லிங்கா [2014]

14
லிங்கா

 நான்கு வருடங்களுக்குப் பிறகு (கோச்சடையான் தவிர்த்து) வரும் ரஜினி படம் லிங்கா. குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டப் படம். எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். Image Credit

லிங்கா

தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்காக ரஜினி அணை கட்ட முயற்சிக்கிறார். அதற்கு பிரிட்டிஷ் அதிகாரியின் சூழ்ச்சியால் நெருக்கடி ஏற்படுகிறது.

மக்கள் ரஜினிக்கு எதிராக திரும்புகிறார்கள் பின்னர் என்ன ஆகிறது? என்பது தான் (ப்ளாஷ்பேக்) கதை.

நான்கு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இருந்த ரஜினியின் குரலையும் அவரின் உடல்நிலையையும் பார்த்தவர்கள் இந்தப் படத்தில் துவக்கமாக ஓ! நண்பா பாட்டுக்கு வரும் ரஜினியைப் பார்த்தால், இது அவர் தானா என்று நிச்சயம் வியப்படைவார்கள்.

அந்த அளவிற்கு மாறி இருக்கிறார். நிச்சயம் இதை ரஜினி ரசிகன் என்பதால் கூறவில்லை, நீங்கள் பார்த்தால் உணர்வீர்கள்.

இதே ரஜினி இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் வயது தெரிவது உறுத்தல். இதை ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

கலை இயக்குநர் சாபு சிரில்

படத்தின் கலை இயக்குநர் சாபு சிரில் கூறும் போது நாங்கள் உண்மையாகவே அணை அமைத்தோம் அதில் சில பகுதிகளைப் பெரியதாகக் காட்ட மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தினோம் ஆனால், படம் பார்ப்பவர்கள் இது கிராபிக்ஸ் என்று தான் நினைப்பார்கள் என்று கூறி இருந்தார்.

உண்மையிலே ஆறு மாதத்தில் இது போல அமைத்து எடுத்து இருப்பது நம்ப முடியாததாக இருக்கிறது. எனக்கு எங்குமே கிராபிக்ஸ் போன்று தோன்றவில்லை.

தூரமாகக் காட்டும் இடங்களில் மட்டும் தோன்றி இருக்கலாம்.

நிச்சயம் சாபு சிரில் உழைப்பு பாராட்டத் தக்கது. படத்தில் இவரின் பங்கு தான் அதிகம் ஏனென்றால் அணை பற்றிய காட்சிகள் அதிகம் வருகிறது.

எனக்கு ட்ரைலரில் பார்த்த போது ரயில் சண்டைக்காட்சி சொதப்பி வைத்து இருப்பார்கள் என்றே நினைத்தேன் ஆனால், படத்திலேயே எனக்கு பிடித்த காட்சியாக இது தான் இருக்கிறது.

செம்மையா எடுத்து இருக்கிறார்கள். இதில் வரும் சண்டைக் காட்சியை எடுத்த விதம் அருமை.

ரஜினிக்கு கலக்கலாக இருக்கிறது. ரஜினி கலெக்டராக வரும் காட்சிகள் குறைவான அளவிலே இருக்கிறது ஆனால், செம மிரட்டலாக இருக்கிறது.

இவர் இங்கிலாந்து அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் பேசி சவால் விடும் காட்சிகள் என்று செம ரகளையாக இருக்கிறது.

இதை நிச்சயம் நீட்டித்து இருந்து இருக்க வேண்டும். இதில் ரஜினியின் உடைகளும் வேகமும் அவர்களிடம் பேசும் முறையும் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

எடுபடாத நகைச்சுவை

படையப்பாவில் ரஜினியுடன் ஐந்தாறு பேர் சுற்றிக்கொண்டு இருப்பது போல இதிலும் சந்தானம், கருணாகரன், பாலாஜி மற்றும் இன்னொருவர்.

துவக்கத்திலேயே இதில் இருவரை கழட்டி விட்டு விடுவதால் பரவாயில்லை.

சந்தானம் அவ்வப்போது வழக்கம் போல ஒன் லைனர் காமெடி செய்கிறார் ஆனால், ரஜினி என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்து இருப்பது தெரிகிறது.

எனவே, காமெடி அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. கருணாகரன் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்.

சிறு வயது ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா ஆனால், இவருக்கு குறைவான காட்சிகளே உள்ளது ஆனால், ரஜினியை ஊருக்கு அழைத்து வரும் முக்கியக் காரணியாக இருக்கிறார்.

சோனாக்ஷி பெரிய ரஜினிக்கு ஜோடியாக வந்து இருக்கிறார். படத்தில் அதிகம் இருப்பதும் இவர் தான்.

