சந்திரமுகி படம் முதல் நாள் (preview show) பார்த்து என்ன ஆனதோ அதே போல ஆகி இருக்கிறது லிங்காவிற்கு.
எனக்கு லிங்கா பார்த்த பிறகு அதனுடைய இழுவையான காட்சிகள், Outdated காட்சிகள், ரஜினி படத்திற்கே உண்டான மாஸ் இல்லாதது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்து விட்டது, இது என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்து.
இது குறித்து என்னுடைய லிங்கா விமர்சனத்திலும் கூறி இருந்தேன் ஆனால், உடன் பார்த்த நண்பர்கள் நன்றாக இருப்பதாகக் கூறி இருந்தார்கள் என்று கூறி இருந்தேன். Image Credit
Read: சந்திரமுகி FDFS
இதன் பிறகு பலரும் “கிரி! நல்லாத்தானே இருக்கு ஏன் நீங்க நல்லா இல்லைன்னு சொல்றீங்க?” என்று கூறினார்கள். படையப்பா போல அதிகளவில் என்னுடைய எதிர்பார்ப்புகள் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்.
இவ்வளோ பேர் சொல்றாங்களே.. சரி! இன்னொரு முறை சென்று பார்ப்போம் என்று முடிவாக சனி முயற்சி செய்தோம் ஆனால், முடியவில்லை.
நேற்று நண்பர்கள் மற்றும் நண்பர் அம்மா, அப்பா, மனைவி என்று அனைவருடனும் சென்று இருந்தேன்.
ஏற்கனவே சுமாராக இருக்கிறது என்ற மனநிலை செட் ஆகி விட்டதால் இந்த முறை பிடிக்குமா என்று சந்தேகத்தோடு தான் சென்றேன் மாறாக எதிர்பார்ப்புகள் இல்லாததால் பிடித்து இருந்தது.
பெரியவர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது அவர்கள் க்ளைமாக்ஸ் தான் குறையாகக் கூறினார்கள்.
இதைக் கூறினால் நான் ரஜினி ரசிகன் என்பதால் தான் கூறுகிறேன் என்று நிச்சயம் சிலர் நினைக்கக்கூடும், அதில் தவறில்லை. நானாக இருந்தாலும் அப்படித்தான் நினைப்பேன்.
இருப்பினும் ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்ததால் இதைக் கூறி விட்டேன்.
ஏனென்றால் இது போல இந்த இரு படங்களுக்கு மட்டுமே ஆகி இருக்கிறது. வேறு எந்தப் படத்திற்கும் எனக்கு இது போல தோன்றியதே இல்லை.
வசூல்
துவக்க வசூலைக் கூட ஹைப்பால் வந்த வசூல் என்று எடுத்துக்கொண்டாலும் என்னைப் போல நிறையப் பேர் தற்போது இது போல மாறி இருக்கிறார்கள்.
அதோடு பெண்களைக் குழந்தைகளை இந்தப் படம் கவர்ந்து இருக்கிறது. என் பெண் நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரி இதற்கு கூறி ரசித்து இருப்பது உண்மையில் எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
இவர்களை அதிகம் கவர்ந்து இருப்பது சமையல்கார ரஜினி கதாப்பாத்திரமும் அவர் பேசும் வசனங்களும்.
உண்மையாகவே படம் ரொம்ப சூப்பர் எல்லாம் கிடையாது, சாதாரணமான படம் அதோடு பத்து வருடங்களுக்கு முன்பு வந்து இருக்க வேண்டிய காட்சிகள், நீளமான மூன்று மணி நேரம், சொதப்பலான க்ளைமாக்ஸ், எந்த திருப்பங்களும் இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, மாஸ் இல்லை, ரொம்ப சுமாரான பின்னணி இசை என்று இருந்தும் படம் நன்றாகப் போகிறது.
இதில் ரஜினி நகை திருடும் காட்சி ஒன்று ஆங்கிலப்படத்திலிருந்து திருடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமே தற்போது ரசிகனாக எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது.
படத்தைக் கேவலமாகத் திட்டியதால் எதிர்பார்ப்பு முற்றிலும் குறைந்து சென்றவர்கள் இந்தப் படத்தை ரசித்து இருக்கிறார்கள்.
