Blog உச்சக்கட்டத்தில் (2008 – 2010) இருந்த போது Hits எனப்படும் பார்வையாளர் எண்ணிக்கை மிகப்பெரிய விசயமாகவும் கவுரவமாகவும் பார்க்கப்பட்டது.
காலமாற்றத்தில் பெரும்பாலானவர்கள் எளிமையான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், Video Blogging என்று நகர்ந்து விட்டார்கள். Images Credit
Mobile Usage
சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கும் அளவுக்கெல்லாம் தற்போது யாருக்கும் பொறுமையில்லை.
கொஞ்சம் பெரிதாக இருந்தாலே “அடப் போய்யா” என்று அடுத்ததுக்குத் தாவி விடுகிறார்கள்.
இதில் சுட்டியை க்ளிக் செய்து தளத்துக்கு வரவைப்பது சிரமம் ஆகி விட்டது 🙂 .
3 நொடிகளுக்கு மேல் காத்திருக்க பொறுமையில்லை என்று ஆய்வு கூறுகிறது.
ட்விட்டர் ஃபேஸ்புக்கில் நான்கு வரி நிலைத்தகவலுக்கு (Status) கிடைக்கும் வரவேற்பு ஒரு பக்கத்துக்கு எழுதும் Blog க்கு கிடைக்காது. இது தான் நிதர்சனம்.
இத்தளத்துக்கு வருபவர்களில் 75% பேர் மொபைல் வழியாகத் தான் படிக்கிறார்கள். நீங்களும் இக்கட்டுரையை உங்கள் மொபைல் வழியாகப் படித்துக்கொண்டு இருக்கலாம் 🙂 .
Accelerated Mobile Pages (AMP)
எனவே, மொபைலில் படிப்பவர்களுக்கு வசதியாக, வேகமாக இருக்க வேண்டும் என்று செயல்படுத்தியது தான் AMP.
இந்த முறையில் மிக வேகமாகப் பக்கங்கள் திறக்கும்.
Read: கூகுள் AMP என்றால் என்ன?
facebook Instant Article
facebook Instant Article பற்றி ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குத் தெரியும். மின்னல் குறியீடு போல இருக்கும் சுட்டியை க்ளிக் செய்தால் வேகமாகத் திறக்கும்.
இதற்குக் காரணம் நம்முடைய தளத்தின் கட்டுரை ஃபேஸ்புக் தளத்தில் இருப்பதே!
இந்த வசதி மூலம் திறன்பேசி வழியாக ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மிக வேகமாகக் கட்டுரையைத் திறந்து படிக்க முடியும்.
தளத்துக்கு நேரடியாக வர வேண்டிய தேவையில்லை.
இவ்வளவு வேகமாகப் படிக்கக் கொடுத்தும் இதைப் படிக்கவே பொறுமையில்லை என்று 100 ல் 40 பேர் தான் படிப்பார்கள்.
அந்த 40 ல் 20 பேர் தான் முழுதாகப் படிப்பார்கள் 😀 .
சமூகத்தளங்களிலிருந்து வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வு கூறுகிறது. அதாவது Link க்ளிக் செய்து படிக்கத் தயாராக இல்லை.
நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்? 🙂 .
பிற்சேர்க்கை – தற்போது மின்னல் குறியீட்டை ஃபேஸ்புக் நீக்கி விட்டது. ஒருவேளை இக்குறியீட்டு கட்டுரைகளை மட்டுமே படிக்கிறார்கள் என்பதால் கூட இருக்கலாம்.
பிற்சேர்க்கை – ஏப்ரல் 2023 முதல் Instant Article சேவையை நிறுத்தி விட்டதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Better to change http://www.giri.com
டெஸ்ட் மேட்ச் காணாமல் போனால்…?
தம்பி விவேகம் சிறந்தது…
புரிந்தால் நன்றி…
நான் எப்போதும் பழமையின் காதலன், இதுவரை ஒரு கட்டுரை கூட FB மூலம் படித்தது இல்லை; படிக்கவும் தோன்றியது இல்லை. 20 / 20 இல்லை 10 / 10 வந்தாலும் டெஸ்ட் போட்டிகளின் மீது கொண்ட காதல் என்றும் மாறாது… ஆனால் வாசகர்களின் நிலை எவ்வாறு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களை பொறுத்தவரை மாற்றம் என்பது மிக அவசியமானது… பகிர்வுக்கு நன்றி கிரி.
@திண்டுக்கல் தனபாலன் நல்லது சொன்னா நமக்கு எங்க புரியுது 🙂
@யாசின் உங்களை போலவே எனக்கு இது போல எழுதுவது / படிப்பது விருப்பம் ஆனால், நம்மைப் போல இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
எனவே, என்னுடைய தளத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வசதியை செயல்படுத்தி இருக்கிறேன். அவரவருக்கு விருப்பப்படும் வகையில் படித்துக் கொள்ளலாம்.