தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் எரிக்கப்பட்டதற்கு குற்றவாளிகளுக்கு வழங்கிய தூக்குத்தண்டனையைப் பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். Image Credit
பெரும்பாலனவர்கள் தண்டனையை சரி என்றும் சிலர் தவறும் என்றும், இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வர்ணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்போதும் ஒரு பிரச்சனை விவாதம் என்றால் அனைவரும் ஒரே மாதிரி பேச மாட்டார்கள் இரு வேறு கருத்துகள் இருந்தாக வேண்டும்.
காரணம் எளிது அனைவரும் ஒன்றுபோல சிந்திக்க முடியாது. எந்த விசயமாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் மாற்றுக்கருத்து இருக்கும் இருக்க வேண்டும்.
எனவே, இதிலும் மாற்றுக்கருத்துகள் இருந்ததில் எனக்கு எந்தவித வியப்புமில்லை அதைத் தவறாக நினைக்கவுமில்லை.
நம் கருத்தை சரி என்று நினைக்கும் போது மற்றவர்கள் அவர்கள் கருத்து சரி என்று ஏன் விவாதம் செய்யக்கூடாது? அவரவர்க்கு அவரவர் நியாயம்.
இருக்கட்டும்.
தூக்குத்தண்டனை சரி!
என் பார்வையில் தூக்குத்தண்டனை சரி! கண்டிப்பாக வேண்டும்!! என்ற கருத்தை முன் வைக்கிறேன். எனக்கு எப்போதுமே சமுதாயத்தின் மீது கோபங்கள் உண்டு.
எனவே, “தேவதை” டென்ஷன் ஆகாம இருந்தா சரி! பதிவில் கூட என் கோபத்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பேன்.
இதிலும் கோபங்களை ஆதங்கத்தை கொட்டப்போகிறேன். இ
தனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உறுதியாக தெரிந்தாலும், குறைந்தது மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தமாவது குறையுமே என்ற என்ற எண்ணம் தான்.
கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் நின்று விடுமா?
பொறுமையாக யோசித்தால் குற்றங்கள் கடுமையான சட்டங்களால் நிற்பதில்லை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கடுமையான சட்டங்கள் இருக்கும் சவுதி மற்றும் அதைவிட கொஞ்சம் படி குறைவாக இருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன.
அப்புறம் என்ன உங்க பிரச்சனை? என்று அவசரப்படாதீர்கள்!
இந்த சட்டங்களால் 10 தவறு நடக்க வேண்டிய இடத்தில் 10 யையும் குறைக்க (முடியாது) முடியவில்லை என்றாலும் ஒரு நான்கையாவது குறைக்கலாம்.
அந்த நான்கைத்தான் பலர் எதிர்பார்க்கிறார்கள்.
குறைந்த பட்சம் அந்த நான்கு பேர் தவறு செய்யாமல் இருந்தால் கூட அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவார்களே என்ற ஆதங்கம் தான்.
பத்து பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்றால் கடுமையான சட்டங்களால் பத்து பேரும் திருந்தவில்லை என்றாலும் ஒரு நான்கு பேராவது பயந்து அந்த எண்ணத்தை கை விட்டால் அந்த நான்கு பெண்களின் வாழ்க்கையாவது தப்பிக்குமே என்பது தான் பலரின் எண்ணம்.
எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு இந்த நான்கு அல்லது மூன்று பேர் தான் அனைவரும் இல்லை என்றாலும்.
காட்டுமிராண்டித்தனம்
தூக்குதண்டனை தவறு என்று கூறுபவர்கள் பெரும்பாலும் கூறும் வார்த்தை “இது காட்டுமிராண்டித்தனம்” என்று.
எதுய்யா காட்டுமிராண்டித்தனம்?
மூன்று பெண்களைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அனைவரின் முன்பும் பெட்ரோலை ஊற்றி எரிக்கிறார்கள் அது காட்டுமிராண்டித்தனமா..!
இல்லை இந்தக் கொடுமையான செயலை செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் காட்டுமிராண்டிகளா!
அந்தப்பெண்ணின் பெற்றோரைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்!
குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் இறந்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம் 22 வயது வரை வளர்த்து அதுவும் இயற்கை மரணம் என்றால் என்றால் கூட மனதை தேற்றலாம்.
இந்த மாதிரி தன் பெண் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டால், பெற்றோரின் மனம் எப்படி துன்பப்படும் என்று அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள்.
தூக்கில் போடுவதால் இறந்த பெண் வந்து விடப்போகிறாரா?
நல்லா கேட்டீங்க.. நறுக்குன்னு! பகுத்தறிவா யோசித்து புத்திசாலித்தனமா கேட்டீங்க! பொட்டில் அடிச்ச மாதிரி கேட்டீங்க.
எங்களுக்கும் தெரியும் இறந்தவங்க வரமாட்டாங்க என்று ஆனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு என்ன சொல்வீர்கள்?
அவர்கள் அடைந்த துன்பம், மன உளைச்சல்களை எப்படி திரும்பப் பெறுவீர்கள்?