இவர்கள் போகத் துணைக் கதாப்பாத்திர நபர்களாக விஜயகுமார், ராதாரவி போன்றோர். அம்பலத்தாராக முத்து படத்தில் மிரட்டிய ராதாரவி இதில் பரிதாபமாக இருக்கிறார்.

அண்ணாமலை படையப்பா என்று கலக்கியவர் இதில் பத்தோடு பதினொன்றாக இருப்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

பட ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ரசிக்க வைப்பது ரஜினி தான். ஒவ்வொரு காட்சியிலும் தான் சூப்பர்ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அருமையாக நடித்து இருக்கிறார்.

ரவிக்குமார்

ரவிக்குமார் ரஜினியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அனைத்தையும் இழந்த ரஜினியிடம் ஊர்க் காரர்கள் வந்து பேசும் இடத்தில் ரஜினி பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அவர் அவ்வப்போது மேடைகளில் கூறும் வாழ்க்கையையொட்டிய வசனங்கள்.

ரசிகர்களிடையே இந்தக் காட்சி நிச்சயம் வரவேற்பை பெறும்.

படத்தின் மிகப்பெரிய குறை வேகம் இல்லாதது. இழுவையான காட்சிகள் நிறைய இருக்கிறது குறிப்பாக இரண்டாம் பாதியில் அணை கட்டும் காட்சிகள்.

படமே அணை கட்டுவது தான் என்பதால் இதன் காட்சிகளைக் குறைக்க முடியாது என்பது புரிகிறது ஆனால், இதை ஈடுகட்ட வேறு ஏதாவது விறுவிறுப்பான திருப்பங்கள் காட்சிகள் வைத்து இதை சரி செய்து இருக்க வேண்டும்.

மெதுவாக செல்லும் இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தால், இது ரவிக்குமார் எடுத்த காட்சிகளா என்றே நம்ப முடியவில்லை.

படையப்பாவில் காட்சிக்குக் காட்சி மிரட்டிய இவரா இது போலக் காட்சிகளைக் கொண்டு செல்கிறார் என்று இருக்கிறது.

பிரிட்டிஷ் கால காட்சிகள், இடங்கள், அரண்மனை, வெள்ளைக்காரர்கள், கார்கள், ரயில், உடையலங்காரங்கள் என்று அனைத்துமே அசத்தலாக இருக்கிறது.

ஆனால், இவையனைத்தும் மெதுவான திரைக்கதையில் அடிப்பட்டு போய் விடுகிறது.

ரகுமான்

பின்னணி இசை ரகுமான் சுத்தமாக எடுபடவில்லை. நண்பர்கள் சிலர் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். எனக்கு சில இடங்களைத் தவிர வேறு எதுவும் மனதில் ஒட்டவில்லை.

பாடல்கள் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி இருந்தேன் ஆனால், படத்தில் பார்க்க நன்றாக இருக்கிறது. இரு பாடல்கள் மாண்டேஜ் பாடல்களாக வந்து விடுகிறது.

பின்னனி இசை ரகுமான் எதோ போட்டுக் கொடுத்தது போலத்தான் இருக்கிறது. எனக்கு ஏமாற்றம்.

லிங்கா படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.

ஆனால், படத்தின் நீளம், திரைக்கதையில் வேகம், திருப்பங்கள் இல்லாதது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது.

நண்பர்கள் அப்படி எதுவுமில்லை என்றார்கள் ஆனால், இது தான் என் நிலை.

Directed by K. S. Ravikumar
Produced by Rockline Venkatesh
Written by K. S. Ravikumar, Pon Kumaran
Starring Rajinikanth, Anushka Shetty, Sonakshi Sinha
Music by A. R. Rahman
Cinematography R. Rathnavelu
Edited by Samjith Mhd
Production company Rockline Entertainments
Distributed by Eros International
Release date December 12, 2014
Running time 178 Minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. சிங்கை ரஜினி ரசிகர்களுக்கு, முதல் கட்சிக்கு சீட்டு வாங்கி கொடுத்த கிரிக்கு நன்றி …

    ரஜினியை முன்பு பாஷா, அருணாச்சலம் படம் போல அட்டகாசமாக உடை அணிந்து ஸ்டைலாஹாக பார்த்ததில் மகிழ்ச்சி….

    விடு …”பரகாஷ்”

  2. ட்ரைலர் ஓகே. பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அனுஷ்கா இருக்காங்கல்ல.. 🙂

    //இதே ரஜினி இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் வயது தெரிவது உறுத்தல்.//
    ட்ரைலரில் பெரிதாக தெரியவில்லை. மேக்கப் மேனுக்கு வாழ்த்துக்கள்.

