நேரம் [2013]

8
நேரம்

து குறும்பட இயக்குனர்கள் காலமா! குறும்பட இயக்குனர்கள் படமாக வந்து கொண்டு இருக்கிறது, அதில் ஒன்று நேரம். image Credit

நேரம்

ஒருத்தருக்கு நேரம் நன்றாக இருந்தால் ஆண்டியும் அரசனாவான், நேரம் சரியில்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இது தான் நேரம் மையக் கருத்து.

கதாநாயகனுக்குப் பல்வேறு பணப் பிரச்சனைகள் / தேவைகள், இதோடு வேலையும் போய் விடுகிறது. ஏதாவது ஒரு பிரச்சனை புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.

இதில் காதல், வேலையும் கிடைக்கவில்லை, வட்டிக்காரன் தொல்லை, திருட்டு என்று பல கிளைக் கதைகளுடன் படத்தைக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை காமெடி என்றும் கூற முடியாது, சீரியஸ் என்றும் கூற முடியாது. சூது கவ்வும் படம் மாதிரி இரண்டும் கலந்தது.

நடிப்பு என்று பார்த்தால் யாரையும் தனித்து கூற முடியவில்லை, அனைவரும் அவர்கள் பங்கை சரியாக செய்து இருக்கிறார்கள்.

இதில் வில்லனாக [வட்டி ராஜா] வருபவர் “சூது கவ்வும்” படத்தில் நயன்தாராவிற்கு கோவில் கட்டுபவர்.

இந்தக் கதாப்பாத்திரம் ஒரு கனமான கதாப்பாத்திரம் ஆனால், ஆள் மட்டும் கனமாக இருந்தால் போதும் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை…இவரைப் போட்டு விட்டார்கள்.

இந்தக் கதாப்பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இல்லை.

மீசையை சின்னதாக வைத்து, முறைத்தபடி இருந்தாலும் அவர் சின்னப் பையன் மாதிரி தான் தெரிகிறார்.

நான் கூட முதலில் நகைச்சுவைக்கு அப்படி காட்டுகிறார்கள் என்று நினைத்தேன்… பின்னர் தான் தெரிந்தது அவர் தான் முக்கிய வில்லன் என்று.

நஸ்ரியா

இதில் வரும் கதாநாயகி நஸ்ரியா நஜிம் வழக்கமான கதாநாயகி போல இல்லாமல் ரொம்ப இயல்பான முகம் மற்றும் நடிப்பு.

நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து சைட் அடிக்கும் பெண் போல இயல்பாக இருக்கிறார் 🙂 .

தமன்னா, நயன்தாரா, காஜல் என்று கதாநாயகிக்கு என்றே இருப்பவர்கள் போல இல்லை.

நாயகன் நிவின் ஏற்கனவே “தட்டத்தின் மறையத்து” என்ற மலையாள படத்தில் நடித்து இருக்கிறார், தமிழில் அறிமுகம். இருவருமே இயல்பான நடிப்பு.

ஸ்லொவ்மோசன்

படத்தில் ஸ்லொவ்மோசன் காட்சிகள் அடிக்கடி வருகிறது. இது படத்தை மெதுவாக செல்வது போல நம்மைத் தோன்ற வைக்கிறது.

இதை அதிக காட்சிகள் வைக்காமல் இருந்து இருக்கலாம். படத்தில் குறிப்பிட்ட சிலரே அதிக காட்சிகளில் வருகிறார்கள்.

அதே போல எதேச்சையாக அனைவரும் சந்திப்பது, காட்சிகளில் வருவது, பார்ப்பது என்று செயற்கையாக உள்ளது.

எதோ இரு காட்சிகள் என்றால் பரவாயில்லை, படத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களே பெரும்பாலான காட்சிகளிலும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் [குறும்படம் பாதிப்பு].

நாசர், ஜான், சார்லி, தம்பி ராமையா, சூது கவ்வும் படத்தில் வேலைக்குப் போகாமல் தண்ணி அடித்துட்டு இருப்பாரே அவர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள்.

இயக்குனரே எடிட்டிங்கும் பார்த்துள்ளார். இசை ராஜேஷ் முருகேசன் (அறிமுகமா?).