இந்தப் பெண்ணை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை தாமதத்தால் ஒரு பெண்ணின் தந்தை அந்த மன உளைச்சலிலே இறந்து விட்டார்.
அது தெரியுமா உங்களுக்கு?
நியாயமே தெரியாமல் இறந்து போன இந்த காட்டுமிராண்டித் தந்தைக்கு எங்க இருந்து பதில் கூறுவீர்கள்?
தன் மகளை எரித்தவர்களை எதுவுமே செய்ய முடியாமல் இவ்வளோ நாளாக மனம் புழுங்கி இறந்து போன இவருக்கு காட்டுமிராண்டியாக இல்லாத நீங்கள் என்ன வானுலகம் சென்று பதில் தருவீர்களா?
உணர்ச்சி வேகத்தில் பேசாதீர்கள்?
சிரிப்பு தான் வருகிறது இதை கேட்டு. உணர்ச்சி இருப்பதால் தான் நாங்க இதைப்போல பேசுகிறோம்.
இந்தக்கோபம் இந்தப்பெண்களை எரித்ததால் மட்டுமே வருவதல்ல.
காலம் காலமாக நியாயம் கிடைக்காமல் தவறு செய்பவர்கள் ஜாலியாக வெளியே சுற்றிக்கொண்டு இருப்பதை தினம் தினம் பார்த்துப் புழுங்கி வெறுத்து போய் வரும் வார்த்தைகள்.
இப்போது மட்டுமல்ல எப்போது கேட்டாலும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தூக்கு தண்டனை வேண்டும் என்று தான் கூறுவார்கள்.
அப்போது பேசி மறந்தால் மட்டும் தான் உணர்ச்சி வேகத்தில் பேசுவது இவை எல்லாம் காலம் காலமாக மனதில் இருந்து வரும் வார்த்தைகள் தானே ஒழிய உணர்ச்சிவசப்படுவதால் வருவதல்ல.
காட்டுமிராண்டித்தனம் பற்றி எங்களுக்கும் தெரியும், தண்டனைகளின் வீரியம் புரியும்.
தற்போது ஈரானில் தன் முகத்தைக் காட்டியதற்காக ஒரு பெண்ணிற்கு 99 கசையடி கொடுத்தார்களே அதன் பெயர் தான் காட்டுமிராண்டித்தனம்.
பிக்பாக்கெட் அடித்தவனை கொண்டு போய் தூக்கில் போடக்கூறவில்லை. குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒருவரால் மீண்டும் பெற முடியாது என்றாலும் குறைந்த பட்சம் குற்றம் செய்தவருக்கு சரியான தண்டனை கிடைத்தால் மன திருப்தியும் ஆறுதலுமாவது பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும்.
இதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன தவறு கண்டீர்கள்? அனைவரும் உங்களைப்போல மன்னித்து விட காந்தி அல்ல.
மனித உரிமை
இதற்கு பதிலாக *** உரிமை என்று வைத்து இருக்கலாம். மனித உணர்வுகளை புரிந்து கொண்டால் ஏன் நீங்கள் எல்லாம் இப்படி பேசப்போகிறீர்கள்.
ஒரு குற்றவாளிக்கு காட்டும் மனித உரிமையையும், அக்கறையையும் பாதிக்கப்பட்டவருக்கு ஏன் காட்ட மறுக்கிறீர்கள்?
நான்கு பேரை வன்புணர்வு செய்து இருப்பான் அவனை தூக்கில் போடாதே! என்று சொம்பை தூக்கிக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.
அந்த பொறம்போக்கை எல்லாம் என்ன அழைத்து கொஞ்ச சொல்கிறீர்களா?
அவனை வெளியில் விட்டால் இன்னும் இரண்டு பேரை இதே நிலைக்கு ஆளாக்குவான். அப்போது என்ன சொல்வீர்கள்? அப்போதும் கருணை காட்ட வேண்டுமா?
இதில் ஒரு சில பெண்கள் கூட இந்த பன்னாடைகளுக்கு பரிந்து பேசுகிறார்கள் அது தான் இன்னும் கடுப்பை கிளப்புது.
பெண்களே
ஒரு பெண்ணின் மனது, உணர்வுகள் மற்றொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்பார்கள்.
உங்களைப் போன்றவர்களைப் பற்றி எல்லாம் தெரியாமல் இந்த வசனத்தைக் கூறி விட்டார்கள் போல உள்ளது.
இப்படி பேசுற உங்களையெல்லாம் எவனாவது…… சரி விடுங்க! ஏதாவது அசிங்கமா சொல்லிடப்போறேன். நல்லா இருங்க!
மனித உரிமை மனித உரிமை என்று பேசிப்பேசியே தூக்குத்தண்டனை ஏற்கனவே இல்லாம பண்ணிட்டீங்க!
கடைசியா தூக்குல போட்டது குறைந்தது பதினைந்து வருடம் முன்பாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதனால திருட்டுத்தனம் கேப்புமாரித்தனம் பண்ணுற மொள்ளமாறிக எல்லாம் எப்படி இருந்தாலும் வெளியே வந்துடலாம் என்று தைரியமா தப்பு பண்ணிட்டு இருக்கானுக.
