ராவணன் | சிங்கம் பாடல்கள்

19
ராவணன் | சிங்கம் பாடல்கள்

ராவணன்

ந்திரனுக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது ராவணன் தான். Image Credit

நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்து ஒரு வழியாக ஜூன் மாதம் ஹிந்தி மற்றும் போனால் போகிறது என்று தமிழிலும் வருகிறது 🙂 .

பல பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியா வருவதே ரொம்ப மகிழ்ச்சி.

முதலில் ஒளிப்பதிவாளர் மணிகண்டனுடன் பிரச்சனை ஏற்பட்டது அதன் பிறகு அவரை மாற்றி விட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனை நியமித்தார்.

இதனால் மணிகண்டன் எடுத்த காட்சிகளை நீக்கி விட்டு எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் திரும்ப எடுத்தார்.

பிறகு கேரளா காடுகளில் படமெடுக்க அனுமதி கிடைப்பதில் பிரச்சனை, ஒரு வழியாக இவை அனைத்தும் சரியான பிறகு இந்த கடுப்புலையே என்னவோ மணிரத்னம் அவர்களுக்கு நெஞ்சு வலி வந்து விட்டது 🙁 தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பாடல்கள் வெளியாகி விட்டது.

ரகுமான் இந்தப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் வைரமுத்து எழுதி (கலக்கி) இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான தமிழ் பாடல் வரிகளை கேட்க முடிகிறது (சில வரிகளை இசை ஆதிக்கம் செய்கிறது).

கெடாக்கறி

இந்தப்படத்தில் அதிகம் இசை சேனல்களில் கேட்கப்படும் பாடலாக இது இருக்கும். டிபிக்கல் ரகுமான் இசை.

இந்தப்பாடல் திருமண விழாவில் பாடப்படுவதுபோல வரிகள் அமைந்துள்ளது. அலைபாயுதே படத்தில் வரும் யாரோ யாரோடி! பாடலை நினைவுபடுத்துகிறது (இசை அல்ல பாடலின் அமைப்பு). பாடல் இசையும் பாடலும் அதிரடியாக உள்ளது,

முறுக்கேற்றும் பாடல். பாடலை பாடியவர்கள் Benny Dayal, Bhagyaraj, Rayhanah, Tanvi Shah.

காட்டுச்சிறுக்கி

ஷங்கர் மகாதேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இந்தப்பாடலை பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலும் பலரும் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கும். ஒருசிலருக்கு ஷங்கர் மகாதேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரல் பிடிக்கவில்லை, எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. நன்றாகவே உள்ளது.

கள்வரே

இந்தப்படத்தின் மிக மெதுவான பாடல், ஸ்ரேயா கோஷல் இந்தப்பாடலை பாடியிருக்கிறார். அருமையான பாடகர், இவரது குரலில் பலப்பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இதிலும் சிறப்பாகவே செய்துள்ளார்.

ஆனால், என்னை அதிகம் கவரவில்லை (குரலை அல்ல பாடல் மற்றும் இசை). மெலோடி பாடல்களை அதிகம் விரும்புவர்களுக்கு பிடிக்கலாம். பாட்டை கேட்டால் தாலாட்டு பாட்டு போல அவ்வளவு மெதுவாக போகிறது.

கோடுபோட்டா

கெடாக்கறி போல இதுவும் வேகமான பாடல், Benny Dayal இந்தப்பாடலை பாடியிருக்கிறார். இதில் பாடல் வரிகள் பெரும்பாலும் இசையில் அமுங்கி விடுகிறது. சீரான வேகத்தில் செல்லும் பாடல் கடைசியில் ரொம்ப வேகமெடுக்கிறது.

“நேற்றுவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கு இருந்து எங்க சட்டம்” என்று போட்டிப்பாடலை போல உள்ளது.

உசுரே போகுது

இந்தப்படத்தின் மிக அருமையான மெலோடியான பாடல், அட்டகாசமாக உள்ளது. இதன் பின்னணியில் வரும் ட்ரம்ஸ் இசை இந்தப்பாடலுக்கு ஒரு கெத்தை கொடுக்கிறது. இந்தப்பாடலை பாடி இருக்கும் கார்த்திக் அசத்தி இருக்கிறார்.

இசைக்கேற்ற பொருத்தமான குரல். “உசுரே போகுது உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” என்று கார்த்திக் பாடும் போது இவரது குரலும் பின்னணி ட்ரம்ஸ் இசையும் வரிகளும் ஒன்றிணைந்து நம் உடலில் மின்சார அலைகளை ஏற்படுத்துகிறது.

