IPL வன்முறை

28
IPL வன்முறை Chennai Chepauk

IPL போட்டி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நடந்த வன்முறை, ஆபாச பேச்சுகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

இது தமிழர்களுக்குத் தலைகுனிவை தான் ஏற்படுத்தியுள்ளது.

IPL நிர்வாகம் பார்வையாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அனுமதித்து இருக்க வேண்டும். Image Credit

IPL தனியார் போட்டி என்பதால், வீரர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ரசிகர்களை அணிய அனுமதித்து இருந்தால், பிரச்சனை இவ்வளவு மோசமாகி இருக்காது.

அரசியல் கட்சிகள்

போராடும் அரசியல் கட்சிகளின் இலக்கு எப்போதுமே அப்பாவி பொதுமக்கள் தான். தமிழருக்காகப் போராடுகிறேன் என்று தமிழரை அடிக்கிறார்கள்! எந்த வகையில் சரி.

சின்னப் பசங்களைக் கும்பலாக அடித்து வீரத்தைக் காட்டுவதும், பெண்களிடம் ஆபாசமாகப் பேசித் திட்டுவதும் தான் போராட்டமா!

எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது ஆனால், தன் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்க எவருக்கும் உரிமையில்லை.

ஒற்றுமை!

விவசாயிகள், மக்கள் மீது அக்கறை இல்லாமல் IPL போட்டிகளைக் காண செல்கிறார்களே! இவர்கள் தமிழர்களா?! இவர்களிடையே ஒற்றுமையில்லை என்று விமர்சிக்கிறார்கள்.

ஒற்றுமையைப் பற்றிப் பேச அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தகுதியுமில்லை. இங்குள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சிகள் மற்ற தமிழ் அமைப்புகள் எவரிடமாவது ஒற்றுமை உள்ளதா?!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் போராட்டம் அறிவித்துக் கடையடைப்பை நடத்துகிறார்கள். ஒரு வாரத்தில் மூன்று முறை கடையடைப்பு நடத்தினால் எப்படிப் பொதுமக்கள் வியாபாரம் செய்வது?

விவசாயிகள் வாழ்க்கையோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் இவர்கள் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எவ்வளவு இடைஞ்சல்!

வியாபாரிகள்

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பலத்தைக் காட்ட தனித்தனி போராட்டம் அறிவித்துக் கடையடைப்பு நடத்தினால், எப்படி வியாபாரிகள் வாழ்க்கையை நடத்துவது?

ஏற்கனவே GST யால் ஏற்பட்ட பாதிப்பால் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கட்சியும் நெருக்கினால் அவர்கள் என்ன தான் செய்வது?

IPL வன்முறை சம்பவம் போலவே கடை திறந்து வைத்து இருப்பவர்களை அடித்து நொறுக்கிறார்கள், கடையில் உள்ள பொருட்களைச் சேதமாக்குகிறார்கள்.

இதே உன் கடை, உங்க சொந்தக்காரன் கடை, தெரிந்தவர் கடையாக இருந்தால் செய்வியா? அடுத்தவன் கடை என்பதால் தானே இந்த வீரம் எல்லாம்!

இது போல ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்ட ஒற்றுமை இல்லாமல் நடந்து கொண்டு IPL பார்க்க வந்தவர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்க்கலாமா?

தமிழக மக்கள் ஒற்றுமையையும் தங்கள் ஆதரவையும் வழங்கிய நிகழ்வுகள் ஏராளம் இருக்கின்றன ஆனால், அதற்கு அரசியல் கட்சிகள் முதலில் தங்களைத் தகுதி உடையவர்களாகக் காட்ட வேண்டும்.

மிரட்டல்

வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வீரர்களுக்கு, போட்டியைப் பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல! என்று மிரட்டுகிறார்.

பாம்பு விடுவேன் என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரியான அரசியல்?

நாம் தமிழர் கட்சி

சின்னப் பசங்களைப் போட்டு அடித்து அவங்க அணிந்து இருந்த சட்டையைக் கழட்ட வைத்து மிதிக்கிறார்கள், போட்டிகளைக் காண வந்த பெண்களிடம் ஆபாசமாகப் பேசித் தங்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள்.

இச்செயல்களா பொதுமக்களை ஆதரிக்க வைக்கும்? இது போலக் கேவலமாக நடந்து கொண்டு பொதுமக்கள் ஆதரவு வேண்டும் என்று எப்படி உங்களால் கேட்க முடிகிறது?

ஒருவேளை வன்முறை நடந்த இடத்திலோ, ஆபாசமாக பேசிய இடத்திலோ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தால், என்ன செய்வீர்கள்? இது போலப் பேச வெட்கமாக இல்லை!!

எளியோரை வலியோர் வருத்தினால், அந்த வலியோரை வருத்த இன்னொரு வலியோர் வருவான்! நீங்கள் இதற்கு அனுபவிப்பீர்கள்.

இது போலக் கேவலமாக நடந்து கொள்ளும் உங்களையெல்லாம் மதித்து எவர் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள்? காறித்தான் துப்புவார்கள்.

போராட்டத்துக்குப் பொதுமக்கள் மனமுவந்து ஆதரவு கொடுக்கணும். அது தான் உண்மையான ஆதரவு, மிரட்டிப் பெறுவதல்ல ஆதரவு.

செருப்பு வீச்சு

சென்னைக்கு என்று இருந்த பேரை இதில் குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

பாகிஸ்தான் நம் அணியுடன் மோதி வெற்றி பெற்ற போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

இன்றுவரை சென்னை இந்தச் சம்பவத்தால் மற்ற இடங்களில் உதாரணம் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், வெள்ளத்தில் நம் சென்னை சிக்கி தவித்த போது ஆறுதல் கூறிய “Du Plessis” அருகே செருப்பை வீசி அழியாத அவமானத்தைத் தேடித்தந்து விட்டீர்கள்.

அவர் மேல் விழவில்லை என்றாலும் (வீரர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் பகுதியில் இருந்தவர்) அந்த மனுசன் என்னதான்டா நினைத்து இருப்பான்?!

இது தான் நம்ம ஊருக்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையா?!

