எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருக்கிறது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வெர்ஷன் 2.0
முன்பெல்லாம் 4 / 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாகப் பெற்றுக்கொள்வார்கள்.
ஆனால், தற்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்களின் குறைவான எண்ணிக்கை மற்றும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இவை எல்லாவற்றையும் விட தற்போது இருக்கிற விலைவாசிக்கு, இரண்டாக இருந்த குழந்தைகள் எண்ணிக்கை ஒன்றாக குறைந்து விட்டது.
பள்ளிக்கட்டணம் எல்லாம் கல்லூரிக் கட்டணத்தை தாண்டி விட்டது.
தற்போது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மிகக் குறைந்து விட்டார்கள், இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக.
பாசம் / உதவி
எனக்கு மூன்று அக்கா பின் நான்.
இதனால் என்னவோ எனக்கு சிறு வயதில் இருந்தே இவர்களின் பாசம் / உதவி கிடைத்ததால், நானும் கண்டிப்பாக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.
இதில் என்னைவிட மனைவி தான் முடிவாக இருந்தார். எனக்கு, இரண்டாவது குழந்தையைப் பெற்றால், இவர் சமாளிப்பாரா! என்று சந்தேகம்.
காரணம், சில நேரங்களில் முதல் மகன் வினய் இவரிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுவான். ஆசைப் பட அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆசைக்காக குழந்தையைப் பெற்றுக்கொண்டு அப்புறம் புலம்பிக்கொண்டு இருப்பது தவறு / குழந்தைக்கு நாம் செய்யும் பாவம்.
அதனால், பல்வேறு நிபந்தனைகளை ஒப்புக்கொண்ட பிறகே இதற்கு சம்மதித்தேன். இது மட்டுமல்லாது எப்படியும் சமாளித்து விடலாம் என்ற என் வழக்கமான நம்பிக்கை.
இரண்டாவது குழந்தையைப் பெற வேண்டும் என்று நினைத்தற்கு முக்கியக் காரணம், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்கிற எண்ணம் தான்.
நானெல்லாம் கஷ்டப்பட்ட போது, அக்கா தான் எனக்கு ரொம்ப உதவினார்கள்.
பெற்றோர்
நீங்கள் நினைப்பது புரிகிறது, இந்தக்காலத்தில் அண்ணன் தம்பி எல்லாம் எங்கே உதவப் போகிறார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்.
அனைத்துமே பெற்றோர் வளர்க்கும் விதத்தில் தான் இருக்கிறது. நாங்கெல்லாம் என்ன சண்டை போட்டுக்கொண்டா இருக்கிறோம்.
ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்த அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவாவது நன்றாக வளர்ப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு குழந்தை என்று செல்லமாக வளர்த்து, ஒரு சிலர் உலக அனுபவமே இல்லாமல் ஆக்கி விடுகிறார்கள்.
அவர்களும் மற்ற குழந்தைகளிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறார்கள் / பெரியவர்களாகியும் கூட.
இது போல ஆன நண்பர்களை / தெரிந்தவர்களை நிறையப் பார்த்து விட்டேன்.
என்னைப்பொறுத்தவரை பையன் ரொம்பக் குறும்பாக இருந்தாலும், மாக்கானாக / தத்தியாக இருந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
பெண் குழந்தை
அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் 2 ம் தேதி காலை எங்களுக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.
நாங்கள் அனைவருமே வினய் உட்பட, பெண் குழந்தை வேண்டும் என்றே நினைத்து இருந்தோம் ஆனால், எதுவும் நாம் முடிவு செய்ய முடியாதே.
துவக்கத்தில் சிறு ஏமாற்றம் இருந்தாலும், எங்களுக்கு இரண்டு குழந்தை வேண்டும் என்று முடிவு செய்து இருந்ததால், எதாக இருந்தாலும் சரி என்று இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பெண் குழந்தை என்றால் பெயர் தேர்வு செய்து வைத்து இருந்தேன்.
இவனுக்கு இனி தான் பெயர் தேட வேண்டும் 🙂 .
இந்தப் பெயர் தேர்வு செய்கிற வேலை இருக்கே… ரொம்பக் கஷ்டம். தமிழ்ப் பெயர், நியுமராலஜி, பயாலஜி, பிசிக்ஸ் என்று எதுவும் பார்க்கப்போவதில்லை.
மனதுக்கு பிடித்தால் வைப்பேன் (மனைவியின் சம்மதத்தோடு) அவ்வளோ தான், மற்றபடி இதில் எங்களைத் தவிர வேறு யாரும் தலையிட முடியாது.