என்னுடன் பேசிய நண்பர்கள் அனைவருமே இது தான் காரணமாகக் கூறினார்கள்.
எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ரசிக்கக்கூடிய படம் லிங்கா. தலைவர் லிங்காவில் ஒரு வசனம் கூறுவார்…
“ஒரு காரியம் நடக்க ஆயிரம் பேர் துணையா இருக்கலாம்.. ஆனால், ஒரே ஒரு எதிரி தான் காரணமாக இருப்பான்!”
ஆனால், லிங்கா விசயத்தில் ஒருவர் அல்ல பலர். லிங்காவை திட்டி வந்ததில் பல நேர்மையான விமர்சனமல்ல, ரஜினி மீதுள்ள வன்மம் தான் காரணமாக இருக்க முடியும்.
ஃபேஸ்புக் ட்விட்டர் என்று அனைத்து இடங்களிலும் லிங்காவை மிக மோசமாகக் கிண்டலடித்து இருக்கிறார்கள், கிண்டலடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு திட்டுகிறார்களோ அவ்வளவு பெரிய வெற்றியை லிங்கா நிச்சயம் பெறும்.
ஏனென்றால், இவர்களின் மோசமான விமர்சனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் குறைக்கச் செய்து “படம் நல்லாத்தானே இருக்கு! எதுக்கு எல்லோரும் திட்டுகிறார்கள்?” என்ற எண்ணத்தை அனைவரிடையே தோற்றுவித்து விட்டது.
குறைகளுடனான படம்
லிங்கா படம் மோசமான படம் கிடையாது ஆனால், மேற்கூறிய குறைகளுடனான படம்.
அதை இவர்கள் விமர்சனத்தால் சாதாரண வெற்றிப் படமாக ஆக வேண்டியதை பெரிய வெற்றிப் படமாக ஆக்கப் போகிறார்கள்.
நேற்று (ஞாயிறு) மாலையிலிருந்து சூழ்நிலை மாறி விட்டது.
இது தான் உண்மை. அதன் பிறகு தொடர்ந்தால் அவர்களுக்குத் தான் அசிங்கம். அடுத்த வாரம் அரையாண்டு விடுமுறை துவங்குகிறது.
இந்த வெற்றி தொடர்ந்தால் லிங்கா வசூலைப் பெறும்.
பெண்களையும் குடும்ப ரசிகர்களையும் ஒரு படம் கவர்ந்து விட்டால் (ஏனென்றால் அவர்கள் தான் கூட்டமாக அனைவரையும் அழைத்து வருவார்கள்) எந்த விமர்சனமும் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு லிங்கா படமே சாட்சி.
திட்டியவர்களுக்கு திட்டப்போகிறவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றி!
பிற்சேர்க்கை 1
விநியோகஸ்தர் சிங்காரவேலன் லிங்கா படத்தைத் தினமும் விமர்சித்துப் பேசிப்பேசியே காலி செய்து விட்டார் 🙁 . லிங்கா தோல்விப்படமாகி விட்டது.
பிற்சேர்க்கை 2
லிங்கா தோல்விப்படமானாலும் உலகளவில் 154 கோடியை வசூலித்துள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Sema pathivu Giri…unga nermaiku oru periya salute…one time watchable nu naan sonnen…yen wife innum 2 time mavathu pakkanum nu solluranga…ithu thaan inga pala audience manasu…
friday :
even i was in the same mood with little upset. i reviewed to my friends as “movie is watchable but not enjoyable(because of no mass)”. you were also in the same.
saturday :
some of my friends(females with family) watched and said its one of the best movie for superstar. i asked about crowd and they said its house-full for night show.(i was little calm)
sunday :
some of my friends(females with family)watched and asked me what else you can expect from this movie and for this story plot??. They added its enjoyable,watchable and super star rocks again.(i was satisfied and came to a conclusion that fans are little dissatisfied with less mass but families are satisfied because of more class.)
WHATEVER I SAID REFLECTED IN YOURS ALSO
monday :
i read an article that LINGAA joined in 100 crores club(approx.37,35,34 crores for 3 days).
Today onwards week-days started. How is the response in your side? How do you feel?
Please share with us.
