எனக்கும்..

    அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன் :-)))

  19. //ஜோ / Joe said…
    அவங்கள்லாம் செத்த பாம்ப அடிக்க வேண்டாம்ன்ணு விட்டிருப்பாங்க//

    ஜோ உங்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு..இதை போல பின்னூட்டத்தை என்ன வென்று எனக்கு சொல்ல தெரியவில்லை.

    நான் இதற்க்கு பதில் அளிக்க முடியும் ஆனால் விரும்பவில்லை.

  20. மோகன் கந்தசாமி said…
    ////ரஜினி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு பாவப்பட்ட மனிதர். வாலிபப்பருவத்தில் முடிவெடுப்பதில் எல்லோருக்கும் ஏற்படும் குழப்பம் இவருக்கு இந்த வயதில் ஏற்படுகிறது. தாம் வாழும் இடத்தின் வரலாறு தெரியாத மனிதர். உலக விசயத்தில் அவருக்கு வெறும் பாமரனின் அறிவு மட்டும் தான். வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவரை இழுத்து வந்து கும்மியின் நடுவே நிற்க வைத்துவிட்டார்கள், பாவம் யார் பெற்ற பிள்ளையோ!. ஒருபுறம் தன் பிராமண வேல்யூக்களை தூக்கி பிடிக்க இவரது பிரபலத்தை சுரண்டும் பார்பன மனைவி, வழிகாட்டுகிறேன் பேர்வழி எனக்கூறிக்கொண்டு அவரை நிரந்தரமாய் குழப்பத்தில் வைக்கும் சில மொட்டை போட்ட பேர்வழிகள், எவர்க்கேனும் அடிமையாய் இல்லாமல் ஒரு நாளையும் ஒட்டமுடியாத, விரட்டினாலும் காலையே சுற்றி சுற்றி வரும் ஒரு பெருங்கூட்டம், ஒன்றுக்கும் உதவாத குப்பை குப்பையாய் அவரது பணம். இப்படிப்பட்ட ஒரு துரதிஷ்டவாதியை ஆளாளுக்கு வெளுப்பது பார்க்க பாவமாயிருக்கிறது. இதெல்லாம் சத்தியராஜுக்கு தெரிந்தாலும் அவரை வேண்டும் என்றே வம்பிழுப்பது “விஷயம் தெரியாவிட்டால் ஓரமாக உட்கார வேண்டியதுதானே, அரைவேக்காட்டுதனமாக அரசியல் செய்து ஏன் இருக்கிறவன் உசிரை ரஜினி வாங்கவேண்டும்” என்ற எண்ணமாக இருக்கலாம்.////

  21. //Pisasu said… //

    எங்க நீங்களும் நானும் தானே பேசிட்டு இருக்கோம்..என் அவரை இழுக்கறீங்க..

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. உங்களுக்கு சரியாக இருப்பது எனக்கு தவறாக இருக்கிறது..எனக்கு தவறாக இருப்பது உங்களுக்கு சரியாக இருக்கிறது.

    எனவே அவங்க கருத்தை தான் கூறலாமே தவிர எது சரி தவறு என்று அறுதியிட்டு கூற முடியாது.

  22. //ஜோ / Joe said…
    பா.ம.க-வும் விஜயகாந்தும் ரஜினியை எதிர்ப்பதற்கு ரஜினி ஒரு அரசியல் சக்தியாக உருவாகி விடுவாரோ என்ற பயம் தான் காரணம்//

    இருக்கலாம் ..ஆனால் அவர் இனி வரமாட்டார் என்று நினைத்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருப்பதை இல்லை என்று கூற முடியாது.

    //இப்போது ‘ரஜினியின் அரசியல் எதிர்காலம்’ என்பது ஒரு செத்த பாம்பு .அவ்வளவு தான்//

    அரசியலில் எதுவும் நடக்கலாம். அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

    //அதற்காக விவாதம் செய்ய தயங்க வேண்டாம்.//

    ஜோ உங்களிடம் ஏற்கனவே கூறி இருக்கிறேன், ஆரோக்யமான விவாதத்திற்கு என்றுமே நான் தயார் தான். அது நட்பை முறிக்கும் பட்சத்தில் ஒதுங்கி விடுவேன். அதை பயம் அல்லது பின் வாங்குவதாக நினைத்தால் அவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை.

    அதனாலேயே இப்போதும் உங்களிடம் மதிப்புடன் நட்பு பாராட்டுகிறேன்.

  23. AAL VALARNTHA ALAVUKKU ARIVU VALARALAI NU SOLVAANGA ENGA OORULA.
    SAATHI VERI PIDITHAVARKAL,MOLI,INA,VERI, PIDITHAVARKAL UPPU PERAATHA KARANANGALUKKU ELLAAM,RAJINI ENNA SOLLA POKIRAAR ENDRU KETU THOLLAI KODUTHU..SALSALAPPAI ERPADUTHINAR.KARNADAGA MAKKAL ANAIVARUM VAATAAL NAGARAJ POLAMUTTAAL ILLAI.ENBATHAL THAAN KOORIYA KARUTHU KARNADAKA MAKKALAIUM SERTHU..ENA YAARUM ENNA KOODAATHU ENBATHARKKAAKA,RAJINI VARUTHAM HERIVITHAAR.ITHIL ENNA MANNIPPU IRUKKU.

  24. //omsathish said…
    AAL VALARNTHA ALAVUKKU ARIVU VALARALAI NU SOLVAANGA ENGA OORULA.//

    🙂

    //KARNADAGA MAKKAL ANAIVARUM VAATAAL NAGARAJ POLAMUTTAAL ILLAI//

    நெத்தியடியா சொன்னீங்க .. எனக்கும் முன்பு அவர்கள் மேல் கோவம் இருந்தது..

    அவர்கள் தேர்தலில் வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்க விடாமல் தோற்கடித்த போது..நாம் தான் இவ்வளோ நாள் தப்பா நினைத்து விட்டோம் போல இருக்குன்னு நினைத்தேன்.. வாட்டாள் போல ஒரு சிலரால் அவர்கள அனைவருக்கும் கெட்ட பெயர். அங்கேயும் பலர் கலவரங்களில் ஈடு பட்டாலும் நம்ம ஊர்ல இருக்குற அப்பாவி மக்களை போல அங்கேயும் உண்டு.

    //RAJINI VARUTHAM HERIVITHAAR.ITHIL ENNA MANNIPPU IRUKKU.//

    புரிந்து கொள்பவர்கள் உணருவார்கள். புரியாதவர்களையும் புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. தூங்குகிறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை …

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஓம் சதீஷ்.

  25. வணக்கம்!எதிர்கட்சிகளெல்லாம் ஆடி முடியட்டும் எனப்பொறுத்திருந்து விட்டு துவங்குகிறது கட்சி வக்கீலின் வாதம்.சும்மா அடிச்சு ஆடுங்க.பார்வையிடத்தான் நாங்கள் இருக்கிறோமே!:)

  26. கிரி, நல்லா சொன்னீங்க… அந்த ஃபோட்டோ நல்லாநிருக்கு.
    நம்ம கடைப் பக்கம் லேசா எட்டிப் பாருங்க… உள்ளே இருந்த எரிச்சலை கொட்டிவிட்டேன்

  27. ஹிஹிஹி!!!

    அவரு எத்தன கதாநாயகிங்களோட சேந்து எம்மாம்பெரிய புரட்சியெல்லாம் பண்ணியிருக்காரு!!! இப்படி கேட்டுட்டீங்க????

  28. //ராஜ நடராஜன் said…
    வணக்கம்!எதிர்கட்சிகளெல்லாம் ஆடி முடியட்டும் எனப்பொறுத்திருந்து விட்டு துவங்குகிறது கட்சி வக்கீலின் வாதம்.//

    ஹா ஹா ஹா இப்ப எங்க டர்ன் 🙂

  29. //வெண்தாடிதாசன் said…
    சைக்கிள் கேப்பில் ஏரோப்பளேன் ஒட்டுவது நீங்கள்தான்.//

    ஹா ஹா ஹா ஹா நன்றி

    //.தலீவரு மன்னிப்பு இல்லை வருத்தம் என்று பல்டி அடித்த பிறகு யாராவது சத்தியராஜிடம் கருத்து கேட்டார்களா?//

    அப்போதும் யாரும் அவரிடம் கேட்கவில்லை அவரே தான் சொன்னாரு..:-)))

    //சத்தியராஜோ அவரின் அல்லக்கைகளோ அண்ணன் வந்தா தமிழ்நாடு அமேரிக்கா என்று பாடுவதில்லை//

    எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் 🙂

    //தலீவர் sound உட்டார்னா எல்லா அரசியல்வாதிகளும் அவுட் என்று துதி பாடுவது இல்லை.//

    அதுக்கு ரஜினி என்னங்க பண்ணுவாரு

    //ஒகனேக்கல் பிரச்சனைக்காக நடிகர் சங்கம் கூட்டம் நடத்தியபோது உங்க தலீவருக்கு சத்தியராஜ் வைத்த ஆப்பின் காரணமாகதான் இப்படி பதிவு போட்டீர்களோ?//

    ஹா ஹா சத்யராஜ் ரஜினிக்கு ஆப்பு வைக்கிறதா!..அட ஏங்க நீங்க வேற..அவரு தன்னுடைய மனதில் உள்ள அழுக்கை எல்லாம் கேவலமான வார்த்தைகளால் அனைவரும் கூறி இருக்கும் பொது மேடையில் அப்படி கூறி தீர்த்துக்கொண்டார்.அவ்வளோ தான்.