மைதானத்தில் செருப்பை வீசியதை பெருமையா நினைத்துப் பகிர்ந்துட்டு இருக்காங்க பலர்.

இந்தப் பசங்களும் தான் எதிர்ப்பைக் காட்டினார்கள். இது எப்படி உள்ளது?

அப்பாவிகள் மட்டும் தான் கண்களுக்குத் தெரியுமா?

இங்கே போராடும் அரசியல்வாதிகள் ஏன் தண்ணீர் பிரச்னைக்கு மூல காரணமான மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடக் கூடாது?

ஏன் அவர்களை அடித்துத் துரத்தக் கூடாது? மணல் எடுக்க விடாமல் ஏன் தடுக்கக் கூடாது?

ராஜினாமா செய்யாமல் இருக்கும் MP களை ஏன் கேள்வி கேட்கக் கூடாது? ஏன் அவர்கள் வீட்டின் முன் போராட்டம் செய்யக் கூடாது?

அவர் பதவியில் இருந்தும் ஒன்றும் பயனில்லை எனவே, அவர்கள் பதவி இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன?

அனைத்து டாஸ்மாக்கையும் மூட வைத்தால், அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறது! இதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?

ஏரி குளங்களை ஆக்கிரமித்து இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஏன் போராடக் கூடாது?

இவ்வகைப் போராட்டங்களை முன்னெடுத்து காவேரி போராட்டமாக ஏன் அறிவிக்கக் கூடாது?

இது போல எவ்வளவோ நேர்மறையான வாய்ப்புகள் கொட்டி கிடக்கும் போது ஏன் திரும்பத் திரும்பக் கடையடைப்பு, IPL பிரச்சனை என்று போராடுகிறீர்கள்?

உங்கள் வீரத்தை காட்ட சின்னப் பசங்களும், பெண்களும், கடையடைக்கும் அப்பாவி இளிச்சவாயன்களும் தான் பலிகடாவா?!

ஸ்மைல் சேட்டை விக்னேஷ் & மாறன்

அரசியல்கட்சிகள் செய்த வன்முறையை விட இவர்கள் இருவரும் பேசிய பேச்சு தான் அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இவர்கள் தாங்கள் பேசுவது என்ன என்று உணர்ந்து தான் பேசுகிறார்களா என்பதே புரியவில்லை.

நீங்க இப்ப மைதானத்துக்குள்ள போயிட்டீங்க காவலர்கள் பாதுகாப்போடு ஆனால், வெளியே வரும் போது அவர்கள் இருக்க மாட்டார்கள்.

உங்கள் வாகனத்தைப் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவார்கள் என்று சிரித்துக்கொண்டே மிரட்டுகிறார்கள்.

டேய்! த்தா சத்தியமா நீங்கெல்லாம் மனுசங்களே இல்லடா!

கொஞ்சம் பிரபலம் ஆனதும் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதே அறிவுக்கு எட்டாத அளவுக்கு மோசமாகப் பேசி இருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் கைது செய்து துவைத்து எடுக்கணும், அப்போது தான் அடுத்த முறை இப்படிப் பேச நினைப்பவர்களுக்குப் பயம் இருக்கும்.

ஜெ இல்லாத குறையைத் தற்போது தான் ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்ந்தேன். அவர் இருந்து இருந்தால், இந்தச் சில் வண்டுகள் எல்லாம் இப்படிப் பேசித்திரியுமா?!

தமிழ் அமைப்புகள்

தமிழ், தமிழன் என்ற போர்வையில் பாரதிராஜா, கவுதமன், அமீர் போன்றோர் அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

இதில் போராடுபவர் குடும்பத்துக்கோ, உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ வன்முறையால் பாதிப்பு ஏற்பட்டாலும் இதே தான் சொல்வீர்களா?!

வன்முறை எதற்கும் தீர்வாகாது!

மக்கள் எவ்வகைப் போராட்டத்துக்கும் ஆதரவு தருவார்கள் ஆனால், அது நேர்மையான ஒற்றுமையான போராட்டமாக இருக்க வேண்டும்.

பலத்தைக் காட்ட நடத்தப்படும் போராட்டத்துக்கு அல்ல.

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெர்லைட் போராட்டங்களில் அரசியல்வாதிகளை உள்ளே விடாமல் இருப்பதாலே, வெற்றிப் பெற்றது / போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

போராட்டத்தில் அரசியல் நுழைந்தால் உருப்படாமல் தான் போகும் IPL போல.

IPL வன்முறை யில் ஈடுபடும் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், உங்களை வைத்து உங்கள் தலைவர்கள் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

அடி வாங்கியது, பிரச்னையை எதிர்கொள்வது நீங்களாக இருப்பீர்கள் ஆனால், உங்கள் தலைவர்கள் எந்தச் சிரமும் இல்லாமல் தப்பித்து விடுவார்கள்.

உங்களுடைய தமிழ் உணர்வை வைத்து அவர்கள் லாபம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்களும் புரிந்து கொள்ளப்போவதில்லை, அவர்களும் நிறுத்தப்போவதில்லை.

வன்முறையாளர்களே! உங்களுக்கெல்லாம் சென்னையும் ஒரு இடம் அவ்வளவே! எங்களுக்கெல்லாம் வாழ்க்கை கொடுத்த இடம்டா!

அதை உங்கள் சுயநலத்துக்காகக் கெடுத்து நாசம் செய்து விடாதீர்கள்.

எந்தப் போராட்டமும் மக்களின் ஆதரவை பெற்றாலே வெற்றி பெறும்! வன்முறைப் போராட்டம் மக்களின் ஆதரவைப் பெறாது!

தொடர்புடைய கட்டுரை

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

28 COMMENTS

  1. //ராஜினாமா செய்யாமல் இருக்கும் MP களை ஏன் கேள்வி கேட்கக்கூடாது? ஏன் அவர்கள் வீட்டின் முன் போராட்டம் செய்யக்கூடாது? அவர் பதவியில் இருந்தும் ஒன்றும் பயனில்லை எனவே, அவர்கள் பதவி இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன?//

    அண்ணே, நீங்க மொத ஆள, ராஜினாமா செய்ய சொல்லி எம்பி வீட்டு முன்னே அரசியலற்ற போராட்டம் நடத்துண்ணே.. நானும் வரேன்..