  3. அண்ணா ஒரு ரஜினி ரசிகரின் விமர்சனம் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறது… நான் உங்கள் விமர்சனத்தில் ஒரு பிரம்மாண்டத்தை எதிர்பார்த்தேன் ……

    எனக்கு உடம்பு சரியில்லை அண்ணா …. சரியாக குறைந்தது 2 மாதங்களாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் அதனால லிங்காவ நான் பொங்கல் கழிந்து தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்

    லிங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

    உங்களுடைய பயணக்குறிப்புகள் பதிவு சூப்பர் ணா ….
    ரஜினியும் சர்ச்சைகளும் பதிவில் எனக்கு முழு திருப்தி இல்லை அண்ணா …அதில் ஒரு சில கருத்துகள் மட்டுமே நான் ஏற்றுக்கொண்டேன் …

    இருவரி செய்திகள் செம இதுபோல பதிவுகளை உங்களிடமிருந்து (ஜாம்பவான் )அதிகம் எதிர்பார்க்குறோம் அண்ணா….

    கூகிள் இன்பாக்ஸ் க்கு மெயில் அனுப்பியும் எனக்கு இதுவரை அனுப்பவில்லை அண்ணா ….. நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்தால் எனக்கு ஒரு ரிக்கொஸ்ட் கொடுங்கள் ன்னா பிளிஸ் ….

  4. LINGA[+]
    * Stylish RAJINI
    * Making
    * Dialogues

    LINGA[-]
    * Well known story
    * Expected twist in screenplay
    * Length of the movie

  5. சமீபத்திய 2/3 வருஷமா மீடியாவுல பென்னிகுக் பத்தி நிறை செய்தி வந்தது படத்துக்கு பெரிய பின்னடைவு. பென்னிகுக் பத்தி அவ்வளவாக யாரும் அறிந்திராத 10 வருஷத்துக்கு முந்தி இந்த கதையை படமாக்கியிருக்கனும்.

  6. Giri, I am surprised by your review. It seems you are too defensive. You want to show you are impartial. That is why this confusing review. I am not diehard Rajini fan and my wife and son not rajini fans but we all liked the movie very much. In fact my wife wants to see again. Every thing in this movie is awesome. Best Rajini movie ever. I am very much surprised why some people (like you) don’t like this movie. It is going to be Mega hit. Wait and watch.

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கார்த்தி

    உடல் தான் முக்கியம், படம் எப்போது வேண்டும் என்றாலும் பார்த்துக் கொள்ளலாம். உடம்பை கவனித்துக் கொள்.

    கார்த்தி அடுத்த முறை உடன்படாத கருத்துகளையும் (ரஜினி சர்ச்சை பதிவு) தெரிவிக்கவும். மாற்றுக்கருத்துகளை வரவேற்கிறேன்.

    கூகுள் இன்பாக்ஸ் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறேன்.

    @காத்தவராயன் ” – “ல் சில Outdated காட்சிகளும் சேர்த்துக்குங்க.

    பென்னிகுக் செய்திகளுக்கும் படத்திற்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. படத்தின் குறைகளை சரி செய்து இருந்தாலே போதும்.

    @அருள் Balanced ஆக எழுத வேண்டும் என்று நினைத்தது உண்மை ஆனால், குழப்பமாக அல்ல. இது குழப்பாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    நான் படையப்பா போல எதிர்பார்த்தது என் தவறாக இருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல என்னுடைய நண்பர்களும், நேற்று (சனி) குடும்பத்துடன் சென்றவர்களையும் படம் கவர்ந்து இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்குப் பிடித்து இருக்கிறது. இதையே நேற்று பார்த்த ரஜினி ரசிகர் அல்லாத என் நண்பர்களும் கூறினார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் பிடிக்கும். படத்தின் க்ளைமாக்ஸ் தான் பெரிய மைனஸ்.

    எனக்கு சந்திரமுகி படம் முதலில் பார்த்து பிடிக்கவில்லை. படம் சரியில்லை என்று கூறி விட்டேன் ஆனால், அது பெரிய வெற்றிப் படமானது. நீங்கள் கூறுவது போல லிங்காவும் பெரிய ஹிட் என்றால் ரசிகனாக எனக்கு நிச்சயம் சந்தோசமே! 🙂 இன்று நண்பர்களுடன் திரும்பச் செல்கிறேன்.

  8. For people who criticise the climax- Rajini movie is an entertainment movie first. This movie is for fans and not for Oscar. KSR would have wanted to leave audience with smile at the end, rather than serious.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!