FYI: Climax was a copy from a 2000 hindi movie called Khiladi 420. Minor differences are there but the scene is very similar.
கிரி, கடந்த வெள்ளி அதிகாலை 2 மணிக்கு லிங்கா திரைப்படத்தை காண அலுவலக நண்பர்கள் 15 பேர் சென்றனர்.. (காலை 6 மணிக்கு முக்கியமான கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டும் என்பதால்,நான் மட்டும் செல்லவில்லை) நண்பர்கள் அனைவர்களின் ஒட்டுமொத்த கருத்தும் படம் நன்றாக உள்ளது என்பது தான்.. ஒரு சில மாற்று கருத்தும் கூறினார்கள்..
ரஜினியை விரும்பாதவர்கள் கூட படம் நன்றாக உள்ளது என்று கூறியது எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.. குறைகள் சில இருந்தாலும் ஒட்டுமொத்தமாக லிங்கா வெற்றி படமாக அமைய என் வாழ்த்துக்கள்..
சென்ற வாரம் தான் காவிய தலைவன் பார்த்தேன்.. என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… கதாபாத்திரங்களின் தேர்வு எனக்கு விருப்பமாக இல்லை.. மசாலா படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கதை களத்தை கையாண்ட வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள்…என்றுமே நான் வசந்த பாலன் படங்களின் காதலன்..இது என்றும் தொடரும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
Super star padam super thaan
Nethiyadi pathivu. Hats off to u.
ur post reminded me about baba film dialog. “neengale en kuda mothi enna periya aalu aakuringa”.
Firstly thanks for your review, I do agree with you.it is not a superb movie to say wow.
cannot believe why such movie from Raja I
However it has been a box office hit.I too wonder.
In order to get Lingaa to Solaiyur, KS Ravikumar’s screenplay neatly and studiously copies the central trick of William Wyler’s “How To A Steal Million” Rajinikanth plays Peter O’Toole. Our Audrey Hepburn is Anushka, who plays Lakshmi, a Solaiyur resident who is determined to take Lingaa back to the village. Lot of mash-up of Pirates of the Caribbean, Mission Impossible and Star Trek
In 1939, Raja Lingeswaran (Rajinikanth again) is travelling by a train that looks like it has a steam engine and moves about as fast as the Shinkansen – Japanese Bullet Train. He’s reading Joseph Campbell’s “The Hero With a Thousand Faces”. This is interesting for a number of reasons. One is that Campbell’s book was published in 1949, which suggests that the story of how Raja Lingeswaran came to be reading that book in 1939 could have been a sci-fi story that beats Interstellar and its wormholes hollow.
Lingaa is not a good film. Rajni films rarely are. But like so many of them, Lingaa is entirely aware of how silly it is and rejoices in this.
நம்ம கருத்து:
லிங்கா – திரும்பிப் பார்க்காம ஓடிடுங்க
இலவசமாக நெட்டில் டவுன்லோட் பண்ணிக்கூட பார்க்கக்கூடாது போலிருக்கே என்று நினைத்திருந்த படத்தை 500 ரூபா (குடும்ப) செலவில் பார்க்க வைத்துவிட்டார்கள். படம் பார்க்கப்போகும் மற்றவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்று இந்தப் பதிவை எழுதுகிறேன்.
சூப்பர் ஸ்டார் படத்தில் கதையை எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால் தெனாலி எடுத்த ரவிக்குமாரிடம் குறைந்தது படையப்பா அளவுக்கேனும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே. திருடராக (டர் – மரியாதை!) ரஜினி அறிமுகமாவதிலிருந்து ஒரு படு மொக்கையான கொள்ளைக்காட்சியும் அனுஷ்காவின் கேவலமான வழிதல் காட்சியும் தொடர்கின்றன. அப்புறம் கத்தி படத்தின் கதை, பிறகு கதையை விட நீளள……ளளமான (கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம்) படையப்பா ஸ்டைலில் பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் ஒரு ப்ளாஷ்பேக். தியாக சிகரமாக ரஜினியை காட்டி முடித்த பிறகுதான் கதை நடப்பது நிகழ்காலத்தில் என்பது கே.எஸ். ரவிக்குமாருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அவசர அவசரமாக ப்ளாஷ்பேக்கை முடித்துவிட்டு, நிகழ்கால கதைக்கு ஒரு மரண மொக்கையான தெலுங்குப்பட க்ளைமேக்ஸை வைத்து முடித்திருக்கிறார்.