குழந்தைகளைக் கடத்தி கை காலை எல்லாம் உடைத்து, கண்ணைக் குருடாக்கி பிச்சை எடுக்க வைக்கறானுகய்யா!
இவனுகளை எல்லாம் எப்படியா மன்னித்து விடச்சொல்றீங்க?
“இவங்க எல்லாம் தெரியாம பண்ணிட்டாங்க… எதுவும் திட்டம் போட்டு செய்யவில்லை அவர்களுடைய சூழ்நிலையால் அப்படி செய்துட்டாங்க” அப்படின்னு மட்டும் சொன்னீங்கன்னு வைங்க…
ஊர்ல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையிலும் திட்டுனதா வைத்துக்குங்க. இவங்க மேல விட இவனுங்களுக்கு பரிந்து பேசும் உங்க மேலதான் அதிக ஆத்திரமாக உள்ளது.
திரைப்படத்தில் எல்லாம் கதாநாயகன் இதைப்போல தவறு செய்தவர்களை தண்டிக்கும் போது ஏன் விசிலடித்து வரவேற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
தன்னால் செய்ய முடியாததை தன் பிம்பமாக இன்னொருவன் செய்யும் போது கிடைக்கும் மனத் திருப்திக்காகவும் ஆறுதலுக்காகவும் தான்.
அதனால் தான் நம்ம ஊர்ல எல்லாம் இதைப் போலப் படங்கள் வெற்றி பெறுகிறது.
தானே தண்டித்ததாக நினைக்கிறார்கள். நிஜத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை இப்படியாவது ஆறுதல் பட்டுக்கொள்வோம் என்ற எண்ணம் தான்.
வன்புணர்வு
உலகிலேயே கொலையை விட மிகவும் கொடுமையான செயல் என்று நினைப்பது வன்புணர்வு.
ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினாலே தாங்க முடியாது ஒருவன் வன்புணர்வு செய்து விட்டான் என்றால் அந்தப்பெண்ணின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.
ஐயோ! என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை கொடூரமாக இருக்கிறது.
இதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று கூறுங்கள் “தூக்கில் போடச்சொல்லும் நீ ஒரு காட்டுமிராண்டி” என்று! செருப்பைக் கழட்டி அடிப்பார்.
இதையும் மீறி ஒருவர் மன்னிக்கிறார் என்றால் அவரை கடவுள் லிஸ்ட்ல் சேர்த்து விடலாம்.
உண்மைச்சம்பவம்
எங்கு நடந்தது என்று நினைவில்லை ஆனால் சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது.
ஒரு கர்ப்பிணி பெண் தன் தங்கையுடன் பூங்காவிற்கோ / எங்கயோ வந்த போது அங்கு இருந்த ஒருவன் துப்பாக்கியை கர்ப்பிணியின் வயிற்றில் வைத்து மிரட்டி உடன் வந்த தங்கையை அக்காவின் முன்னாலே வன்புணர்வு செய்து விட்டான்.
அதாவது உடன் படவில்லை என்றால் வயிற்றில் சுட்டு விடுவேன் என்று! இவனை என்ன பண்ணலாம்? என்று சொல்லுங்கள்.
மன்னித்து விடலாமா! நியாயமா இவன் *** நறுக்கி காக்காய்க்கு போடணும்! நாங்க இவனைப் போல பரதேசிப் பயலை எல்லாம் தூக்கில் தானே போடச்சொல்கிறோம்.
மனித உரிமை பேசும் நல்லவர்களே! நீங்கள் கேட்பது சரி என்று வைத்துக்கொண்டாலும் இவனை மனிதன் லிஸ்ட்லையே சேர்க்க முடியாதே!
சரி விலங்குகள் லிஸ்ட்ல சேர்க்கலாம் என்றாலும் அவை கேவலமாக பார்க்கும்.
அப்புறம் இவனை எல்லாம் எந்த லிஸ்ட்ல தான் சேர்க்கிறது.
எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னு தெரியாத இந்த பன்னிப்பயலுக்கு எல்லாம் பரிந்து பேச வருவீர்கள்.. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை பற்றி யோசிக்க மாட்டீர்கள்.
நல்லா இருக்குயா உங்க மனித உரிமை நியாயம்!!!
இதைப்போல நடந்த பெண்ணிற்கு தன் இழப்பை இந்த தண்டனை கொடுப்பதன் மூலம் ஈடு செய்ய முடியாது ஆனால், குறைந்த பட்சம் அந்த கம்முனாட்டிக்கு கொடுக்கப்படும் தண்டனை மூலம் ஒரு ஆத்மா திருப்தியாவது கிடைக்குமே.
அதைக்கூட “முடியாது! நாங்க சொம்பை தூக்குனா கீழே வைக்க மாட்டோம்” என்று கூறினீர்கள் என்றால் என்னையா அர்த்தம்?
மனித உரிமையைப் பற்றி எங்களிடம் கூறாதீர்கள்.
உங்களைவிட நாங்கள் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறோம் அதனால் தான் எங்கள் உரிமைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா! நியாயம் கிடைக்காதா!! என்று எதிர்பார்க்கிறோம்.