நம்ம உசுரு போய்டும் போல பாடலில் 😉 வைரமுத்து வரிகள் அருமை, எவ்வளோ நாள் ஆச்சு இதைப்போல வரிகளை கேட்டு. நிஜமாகவே பாடல் பட்டய கிளப்புகிறது.

வீரா வீரா

தீம் பாடலைப்போல உள்ளது. பாடலில் ஹிந்தி மொழி வரிகள் கூட வருகிறது. ஒருவேளை ஹிந்திப் பாடலை இங்கே பொருத்தமாக மாற்ற முடியவில்லையா! அல்லது ஹிந்தி பாடல் வரிகள் வரும் இடமாகவே உள்ளது.

எனக்கு உண்மையில் ஹிந்தி நகி மாலும் தமிழில் இல்லாததால் நானே அது ஹிந்தி யாக இருக்கும் என்று முடிவு செய்து விட்டேன் 😀 பாடலைப்பாடியவர்கள் Vijay Prakash, Keerthi Sagathia

பாடல் எப்படி இருந்தாலும் அதை இன்னும் சிறப்பாக மணிரத்னம் எடுத்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பாடல் நிச்சயமாய் எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்து இருக்கிறது. முடிவாக ரகுமான் வைரமுத்து Rocks!

சிங்கம்

சிங்கம்

சுறா தோல்வியடைந்ததால் சிங்கம் படத்தைச் சன் டிவி விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. படத்தை ஹரி இயக்கி உள்ளார்.

DSP என்று செல்லமாக அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.. மறுபடியும் ஹரி சூர்யா DSP ஆறு படத்திற்கு பிறகு இணைந்துள்ளார்கள்.

இது சூர்யாவிற்கு 25 வது படம்.

DSP மினிமம் கியாரண்டி இயக்குனர் மாதிரி மினிமம் கியாரண்டி இசையமைப்பாளர், எப்படியும் பாடலை ஹிட் செய்து விடுவார்.

இந்தப்படமும் விதிவிலக்கல்ல அனைத்து பாடல்களும் வழக்கமான அவரது ஸ்டைல் ல் உள்ளது.

குறிப்பாக இளையதளபதி பாடலைப்போல உள்ளது (எடுத்துக்காட்டு வில்லு, இன்று வரை சலிக்காமல் கேட்கிறேன் படம் சங்கானாலும்).

வழக்கமாக DSP பாடல்களில் ட்ரம்ஸ் அதிகம் இருக்கும், இதனால் வேகமான பாடலாக இருந்தாலும் ரொம்ப இரைச்சலாக இருக்காது.

இதுவே இவரது பலம்.

ராவணன் படத்தில் பாடல் வரிகள் பெரும்பாலும் அழகு தமிழில் இருந்தால் இங்கு அதற்கு எதிர்மாறாக உள்ளது.

ஒரு சில பாடல்கள் தமிழ் பாடலா! ஆங்கில பாடலா! என்று சந்தேகம் வரும் படி பாடல் வரிகள்.

இப்பெல்லாம் யாரு பாடலை கேட்கறாங்க இசை தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே போல வழக்கமான தெலுங்கு வாடை பாடல்களில்.

இதில் அனைத்து பாடல்களுமே கண்டிப்பாக ஹிட் ஆகும், சந்தேகமில்லை. அதனால் எனக்கு ரொம்ப பிடித்த இரு பாடலை மற்றும் கூறுகிறேன்.

நானே இந்திரன் நானே சந்திரன்

இந்தப்பாடல் சரவெடியாக இருக்கும் துளிகூட சந்தேகமில்லை.

சன் டிவி இதை ட்ரைலரில் போட்டு நொறுக்கப்போகிறார்கள். இந்தப்பாடலில் வரும் ட்ரம்ஸ் இசை நம்மை முறுக்கேற்றுகிறது.

துவக்கத்தில் மாணிக்க விநாயகமும் தொடர்ந்து Benny Dayal ம் தூள் கிளப்பி உள்ளார்கள்.

பலமுறை கேட்டு விட்டேன் இதன் ட்ரம்ஸ் இசைக்காகவும் பாடல் பாடும் ஸ்டைல்க்காகவும். பாட்டை நன்றாக காட்சிப்படுத்தி இருந்தால் இன்னும் மெருகேறும்.

டிபிக்கல் கதாநாயகன் அறிமுக பாடல்.

