முதல் வெளிநாட்டு விமானப் பயணம் I

45
முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

முதல் வெளிநாட்டு விமானப் பயணம் ஒரு த்ரில்லிங்கான அனுபவம். Image Credit

நீண்ட காலமாகப் படத்திலும் நண்பர்கள் கூறியும் தான் சிங்கப்பூர் கேள்வி பட்டு இருந்தேன், நிஜத்திலேயே செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

இது தான் முதல் வெளிநாட்டு விமானப் பயணம்.

எப்படிப் போவது அங்கே யாரை கேட்டுப் போகணும்? டாக்ஸி எப்படிப் பிடிப்பது? கன்சல்டன்சி விலாசத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? போன்ற சந்தேகங்களும் கூடவே பயமும் இருந்தது.

வீட்டில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்து இருந்தார்கள். எனக்கு நேரம் ஆக ஆகப் படபடப்பு அதிகமாகி விட்டது.

உள்ளே அனுமதித்ததும் எல்லோரும் சிறப்புச் சீட்டு எடுத்து உள்ளே வந்து இருந்தார்கள்.

முன் பரிசோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்தவுடன் இமிக்ரேசன் செல்லும் முன்பு திரும்ப வந்து அனைவரையும் பார்க்க வந்தேன்.

அம்மா

ஹாஸ்டலில் மற்றும் சென்னையில் சேர்த்து 18 வருடங்கள் அம்மாவைப் பிரிந்து இருந்தாலும், இந்தப் பிரிவு என்னை என்னவோ செய்தது.

அதுவரை அமைதியாக இருந்த அம்மா நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும் எவ்வளோ கட்டுப்படுத்தியும் முடியாமல் அழுது விட்டார்கள்.

தைரியமாகக் கட்டுப்படுத்தி இருந்த நான் எவ்வளோ முயற்சி செய்தும் அம்மாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது, பிரிவு தாங்காமல் அல்லது அம்மாவின் முகத்தைக் கண்டதும்.

அதற்கு மேல் அங்கே நின்றால் அம்மாவுக்கும் சிரமம் எனக்கும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது என்று வேகமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டேன்.

எதிர்பார்ப்பு இல்லாத அம்மாவின் அன்புக்கு ஈடு இணை இல்லை.

அனைவரிடமும் விடை பெற்று சுங்கச்சோதனை முடிந்து மேலே வந்தால், உள்ளூர் தொலைபேசி இருந்தது.

திரும்ப அதிலிருந்து ஒருமுறை அனைவரிடமும் பேசி, பாதுகாப்புச் சோதனை முடிந்து உட்கார்ந்து இருந்தேன்.

எப்படிப் போவது? யாரை பார்ப்பது?

எப்படிப் போவது? யாரை பார்ப்பது? எளிதாக விலாசத்தைக் கண்டு பிடித்து விடலாமா? சிங்கப்பூர் சென்றால் அங்கே என்ன கேள்வி கேட்பார்கள்? போன்ற யோசனைகளுடன் காத்துக் கொண்டு இருந்தேன்.

விமானத்தில் சென்று அமர அறிவிப்பு வெளியிட்டார்கள். ஒரு பயத்துடனே சென்றேன், தனியாக வேறு செல்கிறோம், முதல் முறை வேறு என்பதால் பதட்டமாக இருந்தது.

விமானத்தின் உள்ளே செல்லும் முன்பு பயணச் சீட்டு மற்றும் கடவுச்சீட்டை சோதனை செய்தார்கள்.

உள்ளே போகும் முன்பு இன்றைய காலைப் பத்திரிக்கைகள் அனைத்தையும் வைத்து இருந்தார்கள், தந்தியையும், தினகரனையும் எடுத்துக்கொண்டேன்.

விமானமா பேருந்தா!

பயணிகள் வெளிநாட்டினராக இருப்பார்கள் என்று பார்த்தால், கோயம்பேடு KPN டிராவல்ஸ்ல் இருப்பது போன்ற உணர்வு. அத்தனையும் நம்ம மக்கள்.

என்னடா! இது வெளிநாடு போற உணர்வே இல்லையேன்னு நினைத்தேன்.

கூலி தொழிலாளர்களும் இருந்ததால் ஒரே காச் மூச்னு சத்தம். எனக்குச் சுத்தமாக விமானத்தில் செல்லும் விருப்பமே போய் விட்டது.

நான் கற்பனை செய்து வைத்து இருந்ததற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது தான் காரணம்.