  2. ரொம்ப நாள் ரொம்ப பொறுமையாக இருந்தீங்களே கிரி. …உங்களைப் போய் இப்படி அநியாயமா பொங்க வச்சிட்டானுகளே…. :(:( ஐயோ பாவம் 🙂

  3. வன்முறை இல்லாமல் போராடி என்ன விஷயம் நடந்து இருக்கிறது இந்தியாவில்?
    பொழுதுபோக்குக்காக நாட்டின் உயிர் பிரச்னையை நீர்த்துப்போக செய்ய முடியாது!
    உங்க வீட்ல எழவு விழுந்து இருக்கும்போது IPL பாப்பீங்களா சார்?
    CSK / IPL நிர்வாகம் என்ன செய்தது இந்த சூழ்நிலையை தவிர்க்க?
    அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் எங்களுக்கு எங்கள் தமிழ்நாட்டின் நலன் மட்டுமே முக்கியம்.

    • என்னங்க ஆளாளுக்கு எங்கள் தமிழ்நாடு ன்னு சொல்றீங்க.. நாங்க மட்டும் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கோம். உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு எங்களுக்கும் இருக்கிறது.

      நீங்க CSK IPL பற்றி என்ன வேணா திட்டிக்குங்க அதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை.

      தயவு செய்து உங்களின் தமிழின உணர்வுக்காக வன்முறையெல்லாம் நியாயப்படுத்தாதீங்க.

      அதே வன்முறையில் நம் குடும்பம் பாதிக்கப்படும் போது தான் வன்முறையின் வலி புரியும். அது வரை வன்முறை உங்களுக்கு சாதாரணமாக தெரியும்.

  4. ஜெ. இருந்திருந்தால் போட்டியே நடந்திருக்காது…
    செய்த முறை சிறு தவறு இருந்திருக்கலாம்… ஆனால் நோக்கம்…..

  5. ஜ.பி.எல் இனை தடை செய்தால் தண்ணீர் வந்திடாது அண்ணே. ஆனால் ஊடங்கள் கவனிக்கும் ஆளும் கட்சிகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அதுதான் போராட்டத்தின் நோக்கம். உங்கள் தலைவரின் ருவீட்டை பார்த்தவுடனேயே நீங்களும் ஏதாவது சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். 🙂

  6. இந்த போராட்டத்தினை எந்த கட்சியும் உரிமை கோரவில்லை என்று நினைக்கிறேன். கட்சி ஒற்றுமை ப்ற்றி பேசுகிறீர்கள். உங்கள் சொந்தவீட்டிலேயே எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறீர்களா?. யார் குத்தியாவது அரிசியானால் சரிதான் என்பதுதான் பொருவான மக்களின் கருத்து. இந்த போராட்டங்கள் மக்களிற்கு இடஞ்சல்தான். ஆனால் ரசினி எம்.ஜியார் சிலை திற்ப்புக்கு போனபோது ஏற்படுத்திய தேவையற்ற இடையூறிலும்பார்க்க நியாயப்படுத்தக்கூடியதுதான்.

  7. டூ பிளசிக்கே தெரியும் செருப்பு வீசப்பட்டது தன்மீதல்ல. காவிரி நடுவர்மன்றம் அமைக்காமல் தவிர்க்கும் நடுவன் அரசின் மீதுதான் என்று. ஆனால் அது உங்களிற்கு தெரியாமல் போனது ஆச்சரியம்

    • அப்படியென்றால் ரஜினி சொன்னதும் காவலர்களை அடித்தவர்களை மட்டும்தான்… எந்த அமைப்பையோ.. கட்சிகளையோ அல்ல … உன்மைதானே

      • ராஜேஷ் . நான் “நாம் தமிழர் “அமைப்பிற்கு வக்கலாத்து வாங்க வந்ததாக நினைக்கவேண்டாம். போலீஸை யார் அடித்தாலும் தவறுதான். ஆனால் ரசினி போலீசை அடித்தது பற்றி மட்டும் பேசுவது தவறு என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். போலிஸ் அடித்ததற்கு எதிர்வினையே போலிசை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்தது என்பது என்கருத்து. ரசினி இருவரையுமே கண்டித்திருக்கலாம். நேற்றய தினத்தில் கூட மாணவர்களை போலிஸ் அடித்திருக்கிறது. அதற்கும் ரசினி ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கலாம். எல்லாவற்றிகும் நடிகர் ரசினி கருத்துச்சொல்லவேண்டியதில்லை. ஓய்வுபெறும் வயதில் அரசியலிற்கு வருபவர் எல்லாவற்றிற்கும் கருத்துசொல்லத்தான் வேண்டும்.

  8. சீமான் மற்றும் வேல்முருகன் கட்சியினர் வன்முறையாலர்கள்தான். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஆளும் அரசுகள்தான் கடைசியில் எங்களையும் அவர்கள் செய்வது சரியென நியாயப்படுத்தவைக்கின்றன.

  9. //ஆனால், வெள்ளத்தில் நம் சென்னை சிக்கி தவித்த போது ஆறுதல் கூறிய “Du Plessis” அருகே செருப்பை வீசி அழியாத அவமானத்தைத் தேடித்தந்து விட்டீர்கள்.அவர் மேல் விழவில்லை என்றாலும் (வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பகுதியில் இருந்தவர்) அந்த மனுசன் என்னதான்டா நினைத்து இருப்பான்?! இது தான் நம்ம ஊருக்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையா?!//
    ஆமா மற்றும்படி அவுரு இந்தியாவை பற்றி நல்ல மாதிரித்தான் பேசிடுவார். போங்க பாஸ்

  10. ஸ்மைல் சேட்டை விக்னேஷ் & மாறன்
    // ரசினி யிடம் கர்பிணி பெண் போலீசால் அடிபட்டதை பற்றி கேட்டபோது சொல்லிய பதிலும் பார்க்கவா மோசமாக பேசிவிட்டார்கள்.

  11. வன்முறை எதற்கும் தீர்வாகாது!
    நிச்சயமாக தீர்வாகாது. அதேபோல இமயமலை அரசியலும் வேலைக்காகாது. இரணடுமே திர்ர்த்துக்கட்டப்பட வேண்டியவை.