மனித உரிமைக்காக போராட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எல்லாம் எங்களுக்காகத்தான் போராட வேண்டும்.
கொள்ளை அடித்தவனும் ஊரை எமாத்துறவனும் வன்புணர்வு செய்தவனும் கொலை செய்தவனும் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படியே சிறையில் போட்டாலும் ஏதாவது அரசியல் தலைவர் பிறந்த நாள் இறந்த நாள் என்று தண்டனையை குறைத்து வெளியே விட்டு விடுகிறார்கள்.
வெளியே வந்து பாதிக்கப்பட்டவங்க கிட்டே வந்து “பார்த்தியா! நான் வெளியே வந்துட்டேன்.. நீ என்ன மயிரைப் புடுங்க முடிந்தது?” என்று கேட்பான்.
நாக்கை புடிங்கிட்டு சாகலாம் போல இருக்கும்.
ஏன் என்றால் மனித உரிமை பற்றி தெரியாத எங்களைப்போன்ற காட்டுமிராண்டிகளால் அதை மட்டும் தானே பண்ண முடியும்.
ஜனாதிபதி
இந்தப்பெண்களை எரித்தவர்களுக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தி இருந்தாலும் இன்னும் கருணை உள்ளம் ஜனாதிபதி இருக்காங்க..
அவங்க கருணை பொங்கி இவர்களுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யலாம்.
இந்த வெண்ணைகளுக்கு எல்லாம் அப்பவே தண்டனை கொடுத்தால் இனி யாரையாவது எரிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஒரு கணம் யோசிக்க மாட்டானா!
ஐயோ! நம்மைத் தூக்கில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்று!
இவர்களையும் மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை என்று விட்டு விடுங்கள் இனி மற்றவர்களும் அட்வான்ஸ் புக்கிங்கில் எரிப்பார்கள்.
அப்போதும் மனித உரிமையைப் பற்றி லபோ லபோ என்று அடித்துக்கொண்டிருங்கள் அப்போது நீங்கள் கூறுவதை கேட்க உங்கள் வீட்டில் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
தூக்குதண்டனையை நிறைவேற்றினால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படமாட்டார்களா?
என்ன ஒரு கேவலமான லாஜிக்!
பாதிக்கப்பட்டவனை பற்றி மயிரைக்கூட நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள் அனைத்தையும் தப்பு செய்தவனுக்காகவே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அவர்களுக்கு மட்டும் தான் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கா பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்ன அநாதை(நா)யா!
இந்த மாதிரி ஒரு பொறம்போக்கை பெற்றதற்கு வளர்த்ததற்கு குற்றம் செய்தவனின் அம்மா அப்பா வெட்கப்பட வேண்டும்.
அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று நினைப்பது கடவுளால் கூட முடியாது? அப்படி இருக்கும் போது குற்றம் செய்தவனின் குடும்பத்தை நினைக்க சொல்கிறீர்கள்.
உங்க கண்ணுக்கெல்லாம் இவர்கள் மட்டும் தான் தெரிவார்களா! பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் உங்கள் மனித உரிமை லிஸ்ட்ல வரவே மாட்டாங்களா!
தூக்குத்தண்டனையை விடச் சிறைத்தண்டனை ரொம்பக் கொடுமையானது அதனால் தூக்குத்தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை தரச்சொல்கிறீர்கள், நியாயமான பேச்சுத்தான் ஏற்றுக்கொள்கிறேன்.
சிறைத்தண்டனை என்றால் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க அனுமதிப்பீர்களா!
கஞ்சா, சிக்கன், மட்டன், தம்மு, அபின், சரக்கு, குட்டி, செல் போன் இதெல்லாம் இல்லாமல் உண்மையான முழுமையான தண்டனையை அனுபவிக்க உறுதி தருவீர்களா!
ம்ம்ம் முடியாதுல்ல. அப்ப என்ன பண்ணனும்…. அதே தான்.
இக்கட்டுரை உணர்ச்சி வேகத்தில் எழுதிய இடுகையல்ல… இன்றல்ல எப்போது கேட்டாலும் இதுவே என் கருத்து.
அதெல்லாம் முடியாது! அதெப்படி! மனித உரிமைன்னு…. மறுபடியும் ஆரம்பித்தால்….. உங்க அளவிற்கு நான் நல்லவனல்ல அதே போல உங்களைப்போல நல்லவனாக இருக்க விருப்பமும் இல்லை.