அருகில் இருந்தவர் எதோ ஒரு சட்டையைப் பேருக்கு மாட்டி வந்தது போல் உட்கார்ந்து, பேருந்தில் காலை வைப்பது போல் வைத்து உட்கார்ந்து கொண்டார்.

வாழ்க்கையே வெறுத்து விட்டது. என் நினைப்பு என்னவென்றால் விமானத்தில் பயணம் செய்பவர்கள் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்று.

அது எவ்வளோ பெரிய தவறு என்று பிந்தைய பயணங்களில் அறிந்து கொண்டேன்.

முதல் பயண அனுபவம்

விமானம் புறப்படபோவதாக அறிவித்தார்கள். என் முந்தய உள்நாட்டு விமானப் பயண அனுபவம் வந்து பயமுறுத்தியது. பெல்ட்டை இறுக்கமாகக் கட்டி கொண்டேன்.

முதல் பயணம்போல் இல்லாமல் எந்த வித்யாசமும் தெரியாமல் மேலே கிளம்பியது.

கீழே இருந்தே விமானத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு, விமானத்தில் இருந்து சென்னையைப் பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது.

பணிப்பெண்கள் சிறிது நேரத்திலேயே குடிப்பதற்கு ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள்.

அருகில் அமர்ந்து இருந்தவரை பார்த்தேன் அதற்குள் தூங்கி இருந்தார் நிறைய முறை வந்திருப்பவர் போல 🙂 .

முன்னால் இருந்த மானிடரில் தமிழ்ப் படமும் இருந்தது. உன்னாலே உன்னாலே படம் இருந்தது சரின்னு அதைப் போட்டேன், எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

ஹெட் போன் இருந்தாலும் அதை எங்கே மாட்டுவது என்று தெரியவில்லை, கொஞ்ச நேரம் ஊமை படமாகவே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு சீட்டைச் சாய்க்கலாம் என்று பார்த்தால் கைப்பிடி அருகே ஹெட் ஃபோனை சொருகும் இடம் காணப்பட்டது.

அட! இதை அவர்களிடம் கேட்டு இருக்கலாமே என்று என்னை நானே திட்டிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி

பிரியாணி, ட்ரிங்க்ஸ் மற்றும் உற்சாகப் பானங்கள் (அட! சரக்குங்க) கொடுத்தார்கள்.

சிங்கப்பூர் சென்று அங்கே என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையும் யோசனையும் அதிகமாக இருந்ததால், எதையும் சாப்பிட குடிக்கப் பிடிக்கவில்லை.

சரி அங்கே போய்ச் சாப்பிட என்ன கிடைக்குமோ! இங்கேயே எதாவது சாப்பிடுவோம் என்று சாப்பாட்டை வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டேன்.

என்னருகில் இருந்தவர் செம கட்டு கட்டினார். அதைப் பார்த்ததுமே எனக்குப் பசி போய் விட்டது. பெயர் தெரியாத சரக்கு இரண்டு பாட்டில் உள்ளே தள்ளினார்.

எனக்கு வேற நம்ம மேல வாந்தி எதுவும் எடுத்து வைத்து விடுவாரோன்னு பயம்.

இங்கே ஜன்னல் வெளியே அவசரத்துக்குத் தலைய கூட நீட்ட முடியாதே 😀 .

பிறகு சிங்கப்பூரில் போனவுடன் என்ன செய்யப் போகிறோம் என்று யோசனை செய்து கொண்டு இருந்ததில் என்னை மறந்து அப்படியே தூங்கி விட்டேன்.

திடீரென்று பணிப்பெண் “ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி” ன்னு அலறியவுடன் தூக்கம் எல்லாம் கலைந்து பயத்தில் முகம் எல்லாம் வெளிறி விட்டது.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பாகத்தில் கூறுகிறேன்.

தொடபுடைய கட்டுரைகள்

முதல் விமானப் பயண அனுபவம்

முதல் வெளிநாட்டு விமானப் பயணம் II

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

45 COMMENTS

 1. //எப்ப… எப்ப…. எப்ப அடுத்த பாகம் வரும்//
  கூடிய விரைவில் 😀 உங்க வருகைக்கு நன்றி ஜெகதீசன்.

  நீங்களும் சிங்கப்பூர் ல தான் இருக்கீங்களா?? 🙂

 2. தங்களின்
  கட்டுரை
  என்னை
  நினைவு அலைகளில்
  மிதக்க வைக்கிற்து

 3. வாங்க வடுவூர் குமார்.

