பெய்ஜிங் விமான நிலையத்தின் வரைபடத்தை இந்தியாவின் உத்தரபிரதேச மாநில நொய்டா விமான நிலையத்தின் மாதிரி வரைபடமாக இந்திய அரசின் MyGovIndia ட்விட்டர் கணக்கு காட்டி சீனாவிடம் அசிங்கப்பட்டுள்ளது. Image Credit
சீனாவிடம் அசிங்கப்பட்ட இந்தியா
இந்தியா சார்பாகத் தன்னை முன்னிறுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், தனி மனித தவறு என்றாலும் அது இந்தியாவின் தவறாகக் கருதப்படும்.
இந்திய பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மிகப்பெரிய விமான நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதையொட்டி விவரங்கள் வெளிவந்தது.
MyGovIndia ட்விட்டரில் கணக்கில் பெய்ஜிங் விமான நிலையத்தின் வரைபடத்தை நொய்டா விமான நிலைய மாதிரி வரைபடமாகப் போட்டு விட்டார்கள்.
இதையொட்டி மேலும் பல verified அரசு ட்விட்டர் கணக்குகளிலும், பாஜகவினர் கணக்குகளிலும் இது போல (Retweet அல்ல) பகிரப்பட்டது.
சீன ஊடகங்கள்
சீனாவின் விமான நிலைய படத்தைப் பகிர்ந்ததைப் பலர் சமூகத்தளங்களில் பகிர்ந்து, தவறை சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள்.
இதன் பிறகு சீனாவில் உள்ள ஊடகங்களிலும் இதைப் பகிர்ந்து நாறடித்து விட்டார்கள்.
ஏற்கனவே, இந்தியாவுடன் சீனாக்குப் பிரச்சனை இருப்பதால், காண்டில் இருந்தவர்கள் இதை வைத்து இந்தியாவைக் கொத்துக்கறி போட்டு விட்டார்கள்.
COPY என்பதையே உரிமையாக வைத்துள்ள சீனா தற்போது நம்மைக் கிண்டலடிப்பதை வேடிக்கை பார்க்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளோம்.
சீன ஊடகங்கள், ட்விட்டர் கருத்துப்பகுதியில் சீனர்களுக்கே வேலை வைக்காமல், மோடி எதிர்ப்பாளர்கள் இந்தியாவையும் இந்தியப் பிரதமரையும் அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இந்தியாக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இன்னொரு நாட்டிடம் இந்தியாவை விட்டுத்தரக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடந்துகொண்டார்கள்.
பொறுப்பற்ற செயல்
இணையத்தில் சிறிது நேரம் செலவழித்தாலே எது உண்மை பொய் என்று தெரிந்து கொள்ளும் நிலையில், பொறுப்பு இல்லாமல் ட்விட்டரில் பகிர்ந்தனர்.
தனி நபர்களின் செயல் இந்தியாவை அசிங்கப்படுத்தியுள்ளது. இதையே மற்றவர்களும் பின்பற்றி மேலும் சேதமேற்படுத்தி விட்டார்கள்.
வெளிநாட்டு இந்தியர் தவறு செய்தால், தனி நபரின் தவறாகக் கருதப்படாது. இந்தியர் தவறு செய்து விட்டார் என்றே அனைவராலும் விமர்சிக்கப்படும்.
எனவே, வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருமே தன் தாய் நாட்டின் அம்பாசிடர் தான். தவறான செயலைச் செய்தால் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள், அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் செயல் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க வேண்டும்.
சீனாவின் அபரிதமான வளர்ச்சி
சீனாவின் உட்கட்டமைப்பு, வளர்ச்சி அருகே கூட இன்னும் செல்ல முடியவில்லை. இந்தியா குறைந்தது 20 வருடங்களாவது சீனாவை விடப் பின்தங்கி இருக்கும்.
நமக்கு முன்னால் சீனா அசுரன் போலவே உள்ளது. அப்படியென்றால், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதே நிதர்சனம்.
அத்தூரத்தை குறைக்க வேண்டும் என்றால், சிறப்பான முன்னெடுப்பு, புதிய முயற்சிகள், கடுமையான உழைப்பு, உட்கட்டமைப்பு வசதி தேவை.
இந்தியா தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தற்சார்பு இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, இந்தியாவிலேயே தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மின்னணு பரிவர்த்தனையில் உலகிலேயே முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. Startup, UNICORN ($1B) பிரிவில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.
கடந்த சில வருடங்களாகக் குறிப்பாக 2017 – 2018 க்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு தைரியமான முன்னெடுப்புகளால் சீனாவுக்குப் போட்டி கொடுத்து வருகிறது.
இவ்வாறு கஷ்டப்பட்டு முன்னேறும் நிலையில் இது போன்ற பொறுப்பற்ற முறையில் செய்யப்படும் தவறுகள் இந்தியாவின் மதிப்பை கீழிறக்குகிறது.
சோம்பேறித்தனம் காரணமாகவோ, அலட்சியமாகவோ செய்யும் தனி நபரின் தவறுகள் இந்தியாவின் தவறுகளாகக் கருதப்பட்டு விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் மனதில் நிறுத்த வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்
(ஏற்கனவே, இந்தியாவுடன் சீனாக்குப் பிரச்சனை இருப்பதால், காண்டில் இருந்தவர்கள் இதை வைத்து இந்தியாவைக் கொத்துக்கறி போட்டு விட்டார்கள்.)
சீனாவிற்கு அல்லது சீனாவுக்கு இப்படி தானே எழுதுவார்கள்? அதென்ன சீனாக்கு?
@ஹரிஷ்
“சீனாவிற்கு அல்லது சீனாவுக்கு இப்படி தானே எழுதுவார்கள்? ”
சீனாவிற்கு என்று எழுதக் கூடாது என்று எழுத்தாளர் சாரு நிவேதா கூறி இருந்தார். விற்கு என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று விமர்சித்து இருந்தார்.
இவர் கூறியது லாஜிக்காக இருந்ததால் இதை பயன்படுத்துவதில்லை.
சீனாவுக்கு என்று எழுதலாம்.
“அதென்ன சீனாக்கு?”
பேச்சுநடை / உரைநடை.
தகவல்களை பகிரும்போது அதிகம் கவனத்துடனும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்தும் பதிவிட வேண்டியது மிக மிக அவசியம்…
https://www.scientificjudgment.com