கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு :-)

48
வலைப்பதிவர் சந்திப்பு

கோவி கண்ணன் எனக்கு எப்படி சிங்கப்பூர் வலைப்பதிவர் சந்திப்பு இடம் வருவது என்று பேருந்து எண் முதல் கொண்டு கூறி விட்டார். Image Credit

வலைப்பதிவர் சந்திப்பு

பின் ஜெகதீசன் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதாக கூறி இருந்தார், இந்த முறையும் வழிகாட்டியாக ஜெகதீசன் தான் இருந்தார் 🙂

நான் வரும் வழியிலேயே, வந்து விட்டதாகவும் காத்து கொண்டு இருப்பதாகக் கைத்தொலைபேசியில் கூறினார். ஜெகதீசன் அவர்களின் பொறுப்புணர்ச்சியை நினைத்து எனக்கு அங்கேயே கண் கலங்கி விட்டது.

பேருந்திலிருந்து இறங்கியவுடன் தயாராக நின்றார்.

நான் கூட அங்கேயும் ரஜினி எதிர்ப்பு பேனர் பிடித்துக் கொண்டு பரப்புரையில் இறங்கி இருப்பாரோ என்று பார்த்தால் எதுவும் இல்லை, நல்லவேளை என்று நினைத்துக் கிளம்பினோம்.

கோவிகண்ணன் ஏற்கனவே வந்து விட்டதாகக் கூறினார், அதனால் அவருடன் நாங்களும் அங்கே சென்று இணைந்து கொண்டோம் உடன் ஜோ வும் இருந்தார்.

பூங்கா

பூங்காவிற்கு கூட்டி போவதாகக் கூறி விட்டுப் பழனி படி கட்டு போல இருக்கும் மலை மேல ஏறச் சொன்னார்.

சரி என்று போனால் போகிறது போகிறது போய்ட்டே இருக்கு எங்கே உட்காருவது என்று தெரியவில்லை, இருந்த ஒரு இடத்திலும் ஒரு காதல் ஜோடி ரொம்ப பிசி.

சரி இந்த இடம் வேலைக்கு ஆகாது என்று இன்னும் மேலே கூட்டிக்கொண்டு போனார். அங்கே யாருமே இல்லை சத்தம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

எனக்குச் சந்தேகம் வந்து விட்டது மூவரும் சேர்ந்து ரஜினி பற்றி நான் சளைக்காமல் எழுதுவதால் எந்தப் பந்து போட்டாலும் இவன் அடிக்குறானே அப்படின்னு டென்ஷன் ஆகி ஓரமா கூட்டிட்டு போய் நொக்க போறாங்க போலன்னு பீதியாகி விட்டது.

அப்புறம் அப்படி எதுவும் அறிகுறி தெரியவில்லை. ‘ஜோ’ பொறுப்பா நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து வந்து இருந்தாரு.

எல்லோரும் பேசிட்டு இருந்த கொஞ்ச நேரத்துல ஜோசப் பால்ராஜ் வந்தாரு வரும் போதே ஒலிம்பிக்ல ஓடுன மாதிரி வேர்த்து போய் வந்தாரு.

ஏம்பா! இவ்வளோ உயரத்துல வைக்கறீங்கன்னுட்டே பேச ஆரம்பிச்சாரு, அடுத்ததாக முகவை மைந்தன் ராம்குமார், அவருடன் அகரம் அமுதா வந்தாங்க.

ஜோசப் பால்ராஜிடம் ‘ஜோ’ தனது விவசாய சந்தேகங்களை எல்லாம் கேட்டுகிட்டாரு.

வரலாறு

அப்புறம் ராம் குமாரும் ஜோசப் பால்ராஜூம் பல வரலாற்று விசயங்களைப் பற்றிப் பேசி என்னையும் ஜெகதீசனையும் தலை சுத்த வைத்துட்டாங்க.

அதிலையும் ஜெகதீசனுக்கு ரொம்ப சுத்தி கழுத்து சுளுக்கு வந்து விட்டதாகக் கூறினார்.

போகும் போது மூவ் கிரீம் வாங்கிட்டு போகனும்னு சொன்னாரு ஹி ஹி ஹி.