  //ஆமாம்… இங்க தான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்… :)//

  பார்த்துங்க! குப்பை போடுறீங்கன்னு அபராதம் போட்டுடபோறாங்க 😉

 4. வாங்க திகழ்மிளிர்.

  உங்களுக்கு என்னை மாதிரியான அனுபவம் ஏற்பட்டு இருக்காது என்று நம்புகிறேன் 😀

 5. //
  இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.
  //
  எப்ப… எப்ப…. எப்ப அடுத்த பாகம் வரும்?
  😛
  🙂

 6. //
  நீங்களும் சிங்கப்பூர் ல தான் இருக்கீங்களா?? 🙂
  //

  ஆமாம்… இங்க தான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்… 🙂

 7. //ஆவலுடன் 2 பாகத்தை எதிர் பார்க்கும் புதுவை சிவா//

  சிவா உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

 8. //அட !!!!இதுக்கெல்லாமா தொடரும் போடறது? ரொம்ப ஓவருங்கோ!!! //

  வாங்க அருணா எப்படி இருக்கீங்க?, ரொம்ப நாளா ஆளையே காணோம்.

  அது வேறு ஒண்ணும் இல்லைங்க ஒரே பதிவில் முடித்து விடலாம் என்று தான் இருந்தேன், ஆனால் பெரிதாக வந்து விட்டது, அதை சுருக்கினால் படிக்க சுவாரஸ்யமாக இருக்காது என்று (பலதை விடவேண்டும்) எண்ணியே தொடரும் போட்டேன்.

 9. //ஹாஹ்ஹா.. நல்ல நகைச்சுவையாக எழுதுறீங்க, அடுத்த பாகம் எப்போ?//

  ரொம்ப நன்றிங்க தமிழ்மாங்கனி. விரைவில் எழுதுகிறேன்.

  சிறுவயதில் இருந்தே எனக்கு (மற்றவர் மனதை புண்படுத்தாத) நகைச்சுவை உணர்வு அதிகம், அதனாலேயே நண்பர்கள் வட்டம் அதிகம் :-).

  //மலேசியா சிங்கப்பூர் எல்லாம் தமிழ்நாட்டோட extension மாதிரிதாங்க. :)//

  உண்மை தாங்க இளா. எனக்கு வெளிநாட்டில் இருப்பது போலவே இல்லை. அதுவும் லிட்டில் இந்தியா சென்றால் சென்னை டி நகரில் இருப்பது போன்ற உணர்வே!!

 10. தோழர் கிரிக்கு,
  ‘என் அம்மா நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும் எவ்வளோ கட்டுப்படுத்தியும் முடியாமல் அழுது விட்டார்கள். அது வரை தைரியமாக!! கட்டுப்படுத்தி இருந்த நான் எவ்வளோ முயற்சி செய்தும் என் அம்மாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது பிரிவு தாங்காமல் அல்லது என் அம்மாவின் முகத்தை கண்டதும். அதற்கு மேல் அங்கே நின்றால் அம்மாவுக்கும் சிரமம் எனக்கும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று வேகமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டேன். என்ன தான் சொல்லுங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அம்மாவின் உண்மையான அன்புக்கு ஈடு இணை இல்லைங்க. ‘

  உண்மை! உண்மை! உண்மை!
  ஆவலுடன் 2 பாகத்தை எதிர் பார்க்கும்
  புதுவை சிவா.

 11. அட !!!!இதுக்கெல்லாமா தொடரும் போடறது? ரொம்ப ஓவருங்கோ!!!
  அன்புடன் அருணா

 12. மலேசியா சிங்கப்பூர் எல்லாம் தமிழ்நாட்டோட extension மாதிரிதாங்க. 🙂
  அனுபவம் நல்லா இருக்கு

 13. வித்யா நீ சொல்வதை பார்த்தால் நீ ஒரு தனி பதிவு போட வேண்டும் போல இருக்கே!!! அனுபவம் பலமா இருக்கே :-))

  //நன்றாக சென்று கொண்டிருக்கிறது உங்கள் கதை. பேசாமல் கதை எழுத ஆரம்பிக்கலாம் நீங்கள்//

  எதாவது இருந்த பேசி தீர்த்துக்கலாம். இப்படி எல்லாம் பேசப்படாது… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்புறம் இது கதை இல்லை உண்மை நிகழ்வு 😉

 14. ஹா ஹா ஹா மறந்துட்டேன். ஆனா எனக்கு ஜில்லுனு தான் கொடுத்தாங்க. அதை ஒருவர் இடுக்கி போன்ற பொருளில் பிடித்து கொடுத்தார், நான் முதலில் அது எதோ சாப்பிடுவதற்கு என்று நினைத்து விட்டேன், அப்புறம் தொட்ட உடனே தான் தெரிந்தது அது துணி ன்னு நான் எதோ கேக் னு நினைத்துட்டேன். நல்ல சதுரமா சின்னதா அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது.