இரு பாடல்கள் நன்றாக உள்ளது. பாடல்கள் குறைவு என்பதால், படம் இரண்டு மணி நேரம் தான். ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.

எவ்வளவுடா விலை?

ஒரு காட்சியில் வில்லன் அவருடைய அடியாள் கிட்ட செல்ஃபோனை வாங்கி…

டேய்! என்னடா பட்டனே இல்லை…!

டச் ஸ்க்ரீன் ணா

எவ்வளவுடா விலை?

10000 ணா

ஏன்டா! 10000 ரூபாய்க்கு ஃபோன் வாங்கி பட்டன் கூட இல்லாம வைத்து இருக்கே…! என்று கூறுவார் 🙂 .

படத்தில் இது போல சிறு சிறு காமெடிகள் இருந்து கொண்டே இருப்பது படத்தைச் சோர்வடைய வைக்காமல் உள்ளது.

இந்தப்படம் A B சென்டருக்கான படம்.

சாதி சண்டை, நாட்டாமை, வழக்கமான காதல் என்று போர் அடிக்காமல், இது போலப் படங்கள் தற்போது மாறி வருவது ரொம்ப சந்தோசமாக உள்ளது.

அரைத்த மாவையே அரைக்காமல் புதிய முயற்சியில் படங்கள் வெளிவருவது, ஆரோக்கியமான விசயமாக உள்ளது.

இந்தப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஒரு வாரம் முன்பே வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழில், பலரிடையே பாராட்டைப் பெற்று குறிப்பிடத்தக்க அளவில் வசூலைப் பெறும்.

Directed by Alphonse Putharen
Written by Alphonse Putharen
Starring Nivin Pauly, Nazriya Nazim,Simhaa
Music by Rajesh Murugesan
Cinematography Anand C. Chandran
Editing by Alphonse Putharen
Studio Winner Bulls Films
Distributed by Malayalam LJ Films, Tamil Red Giant Movies
Release date(s) Malayalam 10 May 2013, Tamil 17 May 2013
Running time 110 minutes
Country India
Language Malayalam, Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. பகிர்வுக்கு நன்றி கிரி… படம் இன்னும் பார்க்கவில்லை.. மையின்ட்ல வச்சிக்கிறேன்…

  2. நாசர்:- கம்ப்யூட்டர் ல என்ன எல்லாம் தெரியும்….
    ஹீரோ:- C, C++ Java அப்புறம் COBOL….
    நாசர்:- அதெல்லாம் இருக்கட்டும், CD ரைட் பண்ண தெரியுமா ?
    ஹீரோ:- டிவிடியே ரைட் பண்ணுவேன் சார்….

    இது தான் செம்ம காமெடி படத்துல….

  3. தமிழ் சினிமா நல்ல பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது இப்போது..இது மேலும் தொடர வேண்டும்..

  4. படம் பாத்துடலாம் .. நன்றி தல

    அப்புறம் தியேட்டர் ல நடந்த சுவையான சம்பவம் எதுவும் இல்லையா தல? எதாவது உங்களுக்கு நு அமையுமே, யாராவது கடுப்பு ஏத்தி இருக்கணுமே 🙂

    -அருண்

  5. “சூது கவ்வும்” மாதிரி சூப்பெரா இல்லாம, ஒரு தடவ பாக்கற மாதிரி ஓரளவுக்கு இருக்குனு சொல்றீங்க. ஓகே போய் பாப்போம்.

  6. indha padam soodhu kavvum madhiri top class ah illa….but, idhuvum super padamdhan….nalla time pass padam….indha madhiri neraya padam ippellam varuvadhu romba santhosama irukku…idhu madhiri pona இனிமே ஹீரோ oriented subjects ukku fans sangu oodhiduvanga yendru ninaikuren. 🙂 🙂

  7. சிம்ஹா அந்த கேரேக்டருக்கு நல்ல சாய்ஸ்னு நினைக்கறேன். சூது கவ்வும் கேரேக்டருக்கு அப்படியே எதிர்மறையான கேரெக்டர். சூது கவ்வும் சிம்ஹாவை மைண்ட்ல வச்சுகிட்டு பார்க்காம பார்த்தா, ரவுடியா நடிப்புல சும்மா பின்னியிருப்பார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here