சித்தோடு (ஈரோடு) அருகே Texvalley என்ற நிறுவனம் உள்ளது. இங்கே ஆடைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்று என் அண்ணனுடன் காரில் சென்று இருந்தேன்.
NH ல் இருப்பதால், இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது (கேட்டுப் பார்க்கலாம்). எனவே, நம்முடைய வாகனம் தான் எடுத்துச் செல்லவேண்டும்.
நான் விலை குறைவாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், இவ்வளவு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விலையைக் கேட்டதுமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
சில ஆடைகளின் விலைகள்
Round Neck T Shirt ₹140 அல்லது இரண்டு ₹250.
Non Brand Vest & Brief ₹40 (மொத்தமாக வாங்கி விலை குறைத்தால், ₹30 தான் வருகிறது)
குழந்தைகள் (5 / 10 வயதுக்கு வாங்கினேன்) T Shirt ₹140 . தரமான உடைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
லுங்கி ₹100 (குறைக்க முடியும்)
ஆண்கள் பெர்முடாஸ், செமையா உள்ளது இதுவும் ₹140
இது போகப் பெண்கள் உடைகள், போர்வை உட்பட அனைத்து வகை ஆடைகள், வீட்டு பயன்பாட்டுத் துணிகள் உள்ளது.
அனைத்துமே விலை குறைவு.
துவக்கத்தில் Park Avenue, Allen Solly, Van Heusen தான் வாங்குவேன். தற்போது கட்டுப்படியாவதில்லை என்பதால், மதுரா கோட்ஸில் துணி எடுத்து தைத்துக் கொள்கிறேன் 🙂 .
துணிக்குச் செலவு செய்வதை 70% கிட்ட குறைத்து விட்டேன். தற்போது யோசித்துப் பார்த்தால், வெட்டியா துணிக்குச் செலவு செய்தது உரைக்கிறது. பட்டால் தானே தெரிகிறது.
இங்கு தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரே சமயத்தில் 8 T-Shirt எடுத்தேன். அதில் ஒன்றின் வாசகம் “தமிழ் அவமானமல்ல, நம் அடையாளம்” 🙂 . வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.
என்னோட பசங்களுக்கு எடுத்ததும் எனக்கு ரொம்பப் பிடித்தது.
இதையே சரவணா ஸ்டோர்ஸில் எடுத்து இருந்தால், ₹300 – ₹350 கூறி இருப்பார்கள், இங்கே கிட்டத்தட்ட 50% விலை குறைவு.
மின்தூக்கி உள்ளது. எனவே, வயதானவர்களுக்குப் பிரச்சனையில்லை.
எனக்கு விலையை ரொம்ப பேரம்பேசி குறைத்து வாங்கத் தெரியாது ஆனால், மனைவி, அக்கா எல்லாம் வந்தால், குறைத்து வாங்கி விடுவார்கள் 🙂 .
இன்னும் கொஞ்சம் எடுத்து இருப்பேன் ஆனால், தரம் எப்படி உள்ளது என்று பார்த்துட்டு பின்னர் எடுப்போம் என்று ஒத்தி வைத்து விட்டேன்.
T Shirt எடுக்கும் போது அளவு வைத்துப் பார்த்து எடுங்கள். L அளவு அதே தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இதிலேயே Slim T Shirt என்று உள்ளது. அது XXL தான் L அளவு வருகிறது. சின்ன எச்சரிக்கை அவ்வளவே! Vest & Brief க்கும் இதே.
துணி வாங்கியதும், சரியாக உள்ளதா, ஓட்டை எதுவும் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் விளையாட பேட்டரி கார் போன்றவை உள்ளது. எனவே, குழந்தைகளுக்கும் பொழுது போக்கு இருக்கு.
வெளியே வந்து காரை எடுத்துட்டு U Turn செய்யும் போது தான் கவனித்தேன், இன்னொரு கட்டிடத்தில் Kids Zone என்று இருந்தது.
குழந்தைகளுக்குத் துணி எடுக்கச் செல்பவர்கள் இங்கே முயற்சிக்கலாம். முதன்மை கட்டிடத்திலும் நன்றாக உள்ளது.
பிற்சேர்க்கை – தற்போது (2023) சென்ற போது கட்டணம் கூடுதலாக இருந்தது, குறைக்கவும் மறுத்து விட்டார்கள்.
கொசுறு
இந்த இடம் தூரமாக இருப்பவர்களுக்கு, இந்த வழியாக வருவதாக இருந்தால், திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அனைத்து நாட்களிலும் திறந்து இருக்கும்.
ஆனால், ஈரோடு, கோபி, சத்தி, பெருந்துறை, பவானி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் அவசியம் சென்று வாருங்கள், இதுவரை தெரியாமல் இருந்தால்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கலக்குறீங்க கிரி… நான் இந்த கடைக்கு வருவேனா என்று தெரியவில்லை.. கல்லுரி படிக்கும் காலத்தில் ruf & tuf ஜீன்ஸ் போட வேண்டும் என்ற ரொம்ப ஆசை.. பொருளாதார சூழ்நிலையால் ஜீன்ஸ் வாங்க வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது.. தற்போது வாங்கும் அளவில் வசதி இருக்கிறது.. ஆனால் மனம் வரவில்லை.. அலுவலகத்துக்கு சீருடை.. வாரம் ஒரு நாள் மட்டும் வேறு உடை.. இதனால் துணிக்கு என்று செலவு செய்வது மிக குறைவு.. பண்டிகை நாட்களில் எடுத்தால் மட்டுமே.. தகவலுக்கு நன்றி கிரி.
கோயம்புத்தூர் அடுத்த மாதம் செல்கிறேன் அண்ணா….அப்போது முயற்சி செய்து பார்க்கிறேன்…நன்றி அண்ணா நல்ல தகவலை கொடுத்ததற்கு.
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஹலோ கிரி, சவுதியில் ஆரம்பத்தில் 50 – 70 ரியால்களுக்கெல்லாம் (800 – 1200) துணி எடுத்திருக்கிறேன். ஆனா தற்போது 5 – 10 ரியால் தான் செலவிடுகிறேன். (70 – 140 )
இந்தியா வந்தால் என்ன செய்வது என்று நினைத்திருந்தேன் – நல்லது இதுமாதிரி கடைகள் விவரங்களை பகிரவும்.
சவூதி முன்பு போல இல்லை.. இன்னும் 2 வருடங்களில் அநேக இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்துவிடுவார்கள். பல கடைகள் மூடப்பட்டு வருவதால் எங்கு பார்த்தாலும் மலிவு விலைகள். எல்லா இடத்திலும் பிஸ்னஸ் டல்
தற்போதைய சூழலில் நண்பர்கள் யாரும் சவுதிக்கு வருவது சரியான நேரம் அல்ல.
@யாசின் அலுவலகத்துக்கு சீருடை என்றால், துணி செலவு குறைவாகவே இருக்கும்.
@கார்த்தி முயற்சி செய்.. நல்லா இருக்கு
@yarlpavanan நன்றி
@ராஜ்குமார் வாங்க! எப்படி இருக்கீங்க? ரொம்ப மாசமா ஆளையே காணோம் 🙂
சவூதி தகவலுக்கு நன்றி.