பதிவுலகமும் திரையுலகமும் சில விசயங்களில் ஒன்றைப்போலவே உள்ளது, அதனால் நான் இது வரை பார்த்த பதிவுலகத்தையும் திரையுலகத்தையும் ஒப்பிட்டு இருக்கிறேன்.
பட்டியல் போட்டால் சுவாராசியமாகவே உள்ளது! 🙂 . Image Credit
ஒப்பீடு
திரையுலகில் நல்ல படங்கள் சரியாக போவதில்லை, நல்ல படமாக இருந்தாலும் திரைக்கதை சரியாக இருந்தால் தான் ஓடும் எடுத்துக்காட்டு பருத்தி வீரன்.
பதிவுலகில் நல்ல பதிவுகள் அதிகம் படிக்கப்படுவதில்லை, காற்று வாங்கிக்கொண்டு இருக்கும். நல்ல பதிவாக இருந்தாலும் சுவாராசியமாக எழுதப்படும் பதிவுகள் மட்டும் கவனிக்கப்படுகின்றன.
மசாலா படங்களே அதிகம் பேரால் விரும்பப்படுகின்றன, கூட்டமும் அதற்குத்தான் அதிகம் வருகிறது.
காமெடி, கிண்டல், திரைப்படம் பற்றிய கட்டுரைகளே அதிகம் இங்கே படிக்கப்படுகிறது, ஹிட்ஸும் அதற்கு தான் அதிகம் கிடைக்கிறது.
படம் ஓடவில்லை என்றாலும் இவர்களே இவர்களுக்கு வெற்றி விழா எடுப்பார்கள். ஓடாத படத்திற்கு நூறு நாள் போஸ்டர் அடித்துக்கொள்வார்கள்.
யாரையாவது விட்டுப் படத்தைப் பற்றிக் கருத்து கூற வைத்துப் பிரபலமாக்குவார்கள்.
இங்கே கட்டுரை கண்டுகொள்ளப்படவில்லை என்றால் நண்பர்களிடம் ஓட்டு போடக்கூறி பிரபலமாக்குவார்கள். சமயங்களில் இவர்களே கள்ள ஓட்டும் போடுவார்கள்.
பிரபல இயக்குநர் சர்ச்சைக்குள்ளான படம் எடுத்தால் அனைவராலும் நொக்கி எடுக்கப்படுவார் எடுத்துக்காட்டு பாய்ஸ்.
பிரபல பதிவர் விவகாரமாக ஏதாவது கூறி விட்டால் அனைவராலும் கும்மப்படுவார், எடுத்துக்காட்டு பலர்.
திரையுலகில் அரசியல் குழுக்கள் பல உண்டு, ஒருவர் படம் ஓடக் கூடாது பிரபலம் ஆகக் கூடாது என்று எண்ணுபவர்கள் அதிகம். தோல்வி அடைந்தால் அதைப் பார்ட்டி வைத்துக் கொண்டாடுவார்கள், மற்றவரை வேண்டுமென்றே விமர்சித்துப் பேட்டியளிப்பார்கள்.
பதிவுலகிலும் ஏகப்பட்ட அரசியல், குழுக்கள் உண்டு அவர்களுக்குள் பின்னூட்டம் (Comments) இட்டுக்கொள்வார்கள், மற்றவர்கள் கட்டுரை நன்றாக இருந்தாலும் பாராட்ட மாட்டார்கள்.
எதிர் குழு நபர் ஏதாவது விசயத்தில் சிக்கிக்கொண்டால் அவரை எதிர் பதிவு போட்டுப் படுத்தி எடுத்து விடுவார்கள்.
அடிதடி படங்கள், சோகமான படங்கள், காமெடி படங்கள், வன்முறை படங்கள் சைக்கோ படங்கள் என்று பலவகையான திரைப்படங்கள் வரும்.
இங்கேயும் அரசியல் பதிவுகள், சினிமா பதிவுகள், விரக்தியான பதிவுகள், காமெடி பதிவுகள், கிண்டல் பதிவுகள், விளையாட்டுப் பதிவுகள் என்று பலவகையான பதிவுகள் வரும்.
எந்த மாதிரி படமெடுத்தாலும் ஓட மாட்டேங்குதே! எப்படித்தான் படமெடுப்பது என்று புலம்புபவர்கள் உண்டு.
எந்த மாதிரி எழுதினாலும் யாரும் படிக்க மாட்டேன் என்கிறார்களே! எப்படித்தான் எழுதுவது என்று புலம்புபவர்கள் உண்டு.
