சத்யராஜ் மன்னிப்பும் தக்காளிச் சட்னியும்!

15
Sathyaraj apology சத்யராஜ் மன்னிப்பும் தக்காளிச் சட்னியும்

த்யராஜ் மன்னிப்பு கேட்டது என்  பழைய நினைவுகளைச் சண்டைகளைக் கிளறி விட்டது.

அது ஒரு காலம் 🙂 . 2008 2009 ஆண்டுகள் Blog உலகின் பொற்காலம். அப்படியொரு பரபரப்பு, போட்டிகள், விமர்சனங்கள் என்று தூள் பறக்கும்.

சத்யராஜ் மன்னிப்பும் தக்காளிச் சட்னியும்

இந்தச் சமயத்தில் கர்நாடகப் பிரச்சனையின் போது நடிகர்கள் நடத்திய போராட்ட மேடை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. Image Credit

ரஜினியை தொடர்ந்து விமர்சிக்கும் சத்யராஜ்

சத்யராஜுக்கு ஏன் ரஜினியை பிடிக்காது என்பது எனக்குத் தெரியாது.

அது அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால், எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ரஜினியை மட்டம் தட்டுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.

இது அவர் நடிக்கும் படங்களிலும் தொடர்ந்தது.

ஆனால், இன்று வரை ரஜினி, சத்யராஜை அநாகரீகமாகவோ, மறைமுகமாகவோ ஒருவார்த்தை கூடக் கூறியது கிடையாது.

புரட்சித் தமிழனின் ஆபாசப் பேச்சு

முக்கியத் தமிழ் நடிகர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

ஒவ்வொருவரும் பேசும் போது மரியாதைக்காக ரஜினி பெயரைக் குறிப்பிடும் போது கூட்டத்தில் ஆராவாரம் எழுந்தது.

இது எதோ ஒரு வகையில் சத்யராஜை கடுப்படித்து விட்டது.

இங்க யார் பெயரைக் கூறினால் கைதட்டல் கிடைக்குமோ அதைக் கூறி கைதட்டல் பெறுவதற்கு நான் நாக்கை பிடிங்கிட்டு சாவேன்யா” என்று கூறினார்.

தொடர்ந்து கன்னடர்களைத் திட்டுவது போல “கேன….” என்று ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி ரஜினியை மறைமுகமாகத் திட்டினார்.

சுருக்கமாக, ரஜினியின் மீது இருக்கும் வெறுப்பை இந்த மேடையில் வைத்துத் தீர்த்துக்கொண்டார்.

சம்பந்தம் இல்லாத விஷயத்தைப் பேசமாட்டேன் என்று கூறி முதல் இரு நிமிடங்கள் சம்பந்தம் இல்லாமல் ரஜினியை மறைமுகமாகத் தாக்கிக்கொண்டு இருந்தார்.

பின்னர் மனைவியுடன் படுப்பது பற்றியெல்லாம் கூறி இறுதியில் “முட்டாக்கூ…” என்று என்று கூறி முடித்துக்கொண்டார் புரட்சி தமிழன்.

இதைப் படித்துக்கொண்டு இருக்கும் “ரஜினி” என்றாலே திட்டுபவர்கள் சத்யராஜ் செய்தது நியாயமா என்று மனசாட்சியுடன் யோசித்துப்பாருங்கள்.

தமிழன் எதுக்கு ஐயப்பனை வட மாநில கடவுளை வணங்க வேண்டும்?

இதில் இன்னொன்றையும் கூறினார்,

நம்ம ஊரிலேயே முருகன் போன்ற தமிழ் கடவுள்கள் இருக்கிறார்கள் எதற்கு ஐயப்பன், வடநாட்டுக் கடவுள்களை வணங்க வேண்டும்?

இதெல்லாம் பேசும் போது சத்யராஜ் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருந்தார். தற்போது தெலுங்கு இந்திப்படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

புரட்சி தமிழனாக மேடையில் முழங்கிய சத்யராஜ் என்ன செய்து இருக்க வேண்டும்?!