அப்புறம் காட்டில் கேட்கும் பூச்சி சத்தங்கள் இயற்கையானது இல்லை இங்கே இவர்களே செய்து வைத்து இருக்காங்கன்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டாரு.

எனக்குக் கொஞ்சம் தலை சுத்த ஆரம்பிக்க எதுக்குடா வம்புன்னு ஜெகதீசன் நி(த)லையை நினைத்து உஷாராகி மேலே கேட்காம விட்டுட்டேன் 🙂 .

வெண்பா

அகரம் அமுதா என்ன பேசினாலும் அசைந்து கொடுக்காமல் வாயே திறக்க மாட்டேன் என்று விரதம் இருந்தார்.

பேசினா, வெண்பா தான் என்றார். நமக்கு வரலாறே ஒன்றும் புரியல இதுல வெண்பா வேலைக்கே ஆகாதேன்னு நினைத்து எஸ் ஆகிட்டேன்.

சிங்கை நாதனும் வடுவூர் குமாரும் கீழே இருந்து கைத்தொலைபேசியில் அழைத்துக் கீழேயே வாங்க என்றார்கள். சரி என்று மறுபடியும் கீழே சென்று அமர்ந்து விட்டோம்.

கோவி கண்ணன், ஜெகதீசன், சிங்கை நாதன் கொண்டு வந்து இருந்த பஜ்ஜி சட்னி ஹல்வா எல்லாவற்றையும் சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.

பிறகு தாஸ் அவர்கள் வந்து இணைத்துக் கொண்டார்.

பிக்னிக்

கொஞ்ச நேரத்தில் வலை பதிவு படிக்கும் ஆனால், எழுதாத பாஸ்கர் வந்தார்.

முதலில் நாங்க பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருந்ததை பார்த்துக் குழம்பி, சரி! எதோ பிக்னிக் வந்தவங்க போல இருக்குன்னு யோசித்துக்கொண்டே மேலே சென்றார்.

அப்புறம் படிக்கட்டைப் பார்த்து மேலே போலாமா வேண்டாமா என்று யோசித்தவர் எச்சுச்மி! இது வலை பதிவர் சந்திப்பான்னு கேட்டதும் கோவி கண்ணன் வாங்கன்னு அவரையும் இழுத்து வலைப்பதிவர் எண்ணிக்கையைக் கூட்ட ஆள் சேர்த்தார் 🙂 .

சந்திப்புல சுனாமி, ஒரு பதிவருக்கு உதவுவது, குசேலன் மற்றும் பலவற்றை பற்றிப் பேச்சு வந்தது. வடுவூர் குமார் விரைவில் துபாய் செல்வது பற்றிக் கூறினார்.

இருட்ட ஆரம்பித்த பிறகு பாரி அரசு வந்தார்.

வந்தவர் படிக்கட்டில் செல்ல இடையில் தடுப்பு இருக்க, “சொன்னால் தான் காதலா” சிம்பு மாதிரி ஒரு ஜம்ப் அடித்து எங்களிடம் வந்தார் 🙂 .

சுத்த தமிழ்

பொதுவாகப் பாரி அரசு தான் சுத்த தமிழ்ல பேசி அசத்துவாரு,

இந்த முறை அவரையே மிஞ்சும் அளவுக்கு அகரம் அமுதா பேசி அசத்தித் தன் தமிழ் பற்றை வெளிப்படுத்தினார், ராம்குமார் இன்னும் முயற்சி செய்வதாகக் கூறினார்.

தமிழ் மக்களான நாம தமிழ்ல பேசுவதற்கே இப்படி சிரம பட வேண்டியதா இருக்கேன்னு என்னை நொந்து கொண்டேன்.

நான் இரு நாள் முயற்சித்து ஒன்றும் சரி வராததால் சரி என்று கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டேன்.

கோவி கண்ணன் ஆத்த வையும் காசு கொடுன்னு சொல்ற மாதிரி நேரமாச்சு கிளம்பலாம் கிளம்பலாம் என்று கூற ஆரம்பித்தார்.