  உங்க வருகைக்கு நன்று நானானி

 15. //ஒரு கோயம்பேடு KPN டிராவல்ஸ் ல் இருப்பது போன்ற உணர்வு// – உண்மையிலேயே அந்த உணர்வு தான் வருகிறது கிரி… இப்பொழுதெல்லாம் ஏறி அமர்ந்தவுடன் தூங்கி விட வேண்டும் இல்லை என்றால் பல பிரச்சனைகள். இருக்கிற இருக்கையை விட்டு வேறு இருக்கையில் அமருங்கள் என்று சக பயணிகள் தரும் கட்டளைகள், இருவர் மூவராக வந்திருந்து பிரிந்து அமர்ந்திருந்தால் அங்கு இருந்து ஒவ்வொன்றாக இவர்கள் தூக்கி எரிந்து விளையாடி அருகில் அமர்த்து இருப்பவர்களை கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். நன்றாக சென்று கொண்டிருக்கிறது உங்கள் கதை. பேசாமல் கதை எழுத ஆரம்பிக்கலாம் நீங்கள்.

 16. விமானத்தில் ஏறி அமர்ந்து டேகாப்
  எல்லாம் ஆன பிறகு சூஊஊஊஊடா ஒரு கைதுண்டு கொடுப்பார்களே! முகத்தில் ஒத்திஒத்தி எடுத்ததும் உடம்பிலுள்ள அசதிகள்ளெல்லாம் கால்கள் வழியே வழிந்தோடும் அனுபவத்தை சொல்லவில்லையே?
  என் முதல் அனுபவத்தில் நான் மிகவும் ரசித்தது இதைத்தான்.

 17. வலைப்பதிவு தானே தொடங்கிட்ட போச்சு!!! காசா பணமா !!

  //கதையல்ல நிஜம்மா கிரி 🙂 //

  அரி கிரி அசெம்பளி :-))))

 18. ஆமா கிரி ஆமா… அதுக்குதான் உங்ககிட்ட நான் எப்படி புதிதாய் பதிவு தொடங்குவது என்று கேட்டேன் 🙂

  கதையல்ல நிஜம்மா கிரி 🙂

 19. //நீங்க போனது என்ன சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ?//

  நான் சென்றது ஜெட் ஏர்வேஸ்

  //பிளைட் உள்ளே வந்து பேண்ட் அவுத்துட்டு லுங்கி கட்டுறாத கூட பாத்திருக்கேன்//

  இந்த மாதிரி பண்ணுரவங்கள சும்மா ரவுண்டு கட்டி அடிக்கனுங்க

  //நம்மாளுங்க தான் இப்படின்னா..north Indian அதுக்கு மேல ….. கும்பலா ஏறுகிறது.. air hostess ஐ நொங்கு எடுக்கிறது//

  பணிப்பெண்கள் நிலைமை ரொம்ப பரிதாபம் தான், ஒரு சிலர் அவர்களிடம் மிக கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக என் நண்பர்கள் கூறி இருக்கின்றனர். என் நண்பர் ஒருவர் கூறினார் பணிப்பெண்கள் யாரவது தவறு செய்து விட்டால் அவர்களை தூக்கி நம்ம பகுதி விமானத்தில் போட்டு விடுவார்களாம். அதற்கு பெயர் Punishment route ம் அடப்பாவிகளா நம்ம மானத்தை வாங்கிட்டான்களே ன்னு நொந்து கொண்டேன். ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.

  உங்க பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வெங்கி.

 20. //சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் நிறைய சரக்கு குடிக்க கொடுப்பார்கள்..அடித்துவிட்டு அமர்க்களம் செய்பவர்களை ஏர்போர்ட் ல் இறங்கியவுடன் “மாமா ” க்களிடம் பத்திரமாக சேர்த்து விடுவார்கள்//

  இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடதுங்க சுளுக்கெடுக்கணும்.