உங்கள் வாதப்படி காட்டுமிராண்டியாக இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் அவமானமும் இல்லை.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மனித உரிமை பேசும் காட்டு மிராண்டிகளுக்கு இதெல்லாம் தெரியாது. தூங்கறவனை எழுப்பலாம். நடிக்கறவனை எழுப்புவது கஷ்டம் :(. ஒவ்வொரு வார்த்தையும் நச்சுன்னு நடுமண்டையில் ஆணி அடிக்கற மாதிரி இருக்கு. அந்த மூணுபேரையும் சாதாரணமா தூக்குல போடக் கூடாது. எரிச்சுக் கொல்லணும். அப்பதான் இன்னொருத்தனுக்கு இதுபோல் செய்ய தைரியம் வராது
நான் கூட காட்டு மிராண்டி தான். நாமள்ளுக்கு வந்த தான் வேதனை தெரியும். வேற வீட்டு பெண்கள் தானே.
you have missed a point ! If you hang him to death, it cannot be reversed. And what if he is actually not guilty ! Other than that, you should also note that people who are against hanging does not really ask the convict to be freed. Why can’t this converted to a life sentence ? That is the question. But in country like india, we need to really think hard on whether we have achieved a level of maturity to get rid of hanging.
பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் உறுப்புகளில் கொதிக்கும் என்னை கொட்டி விட வேண்டும்.
தூக்கில் போட்டால் உடனே செத்து போய்விடுவார்கள். எங்கயோ ஒரு படத்தில் பார்த்தேன் மிகவும் கொடுமையான தண்டனை என்னவென்றால் ஒரு மிக குளிர் தண்ணி நிரப்பிய வாளியில் சிறு ஓட்டை போட்டு அதை தலை மேல் திங்க விடுவது. முதல் அது பெரிசா ஒண்ணும் செய்யாது. பிறகு ஒவ்வொரு துளியும் உச்சி மண்டையில ஆணி அடிகிறது போல இருக்குமாம்.
அருமையா சொன்னிங்க வரிக்கு வரி உடன்படுகிறேன்
நானும் அவர்களின் பதிவுகளை கண்டித்து பின்னுட்டம் போட்டேன்
நிஜத்தில் அவர்கள் மனிதநேயமோ , உரிமையோ பற்றி கவலையில்லை
“இவர்களையும் மன்னிக்கிறேன் பாரு நான் எவ்வளவு நல்லவன் ” என காட்டி கொள்வதே அவர்களின் நோக்கம் . மற்றபடி வரப்பு பிரச்சனைக்கே அருவாளை துக்கும் ஆட்கள்தான் அவர்களும்
கிரி,
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொள்ளி என்கிற கோபத்தின் குணம் பற்றி திருக்குறளில் படித்திருக்கிறோம், என்பதற்காக நாம கோபம் கொள்ளாமல் இருப்பதில்லை. நொடி நேரத்தவறு தான் விபத்து எனப்படுகிறது. விளைவுகளைப் பற்றி முன்கூட்டி கோபப்படும் மனிதனால் சிந்திக்கவே முடியாது.
நேற்று கூடப் பாருங்க, கிருஷ்ணகிரியில் என்ன ஒரு கயவாளித்தனம், ஒரு மாணவனை பள்ளி வேன் மோதி இறக்க நேரிட கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு பொருள்களை எரித்து சேதப்படுத்தி இருக்கின்றனர் கிராமத்தினர். நல்ல வேளை அந்த வேளையில் பள்ளியினுள் இருந்த மாணவர்களெல்லாம் அலறி அடித்து ஓடியதால் மாணவர்கள் தப்பினார்கள். இல்லை என்றால் அங்கும் தருமபுரிப் போல் நிறைய மனித எரிப்புகள் ஏற்பட்டிருக்கும், அந்த ஒரு சூழலில் கிராமத்தினர் அனைவரையுமே தூக்கில் ஏற்றவிட முடியுமா ? தருமபுரி சம்பவத்திற்கும் கிருஷ்ணகிரிசம்பவத்திற்கும் விபத்தில் சிக்கினார்கள், தப்பினார்கள் என்பது தவிர்த்து பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் நாம சம்பவங்களில் கொலை விழுந்தால் மட்டுமே உணர்ச்சி வசப்படுகிறோம்.
இவர்களுக்கு தூக்கு தண்டனை போதாது, சாலையில் நிற்க வைத்து பலர் பார்க்க பெட்ரோலை ஊற்றி எரிக்க வேண்டும்.
ஒரு வேடிக்கையான உண்மை இந்த பிரச்சனைக்குள் ஒளிந்துள்ளது எத்தனை பேருக்கு அது நினைவில் இருக்கிறதோ இல்லையோ. அதனால் எந்த ஒரு பிரச்சனயையும் மற்ற ஒன்றோடு ஒப்பிட வேண்டாம்.
1970~80 துகளில் ஆரமித்த இந்த தூக்கு / மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை முன் வைத்த காரணம், “குற்றபின்னணி”.
அதாவது, ஒருவரை கொன்று விட்டால் அப்போது மரணதண்டனை என்று இருந்தது,
அதன் படி, ஒருவர் கோவத்தில் தன் மனைவியை அடிக்கிறார், கீழே விழும் அவர் ஒரு கம்பி குத்தி இறந்து விடுகிறார் இதுவும் கொலைதான், ஆனால் உண்மையில் அந்த பெண்ணை கொல்வது அவர் நோக்கமல்ல.
இன்னொன்று கிரி சொன்ன படி துப்பாக்கியை காட்டி மிரட்டி அல்லது திட்ட மிட்டு வன்புணர்வு செய்து கொன்று விடுகிறார் இதுவும் கொலைதான்.