தெலுங்கு மசாலாக்களை தூக்கி சாப்பிடும்படி அத்தனை லாஜிக் மிஸ்டேக்களை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். முதல் கொள்ளைக்காட்சி எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடுத்து, முப்பத்தாறு கிராமங்களை (கவனிக்கவும், வீடுகள் அல்ல, முழுக் கிராமம்) நூறு மடங்கு விலைக்கு வாங்கவும் ஆறேழு அரண்மனைகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு ராஜாவிடம் பணமரத் தோப்பு இருக்கிறது. கடைசியில் பறக்கும் பலூனுக்குள் கத்திச்சண்டை போடுகிறார்கள். பலூனில் அனுஷ்காவை காப்பாற்றி, அதில் ஒரு கையால் தொங்கிக்கொண்டே விழும் வெடிகுண்டை காலால் உதைத்து ஊரைக் காப்பாற்றுகிறார். இதெல்லாம் பாரிய லாஜிக் பாதாளங்கள் என்றால், ஆங்காங்கே ஏராளமான குழிகளும் இருக்கின்றன. பிரிட்டிஷ் கால உடைகள் போன்றவை தற்கால பேஷனை ஒத்து இருக்கின்றன. சரியான வரலாற்று ஆராய்ச்சி செய்யாமல் எடுத்திருக்கிறார்கள். முழுவேகத்தில் ஓடும் ட்ரெயினின் மேல், பத்துப் பேர் சற்றும் தடுமாறாமல் குதிக்கிறார்கள். ரஜினியும் ட்ரைன்னின் மேலேயே பறந்து, குதித்து, குட்டிக்கரணம் அடித்து அவர்களை நையப்புடைக்கிறார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
படத்தில் கொஞ்ச நல்ல விஷயம் என்றால், அருமையான கேமராவும், வரைகலை வேலைகளும் நல்ல இசையும்தான். அணையின் பிரம்மாண்டத்தை உணரும்படி செய்திருக்கிறார்கள். தண்ணீர் திறக்கப்பட்டு பாயும் நேரத்தில் உடம்பில் கொஞ்சம் புல்லரித்தது. இருந்தாலும் படுகேவலமான கதையும் ரஜினியின் வயதான முகமும் அதையெல்லாம் மறைத்து படத்தின் தரத்தை வீழ்த்திவிட்டன.
தமிழ் ரசிகர்கள் சுத்தக் கேணையர்கள் என்று நினைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இதைப் பார்ப்பதற்கு நான்கு தெலுங்குப் படங்களை பார்த்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
Telugu padam thaana… Kandippa parungalen boss
Thanks for this article Giri. As I predicted movie is a blockbuster. I watched second time with family and we all enjoyed the movie again without single boring moment. Really I like this movie very much, more than previous Rajini movies.
Only two sections of audience don’t like this movie. One is Rajini fans who were having huge expectations. Now most of them have changed after watching the movie second time and seeing the response for the movie. Second category is fans of a particular actor whom they thought will be the next super star. These people cannot digest the fact that Rajini is still in cine field ( that too after falling ill so badly) and giving blockbuster movies. They are seeing Rajini as obstacle for their dreams of their hero becoming next superstar. The one who has posted comment above seems to belong to that category. His frustration shows up fully on his writing. I am pity on him.
Even highly educated non rajini fans also like this movie. That means movie is definitely good without doubt.
Giri,
As usual a very balanced and superb post from you. Congrats.
I too was disappointed when I watched Sivaji first time on release date evening show in a mass theatre like Cauvery in Bangalore. While returning home with disappointment I could analyse the reason for my disappointment and came to realise that I was expecting a Shankar movie all along but what I had witnessed was an out & out typical masala Rajini movie. So, from the next time onwards I started enjoying Sivaji knowing full well its a masala Rajini padam & ‘some guy’ happens to be the director. I went on to watch Sivaji 8 times in all.
So, it doesn’t matter if you don’t like Lingaa the first time because of different expectations. You can view it subsequently & still like the movie with correct/changed expectations.