    //அண்ணா, உங்க தலீவருக்கு மிகவும் பிடித்த பேச்சாளரை பற்றி இப்படி சொல்லலாமா?//

    இல்ல தெரியாம தான் கேட்கிறேன்..ஒருத்தரை பிடிக்கும் என்று கூறினால் அது வாழ்நாள் முழுமைக்கும் பொருந்துமா? என்னங்க இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்க..உங்களையே எடுத்துக்குங்க உங்களிடம் நண்பர்கள் மற்றும் எதிரிகளாக இருப்பவர்களிடம் உங்கள் வாழ்க்கை முழுவ்தும் அப்படியே இருக்க போகிறீர்களா.?

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. உங்க பேரு நல்லா இருக்கு :-)))

  30. //Vijay said…
    கிரி, நல்லா சொன்னீங்க…//

    நன்றி விஜய். உங்கள் பதிவிற்கு வருகிறேன்.

  31. //Indian said…
    திரு. கிரி அவர்களே,//

    இந்தியன் இப்படி மரியாதையா கூப்பிட்டு விட்டு அப்புறம் கேவலமா திட்டிடாதீங்க 🙂 சாதாரணமாவே கூப்பிடுங்க.

    //ரஜினியின் பால் உங்களுக்கு இருக்கும் அன்பு மற்றும் விசுவாசத்தின் காரணத்தை கூறமுடியுமா ( முடியும் எனும் பட்சத்தில் ) ?//

    முடியாம என்னங்க நீங்க என்ன என்னோட சொத்தையா திருடிட்டு போய்ட்டீங்க..சொல்ல மாட்டேன்னு சொல்வதற்கு.

    ஆனா ஒரு சின்ன திருத்தம் விசுவாசம் என்ற வார்த்தை சரி இல்லை. அன்பு என்பது தான் சரி. இதற்க்கு நான் விளக்கம் கொடுத்தால் நான் கூறுவதை புரிந்து கொள்ளாமல் நக்கலாக பார்ப்பவர்களே அதிகம். அதனால் எதுவும் கூறவில்லை. என் பார்வையில் அவர் நியாயமான ஆளாக தெரிகிறார் அவ்வளவே. அதுவே எனக்கு பிடித்துள்ளது. பலருக்கு தவறாக தெரியலாம் அதற்க்கு நான் என்ன செய்வது.

    இந்தியன் எதுவும் நாம் பார்க்கும் பார்வையிலே உள்ளது, நல்லவரும் நம் பார்வையில் கெட்டவராக தெரியலாம் கெட்டவரும் நல்லவராக தெரியலாம். வாழ்க்கை அனுபவங்களும் அப்போதைய சூழ்நிலைகளுமே இதை தீர்மானிக்கிறது.

    உங்கள் வருகைக்கும் நாகரீகமாக கேட்ட கேள்விக்கும் மிக்க நன்றி.

  32. மீ த பர்ஸ்ட்டு…

    கிரி, ரஜினி மேல உள்ள சினத்துனால எல்லாரும் ரஜினிய திட்டுனாங்க.
    ஆனா திட்டுனவங்க மேல எல்லாம் உங்களுக்கு வெறுப்பு அதான் இப்டி பொறுமையா போட்டு தாக்குறீங்க.
    (சினம் வெறுப்பு குறித்த கோவி.க அண்ணண் பதிவ படிச்சோம்ல , இங்க கூட உபயோகிக்கலன்னா எப்டி ??)

    உங்க பதிவுக்கு என் பதில் பின்னூட்டமா வராது, பதிவு சீக்கிரம் எழுதறேன். இப்ப ஆணி நிறைய இருக்கு

  33. //Indian said…
    சிவாஜி படம் வரை கதைக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறினரே?
    அது தனது ரசிகனுக்காக சொல்லப்பட்டது என்று நினைக்கிறீர்களா?//

    ரஜினி படம் பொழுது போக்கு படம் மட்டுமே..தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்தும் படம் அல்ல. லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.

    ரசிகனுக்காக சொல்வதெல்லாம் காமெடி தான்.. இப்பெல்லாம் யாரும் யார் சொல்லியும் கேட்பதில்லை..அவரவர்கள் தங்கள் மனதிற்கு தோன்றியதை தான் செய்கிறார்கள். சரி அப்போதைக்கு நன்றாக இருந்தது என்று நம்மை பாதிக்காதவரை சந்தோசம் என்று வந்து விட வேண்டியது தன்.

    //Indian said…
    அண்ணே, நம்ம சமாச்சாரம் எப்படி?//

    புரியவில்லை.

  34. //சரவணகுமரன் said…
    கிரி, போட்டு தாக்குங்க… :-)//

    ஹா ஹா ஹா காத்து இப்ப நம்ம பக்கம்.

    உங்கள் வருகைக்கு நன்றி சரவணகுமரன்.

  35. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே

    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

  36. அவரு எத்தன கதாநாயகிங்களோட சேந்து எம்மாம்பெரிய புரட்சியெல்லாம் பண்ணியிருக்காரு!!! இப்படி கேட்டுட்டீங்க????

    அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?

  37. உங்கள் கருத்திற்கு நன்றி ஆனால் உங்கள் பெயரை அப்படி கூப்பிட தான் கஷ்டமா இருக்கு 🙁

  38. தமிழ் தமிழ்னு வாய் கிழிய பேசுற இந்தாள் எத்தனை படத்துல தமிழ் பொண்ணுங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு ( அட நடிக்கறதுக்குங்க). கேட்டா இயக்குனர்களின் சுதந்திரத்தில் தலையிட மாட்டேனு ஒரு டயலாக் வேற. சரிடா நீ இயக்குன வில்லாதி வில்லன்ல ஏண்டா நக்மாவ ஹிரோயினா போட்டனா மண்டைய சொறியறான்.

    சரி தொலஞ்சு போ, நீ தயாரிச்ச “லீ” படத்திலயாவது ஒரு தமிழ் பொண்ண நடிக்க வச்சிருக்கலாம்ல அதுவும் கிடையாது நிலானு டெல்லி பொண்ண கூட்டிட்டு வந்தாரு இந்த புரட்சி தமிழன்.

    எச்சி கையால இந்தாள் காக்காவ கூட ஓட்டமாட்டான், இவனெல்லாம் தலைவர பத்தி பேசறான். எல்லாம் காலக் கொடுமை.

    //இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.//

    அண்ணனுக்கு இருக்கிற மார்கட்டுக்கு, மூனு வேள சோறும், ஒரு க்வட்டரும் தான் இவருக்கு சம்பளமாக கிடைக்கும். இதுல எத கொறச்சுக்க போறாரு

  39. உம்மா உம்மம்மா பாட்டு எல்லாம் பாடி ஆடி தமிழுக்கு எம்ம்புட்டு பெரிய சேவை செஞ்சு இருக்காரு…நீங்க என்னானா இப்படி சொல்லிடீங்களே… 🙂

    (நம்ம மக்கள் கேனையனா இருக்கற வரைக்கும், ரஜினி, சத்யராஜ் எல்லோரும் இப்படி தான் காமடி பண்ணிட்டு இருப்பாங்க)

  40. //சரி தொலஞ்சு போ, நீ தயாரிச்ச “லீ” படத்திலயாவது ஒரு தமிழ் பொண்ண நடிக்க வச்சிருக்கலாம்ல அதுவும் கிடையாது நிலானு டெல்லி பொண்ண கூட்டிட்டு வந்தாரு இந்த புரட்சி தமிழன்.//

    அவரு திரைப்படத் தொழிலையும் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை.

