எந்திரன் பாடல்கள் பற்றி ஒரு பார்வை

20
எந்திரன் பாடல்கள்

ற்கனவே பலர் எந்திரன் பாடல்கள் பற்றி விமர்சித்து விட்டதால் பாடல் பற்றிய மற்ற விசயங்களை அதிகமாகவும் பாடல் பற்றிக் குறைவாகவும் எழுதுகிறேன். Image Credit

Think Music

இந்தியாவிலேயே இது வரை வந்த படங்களிலேயே அதிக விலைக்குப் பாடல்கள் விற்கப்பட்டு சாதனை புரிந்த படம் எந்திரன்.

சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தின் பாடல் உரிமையை Think Music க்கிற்கு விற்று இருந்தார்கள்.

இந்நிறுவனத்தின் ப்ரியா என்பவர் இதை 8 கோடிக்கு வாங்கி இருந்தார். விலையைக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் கலவரமாக இருந்தது.

இவ்வளோ விலைக்குப் பாடல் உரிமையை வாங்கி இந்த MP3 உலகத்தில் எப்படி லாபம் பார்ப்பார்கள்.

Think Music ப்ரியா Think பண்ணாம வாங்கிட்டாங்களோ! என்று நினைத்தேன் 🙂 .

பாடல் வெளிவந்து ஒருவாரம் கூட ஆகவில்லை அசால்ட்டாக போட்ட பணத்தை எடுக்க கூடிய நிலைக்கு வந்து விட்டார்கள்.

இந்த MP3 யுகத்தில் CD விற்பனை என்பது சவாலான விஷயம் தான் அப்படி இருக்க பல லட்சம் CD கள் அதிகமாக அடிக்கவேண்டிய நிலைக்கு வந்து விட்டது.

உண்மையில் ரஜினி ரசிகன் என்பதை தாண்டி எனக்கு பெரிய வியப்பு. இது எதிர்பாராதது!

எந்திரன் படத்தை எடுத்த சன் பிக்சர்க்கு முன்னாடி லாபம் பார்க்கப்போகிறவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

எந்திரன் பாடல்களை Think Music வாங்கப்போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக வந்த பிறகு இவர்கள் தளத்தை அன்று பார்வையிட்டவர்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்.

இதை நான் கூறவில்லை செய்தி நிறுவனங்கள் கூறியது.

எப்போதுமே ஒரு படத்தின் பாடல் வெளியானவுடன் வாங்குபவர்கள் அந்தப்படத்தின் கதாநாயகனுக்காக, இசையமைப்பாளருக்காக, இயக்குனருக்காக வாங்குபவர்களாகத்தான் இருப்பார்கள்.

இது அல்லாமல் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பில் வாங்கும் யாருக்கும் ரசிகரல்லாத சராசரி பொதுமக்கள்.

இதிலேயே Think Music படம் வெளிவரும் முன்பே கிட்டத்தட்ட லாபம் பார்த்து விட்டார்கள்.

பொதுவாக படம் வெளிவந்த பிறகு காட்சியுடன் பாடலை பார்க்கும் போது அதுவரை நமக்கு பிடிக்காத பாடல்கள் கூட விருப்பப்பாடல்களாக மாற வாய்ப்புண்டு.

முதலில் கேட்கும் போது பிடிக்காத பாடல்கள் கூட பலமுறை கேட்ட பிறகு மற்றும் படத்தின் காட்சியுடன் பார்க்கும் போது நமக்கு பிடித்து விடுகிறது.

எடுத்துக்காட்டாக சிங்கம் படத்தின் பாடல்கள் வெளியான போது பலர் அதை மொக்கை குப்பை என்று விமர்சித்து இருந்தார்கள்.

ஆனால், படம் வெளிவந்த பிறகு அதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

அதனாலையே ஒரு படம் வெளியான பிறகு அதன் பாடல் CD விற்பனை சூடு பிடிக்கிறது.

Think Music எந்திரன் படம் வெளிவந்த பிறகு இது வரை வாங்காத ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கினால் அதன் லாபம் எங்கேயோ சென்று விடும்.