  12. சென்னை கிங்ஸ் இன்னமும் சென்னைக்கு செந்தமென்று நினைப்பது, திருப்பதி திருப்பதிசாமிக்குசொந்தமென்று நினைப்பதும், எல்லா குப்பமும் குப்புசாமிக்கு சொந்தமென்று நினைப்பதும் ஒன்றுதான்.

    உங்களுடைய தமிழ் உணர்வை வைத்து அவர்கள் லாபம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்களும் புரிந்து கொள்ளப்போவதில்லை, அவர்களும் நிறுத்தப்போவதில்லை.
    // புதிதாக தமிழ் உணர்வு பற்றி எல்லாம் எழுதுகிறீகள். கிருஸ்ணகிரிக்கண்மையில் ஏதாவது தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகிறதா?

    வன்முறையாளர்களே! உங்களுக்கெல்லாம் சென்னையும் ஒரு இடம் அவ்வளவே! எங்களுக்கெல்லாம் வாழ்க்கை கொடுத்த இடம்டா! அதை உங்கள் சுயநலத்துக்காகக் கெடுத்து நாசம் செய்து விடாதீர்கள்.
    //ஆமா . மத்தவங்களுக்கேல்லாம் சென்னை தோசையை மட்டுமா கொடுத்திச்சு??

    அண்ணே. நீங்கள் எழுதுவதேல்லாம் மிகவும் நியாயமாக் இருக்கிறது, ரசினிக்கு முட்டு கொடுப்பதை த‌விர்த்து.
    நிங்கள் இதை எப்பொழுதுமே ஏற்றுகொள்ளப்போவதில்லை. ஆதால இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  13. @பாலமுரளி கட்டுரையை முழுவதும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை, போராட்ட முறை வழிகளைத் தான் எதிர்க்கிறேன்.

    @அரி 🙂

    @செந்தில் நீங்கள் சொல்வதில் வாய்ப்புள்ளது

  14. @Priya Joseph

    ஆக பிரச்சனை உங்களுக்கு ரஜினி தான் 🙂

    இதுக்கு எதற்கு U Turn எல்லாம் போட்டு மேசையை உடைத்து..

    தங்களின் கனிவான கவனத்துக்கு,

    இக்கட்டுரை எழுதப்பட்ட நாள் போராட்டம் நடந்த ஏப்ரல் 10 (இரவு). மொத்த நேரம் தோராயமாக 90 நிமிடங்கள். கட்டுரை வெளியிடப்பட்டது மட்டுமே மறுநாள்.

    ரஜினி கருத்துக் கூறியது மறுநாள் காலை, இக்கட்டுரைக்கும் ரஜினிக்கும் மைய கருத்தில் மட்டுமே ஒற்றுமை.

    மற்றபடி நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல அவர் கூறிய பிறகு எழுதப்பட்டதல்ல, அதற்கு அவகாசம் தேவை.

    இவ்வளவு விவரமா பேசுற நீங்க, இந்த சின்ன லாஜிக் யோசித்து இருந்தாலே புரிந்து இருக்கும்.

    அப்படி ரஜினி கூறியதை வைத்து கூறி இருந்தால், அவரையே குறிப்பிட்டு கூற ரசிகனான எனக்கு என்ன தயக்கம்?!

    வன்முறையை பற்றி பேச ரஜினிக்கு மட்டும் தான் உரிமை உள்ளதா? நாங்கெல்லாம் பேசக்கூடாதா? 🙂

    உங்களுக்கும் சிறு வேண்டுகோள் ரஜினி எதிர்ப்பு என்ற கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால், சில விசயங்கள் உங்களுக்கும் சாதாரணமாக தெரியலாம், இக்கட்டுரை போல.

    அப்புறம்… உங்கள் உண்மையான பெயரிலேயே எழுதுங்க!

  15. கிரி, என்ன சொல்வது என்று சத்தியமா தெரியல கிரி??? நெஞ்சம் மட்டும் பதை பதைக்கிறது.. நம்முடைய அமைதி பூங்காவாக இருந்த இடத்தில் இன்று, அடுத்த கணம் என்ன நிகழும் என்ற படபடப்பிலே நாட்கள் செல்கிறது.. அங்கு நான் இல்லை என்றாலும், என்னுடைய தேசத்தில் நிகழும் கொடுமைகளை எண்ணி மனம் வெம்முகிறது.. காரணம் ஆயிரம் இருக்கலாம்.. புரியவில்லை கிரி.. மனம் வருத்தமாக இருக்கிறது..

  16. ஆக பிரச்சனை உங்களுக்கு ரஜினி தான் ?
    // ஆமா . அவரு என்னுடய வீட்டினை வாடகைக்கு எடுத்துவிட்டு வாடகை தரல. அதுதான் பிரச்சனைக்கு காரணம். :)?

    இதுக்கு எதற்கு U Turn எல்லாம் போட்டு மேசையை உடைத்து..
    // ஒரு பொழுது போக்கிற்குத்தான்?

    தங்களின் கனிவான கவனத்துக்கு,

    இக்கட்டுரை எழுதப்பட்ட நாள் போராட்டம் நடந்த ஏப்ரல் 10 (இரவு). மொத்த நேரம் தோராயமாக 90 நிமிடங்கள். கட்டுரை வெளியிடப்பட்டது மட்டுமே மறுநாள்.

    ரஜினி கருத்துக் கூறியது மறுநாள் காலை, இக்கட்டுரைக்கும் ரஜினிக்கும் மைய கருத்தில் மட்டுமே ஒற்றுமை.

    மற்றபடி நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல அவர் கூறிய பிறகு எழுதப்பட்டதல்ல, அதற்கு அவகாசம் தேவை.

    இவ்வளவு விவரமா பேசுற நீங்க, இந்த சின்ன லாஜிக் யோசித்து இருந்தாலே புரிந்து இருக்கும்.
    // உங்களின் அறிவில் எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. உங்களிற்கு இந்த பதிவினை எழுத 90 நிமிடம் எல்லாம் தேவைப்படாது. நீங்கள் ஒரு அறிவாளி . சந்தேகமேயில்லை.