காதல் வந்தாலே

இந்தப்பாடல் முதலில் கேட்டால் ஆப்ரிக்கா பாட்டை எங்காவது கேட்க ஆரம்பித்து விட்டோமா! என்று நமக்கு சந்தேகம் வந்து விடும் 🙂 அந்த அளவிற்கு துவக்கம் உள்ளது.

ட்ரம்ஸ் பீட் அதிகம் இருப்பதால் இந்தப்பாடல் எனக்கு அதிகம் பிடித்தது.

உற்சாகமான பாடல். இன்னும் கொஞ்ச வருடம் சென்றால் DSP தமிழ் படங்களுக்கு ஆங்கில வரிகளை மட்டுமே பயன்படுத்துவார் போல இருக்கே!

ஆக மொத்தத்துல மெலடி ரசிகர்கள் கொஞ்சம் எட்டத்தான் நிற்க வேண்டும்.

அனைத்து பாடல்களும் வேகமான பாடல்கள் 🙂 . DSP பாடல்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் சிங்கம் பாடல்கள் பிடிக்கும், அவரது முந்தைய பாடல்கள் பிடிக்காது என்றால் இதுவும் பிடிக்காது.

படத்தின் பாடல்களும் பாடியவர்களும்

நானே இந்திரன் நானே சந்திரன் – மாணிக்க விநாயகம், Benny Dayal (பாடல் விவேகா)

காதல் வந்தாலே – Baba Segal, பிரியதர்ஷினி (பாடல் விவேகா)

என் இதயம் – சுசித்ரா, திப்பு (பாடல் நா முத்துகுமார்)

சிங்கம் சிங்கம் (தீம் பாடல்) – தேவி ஸ்ரீ பிரசாத் (பாடல் மேகா)

Stole My Heart – ஷான், மேகா (பாடல் விவேகா)

Stole My Heart (unplugged) – ஷான் (பாடல் ஹரி)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

 1. கிரி,
  பகிர்வுக்கு நன்றி தல. ஆமாம் சிங்கம் ல ரெண்டு பாட்டுக்கு தான் விமர்சனம் இருக்கு, ஏன் தல எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கா?

 2. சிறப்பான திறனாய்வு கலக்கல்
  ரஹ்மான் பாடல் பற்றி சிறப்பாக எழுதி இருப்பதற்கு நன்றி

  சில அரை குறைகள் ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் பாடல் சரி இல்லை என்று எழுதி பெரிய ஆள் ஆகா பார்க்கும் நேரத்தில்
  சிறப்பான திறனாய்வு குட் ஒன்

 3. நல்ல தெளிவான விளக்கமான விமரிசனங்கள். பாராட்டுக்கள் கிரி. (அட நம்ம பேரும் கிரி தாங்க, வித்தியாசம் தெரியட்டுமேன்னு இப்போ என் ஊரை பேரு முன்னால இங்கே போட்டுக்கிட்டேன்)

  நல்ல அழகான வடிவமைப்புடன் உள்ளது உங்கள் தளம். கொஞ்சம் பார்க்கப் பொறாமையா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்.

  அப்டியே நம்ம தளத்துக்கு ஒரு சுற்றுலா வந்து உங்க கருத்தையும் சொல்லுங்க.

 4. என்னோட கருத்து கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. அதாவது ரஹ்மான் ஹிந்தி பாடலுக்கு தான் முதலில் இசை அமைத்தார் .. அதன் பிறகு தமிழ் பாடல்கள் டப்பிங் படங்களில் வருவது போல் சும்மா இசைக்கு வரி எழுத பட்டன… டைரக்ட் தமிழ் songs போல் இல்லை.. என்பதே என் ஏக்கம் … 🙂

 5. சிங்கம் பாட்டு அசிங்கமா இருக்குன்னு பய புள்ளைக சொன்னானுவ

 6. கிரி ,

  சிங்கம் பாட்டு நல்லா இல்லை ,போகப்போக ஹிட் ஆகுதா பார்போம் …,இராவணன் உசுரே போகுது பாட்டு மட்டும் நல்லா இருக்கு

 7. சிங்கம் trailer பார்த்தேன் (நானே இந்திரன் … பாட்டு) .. Navratna Cool விளம்பரத்தில் இருந்து, Ramraj வேட்டிகள் & பனியன்கள் விளம்பரமோனு நினச்சுட்டேன் … 🙁

 8. அருண், ஹாய் அரும்பாவூர், பிரியமுடன் பிரபு, மாதவரம் கிரி, பாலாஜி, கிறுக்கல் கிறுக்கன்,ஷங்கர் மற்றும் தமிழ் வருகைக்கு நன்றி

  @அருண்: ஆமாம் அருண். வழக்கமான பாடல்கள், புதிதாக எதுவுமில்லை.