  //குளிக்காமல் விமானம் ஏறுவது…உள்ளே ஏறியபின்..சவுண்ட் கொடுப்பது (“மாப்ளே !! எங்கே இருக்கே ??” ) இந்த மாதிரி.. ஏறியவுடன்…சரக்குக்காக விமான பணிப்பெண்களை புடுங்குவது.. //

  மாப்ளே !! எங்கே இருக்கே …இதை நானும் கேட்டேன் 🙂 பல நாட்டினர் உள்ள இடத்தில் இங்கிதம் தெரியாமல் எதோ கோவில் திருவிழாவில் கூப்பிடுவது போல இப்படி சத்தம் போட்டு கூப்பிடும் நபர்களை என்ன செய்தால் தகும். நம்ம ஊர் மானத்தை வாங்காம விடமாட்டோம்னு கங்கணம் கட்டி அலையறாங்க 🙁

 21. பெரிய பதிவா வந்துடுச்சு அதனால இரண்டாம் பாகம்.

  சீக்கிரமா சொல்லிடுறேன் முரளி கண்ணன்

 22. // குளிக்காமல் வந்து, பக்கத்தில் உள்ள passenger பற்றி கவலைப்படாமல் லுங்கி உடுத்திக்கொண்டும், அக்குளை தூக்கிக்கொண்டு மணக்க மணக்க தூங்குவது..மேலே சரிவது…//

  //தராதரம் இல்லாத luggage (புண்ணாக்கு வைக்கும் பை, அட்டை பெட்டி, சமாசாரங்கள்) ஐ Hand luggage ஆக கொண்டு வருவது//

  //ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு பிளைட்டுக்கே சொந்தக்காரன் போல பந்தா காட்டுவது..(முக்கியமாக North Indians) //

  ஹா ஹா ஹா வெங்கி ரொம்ப அனுபவ பட்டு இருக்கீங்க போல. பேசாம நீங்க ஒரு பதிவு போடலாம்.

  நான் நினைக்கிறேன், பல பேருக்கு இதை விட மோசமான அனுபவம் இருக்கும்னு :-))))

 23. ஹா ஹா ஹா ஹா வெங்கி செம காமெடி போங்க. எனக்கு சிரித்து கண்ணீரே வந்து விட்டது.

  உங்கள் அனுபவத்தை உண்மையிலேயே ரொம்ப ரசிச்சேன் 😉

  நல்லா எழுதி இருக்கீங்க. நான் அடுத்த வாரம் வேற ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ல போறேன் உங்க குல தெய்வத்தை வேண்டிக்குங்க :))) எனக்காக.

  என்னோட இரண்டாம் பாகத்துல உங்க அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சம் காமெடி இருக்கு.

  எங்க ஆபீஸ் ல கூட இரவு ஷிபிட் ல இங்க இருக்கிற சீனா காரங்க எதோ கருமத்தை சாப்பிடுவாங்க எலி செத்த நாத்தம் மாதிரி அடிக்கும். எனக்கு முதலில் புரியவில்லை எங்கே இருந்து இந்த நாற்றம் என்று, ஏன் என்றால் சாப்பாடு இப்படி நாறும்னு எனக்கு தெரியாது. கடைசியா பார்த்த இந்த பய கிட்ட இருந்து. வயத்தை புரட்டி விட்டது. இதை ஒரு பதிவுல கூட போட போறேன் ஹா ஹா ஹா

 24. வணக்கம்.. நீங்க போனது என்ன சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ?
  நம்ம ஆளுங்க…சும்மா கொடுத்தா பீயேயே சாப்பிடுவாங்க…சரக்கு சாப்பிடறத பத்தி கேக்கணுமா ? வேல உசத்தி சரக்கு இல்ல ? நான் பாத்திருக்கேன்..பிளைட் உள்ளே..air hostess ஐ போட்டு பிடுங்குகிறது..”மேடம்!!..லிக்கர் …” அப்படின்னு..இஷ்டத்துக்கு வாங்கி அடிக்கிறது…தராதரம் இல்லாம நடக்கிறது..லுங்கியோட உள்ளார உலாத்துறது..சிலபேர்..பிளைட் உள்ளே வந்து பேண்ட் அவுத்துட்டு லுங்கி கட்டுறாத கூட பாத்திருக்கேன்….

  நம்மாளுங்க தான் இப்படின்னா..north Indian அதுக்கு மேல ….. கும்பலா ஏறுகிறது.. air hostess ஐ நொங்கு எடுக்கிறது….

  நெறைய Flying அனுபவம் எனக்கு இருக்கு…எனினும்..நீங்க எழுதினது..சூப்பர்.. கீப் இட் up..

