தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

2
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

போலி செய்திகளுக்குச் சமூகத்தளங்களில் பஞ்சமே இல்லை. “படிச்சு இருந்தால் தானே நல்லது கெட்டது தெரியும்!” என்பார்கள்.

இந்த வேலைகளைச் செய்வதே நன்கு படித்தவர்கள் தான். Image Credit

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

10 பேருக்கு அனுப்பினால் நல்ல செய்தி வரும்

இப்படத்தை 10 நொடிகளில் 10 பேருக்கு அனுப்பினால் நல்ல செய்தி வரும்” என்றால், உடனே நம்ம ஆளுங்க அவங்க தொடர்பில் இருக்குற எல்லோருக்கும் அனுப்பி விட்டுத்தான் மறு வேலை.

1 என்று Comment போட்டால் பாம்பு அசையும்” என்று போட்டு இருப்பார்கள். லட்சக்கணக்கில் 1 போட்டு வைத்து இருப்பார்கள்.

எதையாவது எழுதி, இடையிடையே தமிழன் புகழ், தமிழ் சிறப்பு, அதிசயம் என்று போட்டு இறுதியில் “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” என்று போட்டால் போதும், share தெறிக்கும்.

சில நேரங்களில் பகிர்பவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால், பகீர்னு இருக்கும். யோசிக்கவே மாட்டாங்களா! என்று அதிர்ச்சியா இருக்கும்.

31 ஆயிரம் பேர்

பின்வரும் தகவலை 31,000 பேர் பகிர்ந்து இருக்கிறார்கள். இதைப் படித்தாலே தெரியவில்லையா.. இது ஒரு டுபாக்கூர் என்று! இதையெல்லாம் பார்த்தால் கொலை வெறியாகிறது.

WhatsApp, ஃபேஸ்புக்ல ஏதாவது வந்தால், அதை மற்றவர்களுக்குப் பகிரும் முன்பு சந்தேகம் இருந்தால், புறக்கணியுங்கள்! ஒன்றும் குடி முழுகி விடாது.

நீங்க தவறாக மட்டும் அனுப்பவில்லை, அப்பாவி ஒருவர் ஏமாற துணை போகிறீர்கள். 

எப்பவாவது தவறா அனுப்பினால் பரவாயில்லை.. எப்பவுமே என்றால் எப்படிங்க?!

YouTurn

பேஸ்புக்கில் YouTurn என்ற பக்கத்தில் எது போலி உண்மைன்னு விசாரித்து உண்மைய விளக்குறேன்னு வறட்சியாக இல்லாமல், ரசிக்கிற மாதிரி Memes போடுறாங்க.

உண்மையைவிடப் பொய் வேகமாகப் பரவும் என்பதைத்தான் இவர்கள் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த நகைச்சுவையில் கூறி இருக்கிறார்கள். Like செய்து கொள்ளுங்கள்.

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் ஆனால், கண்மூடித்தனமாக அல்ல.

பிற்சேர்க்கை

தற்போது (2022) YouTurn திமுக ஆதரவு தளமாக மாறி YouTurn போட்டதால், பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

2 COMMENTS

  1. கிரி, சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும்.. ஆனால் அதைவிட கொடுமையான ஒன்று மெத்த படித்த மேதவி நண்பர்களே அதை பகிரும் போது உண்மையில் வருத்தமாக இருக்கும்.. இவர்களின் நோக்கம்… செய்தி உண்மையா?? பொய்யா??? என்பதில்லை… எவ்வளவு விரைவாக அதை பகிர்கிறோம் என்பது தான்…

    தற்போதைய நடைமுறை சூழல் என்னவென்றால்… சமூக வலைத்தளங்களில் எந்த செய்திகள் அதிகம் பகிரப்படுகிறதோ அவை முற்றிலும் உண்மை என்ற எண்ணம் பரவலாக உண்டு… (தமிழனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் ஆனால், கண்மூடித்தனமாக அல்ல.) உங்கள் கூற்றுக்கு தலைசாய்கிறேன்…

  2. எங்கள் சாவை ஏளனம் செய்வதில் இவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here