  @ மாதவரம் கிரி :கண்டிப்பாக வருகிறேன் 🙂

  @ பாலாஜி: நீங்கள் சொல்வது உண்மை தான். அதைத்தான் நான் முதலிலேயே கூறி இருக்கிறேன். போனால் போகிறது என்று தமிழிலும் வருகிறது என்று 🙂

  @ கிறுக்கல் கிறுக்கன் அண்ட் ஷங்கர்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை 🙂

  @ தமிழ்: சன் போடுற ட்ரைலர் பார்த்தால் சூர்யாவும் அடுத்த விஜயாக முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. உங்கள் விளம்பர கமெண்ட் ரசிக்கும் படி உள்ளது 🙂

 9. கிரி ராவணன் பாடல்கள் பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க நான் படம்
  பார்க்க ஆவலா இருக்கேன்

 10. இன்னும் இந்த பாடல்களை கேட்கவில்லை, ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்

 11. சரவணன் ராவணன் பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு.. வெரைட்டி இருக்கு

  உடன்பிறப்பு இதுல உள்குத்து எதுவுமில்லையே! 😉

 12. பதிவுகள் நன்றாக உள்ளது !!! .. ஒங்க ஊர்ல நடக்குற செம்மொழி மா நாடு பத்தி எழுதுங்க!!!

 13. கிரி: வேர்ட்ப்ரஸ்க்கு மாற்றியதும் இப்போத்தான் உங்க தளத்துக்கு வர்றேன். இன்னும் ராவணன் பாட்டுகளும், சிங்கம் பாட்டுக்களும் கேக்கலை. உங்க விமர்சனம் ஹேல்ப்ஃபுள்ளா இருக்கு. நன்றி .

  அப்புறம் என் இ-மெயில் ஐ டி யை காண்ஃபிடெண்ஷிலா வச்சிருங்கனு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். 🙂

  -வருண்

 14. @ ஜாவா செம்மொழி மாநாடு பற்றி எழுத வேண்டும் என்றால் அங்கு நடந்த மேம்படுத்துதல் என்ற பெயரில் அங்கிருந்த மரங்களை வெட்டி கோவையை மொட்டையாக்கிய கொடுமையை தான் எழுத வேண்டும் 🙁 ஏன்டா! செம்மொழி மாநாடு எங்க ஊருக்கு வந்தது என்று வருந்துகிறேன். தமிழ்நாட்டுல இருக்கிற குளுமையான ஊர் என்ற பெயரை முற்றிலும் துடைத்து விட்டார்கள்.

  @ வருண் என்னை நீங்க 100% நம்பலாம். கிரி எப்போதும் நம்பிக்கையான ஆளுன்னு நீங்க நம்பலாம் 🙂

 15. //@ ஜாவா செம்மொழி மாநாடு பற்றி எழுத வேண்டும் என்றால் அங்கு நடந்த மேம்படுத்துதல் என்ற பெயரில் அங்கிருந்த மரங்களை வெட்டி கோவையை மொட்டையாக்கிய கொடுமையை தான் எழுத வேண்டும் 🙁 ஏன்டா! செம்மொழி மாநாடு எங்க ஊருக்கு வந்தது என்று வருந்துகிறேன். தமிழ்நாட்டுல இருக்கிற குளுமையான ஊர் என்ற பெயரை முற்றிலும் துடைத்து விட்டார்கள்.//

  6 மாதமாக எல்லா சாலைகளையும் குழி பறித்து போட்டு, போக்குவரத்து இடையுரையும் எழுதுங்க.. 🙁

 16. அப்பாடா ராவணன் பற்றி //முடிவாக// வரி என்னை கவர்ந்தது :).

  ரகுமானை விமர்சித்து வந்த இன்னொரு இடுகையை படிக்க நேர்தமைக்கு வருத்திக்கொண்டு இருந்தேன் 🙁 .

  சிங்கம் இன்னும் கேட்கவில்லை, இந்த வார இறுதியில் கேட்க முயற்சிக்கிறேன்.

  தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி கிரி (~~).

 17. @ தமிழ் : தற்போது நான் ஊரில் இல்லாததால் முழுமையானா சிரமங்கள் தெரியாதவனாக இருக்கிறேன் 🙁

  @ சிங்கக்குட்டி விமர்சிப்பவர்களை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்களை ஒதுக்கி தள்ளுவதே நமக்கு நல்லது.

 18. அருமையான புசிக்கக்கூடிய பதிவொன்று சகோதரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here