உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

20
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

மிழக மக்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள் அது சந்தோசமாகட்டும் வருத்தமாகட்டும் கோபமாகட்டும் அனைவரது எண்ணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். Image Credit

இதற்கு எடுத்துக்காட்டாக நமது தேர்தலையே கூறலாம்.

ராஜிவ் இறந்த போது ஒட்டு மொத்தமாக ஜெ க்கு ஒட்டுப் போட்டார்கள்.

பின் அவர் அடித்த வெளிப்படையான கொள்ளையை ஆடம்பரத்தை பார்த்து நொந்துபோய் ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்தார்கள்.

பின்னர் கலைஞரைக் குண்டு கட்டாகத் தூக்கி சென்றதை பார்த்துக் கொந்தளித்துப் பாராளுமன்ற தேர்தலில் 40/40 க்கு திமுக விற்குக் கொடுத்தார்கள்.

இதைப் போல ஒட்டுமொத்த மக்களும் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள், மாற்றிச் சிந்திப்பவர்கள் ஒட்டு போடுவதில்லை 😉 தற்போது இது மாறி வருகிறது.

ஜெ கலைஞர் அரசை மைனாரிட்டி!!! அரசு என்று கூறும் அளவிற்கு.

உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

பதிவுலகத்திலையும் அவ்வாறே உள்ளது, ஏதாவது எதிர்ப்பு என்றால் எல்லோரும் சேர்ந்து கும்முவது ஆதரவு என்றால் கண்மூடித்தனமாக ஆதரவு தருவது.

நானும் இதைப் போலவே முன்பு இருந்தேன், எந்த விசயமாக இருந்தாலும் உடனே உணர்ச்சிவசப்படுவேன், கோபப்படுவேன் ஏன் என்று பொறுமையாக யோசிப்பது கிடையாது.

சுர்ர்ருனு கோபம் வரும்.. அதனால் நானும் அவசரத்தில் உடனே ஒரு சில பதிவு போட்டு இருக்கிறேன்.

பின் ஒரு நாள் கழித்துக் கோபம் தணிந்து ச்சே! தேவையில்லாம அவசரப்பட்டுட்டோமோ! என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்.

அனுபவங்களில் புரியும் தவறுகள்

என்கிட்டே உள்ள ஒரு நல்ல பழக்கம் தவறுகளைத் தொடர்ந்து செய்வதில்லை, கிடைக்கும் அனுபவத்திலிருந்து தவறுகளை உடனடியாகத் திருத்திக்கொள்வேன்.

அதே போல இப்படி உணர்ச்சிவசப்பட்டதால் ஏற்பட்ட தவறுகளைச் சரியாக இனம் கண்டு என்னை மாற்றிக்கொண்டேன் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

எப்போதுமே உணர்ச்சிவசப்படுவதால் நாம் மேலும் மேலும் தவறு தான் செய்கிறோமே தவிர நாம் அதனால் செய்யும் தவறை உணருவதில்லை.

நம் எதிர்ப்பைக் காட்டி விட்டதாகவே நினைத்துப் பெருமிதம் கொள்கிறோம்.

வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குப் போக வேண்டும் என்றால் முதலில் அளவிற்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை நிறுத்த வேண்டும்.

எதுவும் அளவோடு புரிந்து கொண்ட உணர்வோடு இருப்பதே சரியான செயலாக இருக்கும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறமாதிரி ஆத்திரத்தில் இருப்பவனுக்குத் தன் முன்னே இருப்பது எல்லாமே தவறாகத்தான் தோன்றும், விளக்கினாலும் மண்டையில் ஏறாது.

விமர்சனத்தை ஏற்கப் பழக வேண்டும்

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளப் பழகவில்லை என்றால், நாம் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியது தான்.

ஒன்று நம் தரப்பு நியாயத்தைப் பொறுமையாகக் கூற வேண்டும் அல்லது ஒதுக்கித் தள்ள வேண்டும்.

இவை இரண்டும் இல்லாமல் புழுங்கி கொண்டு கோபப்பட்டுக்கொண்டு இருப்பதில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.

அவசரம்

சமூகத்தில் பல சம்பவங்கள் நடக்கிறது அவை கோபம் தரக்கூடியதாகவும் இருக்கலாம், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கலாம்.

கோபம் தரக்கூடிய செய்தி என்று ஒன்று இருந்தால் அதை அனைவரும் உடனே கண்டபடி விமர்சிக்கிறோம்.