மருத்துவனையில் இருந்த செவிலிப் பெண்களிடம், நான் தான் குழந்தை அப்பா என்றால் சந்தேகமாக பார்க்கிறார்கள்.
இரண்டாவது பையன் என்பதால் என்னைக் கொஞ்சம் வயதானவராக கற்பனை செய்து இருப்பார்களோ! என்னவோ.
இனி இவனை பள்ளியில் சேர்க்கச் சென்றால் அவ்வளோ தான். வினய் பெரிய பையன் ஆனால், இவன் கூடவே சென்று சைட் அடிக்கப் போய்டலாம்… எப்பூடி 😉 சரி சரி நோ டென்ஷன்.
வெர்ஷன் 1.0
வினய், போன உடனே புகார் வாசிக்கிறான்.. “அப்பா! தம்பிபிபி ரொம்ப ரகளை பண்ணுறான்!!! பாலே குடிக்க மாட்டேங்குறான்!!”.
ஏன்டா டேய்! நீயே காலையிலே பால் குடிக்க, இல்லாத அட்டகாசம் பண்ணிட்டு இருப்பே.. நீ சொல்றியா! னா சிரிக்கிறான்.
தற்போது கோபில LKG போகிறான், இப்பவே இவனுக்கு வீட்டுவேலை கொடுத்து இம்சை செய்து கொண்டுள்ளார்கள்.
ஒருவாரம் எங்க வீட்டில் தான் இருந்தான் அதனால், நான் இவனுக்கு வீட்டுவேலை செய்ய உதவிக்கொண்டு இருந்தேன்.
இவனுக்கு வீட்டுவேலை இல்லை என்றால் எனக்கு அப்பாடா! என்று இருக்கிறது.
இவனை ஒரு இடத்தில் உட்கார வைத்து எழுத வைக்கிறதுக்குள்ள நம்ம கண்ணாமுழி வெளியே வந்துடும் போல இருக்கு.
ரொம்ப பிரச்சனை பண்ணவில்லை என்றாலும், இதைச் செய்யப் பெருங்கொடுமையா இருக்கு.
டேய்! உங்க மேம் (இப்படித் தான் சொல்லணுமாம்) கிட்ட இனிமே இவ்வளோ வீட்டு வேலை கொடுக்காதீங்கன்னு போய் சொல்லுடா! என்று கூறியதைக் கேட்டு அடுத்த நாள் வந்தவுடன் “அப்பா! நான் சொன்னேன் அதுக்கு மேம், இன்னும் அதிகமாத் தான் தருவேன்னு சொல்றாங்க” என்று வந்து சொல்றான்.
நீங்க ஃபோன் போட்டு அவங்க கிட்ட பேசுங்க என்கிறான் 🙂 .
ஒருவாரம் நான் தான் இவனைப் பள்ளியில் கொண்டு சென்று விட்டுத் திரும்ப மாலையில் கூட்டி வந்தேன். ரொம்ப ஜாலியாக இருந்தது.
பொறுப்பான அப்பா
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பொறுப்பான!! அப்பாவாக. பள்ளி செல்லும் நேரம் காலையில் எங்கள் வீடு, பக்கத்து வீடு என்று எங்கள் தெருவே மூன்றாம் உலகப்போர் மாதிரி இருக்கிறது.
காலையில் போகும் போதே, ஏதாவது அவனைக் கிண்டல் பண்ணிட்டு தான் அவனை வகுப்பில் விடுவேன்.
உன்கூட வந்து உன் பக்கத்துல உட்காரப்போகிறேன் என்றால், ரொம்ப சீரியசாக “அப்பா! அப்படி எல்லாம் உட்காரக் கூடாது” என்று ரிப்ளை.
சரிடா! உங்க மேம் பக்கத்துல!! உட்காந்துக்குறேன் என்றால் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான்.
மாலையில் வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சென்று அவன் வகுப்பின் முன் நின்றால்..
அவனுடைய ஆசிரியை, “வினய்! Your daddy has come. You can leave” னு சொன்னா போதும் தடதட ன்னு லஞ்ச் Bag மறந்துட்டு அவசரத்துல ஓடி வந்து விடுவான்…
அவன் நண்பர்கள் “வினய் Bag Bag” என்றதும் திரும்ப ஓடிப்போய் எடுத்துட்டு வந்து பின் அவங்க மேம் எதோ சொல்லுவாங்க.. அதை அவன் சொன்ன பிறகு தான் விடுவாங்க.
அதை அவன் கடனேன்னு அரைகுறையா சொல்லிட்டு எஸ்கேப் ஆனா போதும்னு ஒரே ஓட்டமா வந்துடுவான்.
எனக்கு சிரிப்பா இருக்கும்.. என் பள்ளி நினைவுகள் வந்து செல்லும்.
