Dailyhunt செயலியில் “கிரி Blog”

10
Dailyhunt App

ணையத்தளங்களில் கருத்து மட்டுமே எழுதிக்கொண்டு இருந்த நான், பலர் கொடுத்த உற்சாகம் காரணமாக 2006 ல் எழுத (யாஹூ 360) வந்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களுடன் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். Image Credit

Dailyhunt

இணையத்தில் மிகவும் பிரபலமான செய்தி செயலியான Dailyhunt ல் இருந்து சமீபத்தில் என்னுடைய www.giriblog.com தளக் கட்டுரைகளை வெளியிடுவதற்குக் கேட்டார்கள், இதில் கிடைக்கும் விளம்பர வருவாயில் பகிர்வுடன்.

விளம்பரத்தின் மூலம் இதில் எனக்குப் பெரியளவில் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

காரணம், இதற்கெல்லாம் நிறைய எழுத வேண்டும் ஆனால், நான் சமீபமாகத் தான் தொழில்நுட்ப செய்திகளுக்காக எண்ணிக்கையை அதிகரித்து உள்ளேன்.

இழப்பு என்னவென்றால், செயலியில் படிப்பவர்கள் என்னுடைய தளத்துக்கு வராததால், Hits குறையும் ஆனால், பலரை சென்றடையவும், புதிய வாசகர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இனி என்னுடைய தள கட்டுரைகளை Dailyhunt செயலியிலும் படிக்கலாம்.

சமீப கூகுள் விளம்பர அனுமதி, Dailyhunt செயலி என்று எழுத்துக்கு அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்ப்போம்! எப்படிப் போகிறது என்று 🙂 .

முன்பு கருத்துக் கூறுபவர்கள் என்ற வகையில் எழுதுவதில் திருப்தி இருக்கும் ஆனால், தற்போது கருத்துகள் மிகக் குறைந்து விட்டது. எனவே, இவை உற்சாகம் அளிக்கின்றன.

Blogging is my Passion

எழுத்தில் நிறையச் சாதிக்கணும், அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும், வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும், தனித்துத் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப உள்ளது.

அதனால் ஏற்படும் தனிப்பட்ட இழப்புகளைத் தவிர்க்க வேகம் காட்ட முடியவில்லை ஆனால், துவக்கத்தில் எப்படி ஆர்வமாக எழுதினேனோ அதை விட அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.

உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி 🙂 .

தொடர்பில் இருங்கள்

அன்புடன்
கிரி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. மகிழ்ச்சி. உங்கள் எழுத்து ஆர்வத்திற்கும், தமிழ் மேலான காதலுக்கும் கிடைத்த வெற்றி.

  2. கிரி, அடுத்த கட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. (எழுத்தில் நிறையச் சாதிக்கணும், அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும், வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும்,) நிறைய புத்தகங்கள் படிப்பது, புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வது, இலக்கிய கூட்டங்களுக்கு செல்வது, உங்கள் வாசகர்களை சந்திப்பது.. என என்னும் பல முயற்சிகளை மேற்கொண்டால் நீங்கள் உயர பயணிப்பதை தடுக்க முடியாது.. தற்போதைய உங்கள் சுழலில் இவைகளை மேற்கொள்ள முடியுமா ?? என்று தெரியவில்லை.. ஒரு நாள் நீங்கள் விரும்பியவை நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது … பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. நீங்க சோர்வு இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நிச்சயம் இதுவும் ஒரு அங்கீகாரம் தான் வாழ்த்துகள்.

  4. ராமலக்ஷ்மி சோமேஸ்வரன் ராம் லோகன் ஜோதிஜி விஜய் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி 🙂

    @யாசின் பயணம் செல்லவேண்டும் என்பது என்னுடைய பெரிய விருப்பம் ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. விடுமுறை, குடும்பம் என்று நடைமுறை பிரச்சனைகளால் முடியவில்லை.

    நீங்கள் சொல்வது போல பின்னால் நடக்க வாய்ப்புள்ளது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here