எப்படி இந்த இரண்டு கொலைக்கும் ஒரே மரண தண்டனை பொருந்தும் என்றுதான் இந்த பிரச்சனை ஆரமித்தது.
ஆனால் நம்ம கலாச்சார காவலர்கள் காலபோக்கில், விசவாயு கொடுத்து நகரையே கொன்றாலும் சரி (ஜாலியன் வாலாபாக் கொலையை விட இது கொடியது) , பஸ்ஸை கொளுத்தி மாணவிகளை கொன்றாலும் சரி, மும்பை போல கேமிரா முன் போஸ் கொடுத்து சுட்டு கொன்றாலும் சரி, அவர்கள் சந்தர்ப்பவாத அப்பாவிகள் என்று வாதாடும் கேவலமான நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
இதற்கு விருமாண்டி படம் ஒரு சிறந்த உதாரணம், அதில் பேட்டி கொடுக்கும் ஒரு வாத்தியாருக்கும், சந்தர்ப்ப குற்றவாளி விருமாண்டிக்கும் தான் இந்த மனித உரிமை, கருணை மனு எல்லாம்.
திட்டமிட்டு வஞ்சம் தீர்க்கும் கொத்தாலருக்கு அல்ல.
பஸ்ஸை கொளுத்தி இத்தனை வருடம் விட்டதே தவறு, எப்போதோ தூக்கில் போட்டு இருக்க வேண்டும் அந்த கட்சிக்கும், தலைமைக்கும் ஒரு ஐந்து முறை எந்த தேர்தலிலும் போட்டி இட தடை விதித்து இருக்க வேண்டும்.
ஆனா கிரி, நீங்க சொன்னதுல ஒன்னே ஒண்ணுதான் இப்ப நடக்க போகுது,
//மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தமாவது குறையுமே//
அவ்வளவுதான்!.
நேர்மையாகவும், கோபமாகவும் உங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தது பாராட்டத்தக்கது…..
வாழ்த்துக்கள் கிரி….
உங்கள் உணர்வுகள் மிகவும் நியாயமானது , மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் ஒருதலை பட்சமாகவே நடந்து வருகின்றனர் , எனக்கு இந்த விஷயத்தில் இரண்டு நிலைப்பாடு இருக்கிறது ,குற்றம் என்பதை அதன் நோக்கம் கொண்டு ஆராய வேண்டும் , எக்காரணத்தினாலும் நிரபராதி தண்டிக்க பட கூடாது என்பதினால் நமது judicial system சற்று அவகாசம் கொண்டே இந்த பிரச்சனையை அணுகுகிறது , அதில் சில விஷமிகள் தப்பவும் செய்கின்றனர் .வன்புணர்ச்சி போன்ற செயல்கள் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுத்தும் விளைவு விவரிக்க முடியாதது , மனித நேய ஆர்வலர்களின் குடும்பத்தில் அது நிகழ்தால் தான் அதன் வலி புரியும் .ஒரு பக்கம் உயிர் பயத்தால் குற்றத்தை அழிக்க முடியாது என்றாலும் குற்றத்தை நிச்சயம் நீங்கள் சொல்லுவது போல் குறைக்கலாம் .திட்டமிட்டு செயல் படும் அத்துமீறல்களுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை தேவை , அதே சமயம் உண்மைலயே உணர்ச்சி கொந்தளிப்பில் நடக்கும் சில செயல்களுக்கு வருந்தும் உள்ளங்கள் இருந்தால் !! அதை பரிசீலனை செய்யவேண்டும்.என்னை பொறுத்த வரை case by case approach தான் இதற்க்கு தீர்வு .கிரி சில நேரங்களில் நாம் உணர்சிகளுடன் இருபதால் தான் மனிதர்களாக உள்ளோம் .வலியும் ,இழப்பும் நமக்கு வந்தால் தான் தெரியும்
இந்த மனிதஉரிமைகள் என்றைக்குமே குற்றவாளிகளுக்கு மட்டுமே குடைபிடிப்பார்கள்… வேட்டிபந்தா பேர்வழிகள்
கிரி…..
கிட்டத்தட்ட இதே மாதிரி தினகரன் ஆஃபீஸ்ல 3 பேர எரிச்சாங்களே… அந்த மேட்டர் என்ன ஆச்சு…..
அந்த குற்றவாளிகளுக்கும் இதே போல் தண்டனை தரவேண்டுமே!!?