சாக்லேட்
இவனுக்கு ஒரு வித்யாசமான பிரச்சனை. சொத்தைப் பல் வந்து விடும் என்று சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாது / வாங்கித் தரக்கூடாது என்று வீட்டில் கூறி இருக்கிறேன்.
இவனோட வகுப்பில் ரைம்ஸ் கூறினால் ஒரு சாக்லேட் கொடுத்து விடுவார்களாம்.
இவங்க வகுப்பில் இவன் தான் ரைம்ஸ் அடிக்கடி சொல்கிறான் என்று சாக்லேட் கொடுத்து விடுகிறார்கள்.
இதென்னடா இப்படியொரு பிரச்சனை என்று.. டேய்! இனிமே சாக்லேட் வேண்டாம், சொத்தைப் பல் வந்து விடும் என்று உங்க மேம் கிட்ட சொல்லு என்று கூறினோம்.
அடுத்த நாள் வந்து “அப்பா! நான் சாக்லேட் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று சொன்னான். நிசமா சொன்னானா புளுகுனானா என்று தெரியவில்லை 🙂 .
அடுத்த முறை செல்லும் போது நான் இவன் மேம் கிட்ட சொல்லலாம் என்று இருந்தேன், பிறகு செல்ல நேரம் அமையவில்லை.
இரண்டு வாரம் இருந்தேன் அதில் இவன் கூட இருந்த நாட்கள் போனதே தெரியவில்லை. எது சொன்னாலும் ஒரு கவுன்டர் அட்டாக் கொடுத்துட்டே இருக்கான்.
நான் பொதுவாக குழந்தைகளை நன்றாக ஹேண்டில் செய்வேன் என்பதால், எங்கே சென்றாலும் கூடவே சுற்றிக்கொண்டு இருந்தான்.
குறிப்பிட்டுக் கூற பல விஷயங்கள் இருந்தாலும் இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
இனி இரண்டாவது பையன் பெரியவன் ஆனால் இருவரும் என்னை ஒருவழி ஆக்காம விடமாட்டானுக. சுகமான சுமை தான்.
கொசுறு 1
என் மனைவியுடன் அதிகம் பேச முடியவில்லை அது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நான், இவர் அம்மா வீட்டில் இருக்கும் சமயங்களில் இரண்டாவது பையன் அழுதுட்டு இருப்பான் அல்லது வினய் ஏதாவது செய்துட்டு இருப்பான்.
அடுத்த முறை ஊருக்கு வந்தால் தான் பேச முடியும் என்று நினைக்கிறேன். இந்த முறை ஊருக்குப் போனதில் நிறைய படங்கள் எடுத்தேன்.
இவற்றை அடுத்து வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன். சும்மா சுவிட்சர்லாந்து கணக்கா எங்க கோபி ஏரியா இருக்கு 🙂 . Stay tuned.
சேம்பிள் படம் இது.
கொசுறு 2
குழந்தைகள் பற்றி செல்வராஜ் என்பவர் “உளவியல்” என்ற தளத்தில் எழுதி வருகிறார்.
இதில் குழந்தைகளை எவ்வாறு நடத்துவது, அவர்களிடம் எப்படி நடந்து கொள்வது / கொள்ளக்கூடாது என்று எளிமையாகக் கூறி வருகிறார்.
அடிக்கடி எழுதுவதில்லை, எப்போதாவது நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார் என்று நினைக்கிறேன். நான் நீண்ட மாதங்களாக படித்து வருகிறேன்.
நீங்கள் பெற்றோர் என்றால் இந்தத் தளத்தை உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.
கொசுறு 3
அடுத்த வாரம் ஒரு முக்கியமான பதிவு எழுதுகிறேன். அது முக்கியமான பதிவு என்று எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கறீங்களா! 🙂 🙂 படித்தாலே புரியும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வாழ்த்துக்கள் சார்…
நல்ல ஒரு தளத்தை அனைவரும் அறிந்து கொள்ளட்டும்… (திரு. செல்வராஜ் – உளவியல்)
நன்றி…
சந்தோஷமான பகிர்வு. இங்கும் வாழ்த்துகள்:)! தலைப்பு அருமை!
கோபி படம் நீங்கள் சொல்வது போலதான் உள்ளது. மிக அழகு.
வாழ்த்துகள் கிரி!!!
வாழ்த்துகள் கிரி!!
வெர்ஷன்-1 செம சேட்டை போல,
//அவனை கிண்டல் பண்ணிட்டு தான் அவனை வகுப்பில் விடுவேன். உன்கூட வந்து உன் பக்கத்துல உட்காரப்போகிறேன் என்றால், ரொம்ப சீரியசாக “அப்பா! அப்படி எல்லாம் உட்காரக்கூடாது” என்று ரிப்ளை. சரிடா! உங்க மேம் பக்கத்துல!! உட்காந்துக்குறேன் என்றால் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான்//
சூப்பர் கிரி.