இது பொய் கணக்கல்ல நடைமுறையில் உள்ளதை கூறியுள்ளேன் மற்றும் Think Music பல லட்சம் CD க்கள் ஆர்டர் கேட்டு வந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

ரஜினியும் விமர்சனமும்

ரஜினி படம் என்றாலே அங்கு கண்டிப்பாக கடுமையான விமர்சனமும் உடன் வந்து விடும். இதற்காகவே காத்திருந்தது போல கண்டபடி விமர்சிக்க வந்து விடுவார்கள்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று யாருமே கிடையாது.

ரஜினி ஒன்றும் விமர்சிக்கப்படக்கூடாதவர் அல்ல ஆனால் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் ரஜினியை திட்டியே ஆக வேண்டும் என்று எழுதுபவர்களை பற்றி கூற என்ன கூறுவது?

பாடல் வெளிவந்தவுடனே எந்திரன் இ(ம்)சை என்று விமர்சனம் வந்து விடுகிறது. இதிலே பரிதாபமாக மாட்டிக்கொண்டவர் ரகுமான் தான்.

ரஜினி படத்தை திட்ட வேண்டி இருப்பதால், இசையமைத்த ரகுமானும் சம்பந்தமே இல்லாமல் சிறப்பாக இசையமைத்தும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

ஆனால், இவர்கள் இப்படி விமர்சிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை முன்னரே கூறியபடி பாடல்கள் பெரும்பாலானவர்களின் பாராட்டைப்பெற்று விற்பனையில் புதிய சாதனையை ஏற்படுத்தி விட்டது.

விற்பனை சாதனைக்குக் காரணம் ரஜினியா ரகுமானா

ரஜினியை பிடிக்காதவர்களுக்குச் சாக்கு கூற இன்னொரு வாய்ப்பு இந்தத் தலைப்பு. ரகுமான் மிகத்திறமையானவர் என்று நான் புதிதாகக் கூறுவது நகைப்புக்குரியது.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை அசால்ட்டாக வாங்கியவர். பல புதிய முயற்சிகளை இசையில் செய்து கொண்டு இருப்பவர். இவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் எந்திரன் பாடல் விற்பனைக்கு ரகுமான் இசை என்பதைத்தாண்டி ஒன்று உள்ளது என்றால் அது கண்டிப்பாக ரஜினி தான்.

ரகுமான் இந்தப்படத்திற்கு இசை அமைக்கவில்லை என்றால் கண்டிப்பாக இந்த அளவிற்கு வெற்றி வந்து இருக்காது அதில் சந்தேகமில்லை.

எனவே பாடல்களின் மிகப்பெரிய வெற்றிக்கு ரகுமானும் ஒரு காரணம் ஆனால், சதவீத அளவில் ரஜினியே முன்னணியில் இருக்கிறார்.

இதே ரகுமான் ராவணன் படத்திற்கு இசையமைத்துள்ளார், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார் எந்திரன் பட நாயகி ஐஸ் நடித்துள்ளார்.

எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் இதுவும் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.

இவ்வளவும் இருந்தும் ஏன் ராவணன் எந்திரன் படப்பாடலைப் போலப் படம் வெளிவரும் முன்பு இவ்வளவு பெரிய வெற்றி அடையவில்லை?

ஏன் இதைப்போல 8 கோடிக்கு விற்பனை ஆகவில்லை?

எந்திரன் படத்தால் நாட்டுக்கு என்ன நன்மை?

இது தான் ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் மற்றும் நாட்டை அடுத்த கட்டத்துக்கு! கொண்டு செல்லப் பாடுபடும் அறிவுஜீவிகளின் கேள்வி.

பலர் வழக்கம் போல ரஜினி நாட்டுக்கு என்ன செய்தார்? நாற்று நட்டாரா? பயிர் செய்தாரா?

எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாரா! என்கிற ரேஞ்சுக்கு எழுதிட்டு இருக்காங்க.

எதையோ பேசிட்டு இருங்க! என்று இப்போதெல்லாம் விட்டு விடுகிறேன். இது எந்தப் பாதிப்பையும் முன்பு போல ஏற்படுத்துவதில்லை.

சரி எதோ அவங்க கருத்தைச் சொல்றாங்க சொல்லிட்டு போகட்டும் நமக்கென்ன! என்று இருந்து விடுகிறேன்.

ரஜினி என்றால் உடனே சொம்பை தூக்கிட்டு வந்துடறாங்க….

எந்திரன் இசை யாரை குறி வைத்து?