 25. வெங்கி சொல்றதைப் பார்த்தால் டைகர் ஏர்வேஸ்லே (G)கப்பா?

  நான் ஆஸ்தராலியாவிலே இருந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் போகலாம். இங்கேதான் SIA நம்மை மொட்டையடிக்கிறாங்கன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்.

  தேவுடா தேவுடா…..

  வெங்கி நீங்க பெர்த்தா?

 26. பணிப்பெண்கள் யாரவது தவறு செய்து விட்டால் அவர்களை தூக்கி நம்ம பகுதி விமானத்தில் போட்டு விடுவார்களாம்.

  நீங்கள் கேள்விப்பட்டது முற்றிலும் உண்மை.. நான் சாங்கி ஏர்போர்ட் ல் 2 வருடம் வேலை Aircraft Fuelling Design Engineer ஆக வேலை பார்த்து இருக்கிறேன்…

  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் நிறைய சரக்கு குடிக்க கொடுப்பார்கள்..அடித்துவிட்டு அமர்க்களம் செய்பவர்களை ஏர்போர்ட் ல் இறங்கியவுடன் “மாமா ” க்களிடம் பத்திரமாக சேர்த்து விடுவார்கள்.. இது இண்டியன்ஸ் மட்டுமல்ல ..எல்லா இனத்தவர்களுக்கும் same treatment..

  இதாவது பரவாயில்ல..மத்திய கிழ்க்கு நாடுகளுக்கு (மிடில் ஈஸ்ட் ) செல்லும் விமானங்கள்..மகா கொடுமை..குளிக்காமல் விமானம் ஏறுவது…உள்ளே ஏறியபின்..சவுண்ட் கொடுப்பது (“மாப்ளே !! எங்கே இருக்கே ??” ) இந்த மாதிரி.. ஏறியவுடன்…சரக்குக்காக விமான பணிப்பெண்களை புடுங்குவது.. இதெல்லாம் சகஜம்… இதனாலேயே அந்த செக்டர் விமானங்களில், Stewarts (ஆண் பணியர்கள்) அதுவும் ஆஜானு பாகுவானவர்கள் வேலை பார்ப்பது அதிகம்…

 27. விமான பயணத்தின் போது மகா கொடுமையான , சகித்துக்கொள்ள முடியாத விஷயங்கள்..

  1. குளிக்காமல் வந்து, பக்கத்தில் உள்ள passenger பற்றி கவலைப்படாமல் லுங்கி உடுத்திக்கொண்டும், அக்குளை தூக்கிக்கொண்டு மணக்க மணக்க தூங்குவது..மேலே சரிவது…

  2. விமான பணிப்பெண்களை ட்ரிங்க்ஸ் கேட்டு நொங்கு எடுப்பது..

  3. தராதரம் இல்லாத luggage (புண்ணாக்கு வைக்கும் பை, அட்டை பெட்டி, சமாசாரங்கள்) ஐ Hand luggage ஆக கொண்டு வருவது..

  4. மைக்கே இல்லாமல், லவுட் ஸ்பீக்கர் effect கொடுத்து பேசுவது…

  5. ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு பிளைட்டுக்கே சொந்தக்காரன் போல பந்தா காட்டுவது..(முக்கியமாக North Indians)

  6. பிளைட் கக்கூசை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அடிக்கடி போய் நாஸ்தி செய்வது..

  இது நான் பொதுவாக சிங்கை-சென்னை , கோலாலம்பூர் -சென்னை வழித்தட விமானங்களில் கண்டவை…

 28. மேற்கொண்டு…சீனர்களை சும்மா நெனைக்க வேண்டாம்.. நம்மவர்களை மீறினவர்கள் …
  உதாரணத்துக்கு சில…ஒரு பாகெட் நாத்தம் புடிச்ச சாப்பாடு எடுத்துக்கொண்டு பட்ஜெட் Air lines ல் (டைகர் Airways) ஏறி உள்ளே பாகேட்டை பிரிக்கும் போது..பன்னிக்கறி வாடை பைலட் ஐயே கொன்று விடும்.. ஒரு முறை பாங்காக் செல்லும் போது ஒரு சீன புங்காத்தா கிழவி அப்படி பாக்கெட் ஐ பிரித்து உண்ணும் போது வாடை தாங்காமல், என் மனைவி வாந்தி எடுத்து விட்ட்டார்… இதை பார்க்கும் போது நம் ஆட்களே தேவலை என்று தோன்றியது…

