இந்தியாவின் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். Image Credit
நம்முடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பான தங்கம் (தனி நபர் பிரிவில்) தற்போது தான் நிறைவேறி உள்ளது.
அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு. கடந்த முறை ரத்தோர் வெள்ளி பதக்கம் பெற்று ஆறுதல் அளித்தார்.
மோனிகா
இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் மோனிகா என்ற பெண்ணுக்கு நடந்த நிகழ்வு மிகக் கொடுமையானது.
அவருக்குப் பரிசோதனை செய்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தியதாகக் கூறி அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.
இதனால் அவர் அழுது பேட்டி கொடுத்ததைப் பலரும் தொலைகாட்சியில் பார்த்து இருப்பீர்கள்.
நான் போதை பொருள் பயன்படுத்தி இருந்தால் என்னைச் சாலையில் வைத்துச் சுட்டு விடுங்கள் என்று விரக்தியில் அழுது கொண்டே கூறி இருந்தார்.
திரும்பப் பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது அது காலம் கடந்த செயலாகி விட்டது.
Sports Authority of India
மோனிகா ஒலிம்பிக்கிற்காகச் சீனா செல்ல 3.30 மணி விமானத்திற்குத் தயாராக இருந்தார் ஆனால், இந்தப் பரிசோதனை செய்தி 12.30 மணிக்கு வந்ததால் அவரைப் போக விடாமல் தடை செய்து விட்டார்கள்.
திரும்பப் பரிசோதனை செய்து அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் முன்பே ஒலிம்பிக் ல் பதிவு செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது.
72 மணி நேரத்துக்கு முன்பே இந்தப் பரிசோதனையைச் செய்து இருக்க வேண்டும் ஆனால், அது செய்யப்படவில்லை.
மேலும் இவர் அங்கே சென்ற பிறகு சோதனை முடிவை வெளியிட்டால், அவர் இரண்டாவது முறை சோதனை நடைபெற்று போட்டிக்குத் தயார் ஆகிவிடுவார் என்று திட்டமிட்டு இதைப் போலச் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சர்வேதச விளையாட்டு வீரரின் வாழ்க்கையை Sports Authority of India கெடுத்துள்ளது. இதில் பலர் மோனிகா ஒலிம்பிக் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர்.
CBI விசாரணை
இதற்கு CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மணிப்பூர் முதலமைச்சர் கோரியுள்ளார்.
என்ன விசாரணை செய்து என்ன ஆகப் போகிறது? ஒரு பெண்ணின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்கள்.
இதற்காக அவர் எத்தனை காலம் கஷ்டப்பட்டுப் பயிற்சி செய்து கொண்டு எத்தனை கனவிலிருந்து இருப்பார்.
அதை எல்லாம் இவர்களால் திருப்பித் தர முடியுமா?
இரண்டாவது பரிசோதனை முடிவு வெளிவரும் வரை மற்றவர்களின் கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மன உளைச்சலில் இருந்ததை இவர்கள் திரும்பப் பெற முடியுமா?
அவர் பதக்கம் வாங்குகிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்.
ஆனால், ஒருவரின் நீண்ட நாள் ஆசையைப் போவதற்குண்டான திறமையை நிரூபித்தும் இதைப் போன்ற தவறு செய்பவர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது சரியா?
காழ்ப்புணர்ச்சி
இனி அவர் திரும்ப என்ன தான் முயன்றாலும் அவரால் முன்பு போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள முடியுமா!
அவரை வேண்டும் என்றே ஒரு சில புரிந்து கொள்ளாத அடி முட்டாள்கள் கிண்டல் செய்வதைத் தான் தவிர்க்க முடியுமா?
இவ்வாறு ஆர்வத்துடன் இருப்பவரைப் பகமை உணர்வாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கேவலமான முறையில் தடுப்பவர்கள் இருக்கும் வரை நம் நாடு வெண்கல பதக்கத்துக்குக் கூட முக்கிக் கொண்டே தான் இருக்கும்.
நம்முடைய மக்கள் தொகை 110 கோடியை தொடப்போகிறது, ஆனால் ஒரு தங்கம் பெற்றதற்கு அதைப் பெரிய அளவில் கொண்டாடும் நிலைமையிலேயே நாம் இருக்கிறோம்.
தென் இந்தியர் ஒரு பதவியில் இருந்தால் அவர் தென் இந்தியர்களை மட்டும் சேர்க்கிறார், வட இந்தியர் இருந்தால் அவர்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே சேர்க்கிறார்.