    அப்படி ரஜினி கூறியதை வைத்து கூறி இருந்தால், அவரையே குறிப்பிட்டு கூற ரசிகனான எனக்கு என்ன தயக்கம்?!

    வன்முறையை பற்றி பேச ரஜினிக்கு மட்டும் தான் உரிமை உள்ளதா? நாங்கெல்லாம் பேசக்கூடாதா? ?
    // இதற்கு முன் ஜல்லிக்கட்டின்போது இப்படியான பதிவினை பார்க்கவில்லை. அதனால்தான் சந்தேகம். நீங்கள் வேறு முன்னால் மோடி ஆதரவலன். இப்பவும் திரும்பவும் இஅனைந்துவிட்டீர்களோ என்று சந்தேகம்.

    உங்களுக்கும் சிறு வேண்டுகோள் ரஜினி எதிர்ப்பு என்ற கண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால், சில விசயங்கள் உங்களுக்கும் சாதாரணமாக தெரியலாம், இக்கட்டுரை போல.

    // தமிழ் நாட்டினை யார் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் மக்கள் சினிமாக்கரர்களிடமே போய் விழுவதால் கடுப்பய் இருக்கிறது. அதிலும் உங்களைபோன்ற அறிவாளிகள் , ரசிகர்கள் என்ற பெயரில் சுய நல சினிமாக்காரர்களிடம் போய் விழுவது மிகவும் கடுப்பாகிறது. மோடியை திட்டிவதிலும் பார்க்க, ரசினியை திட்டுவதிலும் பார்க்க உங்கள் மாதி மனிதர்களைத்தான் திட்டவேண்டும். வெறும் பிம்பத்திற்காக வாக்களிப்பேன் என்பது சமானிய படிப்பறிவு குறைந்தவர்கள் சொல்லும்போது அவர்களைப்பார்க்க பாவமாயிருக்கும். ஆனால் உங்களைமாதிரி அறிவாளிகள் சொல்லும் போது கடுப்பாக இருக்கிறது.
    நீங்கள் இப்படியே செய்துகொண்டிருந்தால் அடுத்த முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலிந்தான் உங்களுக்கு.

    அப்புறம்… உங்கள் உண்மையான பெயரிலேயே எழுதுங்க!//
    நீங்கள் உண்மையிலேயே இந்துத்துவாவின் ஸ்லீப்பர் செல்தான். ஜோசப் என்ற என்னுடய தந்தையாரின் பெயரை நிந்திக்கிறீர்கள். லொள்ஸ் ?

  17. @யாசின் இப்ப லெட்டர் Pad கட்சிகள் அதிகம் ஆகி விட்டது, அவர்களை தூக்கிப்பிடிக்க செய்தி சேனல்கள் அதிகம் ஆகி விட்டது. இதுவே நமது மோசமான நிலைக்கு காரணம்.

  18. @Priya Joseph இப்பெல்லாம் சண்டை போட கூட யாரும் Blog பக்கம் வராமல் ஃபேஸ்புக், ட்விட்டர் ன்னு ஒதுங்கிட்டாங்க. ரொம்ம்ம்ப நாளைக்கு அப்புறம் நீங்க சிக்கி இருக்கீங்க. கொஞ்சம் பேசுவோம் 🙂

    “உங்களிற்கு இந்த பதிவினை எழுத 90 நிமிடம் எல்லாம் தேவைப்படாது”

    உங்களின் கணிப்பு சரி, எழுத எனக்கு 40 நிமிடங்களுக்கு குறைவாகத்தான் ஆகும் ஆனால், பிழை திருத்தம் (எழுத்துப்பிழைகள், சந்திப் பிழைகள்) , மற்ற படங்கள், காணொளிகள் இணைப்பு போன்றவற்றுக்கு தான் அதிக காலம் எடுக்கும்.

    அதோட ரஜினி பேசியது காவல்துறை பற்றி. நான் எழுதியது முழுக்க பொதுமக்கள் குறித்து. காவல்துறை பற்றி நான் எங்குமே குறிப்பிடவில்லை, நியாயமா குறிப்பிட்டு இருக்கணும்.

    “இதற்கு முன் ஜல்லிக்கட்டின்போது இப்படியான பதிவினை பார்க்கவில்லை.”

    https://www.giriblog.com/jallikattu-support

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா கட்டுரை எழுதினேன் ஆனால், பிரச்னை ஆகப்போகிறது உஷாராக இருங்கள் என்று என்னுடைய https://www.facebook.com/giriblog எழுதினேன்.

    உங்களுக்கே தெரியும் ஃபேஸ்புக்கில் தேடுவதும் ஒன்று, செவுத்துல முட்டிகிறதும் ஒன்று. உங்களுக்கு பொறுமை இருந்தால், ஜல்லிக்கட்டு நாட்களில் என்னுடைய பக்கத்தில் தேடிப் பாருங்கள். கட்டாயம் இருக்கும்.

    உங்களுக்கு எங்க.. ரஜினியை பற்றி பேசினால் தான் சுய நினைவே வருது. நானும் பார்த்துட்டேன், எந்த பதிவுக்கும் வராதவர்கள் கூட ரஜினின்னா ஓடி வந்துடுறாங்க, நீங்க கொஞ்சம் கூடுதல், ரஜினியை பற்றி எழுதாமலே ரஜினின்னு வந்துட்டீங்க. 🙂 இதை வைத்து ஒரு பதிவு எழுதறேன்.

    இங்க பாருங்க மோடியை ஆதரித்தேன் மறுக்கவில்லை, ஏனென்றால் அப்போது இருந்த காங் ஆட்சி செய்த ஊழல். அப்ப இருந்த மாற்று மோடி மட்டும் தான்.

    காங் வேண்டாம்னு சொல்றாங்க, மோடி வேண்டாம்னு சொல்றாங்க.. பின்ன யாருக்குத்தான்யா வாக்களிப்பதுன்னு கேட்டால், சொல்ல மாட்டேங்குறாங்க.

    நான் மோடி ஆதரவாளன் என்றால், மோடியின் ஒவ்வொரு செயலுக்கும் முட்டுக்கொடுத்து இது வரை 50 கட்டுரைகளாவது எழுதி இருக்கணும். அதன் பிறகு அக்கட்டுரையொடு சேர்த்து மொத்தமே 2 கட்டுரைகள் தான் மோடி சம்பந்தமா இதுவரை எழுதி இருக்கிறேன்.