அதில் உள்ள உண்மை என்ன! உடனே அவ்வாறு விமர்சிக்கலாமா!! என்ற எதையும் நாம் ஆராய்வதில்லை.

நம்முடைய முதல் எண்ணம், கிடைத்த செய்தியை வைத்து உடனே காரசாரமாக விமர்சிக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வரும் செய்தி நாம் பொங்கியதற்குச் சம்பந்தமே இல்லாமல் மாறி இருக்கும், இருந்தாலும் நாம் திட்டினது திட்டினது தான்.

இதே கொஞ்சம் அமைதி காத்து இருந்தால் நமக்குக் கொஞ்சம் யோசிக்க அவகாசம் கிடைத்து இருக்கும், நியாயமான விமர்சனமாகக் கொடுத்து இருக்கலாம்.

இதனால் எனக்குத் தெரிந்து கிடைக்கும் ஒரே ஆதாயம் “ஹிட்ஸ்” மட்டுமே!

போதை மருந்தாவது அதைப் பயன்படுத்தவர்களை மட்டுமே பாதிக்கிறது, இந்த “ஹிட்ஸ்” போதை அடுத்தவர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.

கோபத்தை வெளிப்படுத்தக் கூடாதா!

அப்படின்னா நாம கோபத்தையே வெளிப்படுத்தக் கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!!

என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு!

அதுவும் இந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள்.

அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாகப் புரிந்து கொண்டதாக இருக்கணும்.

கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டுப் பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே!

அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!

தவறை திருத்திக்கொள்ளுங்கள்

நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வீம்புக்கு நம்மை நியாயப்படுத்திப் பேசலாம், ஆனால் உண்மை என்ன என்பதை நாம் அறிவோம், நம் மனசாட்சி அறியும்.

சரி தவறு செய்து விட்டோம்! ஏற்றுக்கொள்ளத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை… ம்ம்ம் என்ன பண்ணுறது!

விட்டுத் தள்ளுங்கள், ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டும் என்பதில்லை அடுத்த முறை தவறை திருத்திக்கொள்ளுங்கள்.

அப்போதும் சரி செய்யாமல் இப்படித்தான் இருப்பேன் என்றால் இழப்பு நமக்குத் தான்.

ஒவ்வொரு பதிவு எழுதும் போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது, அட! பின்னூட்டத்தில் கூடக் கிடைக்குதப்பா!

பல மாற்றுக் கருத்துக்கள் கிடைக்கிறது. நாம் இப்படி எழுதி இருக்கக் கூடாது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் அனுபவத்தைப் பெறுகிறேன்.

எனக்கு கிடைத்த அனுபவங்கள் அளப்பரியது.

தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்கிறேன். அதை அவமானமாக நினைப்பதில்லை, திருந்தி அல்லது திருத்திக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.

யோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகள்

கோபத்துடன், யோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவும் விமர்சனமும் சரியாக இருக்காது, அதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

முன்பெல்லாம் எனக்குப் பிடிக்காத விசயங்களைப் படித்தால் கோபம் வரும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன்.

தற்போது அப்படியா! சரி என்ற அளவிலே எடுத்துக்கொள்ள எனது அனுபவங்கள் உதவுகின்றன. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளப் பழகி (கொண்டு)இருக்கிறேன்.

மற்றவர்கள் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இவை அனைத்தும் பதிவு எழுத ஆரம்பித்த பிறகே கிடைத்தது.

“காதலன்” படத்துல ஒரு வசனம் வரும் கோபமோ சந்தோசமோ கொஞ்சம் பொறுமையாக இருங்க என்று.

அது உண்மையில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம் பதிவுலகத்திற்குச் சரியாகப் பொருந்தும் 🙂 .

எதா இருந்தாலும் உடனே தைய தக்கான்னு குதிக்க வேண்டியது, அப்புறம் தவறு என்று தெரிந்த பிறகு திருட்டு முழி முழிக்க வேண்டியது.

ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள்.

ஒரு சிலருக்கு மற்றவர்கள் சுட்டிகாட்டினால் மட்டுமே தங்கள் தவறு புரியும். ஒரு சிலர் மற்றவர்கள் சுட்டி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாமல் தாம் கூறுவது தான் சரி என்று கூறுவார்கள்.