சிபாரிசு
அரசியல்வாதிகள் சிபாரிசு அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று வருபவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. உண்மையான ஆர்வமும் திறமையும் இருக்கும் பலர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நிலை மாற வாய்ப்புத் தற்போது இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அதுவரை நாம் இதைப் போல ஒரு தங்க பதக்கத்துக்கு மின்னஞ்சல் பார்வர்டு செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் இதைப் போலப் பதிவுகள் இட்டும் அல்ப சந்தோசம் அடைந்து கொள்வோம்.
அதைத் தவிர நமக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
எதுவாகினும் தங்கம் பெற்ற அபினவ் பிந்த்ரா க்கு மனமார்ந்த பாரட்டுகள்.
கிடைத்த பரிசு பணத்திலேயே திருப்தி அடைந்து மேலும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து சாதிக்க வேண்டுகிறேன்.
தங்கம் கிடைத்த பூரிப்பை
மோனிகாவுக்கு நேர்ந்த பாதிப்பு
பாதியாக்கி விட்டதே கிரி.
அரசு விளையாட்டு வீரர்களை தனிப் பட்ட முறையில் ஊக்குவிக்கா விட்டாலும் இப்படி தடங்கல்கள் செய்யாமலாவது இருக்கட்டும்.அதற்காகக் கடமை தவறச் சொல்லவில்லை. நீங்கள் சொன்னது போல் சோதனையை நேரத்துடன் செய்திருக்கலாமே.
//தென் இந்தியர் ஒரு பதவியில் இருந்தால் அவர் தென் இந்தியர்களை மட்டும் சேர்க்கிறார், வட இந்தியர் இருந்தால் அவர்களை சேர்ந்தவர்களை மட்டுமே சேர்க்கிறார், அரசியல்வாதிகள் சிபாரிசு அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உண்மையான ஆர்வமும் திறமையும் இருக்கும் பலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு நிலை மாற வாய்ப்பு தற்போது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதுவரை நாம் இதை போல ஒரு தங்க பதக்கத்துக்கு மின்னஞ்சல் பார்வர்டு செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் இதை போல பதிவுகள் இட்டும் அல்ப சந்தோசம் அடைந்து கொள்வோம். அதை தவிர நமக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.//
முற்றிலும் உண்மை.
//தங்கம் பெற்ற அபினவ் பிந்த்ரா க்கு என் மனமார்ந்த பாரட்டுகள்.//
வழி மொழிகிறேன்.
//U.P.Tharsan said…
vedkam//
என்ன செய்வது இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் இது இல்லாமையே போய் விடுவோம்.
உங்கள் வருகைக்கு நன்றி.
//ராமலக்ஷ்மி said…
தங்கம் கிடைத்த பூரிப்பை
மோனிகாவுக்கு நேர்ந்த பாதிப்பு
பாதியாக்கி விட்டதே கிரி//
உண்மை தான் ராமலக்ஷ்மி. பலருக்கு இந்த விஷயம் தெரியாது மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று இதை கூறினேன்.
//நீங்கள் சொன்னது போல் சோதனையை நேரத்துடன் செய்திருக்கலாமே.//
இவர்கள் வேண்டும் என்றே செய்ததால் தான் சரியான நேரத்தில் செய்யவில்லை.
உங்கள் வருகைக்கு நன்றி
//முகவை மைந்தன் said…
வருத்தமாத் தான் இருக்கு. தீர்வு? அதுவரை நம்முடைய கண்டனங்களை தெரிவித்துக் கொண்டே இருப்போம்.//
நம்மால் முடிந்தது அது மட்டும் தானே.
நீண்ட நாட்களுக்கு பிறகு என் பதிவிற்கு வந்து இருக்கீங்க 🙂
தகுதி, நாட்டுப்பற்று இப்படி எதுவுமே வேணாம். எல்லாத்துக்கும் அளவுகோல் பணம் மட்டுமே.
இன்னொன்னு, தனக்குக் கிடைக்கலைன்னா யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணம். இப்படியே காய்ஞ்சுக்கிட்டு இருந்தால் எப்படி நேர்மையான முறையில் தேர்வு நடக்கும்.
எனக்கு வர்ற கோபத்துலே……
அரசியல்வியாதிகளும் அதிகாரிகளுமே மட்டும் பெத்துக்கட்டும் இனிமேல். அவுங்க வாரிசுகளுக்குத்தான் இந்தியா.
//ஜோசப் பால்ராஜ் said…
என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை.//
யாருக்கும் எதுவும் புரியவில்லை நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று.
//முழுக்க முழுக்க விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல்தான் காரணம்//
இது பிரதமர் உட்பட அனைவருக்கு தெரியும். பொறுப்பில் உள்ள அவர்களே இது பற்றி கவலை படாத போது சாதாரண மக்களான நாம் என்ன செய்ய முடியும்.
//ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் பெற்று கொடுத்தவர்களது அனுபவங்களை நாம் பயன்படுத்த தவறியதன் விளைவு இது//
எனக்கு என்ன கவலை என்றால் அபினவ் பிந்த்ரா க்கும் இதே நிலைமை தான் வரும் என்று.
உங்கள் வருகைக்கு நன்றி.
//யாத்ரீகன் said…
சிறந்த பதிவு கிரி.. ஒலிம்பிக்கின் இந்திய தங்கம் பற்றி செய்தி வந்ததும்தான் நம் மக்களுக்கும் சரி, மீடியாவுக்கும் சரி.. பலருக்கு விளையாட்டில் கிரிக்கெட் தவிர வேறொன்று உள்ளது நியாபகம் வந்துள்ளது//
ஜனாதிபதி பிரதமர் உட்பட.
இவருக்கு லட்சகணக்கில் இனி பரிசு கொடுப்பார்கள் அதோடு இவரையும் சோம்பேறி ஆக்கி விடுவார்கள். வெற்றி பெற்றவரை கொண்டாட எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள், ஆனால் வாய்ப்பில்லாமல் போராடி கொண்டு இருப்பவர்களை கண்டுகொள்ள தான் யாரும் இல்லை. உண்மையான திறமைக்கு மதிப்பு கிடைக்கும் வரை நம் நாடு விளையாட்டு துறை மட்டுமல்ல எந்த துறையிலும் முன்னேற முடியாது.
மற்ற நாட்டினரின் கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் நான் ஆளாகி கொண்டு இருக்க வேண்டியது தான்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யாத்ரீகன்.
//துளசி கோபால் said…
தகுதி, நாட்டுப்பற்று இப்படி எதுவுமே வேணாம். எல்லாத்துக்கும் அளவுகோல் பணம் மட்டுமே//
இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
//தனக்குக் கிடைக்கலைன்னா யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணம். //
இது நம் நாட்டில் மிக அதிகம். நாம் வெற்றி பெறவில்லை என்று வருத்தப்படாமல் பாகிஸ்தான் இறுதிக்கு போக வில்லை என்று சந்தோசப்படுகிறோம். நம் எண்ணங்கள் உயர வேண்டும். அதற்க்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றே கருதுகிறேன்.
//எனக்கு வர்ற கோபத்துலே……//
மேடம் உங்களை போல என்னை போல சாதாரண மக்களால் கோபப்படுவதை தவிரவும் இப்படி பதிவு எழுதி ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் தான் முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. நமக்கே இவ்வளோ ஆத்திரம் கோபம் வருகிறது என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையை நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. இவர்கள் கண்டிப்பாக இதற்கான தண்டனையை பெறுவார்கள் சட்டத்தினால் இல்லாவிட்டாலும் வேறு வழியிலாவது.
//அரசியல்வியாதிகளும் அதிகாரிகளுமே மட்டும் பெத்துக்கட்டும் இனிமேல். அவுங்க வாரிசுகளுக்குத்தான் இந்தியா.//
போகிற நிலைமையை பார்த்தால் அப்படி தான் ஆகும் போல உள்ளது.
உங்கள் வருகைக்கு நன்றி மேடம்.
//நம்முடைய மக்கள் தொகை 110 கோடியை தொடப்போகிறது, ஆனால் ஒரு தங்கம் பெற்றதற்கு அதை பெரிய அளவில் கொண்டாடும் நிலைமையிலேயே நாம் இருக்கிறோம்.//
vedkam
வருத்தமாத் தான் இருக்கு. தீர்வு? அதுவரை நம்முடைய கண்டனங்களை தெரிவித்துக் கொண்டே இருப்போம்.
மோனிக்காவுக்கு நடந்தது, ஒரு மட்டரகமான அரசியல் கிரி.
ஆந்திராவை சேர்ந்த சைலஜா என்ற பெண்தான் அதற்கு காரணம் என்று முதலில் செய்தி வந்தது, ஆனால் அந்த சைலஜாவும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை.
உலகின் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, பதக்கப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா கடைசியில் உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல்தான் காரணம். விளையாட்டுத்துறையில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் அந்த விளையாட்டில் சாதனை புரிந்த முன்னாள் வீரர் தான் பொறுப்பாக இருக்க வேண்டும். சரத்பவாருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு ? கேபிஸ் கில் எந்த சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாடினார்? அவர்கள் எல்லாம் பொறுப்பாக இருந்தால் எப்படி நம் நாட்டில் விளையாட்டு முன்னேறும்? பல ஆண்டுகள் ஹாக்கியில் அசைக்கமுடியாத அணியாக இருந்த இந்தியா இம்முறை தகுதி கூட பெறவில்லை. ஏற்கனவே ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் பெற்று கொடுத்தவர்களது அனுபவங்களை நாம் பயன்படுத்த தவறியதன் விளைவு இது. கிரிக்கெட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கபிலுக்கு நேர்ந்ததை நாம் எல்லோரும் அறிவோம் அல்லவா?