எந்திரன் பாடல் இசை C வகுப்பு ரசிகர்களை அதிகம் கவராது அவர்களுக்குத் தேவுடா தேவுடா! எம்பேரு படையப்பா! போன்ற பாடல்கள் தான் பிடிக்கும்.

எனவே, இந்தப்பாடல்கள் (படமும் கூட) A மற்றும் B வகுப்பு ரசிகர்களுக்குத் தான்.

150 கோடி பட்ஜெட் படம் மற்றும் விஞ்ஞான கதை இது தான் முக்கிய காரணம்.

இந்தப்படம் வெளிநாட்டு வசூலையும் வெளிநாட்டு பார்வையாளர்களையும் சேர்த்து கவர வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்படுகிறது.

எனவே, அதற்குத் தகுந்த மாதிரியான இசையைக் கொடுத்தால் மட்டுமே படத்திற்கு ஒரு பலம் இருக்கும் ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்க முடியும்.

எனவே தான் ரகுமான் அதை மனதில் வைத்து மற்றவர்களையும் கவரும் விதத்தில் அட்டகாசமாக இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளிலும் ரஜினி புகழ் பாடும் வரிகளையும் வழக்கமாக வரும் அறிவுரை வரிகளையும் தவிர்த்துள்ளனர்.

இதில் வரும் இசையைக் கவனித்து பார்த்தால் பல நுணுக்கமான இசைகளை அவர் புகுத்தி இருப்பது தெரியும்.

ஒரு பாடல் என்று இல்லாமல் அனைத்து பாடல்களிலும் ஒரு ரிச்சான இசையைக் கொடுத்து இருக்கிறார்.

இதைப் போல அட்டகாசமான இசையைக் கொடுத்ததற்கு ரகுமானை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இவ்வளோ கோடி பணம் போட்டு எடுத்து “டண்டனக்க டனுக்குனக்கா”னு இசை அமைக்க முடியாது. எனவே சரியான முறையில் இசை கையாளப்பட்டுள்ளது.

எந்திரன் பாடல்கள்

கேட்டவுடன் பச்சக்குன்னு பிடித்துக்கொண்ட பாடல்கள் காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ மற்றும் பூம் பூம் ரோபோடா. பின்னர் அனைத்து பாடல்களும் பிடித்து விட்டது.

முதலில் எனக்கு இரும்பிலே ஒரு இதயம் பாடல் பிடிக்கவில்லை.

ரகுமான் குரலில் அவ்வளவாக ஈடுபாடில்லை ஒரே மாதிரியாகப் பாடுகிறார் என்று தோன்றுவதுண்டு [Opinion differs So Rahman fans no hard feelings 😉 ] ஆனால், இரும்பிலே இதயம் பாடல் அட்டகாசம்.

இவருக்கு இந்தப் பாடலுக்கான பொருத்தமான குரலாக எனக்குத் தோன்றுகிறது.

தீம் இசையாக வரும் ரோபோடா அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இன்னும் சிறப்பாகச் செய்து இருக்கலாம். நான் ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனால், எனக்கு ஏமாற்றம் தான்.

இதில் வரும் இசை Slum Dog Millionaire (Liquid Dance பாடல்) மற்றும் 7G ரெயின்போ காலனி இசையை நினைவு படுத்துகிறது. என் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

அரிமா அரிமா பாடலில் மட்டுமே ரஜினியை உயர்த்தி அதுவும் ரோபோவுக்காக வரிகள் வருகிறது.

மற்றபடி படத்தின் எந்தப் பாடலிலும் ரஜினி புகழ் பாடும் வரிகள் இல்லை. அரிமா என்றால் சிங்கமாம். பாடலை ஹரிஹரன் பட்டாசாகப் பாடியுள்ளார்.

இந்தப்பாடலுக்கு பல்வேறு விதமாக வித்யாசமாக நடனம் அமைத்து இருப்பதாகக் கூறி உள்ளார்கள். இதற்குப் போட்டுள்ள செட்டிங் எல்லாம் மிரட்டுகிறது.

ரஜினி படம் என்றாலே SPB இல்லை என்றால் ரசிகர்கள் சென்டிமென்ட்டாகச் செம டென்ஷன் ஆகி விடுவார்கள் இந்த முறையும் ஷங்கர்(ரகுமான்) ஏமாற்றாமல் SPB யை புதிய மனிதா! பாடலுக்குக் கொண்டு வந்து இருக்கிறார்.