யாருக்கும் கிளம்பும் எண்ணமே இல்லை. தூரத்திலிருந்து வந்தவர்களும் இருந்ததால் பிறகு அனைவரும் கிளம்பினோம்.

சாலமன் மீன்

போகும் போது சாலமன் மீன் வாங்க வேண்டும் என்று ஜோசப் பால்ராஜ், பாரி அரசு, ராம் குமார் கூறியதால், காபி குடித்து விட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

விரைவு உணவகம் சென்று குடிக்கும் போது வெண்பா பற்றி பாரி அரசும் அகரம் அமுதாவும் காரசாரமாக விவாதித்தார்கள்.

அதனால் கிளம்பிய சூட்டில் பக்கத்தில் இருந்தவர்கள் திடீரென்று எப்படி சீதோசன நிலை மாறியது என்று குழம்பி விட்டார்கள்.

அவர்கள் என்னவென்று தெரிந்து எல்லோரையும் சாத்த நினைப்பதற்குள்..

‘டேய்! சங்கத்த கலைங்கடா!’ ன்னு அவசரமா எல்லோரும் எஸ் ஆகிட்டோம். அகரம் அமுதா உங்க சங்காத்தமே வேண்டாம்டா என்று தெறித்து ஓடினார் 🙂 .

கோவி கண்ணன் இனிமேல் சந்திப்பில் யாரும் “தலை” இல்லை, என்று கூறி விட்டதால் மீன் வாங்க சென்ற மூவரும் மீன் “தலையை” வாங்க மாட்டேன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இனிமையான வலைப்பதிவர் சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு இனிமையாக முடிந்ததில் அனைவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.

ஜோசப் பால்ராஜ் ஆர்வம் அதிகமாகி சிங்கப்பூர் வலைப்பதிவர் சந்திப்பை மாதாமாதம் வைக்கலாம் என்றார்.

அப்படி வைத்தால் அது இனிமையாக இருக்காது என்று கூறியதால் சரி என்று கூறி விட்டார்.

இந்த அருமையான சந்திப்பிற்கு ஆரம்பமாக இருந்த ஜோசப் பால்ராஜ், இந்தச் சந்திப்பை அருமையாக நடத்திய எங்கள் அன்பு நண்பர் கோவி கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

48 COMMENTS

 1. //ஜோ / Joe said…
  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க//

  நன்றி ஜோ.. நீங்களும் ஒரு பதிவு போடுங்க 🙂

 2. //விஜய் ஆனந்த் said…
  ஆகா, அப்ப நா வந்திருந்தா, எனக்கும் இதே கததானா???//

  ஹா ஹா விஜய் ஆனந்த் ..நீங்க வந்து இருந்தீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருந்து இருப்பீங்க..கவலை மறந்து கலந்துரையாட இது ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது என்றால் மிகை ஆகாது.

 3. //இன்னும் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தால் நம்மை வெட்டி 10$ க்கு வித்துடுவாங்கன்னு எல்லோரும் எஸ்கேப் ஆகிட்டோம்.//

  உங்களை வெட்டினால் எலும்புதான் தேறும். சூப் குடிப்பவர்களுக்கு யோகம் !

 4. //நமக்கு வரலாறே ஒன்றும் புரியல இதுல வெண்பா வேலைக்கே ஆகாதேன்னு நினைத்து எஸ் ஆகிட்டேன். //

  அவங்க என்ன பேசிக் கொண்டார்கள் என்றே எனக்கும் புரியல. கடைசியில் பின்நவீனத்துவம் என்று ‘நாளை பிறந்தவன் இன்று வாழ்கிறாள்’ என்றார் உங்களுக்கு எதாவது புரிந்ததா ?