  41. //அவரு திரைப்படத் தொழிலையும் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை.//

    இது ரஜினிக்கும் பொருந்தும் தானே.

  42. //இளவேனில் said…
    கிரி இவர அசிங்கமா திட்டனும் போல இருக்கு நாகரிகம் கருதி.. நான் இதோட நிறுத்திகறேன் …//

    சக்தி நாம யாரையும் அசிங்கமா திட்ட தேவை இல்லை, அதற்க்கு அவசியமும் இல்லை. திட்டினவங்க பாருங்க இப்ப தானே அசிங்க படுறாங்க.

  43. நான் உங்களுக்கு முழு ஆதரவு (அத வெச்சு ஆனா ஒன்னும் பண்ண முடியாது :-)) தரேன்.
    ரஜினி செஞ்சது சரியா தவறா அப்படிங்கறது முக்கியம் இல்ல ,
    இதை விட கேவலமா சதயராஜ் நடந்துக்க முடியாது. பரபரப்பா பெசனும்கரதுக்காக
    ஏதாவது உளறுவது அவரு வேலை.உடனே அடுத்த படத்துல ரஜினிய தாக்கி
    ஒரு டைலாக் விடுவாரு. இதெல்லாம் ஒரு பொழப்பா?

    முதல்ல தன்னோட பின்னாடி சுத்தமா இருக்கனு பாத்துட்டு அடுத்தவன்
    போடும் குப்பைய சுத்தம் பண்ணனும்.

  44. //எனக்கு என்ன ஆச்சர்யம்னா பா ம க பெரிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கேப்டன் வாயே திறக்கவில்லை. //

    அவங்கள்லாம் செத்த பாம்ப அடிக்க வேண்டாம்ன்ணு விட்டிருப்பாங்க .

    http://cdjm.blogspot.com/2008/08/blog-post.html

  45. //வெண்தாடிதாசன் said…
    சத்தியராஜ் தொலைக்காட்சிகளின் முன் அப்படி பேசி இருக்காவிட்டால் உங்கள் தலீவர் உண்ணாவிரதத்திற்கு வராமல் escape ஆகியிருப்பார்//

    வந்தும் அவரை வைத்து பிரச்சனை ஆக்கி விட்டார்கள். சத்யராஜும் கன்னட கலகக்காரர்களை திட்டியதை விட ரஜினியை திட்டியதே அதிகம். இதில் இருந்தே தெரியவில்லையா அவர் எதுக்கு ரஜினியை வர அழுத்தம் கொடுத்தார் என்று.

    பேசினாலும் திட்டுறீங்க, பேசலைனாலும் திட்டறீங்க எதுக்கு வம்பு வராம இருக்கலாம்னு பார்த்தா வம்புக்கு இழுத்து சண்டை போடுறாங்க..என்னமோ போங்க….எதிர்ப்பவர்கள் யாருக்கும் தமிழ் மக்கள் மீது இருக்கும் அன்பை விட ரஜினி மீது உள்ள தனிப்பட்ட கோபமே அதிகம்.

    //எனக்கு தெரிந்த வகையில் நிருபர்கள் நேரிலோ, தொலைபேசியிலோ கருத்து கேட்பார்கள். அதற்கு பதில் வரும்.//

    இருக்கலாம் வெண்தாடிதாசன். நான் சும்மா காமெடி க்காக கூறினேன். நிருபர்கள் பார்த்து இருப்பாங்க..யாரை கேட்டா யோசிக்காம கருத்து சொல்லுவாங்கன்னு சத்யராஜ் தான் நினைவுக்கு வந்து இருப்பாரு..இவங்க பங்குக்கு மன்னிப்பு கேட்டுட்டாருன்னு கூறி இருப்பாங்க இவரும் விசாரிக்காம ரஜினி மேல இருக்கிற காண்டுல வாய கொடுத்து மாட்டிகிட்டாரு.

    //கேட்டால் டைரீக்டர் சொன்னாரு நான் நடித்தேன் என்று டயலாக் உடுவாரோ உங்க தலீவர்//

    ஹா ஹா ஹா

    //இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று அரசியலில் குதிக்கும் தெகிரியம் தான் உள்ளதா.//

    உங்கள் கேள்வி என் மனதிலும் உள்ளது..தேவையில்லாமல் ஏன் இழுக்க வேண்டும் என்று.

    //அதை அப்படியே நம்பி அவரு படத்திற்கு குடம் குடமா பால் ஊத்துவான் ரசிகன்//

    நான் குடம் குடமா பால் ஊத்தும் ரசிகன் இல்லை. ரஜினியை பிடிக்கும் அதற்காக கொடி பிடித்து போவேன் என்று எண்ண வேண்டாம். நான் ரசிகன் வெறியன் கிடையாது.

    //உண்ணாவிரதம் இருந்தது எப்போது? வருத்தம் தெரிவிப்பது எப்போது? இப்போது தான் அவர் பேசியது தவறு என்று புரிந்ததா//

    இதற்க்கு நான் ஒரு விளக்கம் கூறுகிறேன். நாம் ஒரு தவறு செய்யும் போது அது தெரியாது அதை சுட்டி காட்டினாலும் புரியாது. ஆனால் அதே பெரிய பிரச்சனையாக வரும் போது தான் அதனோட வீரியம் புரியும்.அதே நிலையே ரஜினி. ஆனால் அதை கவுரவம் பார்க்காமல் ஒத்துக்கொண்டு வருத்தம் கேட்டு விட்டாரே.

    //நான் சத்தியராஜ் பேசியது சரி என்றோ, அவரை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்றோ நினைக்கவில்லை.//

    நானும் உங்களை அப்படி நினைக்கவில்லை. உங்கள் கருத்தை கூற அதை ஒரு விசயமாக பயன்படுத்துகிறீர்கள் என்னை போல. இதில் என்ன தவறு இருக்க முடியும். நான் இப்படி செய்யும் போது நீங்க செய்ய கூடாதா? நான் மற்றவர்கள் கண்டபடி பதிவு போட்டதால் நானும் போட வேண்டியாதாகி விட்டது. எனக்கும் இதை போட வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர்களை விட நான் நாகரீகமான பதிவே போட்டு இருக்கிறேன்.

    //அனால் அதற்காக அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு ஆடும் அவரின் விசில் அடிச்சான் குஞ்சுகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.//

    அதே சமயம் தேவை இல்லாமல் அசிங்கமாக கீழ் தரமாக பதிவு எழுதியவர்கள் எந்த கணக்கில் வருவார்கள்..வலை தள குஞ்சுகளா? வெண்தாடி தாசன் எனக்கு நீங்கள் கூறும் விசலடிச்சான் குஞ்சுகளுக்கும் இங்கே கீழ் தரமாக யோசிக்காமல் அவசரப்பட்டு பதிவு எழுதிய வலை தள மக்களுக்கும் என்ன வித்யாசம். அவர்கள் கண்மூடி தனமாக ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்கள் கண்மூடி தனமாக எதிர்க்கிறார்கள்.

  46. *** உங்கள் கோபம் எனக்கு புரியுது. அதற்காக அவரை திட்ட வேண்டாமே நாம் அவரை அசிங்கமாக திட்டவே தேவையில்லை, அதற்கான பலனை அவரே அனுபவிப்பார். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.

  47. //ஜோ உங்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு..இதை போல பின்னூட்டத்தை என்ன வென்று எனக்கு சொல்ல தெரியவில்லை. //

    ‘செத்த பாம்பு’ என்பதை நேரடியாக ரஜினியைக் குறிப்பதாக நீங்கள் நினைப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை .மன்னிக்கவும்.

    பா.ம.க-வும் விஜயகாந்தும் ரஜினியை எதிர்ப்பதற்கு ரஜினி ஒரு அரசியல் சக்தியாக உருவாகி விடுவாரோ என்ற பயம் தான் காரணம் ..இப்போது ‘ரஜினியின் அரசியல் எதிர்காலம்’ என்பது ஒரு செத்த பாம்பு .அவ்வளவு தான்.

    மற்றபடி உங்கள் மதிப்புக்கு நன்றி ..அதற்காக விவாதம் செய்ய தயங்க வேண்டாம்.

  48. சைக்கிள் கேப்பில் ஏரோப்பளேன் ஒட்டுவது நீங்கள்தான்.

    ரஜினி மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானவுடன் அனைவரிடம கருத்து கேட்கபட்டபோது அதை எதிர்த்து சொல்லபட்ட கருத்து இது. சரத் முதல் ராஜேந்தர் வரை அதை எதிர்த்தனர். அதை வைத்து கொண்டு சத்தியராஜ் என்ன செய்து கிழித்தார் என்று பதிவு போடுவது …..தலீவரு மன்னிப்பு இல்லை வருத்தம் என்று பல்டி அடித்த பிறகு யாராவது சத்தியராஜிடம் கருத்து கேட்டார்களா?