பிரபலம் ஆக வேண்டும் என்றே ஏதாவது சர்ச்சையான படத்தை எடுப்பார்கள், அவர்கள் நினைத்தது போல அனைவரது கவனமும் இவர்கள் பக்கம் திரும்பும்.
பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக சர்ச்சையான விஷயத்தை கட்டுரையாக எழுதுவார்கள், அதே போல இவர்கள் பதிவு பற்றி அனைவராலும் விவாதிக்கப்படும். யார் இந்தப்பதிவர் என்று விசாரிக்கப்படும்.
ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர்கள் பலர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை அல்லது அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டார்கள்.
அதே போல முன் பதிவுலகில் பிரபலமாக இருந்த பலரை காணவில்லை அல்லது அவர்களாகவே விருப்பப்பட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.
யார் என்ன கூறினாலும் சரி யாருமே படமே பார்க்கவில்லை என்றாலும் சரி! இப்படித்தான் படமெடுப்பேன் என்று கூறுபவர்கள் உண்டு.
யார் படித்தாலும் சரி படிக்கலைனாலும் சரி! நான் இப்படித்தான் எழுதுவேன் என்று எழுதுபவர்கள் உண்டு.
நல்ல படங்கள் கவனிக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது ஏதாவது இயக்குனர் மக்களைக் குறை கூறி பேட்டியளிப்பதுண்டு உடன் திரையுலகத்தையும்.
நல்ல பதிவுகள் கவனிக்கப்படுவதில்லை என்று சில பதிவர்கள் சில நேரங்களில் பொங்குவதுண்டு உடன் பதிவுலகத்தையும் காய்ச்சி.
ஒரு கணிப்பொறியும் இணையமும் இலவசமாக ஒரு தளமும் கிடைத்து விட்டால் கண்டதையும் விமர்சனம் என்கிற பெயரில் எழுதுகிறார்கள் என்று வலைப்பதிவர்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
எதோ ஒரு தயாரிப்பாளர் கிடைத்து விட்டார் என்பதற்காக விளங்காத படமாக எடுக்கிறார்கள், உருப்படியான படமே எடுப்பதில்லை என்று திரையுலகின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
இதைப் போல இன்னும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கிறது.. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
ஆக மொத்ததுல…. 😉 .
தொடர்புடைய கட்டுரை
🙂
அப்படியே பதிவுலகில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு சொன்னா……
அட….
நல்லா ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க.
good comparison.
ஆராய்ச்சிக்கு எடுத்துக்கும் சப்ஜெக்டா இருக்கே!
இதைவச்சு ஒரு 'டாக்குட்டர்' பட்டம் வாங்கலாமே!!!!!
🙂 உங்களுக்கு இருக்கு இதை படிச்சுட்டு எதிர்வினைகள்.
//அப்படியே பதிவுலகில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு சொன்னா…..//
கோவி.. என்னை பார்த்தப் பிறகுமா இந்த சந்தேகம் 🙂 ?
திரை உலகில் field out ஆனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கலாம்.
பதிவுலகில் field out ஆனால் twitter பக்கம் ஒதுங்கலாம்
Srini
intha pathivirku ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
எதைப் பத்தியும் கவலைப் படாமல் தங்கள் விருப்பப் படி படம் எடுத்துக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள்.
/கோவி.. என்னை பார்த்தப் பிறகுமா இந்த சந்தேகம் 🙂 ?
//
அதானே..
கேபிள் சங்கர்
மிகச்சரியா பொருந்துதே!
Enjoyed it 🙂
ஏற்கனவே பதிவருங்களுக்கு பத்திரிகைக்கு ஆசைன்னு பேரு. இப்ப சினிமாவுக்கு பொருத்தமா. ரொம்பதான் குசும்பு:))
நீல வண்ண வரிகளை மட்டும் தான் நான் படித்தேன் 😉
good creativity giri!
நல்லா அலசிக் காயப் போட்டிருக்கீங்க 😉
சில பொதுமக்கள் இருக்கிறார்கள்.
வேலையத்த வெட்டி பசங்க படம் எடுக்குறாங்க… பதிவு எழுதுறாங்க… நம்ம டயத்தை எப்புடி வேணும்னாலும் வேஸ்ட் பண்ணலாம்… ஆனா, தப்பித் தவறிகூட இவனுக பக்கம் ஒதுங்கிரக் கூடாதுன்னு… :-))
சரி, உங்க பாணியிலேயே உங்க பதிவைப் பாராட்டிப்புடலாம்!
திரையுலகில் ரஜினி போல மனசாட்சியுள்ள ஒரு சில நல்லவர்களும் உண்டு.