    இந்த இரண்டு கட்டுரைகளுக்கு இன்னும் மோடி ஆதரவாளான்னு சிலர் கம்பு சுத்திட்டு இருக்காங்க. நான் யாருடைய ஆதரவாளனும் கிடையாது “ரஜினியைத் தவிர”.

    மோடியோட சில திட்டங்கள் எனக்கு பிடித்துள்ளது உதாரணத்துக்கு ஆதார், மின்னணு பரிவர்த்தனை, பணமதிப்பிழப்பு, GST போன்றவை. இவர்கள் செயல்படுத்திய முறைகள் தான் தவறு ஆனால், நோக்கம் சரி.

    https://www.giriblog.com/demonetisation-and-gst-impact

    இந்த IPL போராட்டம் கூட நோக்கம் சரி ஆனால், போராட்ட வழிமுறைகள் தவறு.

    உங்களுக்கு ஏன் ரஜினி பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் அவரிடம் இருந்து பல நல்ல எண்ணங்களை, பழக்கங்களை, விமர்சனங்களை எதிர்கொள்வதை கற்றுக்கொண்டேன்.

    ரஜினியை மூச்சு விடாம திட்டுறீங்களே இப்ப இருக்குற அரசியல்வாதிகள் செய்ததை விட அப்படியென்ன அவர் மக்களுக்கு கெடுதல் செய்துட்டாரு? சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்.

    சும்மா வாடகை மேட்டர் மாதிரி சொல்லாதீங்க.. அதெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு, சம்பந்தப்பட்டவர்களே பேட்டி கொடுத்து விட்டார்கள். YouTube சென்றால் உங்களுக்கே கிடைக்கும்.

    சரி உங்க வழிக்கே வருகிறேன். ரஜினி மோசம், அனைவரையும் கெடுக்கிறார்ன்னு வைத்துப்போம்.. யாருக்கு வாக்களிக்க சொல்றீங்க? ஸ்டாலின் வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. அதிமுக யாருமே இல்லை.

    வேற யாருக்கு வாக்களிப்பது சொல்லுங்க? நீங்க பேசும் ருவிட்டர், நிந்திப்பது, தந்தையார் வார்த்தைகளை பார்த்தால் நிச்சயம் நீங்கள் எங்கள் பகுதி இல்லை, ஈழ தமிழராக இருக்க வாய்ப்புள்ளது.

    எனவே, நீங்க சுற்றி வளைத்து மூக்கை தொடாம அல்லது அதெல்லாம் எனக்கு தெரியாது “ரஜினி வேண்டாம்” அவ்வளோ தான்! அப்படின்னு எஸ்கேப் ஆகாம நேரடி பதில் சொல்லுங்க.

    யாருக்கு வாக்களிப்பது?!

    “ஜோசப் என்ற என்னுடய தந்தையாரின் பெயரை நிந்திக்கிறீர்கள்”

    என்னுடைய தளத்தில் இப்படியெல்லாம் பெயரைப் பார்த்தால் ஃபேஸ்புக் பிரபலமான ப்ரியா ஸ்வீட்டி தான் நினைவுக்கு வருது 😀 உண்மையான பெயராக இருந்தால்! மகிழ்ச்சி.

    • கிரி தோழா சின்ன சந்தேகம் பணமதிப்பிழப்பு Before (பிச்சைக்காரன் படம்) தற்செயல்ன்னு நினைக்கிறீங்களா? ஜல்லிக்கட்டு கடைசி நாள் என்ன நடந்த என்று தெரியுமா?

  19. அதோட ரஜினி பேசியது காவல்துறை பற்றி. நான் எழுதியது முழுக்க பொதுமக்கள் குறித்து. காவல்துறை பற்றி நான் எங்குமே குறிப்பிடவில்லை, நியாயமா குறிப்பிட்டு இருக்கணும்.
    // ஆமா . குறிப்பிட்டிருக்க்வேண்டும். உங்களிற்கு நியூட்டனின் மூன்றாம் விதி நிச்சயமா தெரிந்திருக்கும்.

    உங்களுக்கு எங்க.. ரஜினியை பற்றி பேசினால் தான் சுய நினைவே வருது. நானும் பார்த்துட்டேன், எந்த பதிவுக்கும் வராதவர்கள் கூட ரஜினின்னா ஓடி வந்துடுறாங்க, நீங்க கொஞ்சம் கூடுதல், ரஜினியை பற்றி எழுதாமலே ரஜினின்னு வந்துட்டீங்க. ? இதை வைத்து ஒரு பதிவு எழுதறேன்.
    // நான் தமிழ் படித்ததே உங்களின் பதிவுகளை பார்த்துதான். என்னுடய அப்பா உங்களின் தீவிர வாசகர். நான் தமிழ் கற்க அவதிப்பட்டபோது உங்களுடய பதிவுகளை வாசித்து தமிழ் கற்கும்படி செய்தார். நீங்கள் சிங்கப்பூரிற்கு போவத்ற்கு முதலில் இருந்தே, என்னுடய பள்ளி காலத்தில் இருந்தே, 6 ஆம் வகுப்பு கற்கும்போது இருந்தே, யாசின் உங்களிற்கு பதிலழிக்கும் காலத்தில் இருந்தே உங்களை வாசிக்கிறேன். நீங்களும் எனக்கு ஒரு தமிழ் ஆசாந்தான். ஆனால் நீங்கள் பொசுக்கேன்று இன்றைக்குத்தான் வந்த்தாக சொல்லுகிறீர்கள்.

    நான் மோடி ஆதரவாளன் என்றால், மோடியின் ஒவ்வொரு செயலுக்கும் முட்டுக்கொடுத்து இது வரை 50 கட்டுரைகளாவது எழுதி இருக்கணும். அதன் பிறகு அக்கட்டுரையொடு சேர்த்து மொத்தமே 2 கட்டுரைகள் தான் மோடி சம்பந்தமா இதுவரை எழுதி இருக்கிறேன்
    // நீங்கள் முன்னால் மோடி ஆதரவாளர் என்பது தெரியும். ஸ்மைலி போட்டால் என்னவெண்பது உங்களிற்கு தெரியுமா?

