நாட்டுல ஒவ்வொருத்தரும் கட்சியை வளர்க்க படாதபாடு படுறாங்க ஆனால், நம்ம தமிழக பாஜக அவங்க கட்சியைப் போட்டி போட்டுக் காலி பண்ணிட்டு இருக்காங்க.
கடந்த இரண்டு வருடங்களில் அதுவும் முக்கியமா கடந்த ஒரு வருடத்தில் இவங்க இவர்களுக்கே வைத்துக்கொண்டு இருக்கிற சூனியம் இருக்கே…!
தமிழிசை
தமிழிசை தினம் செய்திகளில் வரணும் என்று நினைக்கறாங்களோ என்னவோ! தினம் தினம் ஏதாவது அறிக்கை விட்டுட்டே இருக்காங்க. Image Credit
இவங்க அறிக்கை விட்டால் யாரு கோபப்படுறாங்களோ இல்லையோ “Meme Creators” செம்ம மகிழ்ச்சியாகி மீம் மேல மீம் போட்டுத் தாக்குகிறார்கள்.
தினம் அறிக்கை விடுவது கடமை என்பது போலச் செய்துகொண்டு இருக்கிறார். இது எந்த வகையில் மக்களைக் கவரும்?! ஊடக வெளிச்சத்தில் நேர்மறையும் எதிர்மறையும் உண்டு.
கட்சித்தலைவராகக் கருத்து நிச்சயம் கூற வேண்டியது தான் ஆனால், இவர் செய்து கொண்டு இருப்பது சொந்த செலவில் சூனியம்.
H ராஜா
தமிழக பாஜகவை குழி தோண்டி புதைத்து விட்டுத் தான் மறுவேலை என்று ராஜா சபதம் எதுவும் எடுத்து இருப்பாரோ என்னவோ! ஒரு முறை விவகாரமா பேசலாம் ஆனால், பேசுறது எல்லாம் விவகாரமாக இருந்தால் எப்படி?!
ஒரு கட்சியில் பொறுப்பில் உள்ளவர் நடந்து கொள்வதற்கும் இவர் செய்து கொண்டு இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
சமீபமாகப் பெரியார் சர்ச்சை. ஒரு தவறை சரி செய்ய இன்னொரு தவறை செய்தால் அது இன்னமும் மோசமாகத் தான் போகும் என்பதற்கு ராஜா தான் உதாரணம்.
பெரியார் பற்றிக் கூறியது தவறு என்று கூறியதோடு முடித்து இருந்தால், அதோட பிரச்சனை முடிந்து இருக்கும். என்ன.. இரண்டு நாள் விவாதம் இருக்கும்.
பிறகு வேற பிரச்சனை வந்தால் அதற்கு வழக்கம் போல ஊடகம் சென்று விடும்.
“இது என்னோட Admin செய்த வேலை” என்று கூறி, இப்ப அவர் எது கூறினாலும் “டேய் அட்மின்! எங்க ராஜா சார் பேரைக் கெடுக்க இப்படி எழுதுறியா” ன்னு கேட்டுக் கலாயித்துட்டு இருக்காங்க.
வாராவாரம் எதையாவது பேசிச் சர்ச்சையைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார். கொஞ்சம் யோசிங்க “போன தேர்தலில் ஓரளவு சுமாரான வாக்குகளைப் பெற்ற தமிழக பாஜக தற்போது ஏன் நோட்டா கூடத் தோற்றது?” என்று.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் ஆனால், பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைப் புறக்கணித்து “நான் நினைப்பதைத் தான் பேசுவேன், நடந்து கொள்வேன்” என்றால், அதற்கான பலனையும் பெற வேண்டியது தான்.
கிரி, என்ன கிரி நீங்களுமா இந்த அரசியலை புரிந்து கொள்ளவில்லை… தூங்குபவர்களை எழுப்பலாம்.. ஆனால் தூங்குவதை போல் நடிப்பவர்களை????? தெரியாமலா இவர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்… எல்லாம் திட்டமிட்டபடி தான் நடைபெறுகிறது…
//பெரும்பான்மை மக்களின் எண்ணம் என்ற ஒன்றும் உள்ளது. இதைப் புறக்கணித்து “நான் நினைப்பதைத் தான் பேசுவேன், நடந்து கொள்வேன்” என்றால், அதற்கான பலனையும் பெற வேண்டியது தான்.//
கிரி,பெரும்பான்மை- அவர்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வெற்றி பெற்றவர் டி.டி.வி. என்கின்ற தினகரன்.
@யாசின் நீங்க கூறியதை நானும் யோசித்து இருக்கிறேன் மற்றவர்களும் கூறி இருக்கிறார்கள்.
ஆனால், திசை திருப்ப தங்கள் கட்சியையே அழிப்பார்களா என்ற கேள்வியும் தோன்றுகிறது.
@வேகநரி எப்படி இருக்கீங்க? 🙂
அதெல்லாம் இடைத்தேர்தலில் மட்டுமே நடக்கும். அதோட அதிமுக இவ்வளவு மோசமாக இருந்தும் திமுக டெபாசிட் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினகரன் பணத்தை கொடுத்தார் ஆனால், அதையும் தாண்டி எதோ மக்களை கவர்ந்து இருக்கிறது.
ஜெ தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்று சமூகத்தளங்களில் துண்டு போட்டு தாண்டினார்கள் ஆனால், நடந்தது என்ன?
இனி வரும் தேர்தல் முடிவுகள் (இடைத்தேர்தல் அல்ல) இது போல இருக்காது என்று நினைக்கிறேன்.