அதேபோல் பதிவுலகில் கிரிபோல் ஒரு சில மனசாட்சியுள்ள நல்ல பதிவர்களும் உண்டு! :)))
ஏன் இந்த கொலைவெறி?
ரூம் போட்டு யோசனை செய்வீங்களா ??????:)))))))
:)))))))))))))
varun kalakkiteeengaaaaa
Giri,
Romba nalla irunthathu pathivu… Kovi kannan kusumbu, Varun noda antha Super star, Giri mapping kalakkall
ஹா ஹா! பதிவுலகின் சரித்திரம் அப்படினு ஒரு திரைக்கதை எழுதலாம் கிரி சார்.
Good comparison!!!!!!!!!!!
கிரி மாதிரி ஆளுங்களுக்கு ஒரு தங்கர்பச்சான் பத்தாது வேற வேற வேட்டைக்காரன் தான் வேணும்
கிரி,
நல்லாயிருக்கு. நல்லா யோசிச்சிருக்கீங்க… 🙂
இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடனின் good blogs பிரிவில் தேர்வாகியுள்ளது :)!
அட அட அட…..பதிவுலகத்தைப் பத்தி (திரையுலகத்தோடு ஒப்பிட்டு) அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்களே!
கலக்கலோ கலக்கல்! நானும் இப்படியொரு பதிவத்தான் எதிர்ப்பார்த்திருந்தேன்! விகடனின் குட் ப்ளாக்ஸில் தேர்வடைந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
http://padmahari.wordpress.com
நல்ல அலசல் நிறைய எனக்கு ஒத்துப்போன மாதிரி இருந்தது . கொஞ்சநாள் முன்னாடி என்ன காச்சி எடுத்தாங்க .
கோவிகண்ணன், ஞானசேகரன், வேல்ஸ், ஷிர்டி சாய்தாசன், துளசி கோபால், சுவாமி ஓம்கார், ஸ்ரீ, கவி, சுரேஷ், கேபிள் சங்கர், அருண், உமா, பாலா, வெயிலான், யுவகிருஷ்ணா, சென்ஷி, ரோஸ்விக் , வருண், எப்பூடி, ஷங்கர், அருண், ராதாகிருஷ்ணன், நித்தியானந்தம், ரமேஷ், சரவணகுமரன், ராமலக்ஷ்மி, Anapayan மற்றும் மதார் பட்டாணி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஆஹா…
அருமையான பதிவு !
நல்லாதான்உட்கார்ந்து யோசிச்சிருக்கீங்க
கலக்கல்
எந்த மாதிரி எழுதினாலும் யாரும் படிக்க மாட்டேன் என்கிறார்களே! எப்படித்தான் எழுதுவது என்று புலம்புபவர்கள் உண்டு.
ஹா …ஹா
கிரி……….
பரவாயில்லையே… இப்படி கூட ஒரு பதிவு எழுதலாமோ!!
நடத்துங்க “தல”…………
இத்தனை பேர் வந்து படிச்சிட்டுப் போயிருக்காங்க.. அதுல ரெண்டு பேருக்கு மட்டும்தான் ஓட்டுப் போடணும்னு தோணிருக்கா..?
இப்படியிருந்தா வலையுலகம் எப்படி உருப்படும்..?
நான் ஓட்டு போட்டு்ட்டேன்..!
வித்தியாசமான ஒப்பீடு கிரி..!
நன்று..!
மொக்க மேட்டரையும் சுவாரசியமா எழுதுறேள்!
பிண்ணுங்கோ…
டைம் கெடைச்சா நம்ம blog-அயும் எட்டி பாருங்க…
http://silukkujippa.blogspot.com
ரேசன் ஆபீசர், சரவணன், கோபி, உண்மை தமிழன் மற்றும் சோம்ஸ் வருகைக்கு நன்றி
யோவ்! சோம்ஸ் ப்ளாக் தொடங்கியாச்சா! கலக்குயா! வாழ்த்துக்கள்
தயாரிப்பாளர்கள் நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்கவேண்டும் அப்போதுதான் சிறந்தபடங்கள் உருவாகும் இளையராஜாவுக்குப்பிறகு தமிழ்ப்பாடல்கள் உச்சத்தை எட்டவில்லை பாடல்கள் சிறப்பாக இல்லாவிட்டால் தமிழ்ப்படங்கள் தென்னிந்திய மார்க்கெட்டை பெருமளவு இழந்துவிடும்.வடஇந்திய நடிகைகளுக்குக்கொட்டும் காசை இசையமைப்பாளர்களுக்குக் கொடுக்கலாம்.