    இந்த IPL போராட்டம் கூட நோக்கம் சரி ஆனால், போராட்ட வழிமுறைகள் தவறு.
    //அதைத்தானே நானும் வழிமொழிந்தேன். நீங்கள் இப்போது ஒப்புகொள்வதை உங்கள் பதிவில் சொல்லவில்லையே.

    உங்களுக்கு ஏன் ரஜினி பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் அவரிடம் இருந்து பல நல்ல எண்ணங்களை, பழக்கங்களை, விமர்சனங்களை எதிர்கொள்வதை கற்றுக்கொண்டேன்.

    ரஜினியை மூச்சு விடாம திட்டுறீங்களே இப்ப இருக்குற அரசியல்வாதிகள் செய்ததை விட அப்படியென்ன அவர் மக்களுக்கு கெடுதல் செய்துட்டாரு? சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்.

    சும்மா வாடகை மேட்டர் மாதிரி சொல்லாதீங்க.. அதெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு, சம்பந்தப்பட்டவர்களே பேட்டி கொடுத்து விட்டார்கள். YouTube சென்றால் உங்களுக்கே கிடைக்கும்.
    //ரசினிக்கும் என‌க்கும் காணித்தகராறு. அதனால்தான் எனக்கு அவரை பிடிக்கவில்லை.
    ரசிகர்களை அவர் போல ஏமாற்றியவர்கள் யாருமில்லை. தன்னுடய படம் ஓட வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருவேன் என்று கிட்டத்தட்ட 20 வருடங்களாய் ஏமாற்றிவிட்டு இப்போது ஓய்வு பெறும் வயதில் அரசியலுக்கு வருவது எனக்கு பிடிக்கவில்லை. கொள்கை கூட்டணி அவரின் தனிப்பட்ட விடயம். கட்சி விடயம்.

    ரி உங்க வழிக்கே வருகிறேன். ரஜினி மோசம், அனைவரையும் கெடுக்கிறார்ன்னு வைத்துப்போம்.. யாருக்கு வாக்களிக்க சொல்றீங்க? ஸ்டாலின் வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. அதிமுக யாருமே இல்லை.
    வேற யாருக்கு வாக்களிப்பது சொல்லுங்க?
    // வ. மணிகண்டன் என்று ஒருவர் பதிவுகளை உங்களைபோலவே எழுதுவார். கடந்த தேர்தலின்போது அவர் ஒரு விடயத்தை செய்தார். யார் அவரின் தொகுதியில் நல்லவரோ அவரிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். நான் சொல்வது சரியென்றால், அவரின் தொகுதியில் திமுக ஒருவரையும், அயல் தொகுதியில் கமியூனிஸ்ட் ஒருவரையும் ஆதரித்து எழுதியுருந்தார். மிகுதி ஞாபகம் இல்லை. அது ஒரு நல்ல ஆரோக்கியமாக விடயம். முதல் சில தேர்தல்களில் அது எந்த நல்ல பதிலகளை தராது. நிச்சயமாக. ஆனால் சில தேர்தலிகளின் பின் கட்சிகள் நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ள‌ப்படும். உங்களின் ரசினி க்கே வருவோம். ஏற்கனவே எதிர்கால ரசினி கட்சி மேல் பலவிதமான குற்றச்சாட்டுகள் உள்ளது. பணம் படைத்தவர்கள்தான் பதவிக்கு வருவதாக. ரசினியின் உண்மையான ரசிகர்களில் எத்தனைபே பதவிக்கு வருவார்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்களின் எத்தனைபேர் உங்களைப்போல் அறிவாளியாவும் நல்லவராகவும் இருப்பர்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்களில் எத்தனைபேர் பதவி வந்தவின் மாறமாட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். ஒர் 10 %?? ரசினி நீங்கள் நினைப்பதைபோல நல்லவராகவே இருந்திட்டு போகட்டும். மிகுதி 90% ஆனவர்கள் அவரை நல்லவராகவே இருக்க்விடுவார் என்று நினைக்கிறீகளா. உதாரணத்திற்கு மானில செயலாளர் ராஜு மகாலிங்கம்,லைக்காவில் வேலையை விட்டு விட்டு ரசினியுடன் சேர்ந்த்தது ரசினியின் விசிறி என்பதால் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா. சாதரண ரசிகனின் நிலை என்னவென்பது தெரியுமா. தமிழ் மணத்தில் ஒரு ரசினி யின் விசிறி ஒருவரின் பக்கத்தை பார்த்தேன். நீங்களாவது மாதம் ஒரு முறை ரசினியை புகழுகிறீர்கள். ஆனால் அவர் தினமும் புகழ்ந்து எழுதுவதுதான் அவரின் வேலை. கடந்த மாதத்தில் ஒரு பதிவு. அவர் ரஜினி கட்சியில் ஆட்களை சேர்க்க மன்றத்தில் “போர்ம்” கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கமறுத்துவிட்டார்கள். ஆனால் அவர் தீவிர விசிறி என்பதால் தன் மடிக்கண்ணியினை கொண்டு சென்று தன் உறவின்ர் எல்லாரையும் சேர்த்துவருகிறார். இவர் போலத்தான் ரசினியின் உண்மையான ரசிகர்களில் 99%. மீண்டும் முதலில் இருந்து வாசிக்கவும் தெளிவு பிறக்கும்.
    இன்னுமொரு உதாரணம் ட்ரிரம் அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் கட்சிக்காரர்களில் நிறையப்பேர் அவரை ஆதரிக்கவில்லை. தமிழ் நாடு அடுத்த அமேரிக்க ஆகவேண்டும் என்கின்ற ஆசை உங்களால் தள்ளிபோவது மிகவும் துக்கத்தை வரவழைக்கிறது.