மேற்கூறியதில் நான் முதல் வகை, நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

  1. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி. உங்கள் பதிவின் மூலமாகவே பாலா அவர்களின் இடுகையை வாசிக்க வாய்த்தது. முன்னதாக எனது கருத்தும் அதுவாகவே இருந்த்படியால், வரிக்கு வரி வழிமொழியத் தோன்றியது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

  2. // கோபத்துடன், யோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவும் விமர்சனமும் சரியாக இருக்காது //

    மொத்தக் கட்டுரையின் சாராம்சமே இதுதான். நல்ல பக்குவம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  3. கருத்து சொல்வதும் உணர்ச்சிவசப்படுதலில் ஒரு வகையா!?

    (சும்மா கோபம் வருதான்னு டெஸ்ட் பண்ணேன்)

  4. சரிங்க… அடுத்த தடவ அந்த அம்மாவுக்கே ஓட்டு போட்டுர்றேன்!!! 😉

  5. //நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை//நிட்சயமாக உண்மை தான் நண்பரே…..இன்றைய இந்த சமுதாயம் மாற்றுக்கருத்துகளை உள்வாங்க மறுக்கிறது. ஏற்றுக்கொள்கிறோம் அல்லது இல்லை என்பதற்கப்பால் அவற்றையும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும். மனதில் பட்டதை உடனடியாகவே வெளிப்படுத்துவது எம்மை அடுத்தவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியில் இருந்து தடுத்து எம்மை நல்ல வழியில் செல்ல வழிவகுக்கிறது என்பது என் எண்ணப்பாடாக இருக்கிறது. ஆனாலும் எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..மிகவும் நல்ல பதிவு நண்பரே….

  6. ம்…. பக்குவப்பட்டுக்கொண்டு வருகிறீர்கள் கிரி. இந்நிலை தான் உயர்வுக்கு வழி வகுக்கும்.

    பிரபாகர்.

  7. தற்கொலை மாதிரி அந்த நொடி தவிர்த்தால் ஒரு உயிர் பிழைக்கும். ஆமாம் கிரி, வார்த்தையால் கொல்வதும் கொலைதான். நல்ல பயனுள்ள பதிவு. என்னைச் சுட்டியமைக்கு நன்றியும்.

  8. //ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மற்றவர்கள் சுட்டிகாட்டினால் மட்டுமே தங்கள் தவறு புரியும். ஒரு சிலர் மற்றவர்கள் சுட்டி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாமல் தாம் கூறுவது தான் சரி என்று கூறுவார்கள்.
    //

    //மேற்கூறியதில் நான் முதல் வகை, நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். //

    சரிதான்…நேர்மையான சுயமதிப்பீடுதான் விடை தர முடியும்.

    //கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!
    //

    பின்ன எப்படிங்கண்ணே கோபப்படுறது..கண்டுக்காம ஒதுங்கிடலாங்கறீங்களா? அல்லது கோபத்தைக் காட்ட வேறு ஏதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்.. புண்ணியமாப் போவும்..

  9. பாலா சாரின் அந்த பதிவு அருமையாக இருந்தது….அதன் பிறகு வந்த புதிய தலைமுறையிலும், துக்ளக்கிலும் அதேமாதிரி நன்றாக கூறி இருந்தார்கள்.

  10. இந்த கைப்பக்குவம், மனப்பக்குவம் மாதிறி இது பிளாக் பக்குவமோ!!!!!!!!!

  11. லேட் நைட் பாபா இல்லே முத்து பாத்தீங்களாண்ணே?

    ஆனா உங்க கருத்த யாரும் மறுக்க முடியாதுண்ணே !!!

  12. "உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!"

    //

    எங்களுக்கு எப்படி இருக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா?? இதையெல்லாம் எங்களுக்கு எடுத்துச் சொல்லி திருத்த நீங்க யாரு?? நீங்க என்ன எங்களுக்கு மாமனா?மச்சானா?

    சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…

  13. ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.

  14. ஐ, ஐ நண்பரு சத்குரு கிரி ஆகிட்டாரு….(ஏய் யாருப்பா அது சத்குரு என்ன பெரிய…இவரானு கோபப்படுறது….?)

    ஆபீஸ்-ல அடுத்த ஷிபிட்டுக்கு வாங்க…என் கோபத்தை காட்டுறேன்….:-)
    அருமையான பதிவு. வழக்கம் போல கலக்குங்க நண்பா!