 5. ஹா ஹா ஹா ஹா

  வந்ததுல ஜோவும் தாஸ் ம் தான் கொஞ்சம் கனமா இருந்தாங்க ஆனா உஷாரா அவங்க எஸ்கேப் ஆகிட்டாங்க ஹி ஹி ஹி

  உங்களை போட்டு இருந்தா கோவி சூப் னு வித்துட்டு இருப்பானுக :-))) கத்தி வேற நல்ல பெருசு பெருசா இருந்தது ஹா ஹா ஹா

 6. //கோவி.கண்ணன் said…
  அவங்க என்ன பேசிக் கொண்டார்கள் என்றே எனக்கும் புரியல. கடைசியில் பின்நவீனத்துவம் என்று ‘நாளை பிறந்தவன் இன்று வாழ்கிறாள்’ என்றார் உங்களுக்கு எதாவது புரிந்ததா ?//

  சத்தியமா எனக்கு புரியல..அதற்க்கு சிங்கை நாதன் எதோ விளக்கம் சொன்னாரு அதை கேட்டவுடன் எனக்கு அது வரை பேசியது எல்லாம் மறந்து விட்டது ஹி ஹி ஹி

  அங்கே போய் ஹார்லிக்ஸ் குடித்த பிறகு தான் தெளிவானது .. அடடா! இந்த பின் நவீனத்துவம் பற்றி சொல்லாம விட்டுட்டேனே :-(((((

  அவர் கிட்ட கேட்கலாம்னு பார்த்தா அவர் விட்டா போதும்னு ஓடியே போய்ட்டாரு :-)))

 7. ரஜினி ரசிகனா இருந்தா ரஜினி கிரி ன்னு தான் கூப்பிடனுமா ஹா ஹா ஹா

  இது சரின்னா அதுவும் சரி தான். இது எப்படி இருக்கு :-))) … இனிமேல் நீங்க என்னை அப்படி கூப்பிட்டால் (யார் கூப்பிட்டாலும்) இப்படி தான் அவர்களை கூப்பிட போறேன்.. அது தான் நியாயம் ஹி ஹி ஹி

  விளக்கியாச்சு 🙂

 8. //கூடுதுறை said…
  சந்திப்பு எப்படியோ ஆன உங்க பதிவு சூப்பரா எழுதி இருக்கிங்க//

  நன்றி கூடுதுறை.

  //நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு…//

  கோவை என்பதால் இருக்கலாம் :-))

  //நீங்கள் சந்திப்பில் அடக்கி வாசித்ததாக ஞாபகம்…//

  நேரம் சரி இல்லாத போது பேச கூடாது..நான் ரஜினி அல்ல ரஜினி ரசிகன் ஹா ஹா ஹா

 9. //ஜெகதீசன் said…
  இப்படி எதாவது பெயரில் கூப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்… :)//

  ஹா ஹா அப்படியா சரி இனிமேல் சின்ன ரித்தீஷ் னே கூபிடுகிறேன், உங்கள் ஆசையை என் கெடுப்பானேன்.

  //பை த வே, ரஜினி ரசிகர்ன்னுறதை நல்லா நிரூபிக்கிறீங்க…. :)))//

  என்னங்க பண்ணுறது உண்மையா இருந்தா கிண்டல் பண்ணுறாங்க…. இப்படி நீங்க சொல்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்ல. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டால் சரி.

  பை த வே நீங்க அப்படி சொன்னதற்கு நன்றி.

 10. பொறாமையா இருக்கு கிரி.

  வேறென்னத்தச் சொல்ல. ஹீம் நாம கொடுத்து வச்சது அம்புட்டுதேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.

 11. //வடகரை வேலன் said…
  பொறாமையா இருக்கு கிரி.//

  உங்கள் நிலையில் இருந்து நான் பார்த்தால் எனக்கும் அதே உணர்வு தான்.

  //வேறென்னத்தச் சொல்ல. ஹீம் நாம கொடுத்து வச்சது அம்புட்டுதேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.//

  பதிவர் சந்திப்பு என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம், இதையே அனைவரும் விரும்புவதாக நான் நினைக்கிறேன். அதற்க்கு சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு ஒரு மிக சிறந்த உதாரணம்.

  கூட்டம் குறைவாக இருப்பதாலா என்று தெரியவில்லை, போட்டி பொறாமை சண்டை மனகசப்பு எதுவும் இல்லாமல் இங்கே நடக்கிறது.

  அடுத்த முறை நம் பகுதியில் கண்டிப்பாக சிறப்பாக நடக்கும் என்பது என் எண்ணம்.