    நீங்க பேசும் ருவிட்டர், நிந்திப்பது, தந்தையார் வார்த்தைகளை பார்த்தால் நிச்சயம் நீங்கள் எங்கள் பகுதி இல்லை, ஈழ தமிழராக இருக்க வாய்ப்புள்ளது.
    // நீங்கள் பழய எம்ஜியார் , சிவாஜி படங்கள் பார்த்ததில்லையா? தந்தையே சாப்பிட வாருங்கள் தந்தையே ! நீவீர் எம் மன்னனை நிந்தித்துவிட்டீர் என்று செல்லகேட்டதில்லையோ? ருவீட்டரை தமிழில் எழுத தெரியவில்லையே. நான் என்ன செய்வேன். எங்கேயோ இருந்துவிட்டுபோகிறேன். நான் முக்கியமில்லை. சொல்லும் விடயம்தான் முக்கியம். இதையே நீங்கள் சொன்னால் அது பல கோடி தமிழர்களை சென்றடயும் என்பதில் ஐயமில்லை. உங்களின் பக்கத்தில கூகிள் போடும் விளம்பரங்களின் எண்ணிக்கையை பார்க்கயில் நிச்சயமா சில‌ கோடி பேர் உங்கள் பக்கத்திற்கு வருகிறார்கள் என்பது நிச்சயம். அத்துடன் துணிக்கடைகள் கூட உங்களிற்கு விளம்பரம் தர ஆரம்பித்துடவிட்டர்கள். யார் கண்டது நீங்களே அடுத்த புது வருடத்திற்கு அண்ணாச்சி கடை விளம்பரத்தில் ஆடலாம். ?

  20. என்னங்க தினத்தந்தி படித்து தமிழ் கற்றுக்கொண்டேன் மாதிரி சொல்றீங்க! இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியலையா…

    “நீங்கள் பொசுக்கேன்று இன்றைக்குத்தான் வந்த்தாக சொல்லுகிறீர்கள்.”

    எவ்வளவு வருடங்களாக வேண்டும் என்றாலும் படித்து வரலாம் ஆனால், தொடர்பில் இருந்தாலோ, கருத்து இந்த பெயரில் வந்தால் தானே எனக்கு தெரியும். என்னுடைய தளத்தில் இந்த பெயரில் வரும் முதல் கருத்து இது தான்.

    அப்புறம் நான் எழுத ஆரம்பித்ததே சிங்கப்பூர் வந்த பிறகு தான்.. 2008. அதற்கு முன் நீங்கள் எப்படி படித்து இருக்க முடியும்?! அதற்கு முன் யாஹூ 360 ல் எழுதியது யாருக்குமே தெரியாது.

    வா மணிகண்டன் எங்க ஊர்க்காரார் தான், கோபி.

    “விளம்பரங்களின் எண்ணிக்கையை பார்க்கயில் நிச்சயமா சில‌ கோடி பேர் உங்கள் பக்கத்திற்கு வருகிறார்கள் என்பது நிச்சயம்.”

    சொல்றது தான் சொல்றீங்க.. இன்னும் கொஞ்சம் சேர்த்து சொல்லுங்க.. கேட்க நல்லா தான் இருக்கு.

    அப்புறம்.. ரஜினி பற்றிய விவாதங்கள் எல்லாம் நீங்களும் நானும் பேசிட்டே இருக்க வேண்டியது தான்.. முடிவில்லாத விவாதங்கள்.. உங்களுக்கும் தெரியும்.

    என்னுடைய தளத்தில் ரஜினி பற்றி எழுதுவது 5% தான் ஆனால், பெரும்பாலானவர்கள் வருவது இந்த 5% க்கு தான். மற்ற எவ்வளவோ கட்டுரைகள் எழுதுகிறேன் அதை எவரும் கண்டு கொள்வதில்லை, நீங்கள் உட்பட.

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  21. தமிழ் எனக்கு கட்டாய கல்வி வீட்டில். ஆனால் பள்ளியில் அல்ல. ஆகவே நான் தமிழ் கற்றது உங்கள் வலைபதிவுகளில்தான். நீங்களும் ஒரு கல்வி வள்ளல் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளுங்கள்.
    தமிழ் படிக்கத்தெரியுமேயன்றி தட்டச்சு செய்யத்தெரியாது. செய்யத்தெரியாது என்பதிலும் பார்க்க முயலவில்லை.
    யாஹு 360 இல் என் தந்தையாருக்கு நீங்கள் பழக்கமானதாக நியாபகம். நிச்சயப்படுத்தமுடியாதபடி என்னுடய த்ந்தையார் காலமாகிவிட்டார். நீங்கள் கடைசி மட்டும் ரசினியை விட்டுக்கொடுக்கபோவதில்லை. ரசினி ஆட்சியைபிடிக்க வாய்ப்பில்லை. கட்சி ஆரம்பிக்கவே வாய்ப்புகள் குறைந்துகொண்டு போகின்றது. ஆனால் சொல்லிகொண்டு எதுவும் நடந்துவிடாது. அப்படி ரசினி கட்சி ஆரம்பித்து, தமிழ் மக்கள் அவரை ஆதரித்து ஆட்சியை பிடித்தால் , ஒரு ஆறு மாதகாலத்தில் உங்களிடமிருந்து மோடிக்கு மன்னிப்புகேட்டதுபோல ரசினிக்கும் மன்னிப்புகேட்டு பதிவு வரும். ஆனால் யாருக்கு வாக்களிப்பது என்ற் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலழித்துவிட்டேன். ஆனால் நீங்கள்தான் மழுப்புகிறீர்கள். எல்லா அறிவாளிகளுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். உங்களிற்கு ரசினி. இனிய ஹேவிளம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  22. //இனிய “ஹேவிளம்பி” புத்தாண்டு வாழ்த்துக்கள்//
    நல்லது.
    அவசரம், அவசரம். பொறுமையா ஒரு முறை சரி பார்த்து கருத்து கூறி இருக்கலாம் 🙂

  23. தமிழர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைக்காதீர்கள்னு பல பேர் சொல்றத கேக்குறேன்.
    அங்க பாரதிராஜா, அமீர், சீமான், கவுதமன், களஞ்சியம்னு பல பேர் போராட்டம் செஞ்சாங்க!! எனக்கோரு சின்ன சந்தேகம், போராட்டத்துல அவுங்களோட மனைவி, புள்ளை, மருமகன்னு யாராவது வந்தாங்களா?? தெரிஞ்சா சொல்லுங்களேன்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here