கிரி, இது நாம் (இந்த்ியர்கள்)வாங்கி வந்த வரம். முகத்தில் புன்சிரிப்பு; முதுகில் கத்தி.இதை நாம் விடும் வரை எதுவும் மாறாது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு 2 கண்ணும் போக வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பு உடையவர்களில் நாமும் ஒருவர்.இது போன்ற நிகழ்வுகளூம் தீவிரவாதம் வளர ஒரு முக்கிய காரணம் என்பது எனது கருத்து.
சிறந்த பதிவு கிரி.. ஒலிம்பிக்கின் இந்திய தங்கம் பற்றி செய்தி வந்ததும்தான் நம் மக்களுக்கும் சரி, மீடியாவுக்கும் சரி.. பலருக்கு விளையாட்டில் கிரிக்கெட் தவிர வேறொன்று உள்ளது நியாபகம் வந்துள்ளது .. பலரும் புள்ளரித்துக்கொண்டிருக்கும் வேளையில் தேவைப்படும் சரியான பதிவு.. நன்றி கிரி . .
//குசும்பன் said…
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் கிரி.//
நன்றி குசும்பன் குசும்பாக சொல்லவில்லை என்று நம்புகிறேன் :-)))
———————————–
//இவன் said…
வேதனையான விடயம்தான் கிரி ஆனாலும் என்ன செய்ய??//
நாம் எதுவும் செய்ய முடியாது என்று என் பதிவிலேயே கூறி விட்டேன்..ஆனால் என்ன செய்ய நம் மனதில் உள்ளவற்றை புலம்ப இதை போன்ற பதிவுகளை பயன்படுத்தி கொள்கிறோம்.
உங்கள் வருகைக்கு நன்றி இவன். திரும்ப பட்டய கிளப்ப தயார் ஆகிட்டீங்களா? புது பதிவு ஒன்றையும் காணோமே!
//Vijay said…
கிரி, இது நாம் (இந்த்ியர்கள்)வாங்கி வந்த வரம். முகத்தில் புன்சிரிப்பு; முதுகில் கத்தி//
இது அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும் என்றாலும், நம் மக்கள் தொகை காரணமாக நம் முதுகு முழுவதும் கத்தியாக இருக்கிறது அது தான் பிரச்சனை 🙂
//எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு 2 கண்ணும் போக வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பு உடையவர்களில் நாமும் ஒருவர்//
உண்மை தான் …கூடவே நண்டு கதையும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
//இது போன்ற நிகழ்வுகளூம் தீவிரவாதம் வளர ஒரு முக்கிய காரணம் என்பது எனது கருத்து.//
வழிமொழிகிறேன். சரியான வாய்ப்பு கிடைக்காதவர்கள் சரியாக தேர்ந்தெடுக்கும் தவறான வழி.
உங்கள் வருகைக்கு நன்றி விஜய்.
தகவலுக்கு நன்றி கிரி.
“Great Indian Shame”, “Tainted Monika” என்றெல்லாம் தலைப்பு செய்தி சொல்லி சைக்கிள் கேப்பில் ஏரோப்ளேன் ஓட்டின நமது நோயூஸ் (News.. No Use) சேனல்கள்..
என் யூகம் சரியானால்.. இது ஒரு பக்காவாக திட்டமிடப்பட்ட செயல்.. நமது தமிழகத்தின் சாந்திக்கு நடந்தது போல..
//ஜெகதீசன் said…
//ஒலிம்பிக் தங்கமும்//
🙂
//- ஒரு பெண்ணின் கண்ணீரும்//
:((((((((((((((//
வருகைக்கு நன்றி ஜெகதீசன்.
———————————–
//இளவேனில் said…
இது மாதிரி அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் இருக்குவரை அது கனவாகவே தான் இருக்கும்..?//
உண்மை தான் சக்தி. கனவு கூட காண விட மாட்டார்கள் அதையும் கலைத்து விடுவார்கள்.