    சத்தியராஜோ அவரின் அல்லக்கைகளோ அண்ணன் வந்தா தமிழ்நாடு அமேரிக்கா என்று பாடுவதில்லை. சத்தியராஜோ அவரின் விசில் அடிச்சான் குஞ்சுகளோ தலீவர் sound உட்டார்னா எல்லா அரசியல்வாதிகளும் அவுட் என்று துதி பாடுவது இல்லை. சத்தியராஜோ அவரின் எடுபிடிகளோ வருவேண் அனா எப்போது என்று builtup கொடுப்பது கிடையாது.

    ஒகனேக்கல் பிரச்சனைக்காக நடிகர் சங்கம் கூட்டம் நடத்தியபோது உங்க தலீவருக்கு சத்தியராஜ் வைத்த ஆப்பின் காரணமாகதான் இப்படி பதிவு போட்டீர்களோ?

  49. //வாட்டாள் போல ஒரு சிலரால் அவர்கள அனைவருக்கும் கெட்ட பெயர். //

    அண்ணா, உங்க தலீவருக்கு மிகவும் பிடித்த பேச்சாளரை பற்றி இப்படி சொல்லலாமா?

  50. திரு. கிரி அவர்களே,

    ரஜினியின் பால் உங்களுக்கு இருக்கும் அன்பு மற்றும் விசுவாசத்தின் காரணத்தை கூறமுடியுமா ( முடியும் எனும் பட்சத்தில் ) ?

    எனக்கும் ஒரு திரைப்பட நடிகனுக்குமன உறவு திரை அரங்கத்தோடு முடிந்து விடுவதாகவே எண்ணுகிறேன். அதனால்தான் புரியாமல் கேட்கிறேன்.

  51. சிவாஜி படம் வரை கதைக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறினரே?
    அது தனது ரசிகனுக்காக சொல்லப்பட்டது என்று நினைக்கிறீர்களா?

  52. //இல்ல தெரியாம தான் கேட்கிறேன்..ஒருத்தரை பிடிக்கும் என்று கூறினால் அது வாழ்நாள் முழுமைக்கும் பொருந்துமா? //

    அண்ணே, நம்ம சமாச்சாரம் எப்படி?

  53. அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகரே,
    தினம் தினம் எத்தனையோ போலி சாமி களி திங்கப் போறான். காம கேடி களி தின்னப்ப மட்டும் ஏன் பட்டாசு கொளுத்தி கொண்டடாடுனாங்க?

    கூத்தாடிகளின் அசிங்கங்கள் நாடு அறியாதது அல்ல. ரஜினி மட்டிகிட்டதும் ஆளாளுக்கு சுளுக்கு எடுக்க கிளம்பறது எதுக்கு? பா.ம.க எதிர்ப்பு நிலையிலும் திருமா வளவன ஆதரிக்க மனசு இல்ல. பா.ம.க கூட இருந்து ஆப்படிச்ச இளங்கோவன் பண்டாரக் கட்சிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி வந்தாலும் ஆதரவு. இதுதான் இந்தாளோட உன்மை முகம்.

    ——————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)

  54. நல்லா சொன்னீங்க கிரி, தமிழ் நாட்டுல இவரு படம் ஓடுறதே அதிகம்… புரட்சி தமிழன்னு பட்ட கொடுத்திட்டா, பெருசா தமிழ் மக்களுக்கு இவரு நல்லது பண்ணாத அர்த்தமா.. இல்ல நான் தெரியமா தான் கேட்குறேன் இவரு என்ன கிழிசிடாருனு தெரியல.. இவரு தமிழன் தானே ஏன் உச்ச நட்சத்திரம் ஆகல .. எல்லாம் வயத்தெரிச்சல் …மேடைல மட்டும் வாய் கிழிய வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு பேச வேண்டியது…
    கிரி இவர அசிங்கமா திட்டனும் போல இருக்கு நாகரிகம் கருதி.. நான் இதோட நிறுத்திகறேன் …

  55. //ஹா ஹா சத்யராஜ் ரஜினிக்கு ஆப்பு வைக்கிறதா!..அட ஏங்க நீங்க வேற..அவரு தன்னுடைய மனதில் உள்ள அழுக்கை எல்லாம் கேவலமான வார்த்தைகளால் அனைவரும் கூறி இருக்கும் பொது மேடையில் அப்படி கூறி தீர்த்துக்கொண்டார்.அவ்வளோ தான்.//

    நான் குறிப்பிட்டது உண்ணாவிரதம் நடப்பதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் நடந்தது. சத்தியராஜ் தொலைக்காட்சிகளின் முன் அப்படி பேசி இருக்காவிட்டால் உங்கள் தலீவர் உண்ணாவிரதத்திற்கு வராமல் escape ஆகியிருப்பார்.

  56. //அப்போதும் யாரும் அவரிடம் கேட்கவில்லை அவரே தான் சொன்னாரு.//

    அப்படியா எல்லோரும் பத்திரிக்கைகளுக்கு தங்கள் கருத்தை யாரும் கேட்காமலே கொடுத்து அனுப்பினார்களா. இது புதிய செய்தி. எனக்கு தெரிந்த வகையில் நிருபர்கள் நேரிலோ, தொலைபேசியிலோ கருத்து கேட்பார்கள். அதற்கு பதில் வரும்.

    //அதுக்கு ரஜினி என்னங்க பண்ணுவாரு //

    வருவேன்… எப்போ வருவேன்… எனக்கு இருக்கும் கூட்டம் …என்று பிலிம் காட்டாமல் இருக்கலாமே. கேட்டால் டைரீக்டர் சொன்னாரு நான் நடித்தேன் என்று டயலாக் உடுவாரோ உங்க தலீவர்.

    இதை எல்லாம் விட்டு தள்ளுங்கள். அரசியல் செய்ய எனக்கு தெரியாது. அரசியலில் நான் இறங்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்கும் நல்ல உள்ளம் இருக்கா அவருக்கு. அல்லது கேப்டன், சரத் போன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று அரசியலில் குதிக்கும் தெகிரியம் தான் உள்ளதா.

    தன் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது voice உடுவாரு அவரு. உடனே அதை அப்படியே நம்பி அவரு படத்திற்கு குடம் குடமா பால் ஊத்துவான் ரசிகன்.

    உண்ணாவிரதம் இருந்தது எப்போது? வருத்தம் தெரிவிப்பது எப்போது? இப்போது தான் அவர் பேசியது தவறு என்று புரிந்ததா?

    சற்று யோசியுங்கள். நான் சத்தியராஜ் பேசியது சரி என்றோ, அவரை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்றோ நினைக்கவில்லை.

    ரஜினி ஒரு சிறந்த entertainer. அதில் எந்த சந்தேகம் இல்லை. அனால் அதற்காக அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு ஆடும் அவரின் விசில் அடிச்சான் குஞ்சுகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

  57. //*** உங்கள் கோபம் எனக்கு புரியுது. அதற்காக அவரை திட்ட வேண்டாமே நாம் அவரை அசிங்கமாக திட்டவே தேவையில்லை, அதற்கான பலனை அவரே அனுபவிப்பார். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.//
    :))))))))))இது எனக்கான பதிலா? ;))

  58. HI Kiri

    Sathiya Raj act many good film

    you are not seen before that?

    1.Mudhal Mariyathai

    2.Pakkal Kanavu

    3.I forgot one Bharathi Raja film he act as village Leader his son was Raja He love Iyer girl act Amala what a wonderful film sathiya raj life.

    4.Cinnapa Doss Roll ver well

    5.and your leder act Mr.Brath still many people love that film sathiyaraj role.

    I give many film like this life carrier sathiyaraj..

    and Rajini also good actor in 1975 to 1985. but after that he give many massala film it was the same one line story

    He is poor and play one song next he is very very Rich like that story ………. bore ya kiri

    we expect well Role as is age.

    But one thing Sathiya Raj is not ordinary hero or villan but he is Tamilan so I support him

    Puduvai siva.

  59. //Affrin
    அதெல்லாம் இருக்கட்டும்….
    குசேலன் – இன்னொரு பாபா? //

    Affrin உங்கள் முதல் வருகைக்கு நன்றி. குசேலன் பாபா ஆனால் ஆகட்டும், உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.

  60. //Puduvai Siva 🙂 said…
    But one thing Sathiya Raj is not ordinary hero or villan but he is Tamilan so I support him//

    சிவா ரொம்ப நாளா ஆளை காணோம்.