  மற்றும் ஒருமுறை ஒரு சீனன் என் பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் போது யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்…அப்போது “ஸ் ஸ் ங் ” என்று சவுண்டு கொடுத்தான் அதில், ஒரு அரை கிலோ சளி வெளியே வந்து பிளைட் வழி தடத்தில் விழுந்து விட்டது…அதை விமான பணிப்பெண் அள்ளிய போது..உண்மையிலேயே மனது வலித்தது… துப்பிய சீனன் ஒண்ணும் தெரியாதவன் போல அமர்ந்து இருந்தான்…சாரி கூட சொல்லவில்லை…என்ன மட்டரகமான பண்பாடோ ??
  ——————-oOoOoOoOoOoOoOoOoO—————-
  கிரி,
  என்னிடம் ஒரு புக் எழுதற அளவுக்கு பிளைட் சரக்கு இருக்கு..எல்லாம் ௨0 ஆண்டு பயண அனுபவம் தான்.. Allmost எல்லா ஏர்லைன்ஸ் லேயும் போயி வந்துட்டேன்… அப்பால எழுதுறேன்.. ஒவ்வொண்ணா …

  நானும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து குப்பை கொட்டிவிட்டு, அரெஸ்ட் ஆகாமல் ஆஸ்திரேலியா வில் வசிப்பவன்…

 29. நன்றி கிரி….
  நாளை நானும் இந்தியா செல்கிறேன்…ஆஸ்திரேலியா டு சென்னை.. by சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்… காசு கூட போனாலும் பரவாயில்லை…நிம்மதி தேவை…

  உங்களோட 2 வது பிளைட் அனுபவ பதிவுல நெறைய சைடு டிஷ் சேர்க்கிறேன்…(என் அனுபவங்களை)..

 30. வெங்கி,

  நான் நியூஸி. க்ரைஸ்ட்சர்ச்சில் 21 வருசமாக் குப்பை(?) கொட்டிக்கிட்டு இருக்கேன்.

  வழக்கமான ரூட் நமக்கு சிங்கை வழியாச் சென்னை. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான் எப்பவும்.

  இங்கே இருந்து சிங்கை வரை நிம்மதியான ஃப்ளைட்தான் எப்பவும்.

  சிங்கை டு சென்னைதான் பலசமயம்
  பேஜார் ஆகிருது இந்தத் தள்ளு முள்ளுகளால்(-:

  கிரி,

  உங்க பதிவின்மூலம் இன்னும் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள். நன்றி.

 31. வெங்கி, துளசி அவர்கள் நியூசிலாந்து ல் வசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு இதிலேயே கூறுங்கள் நான் (வெளியிடாமல்)உங்களுக்கு தனியாக மின்னஞ்சல் செய்கிறேன்.

 32. //நான் நியூஸி. க்ரைஸ்ட்சர்ச்சில் 21 வருசமாக் குப்பை(?) கொட்டிக்கிட்டு இருக்கேன்//

  துளசி மேடம் இத்தனை வருடமா குப்பை போட்டு உங்க ஏரியா வையே காலி பண்ணிட்டீங்க போல இருக்கு. ஒரு மலையே சேர்ந்து இருக்கும். ஹா ஹா ஹா ஜெகதீசனை ஏற்கனவே சந்தேக லிஸ்ட் ல வைத்து இருக்காங்களாம். சிங்கப்பூர் ல் குப்பை சேர்வதற்கு அவர் ஒரு முக்கிய காரணம் என்று ஹா ஹா ஹா

  //உங்க பதிவின்மூலம் இன்னும் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள்//

  எதோ என்னால நல்லது நடந்தா சரிங்க. வெங்கி க்கு ஒரு சீனா பொண்ணை கட்டி வைத்து இருந்தா சாப்பாடு நாற்றம் தாங்காமையே விவாகரத்து வாங்கிடுவாரு ஹா ஹா ஹா

 33. // வற்றாயிருப்பு சுந்தர் said…
  Giri
  Fantastic post – please keep writing.. waiting for episode //

  நன்றிங்க சுந்தர். இன்று இரண்டாவது பதிவு போடுகிறேன், படித்து (சிரித்து) விட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

 34. //இருக்கிற ஒரு தலை வலி பத்தாதா ? இன்னொரு மூட்டை பூச்சி வேறயா ? அதுவும் சீன மூட்டை பூச்சி//

  :-))))

