சிங்கப்பூரில் விதி மீறல்

7
சிங்கப்பூரில் விதி மீறல் Singapore Fine City law

சிங்கப்பூர் என்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வரும் இரு விஷயங்கள், சுத்தம் மற்றும் அபராதம். அப்படிப்பட்ட சிங்கப்பூரில் விதி மீறல் நடைபெறுகிறது என்பது வியப்பு தானே! Image Credit

சிங்கப்பூர் வந்து 5 1/2 (*2013)  ஆண்டுகளாகி விட்டது. அப்போதைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் பெரியளவில் மாற்றங்கள்.

தற்போது வெளிநாட்டினரின் அதிக வருகையால் கூட்டம் மிக அதிகமாகி விட்டது.

இதன் காரணமாகவோ என்னவோ விதிமீறல்கள் அதிகரித்து விட்டன. சரியான இடங்களில் குப்பை போடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பாதசாரிகள் போக்குவரத்து விதிகள் மீறப்படுகின்றன.

Central Business District

நான் பணி புரியும் இடம், சிங்கப்பூரின் மிகப்பிரபலமான “CBD” [Central Business District] என்று அழைக்கப்படுகிற பகுதி.

இங்கு தான் அனைத்து முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் இருக்கும்.

இந்தியாவில் மும்பை “நரிமன் பாயின்ட்” பகுதி போல ப்ரெஸ்டிஜ் பகுதி. இங்கு உள்ள ராபின்சன் சாலையில் தற்போது பாதசாரிகள் சாலை விதிகளை மதிப்பதே இல்லை.

இதில் அனைத்து நாட்டினரும் அடக்கம், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட.

இதைச் சரியாகக் கவனித்து வருவதால் நாளுக்கு நாள் விதிமீறல் அதிகரித்து வருவதை, கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.

சில நேரங்களில் குறுக்கே இவர்கள் ஓடுவதைப் பார்த்துப் பயமாகவும் கவலையாகவும் உள்ளது.

இங்கு மட்டும் தான் அதிகம் நடக்கிறதோ என்று நினைத்தேன்!

ஆவணப்படம்

பின்னர் சிங்கப்பூர் “வசந்தம்” தொலைக்காட்சியில், விதிமீறல்கள் பற்றிச் சிங்கப்பூர் முழுமையும் நடப்பதை ஆவணப்படமாகப் காட்டிய போது ரொம்ப வருத்தமாக இருந்தது.

அரசாங்கம் இதற்கு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று புரியாத புதிராக உள்ளது.

ஒரே ஒரு வாரம் இந்தப்பகுதியில் அபராதம் விதித்தால் அனைவரும் விதிகளைப் பின்பற்றுவார்கள். “லிட்டில் இந்தியா” பற்றிச் சொல்லவே தேவையில்லை.

இந்த நிலை வருவதற்கு ஒரு காரணம் வெளிநாட்டினரின் அதிகரிப்பு.

வெளிநாட்டினர் என்றால் சீனா, மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டில் இருந்து வந்தவர்கள்.

இவர்கள் நாட்டில், சிங்கப்பூர் போலப் போக்குவரத்து விதிகள் பின்பற்றப் படுவதில்லை எனவே அதே நினைப்போடு இங்கும் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்கின்றனர்.

இதைப் பார்த்து இங்குள்ள உள்ளூர் மக்களும் மாறி விட்டார்கள் என்று தோன்றுகிறது.

சாலை விதிகள்

காரணம் சிவப்பு விளக்கு இருந்தும், சாலையைக் கடக்கும் மக்களில் உள்ளூர் மக்களும் அதிகம்.

இதைப்போலச் செய்பவர்களில் வெள்ளையர்களும் அடக்கம். வெள்ளையாக இருப்பவர்கள் அனைவரும் வெள்ளையர்கள் அல்ல என்பதை அறிக.

தற்போது இங்குள்ளவர்களின் எதிர்ப்பால், வெளிநாட்டினர் வருகையில் சிங்கப்பூர் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் காரணமாகவோ என்னவோ சுத்தம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சாலைகளில் காலி டின்கள், டிஸ்யு தாள்கள் தற்போது அதிகம் காண முடிகிறது.

நான் வந்த புதிதில் [2007] குப்பைகள் இருந்ததில்லை. ரொம்ப சுத்தமாக இருக்கும். விதி மீறல்களும் எப்போதாவது தான் பார்த்து இருக்கிறேன்.

முன்பு ஹார்ன் சத்தமே கேட்டதில்லை.

சிங்கப்பூரில் யாரும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள், அப்படி சத்தம் கேட்டால் அங்கு எதோ பிரச்சனை என்று அர்த்தம் / அனைவரும் அதிசயமாகத் திரும்பிப் பார்ப்பார்கள்.

ஆனால், தற்போது ராபின்சன் சாலையில் ஹார்ன் சத்தம் அடிக்கடி கேட்க முடிகிறது.

சிங்கப்பூர் அரசாங்கம் அனைவரையும் அனுசரித்து நட்புடன் செல்ல விரும்புகிறது. இதைப் பலர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு விதிமீறல்களை செய்து கொண்டு உள்ளார்கள்.

சம்பாதிக்க வந்த இடத்தில், சொந்த ஊர் போல நினைத்துச் செய்வதாலே பல பிரச்சனைகள்.

இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை என்றால் பின் இதை மாற்றுவது என்பது பெரிய சவாலாகி விடும்.

இதெல்லாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு போகாமல் இருக்காது, எனவே இதற்குத் தீர்வுகளை யோசித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

மலாய் மக்களின் விதி மீறல்

கொஞ்ச நாட்கள் முன்பு மலேசிய பொது தேர்தல் நடந்தது.

இதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப்பெரிய கூட்டம் மலேசியாவில் நடைபெற்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள், அரசின் அனுமதி பெறாமலே சிங்கப்பூரின் மிகப் பிரபலமான மெர்லியன் பூங்காவில் கிட்டத்தட்ட 100 பேர் கூடினார்கள்.

இது சிங்கப்பூர் சட்டப்படி தவறான ஒன்றாகும்.

கலந்து கொண்டவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்தது. Image credit

Speakers Corner

கூட்டம் கூட வேண்டும் என்றால் “ஸ்பீக்கர்ஸ் கார்னர்” என்ற இடம் உள்ளது, இங்குச் சென்று அமைதியான முறையில் அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்.

ஈழப்போர் [2009] நடந்து கொண்டு இருந்த போது, அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து, அப்பாவி மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்தில் இங்கு அனுமதி பெற்று கலந்து கொண்டோம்.

இங்கு மலேசியர்கள் போராட்டம் நடத்த அரசு அனுமதி கொடுத்தது ஆனால், சிங்கப்பூரர்கள் [Citizen] & நிரந்த வாசிகள் [PR – Permanent Resident] மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளித்து இருந்தது ஆனால், அதையும் மீறி சிலர் கலந்து கொண்டார்கள்.

இதனால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் மலேசிய தூதர், சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்ட திட்டத்தை, மலேசியர்கள் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார்.

சிங்கப்பூர் அரசாங்கமும், வெளிநாட்டினர் சிங்கப்பூரில் சிங்கப்பூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தது.

விதிமுறைகள்

சிங்கப்பூர் என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட விதி முறைகளை மதித்தே அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். அது தான் நியாயமும் கூட.

ரொம்பக் கட்டுப்பாடு செய்யக்கூடாதுன்னு அரசாங்கம் தரும் சுதந்தரத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு  போக்குவரத்து விதிகளை மீறுவது, சட்டத்தை மீறுவது என்று சிங்கப்பூரில் விதி மீறல் செய்வது நியாயமான செயல் அல்ல.

இதே அலட்சியத்தை சவுதியில் செய்து விட முடியுமா! சுளுக்கெடுத்து விடுவார்கள்.

எனவே, கொடுக்கப்படும் சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுத்து அனைவரும் நடக்க வேண்டும் / சிங்கப்பூர் அரசாங்கம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. “இதெல்லாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு போகாமல் இருக்காது, எனவே இதற்கு தீர்வுகளை யோசித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.”

    இந்திய அரசாங்கம் போல் இல்லாமல் இருந்த சரி.

  2. சுத்தமான நகரம் அசுத்தம் ஆவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்று. கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் படித்தவர்களும் சரி, பாமரர்களும் சரி விதிமுறையை மீறுவது தவறுதான். நீங்கள் கூறியிருப்பதை பார்த்தால் இந்த பகுதியில் Central Business District மெத்த படித்த மேதாவிகள் தான் உலா வருவார்கள்.. அவர்களே இவ்வாறு என்றால் பாமரர்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. நீங்க உங்கள பத்தி சுய தம்பட்டம் அடிகுரத கொஞ்சம் நிறுத்தினா நல்லா இருக்கும். நீங்க நல்லவர் மாதிரியே நடிகுரின்களே? முடியல சரியான பெரும பீத கலயம்

  4. விதிமீறல்கள் பற்றி சிங்கப்பூர் முழுமையும் நடப்பதை டாக்குமெண்டரியாக காட்டிய போது ரொம்ப வருத்தமாக இருந்தது.

    சிங்கப்பூரின் பெயரை கெடுத்துவிடுவார்களா ..!

  5. பதிவு ரொம்ப அழகா வந்து இருக்கு தல
    கொசுறு 2 இன்னும் கண்டு புடிக்க முடியல என்ன அறியாம கண்ணு மஞ்சகாட்டு மைனா கு போயிடுது 🙂

    கொசுறு 1 – 10 படத்தையும் கொசுறு type ல one line ல கொடுக்க consider பண்ணுங்க.. வழக்கப்படி “எழுத்து உலக நாயகன் கிரி” கு வேண்டுகோள்
    யார் யாரோ பட்ட பேரு வெச்சுகிறான் அதான் உங்களுக்கு ஒன்னு வெச்சேன்

    – அருண்

  6. @chika சாரு திட்டாத நபர்களே இல்லை 🙂 தலைவர் பரவாயில்லை.

    @கௌரிஷங்கர் 🙂

    @யாசின் நீங்கள் கூறுவது சரி தான். நன்கு படித்தவர்கள் தான் இது போல செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுல நான் வர மாட்டேன் [நான் படிக்கல :-)].

    @Pri அப்படி என்னங்ண்ணா! நான் டமாரம் அடிச்சிட்டேன் 🙂 அதை நீங்க சொன்னா நல்லா இருக்கும்.

    சரி! “பெரும பீத கலயம்” அப்படின்னா என்ன அர்த்தம். நீங்க என்ன சொல்ல வறீங்க என்று புரியுது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று தான் புரியலை.

    @Rajarajeswari jaghamani அப்படியெல்லாம் நடக்க விட மாட்டாங்க.

    @அருண் அடுத்த வாரம் குட்டியா அனைத்துப் படங்களைப் பற்றியும் எழுதுகிறேன்.

    நீங்க கொடுத்த பட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.. விஷால் “புரட்சி தளபதி” என்று வைச்சுகிட்ட மாதிரி இருந்துச்சு ஹி ஹி உங்களுக்கு என் மேல என்ன கோபம். எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :-).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!