பயம் பதட்டம் ஏன் ஏற்படுகிறது?

9
பயம் பதட்டம் fear nervous

யம் பதட்டம் எதனால் ஏற்படுகிறது என்பதை அனுபவங்களில் இருந்து விளக்கியுள்ளேன். Image Credit – http://izquotes.com/

பயம் பதட்டம்

எனக்குச் சில விசயங்களில் பயமும் பதட்டமும் வர அப்பா ஒரு காரணி. இதைக் கூற காரணம் இருக்கிறது.

அப்பா ரொம்ப நேர்மையானவர் அதோடு நேரத்திற்கு (Punctual) மிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

ஏழாவது வகுப்பிலேயே விடுதியில் தங்கிப் படிக்கத் துவங்கியதால், நான் வீட்டில் இருந்த நாட்களை விட வெளியில் இருந்த நாட்களே அதிகம்.

எனவே, அப்பாவுடன் இருந்த வருடங்கள் குறைவு.

இருப்பினும் இருந்த கொஞ்ச வருடங்களிலும் விடுமுறை மற்றும் விடுதியில் சந்திக்கும் நேரங்களிலும் அவர் எனக்குக் கொடுத்த அறிவுரை நேரந்தவறாமை போன்றவை என்னுள் ஆழப் பதிந்து விட்டது.

Of course ஜீனும் முக்கியக் காரணமாக இருக்கும்.

அப்பா அளவிற்கு இல்லையென்றாலும் அதில் நிச்சயம் 70% இருப்பேன்.

கற்றுக் கொண்டது நல்ல விசயம் என்றாலும் இதுவே என் பயத்திற்கும் பதட்டத்திற்கும் முக்கியக் காரணமாக அமைந்து விட்டது என் சோகம்.

நேர்மை நேரந்தவறாமை

ஒரு விசயத்தில் நேர்மையாக இருப்பதும், நம் மீது யாரும் குற்றம் கூறி விட முடியாத படி நம் பணி புரியும் இடத்தில் பணியைச் செய்வதும், சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதும் என்பது சாதாரண விசயமல்ல.

இப்படி இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு, சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் இயல்புத் தன்மையை மாற்றி ஒரு பய / பதட்ட உணர்வைத் தோற்றுவித்து விடுகிறது.

அனைத்துமே பிரச்சனை இல்லாமல் முடிய வேண்டும், சரியாக நடக்க வேண்டும் என்ற உணர்வு நம்மை அந்தப் பணி முடியும் வரை நிம்மதி இழக்க வைக்கிறது.

குறிப்பிட்ட நேரத்துக்கு நண்பர்கள் / வேறு எவரும் வரக்கூறினால், அங்கே நான் தான் முதலில் இருப்பேன்.

சரி..! எப்போதுமே நாம தான் சீக்கிரம் வருகிறோம் என்று தாமதமாகச் சென்றாலும் நான் தான் முதலில் இருப்பேன்.

9 மணி ரயிலுக்கு 5 மணிக்கே உள்ளுக்குள் இனம் புரியாத பதட்டத்தை அழைத்து வருகிறது.

இடத்தை அடையும் முன்பு அனைத்தையும் மறக்காமல் எடுத்து வைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் ஆகக் கூடாது, ரயில் கிளம்ப 30 நிமிடங்கள் முன்பே அங்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

ஒருவேளை விமானத்திற்குப் போக வேண்டி, முன்பதிவு செய்து இருந்த கார் 5 நிமிடம் தாமதம் ஆனாலும், 30 நிமிடங்கள் ஆனது போலத் தோன்றும்.

நெருக்கடி

இப்பதட்டம் நம்மை மட்டுமல்லாது நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. குடும்பமாக ஒரு இடத்துக்குக் கிளம்புவதால் அனைவரையும் ஒரு வழி ஆக்கி விடுகிறது.

சீக்கிரம் கிளம்புங்க.. நேரமாச்சு” என்று குடும்பத்தினரையும் பதட்டப்படுத்தி ஒரு அமைதியான சூழலை, மகிழ்ச்சியாகக் கிளம்ப வேண்டிய சூழலை அவசியமே இல்லாமல் பதட்டமானதாக்கி விடுகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் சரியாக நடந்து கொள்கிறோம், மற்றவர்களுக்கு முன்னுதராணமாக இருக்கிறோம், திட்டமிட்டுச் செயல்படுகிறோம் என்பதாக இருக்கும், உண்மையும் கூட.