    சத்யராஜ் நல்ல நடிகராக இருக்கட்டும் ஆனால் என்னுடைய கேள்வி ரஜினியை திட்டும் இவர்.. தமிழுக்காக மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்காகவும் என்ன செய்தார், அதை கூறுங்கள்.

    ரஜினியை எதிர்ப்பதாலும் தமிழன் என்பதாலும் மட்டுமே ஒருவர் சிறந்தவரா? அவர் என்ன தவறு செய்தாலும்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  61. //கயல்விழி said…
    நல்ல பதிவு கிரி. 🙂 இந்த சத்யராஜை எல்லாம் சீரியசா நினைக்கும் மக்களை சொல்லனும்!//

    இவர்கள் சத்யராஜை சீரியஸ் ஆக நினைக்கும் காரணம் இவர் ரஜினியை எதிர்க்கிறார் என்ற ஒரு காரணம் தான். ரஜினியை எதிர்க்கும் எவரும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர்களுக்கு இவர்கள் ஆதரவு உண்டு. பெயரில் மட்டும் புரட்சி தமிழன் ஆனால் தமிழுக்காக ஒரு தும்பை கூட செய்தது இல்லை.

    இவர்கள் ரஜினியை எதிர்ப்பதாக நினைத்து இவரை எல்லாம் ஆதரிக்கிறார்கள். இதில் இருந்தே இவர்கள் நிலை தெரிகிறது. பிரச்சனை ரஜினி யா இல்ல தமிழா என்று.

    உங்கள் வருகைக்கு நன்றி கயல் விழி.

  62. //இவர் கூறிய வார்த்தைகள் ரஜினி அவர்களை புண்படுத்தியிருக்கலாம் ஆனால் பாதிப்பு சத்யராஜிற்கு மட்டுமே.//

    அதில் மாற்றமே இல்லை. ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு வேண்டும் என்றால் மகிழ்ச்சியை அளிக்கலாம் 🙂

  63. கருத்து சுதந்திரம் என்பது நமக்கு கிடைப்பதால் நமக்கு தோன்றியதை எந்த இடத்திலும், எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது இல்லை. நாம் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பும் அர்த்தமும் இருக்கின்றது. ஒரு பொது வாழ்க்கை என்பது நமை பார்த்து பலர் பின் பற்றுவார்கள் என்ற எண்ணம் அடி மனதில் ஆழமாக இருக்க வேண்டும்.
    சத்யராஜ் அவர்கள் மேடை பேச்சில் வல்லவராக இருக்கலாம், அப்படி இருப்பவரின் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தாமல் இருக்குமேயானால் அவருக்கு என்று ஒரு இடம் அனைவரின் மனதிலும் வந்து அமரும். ஆனால் மேடைகளில் பேசும்போது பிறரை இழிவுபடுத்தி பேசி அந்த நேரத்திற்கு கைதட்டுகள் வாங்குவதற்கு மட்டுமே உதவும், வேறு வகைகளில் அவருக்கு உதவாது.
    இவர் கூறிய வார்த்தைகள் ரஜினி அவர்களை புண்படுத்தியிருக்கலாம் ஆனால் பாதிப்பு சத்யராஜிற்கு மட்டுமே.

  64. Rajini avargal mannipo/thelivurayo therivithadhu sariye. Kalam thazhthiya thelive ingu vimarsikka padugiradhu. Idhu oru sandharpa vadha mudivenre thondrugiradhu. Kuselan padathukaga ippadioru marumozhi enre thondrugiradhu. Kuselan enroru padam vandhirukka vittal Rajini avargalin marumozhiyum vandhirukkadhu enre thondrugiradhu.

  65. ****////Indian said…
    அண்ணே, நம்ம சமாச்சாரம் எப்படி?//

    புரியவில்லை.
    // ****

    //இல்ல தெரியாம தான் கேட்கிறேன்..ஒருத்தரை பிடிக்கும் என்று கூறினால் அது வாழ்நாள் முழுமைக்கும் பொருந்துமா? //

    ரஜினிக்குப் பிடித்த வாட்டாள் பற்றிய கருத்திற்கு மேற்கண்டவாறு பதில் சொன்னீர்கள். நான் கேட்டது ரஜினியின் பால் உங்களுக்கு இருக்கும் அன்பும் அது போலவா? இல்லை இது என்றும் மாறாத பந்தமா என அறியவே.

  66. //Rengarajan said…
    Rajini avargal mannipo/thelivurayo therivithadhu sariye. Kalam thazhthiya thelive ingu vimarsikka padugiradhu//

    சரியாக சொன்னீர்கள்.

    //Idhu oru sandharpa vadha mudivenre thondrugiradhu.//

    நாம் ஒரு தவறு செய்தாலும் அப்போது அதை உணர முடியாது, அது ஒரு பெரிய பிரச்சனையாக வரும் போது தான் அதன் அளவு தெரிகிறது. அந்நிலையே ரஜினிக்கு ஏற்பட்டது என்று கருதுகிறேன். இந்த பிரச்சனைக்கு காரணமே முதலில் ரஜினி வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிய போது படம் வெளியிட அனைவரும் ஒத்துக்கொண்டார்கள். அதை நம்பி பட வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன, டிக்கெட் முதல் கொண்டு விநியோகிக்கப்பட்டன. ஆனால் கடைசியில் வாட்டாள் நாகராஜ் பிரச்சனை செய்ததாலேயே இத்தனை பிரச்சனைகளும்.

    ரஜினி மீதும் தவறு உள்ளது, பேட்டி கொடுக்கும் போது தெளிவாக பேசி இருக்க வேண்டும், ஒரு வேளை இந்த அளவுக்கு பிரச்சனை ஆகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ. அவர் தாமதாக விளக்கி கூறுவதற்குள் போதுமான சேதம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. இதை ரஜினி ஒரு விலை உயர்ந்த அனுபவமாக எடுத்து கொள்வதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை. அனுபவமே வாழ்க்கை.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி நாகராஜன்.

  67. //Indian said…
    ரஜினிக்குப் பிடித்த வாட்டாள் பற்றிய கருத்திற்கு மேற்கண்டவாறு பதில் சொன்னீர்கள். நான் கேட்டது ரஜினியின் பால் உங்களுக்கு இருக்கும் அன்பும் அது போலவா? இல்லை இது என்றும் மாறாத பந்தமா என அறியவே.//

    ஏங்க இந்தியன்! ரஜினி என்ன எங்க வீட்டுல ஒருத்தரா எப்போதுமே பிடித்து இருக்க. என் அம்மா அப்பா மற்றும் என் குடும்பத்தினர் மற்றும் என் உயிர் நண்பர்கள் தவிர்த்து வேறு மற்ற அனைவருமே மாறக்கூடிய நிலை தான்.

    மற்றவர்களை உடன் இருந்து பார்க்கிறேன், ரஜினியை நீங்களும் நானும் ஊடகங்கள் மற்றும் நம்முடைய உத்தேச பார்வையில் பார்க்கிறோம். அந்த பார்வையில் எனக்கு சரியாக படுகிறார் உங்களுக்கு தவறாக படுகிறார் அவ்வளவே. எனக்கு என் மனசாட்சிக்கு அவர் தவறாக பட்டால் உங்களை விட அதிகமாக வெறுப்பேன். ஆனால் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்பவனல்ல.

    இந்தியன், ரஜினி ரசிகன் என்ற வெறியோடு இருப்பவனால் உங்களுக்கு மற்றும் மற்றவர்களுக்கு பொறுமையாக பதில் கூற முடியாது. இத்தனை பின்னூட்டங்களும் வராது. நான் எப்போதும் தரம் தாழ்ந்து பேசுவதில்லை. அதனாலேயே கோபத்துடன் என்னிடம் வாக்குவாதம் செய்யும் பலர் கூட முடிவில் நண்பர்களாவே செல்கிறார்கள்.

    எனவே நீங்களும் எனக்கு ஒரு நண்பர் தான் ரஜினியை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் 😉

  68. அன்றிலிருந்து இன்று வரை தான் கொண்ட பகுத்தறிவுக்கொள்கையின் பால் மிகுந்த பிடிப்புக்கொண்டவர் சத்யராஜ்……

    தான் சார்ந்த சூழலையும் , தன் வயதையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வேடங்களில் தன்னை மாற்றிக்கொண்டவர் சத்யராஜ்……அவர் தன் இனத்தின்பாலான தன் உணர்வுகளை எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளார்…..

    அவரையும் சற்றேறக்குறைய அரை கிறுக்கனான ரஜினியையும் ஒப்பிடுவது முட்டாள்தனம்!!!

