Raajneeti (2010 இந்தி) | A Political Thriller

2
Raajneeti

ரசியல் படம்னு சொல்லுவாங்க, அதுல கொஞ்சம் அல்லது அதிகமா அரசியல் இருக்கும். Raajneeti படம் முழுக்கவே அரசியல் தான். image Credit

Raajneeti

அரசியல் சாணக்கியத்தனம் என்று கூறுவார்கள் இல்லையா அது மாதிரியான படம். சாணக்கியத்தனம் என்பதோடு முழுக்க அரசியல் தான்.

நல்லவன், கெட்டவன், நல்லது, கெட்டது என்று யாருமில்லை, எதுவுமில்லை.

சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அரசியல் சார்ந்து எப்படி முடிவு எடுக்கப்படுகிறது என்பது கூறப்படுகிறது.

ஒவ்வொன்றிலும் உள்ள அரசியலை பார்த்தால், பொதுமக்கள் லஞ்சம் ஊழல் என்று பாதிக்கப்பட்டு இருந்தாலும், எவ்வளவு நிம்மதியாக இருக்கோம் என்று புரிகிறது.

தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கொருவர் கட்சிப்பதவிக்காக எப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பதே கதை.

மஹாபாரதக் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக வைத்து இதில் கதாப்பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்கள்.

கிருஷ்ணன் / பீஷ்மராக நானா படேகர், அர்ஜுனனாக ரன்பிர் கபூர், அபிமன்யு, பீமனாக ராம்பால், துரியோதனனாக மனோஜ் பாஜ்பேயி, கர்ணனாக அஜய் தேவ்கன்.

கதாப்பாத்திரங்கள்

ரன்பிர் அலட்டிக்காத கதாப்பாத்திரம், அனைத்தையும் பொறுமையாகக் கையாள்பவர். ராம்பால் ஆவேசமானவர், அவசரப்படுபவர்.

ரன்பிர் பொறுமையான ஆளாக இருந்தாலும், ஆபத்தான நபராக உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்தாலும், உள்ளூர் அரசியல் எப்படி அவருக்கு எப்படி எளிதாகக் கையாளத்தெரிகிறது என்பதே நம்ப முடியாததாக உள்ளது!

புதுப்பேட்டை படத்தில் அழகம்பெருமாள், ‘அரசியல் குமாரு.. அரசியல்‘ ன்னு சொல்வாரே அது தான் ஒவ்வொரு காட்சியிலும் நினைவுக்கு வருகிறது.

Raajneeti யில் நல்லவன் என்று கிடையாது, யாராக இருந்தாலும், தங்களை நிலை நிறுத்தத் தவறு செய்கிறார்கள்.

அரசியல் படம் என்றால், இரு கட்சிகளுக்கிடையே நடக்கும் சண்டையாக, போட்டியாக இருக்கும் ஆனால், இதில் உட்கட்சி பூசலாகக் காண்பிக்கப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளம்

நானா படேகர், அஜய் தேவ்கன், ரன்பிர், மனோஜ் பாஜ்பேயி, கத்ரீனா கைஃப், நசுருதீன் ஷா என்று அனைவருக்குமே பொருத்தமான கதாப்பாத்திரங்கள்.

ஒருத்தர் கூடத் தேவையற்று இருக்கிறார் என்று கூற முடியாது. நசுருதீன் ஷா மட்டுமே வந்த வேகத்தில் செல்கிறார்.

அனைவருமே கதைக்குள் எதோ ஒரு வகையில் முக்கியக் கதாப்பாத்திரமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு

ஒரு சில காட்சிகளை மிகப்பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள்.

அதே போலத் தேர்தல் காலக் கூட்டங்கள், வீடுகள், பரப்புரைகள் என்று அனைத்துமே சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் படமென்றால், பிரம்மாண்டம் இருக்க வேண்டும். கூட்டம் நம்பும் வகையில் இருந்தாலே, அக்கதைக்குண்டான மதிப்பும் உயரும்.

இவையனைத்தும் ஒருங்கே கையாளப்பட்டுள்ளது.

சுவாரசியமான காட்சிகள்

யார் செய்வது சரி? தவறு? என்ற வாதத்துக்குள் போகாமல் ‘அரசியல்‘ என்ற ஒன்றை மட்டும் மையமாக வைத்துத் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.

அதாவது அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.

இறுதியில் நானா படேகர் கூற வருவதும் இதைத்தான்.

அனைவரும் விவாதித்து அஜய் தேவ்கனுக்கு செக் வைக்கும் காட்சி ரசிக்கும்படியிருக்கும்.

அரசியலுக்காக எவ்வாறு சமரசம் ஏற்படுத்தப்படுகிறது என்பது வியப்பளிக்கிறது.

Raajneeti துவக்கம் முதல் இறுதி வரை ஏதாவது ஒரு அரசியல் பரபரப்பு இருந்து வருகிறது. அதே சமயம் விடை தெரியாத கேள்விகளும் உள்ளது.

அரசியல் படங்களில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

NETFLIX ல் உள்ளது.

Directed by Prakash Jha
Produced by Prakash Jha
Written by Prakash Jha
Screenplay by Anjum Rajabali, Prakash Jha (Dialogue)
Story by Prakash Jha
Starring Ranbir Kapoor, Ajay Devgn, Nana Patekar, Katrina Kaif, Arjun Rampal, Manoj Bajpayee, Sarah Thompson, Naseeruddin Shah
Music by Wayne Sharp, Pritam, Aadesh Shrivastava, Shantanu Moitra
Cinematography Sachin Kumar Krishnan
Edited by Santosh Mandal
Release date 4 June 2010
Running time 170 minutes
Country India
Language Hindi

தொடர்புடைய கட்டுரை

புதுப்பேட்டை [2006] “The King Of Gangster Movies”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. இதுவரை இந்த படத்தை பார்க்கவில்லை கிரி, உங்களின் பதிவை படித்த பின் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. அவசியம் பாருங்க.. நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல், அரசியல் என்ற ஒரு கோணத்தில் மட்டுமே படத்தை எடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here