  உங்கள் வருகைக்கு நன்றி வேலன்.

 12. வாங்க ஓசை செல்லா. முதல் வருகைக்கு நன்றி.

  //kovikannan avarkal malaysia pathivar nanbar patri ethum sonnaara nanbare!?//

  எதுவும் கூறவில்லையே ! ஒருவேளை நான் கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை 🙁

 13. // வலை பதிவு படிக்கும் ஆனால் எழுதாத பாஸ்கர் வந்தார்..முதலில் நாங்க பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுட்டு இருந்ததை பார்த்து குழம்பி சரி எதோ பிக்னிக் வந்தவங்க போல இருக்குன்னு யோசித்துக்கொண்டே மேலே சென்றார் //

  ஆகா, அப்ப நா வந்திருந்தா, எனக்கும் இதே கததானா???

 14. //
  கிரி said…

  // ஜெகதீசன் said…
  ரஜினி கிரி வாழ்க!!!
  :)//

  சின்ன கமல் ஜெகதீசன் வாழ்க :-)))))))

  //
  ????????????
  நான் கமல் ரசிகன் இல்லை….
  நான் இன்னும் தசாவதாரமே பார்க்கலை…
  🙂
  புரியல்ல… தயவுசெய்து விளக்கவும்…

  ரஜினியைப் பிடிக்காவிட்டால் கமல் ரசிகனா இருக்கனுமா என்ன???
  :(((

 15. சந்திப்பு எப்படியோ ஆன உங்க பதிவு சூப்பரா எழுதி இருக்கிங்க….

  நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு…

  நீங்கள் சந்திப்பில் அடக்கி வாசித்ததாக ஞாபகம்…

 16. கூப்பிடுறது கூப்புடுறீங்க…
  ஒரு நல்ல பெயராக் கூப்பிடலாமில்ல…
  போயும் போயும் கமல் பெயர்லயா கூப்பிடுவீங்க…:((

  சின்ன ரித்திஸ்
  சின்ன சாம் ஆண்டர்சன்
  சின்ன டி.ஆர்
  சின்ன ரஜினி

  இப்படி எதாவது பெயரில் கூப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்… 🙂

  பை த வே, ரஜினி ரசிகர்ன்னுறதை நல்லா நிரூபிக்கிறீங்க…. :)))

 17. கிரி!

  என்ன தான் பஜ்ஜி, சொஜ்ஜி, அல்வா, மலை, படி, மேடு, பள்ளம்னு இருந்தாலும், கோவை வலைப்பதிவர் சந்திப்பு மாதிரி வருமா?

  வருமா?

  வருமா? 😉

 18. ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌ கிரி.
  எல்லா பதிவையும் படிச்ச பின்னாடிதான் இன்னும் நாம யாருமே எழுதாத விசயங்கள் கொஞ்சம் இருக்குன்னு தெரியுது, சீக்கிரம் இன்னொரு பதிவு போடனும், இல்லன்னா நம்ம ஜோ அல்லது தாஸ் அல்லது பாரி.அரசு இவங்க யாராவது எழுதலாம்.

 19. //OSAI Chella said…
  kovikannan avarkal malaysia pathivar nanbar patri ethum sonnaara nanbare!?
  //

  கொஞ்சமாக சொல்லி இருக்கேன். அதுவும் கிரியிடம் மட்டும் தான். அந்த மெயிலை அவருக்கு பார்வேர்ட் செய்தால் முழுதும் அறிந்து கொள்வார். எல்லோருடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வார். தேவையற்ற விளம்பரம் கொடுக்க வேண்டாமே என்று பார்க்கிறேன்

 20. //OSAI Chella said…
  kovikannan avarkal malaysia pathivar nanbar patri ethum sonnaara nanbare!?
  //
  அண்ணே,

  நீங்கள் ஆருயிர் நண்பர்களும் கொடுத்த பாராட்டுப் பத்திரமெல்லாம் எவ்வளவு உயர்ந்தது தெரியுமா ? அதை நான் மட்டும் தான் படிக்கனுமா ? எல்லோருக்கும் நான் பாராட்டுப் பெற்றதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா ? புதுப்பதிவர்கள் எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் தெரியாமல் என்னிடம் பழகிடப் போகிறார்கள் என்பதற்க்காகவே ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறேன். இப்போது அல்ல. 4 மாதத்துக்கு முன்பே.