ஆனால், இவை மறைமுகமாகக் குடும்பத்தினரை, நம்மை நெருக்கடிக்கு ஆளாக்குகிறது என்பது தான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டது.

இதை நான் உணர்ந்தாலும் ஊறிப் போன உணர்வைச் சரி செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கவில்லை.

இதைத் தவிர்க்க நான் துவக்கத்தில் செய்தது என் பதட்டத்தை வெளிப்படையாக மற்றவர்கள் முன்பு காட்டாமல் மறைத்தது (நிறுத்த முடியவில்லை) .

இதன் மூலம் என்னால் மற்றவர்கள் பதட்டம் ஆகாமல் தடுக்க முடிந்தது.

தற்போது என் எதிர்பார்ப்பை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை குறிப்பாக என் பசங்க கிட்ட செய்வதே இல்லை.

காரணம், என்னைப் போல அவர்களும் எதிர்காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதால்.

ஒரு முடிவு தெரியப்போகிறது, அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரச்சனை, சண்டை எனும் போது இதயத் துடிப்பு இயல்பாகவே அதிகரித்து விடுகிறது.

இதில் என்ன கொடுமை என்றால், முக்கியத்துவமில்லாத விசயத்திற்குக் கூட இதயத் துடிப்பு அதிகரித்து இருக்கிறது என்பது தான்!!

இது சின்ன வயதில் இருந்தே எனக்கு இருக்கிறது. பயிற்சியால் குறைத்து இருக்கிறேன்.

கமல் “குருதிப்புனல்” படத்தில் “வீரம் என்றால் என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது” என்று கூறுவார். இதைத் தான் பெரும்பாலனவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

Perfection

அப்பா அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரைச் சுற்றி உள்ளவர்களையும் ஒரு பதட்டத்திலேயே வைத்து விடுகிறார்.

சுற்றுலாவில் கூட அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று நேரப்படி நடப்பார், சில நேரங்களில் அந்நியன் அம்பி போலவும்.

இதனால் நன்மை இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், இந்தச் சமயங்களில் Flexibility இல்லையென்றால் ஒரு இறுக்கமான சூழலே நிலவும்.

நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் மற்றவர்களுக்காகச் சில விசயங்களில் உங்கள் பிடிவாதத்தையும் விட்டு வர வேண்டும்.

என் பிடிவாதத்தை நண்பர்கள் அறிவார்கள்.

இது எங்கே இருந்து வந்தது? என் அப்பா தான். தற்போது பெருமளவு குறைத்து விட்டேன்.

நேர்மையாக இருப்பதும், நேரந்தவறாமையைப் பின்பற்றுவதும் நல்ல விசயம் தான் ஆனால், அதுவே உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்தும் படி ஆகி விடக் கூடாது.

இதனால் அனைவருக்குமே சிரமம்.

நேர்மை நேரந்தவறாமை ஆகியவை இந்தக் கட்டுரையின் உதாரணத்திற்காகக் கூறப்பட்டது மற்றபடி இது அனைவருக்கும் பொருந்தும்.

பயமும் பதட்டமும் எந்த ஒரு நபருக்கும் இருக்கும் இயல்பான பிரச்சனை.

பதட்டம் உங்களைச் சிந்திக்க விடாது. இதைத் தான் இன்னொரு வார்த்தையில் “அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்று கூறி இருக்கிறார்கள்.

அவசரம், பயம், பதட்டம் எல்லாமே கிட்டத்தட்ட ஒன்று தான்.

உங்கள் மனம் குழப்பம், பதட்டம் இல்லாமல், அவசரப்படாமல் இருக்கும் போது தான் தெளிவாகச் சிந்திக்கும்.

இவையெல்லாம் ஒரு வாரத்தில் நடக்கக்கூடிய விசயங்களல்ல, அனைத்திற்கும் பயிற்சி தேவை. எனவே, நிதானம் ரொம்ப அவசியம்.

மொத்தக் கட்டுரையையும் ஒரு வார்த்தையில் அடக்குவது என்றால் “Relax” 🙂 .