    ரஜினியை விமர்சிக்க எந்தத்தகுதியும் வேண்டியதில்லை…..

    ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுக்கும் தமிழினத்தை சார்ந்தவன் என்ற தகுதி போதும்!

    ! அந்தத்தகுதி இன்றைக்கு அடுத்த முதல்வர்கள் என்று கூக்குரலிடும் விஜயகாந்த , சரத்குமாரை விட நிறையவே இருக்கிறது!!!!!!

    ஆகவே , ரஜினியின் அடிப்பொடிகள் கதவைச்சார்த்தட்டும்…..கொஞ்சம் காத்தாவது வரும்!!!

  69. //தான் சார்ந்த சூழலையும் , தன் வயதையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வேடங்களில் தன்னை மாற்றிக்கொண்டவர் சத்யராஜ்//

    அப்படியா !!!!!!!

    //ரஜினியின் அடிப்பொடிகள் கதவைச்சார்த்தட்டும்…..கொஞ்சம் காத்தாவது வரும்!!! //

    கதைவை சாத்துனா எப்படிங்க காற்று வரும்?

    சரிங்க என்னமோ சொல்றீங்க…உங்கள் அளவுக்கு எனக்கு பகுத்தறிஞ்சு பார்க்க தெரியல, உங்கள் வருகைக்கு நன்றி.

  70. //chika said…
    Giri…Satyaraj Character ye SUmar 40 varushama Purimjika mudilaye…:-)//

    ஹா ஹா ஹா சொன்னா என்னை குத்தம்னு சொல்றாங்க… என்ன கொடுமை சார் இது :-)))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி chika

  71. //தான் சார்ந்த சூழலையும் , தன் வயதையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வேடங்களில் தன்னை மாற்றிக்கொண்டவர் சத்யராஜ்//

    அப்படியா !!!!!!!///

    ஆமாம்…
    அதிலென்ன சந்தேகம் ???

    பெரியார் , ஒன்பது ரூபாய் நோட்டு , குருஷேத்திரம் இன்னும் பல திரைப்படங்கள் அதற்கான சாட்சிகள்…

    நிற்க ,
    சத்யராஜுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல…..

    ரஜினியும் , சத்யராஜும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர் என்பதே என் வாதத்தின் உள்ளாக்கம்!

  72. //மதிபாலா said…
    ரஜினியும் , சத்யராஜும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர் என்பதே என் வாதத்தின் உள்ளாக்கம்!//

    நீங்கள் கூறுவது சரி தான் மதிபாலா, இருவரும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

  73. வணக்கம் பிரபாகரன் உங்களின் இல்லாத பின்னூட்டத்திற்கு முதலில் என் நன்றி.

    எனக்கும் ஞானியின் ஒரு சில கருத்தில் உடன்பாடு உண்டு. ரஜினியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவன் அல்ல. உலகில் அனைத்துமே சரியான நபர் என்று எவருமே கிடையாது. காந்தியையே விமர்சிப்பவர்கள் நிறைய உண்டு. அப்படி இருக்க ரஜினி ஒரு பொருட்டே இல்லை.

    நான் கேட்பது ரஜினி என்ன தமிழ்நாட்டின் பிரதிநிதியா, இல்லை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியா, ஏன் அனைவரும் அவரை போட்டு காய்ச்சுகிறார்கள். இவர்கள் அனைவரும் கூறுவதை பார்த்தால் ரஜினி ஒருவர் மட்டுமே தவறு செய்வது போலவும், மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வது போலவும் பேசுகிறார்கள் விமர்சிக்கிறார்கள்.இதற்க்கு பெயர் தமிழ் மீது உள்ள பற்றா இல்லை ரஜினி மீது உள்ள வெறுப்பா?

    ரஜினி செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி பேசவில்லை. தமிழ்நாட்டில் ரஜினி மட்டுமே தவறு செய்வது போல ஒவ்வொரு முறையும் பலர் கூறவதை ஏற்று கொள்ள முடியவில்லை.அதுவும் குறிப்பாக காவிரி பிரச்சனை வரும் போதெல்லாம் ரஜினி தலை உருட்டப்படுகிறது. ரஜினி கர்நாடகாவில் இருந்து வந்ததாலேயே அனைத்துக்கும் அவர் தான் பொறுப்பா? இது என்ன நியாயம்?

    ரஜினி பாபா படம் நஷ்டம் அடைந்த போது பல கோடிகளை திருப்பி கொடுத்தவர், அப்படியிருக்க பணத்திற்காக ரஜினி மன்னிப்பு கேட்டார் என்றால்? இதற்க்கு என்னிடம் பதில் இல்லை. அப்படியே பணத்திற்காக கேட்டார் என்றால் அந்த பணம் இவருக்கு வர போவதில்லை தயாரிப்பளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தான் போக போகிறது.

    நீங்கள் கூறியது போல ரஜினி தெளிவாக பேசுவதில்லை என்பதில் எனக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதற்குண்டான பலனை அவர் தற்போது பெற்றும் விட்டார். ஆனால் அதற்க்கு அவர் கொடுத்த விலை தான் அதிகம்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி பிரபாகரன்.

  74. வணக்கம் கிரி அவர்களே,

    ரஜனி நல்ல மனிதர் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் ஒரு தெளிவு இல்லாமல் பேசி வம்பில் மாட்டி கொள்கிறார். இது முதல் முறை அல்ல என்பது நீங்கள் அறிந்ததே. இந்த வார குமுதம் வார இதழிலில் வந்த “ஞாநியின் – ஓ பக்கங்கள்” பகுதியை படித்து பார்த்தால் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    “அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

    இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.

    அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.

    முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.

    அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்’ என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.

    ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் – இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

    உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?

    `குசேலன்’ பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.

    பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?’ முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?’

    இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.

    ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.

    இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.

    உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !

    குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.

    (அரசியலுக்கு) “எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்”னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.

    இதற்கான உங்கள் பதில்: “அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று சொல்லுகிறீர்கள்.

    எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.

    அடுத்த பதில் அபத்தமானது. “நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே” என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.

    சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க’ என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.

    அதில் ஆச்சரியம் இல்லை.

    மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே’ முதல் `சந்திரமுகி’யில் வடிவேலு காமெடி வரை….

    மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.

    போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும்.

    அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.

    உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

    சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.

    அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.

    சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.

    அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..

    அன்புடன்
    ஞாநி”

    பிரபாகரன்

  75. Hi Giri,

    I have been going through your blog for quiet some time and I appreciate your openness to face the critics and your efforts to drive them decently.

    As a Rajni fan I am really happy to see this post and I also like your stand that being a Rajni fan is not a foolishness & vice versa.

    Keep it up

  76. //Raj said…
    Hi Giri,
    I have been going through your blog for quiet some time and I appreciate your openness to face the critics and your efforts to drive them decently.//

    நன்றி ராஜ். நாகரிகமான விவாதத்தையே நானும் எதிர்பார்க்கிறேன். நாம் பேசுவதை பொறுத்தே மற்றவர்களும் பேசுகிறார்கள், என்னுடன் விவாதித்தவர்கள் கருத்து வேறாக இருந்தாலும் ஒரு சிலரை தவிர பெரும்பாலனவர்கள் நாகரீகமாகவே தங்கள் கருத்தை கூறினார்கள்.

    //As a Rajni fan I am really happy to see this post and I also like your stand that being a Rajni fan is not a foolishness & vice versa.//

    நன்றி ராஜ் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

  77. // சங்கணேசன் said…
    சதயராஜ் நடிச்சா என்ன நடிக்கலைனா என்னங்க..//

    அவரும் ஒரு திறமையான நடிகர் தான், வில்லத்தனத்தை கூட ரசிக்கும் படி செய்தவர். ஆனால் தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொது மேடையில் காட்டி, பிரச்னையை முழுதாக தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறி தன்னை தானே தாழ்த்தி கொள்கிறார்.