தமிழனாக இருந்து கொண்டு அடுத்த மாநில மொழியில் நடிப்பதற்கு நாக்கை பிடுங்கிட்டு சாவேன்யா!” என்று கூறி இருக்க வேண்டாமா?! அது தானே நியாயம்.

இவர் முழங்கியதைக் கேட்டுட்டு இருப்பவர்களுக்கு ஒரு நியாயம், தமிழன் தமிழன் என்று முழங்கிய இவருக்கு ஒரு நியாயமா? இது தான் புரட்சியா?!

ரஜினி செய்த தவறு

இந்தச் சமயத்தில் பேச வந்த ரஜினி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார், காரணம் சத்யராஜின் அநாகரீகப் பேச்சு.

ரஜினி தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று இந்த மேடைப்பேச்சு.

கோபம் ஒரு மனிதனை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்பதைத் தெள்ளத்தெளிவாக எனக்கும் புரிய வைத்த சம்பவம்.

ரஜினி தன் பேச்சில் “தண்ணீர் தராத கன்னடர்களை உதைக்க வேண்டும்” என்று கூறி விட்டார்.

அதாவது

வன்முறையில் ஈடுபட்டவர்களை உதைக்க வேண்டும் என்று கூற நினைத்து, கன்னட மக்கள் அனைவரையும் பொருள்படும் படி கூறி விட்டார்.

இது தவறான வார்த்தை பிரயோகம் தான்.

ரஜினியின் விளக்கம்

ரஜினி பேசியதும் தீ போலப் பற்றிக்கொண்டது. இந்தச் சமயத்தில் குசேலன் படம் வெளியாக இருந்தது.

தனது குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்களுக்காகச் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக்கொடுத்த படம்.

இப்படம் பெரிய பட்ஜெட் படமல்ல, அதோடு இது ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படமும் கூட.

வாட்டாள் போன்றவர்கள் ரஜினி மன்னிப்பு கேட்டால் தான் படத்தை வெளியிடுவோம் என்று கூறினார்கள்.

தன் குருநாதர் படம் என்பதாலும், இதில் பலர் பண ரீதியாகச் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் தன்னால் யாரும் நட்டம் அடைய வேண்டாம் என்று தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

"நான் ஒட்டு மொத்தமாகக் கன்னட மக்கள் அனைவரையும் கூறி இருக்கக் கூடாது, வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமே கூறி இருக்க வேண்டும். 
இது எனக்கு ஒரு மிகப்பெரிய படிப்பினையைத் தந்து விட்டது"

என்று கூறினார்.

ரஜினியைப் புரட்டி எடுத்த விமர்சனங்கள்

இதன் பிறகு ரஜினி மன்னிப்புக் கேட்டதாக மிகப்பெரிய பிரச்சனை தமிழகத்தில் ஏற்பட்டு ஏறக்குறைய ரஜினியை ஒருவாரம் ஒருத்தர் விடாமல், ரஜினி ரசிகர்கள் உட்படப் பலர் மிகக்கடுமையாக விமர்சித்தார்கள்.

‘குசேலன்” படம் தனக்குக் கிடைக்காத ஆத்திரத்தில் “சன் தொலைக்காட்சி” இதை மிகப்பெரிய பிரச்சனையாக்கி விட்டது.

Blog ல் ரஜினியை “நாய்” என்றே குறிப்பிட்டுத் தலைப்பு வைத்து எழுதினார்கள்.

அப்போது அனைவரும் எதிர்ப்பு நிலையில் இருந்ததால், இது போன்ற தலைப்புகளைக் கண்டிக்கக்கூட முன்வரவில்லை.

இதெல்லாம் எனக்கு இன்னும் மறக்கவில்லை.

ரஜினிக்கு வந்த தக்காளி சட்னியும் சத்யராஜுக்கு வந்த ரத்தமும்

இந்த நேரத்தில் நம்ம புரட்சி தமிழன் என்ன கூறினார் தெரியுமா?