இவர் குரலுக்கு வயசே ஆகாதா! என்று எண்ணத்தோன்றுகிறது.

காதல் அணுக்கள் பாடலை ரஜினி கிடாரை வைத்துப் பாடுவதை பார்த்தாலே அசத்தலாக உள்ளது, துவக்கம் அவ்வளவு நன்றாக உள்ளது.

கிளிமாஞ்சாரோ பாடல் பழங்குடியின பாடலாம் படத்தின் ஹிட் பாடல் என்று பண்பலை அலைவரிசைகள் கூறுகிறது.

இந்தப்பாடலுக்கு ஒரு சிறப்பு எந்திரன் படத்தில் முதல் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது இதுவாகும்.

பூம் பூம் ரோபாடா இந்த வருடத்தின் குழந்தைகள் விருப்பப்பாடலாக இருக்கும்.

இசை சேனல்களில் குழந்தைகள் இந்தப்பாடலை அதில் வரும் ரோபோ ரஜினியின் சேட்டைக்காக அதிகம் விரும்பிக் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.

எந்திரன் பாடல்கள் நன்றாக உள்ளது. பார்ப்போம் படம் எப்படியுள்ளது என்று 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

  1. எந்திரன் பத்தியும் ரஜினி பத்தியும் மொத்தமா போட்டு கலக்கிட்டிங்க.

    //பலர் வழக்கம் போல ரஜினி நாட்டுக்கு என்ன செய்தார்? நாற்று நட்டாரா? பயிர் செய்தாரா? எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாரா! என்கிற ரேஞ்சுக்கு எழுதிட்டு இருக்காங்க// – ஆமாங்க, இவனுங்கள நெனச்சா… (எனக்கு நல்லா வாயில வருது)

    //எனக்கு கேட்டவுடன் பச்சக்குன்னு பிடித்துக்கொண்ட பாடல்கள் காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ மற்றும் பூம் பூம் ரோபோடா// எனக்கும் காதல் அணுக்கள்தான் முதலில் பிடித்தது. மற்றவை அனைத்தும் கேட்க கேட்கத்தான் பிடித்தது.

    இன்னும் சில பேர் ரகுமானையும் போட்டு தாளித்துக் கொண்டிருந்தார்களே – “டெக்னாலஜி குப்பை” அது இதுன்னு. நெம்ப கஷ்டமப்பா!

  2. தாமதமான இடுகை என்றாலும் நல்ல ஒரு அலசல் கிரி.

    படம் வெளியான பிறகு பாடல்கள் இன்னும் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் அந்த சந்தேகமும் இல்லை, காரணம் ரஜினி+ ரகுமான் உடன் அதில் சங்கரும் + ஐஸ் இருக்கிறார்கள் அல்லவா 🙂

    நன்றி!

    நெக்ஸ்டு உங்க “ரணகளத்துல” வந்து மீட் பண்றேன் :-).

  3. திரையுலக சூப்பர் ஸ்டார் படத்துக்கு பதிவுலக சூப்பர் ஸ்டார் இன் சூப்பர் பதிவு …

    வேறு எந்த குப்பனுக்கோ சுப்பனுக்கோ இந்த மாதிரி சி டி வாங்க மாட்டாங்க..

    படம் ரிலீஸ் க்கு இன்னும் ரெண்டு வாரம் தான் உள்ளது …

    முதல் நாள் சென்னை சத்யம் மில் , ரெண்டாம் நாள் திருச்சி ரம்பா வில் ..

    பின்னர் சென்னையில் உள்ள மற்ற சங்கம், வெற்றி, தியாகராஜ ,உதயம், ஆல்பர்ட் ம காசி மாயாஜால் மற்றும் ஆராதனா…. பின்னர் வேலூர் அட்லாப்ஸ் மற்றும் பெங்களூரே பீ வீ ஆர் 🙂

    நீங்க எங்க???? நம்ம ஊர்லதானே!!!!