  15. நன்றி பிரபாகர்

    =============================================================

    // ராமலக்ஷ்மி said…
    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி. உங்கள் பதிவின் மூலமாகவே பாலா அவர்களின் இடுகையை வாசிக்க வாய்த்தது. //

    நானும் இது பற்றி எழுத நினைத்து இருந்தேன், ஆனால் இனி இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லாததால் விட்டு விட்டேன் 🙂

    ==============================================================

    // ஈ ரா said..
    பின்ன எப்படிங்கண்ணே கோபப்படுறது..கண்டுக்காம ஒதுங்கிடலாங்கறீங்களா? அல்லது கோபத்தைக் காட்ட வேறு ஏதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்.. புண்ணியமாப் போவும்//

    என்ன ஈரா! அதைத்தான் பதிவிலேயே கூறி இருக்கிறேனே!

    நான் கோபப்பட வேண்டாம் என்று எங்கும் கூறவில்லையே! நீங்கள் கோபப்பட்டு திட்டுங்கள் ஆனால் அதை சரியாக புரிந்து கொண்டு தவறு நம் மீது இல்லை என்று தெளிவாக புரிந்து கொண்டு செய்யுங்கள் என்றே கூறுகிறேன்! இரண்டு நாள் கழித்து இப்படி செய்து இருக்க கூடாது! என்று யோசித்தால் ..அப்ப தவறு தானே செய்து இருக்கிறோம். (தவறு என்பதையே உணராமல் இருந்தால் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது 🙂 )

    உண்மையில் நாம் இப்படி கோபப்படுவது கூட நமக்கு ஆத்ம திருப்தி மட்டுமே அளிக்கும், அதனால் பெரிய பலன் முடிவில் இருக்காது என்பதே உண்மை. யோசித்து பாருங்கள்!

    "அப்படின்னா நாம கோபத்தையே காட்டக்கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!! என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு! அதுவும் இந்த காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள். அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!"

    இன்னும் சந்தேகம் உள்ளதா! 🙂

    =============================================================

    வடகரை வேலன் கருத்திற்கு நன்றி

    =============================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    இந்த கைப்பக்குவம், மனப்பக்குவம் மாதிறி இது பிளாக் பக்குவமோ!!!!!//

    பிளாக் பக்குவம் கூட மன பக்குவத்தில் உள்ளடக்கியது தான்!

    //லேட் நைட் பாபா இல்லே முத்து பாத்தீங்களாண்ணே? //

    அப்ப ரஜினி படம் பார்த்தால் பக்குவம் வரும்னு சொல்றீங்க! நன்றி 😉 (இனி வரும் சமாளிப்பு பதில் ஏற்றுக்கொள்ளப்படாது :-D)

    ==============================================================

    // வால்பையன் said…
    கருத்து சொல்வதும் உணர்ச்சிவசப்படுதலில் ஒரு வகையா!?//

    கண்டிப்பா அதில் என்ன சந்தேகம்? அப்புறம் நீங்க கருத்து என்று கூறியதும் நினைவிற்கு வந்தது..பின்னூட்டங்கள் பற்றி. அது பற்றி ஒரு பதிவு விரைவில் இடவேண்டும்.

    //சும்மா கோபம் வருதான்னு டெஸ்ட் பண்ணேன்//

    🙂 வரும் ஆனா வராது.

    =============================================================

    // மானஸ்தன் said…
    சரிங்க… அடுத்த தடவ அந்த அம்மாவுக்கே ஓட்டு போட்டுர்றேன்!!! ;)//

    🙂

    =============================================================

    // எம்.எம்.அப்துல்லா said…
    சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…//

    :-)) நான் கூட நீங்க "அந்த" உணர்ச்சி பற்றி ஏதாவது சொல்வீர்களோ என்று நினைத்தேன் 😉

    //ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.//

    நன்றி அப்துல்லா!

    ==============================================================

    //குருபரன் said..
    எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..//

    அதை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.

    ===========================================================

    பாலா சார் விக்டர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  16. கிரி திரும்ப ஒரு மெயில் அனுபிவிட்டேன் என் மொபைல் எண்ணுடன், உங்களுக்கு நேரம் கிடைத்தால் பார்ப்போம்.

    நன்றி 🙂

  17. சிங்கக்குட்டி என்ன காரணமோ தெரியவில்லை..நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை. என்ன தவறு என்றும் புரியவில்லை.

    உங்கள் மின்னஞ்சலை கொடுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

  18. அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

    நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக

  19. கிரி அருமையான பதிவு

    ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள்

    நானும் இந்த வகை தான்

    ஏனெனில் நாம் இவ்வுலகில் அறிந்தவற்றை
    விட அறிந்து கொள்ளாதவை நிறைய இருக்கிறது என்பது எனது கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!