அன்புடன்
நண்பருக்கு வணக்கம் மனித உரிமை என்று கூவும் அந்த மாகா மனிதர்களின் வீட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தால்
மன்னித்து அயுள் தண்டனை கொடுத்து ப்புறம் நீங்க சொன்ன மாதிரி தலைவர்கள் பிறந்த நாளில் வெளி வந்து மீண்டு அவர்கள் வீட்டில்
சம்பவத்தை நடத்தி காட்டினால் எப்பிடி இருக்கும் என்று சிந்தித்து பார்க்க சொல்லுங்கள்???. இவங்க மனித உரிமை என்று வேண்டிய விஷயத்திற்கு போராடுவதில்லை இது போன்ற போராடுவதால் நல்ல பப்ளிசிட்டி கிடைகும்லா??? லேசா கைல தீ சுட்டு பாரு தெரியும் உன் வீட்டுல உன் பச்சை குழந்தை விளக்குல கை வச்சு சுட்டு அளுவும் போது பாரு தெரியும் அதன் வலி என்னான்னு வந்துட்டாங்க மனித உரிமைன்னு ??? உங்களை !!! உங்களை!!!! காட்டு மிராண்டி சொன்னவுகதான் க …………….. நீங்க போடுங்க ராஜா நல்ல பதிவு…
பாதிக்கப்பட்டவனை பற்றி மயிரைக்கூட நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள் அனைத்தையும் தப்பு செய்தவனுக்காகவே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கு மட்டும் தான் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கா பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்ன அநாதை(நா)யா! இந்த மாதிரி ஒரு பொறம்போக்கை பெற்றதற்கு வளர்த்ததற்கு குற்றம் செய்தவனின் அம்மா அப்பா வெட்கப்பட வேண்டும்.
குட் குட் கிரி உங்கள் கோபம் நியாயமானது
என்ன செய்வது நீங்கள் சொல்வது போல் மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தமாவது குறையுமே
அண்ணே !!! லெஸ் டென்சன் !!! மோர் வொர்க் !!!! பிரியா விடுங்க ….
நண்பா,
உங்கள் கோபம் உங்கள் வார்த்தைகளில் துடிப்புடன் வெளி வந்துள்ளது.அத்தனையும் மிக ஞாயமானவை. பொதுவாகவே தன் வீட்டின் மேல் கல் விழுந்தாலொழிய வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வியாக்யானம் பேசி காது கேளாதவர் போல் இருப்பார்கள். தன் வீட்டின் மேல் கல் விழுந்தாலோ வெளியே வந்து கத்தி யாருமே உதவிக்கு வரவில்லையே என்று லபோ திபோ என்று அலறுவார்கள்.
பஸ்ஸில் இறந்த அந்த மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் உறவு பெண்ணாக இருந்தால் இதே மனித உரிமை ஆர்வலர்கள் இதே வியாக்யானம் பேசுவார்களா?
அண்ணே … இந்தியாவில் பிரதமர், சோனியா தவிர மிகவும் பாதுகாப்பாக இருக்கரவங்க யார் தெரியுமா? ………. அது அப்சல் குருவும்,கசாப்பும் தான்… எல்லா லெவல்லேயும் இப்படி தாண்ணே ….
Ungal kovam gnayamanadhu. Manidha urimai, mannangatti ellam aduthavanuku varumbodhu solvanunga. Aana ivanga kalai yaravadhu theriama midhichitta kuda adika kai oonguvanga.
Indha 3 pertha thookku dhandanail irundha viduvicha, innum 300 per dhairiyama kilambi varuvan.
இது(வும்) சரிதான்!
அன்புடன்
நண்பருக்கு வணக்கம் மனித உரிமை என்று கூவும் அந்த மாகா மனிதர்களின் வீட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தால்
மன்னித்து அயுள் தண்டனை கொடுத்து ப்புறம் நீங்க சொன்ன மாதிரி தலைவர்கள் பிறந்த நாளில் வெளி வந்து மீண்டு அவர்கள் வீட்டில்
சம்பவத்தை நடத்தி காட்டினால் எப்பிடி இருக்கும் என்று சிந்தித்து பார்க்க சொல்லுங்கள்???. இவங்க மனித உரிமை என்று வேண்டிய விஷயத்திற்கு போராடுவதில்லை இது போன்ற போராடுவதால் நல்ல பப்ளிசிட்டி கிடைகும்லா??? லேசா கைல தீ சுட்டு பாரு தெரியும் உன் வீட்டுல உன் பச்சை குழந்தை விளக்குல கை வச்சு சுட்டு அளுவும் போது பாரு தெரியும் அதன் வலி என்னான்னு வந்துட்டாங்க மனித உரிமைன்னு ??? உங்களை !!! உங்களை!!!! காட்டு மிராண்டி சொன்னவுகதான் க …………….. நீங்க போடுங்க கிரி நல்ல பதிவு…
அண்ணாத்த நானும் உங்களை மாதிரி தான் , இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இத மாதிரி கூத்தெல்லேலாம் அரங்கேறும் , ஆங்கிலேயன் வரி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதற்கே (அதுவும் நாம நாட்ட சுரண்டிகிட்டே ) கட்ட பொம்பன தூக்குல போட்ட வரலாறு எல்லாம் இந்த தே. பசக்களுக்கு தொரியாது தல விடுங்க. எனக்கு உங்களை போலதான் பயங்கர கடுப்பு ,கோவம் , வெறுப்பு , வெறி எழுதின சத்தியமா லிமிடட தந்திடுவேன் இருந்தாலும் எழுத நேரம் கிடைக்கல ,
உங்க பதிவ பார்த்த உடனே உங்களை பாராட்டிட ஒண்ணுமில்ல, உங்களுக்கு தோல் கொடுக்கணும் நினைக்கறேன் தல. ஒரு விஷயம் மூணு பேரோ, முப்பது பேரோ அது மேட்டர் இல்ல அங்க நடந்தது என்ன காட்டு மிராண்டி தனம்முனு மிருகங்களா கொச்ச படுத்த விரும்பல , என்ன மிருகங்க கூட அதுங்களா தொல்ல கொடுத்த தான் கொல்லும் , இதுங்கள எந்த லிஸ்ட்ல சேர்திகறது கிரி . எனக்கு தெரிந்து இவனுங்களுக்கு தூக்கு கூட பத்தாது, உடனே உயிர் போயிடும் கஷ்டம் இல்லாம . இந்த காட்டு மிருகங்க கூட போககரத்துக்கு யோசிக்கும் இடமா பார்த்து கொண்டுபோய் தனியா தொலச்சிடனும் கூட்டமா இல்ல, அல்லது ராக்கெட்ல பயன்படுத்த ( அதாவது எலிய வச்சி சோதிப்பான்களே ! ) அந்த மாதிரி ராக்கெட்டேட ( நம்ம இந்திய ராக்கெட்டோட) சேத்தி அனுப்பிடணும் , என்ன ஒரு அப்பாவி எலியாவது மிஞ்சும். எனக்கு வார்த்தை விவகாரமா வந்து தொலைக்குது அதுனால முக்கியமான இன்னொரு விசயத்தையும் சொல்லிட்டு முடிக்கறேன் .