தொடர்புடைய கட்டுரை

மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. Hi giri !
    மற்றவர்களுக்காகவும்,அனைவர்களையும் திருப்திப் படுத்த வேண்டும்
    என்ற எண்ணம் தான் ஸ்ட்ரெஸ் வரக் காரணம்!
    குழந்தை களுடன் நேரத்தை செலவிடுவதாலும்,துன்பங்களை
    கடவுளிடம் ஒப்படைத்து விடுவதாலும் stress i குறைக்கலாம்.(m’y expérience)

  2. அருமையான பதிவு.

    ஆனாலும் இந்த குணம்தான் நமது பல வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.
    எனவே இந்த ஆயத்த எச்சரிக்கை உணர்வை இழக்க தேவை இல்லை.

    அதே சமயம் நாம் படபடக்க வில்லை, நிதானமாக நேரம் மற்றும் நேர்மை நிலைப்படுககளில் தொடர்ந்து கடைபிடிக்கிறோம் என்று கொண்டோமானால் மிக நன்று.

    நண்றி!

  3. ஒரு மகானின் வாக்கு ” சுறுசுறுப்பாய் இரு படபடப்பாய் இராதே”……….

  4. After reading this blog, I want to give a suggestion. pl go through the website pravaagam.org (or) sribagavath.org. In that read the free magazine “BAGAVATH PAATHAI”. Living Gnani Bagavath Iya reveals more facts and solutions for day today problems in our life. Certainly everyone should read the magazine without fail for clear understanding about our mind.

  5. கிரி என்ன பத்தி எழுத சொல்லி யாராச்சும் உங்க கிட்ட சொன்னாங்களா? இல்லை எங்க வீட்ல உங்க கிட்ட எதாச்சும் பேசுனாங்களா ? எப்படி என்னோட விஷயம் அப்படியே எழுதி இருக்கீங்க … எனினும் இனிமேல் Relax பின்பற்ற முயல்கிறேன் 🙂 …

  6. எனக்கும் உங்களுக்கும் அதிகம் ஒத்து போகிறது, ரொம்பவும் ரசித்து படித்தேன்…
    மிகவும் நன்றாக சொன்னிர்கள், பின்பற்ற முயலுகிறேன்…

    உங்கள் அப்பா மாதரியே எங்கள் அப்பாவும்..

    Nice to read this and great thanks for ur suggestion and valuable information.

  7. @Insaaf நான் கூறி இருப்பது nervous. நீங்கள் கூறி இருப்பது Stress. இரண்டுக்கும் வித்யாசம் உள்ளது.

    Nervous என்பது தற்காலிக பதட்டம் அதாவது உடனடியாக நடக்கப்போவதற்கான பதட்டம்.

    Stress என்பது நீண்ட காலப் பிரச்சனை. உதாரணத்திற்கு பணியில் சிறப்பாக இருந்தும் உயர்வு கிடைக்காதது, குடும்பத்தில் தொடரும் பிரச்சனை, அலுவலகத்தில் மேலதிகாரியால் கொடுக்கப்படும் மன அழுத்தம் போன்றவை Stress.

    எனக்கு Stress இல்லை ஆனால், Nervous உண்டு. தற்போது இதைத் தான் குறைத்து இருக்கிறேன்.

    நான் படுத்தவுடன் அதிபட்சம் 30 வினாடியில் தூங்கி விடுவேன். Stress இருந்தால் உடனடி தூக்கம் வராது.

    இருப்பினும் உங்கள் தகவலுக்கு நன்றி.

    @முத்து & பிரகாஷ் ரைட்டு 🙂

    @விபுலானந்தன் நன்றி.

    @லீலா பிரசாத் உங்க மைண்ட் வாய்ஸ் படித்துட்டேன் போல 🙂

    @சுரேஷ் 🙂

    @பாவணன் நன்றி

  8. தல,
    ஒரு psychiatrist கிட்ட counselling போன effect கொடுக்குது
    அவ்வளவு ஆழமான கருத்துக்கள் உள்ள பதிவு இது, வாழ்த்துக்கள்

    ஒரு ஆஷ்ரம் நீங்க ஆரம்பிச்சா கூட்டம் பிச்சுக்கும் 🙂

    – அருண் கோவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!