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்படுத்தி விட்டார்” என்று.

அப்படின்னா ரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி, சத்யராஜுக்கு மட்டும் ரத்தமா! நல்லா இருக்குயா உங்க நியாயம்.

ஒரு மீமில் சத்யராஜ் கூறியது “ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்” என்று குழப்பமான ஒரு அறிக்கையை விட்டு உள்ளார் என்று.

அப்புறம் புரட்சி தமிழன் என்ற பெயர் என்னாவது?!

ரஜினி பேசிய போது “தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்படுத்தி விட்டார்” என்று முழங்கிய சத்யராஜ் தற்போது செய்தது என்ன?

சத்யராஜ் மன்னிப்புக் கேட்டது தவறு என்பது என் கருத்தல்ல.

மிகப்பெரிய பட்ஜெட் படம் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று எப்படிச் சத்யராஜ் நினைக்கிறாரோ அதே போல ரஜினியும் நினைத்துக் கூறி இருக்கிறார் அவ்வளவே!

சத்யராஜ் எப்படி தயாரிப்பாளர் அல்லவோ அதே போலத் தான் ரஜினியும்

 

ரஜினி “குசேலன்” படத்தின் தயாரிப்பாளர் கிடையாது அதோடு அவர் முக்கிய வேடத்தில் நடித்த படமுமல்ல. மிகப்பெரிய பட்ஜெட் படமுமல்ல.

ஒருவேளை படம் வெளியாகவில்லையென்றாலும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து இருப்பார்.

ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை அன்று கூறியது தவறான வார்த்தை பிரயோகம். இதுவே என் எண்ணமும்.

இதனாலே கோச்சடையான் படத்தில் “கோபத்துடன் எழுகிறவன் நட்டத்துடன் அமருகிறான்” என்ற வரியை வைத்தாரோ என்ற எண்ணமும் எனக்குண்டு.

ஆனால், ரஜினி செய்தால் மட்டும் தவறு அதையே சத்யராஜ் செய்தால் தமிழன், புரட்சி என்று சப்பை கட்டு கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

கர்மா

கர்மா இருக்கே.. எத்தனை வருடங்கள் ஆனாலும் விடாது.

ரஜினியை எப்படிப்பட்ட நெருக்கடிக்கு ஆளானாரோ அன்று விமர்சித்த சத்யராஜும் அதே போல ஆகி அதே நிலையைச் சந்தித்து இருப்பது கர்மா விடாது என்பதை உணர்த்தி இருக்கிறது.

அதே போல இன்று சத்யராஜ். வாழ்க்கை எப்படி இருக்கு பாருங்க? 🙂 .

“தமிழன்” என்ன செய்தாலும் சரி!

ரஜினியை மட்டும் விமர்சிப்பவர்கள்  யார் என்று பார்த்தால்,

ரஜினியின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களும், “தமிழனா இருந்தால் ஷேர் செய்யுங்கள்” என்பவர்களும், இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்னும் சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலேயே இருக்கிறாரே என்று வயித்தெரிச்சலுமே காரணம்.

ரஜினியைத் திட்டத் தங்களுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள தமிழன் என்ற ஆயுதம் போதும்.

இன்று வரை அவரவர் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும், அதற்கும் ரஜினியைத் தான் காரணம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினி எப்போதுமே செவுட்டு தவளையாகவே தான் இருக்கிறார். அதனாலே அவர் யார் என்ன கூறினாலும் அவர் உயர உயர சென்று கொண்டே இருக்கிறார்.

எப்படிக் கீழ் இழுக்க முயற்சித்தாலும் அவர் இன்னும் வேகமாகவே செல்கிறார்.

தமிழன்

தமிழ்நாட்டில் தமிழன் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பலர் அடிக்கும் கூத்து இருக்கே..!

எனக்கும் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். என் தளத்தைப் படிப்பவர்கள் அறிந்து இருப்பீர்கள்.