  4. Kalakkalana vimarsanam. Late ah vandhalum latest ah dhan iruku.

    //பலர் வழக்கம் போல
    ரஜினி நாட்டுக்கு என்ன
    செய்தார் ? நாற்று நட்டாரா?
    பயிர் செய்தாரா? எம்குல
    பெண்களுக்கு மஞ்சள்
    அரைத்து கொடுத்தாரா! என்கிற
    ரேஞ்சுக்கு எழுதிட்டு இருக்காங்க//

    Ivanga kekkara kelvikellam office roomku koottittu poidhan badhil sollanum

  5. கிரி நல்ல அலசல் தான் நன்றி எனக்கு முதலில் அரிமா பாடலும் இரும்பிலே ஒரு பாடலும் முதலிலே கேட்டவுடன் பிடித்து விட்டது பிறகு கிளிமஞ்சாரோ காதல் அணுக்கள் பாடல்கள் பிடித்து விட்டது நீங்கள் சொல்வது போல் spb குரல் இப்போதும் இனிமை தான் பாடல்கள் கேட்டு கேட்டு படம் பார்க்க ஆவலாய் உள்ளேன்

    நீங்கள் இந்தியா வருகிறீர்களா

  6. //// எந்திரன் படத்தால் நாட்டுக்கு என்ன நன்மை? ////

    ஹி ஹி ..உங்களுக்கு தெரியாதா கிரி ,எந்திரன் பாட்டால தான் தமிழ்நாட்ல வெல்லாமை சரியாய் இல்லை ,விலை வாசி உயந்ததற்கு காரணம் எந்திரன் பாட்டு தான் …,அப்பன் பாக்கெட் ல திருடி தான் படத்துக்கு போவானுங்க இந்த இளைஞர்கள் என்று நிறைய இருக்கு …..,3 மணிநேரம் ஒரு படத்த பார்க்கிற நேரத்தில உலகத்தையும் ,இந்தியாவையும் திருத்திடலாம் அவங்க நினைப்பு !! இருந்துட்டு போகட்டும் …,விடுங்க கிரி

  7. எனக்கும் முதலில் சில பாட்டுக்கள் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க எல்லாம் பிடித்து விட்டது.
    இந்த‌ பதிவை பல நாளாக எதிர்பார்த்திருந்தேன்.

  8. ///பூம் பூம் ரோபாடா இந்த வருடத்தின் குழந்தைகள் விருப்பப்பாடலாக இருக்கும். இசை சேனல்களில் குழந்தைகள் இந்தப்பாடலை அதில் வரும் ரோபோ ரஜினியின் சேட்டைக்காக அதிகம் விரும்பி கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.///

    கிரி,
    இந்த‌ பாட‌ல் ப‌ட‌த்தில் இருப்ப‌து ச‌ந்தேக‌மே……….

    கார‌ண‌ம்………….

    1. நீங்க‌ வாங்கிய‌ சி.டியில் உள்ள‌ பாட்டு புஸ்த‌க‌த்த‌ பாருங்க‌ ஒவ்வொரு பாட்டுக்கும் அந்த‌ அந்த‌ பாட‌லுக்கு உரிய‌ ஸ்டில்ஸ் இருக்கும் (சிவாஜிக்கும் இதே மாதிரித்தான் இருக்கும்). பூம் பூம் பாட‌லுக்கு ஸ்டில்ஸ் மிஸ்ஸிங். பாட‌லை ப‌ட‌மாக்க‌வில்லை என‌த்தோன்றுகிற‌து.

    2. ஒரு இன்ட்ரோ சாங் (புதிய‌ ம‌னிதா) விஞ்ஞானி வ‌சிக‌ர‌னுக்கு இர‌ண்டு சாங் (கிளிமாஞ்சாரோ, காத‌ல் அனுக்க‌ள்)எந்திர‌ன் சிட்டிக்கு இர‌ண்டு சாங் (அரிமா அரிமா, இரும்பிலே ஒரு இருத‌ய‌ம்). பூம் பூம் சாங்கை ப‌ட‌த்தில் வைத்தால் சிட்டிக்கு மூனு டூய‌ட் வ‌ந்துரும். சோ…… க‌ண‌க்கு உதைக்குது.