  எல்லா பாராட்டுப் பதிவும் ‘போற்றுவார் போற்றலும்..’

  என்ற தொகுப்பில் எனது பதிவு வருகை பதிவேடு (கவுண்டர்)அருகில் தான் இணைத்து வைத்திருக்கிறேன்.

  யாருக்கும் தெரியாமல் பட்டம் வாங்கி வைத்துக் கொண்டால் அதனால் பலன் ஏது!

  அதைப் படித்தார்கள் என்றால் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வார்கள். எனக்கு எதையும் மறைத்துப் பழக்கம் கிடையாது.

 21. // வெயிலான் said…
  கிரி!
  என்ன தான் பஜ்ஜி, சொஜ்ஜி, அல்வா, மலை, படி, மேடு, பள்ளம்னு இருந்தாலும், கோவை வலைப்பதிவர் சந்திப்பு மாதிரி வருமா?
  வருமா?
  வருமா? ;)//

  நீங்க தான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல 🙂 சரி விடுங்க அடுத்த முறை கலக்கி விடுவோம். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி வெயிலான்.

 22. //ஜோசப் பால்ராஜ் said…
  ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌ கிரி. //

  நன்றி ஜோசப் பால்ராஜ்

  //எல்லா பதிவையும் படிச்ச பின்னாடிதான் இன்னும் நாம யாருமே எழுதாத விசயங்கள் கொஞ்சம் இருக்குன்னு தெரியுது,//

  உண்மை தான்

  //சீக்கிரம் இன்னொரு பதிவு போடனும், இல்லன்னா நம்ம ஜோ அல்லது தாஸ் அல்லது பாரி.அரசு இவங்க யாராவது எழுதலாம்.//

  இனி நாம பதிவு போட்டா சரியா இருக்காது இவங்க யாராவது பதிவு போட்டால் நன்று.

 23. //கோவி.கண்ணன் said…
  கொஞ்சமாக சொல்லி இருக்கேன். அதுவும் கிரியிடம் மட்டும் தான். அந்த மெயிலை அவருக்கு பார்வேர்ட் செய்தால் முழுதும் அறிந்து கொள்வார். எல்லோருடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வார். தேவையற்ற விளம்பரம் கொடுக்க வேண்டாமே என்று பார்க்கிறேன்//

  மன்னிக்கவும் ஓசை செல்லா ..கோவி கண்ணன் கூறிய அந்த நபர் நீங்க கேட்ட நபர் என்று எனக்கு தெரியாது அப்புறமா லிங்க் கொடுக்கிறேன் பாருங்கன்னு கூறினார் ..அப்புறம் நானும் கேட்க மறந்து விட்டேன்

 24. //கோவி.கண்ணன் said…
  அதைப் படித்தார்கள் என்றால் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வார்கள். எனக்கு எதையும் மறைத்துப் பழக்கம் கிடையாது.//

  கோவி கண்ணன் நீங்க என்னை முடிந்தா பாருங்கன்னு சொன்னீங்க நான் மறந்துட்டேன் ..இப்ப தான் போய் பார்த்தேன்..ஒரு ரணகளமே நடந்து இருக்கு..முழுவதும் இன்னும் படிக்கவில்லை.தேவை இல்லாமல் ஏதாவது நான் கூறி மேலும் பிரச்சனையாக்க அல்லது புதுசா கிளப்ப நான் விரும்பவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

 25. வணக்கம்.பதிவர் மாநாட்டு ஜோதியில ஐக்கியமாகிட்டீங்களா?

 26. //முகவை மைந்தன் said…
  அடிச்சு ஆடுறீங்க! கலக்கலான விவரணை! நன்றாக இருந்தது.//

  நன்றி முகவை மைந்தன். உங்களை போல ஒரு சிலர் கூறும் போது, பரவாயில்லை நான் கூட ஓரளவிற்கு எழுதுகிறேன் என்று சிறு சந்தோசம்.