அதற்காகத் தமிழ் என்றாலே அனைத்தும் சரி! எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டாலும் தமிழன் என்ற தகுதி போதும் என்று நினைக்கும் ஆள் அல்ல.

தமிழன் என்றால், அவன் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தாலும், பொது மேடையில் ஆபாசமாகப் பேசினாலும், அநாகரீகமாக நடந்தாலும் சரி எனப்படும்.

தமிழன் என்ற ஒரு காரணத்துக்காக ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் கண்மூடித்தனமாக ஆதரிப்பேன் என்ற நிலைப்பாடு சரியானதல்ல.

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் ஆனால், கண்மூடித்தனமாக அல்ல.

Readஇந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. இதை படிக்கும் போது , எனக்கு தலைவர் “அண்ணாமலை” படத்தில் இடைவெளி குக்குமுன் பேசும் வசனம் தன நினைவுக்கு வருகுகிறது…..

    அடேய் நண்பா உன்னை வெல்வேன் .. சவால் வேண்டாம் உண்மை சொல்வேன் …

    வெற்றி நிச்சயம்…

  2. @Johnian Balakumar. Don’t support Sathyaraj blindly and try put down ரஜினி, even if you guys do like this for decades, your justification will excite only some fringe elements, You guys will fail miserably among the larger public and I have been witnessing these fringe elements for many decades and their pitfall, first try to be good human beings , just because you are a tamilian or a Telugu or a kannadiga you can’t succeed, you should have the required competencies to succeed in any field.

    • முதலில் நதி நீர் அமைப்பிற்கு 1 கோடி ரூபா தருவதாக சொன்னாரே ?
      அது எங்கே என்பதற்கு பதில் சொல்லுங்கள்.

      • முதலில் நதி நீர் திட்டம் எங்கே? மேலும் அவர் ஒரு கோடி ரூபாய் டிடி எடுத்து தந்துவிட்டார் எப்பொழுது அந்த திட்டம் தொடங்கினாலும் அந்த ஒரு கோடி சென்று அடையும்

      • நதி நீர் இன்னும் இணைக்க வில்லை . இணைக்க நதியும் இல்லை நீரும் இல்லை

  3. சத்தியராஜை ஆதரிக்க வேண்டாம் சரி.என்ன காரணத்துக்காக ஆதரிக்க வேண்டாம்?
    அவர் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவை எதிர்த்து பேசினார் விட்டார் என்பதால் தானே?
    அப்போ ரஜினி ஏன் தண்ணீர் தர மாட்டேன் என சொல்லும் கன்னடனை உதைக்க வேண்டும் என கூறினார் ?
    எதற்காக அவரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

    • // சத்தியராஜை ஆதரிக்க வேண்டாம் சரி.என்ன காரணத்துக்காக ஆதரிக்க வேண்டாம்? //

      ம்ம்ம்ம்ம் மேடையில் ஆபாசமாக பேசியதற்காகவும்; பிரச்சனையை விடுத்து தனிநபர் தாக்குதலை செய்ததுக்கும். போதுமா?

  4. என்னம்மா கண்ணு சௌக்கியமா?:
    ================================
    2008 குசேலன் படப் பிரச்சனையின்போது;

    ரஜினிகாந்த்:
    என் படங்களுக்கு கர்நாடகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும் பணம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிக்கக் கூடாது. எனவே, குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக ஒத்துழைப்பு கொடுங்கள்.

    சத்யராஜ்:
    “ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.
    என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”
    &&&&&&&&&&&&&&&

    2017 பாகுபலி பிரச்சனையின் போது:

    சத்யராஜ்:
    பாகுபலி என்ற மிகப் பெரிய படத்தில் மிகச் சிறிய தொழிலாளிதான் நான். ஒருவனின் பெயரை பொருட்டு சொற்களைப் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் கர்நாடகத்தில் வெளியிட பாகுபலி இரண்டாம் பாகம் வாங்கிய விநியோகதஸ்கர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு எனக்கு உள்ளது. இதனை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ரஜினிகாந்த் ரசிகர்கள் : என்னம்மா கண்ணு சௌக்கியமா?
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    இதுதான் தக்காளி சட்னிக்கும் இரத்தத்துக்கும் உள்ள வித்தியாசம்