Anti-Rajini morons can continue to blabber all they want & as long as they want. Let us keep ourselves busy counting how many more crores Lingaa keeps collecting in BO.
Thanks
Arun
என்னை அசர வைத்த ரஜினி:-
ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் அடித்து விசாகப்பட்டினமே உருக்குலைந்து போனது. நகரத்தை சீரமைக்க நிவராண பணிகளுக்கு நிதியுதவி நாடெங்கும் திரட்டப்பட்டது. இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் கொடுத்து உதவினார்கள். ரஜினி எதுவும் உதவ வில்லை.
இது அவரின் தனிப்பட்ட விருப்பமே. அவர் தராமல் போனாலும் தவறில்லை. இத்தனை நாட்கள் கண்டும் காணாமலும் இருந்தவர் இன்றைய லிங்கா திரைப்படத்திற்கு ஆந்திராவில் விளம்பரம் தேட வசூலை தேற்ற புயல் நிவராண நிதி தான் உதவிட முடியாமைக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் அதற்கு நிவராண தொகை அறிவிப்பதாக தெலுங்கில் பாடலை வெளியிடும் போது அறிவிக்கிறார்.
தனது பட வியாபரம் படுத்துவிட கூடாது என்று திடிரென்று கருணையாய் உதவும் அவரின் குணம் என்னை அசர வைக்கிறது.
என்னை வியக்க வைத்த ரஜினி:-
லிங்கா படம் முதலில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் எடுக்க திட்டமிட்டார்கள். மாண்டி வாசிகளுக்கும் தமிழகத்திற்கும் காவேரி பிரச்சனையில் தீராத பகையுண்டு. இங்கிருந்து யார் படம் எடுக்க போனாலும் அடித்து விரட்டுவார்கள். இதற்கு முன்பு பாண்டவர் பூமி படம் எடுக்க போனபோது இயக்குனர் சேரனை மிரட்டி அனுப்பினார்கள். சேரனும் இனி கன்னட மண்ணில் படமே எடுக்க மாட்டேன் என்றும் பேட்டிளித்தார்.
இப்போது லிங்கா படக்குழுவினருக்கும் அதே பிரச்சனை வந்தது. பின்பு நடிகர் அம்பரீஷ் மூலம் பஞ்சாயத்து செய்து சில காட்சிகளை எடுத்து விட்டு கர்நாடகாவின் ஷிமோக மாவட்டத்திற்கு ஷிப்ட் ஆனார்கள். அங்கே எடியூரப்பாவின் ஆசியில் சுபமாய் படப்பிடிப்பு முடிந்தது.
தன்னுடைய படபிடிப்பிற்கு அனுமதித்த கன்னடர்களை குளிர வைப்பதற்கு எனக்கு வாழ்நாளில் பிடித்த நடிகர் ராஜ்குமார்தான். அவரிடம் தவிர வேறு எவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கியதே இல்லை என்று ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் முன்னர் அறிவித்தார்.
இப்படி தன்னுடைய வியாபாரத்திற்கு யாரை வேண்டுமானாலும் உசத்தி பேசுவார். அவரின் பல பல்டிகளை தமிழ்நாட்டிலே பார்த்து இருக்கலாம்.
என்னை மிகவும் வியக்க வைத்த நடிகர் ரஜினி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ரசிக்கும்படியான காட்சிகளை சுட்டது போல, KS ரவிக்குமார் நல்ல க்ளைமாக்ஸையும் எங்கயாவது சுட்டிருந்தா படம் பட்டைய கெளப்பி இருக்குமே… சீரியஸான கடைசி காட்சியில HOT AIR BALLOON FIGHT, காமெடி சீன் மாதிரி ஆயிடுச்சி…மறுபடியும் ஒரு மோசமான AR ரஹ்மான் MUSIC… போதாக்கொறைக்கு அனுஷ்கா, சோனாக்ஷி’னு, ரஜினி ஒரே ஆளா எவ்வளவுதான் சுமப்பாரு… ஸாரி… சமாளிப்பாரு… ரொம்ப பாவம்!