    //ஒரிஜினல் போஸ்டில் மிஸ்ஸான மேட்டரெல்லாம் பின்னூட்டத்தில் பின்னி எடுத்தாச்சு//

    ஹா ஹா ஹா உண்மையில் இந்த பதிவே எனக்கு போட விருப்பம் இல்லை, ஆளாளுக்கு இது தான் சமயம் என்று ரஜினியை படு கேவலமாக விமர்சித்த போது பொறுமையிழந்து போட்டது இது, அப்ப கூட மற்றவர்களை போல கீழ் தரமான வார்த்தைகளை பயன்படுத்தாமல், நான் கேட்க நினைத்த கேள்விகள் பலதை நாகரிகம் கருதி கேட்காமல் பதிவிட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி சங்கணேசன்

  78. ஹாய் கிரி

    ரஜினியைப்பற்றி உங்கள் கருத்துதான் எனுடையதும்..
    ..
    சினிமானாலே எனக்கு ரஜினி & இளையரஜா இவங்கதான் நினைவுக்கு வராங்க..அப்புறம்தான் கமலும் மணிரத்னமும்கூட…
    ..
    சதயராஜ் நடிச்சா என்ன நடிக்கலைனா என்னங்க..
    ..
    ஒரு தமிழானாக நான் சத்யராஜிடம் ஒரு வேண்டுவது… தயவு செய்து இனி தமிழ் படத்தில் நடிக்காதீங்கண்ணா…போதும் உங்க சேவை…..
    ..
    ஒரிஜினல் போஸ்டில் மிஸ்ஸான மேட்டரெல்லாம் பின்னூட்டத்தில் பின்னி எடுத்தாச்சு…

  79. //தீரன் said…
    என்னதான் நீங்க நம்ம ஊர்கார பயலாக இருந்தாலும், புரட்சி தமிழனை போயும் போயும் ஒரு துரோகிக்காக இகழ்ந்துல்லதை வன்மையாக கண்டிக்கறேன்//

    வாங்க தீரன் எப்படி இருக்கீங்க! ரஜினிய (கூடவே என்னையும்) திட்டுறதுக்கு மட்டும் தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்க ..அப்பப்ப வாங்க 🙂

    ரஜினி அப்படி என்னங்க துரோகம் பண்ணிட்டாரு? நம்ம நாட்டை பாகிஸ்தானுக்கு காட்டி கொடுத்துட்டாரா! இல்ல ராணுவ ரகசியத்த திருடி வித்துட்டாரா! இல்ல எவன் சொத்தையாவது மிரட்டி எழுதி வாங்கிட்டாரா!

    //ரஜினி திரைப்படத்துரைக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ( செய்த நன்மைகள் ( எதாவது இருக்கா?) இருந்த சொல்லவும்..)…//

    ரஜினி திரைப்படத்தால பல குடும்பங்கள் சம்பாதித்து இருக்கு, பல தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதித்து இருக்காங்க, தமிழ் திரைப்படத்தை உலக அளவில் பிரபலப்படுத்தி இருக்கிறார். வட மாநிலத்தார் நம்மை இளக்காரமாக நினைத்து இருந்ததை மாற்றி வட மாநில பத்திரிக்கைகள் தமிழ் திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்படி தன் சிவாஜி படத்தின் மூலம் செய்து இருக்கிறார். தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தீமை எதுவும் செய்துவிடவில்லை என்று தெரியும்.

    //செய்ததை விட சத்யராஜ் எள்ளளவும் குறைந்து போகவில்லை//

    சரி! சத்யராஜ் தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன செய்தார் அதை சொல்லுங்க?

    //குறைந்த சம்பளம் வாங்குவதால் கருத்தில் ஒன்றும் சத்யராஜ் குறைந்து போகவில்லை.//

    ஆபாச கருத்திலா :-)))

    //இத்தன கோடி சம்பளம் வாங்கியும் தயாரிப்பாளர் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ள நினைக்கும் பணப்பித்து புடித்த ரஜினியை //

    என்னது தயாரிப்பாளர் மீது பழி போட்டா! அவ்வ்வ்வ்வ்வ் தீரன் இது உங்களுக்கு ஓவரா தெரியல..ரஜினியால் வாழ்ந்த தயாரிப்பாளர்களே உண்டு அழிந்தவர்கள் என்று யாரும் இல்லை. தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் (பட தயாரிப்பாளர் ரஜினி கிடையாது) பணம் கொடுத்தவர் மற்றும் பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சி எடுத்தவர். படம் முடிந்தால் அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கும் நடிகர்களிடையே முன்னின்று பிரச்னையை தீர்த்து வைத்தவர்.

    //நியாயமாக சாடியிருக்கிறார் தன்மான தமிழன்//

    அது சரி!

    //எத்தனையோ வித்தியாசமான வேடங்களில் சத்யராஜ் நடித்து பட்டய கிளப்பியுள்ளார்//

    மறுக்கவில்லை

    //சொல்லப்போனால் ஒன்பது ருபாய் நோட்டக்காகவும் , பெரியருக்கும் அவருக்கு தேசிய விருது குடுத்திருக்க வேண்டும். வெறும் மசாலா படங்களை தந்தும், காவிரி, தாய்ப்பால், பசும் பால், தங்ககாசு என்றும் ஏமாத்துவதை விட நல்ல திரைபடங்களை தந்துள்ளார்.கடலோர கவிதைகள், வால்டேர் வெற்றிவேல், வேதம் புதிது போன்ற நிறைய நல்ல படங்களையும் தந்துள்ளார்//

    மறுக்கவில்லை அதே சமயம் ரஜினியும் சத்யராஜை விட பல நல்ல படங்களை கொடுத்தவர் தான். இல்லை என்றால் என்றோ காணாமல் போய் இருப்பார்.சரி சத்யராஜ் இப்ப தந்துட்டு இருக்கிறது எல்லாம் (சமீப பெரியார் ஒன்பது ருபாய் நோட்டு தவிர்த்து) மசாலா படம் இல்லாமல் பிரியாணி படமா? 🙂

    //தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எத்தனை பலகைகள் வைத்தாலும் நமக்கு புத்தி வராது !//

    இத்தனை கூறி என்னை திட்டிட்டீங்க அப்புறம் என்ன மறைமுகமா நமக்கு புத்தி வராதுன்னு சொல்றீங்க உனக்குன்னு என்னையே சொல்ல வேண்டியது தானே..உங்களை தப்பா நினைக்க மாட்டேன் 🙂 சத்யராஜ் செய்வது சரின்னு சொல்கிறவன் தான் தமிழன் என்றால் அந்த மாதிரி தமிழனா இருக்க எனக்கு விருப்பம் இல்லைங்க.

    கடைசி வரைக்கும் யாருமே புரட்சி தமிழன் தமிழுக்காக என்ன செய்தார்னு சொல்லவே மாட்டேங்குறீங்க 🙂

    உங்கள் வருகைக்கு நன்றி தீரன்.

  80. //Bleachingpowder said…
    கிரி, ஆனாலும் உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி//

    ஹா ஹா ஹா உண்மையாகவே எனக்கு பொறுமை ஜாஸ்திதாங்க. அதுவும் இல்லாம பதிவ போட்டுட்டு பதில் கூறாம இருந்தா எப்படிங்க! நம்ம கருத்தை கூற நமக்கு உரிமை இருப்பது போல அவங்க கூறுகிறார்கள் எனக்கு எதுவும் தவறாக தோன்றவில்லை. புரட்சி தமிழன் சத்யராஜ் மாதிரி ஆபாசமா கேட்காத வரைக்கும் சந்தோசம் :-)))

    உங்கள் வருகைக்கு நன்றி ப்ளீச்சிங் பவுடர்.

  81. என்னதான் நீங்க நம்ம ஊர்கார பயலாக இருந்தாலும், புரட்சி தமிழனை போயும் போயும் ஒரு துரோகிக்காக இகழ்ந்துல்லதை வன்மையாக கண்டிக்கறேன். ரஜினி திரைப்படத்துரைக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ( செய்த நன்மைகள் ( எதாவது இருக்கா?) இருந்த சொல்லவும்..)…செய்ததை விட சத்யராஜ் எள்ளளவும் குறைந்து போகவில்லை .

    . குறைந்த சம்பளம் வாங்குவதால் கருத்தில் ஒன்றும் சத்யராஜ் குறைந்து போகவில்லை. மாறாக இத்தன கோடி சம்பளம் வாங்கியும் தயாரிப்பாளர் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ள நினைக்கும் பணப்பித்து புடித்த ரஜினியை நியாயமாக சாடியிருக்கிறார் தன்மான தமிழன்.

    எத்தனையோ வித்தியாசமான வேடங்களில் சத்யராஜ் நடித்து பட்டய கிளப்பியுள்ளார். சொல்லப்போனால் ஒன்பது ருபாய் நோட்டக்காகவும் , பெரியருக்கும் அவருக்கு தேசிய விருது குடுத்திருக்க வேண்டும். வெறும் மசாலா படங்களை தந்தும், காவிரி, தாய்ப்பால், பசும் பால், தங்ககாசு என்றும் ஏமாத்துவதை விட நல்ல திரைபடங்களை தந்துள்ளார்.