  5. பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும் போது ஏற்படும் சந்தோஷம். சத்யராஜ் இத்தனை வருடம் கழித்து மன்னிப்பு கேட்கும்போது எனக்கு ஏற்பட்டது.
    அந்த அளவிற்கு பாபா & குசேலன் பட வெளியீட்டின் போது மனம் வருத்தப்பட்டிருந்தது.

    உன்மையிலே விதி வலியது.

  6. நான் எழுத நினைத்து வந்த விசயங்கள் அனைத்தையும் மேலே பலரும் எழுதி விட்டார்கள். ஒரே ஒரு விசயம். சீமான் கூட்டத்தில் ஒரு முறை சத்யராஜ் அவரே சொல்லியுள்ளார். எனக்கும் பல ஆசையுண்டு. ஆனால் வாயைக்கொடுத்து மாட்டிக் கொள்ளவில்லை. என்னால் சிறை வாழ்க்கை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சுக வாழ்க்கை வாழ்ந்து பழகி விட்டேன். சராசரி நபர்கள் போல மனதிற்குள் புழுங்கிக் கொண்டு தான் இருக்கின்றேன் என்றார். என் பார்வையில் சத்யராஜ் செய்தது சரியே. பெரிய அளவில் நடைபெற வேண்டிய வியாபாரம் தன்னால் பாதிப்படையக்கூடாது என்பது தான் முக்கியம். சினிமா உள் நிகழ்வுகள் அதிகம் தெரிந்தவன் முறையில் அதன் லாப நட்டங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மன்னிப்பு கேட்டதால் சத்யராஜ் மேல் உள்ள மதிப்பு எவருக்கும் குறைந்து விடாது.

    • சத்யராஜ்க்கு என்ன மதிப்பு இருக்கு … after 9 yrs he punished ..for his swear speech

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @Ionian Balakumar

    நீங்க ரஜினியை திட்டி வரும் செய்திகள் மட்டும் படித்தால் அப்படித்தான் தோன்றும்.

    ரஜினி அப்போதே ஒரு கோடி ரூபாயை நிரந்தர வைப்பு திட்டத்தில் (FD) சேர்த்து விட்டதாக அவர் அண்ணன் கூறி இருக்கிறார். எப்போது திட்டம் தொடங்குகிறதோ அப்போது கொடுக்கப்படும்.

    “சத்தியராஜை ஆதரிக்க வேண்டாம் சரி.என்ன காரணத்துக்காக ஆதரிக்க வேண்டாம்?”

    அவரின் ஆபாச பேச்சுக்காக. பொது இடத்தில் தனி நபர் தாக்குதல் நடத்தியதற்காக. மற்றவரை விமர்சித்து விட்டு தானும் அதே மன்னிப்பை கேட்டதற்காக.

    ” ரஜினி ஏன் தண்ணீர் தர மாட்டேன் என சொல்லும் கன்னடனை உதைக்க வேண்டும் என கூறினார் ?”

    ரஜினி தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று இந்த மேடைப்பேச்சு. கோபம் ஒரு மனிதனை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்பதைத் தெள்ளத்தெளிவாக எனக்கும் புரிய வைத்த சம்பவம்.

    இதை நான் கட்டுரையிலேயே கூறி இருக்கிறேன், தவறு என்று.

    @காத்தவராயன்

    “பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும் போது ஏற்படும் சந்தோஷம். சத்யராஜ் இத்தனை வருடம் கழித்து மன்னிப்பு கேட்கும்போது எனக்கு ஏற்பட்டது.
    அந்த அளவிற்கு பாபா & குசேலன் பட வெளியீட்டின் போது மனம் வருத்தப்பட்டிருந்தது.

    உன்மையிலே விதி வலியது.”