    /// (படமும் கூட) A மற்றும் B வகுப்பு ரசிகர்களுக்கு தான்.///

    எல்லா English ப‌ட‌மும் C சென்ட‌ரில் த‌மிழாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டு ச‌க்கை போடு போடுகிற‌து. So ப‌ட‌ம் C சென்ட‌ர் ர‌சிக‌ர்க‌ளை ஏமாற்றாது என‌ நினைக்கிறேன். அஸ்திவார‌மே C சென்ட‌ர் ர‌சிக‌ர்கள்தான்,அவ‌ர்க‌ளை திருப்திப‌டுத்துவ‌துதான் க‌டின‌ம் அதைச் ச‌ரியாக‌ செய்தாலே போதும். இதை ர‌ஜினி அறிவார். So….. ர‌ஜினி ஏமாற்ற‌மாட்டார்.

    ப‌டைய‌ப்பாவிற்கு பிறகு C சென்ட‌ர் ர‌சிக‌ர்க‌ளுட‌ன் அம‌ர்ந்து ப‌ட‌ம் பார்ப்ப‌த‌ற்காக‌வே எங்க‌ ஊருக்கு செல்ல‌ திட்ட‌மிட்டுள்ளேன்.

  9. சங்கர் செந்தில்மோகன் முத்துக்குமார் சிங்கக்குட்டி ஸ்ரீநிவாஸ் Mrs கிருஷ்ணன் தினேஷ் சரவணன் வாசுகி தமிழ் மற்றும் காத்தவராயன் வருகைக்கு நன்றி

    @ஸ்ரீநிவாஸ் நான் ஊருக்குவரமுடியவில்லை. எனவே இந்த முறை சிங்கப்பூர் ல தான் 🙁 கொண்டாட்டம் எல்லாம் போச்சு.

    சரி! எந்திரன் வந்த பிறகு பதிவு எழுத ஆரம்பிக்கபோறேன்னு கூறி இருந்தீங்க.. ஸ்டார்ட் தி மியூசிக் 🙂 எப்பூடி மறக்காமா கேட்கறமா! 😉

    @சரவணன் இல்லை 🙁

    @சங்கர் இது பற்றி எழுத (கூற) நிறைய இருக்கிறது.. இது பற்றி கூறினால் இந்தப்பணத்தில் எத்தனை ஏழைகள் வாழலாம் எவ்வளவு பேர் சாப்பிடலாம்..மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார் ரஜினி!! என்று வழக்கமான பல்லவி தான் வரும்.. செம போர் 🙂 இதைக்கேட்டு அலுத்துப்போச்சு. அரசியல்வாதிக கிட்ட கேட்க வேண்டிய கேள்விய எல்லாம் ரஜினிகிட்டே கேட்டு பதில் வரணும்னு எதிர்பார்க்கறாங்க. இதுல.. சரி விடுங்க…. பேசியும் ஒரு பயனுமில்லை.

    @காத்தவராயன் நீங்க சொல்வதுப்படி இருக்க வாய்ப்பு இருக்கு.. இருந்தாலும் இந்த இசையை வைத்து முன்னோட்டத்தில் காட்சிகள் இருந்தது எனவே படம் வந்தால் தான் தெரியும்.

    இந்தப்படம் கண்டிப்பாக C வகுப்பு ரசிகர்களை கவராது என்பது என் கருத்து.. (அதாவது படையப்பா சந்திரமுகி போன்று) சிவாஜிகூட அவர்களுக்கு திருப்தியில்லை. சில இடங்களில் சரியாக ஓடவில்லை என்பது உண்மை.

  10. கிரி………..

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 2007ல் வெளிவந்த சிவாஜி படத்திற்கு பிறகு வெளிவந்துள்ள ஒரு முழுமையான ஹிட் ஆல்பம் எந்திரன் தான்….

    தூற்றுவோர் என்ன தான் தூற்றினாலும், இது தான் உண்மை….

    திங் மியூஸிக் நிறுவனம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஆடியோ வெளியிடும் உரிமையை 7 கோடி கொடுத்து பெற்றது… தமிழை போலவே, தெலுங்கிலும் ஆடியோ விற்பனை படு சூடு….

    எனக்கு அனைத்து பாடல்களும் பிடித்தமானதாக இருந்தது….

    நல்ல அலசல் கிரி….

    படம் வெளிவந்தவுடன், மீண்டும் ஆடியோ விற்பனை சூடு பிடித்து ஒரு ரவுண்ட் சேல்ஸ் இருக்குமென்று தெரிகிறது…

    ஹிந்தி பதிப்பு ஆடியோ வீனஸ் வாங்கியுள்ளது… அங்கும் நன்றாக விற்பனையாகிறது என்று செய்தி வந்துள்ளது…..

