முதல் விமானப் பயண அனுபவம்

16
முதல் விமானப் பயண அனுபவம்

ன்னால் மறக்க முடியாத முதல் விமானப் பயண அனுபவம் தான் இக்கட்டுரை.

கணிப்பொறி துறையில் இருந்தாலும் வெளிநாடு செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாகக் கருதி துக்கம் விசாரித்தவங்க பல பேர்.

என்னடா இவங்க தொல்லைன்னு இருந்தாலும், எனக்கும் இந்த விமானத்துல போய் எப்படித் தான் இருக்கும் என்று பார்க்க உள்ளூர ஆசை தான். Image Credit

போனவங்க பல பேர் ‘மச்சி! அது செம கடிடா‘ என்று கூறும் போது, அனுபவம் இல்லாததால் என்னடா சும்மா சீன் போடுறாங்கன்னு நினைத்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் அனுப்புற மாதிரி தெரியல, சரி நாம பெங்களூராவது போய் வருவோம்னு என்னோட நண்பர்கள் இருவருடன் முடிவு செய்து பெங்களூர் விமானத்தில் செல்ல முடிவு செய்தோம்.

பயணக்கட்டணம் ₹1500.

டெக்கான் விமானம்

ஒரு சனிக்கிழமை காலையில் டெக்கான் நிறுவன விமானத்தில் போக முன்பதிவு செய்தோம். வெள்ளிக்கிழமை இரவு தூக்கமே வரலை, அடுத்த நாள் விமானத்தில் போவதை நினைத்து.

காலையில் குளித்துத் தயாராகி துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு புகைப்படக் கருவி எல்லாம் எடுத்துக்கொண்டு மூவரும் உள்நாட்டு விமான நிலையம் சென்று விட்டோம்.

உள்ளே போகும் முன்பு நினைவாகப் புகைப்படம் எடுத்து உள்ளே காத்திருந்தோம், அறிவிப்பு வந்ததும் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானம் செல்லப் பேருந்தில் அழைத்துச் சென்றார்கள்.

ஓட்டம்

எனக்குப் பயங்கர ஆர்வம் ஆகி விட்டது, நேரம் நெருங்க நெருங்க. பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான்.

எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயணச் சீட்டு கையிலே இருக்கே! இருக்கை எண் உட்பட, அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு குழப்பமாகி விட்டது.

மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் அமர்ந்து கொள்ளலாமாம். அடப்பாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா! விமானத்திலும் இப்படித் தானா என்று செம கோபம் வந்து விட்டது.

ஒரு பில்டப்ல வந்தா இப்படிச் சொதப்பியதில் செம காண்டாகி விட்டது. இதில் 50 பேர் உட்காரலாம் அவ்வளோதான்.

அதி வேகம்

கனவு நிறைவேறும் நேரமும் வந்தது, அறிவிப்புடன் விமானம் ஓடுதளத்தில் மெதுவாகச் சென்று திடீரெனச் செம வேகத்துடன் (வேகம்னா வேகம் அப்படியொரு வேகம்) ஓடி மேலே பறந்தது. அடி வயிற்றில் ஜிவ்வுனு இருந்தது.

இதெல்லாம் 5 நிமிடங்கள் தான் அதற்கப்புறம் ஒன்றுமே தெரியவில்லை, எதோ சாதாரணமா எப்போதும் போல் உட்கார்ந்து இருப்பதைப் போன்ற உணர்வே.

அவசர காலத்தில் எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்று பணிப்பெண் விளக்கினார்.

அது வரை எதுவும் எனக்குத் தோன்றவில்லை, இதைக் கேட்டவுடன் பயம் வந்து விட்டது.

பல ஹாலிவுட் பட விமான விபத்துக் காட்சிகள் நினைவுக்கு வந்து பயமுறுத்தின.

நடுக்கம் இருந்தாலும் அதை வெளி காட்டிக்காமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பியதும் சிறிய விமானம் என்பதால், மூடப்படாத காத்தாடி அதி வேகமாகச் சுற்றியதைப் பார்த்து அடி வயிறு கலங்கி விட்டது.

எதாவது பறவை வந்து மோதி விடுமோ எனச் செய்திகளில் படித்ததெல்லாம் அப்போது தான் நினைவுக்கு வந்து இம்சித்தது. பயத்தில் அந்தப் பக்கமே திரும்பவில்லை.

பணிப்பெண்

பணிப்பெண் சாப்பிட எதோ கொண்டு வந்தார், பணம் கொடுக்க வேண்டும் என்றதால், அந்த எண்ணத்தையே கை விட்டேன்.

நாங்களே கஷ்டப்பட்டு விமானப் பயணச் சீட்டு வாங்கி இருக்கோம், இதுல இது வேறயா!

இன்னும் சிறிது நேரத்தில் இறங்க போகிறோம் என்று அறிவித்தார்கள், என்னடா! இது அதுக்குள்ளே பெங்களூர் வந்து விட்டதான்னு வியப்பாகி விட்டது, 45 நிமிட பயணம் தான் சென்னையில் இருந்து.