  //சிங்கப்பூர் ல் இறுக்கி கட்டிக்கொண்டு திரியவும்//

  இல்லைனா நம்ம ட்ராயர உருவிடுவாங்கன்னு சொல்லுறீங்க ஹா ஹா ஹா

  //தம்பி கிரி !!..(கூப்பிடலாம்னு நெனைக்கிறேன்)//

  தாராளமா கூப்பிடுங்க ஆனா அசிங்கமா எதுவும் திட்டிடாதீங்க :-)))

  //அங்கன பழம் தின்னு கொட்டை போட்ட மக்களை கேளுங்க…கதையெல்லாம் வெளிய வரும்..//

  பல கதைய கேட்டுட்டேன்.. வாழ்க்கையில நிறையா அடிபட்டு தான் வந்து இருக்கேன் அதனால் என் கதை பெருசு, இந்த கதைய சமாளிச்சுடுவேன் 🙂

 35. நன்றி துளசி கோபால் !! நீங்களும் ஆஸ்திரேலியா வில் வசிக்கிறீர்களா ?எங்கே ?

  நான் பெர்த் ல் வசித்து வருகிறேன்… என் அனுபவ அட்வைஸ் … டைகர் ஏர்லைன்ஸ் ல் போக வேண்டாம்…சாப்பாடு கொடுப்பதில்லை என்ற காரணத்தினால், சீனர்கள்..அவர்களின் நாத்தம் பிடித்த உணவினை கொண்டு செல்வது / உண்பது வழக்கமாகி விட்டது… ஏர்லைன்ஸ் staff ம் இதை கண்டு கொள்வதில்லை….

  முடிந்தால் SQ ல் செல்லவும்.. இல்லைஎன்றால் Quantas, Emirates, கே எல் எம் போன்றவற்றில் முயற்ச்சி செய்யவும்….

  கிரி , உங்களை எப்படி தொடர்பு கொள்வது ??

 36. //எதோ என்னால நல்லது நடந்தா சரிங்க. வெங்கி க்கு ஒரு சீனா பொண்ணை கட்டி வைத்து இருந்தா சாப்பாடு நாற்றம் தாங்காமையே விவாகரத்து வாங்கிடுவாரு ஹா ஹா ஹா//

  இருக்கிற ஒரு தலை வலி பத்தாதா ? இன்னொரு மூட்டை பூச்சி வேறயா ? அதுவும் சீன மூட்டை பூச்சி…
  இங்கே ஆஸ்திரேலியா வில் செய்திதாள்களில் வரும் “Men Wanted” விளம்பரங்களை பார்த்தால் சில உள் குத்து இருப்பது நன்றாகவே புரியும்..
  பல சீன பெண்கள் (சிங்கை, மலேசிய, சைனா) திருமண நோக்கோடு விளம்பரம் செய்வார்கள்… அதுவும் வெள்ளைக்காரன் தான் வேண்டும் என்று…அதைக்கண்டு ஒரு இளிச்சவாய வெள்ளைக்காரன் மாட்டினால், அவனை திருமணம் செய்து கொண்டு, முதலில் ஆஸ்திரேலியா வில் குடியேறி விடுவது..பின்பு PR (நிரந்தர குடியுரிமை) எடுப்பது..அவன் மூலம் வெள்ளைக்கார லுக் ல் ஒரு சீன பிள்ளையையும் பெற்றுக்கொள்வது..(இவளுகளுக்கு இது ஒரு பேஷன் மாதிரி..) பின்பு அவனிடம் விவாகரத்து பெறுவது… (ஆஸ்திரேலியா சட்டப்படி, விவாகரத்து செய்யும் போது ஆண் பெண்ணுக்கு அவன் சொத்தில் பாதியையும், வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சத்தையும் கொடுக்கணும்…இது சிங்கப்பூர் சட்டத்துக்கும் பொருந்தும்..) இப்போ புரியுதா…உள்குத்து என்னன்னு… சீன பெண்கள் இதில் கெட்டிக்காரிகள்… So, சிங்கப்பூர் ல் இறுக்கி கட்டிக்கொண்டு திரியவும்…அசந்தால் ஆளை விழுங்கி விடுவார்கள்…லோக்கல் பெண்மணிகள்….
  தம்பி கிரி !!..(கூப்பிடலாம்னு நெனைக்கிறேன்)
  நான் இதெல்லாம் நெறையா பாத்துட்டேன்…கேட்டுட்டேன்…புதுசா சிங்கைக்கு வந்திருக்கீங்க போலிருக்கு.. அங்கன பழம் தின்னு கொட்டை போட்ட மக்களை கேளுங்க…கதையெல்லாம் வெளிய வரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here