  11. //சரி! எந்திரன் வந்த பிறகு பதிவு எழுத ஆரம்பிக்கபோறேன்னு கூறி இருந்தீங்க.. ஸ்டார்ட் தி மியூசிக் எப்பூடி மறக்காமா கேட்கறமா! //

    நீங்க எப்படி மறப்பீங்க.. பதிவுலக சூப்பர் ஸ்டார் ஆச்சே….ஹ ஹ ஹ ஹா

    கண்டிப்பா ஆரமிக்கறேன் உங்கள் ஆசீர்வாதத்தோடு !! ரிலீஸ் நெருங்க நெருங்க சந்தோஷத்தோடு -ப்ளாக் ஸ்டார்ட் பண்ற கிலி யும் சேர்ந்து விட்டது 🙂

    நானும் ப்ளாக் ஆரமிக்கறேன்னு இல்லாம , நல்ல படியா போக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙂

    ஒரு சந்தோஷமான விஷயம்..இங்க டிரயலர் ரிலீஸ் க்கு புக்கிங் ஸ்டார்ட் ஆய்டுச்சு 🙂

    தலைவர் படத்துக்குதான் இப்படி 🙂

  12. ரொம்ப லேட் , ஆனாலும் நிறைவு , பதிவுலகத்துல தலைவர திட்டி எழுதின பயங்கர famous ஆகிடலாம் போல , எல்லாம் ஜூ வி ஆவி காது கொடுத்தது தான் ..ஆம் நீங்கள் சொன்ன மாறி இப்பலாம் கொதிப்பு வரது இல்ல , boss இவுங்க எப்பவுமே இப்படி தான் அப்டிங்கற பீலிங் தான் வருது 🙂

  13. கிரி,
    தல ரெண்டு நாள் ஊர்ருல இல்லை அதுக்குள்ள செம யா பதிவா. ரொம்ப நல்லா கிரி

    இவங்களுக்கு பதில் சொல்லி சொல்லி முடியல நு ரொம்ப நொந்து போயிடீங்க போல (ரஜினி எதிர் பவங்கள)

    என்திரன் வந்து கலக்கல் லா ஜெயிச்ச பிறகு இன்னும் கலக்கல் லா ஒரு பதிவு மட்டும் வேணும்

  14. படித்தவுடன், ‘ஜால்ராக்களில் சூப்பர் ஜால்ரா-கிரி ஜால்ரா’ என்று எழுந்த எண்ணம் ,என்னைப்போன்ற பெருவாரியான பாமர ‘சி’ ரசிகர்களுக்கும் வந்திருக்கும் .
    நகைப்புத்தரும் ஆய்வு!

  15. @கோபி பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் தான் ஆனா ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டேங்குறாங்க 🙂 பாவம்

    @ஸ்ரீநிவாஸ் என்ஜாய் பண்ணுங்க… மறக்காம ப்ளாக் தொடங்கிடுங்க. ஆர்வமா இருக்கிறேன்.

    @சுனில் முன்பு தான் கோபம் எல்லாம் செமையா வரும் இப்பெல்லாம் இருக்கு ஆனால் முன்பு போல இல்ல.

    @அருண் அடங்க மாட்டீங்க போல 🙂 எழுதலாம்.

    @இராமசாமி சேகர் ஆய்வு ங்கற ரேஞ்சுக்கு கூறி என்னை புல்லரிக்க வைத்துட்டீங்க 🙂 என்ன பார்த்து ஜால்ரா னு சொன்ன மொத ஆளு நீங்க தான் (போக்கிரி விஜய் ஸ்டைல் ல படிக்கவும்) யோவ் இதுக்கு அப்புறம் யாரும் வந்து இரண்டாவதா சொல்லக்கூடாது.. அப்புறம் லொள்ளு சபா மாதிரி ஆகிடும் 😀 அப்புறம் இரண்டாவதா சொன்ன ஆளு நீங்க தான்னு சொல்ல வேண்டி வரும்.. பேச்சு பேச்சா இருக்கனும் 😉

  16. நான் மிகவும் பெருமை பட . இது தமிழ் படம். தமிழனால் உருவாக பட்ட படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here