உங்களுக்கு பிரபகரன்னு ஒருத்தர் இருந்தார் ஞாபகம் இருக்கா, அவர பத்திய கதை எல்லாம் எழுதினால் நேர போதாது ஒரு நாலஞ்சி பதிவாத்தான் போடணும் , அதனால சுருக்கமா மேட்டருக்கு வந்துடறேன் . ஒரு கோவலமான விஷயம் ஒரு தலைவனை ஒருத்தன் கொன்னுட்டான் என்பதற்காக அவரை மட்டும் தண்டிக்காம ( அது சரியா தவறா என்பது இந்த பதிவுக்கு தேவை இல்லாதது ), ஒரு இனத்தையே அழிக்க சொன்னாகளே ! அது எந்த மிராண்டி தனம் எனக்கு புரியால,அப்ப இந்த தாய்மை உள்ளம் எங்க போனது தெரியல , இவனுங்க ,இவளுங்க பத்தி யோசிக்க கூட அறுவறுப்ப இருக்கு , பாவப்பட்ட( எந்த தவறு பாவமும் அறியாத ) இந்த மாணவிகள் கொல்லப்பட்டது மனித குலம் இந்த பூமியில் இருக்கும் மட்டும் மன்னிக்காது , அனால் சில துர்தெய்வங்கள் நாட்டுல இருக்குங்க கொலைகாரனையும் , கொள்ளகாரனையும் ,முடிசெரிக்கியையும் , மொள்ளமரியையும் காப்பாத்த ஆபத்தண்டவனுங்களா !! . அரசியல்வாதிகளும் , மனித உரிமைய தவறா புரிஞ்சிக்கிட்ட வங்களையும், எப்படி எந்த மொழில தீட்டினாலும் பத்தாது. குறைஞ்ச பட்சம் தூக்குல போட்டாலாவது ,அந்த உயிர்கள் சம்பந்த பட்டவங்களாவது ஒரு சதவீதமாவது ஆறுதல் அடைவாங்க , அது மட்டுமே நம்மளால தரமுடிந்த நிவாரணம் . கிரி சாருக்கு ஒரு விண்ணப்பம் உங்கள் அனுமதி இல்லாம உங்க பதிவ என் ப்ளாக் ல போடா போறேன் நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் . ஏன் என்றான் நான் எழுத நினைத்த பதிவு விட சிறப்பாக சுருக்கமாக உங்கள் பதிவும் இருப்பதால் உங்கள் பதிவையே உபயேகித்து கொள்கிறேன் . நன்றி தெடர்ந்து உங்களை பின் தொடரும் நண்பன் பாலா .
முதல் முறையாக இங்கே என் கருத்தை பதிவு செய்கிறேன் . உங்கள் பதில் தேவை நண்பரே !!
பாலா நான் கூறவேண்டிய செய்திகளை கூறி விட்டேன். நீங்கள் என்னுடைய இடுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலா.. சார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் கிரி என்று அழைத்தால் போதுமானது. தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.
This article is good. I feel the same thing.
They should be killed, then only others will not think again to do this kind of crime.
தங்களது இந்த கட்டுரை சிந்திக்கவும் வேதனைப்படவும் வைக்கிறது.
கிரி வணக்கம்
நான் முதன் முதலாய் எழதுகிறேன் . நம்ம எல்லாம் சிந்திக்க தெரிந்தவர்கள் அதனல மனிதர்கள் .தலைவலியும் பல்வலியும் நமக்கு வந்தால்தான் தெரியும் .நாட்டின் முக்கிய அரசியல் தலிவர்கள் வீட்டில் இது போன்று நடந்திருத்தால் அப்போது தெரியும் அவர்களக்கு.