    கடலோர கவிதைகள், வால்டேர் வெற்றிவேல், வேதம் புதிது போன்ற நிறைய நல்ல படங்களையும் தந்துள்ளார்.

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எத்தனை பலகைகள் வைத்தாலும் நமக்கு புத்தி வராது !

  82. //தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எத்தனை பலகைகள் வைத்தாலும் நமக்கு புத்தி வராது !//

    மண்ணாங்கட்டி. தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து சொல்ல, நம்ம என்னத்த இங்க கிழ்ச்சிட்டோம். நம்ம என்ன பெட்ரோல கண்டுபிடிச்சமா இல்ல கரண்ட கண்டுபிடிச்சமா, ரயில கண்டுபிடிச்சமா இல்ல எய்ட்சுக்கு மருந்த கண்டுபிடிச்சமா. நல்ல பழைய சோத்தையும் ஊறூகாய்யும் வக்கனையா தின்னுட்டு வேலை வெட்டி இல்லாதவங்க எல்லாத்தை ஒன்னா கூப்பிட்டு கல் தோண்றி முன் தோன்றானு ஆரம்பிச்சுடுவாங்க.

    என் பொண்டாட்டி கூட படுத்தா உனக்கென்ன அப்படினு மேடையில ஒரு தமிழன் பேசுனதுல அப்படி என்னையா பெருமைய கண்டுடீங்க. இப்படி பேசுறதுதான் தமிழன் கலாச்சாரமா. இதையெல்லாம் கேட்டுட்டு நாங்க தலை நிமிர்ந்து வேற நிக்கனும்மா. நீங்க வேணும்னா நில்லுங்க. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. வரட்டா.

    கிரி, ஆனாலும் உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. எப்படி தான் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வச்சு மாரடடிக்கிறீங்களோ

  83. //கடைசி வரைக்கும் யாருமே புரட்சி தமிழன் தமிழுக்காக என்ன செய்தார்னு சொல்லவே மாட்டேங்குறீங்க :-)//

    என்ன கிரி, இப்படி கேட்டுட்டீங்க! ரஜினியை கன்னாபின்னான்னு எதிர்க்கிறாரே, ஒரு புரிட்சித் தமிழன். அது போதாதா? தவிர திரைப்படங்களில் விவேக், கருணாஸ் செய்ய வேண்டிய காமெடிகளை (மற்ற படங்களை/கதாநாயகர்களை கிண்டல் செய்வது) அவரே செய்கிறாரே!

    Mohan

  84. //மோகன் Mohan said…
    என்ன கிரி, இப்படி கேட்டுட்டீங்க! ரஜினியை கன்னாபின்னான்னு எதிர்க்கிறாரே, ஒரு புரிட்சித் தமிழன். அது போதாதா?//

    ரஜினியை அனைவருக்கும் பிடிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது, ஆனால் இவர்களுக்கு ரஜினி பிடிக்காது என்பதற்காக அவரை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்பதை நினைத்தால் என்னவென்று சொல்வது. சரி! தமிழுக்கு என்ன பண்ணினாருன்னு கேட்டால் ரஜினி போல கெடுதல் எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்ன தமிழை ரஜினி கெடுத்து விட்டாருன்னு எனக்கு தெரியல. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கய்யான்னா அதை விட்டுட்டு தமிழனனுக்கு ஆதரவா குரல் கொடுக்கிறாராம் அது போதாதான்னு கேட்கறாங்க, தமிழ் முன்னேற என்ன செய்தார்னு சொல்லாம! குறைந்த பட்சம் இவர் தயாரித்த படத்துல தமிழ் நடிகைங்கள பயன்படுத்தி இருப்பாரா!

    //திரைப்படங்களில் விவேக், கருணாஸ் செய்ய வேண்டிய காமெடிகளை (மற்ற படங்களை/கதாநாயகர்களை கிண்டல் செய்வது) அவரே செய்கிறாரே!//

    இது விஜயகாந்த் கூறிய மாதிரி படுத்துட்டு மேல பார்த்து எச்சி துப்புறதுக்கு சமம்

    உங்கள் வருகைக்கு நன்றி மோகன்.

  85. //Raj Said
    இந்த வீடியொவ பாருங்க “பல்டி” “புர்சி” அப்படீங்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியும்!
    http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8//

    நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவது சத்யராஜா இல்லை ரஜினியா என்று தெரியவில்லை! ராஜ் நீங்கள் கூறியதில் கொஞ்சம் எடிட் செய்துள்ளேன் மன்னிக்கவும். உங்கள் கோபம் புரிகிறது நாம் அவரை திட்ட வேண்டும் என்பதில்லை, அவரே பொது இடங்களில் கீழ் தரமாக பேசி தன்னை தாழ்த்திக்கொள்கிறார்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  86. 1. தமிழனுக்காக கழுமரம் ஏறுவேன் என்ற க.க! இங்க‌ எத்த‌ன‌பேருக்கு க‌ழும‌ர‌ம் என்றால் என்ன‌வென்று தெரியும்!? ஒரு மியூசிய‌த்திலியாவ‌து பார்த்த‌துண்டா?

    2. இன்த‌ டி.ராஜென்த‌ர், ச‌ர‌த்குமார், ச‌த்திய‌ராஜி, சீமான் இவ‌ங்கெல்லாம் த‌மிழ்த்திரைப்ப‌ட‌த்துறைக்கோ அல்ல‌து த‌மிழுக்கோ அல்ல‌து த‌மிழ‌ர்க‌ளுக்கோ செய்த‌து என்ன‌?

    3. தேச‌ப்பிதா காந்திய‌டிக‌ளைப்ப‌ற்றி சொல்லும் போது ‘Gandhi showed a way out of the madness’ அப்பேர்ப‌ட்ட‌ ம‌கானின் அகிம்சை கொள்கையை விம‌ர்சித்த‌ சொத்தைராஜ் ஒரு ம‌னித‌ பிற‌வியா? அவ‌ன் இந்திய‌னா? த‌மிழ‌னா? அந்த‌ மாதிரி ஒரு கெண‌க்கூவுக்கு ( அவன் பயன் படுத்திய அதே வார்த்தை) இங்க‌ சில‌ர் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான்!

  87. //Raj said
    Dear moderator, pl publish this with or without editing ( as I believe I am not using any vulgur words here)

    ************ தன்னையே விலை கொடுத்து அமைதியை நிலை நாட்டிய ரஜினி என் கண்களுக்கு ஒரு நல்ல MATURED AND GOOD ADMINISTRATOR ஆக தெரிகிறார்! அந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? கர்னாடகாவில் 14 தியேட்டர் வருமானம் பெருசா தமிழ்நாட்டில் 500 தியேட்டர் வருமானம் பெருசா?? இந்தனைக்கும் தயாரிப்பாளர் ரஜினி அல்ல. ரஜினி மீது இருந்த மரியாதை இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது. ‍இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன். என்னைப்பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கும் வரத்தேவையில்லை, புதிதாக வேறெந்த செவையும் செய்யத்தெவயில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல் மதம், மொழி, ஜாதி, மற்றும் பல காரணங்களை கூறி ஜாதி ஒட்டுக்காகவும், வரித்தெரிச்சலுக்காகவும் அப்பாவி பொதுமக்களை பிரித்து , சுரண்டி வாழும் ஈனப்பிறவிகளை விட, அதிகபட்சமாக உலகவாழ் தமிழர்களையும் தமிழர்களல்லாதவர்களையும், இந்தியர்களையும், இந்தியரல்லாதவர்களையும், மனித பிறவிகளையும், ஈனப்பிறவிகளையும் ஒரு மூன்று மணி நேரமாவது இணைத்த ஒரு பாலம் ரஜினி! அது தான் ரஜினி மேஜிக்!! என் உழைப்பால் வந்த பணத்துக்கும் (movie ticket cost)என் மூன்று மணி நேரத்துக்கும் உழைக்கும் வர்கத்துக்கு ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கினை முப்பது வருடமாக‌தந்தமைக்கு திரு.ரஜினி அவர்களுக்கு நன்றி. //

    ராஜ் உங்கள் பின்னூட்டத்தை கொஞ்சம் எடிட் செய்துள்ளேன் மன்னிக்கவும். நாம் யாரையும் திட்ட தேவையில்லை அவர்களே தங்கள் செயல்களால் அவர்களை தாழ்த்தி கொள்வார்கள். நம்முடைய கருத்தை நாகரீகமான முறையில் பொறுமையாக கூறுவதே நமக்கு அழகு. போதுமான அளவிற்கு அளவிற்கு பின்னூட்டம் போட்டு விட்டீர்கள்.

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here