//PPattian : புபட்டியன் said…
“Great Indian Shame”, “Tainted Monika” என்றெல்லாம் தலைப்பு செய்தி சொல்லி சைக்கிள் கேப்பில் ஏரோப்ளேன் ஓட்டின நமது நோயூஸ் (News.. No Use) சேனல்கள்..//
இவர்களுக்கு செய்தி எதுவும் கிடைக்க வில்லை என்றால் கிடைத்தவன் எவனோ அவனை(ளை) போட்டு நொக்கி எடுப்பாங்க. அடுத்ததா எந்த செய்தி கிடைக்கும்னு பார்த்துட்டு இருப்பாங்க..கம்முனாட்டி பசங்க.
அந்த பொண்ணு எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் இவனுக போட்டு தாக்குற செய்தில FLASH செய்தியா போட்டு இவனுக தேச பற்றை பறை சாட்டுவானுக. இப்ப இல்லைன்னு ஆகி போச்சு ஒரு பய வாய திறக்க மாட்டேங்குறான்..சின்ன செய்தியா அதை சொல்றாங்க..
இவ்வாறு செய்கிறவர்கள் எல்லாம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் சட்டம் மூலம் இல்லை என்றாலும் நியாயம் தர்மம் மூலமாக.
//என் யூகம் சரியானால்.. இது ஒரு பக்காவாக திட்டமிடப்பட்ட செயல்.. நமது தமிழகத்தின் சாந்திக்கு நடந்தது போல..//
சாந்தி நிலைமை இன்னும் பரிதாபம்.
உங்கள் வருகைக்கு நன்றி புபட்டியன்
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் கிரி.
வேதனையான விடயம்தான் கிரி ஆனாலும் என்ன செய்ய??
//ஒலிம்பிக் தங்கமும்//
🙂
//- ஒரு பெண்ணின் கண்ணீரும்//
:((((((((((((((
வேதனையான அளிக்கக்கூடிய விசியம், மோனிக்காவுக்கு நேர்ந்த கொடுமை…
என்ன தான் 2020ல் வல்லரசா ஆயுடும்னு Dr.அப்துல் கலாம் கனவு கண்டாலும், இது மாதிரி அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் இருக்குவரை அது கனவாகவே தான் இருக்கும்..?
//தமிழன்… said…
ஏனிப்படி இருக்கிறது இவர்களது மனம்…???//
மனம் என்ற ஒன்று இல்லாததால் இருக்குமோ!
//தமிழன்… said…
ஏனிப்படி இருக்கிறது இவர்களது மனம்…???//
மனம் என்ற ஒன்று இல்லாததால் இருக்குமோ!
// எனக்கு வர்ற கோபத்துலே……
அரசியல்வியாதிகளும் அதிகாரிகளுமே மட்டும் பெத்துக்கட்டும் இனிமேல். அவுங்க வாரிசுகளுக்குத்தான் இந்தியா.//
கண்ணீருக்கு கவலைப்படலாமுன்னு வந்தா இது என்ன புதுவிதக் கோபமாக இருக்குது?
நல்லா சொன்னிங்க கிரி அண்ணன்..
ஏனிப்படி இருக்கிறது இவர்களது மனம்…???
🙁
//ராஜ நடராஜன் said…
கண்ணீருக்கு கவலைப்படலாமுன்னு வந்தா இது என்ன புதுவிதக் கோபமாக இருக்குது?//
புதுவித கோபம் இல்லைங்க, அந்த கண்ணீரோட விரக்தியின் வெளிப்பாடு.
———————————–
// எம்.ரிஷான் ஷெரீப் said…
:(//
உங்கள் வருகைக்கு நன்றி ரிஷான்.
//Vidhya said…
அவரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கபட்டது… மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்… //
இனி அவர் தொடர்ந்து அதே ஈடுபாட்டுடன் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான் 🙁
ஒரு போட்டியில் பரிசு வாங்குவது முக்கியமல்ல ஆனால் அதில் கலந்து கொள்வது தான் முக்கியம்… அதில் கலந்து கொள்வதை தடுப்பது மிகவும் கேவலமான ஒரு செயல்… அதுவும் பல நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் தடுப்பது கண்டிக்க தக்க செயல்…
மோனிக்காவிற்கு நாம் அறுதல் கூறினாலும் அவரின் நிலைமை மிகவும் சங்கடமானதே… அவரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கபட்டது… மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்… இதில் நாம் யாரை குறை கூறி என பலன்
அபினவ் பிந்த்ராவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் …
மோனிகாவிற்கு நேர்ந்ததை கேட்கும்போது மிகவும் வேதன்யாக உள்ளது. நம் நாட்டில் பணமும் அரசியலும் சந்து போனதெல்லாம் புகுந்து ஆட்டி வைக்கற வரைக்கும் இது போன்ற செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஆச்சரியபடுவதற்கில்லை.