    அதே! 🙂

    அப்புறம் உங்க பின்னூட்டம் பிரச்சனை இல்லாமல் வந்து விட்டது போல 🙂

  8. @ஜோதிஜி

    “சீமான் கூட்டத்தில் ஒரு முறை சத்யராஜ் அவரே சொல்லியுள்ளார். எனக்கும் பல ஆசையுண்டு. ஆனால் வாயைக்கொடுத்து மாட்டிக் கொள்ளவில்லை. என்னால் சிறை வாழ்க்கை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சுக வாழ்க்கை வாழ்ந்து பழகி விட்டேன். சராசரி நபர்கள் போல மனதிற்குள் புழுங்கிக் கொண்டு தான் இருக்கின்றேன் என்றார்”

    அதாவது யாரை கூறினால் எந்தப் பிரச்சனையும் வாராதோ அவரை கூறி ஆசையை தீர்த்துக்கலாம் அப்படித்தானே!

    ரஜினி இதுவரை தன்னை விமர்சித்தவர்களை எதுவும் கூறியதில்லை.. இது தான் பலரும் தொடர்ந்து அடிக்கக் காரணம்.

    “என் பார்வையில் சத்யராஜ் செய்தது சரியே. பெரிய அளவில் நடைபெற வேண்டிய வியாபாரம் தன்னால் பாதிப்படையக்கூடாது என்பது தான் முக்கியம். ”

    நானும் தவறு என்று கூறவில்லையே!

    சத்யராஜ் மன்னிப்புக் கேட்டது தவறு என்பது என் கருத்தல்ல. மிகப்பெரிய பட்ஜெட் படம் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று எப்படிச் சத்யராஜ் நினைக்கிறாரோ அதே போல ரஜினியும் நினைத்துக் கூறி இருக்கிறார் அவ்வளவே!

    என்று தானே நானும் கூறி இருக்கிறேன்.

    “மன்னிப்பு கேட்டதால் சத்யராஜ் மேல் உள்ள மதிப்பு எவருக்கும் குறைந்து விடாது.”

    இக்கட்டுரை சத்யராஜ் மன்னிப்பு கேட்டதால் அவரின் மதிப்பு குறைந்து விட்டதா என்பது பற்றியல்ல.

    அன்றைக்கு ரஜினி மன்னிப்பு கேட்ட போது விமர்சித்த சத்யராஜ் வாய் இன்று ஏன் மன்னிப்பு கேட்டது?!

    நட்டம் அடையக் கூடாது என்பதற்காக என்றால் அதைத்தானே அன்று ரஜினியும் செய்தார். அப்போது மட்டும் ஏன் ரஜினியை விமர்சித்தார்?

    இதை எல்லாவற்றையும் விட மேடையில் வைத்து ரஜினியை தனி நபர் தாக்குதல் நடத்தியது சரியா? ஆபாசமாக திட்டுவது சரியா?

    அப்புறம் ஜோதிஜி, சத்யராஜ் எல்லாம் ஒரு ஆள் என்று அவருக்கு எல்லாம் மதிப்பு கொடுக்காதீர்கள். தமிழன் என்ற பெயரை கூறிக்கொண்டு அதற்கு சம்பந்தமே இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.

    பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் என்று கூறும் சத்யராஜ் தான் சாதி பெருமை பேசும் படங்களில் நடித்தார்.. ஆனால், ரஜினி ஒரு படம் கூட அது போல நடித்தது கிடையாது.

    தமிழின் பெருமையை பல நாடுகளுக்கு தன் திரைப்படங்கள் மூலம் ரஜினி கொண்டு சென்றுள்ளார்.

    ரஜினி தமிழுக்காக செய்ததில் கால் பங்கு கூட புரட்சி தமிழன் செய்தது கிடையாது ஆனால் பெயர் மட்டும் புரட்சி தமிழன்

  9. Sathyaraj is puratchi tamizhan only. For others what he said as a mistake… Today he did it.
    Its puratchi only.

    Karma is Great. God is Double Great.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!