Hi Giri,
Congrats for second baby .
Cheers
வாழ்த்துகள் கிரி 🙂
வாழ்த்துக்கள் நண்பரே! குழந்தைகள் அருகில் இருந்தாலே அது ஒரு தனி மகிழ்ச்சி தான்.
குழந்தைகள் என்றாலே ஆனந்தம்தான்…. வாழ்துகள் கிரி அண்ணா
வாழ்த்துக்கள் கிரி. உங்களை போலவே உங்க பையனையும் ரசிக முடிகின்றது.
வாழ்த்துக்கள் கிரி
குழந்தைகள் பற்றி பேச ஆரம்பித்தாலே நாமும் குழந்தையாகி விடுவோம் இது இயற்கை
வாழ்த்துகள் கிரி!
வாழ்த்துகள் கிரி!
வாழ்த்துக்கள்…
அதிகப் பணி மிகுதியால் இம்முறையும் சந்திக்க முடியவில்லை கிரி!
வாழ்த்துக்கள் கிரி ….
வாழ்த்துகள்.
ஒரே குழந்தைகளாக இருந்த என் சக தோழியர்கள் அவர்களின் நிலையைக் குறித்து நிறையப் புலம்பியுள்ளார்கள். பாவமாக இருக்கும்.
சின்ன வயதில் சண்டை போட்டுக் கொண்டாலும், குடும்பஸ்தர்கள் ஆனதும் உடன்பிறப்புகள் ஆதரவாகவே இருப்பார்கள்.
//என் மனைவியுடன் அதிகம் பேச முடியவில்லை//
//ஊருக்குப் போனதில் நிறைய படங்கள் எடுத்தேன். //
படமெடுக்கப் போன நேரத்தில் பேசியிருக்கலாமோ? (ச்சும்மா…) :-)))))))))
Hi Giri, Congrats, God bless you and your family for happy and long live.
வாவ் !! வாழ்த்துக்கள் கிரி ….
மீண்டும் ஒரு முறை குழந்தை வளர்ப்பு சைக்கிள் ஆரம்பம் !!
இந்த சைக்கிள் முன் அனுபவம் காரணமாக சுலபமாக இருக்கும் என்று நம்புகிறேன்!!
மற்றபடி நம்ம ஊரு எப்பவும் செழுமை தான்…!! நன்றி
நல்வாழ்த்துகள் கிரி.
அன்புள்ள கிரி
உங்கள் பதிவை படிக்கும்போது என் பையன் கௌதம் உடன் நான் பழகிய நாட்கள் ஞாபகம் வந்துவிட்டது ( நானும் தற்சமயம் சிங்கப்பூர் வேலைக்கு வந்து இருக்கிறேன் ) சுவையான உங்கள் எழுத்துக்கள் சுமையான உங்கள் வரிகள்
///இரண்டு வாரம் இருந்தேன் அதில் இவன் கூட இருந்த நாட்கள் போனதே தெரியவில்லை////
///என் மனைவியுடன் அதிகம் பேச முடியவில்லை அது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது////
மனதை என்னவோ செய்தது
வாழ்க வளமுடன் !!!
ஸ்ரீகாந்த்
பிறந்தது : புதுச்சேரி
வாழ்வது : சிங்கப்பூர்
வாழ்த்துக்கள் தல ;))
உளவியல் தளத்துக்கும் நன்றி 😉
பேசும் போது சொல்லவே இல்லை ( வடிவேல் பாணியில் படிக்கவும்)
நான் வெர்ஷன் 2 1 க்கு தான் வாழ்த்து சொல்வேன்,
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
ரெண்டாவது ஜூனியர் கிரிக்கு வாழ்த்துக்கள்… 🙂
ஹாய் கிரி,
வாழ்த்துகள்……
வாழ்த்துக்கள் கிரி,
வெர்ஷன் 1.௦ படமும், கோபி படமும் அருமை.
கொசுறு 2 தகவலுக்கு நன்றி
வாழ்த்துக்கள் தல
“இவன் கூடவே சென்று சைட் அடிக்கப் போய்டலாம்…” – என் இனமடா:)
– அருண்
வாழ்த்துக்கள் கிரி… என்ஜாய்!!! 🙂
வாழ்த்துக்கள் கிரி அண்ணா….!!!
வாழ்த்துகள் கிரி.-பயபுள்ள.
வாழ்த்துகள் கிரி..
வாழ்த்துக்கள் கிரி….