இப்பெல்லாம் WhatsApp ல் பகிரப்படுகிற தகவலை வைத்து ஊரெல்லாம் செய்கிற அட்டகாசம் தாங்க முடியவில்லை.
எதைத்தான் சாப்பிடுவது என்றே தெரியவில்லை. எதைச் சாப்பிட்டாலும் அதில் 100 பிரச்சனைகளை அடுக்குகிறார்கள்.
காஃபிக்கு என்ன சர்க்கரை?!
எங்க ஊரில் (கோபி) தற்போது அஸ்கா (வெள்ளை) சர்க்கரை சாப்பிடுவதில்லை என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். Image Credit
உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, வீட்டில் “இருங் காபி கொண்டு வரேனுங்” என்றால், “ஏனுங் அஸ்கா போடாதீங், கருப்பு சர்க்கரைலையே போடுங்” ன்னு சொல்றாங்களாம் 🙂 .
சிலர் பனை வெல்லமும் பயன்படுத்துகிறார்கள்.
அந்த அளவுக்கு ஊரு பக்கம் அஸ்கா என்றால், சிலர் தெறித்து ஓடுகிறார்கள். அஸ்கா சர்க்கரை உடலுக்குக் கெடுதல் என்று கூறியதால், பலரும் தவிர்க்கிறார்கள்.
கருப்பு வண்ணத்தில் உள்ள சர்க்கரை தான் பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு வெள்ளையாகி வருகிறது. இது குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு.
எங்க வீட்டில் மனைவி சமீபமாக அஸ்கா பயன்படுத்தாமல், காஃபி, பூஸ்ட் போன்றவற்றுக்குக் கருப்பு சர்க்கரை தான் அவ்வப்போது பயன்படுத்துகிறார்.
சுவையில் மாற்றமுள்ளது ஆனால், மோசமில்லை அதே சமயம் எனக்குத் திருப்தியுமில்லை.
Refined Oil
அடுத்தது இந்த Refined Oil.
இதுவும் சர்க்கரை போலவே தான். அதாவது, Refined Oil பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயாக மாறி வருகிறது.
இதைக் கேட்டதிலிருந்து சாப்பிடவே ஒரு மாதிரி ஆகி விட்டது. நண்பன், தான் செக்கு (கடலை) எண்ணெய் பயன்படுத்துவதாகவும், அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றான்.
விலை கொஞ்சம் கூடுதல், சரி! பயன்படுத்திப் பார்க்கலாம் என்று ஒரு வருடம் முன்பு முயற்சித்தேன், சுவையில் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை.
எனவே, இன்று வரை எங்கள் வீட்டில் Refined Oil பயன்படுத்தாமல் செக்கு எண்ணெயே பயன்படுத்தி வருகிறோம்.
நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு இது போல அனுபவங்கள் உள்ளதா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இப்பொழுது பல அரை கிறுக்குகல் வாட்ஸஅப்ப் வரும் செய்திகளை உண்மை என்று நம்புவதால் பல கிறுக்குத்தங்கல் நடைபெறுகிறது .
கிரி, என்னை பொறுத்தவரை பழமையை என்றுமே விரும்புபவன் நான்.. உணவாக இருக்கட்டும், அல்லது பழக்க வழக்கமாக இருக்கட்டும்… உடைகள் விஷியத்தில் எனக்கும் மனைவிக்கும் நிறைய வேறுபாடு / வாக்குவாதம் உண்டு… whatsapp , FB பகிரப்படுகிற செய்திகளில் 90 % நான் பின்பற்றுவதில்லை..குறிப்பாக உடல் ஆரோக்கியம், உணவு, குறித்த விஷியங்களை 100 % தவிர்ப்பேன்..
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான், விவசாயத்திற்கு திரும்ப, முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்… ஆனால் முயற்சிக்கான நேரம் தான் தள்ளி போய் கொண்டே இருக்கிறது… முன்னோர்களில் பண்டைய வாழ்க்கை முறைகளை புத்தகங்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.. அவற்றையே வாழ்வில் பின்பற்றவும் எண்ணியுள்ளேன்.. கொஞ்சம் பின்பற்றியும் வருகிறேன்..
தற்போது குடும்பம், அலுவலக பணி, சொந்த தொழில், கிரிக்கெட், பேட்மிட்டன் …என பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியவில்லை.. காலதாமதம் ஏற்படுகிறது… சமயத்தில் தனிமையில் யோசித்து பார்த்தால் மூளை வேலை செய்தமாதிரியே தோணுது…
இங்கு நண்பர்கள் அனுபவத்தில் அஸ்காவா / வெல்லமா, பாமாயில, கடலை எண்ணெயா, செக்கு எண்ணெயா, சுத்திகரிப்பு எண்ணெயா என்று பார்த்தால்.. எந்த பொருளில் தள்ளுபடி அதிகம் கிடைக்கிதோ அதை தான் எடுக்கின்றனர்… விழிப்புணர்வு ரொம்ப குறைவு.. உடல் ஆரோக்கியத்தை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை…தெரிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சியும் கிடையாது.. பகிர்வுக்கு நன்றி கிரி…
கடந்த ஒரு வருடமாக செக்கு எண்ணெய்தான். கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்.. வெவ்வேறு உபயோகங்களுக்கு என. வெள்ளைச் சர்க்கரை உபயோகத்தை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை. முடிந்தவரையிலும் குறைத்திருக்கிறேன்.
வெள்ளை சர்க்கரை முழுவதுமாக குறைத்துக்கொண்டுள்ளேன். வீட்டில் Demerara (ஒரிஜினல் சர்க்கரை மாதிரி ) சர்க்கரை தான். அடுத்து எண்ணெய் மாற்ற வேண்டும் 🙂
@விஜயகுமார் 🙂
@யாசின் நீங்கள் கூறுவது சரி தான். சிலர் எதையும் கண்டுகொள்வதில்லை சிலர் ரொம்ப கண்டுகொள்வதும் பிரச்சனையாகிறது 🙂
@ராமலக்ஷ்மி ஓஹோ! பலர் முயற்சித்து வருகிறார்கள் போல.. எனக்குத் தான் தெரியவில்லை! 🙂 செக்கு எண்ணெய் நன்றாக உள்ளது, எனக்கு சுவையில் வித்யாசம் தெரியவில்லை.
சர்க்கரை தான் இதில் குடிக்க ஒரு மாதிரியாக உள்ளது.
@விஜய் பார்ரா .. கேப்டன் கலக்குறீங்க போங்க 🙂