பத்திரிகை உலகம் பதிவுலகம் | ஒப்பீடு

5
பத்திரிகை உலகம் பதிவுலகம்

டந்த வருடம் திரையுலகம் பதிவுலகம் ஒப்பீடு செய்து எழுதி இருந்தேன் அதே போலத் தற்போது பத்திரிகை உலகம் பதிவுலகம் ஒப்பீடு செய்து எழுதி இருக்கிறேன்.

கடந்த பதிவில் பதிவர்கள் பற்றிக் கூறியதை சிறு மாற்றத்துடன் அப்படியே இதில் எழுதிப் பத்திரிகை உலகத்துடன் ஒப்பீடு செய்து இருக்கிறேன். Image Credit

திரையுலகம் போல இதற்கும் பெருமளவு பொருந்தி வருகிறது 🙂 .

Read: திரையுலகம் பதிவுலகம் – ஒப்பீடு

இனி ஒப்பீடு

மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் பத்திரிகைகள் கவனிக்கப்படுவதில்லை. நல்ல கருத்தோடு கொஞ்சம் மசாலாவும் சேர்த்து எழுதி கொஞ்சம் சுவாரசியம் கூட்டினால் தான் படிக்கிறார்கள்.

பதிவுலகில் நல்ல பதிவுகள் அதிகம் படிக்கப்படுவதில்லை, காற்று வாங்கிக்கொண்டு இருக்கும். நல்ல பதிவாக இருந்தாலும் சுவாரசியமாக எழுதப்படும் பதிவுகள் மட்டும் கவனிக்கப்படுகின்றன.

திரைப்படம் நக்கல் நையாண்டி மொக்கை பற்றி எழுதும் பத்திரிகைகளே அதிகம் விற்கப்படுகின்றன

காமெடி, கிண்டல், திரைப்படம் பற்றிய இடுகைகளே (Post) அதிகம் இங்கே படிக்கப்படுகிறது, ஹிட்ஸ் ம் அதற்கு தான் அதிகம் கிடைக்கிறது.

பத்திரிகை ஓடவில்லை என்றால் இவர்களே ஏதாவது புளுகி பரபரப்பு உண்டாக்குவார்கள். சில நேரங்களில் பொய்யான படங்களைக்கூட வெளியிட்டு உண்மை போல நம்ப வைப்பார்கள்.

தனது தளம் மற்றவர்களால் கவனிக்கப்படுவதில்லை என்று பொறுமை இழந்து பரபரப்பான தலைப்புகளில் பதிவெழுதி தன்னை கவனிக்க வைப்பார்கள்.

பிரபலப் பத்திரிகைகள் தவறாக ஏதாவது கூறி விட்டால் மிகப்பெரிய சர்ச்சை ஆக்கப்படும்

பிரபல பதிவர் விவகாரமாக ஏதாவது கூறி விட்டால் அனைவராலும் கும்மப்படுவார், எடுத்துக்காட்டு பலர்.

பத்திரிகை உலகில் ஏகப்பட்ட அரசியல் குழுக்கள் உண்டு. திமுக அதிமுக என்று பல குழுக்கள் உண்டு. எதிர்தரப்பினர் மாட்டினால் கவர்ஸ்டோரி என்று எழுதி நொக்கி விடுவார்கள்.

பதிவுலகிலும் ஏகப்பட்ட அரசியல், குழுக்கள் உண்டு அவர்களுக்குள் பின்னூட்டம் (Comments) இட்டுக்கொள்வார்கள், மற்றவர்கள் இடுகை நன்றாக இருந்தாலும் பாராட்ட மாட்டார்கள்.

எதிர் குழு நபர் ஏதாவது விசயத்தில் சிக்கிக்கொண்டால் அவரை எதிர் பதிவு போட்டு படுத்தி எடுத்து விடுவார்கள்.

சினிமா, பக்தி, அறிவியல், காமிக்ஸ், அரசியல், விளையாட்டு என்று பல்வேறு வகையான பத்திரிகைகள் வெளிவருகின்றன

இங்கேயும் அரசியல், சினிமா, விரக்தி, காமெடி, கிண்டல், விளையாட்டுப் பதிவுகள் என்று பலவகையான பதிவுகள் வரும்.

எந்த மாதிரி எழுதினாலும் பத்திரிகை விற்க மாட்டேன் என்கிறதே என்ன செய்வது? என்று நினைப்பவர்கள் உண்டு.

எந்த மாதிரி எழுதினாலும் யாரும் படிக்க மாட்டேன் என்கிறார்களே! எப்படித்தான் எழுதுவது என்று புலம்புபவர்கள் உண்டு.

பத்திரிகை பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக சர்ச்சையான கட்டுரைகளை எழுதுவார்கள். அப்படி எழுதினால் என்ன பத்திரிகைப்பா இது! என்று ஆர்வமாக பார்ப்பார்கள்.

பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக சர்ச்சையான விஷயத்தை இடுகையாக எழுதுவார்கள், அதே போல இவர்கள் பதிவு பற்றி அனைவராலும் விவாதிக்கப்படும். யார் இந்தப்பதிவர் என்று விசாரிக்கப்படும்.

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பத்திரிகைகள் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை அல்லது தற்போதைய பத்திரிகைகளுடன் போட்டி போட முடியவில்லை

அதே போல முன் பதிவுலகில் பிரபலமாக இருந்த பலரை காணவில்லை அல்லது அவர்களாகவே விருப்பப்பட்டு ஒதுங்கிக் கொண்டார்கள் அல்லது அவர்கள் ஆர்வம் குறைந்து விட்டது.

யார் படித்தாலும் படிக்கலைனாலும் தங்கள் கொள்கைகளிலிருந்து மாறாமல் தொடர்ந்து முன்பு போலவே எழுதும் பத்திரிகைகள் உண்டு

யார் படித்தாலும் சரி படிக்கலைனாலும் சரி! நான் இப்படித்தான் எழுதுவேன் என்று எழுதும் பதிவர்களும் உண்டு.

பத்திரிகை இருக்கிறது என்பதற்காக கண்டதையும் எழுதுகிறார்கள் மக்களும் இதை வாங்கிப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று குறை கூறப்படும்.

இலவசமாக ப்ளாக் கிடைத்துள்ளது என்று கண்டதையும் எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

5 COMMENTS

  1. என்னுடைய நண்பர்களும் கிண்டல் செய்யும் போது இந்த லிங்க் [ https://www.giriblog.com/thalaivar-rajini/ ] தான் கொடுப்பேன்…ஏற்கனவே சொல்லி இருந்தேன் எத்தனை முறை படிச்சேன்னு தெரியல இன்று மறுபடியும் படிச்சேன்…ஒரு ஒரு முறையும் படிக்கும் போது புத்துணர்ச்சி வருது – சுவாமி

  2. எந்த கருத்தாக இருந்தாலும், சொல்வதை கொஞ்சம் சுவாரசியமாக சொன்னால் நிச்சயம் படிப்பார்கள்.

  3. சரியான ஒப்பீடு. அனைத்தும் பொருந்துகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here