Music: சன் டிவி நாதஸ்வரம் நாடகத்தை நினைவூட்டுகிறது
ப்ளாஸ்பேக்கில்தான் ரஜினி வருகிறார்,,,
(#டேம் பிரச்சனையில் முக்கிய ஹிரோ #பென்னிகுக்
#கள்ளிகாட்டுஇதிகாசம் வைரமுத்து இருவரையுமே மட்டம் தட்டுகின்றனா் .,
#கதை கிட்டதட்ட ரஜினி நடித்த 30 படங்களில் இதே கதைதான் .,
என்னய மாதிரி ஆட்கள் உங்களிடம் எதிர் பார்பது ,,முள்ளும் மலரும் ‘..ஆறிலிருந்து அருபது வரை,”” இந்த மாதிரி படங்கள்தான் ,,
இவ்வளவு கேவளமான இசையை இனிமேல் ரஹ்மான் நினைத்தாலும் தர முடியாது’,..
படம் சரியில்லைனு சொல்லள
…
பாக்கற மாதிரி எடுத்துருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றோம்
லிங்கா படத்துக்கு குமுதம் விமர்சனம்…
ரஜினியைத் தவிர யார் நடித்திருந்தாலும் இந்தப் படத்தை பார்க்க முடியாது!
ரஜினி நடித்திருப்பதால் பார்க்காமல் இருக்க முடியாது!
புதுமையான லிங்கா ரஜினி — ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு பேட்டி
(இந்த வார கல்கி இதழில்)
விதவிதமான கிரேன் ஷாட்டுகள் போட்டு சுப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’வைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, 80களில் பார்த்த ரஜினியைப் போலவே காட்டியிருக்கிறார் என்கிற பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தவரிடம் ‘லிங்கா’ ஒர்க் எக்ஸ்பீரின்ஸை கேட்டோம்.
ரஜினி போன்ற பெரிய ஹீரோ படத்தில் ஒளிப்பதிவாளரின் தனித்துவம் தெரியுமா?
“ பொதுவாக பீரியட் படங்களில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் காட்ட கறுப்பு – வெள்ளை அல்லது மங்கலான கலரில் ஒளிப்பதிவு செய்வார்கள்.
ஆனால், இதில் இதுவரை பயன்படுத்தாத புதுமையான கலரைப் பயன்படுத்தியிருப்பதில் என் தனித்துவம் தெரியும். ஆனால், இன்னொரு விஷயம், ஒளிப்பதிவு என்பது தனியாகத் தெரியக்கூடாது. டைரக்டரின் கற்பனைகளை மொழியாக்கம் செய்வதுதான் ஒளிப்பதிவாளரின் பணி.”
‘லிங்கா’ ஒளிப்பதிவில் சிறப்பம்சம் என்ன?
‘பிளாக்மேஜிக் 4டு’ என்ற கேமிரவில் ஹெலிகாப்டர் ஷாட்களை ஷூட் செய்திருக்கிறோம். இது தமிழ் சினிமாவில் முதல்முறை. ஒரே செகன்டில் ஆயிரம் பிரேம்களை ஒளிப்பதிவு செய்யும் ‘பேன்டம் பிளக்ஸ்’ கேமிராவைப் பயன்படுத்தியுள்ளேன்.”
உங்களுக்குச் சவாலாக இருந்த காட்சி?
“பீரியட் படங்களில் ஸ்டெடி காமிராவை வைத்து குறைவான மூவ்மென்ட்களில் எடுப்பார்கள். ஆனால், கே.எஸ்.ரவிகுமார் அதிகமான கேமிராக்களை வைத்து பல மூவ்மென்டுகளில் எடுக்க விரும்பினார். அவரின் விருப்பத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முடித்துத் தந்தேன். ஷிமோகா மாவட்டத்தில் ஷூட்டிங்கின்போது 37 நாட்கள் ஷெட்யூலில் 17 நாட்கள்வரை கடுமையான மழை. இருப்பினும் ஷூட்டிங்கை நல்லபடியாக நடத்தி முடிதோம்.”
ரஜினிக்கும் ‘லிங்கா’வுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட ரத்னவேலுவின் நிலை?
“நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். ஷூட்டிங்கில் ரஜினி சாரின் அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்டதால் இந்த ஒளிப்பதிவாளனுக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.”