 27. //ராஜ நடராஜன் said…
  வணக்கம்.பதிவர் மாநாட்டு ஜோதியில ஐக்கியமாகிட்டீங்களா?//

  இரண்டற கலந்து விட்டேன் :-). உண்மையிலேயே மிக சிறப்பாக இருந்தது. நீங்களும் உங்கள் பகுதியில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுங்கள். அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

 28. //வடகரை வேலன் said…

  பொறாமையா இருக்கு கிரி.

  வேறென்னத்தச் சொல்ல. ஹீம் நாம கொடுத்து வச்சது அம்புட்டுதேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.//

  ரி
  ப்
  பீ
  ட்
  டே
  ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 29. // //விஜய் ஆனந்த் said…
  ஆகா, அப்ப நா வந்திருந்தா, எனக்கும் இதே கததானா???//

  ஹா ஹா விஜய் ஆனந்த் ..நீங்க வந்து இருந்தீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருந்து இருப்பீங்க..கவலை மறந்து கலந்துரையாட இது ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது என்றால் மிகை ஆகாது. //

  சரிங்க கிரி…அப்ப கண்டிப்பா அடுத்த சந்திப்புக்கு வந்துடறேன்!!! thanks!!!

 30. //செந்தழல் ரவி said…
  🙂
  ஹிஸ்டரி ஜியாகிரபி படிக்கவும்…வெளுத்ததெல்லா பால் அல்ல :)))))))//

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி செந்தழல் ரவி.

  நான் எதுவும் கூறவில்லையே 🙂 நான் எது படித்தாலும் எதுவும் சொல்ல போவது இல்லை :-)) தெரியாத விசயத்தில் நான் எப்போதும் தலையிடுவது கிடையாது. உங்களுக்குள் நடந்து இருக்கும் பிரச்சனை முடிந்து போன ஒன்று, மறுபடியும் அதை கிளறி ஏன் மனதை கெடுத்து கொள்கிறீர்கள்.

  நமக்கும் அரசியலுக்கும் (தமிழ் அட்டு அரசியல் அல்ல :-)) வெகு தூரங்க…அதில் நான் எப்போதும் சம்பந்த படவே மாட்டேன்.

  சரி அதை விடுங்க ..கஷ்டப்பட்டு!! பதிவர் சந்திப்பை பற்றி எழுதி இருக்கேன்..அதை பற்றி நீங்க ஒன்றும் சொல்லவே இல்லையே :-))

 31. //கயல்விழி said…
  சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க :)//

  ரொம்ப நன்றி கயல்வழி. தொடர்ந்து வாங்க.

 32. நன்றி விஜய்

  அடுத்த முறை கோவை பதிவர் சந்திப்பையும் கலக்கிடுவோம் 🙂

 33. //வடுவூர் குமார் said…
  படிச்சிட்டேன்.
  ரொம்ப லேட்டாகிவிட்டது.//

  என்னடா! இது ஆளை காணோமே என்று பார்த்தேன். படித்தீங்க சரி ஒன்றுமே சொல்லவில்லையே 🙁

 34. //ARUVAI BASKAR said…
  கிரி , உங்கள் எழுத்தில் பதிவர் சந்திப்பு இன்னும் அருமை !//

  பாஸ்கர் நீங்கள் இவ்வாறு கூறுவது இன்னும் மகிழ்ச்சி.

  சரி ரஜினியவே திட்டிட்டு இருக்கீங்க.. 🙂 துக்ளக் கார்ட்டூன் எப்ப போட போறீங்க…ரொம்ப நாள் ஆச்சு 🙂

  உங்கள் வருகைக்கு நன்றி பாஸ்கர்

 35. //கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு//

  அதைக் கலகலப்பாய் விவரித்திருப்பதும் அருமை கிரி.

 36. //ராமலக்ஷ்மி said…
  அதைக் கலகலப்பாய் விவரித்திருப்பதும் அருமை கிரி.//

  நன்றி ராமலக்ஷ்மி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here