Google AMP என்றால் என்ன?

3
Google AMP

க்கள் படிப்பதில் சுருக்கமாக, வேகமாக எதிர்பார்க்கிறார்கள். பெரிய கட்டுரையாக எழுதுபவர்களுக்குச் சிக்கலாகி வருகிறது 🙂 . கூகுள் AMP பற்றிப்பார்ப்போம்.

Google AMP

தற்போது இணையத்தில் கணினி வழியாகப் படிப்பவர்களின் எண்ணிக்கையைத் திறன்பேசி (Smart Phone) வழியாகப் படிப்பவர்களின் எண்ணிக்கை முந்தி விட்டது.

திறன்பேசியில் படிப்பவர்கள் ஒரு சுட்டியை (Link) க்ளிக் செய்து அது 3 நொடிகளில் திறக்கவில்லை என்றால், புறக்கணித்து விடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது,

இதைப் பெரும்பாலான நேரங்களில் நானே செய்து கொண்டு இருப்பதால், மறுக்க முடியவில்லை. ஒருவரின் பொறுமை அவ்வளவு தான் தற்போது.

எனவே, காத்திருப்பதில் பொறுமை குறைந்தவர்களைப் படிக்க வைக்க என்ன வழி என்றால், அவர்களுக்கு வேகமாகச் செய்திகளைக் கொடுப்பது.

அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்?

இங்கே தான் வருகிறது கூகுள் AMP (Accelerated Mobile Pages). திறன்பேசியில் படிப்பவர்களைக் கவர்வதற்கான தொழில்நுட்பம்.

AMP என்ன செய்கிறது?

ஃபேஸ்புக்கை திறன்பேசியில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “Instant Article” பார்த்து இருப்பீர்கள். ஒரு மின்னல் குறியீடுடன் இருக்கும்.

இவ்வகைச் சுட்டிகளை க்ளிக் செய்தால், உடனடியாகத் திறக்கும்.

ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா?

ஃபேஸ்புக் நிறுவனம், அவர்கள் தகவல்களைத் தங்கள் வழங்கியில் (server) வைத்துள்ளது. எனவே தான் நீங்கள் க்ளிக் செய்தவுடன் உடனே திறக்கிறது.

வழக்கமான சுட்டியைத் திறப்பதற்கும் இந்த “Instant Article” களை க்ளிக் செய்து திறப்பதற்கும் மிகப்பெரிய வேக வித்யாசமுள்ளது.

இந்த முறையில் படிக்க எளிதாக இருக்கும், விளம்பர வருமானமும் கிடைக்க வழி வகை செய்துள்ளது.

இந்த “Instant Article” தொழில்நுட்பம் தான் கூகுள்AMP க்கும் பயன்படுத்தப்படுகிறது.

Google AMP க்கு வருவோம்

கூகுள் என்ன செய்கிறது என்றால், AMP வசதி செயல்படுத்தப்பட்ட தளங்களின் அனைத்து கட்டுரைகளையும் தன் வழங்கியில் வைத்து இருக்கும், Cache மாதிரி.

இது உங்களுடைய திறன்பேசிகளில் இருந்து தேடப்படும் தகவல்களுக்கு மட்டுமே! கணினியில் இருந்து கூகுள் தேடலில் தேடப்படும் தகவல்களுக்கல்ல.

அப்படியென்றால்?

கூகுள் தேடலில் இது போல வரும் தகவல்கள் AMP என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அவற்றை க்ளிக் செய்தால், உடனடியாகத் திறக்கும்.

தேவையற்றதை நீக்கிப் படிப்பதற்கு தேவையானது மட்டுமே இருக்கும்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, இவ்வகைச் சுட்டிகளை க்ளிக் செய்தால், படிப்பது கூகுள் தளத்தில் இருந்து (Cache) என்பதை (இதில் எனக்கும் குழப்பமுள்ளது).

புரியும்படி கூறுவதென்றால்,

உங்கள் திறன்பேசியில் இருந்து “கூகுள் தேடல்” (http://www.google.com) பக்கத்துக்குச் செல்லவும், பின் தேடலில் சிங்கப்பூர் giriblog என்று தட்டச்சுச் செய்யுங்கள்.

பின்வரும் படத்தில் உள்ளது போலத் தகவல்கள் வரும்.

அதில் ஏதாவது ஒரு சுட்டியை க்ளிக் செய்தால், இது வரை கூறிக்கொண்டு இருந்தது எளிதாகப் புரிந்து விடும். சுட்டியை க்ளிக் செய்தால் உடனடியாகத் திறக்கும்.

இத்தளத்தில் AMP வசதியைச் செயல்படுத்தி இருக்கிறேன்.

எதிர்காலம் AMP

எதிர்காலத்தில் AMP தான் ஆதிக்கம் செலுத்தப் போகிறது. எனவே, எவராக இருந்தாலும், இதனுள் வந்தாக வேண்டும்.

கூகுள் தேடலில் AMP சுட்டி க்ளிக் செய்து பார்த்து இருந்தால் மட்டுமே, இது வரை கூறி இருந்தது புரியும். இல்லையென்றால், குழப்பம் இருக்கும்.

கூறியது அல்லது கூற வருவது ஓரளவாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் 🙂 .

AMP என்றால் என்ன? மற்றும் புதிய தொழில்நுட்பங்களை  இத்தளத்தைப் படிப்பவர்களும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனக்கும் இதில் நிறையக் கேள்விகள், சந்தேகங்கள் உள்ளது,

ஆண்டின் இறுதியை கூகுள் கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 🙂 .

பிற்சேர்க்கை

கூகுளின் இந்த முயற்சி கட்டுப்பாடுகள் காரணமாக தோல்வியடைந்து விட்டது. தற்போது Google AMP வசதியின் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது.

இதற்குப் பதிலாக Google Page Experience என்ற முறையை முன்னெடுத்து வருகிறது.

விவரங்களுக்கு –> Google Page Experience | இணைய தரத்தை மேம்படுத்தும் கூகுள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, புதிய ஆண்டில் புதிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் கிரி.

  2. கிரி,புதிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!