விமான இறங்கும் போது தட தடன்னு செம சத்தம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஐயையோ! இப்படியே ஒரேடியா மேலே கூட்டிட்டு போய்டுனுவாகப் போல இருக்கேன்னு பயத்துல நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது.

ஏற்கனவே பயந்து போய் இருந்த நான், இன்னும் பயந்து விட்டேன். எனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளையும் கும்பிட்டு விட்டேன்.

அது வரை சிரித்துக் கொண்டு இருந்த நண்பர்களும் கப் சிப் னு ஆகிட்டாங்க. சிரிப்பு போய் முகம் எல்லாம் வெளிறி விட்டது.

அப்புறம் ஆடிட்டே தட தட ன்னு இறங்கி விட்டது. இறங்கியதும் தான் உயிரே வந்தது. சிறிய விமானத்தில் இப்படித் தான் இருக்கும் என்று பிறகு கூறினார்கள்

இந்த மாதிரி முதல் விமானப் பயண அனுபவம் பயத்துடன் அமைந்து விட்டது. என்னோட சிங்கப்பூர் விமானப் பயணத்தை அடுத்த கட்டுரையில் கூறுகிறேன் 😀 .

பிற்சேர்க்கை முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

16 COMMENTS

  1. நல்லாயிருக்கு உங்க அனுபவம்… 🙂

    நெஜமாவே ஒடிப்போய் எடம் புடிக்கணுமா?? எல்லா உள்நாட்டு விமானத்திலயும் அப்படித்தானா?

  2. சிவா உங்க வருகைக்கு நன்றி.

    மிக விரைவில் என் சிங்கப்பூர் அனுபவத்தை எழுதுகிறேன். படித்து விட்டு உங்க கருத்தை சொல்லுங்கள்.

  3. நான் எதோ பதிவு எழுதணும் என்பதற்காக மிகை படுத்தி கூறவில்லை. உண்மையிலேயே எல்லோரும் ஓடித்தான் வசதியான இடம் பிடித்தாங்க, நம்பினால் நம்புங்க. மற்றவங்களுக்கு எப்படின்னு தெரியல மற்றும் மற்ற விமானங்கள் எப்படின்னும் தெரியல.

    நான் அது ஒரு முறை மட்டுமே உள்நாட்டு விமானத்தில் போனேன், அதன் பிறகு போனதெல்லாம் வெளிநாட்டு விமானம். அதிலேயும் எனக்கு செம காமெடி அனுபவம் மற்றும் நொந்து போன அனுபவங்கள் உண்டு அதை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி பட்டியன்

  4. பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது. இதில் 50 பேர் உட்காரலாம்

    your experienc is very funny
    When I read this realy enjoy it

    Thank you
    write in Singapor trip
    siva
    Pondicherry

  5. அதெப்படி விட்டுருவோமா !!! நீங்களும் எங்க ஜோதியில் ஐக்கியமாக என் மனமார்ந்த !!! வாழ்த்துக்கள் 🙂

  6. /
    பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது.
    /

    கொக்கா மக்கா இதுக்குதான் கருமம் இந்த ப்ளைட்ல இன்னும் ஏறவே இல்லை

    :))))))))))))))

  7. சூப்பர் அனுபவம் தலைவா!
    நானும் இந்த வருடத்தில் போய் வருவேன் என்று நினைக்கிறேன்!
    போய் வந்து எழுதுகிறேன்!

  8. //மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! //

    கிரி!வால்பையன் வீட்டுக்குப் போயிட்டு சொல்லாமக் கொள்ளாம இங்கே வந்து விட்டேன்.பாதி படித்ததும் இதென்ன துண்டு போட்டுக்கவா மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்துக்கு ஓடி வந்து விட்டேன்.
    விமானத்திலும் ஆள் ஆளுக்கு ஓடுறாங்களேன்னு நானும் பம்பாயிலிருந்து கோவைக்கு ஏர்டெக்கான்ல வரும்போது நினச்சேன்.

  9. //விமான இறங்கும் போது தட தடன்னு செம சத்தம் எனக்கு தூக்கி வாரி போட்டது, //

    கிங் பிஷர்,டெக்கான் விமான அனுபவங்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.ரசித்தேன்:)

  10. இன்றுவரை இந்த விமான ஆசை போகவில்லை என்றால் பாருங்களேன் ஆதாவது ஓட்டிப்பார்கனும் என்ற ஆசை.
    இதற்கான மென்பொருடகள் (இலவசம்) இலவசமாக இருந்தாலும் அதைப் படித்து அதை கீபோர்ட் வழியாக செயல்படுத்தும் போது நாக்கு வெளியில் வந்துவிடுகிறது.
    சிங்கையில் சுற்றுப்பயணிகள் செல்லும் இடத்தில் (பெயர் ஞாபகத்து வரமாட்டேன் என்கிறது) விமானம் ஓட்ட ஒரு இயந்திரம் வைத்துள்ளார்கள் அருமையாக இருக்கும்.

  11. நான் இன்னும் விமானத்தில் செல்லவில்லை செல்லும் காலம்
    எப்போது வரும் என்றும் தெரியவில்லை

  12. The Gods Must Be Crazy திரைப்படத்தில் ஒரு குட்டி விமானத்தில் அவர்கள் படும்பாடு இப்போ நினைவுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here