பயணக்குறிப்புகள் [24-08-2012]

5
பயணக்குறிப்புகள் [24-08-2012]

ந்த முறை விடுமுறை தான், எனக்கு விடுமுறை போல இருந்தது.

எங்கள் வீட்டில், மனைவியின் வீட்டில் என்று யாருமே என்னை உறவினர் வீடுகளுக்கு போகக் கூறி கட்டாயப்படுத்தவில்லை.

இல்லை என்றால் கல்யாணம், இழவு என்று இதற்கு போவதற்கே நேரம் சரியாக இருக்கும், பின் விடுமுறையும் முடிந்து விடும்.ஊரில் இருந்த உணர்வே இருக்காது.

இந்த முறை என் இரண்டாவது மகனை, என் மனைவி கவனிக்க வேண்டியது இருந்ததால், வினயை (முதல் மகன்) எங்கள் வீட்டிற்கு கூட்டிட்டு வந்தேன்.

ஒருவாரம் இருவருமே நல்லா என்ஜாய் செய்தோம்.

ழை

ழை பெய்யாதது பெரும் பிரச்சனையாக எங்கள் ஊரில் உருவெடுத்து இருக்கிறது. பயிர்கள் வாடிக்கொண்டு இருக்கின்றன.

பவானி சாகர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதால் ரொம்ப மோசம் இல்லாமல் தப்பித்தது.

எங்கள் கிராமக் கிணற்றில் தண்ணீரே இல்லை, கோபி பரவாயில்லை. எங்கே பார்த்தாலும் போர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

யாராவது பூமிக்கு 100 அடிக்குச் சென்று ஒரு ஃபோட்டோ ஸ்கேன்னிங் செய்தால் ஒரே குழாயாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

போர் போடுவது அதிகரித்து விட்டது.

சாயப்பட்டறை

சாயப்பட்டறை தடை காரணமாக, திருப்பூரில் தற்போது பலர் காலி செய்து சென்று விட்டார்கள். அங்கே இருந்த பலர் கோபியில் வீடு கட்டி வந்து விட்டார்கள்.

கோபி திருப்பூர் இரண்டுக்கும் 1 மணி நேர கார் பயணம் தான் வரும்.

அரசு வேலையாக இங்கே வருகிறவர்களும் இங்கேயே இருந்து விடுகிறார்கள். இதனால் கோபியில் கூட்ட நெரிசல் அதிகரித்து விட்டது.

இவர்கள் மட்டுமல்லாமல் பலரும் கோபிக்கே படையெடுக்கிறார்கள். இதனால் நிலத்தின் விலை கன்னா பின்னாவென்று எகிறி விட்டது.

கடந்த சில மாதங்களாக நகைப் பறிப்பு, கொலை என்று கோபி மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எங்கும் இது பற்றியே பேச்சு.

கோபியில் இது போல் அதிகம் நடப்பது இதுவே முதல் முறை.

விலைவாசி

விலைவாசி பற்றிப் பேசுவதெல்லாம் கேட்டுச் சலித்து புளித்துப் போன விசயமாகி விட்டது. எனவே திரும்பத் திரும்ப அதை பேசுவதில் என்ன இருக்கிறது? எனவே அதை விடுகிறேன்.

ன்னுடைய நண்பன் மகன் சென்னையில் Pre KG படிக்கிறான்.

அவனுக்கு கோகுல அஷ்டமியோ எதற்கோ விடுமுறை விட்டார்கள். இதற்காக சனிக்கிழமை பள்ளி வைத்து விட்டார்கள். அடப்பாவிகளா! இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா.

எல்லோரும் என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவது என்ற முடிவில் அனைத்துப் பள்ளிகளும் தீவிரமாக இருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது.

விட்டால் இவர்களுக்கே ஸ்பெஷல் வகுப்பு வைப்பார்கள் போல இருக்கு!

சாலை

கோபி சாலையைத் தாறுமாறாக அகலப்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் நஞ்ச அகலமல்ல மிகப்பெரியதாக.

ஏற்கனவே கோபி சாலை அகலமாக இருக்கும், இப்ப 6 வழிச் சாலை மாதிரி உள்ளது. ஆக்கிரமிப்பு அனைத்தையும் தூக்கி விட்டார்கள்.

இதில் மரங்கள், கடைகள், கோவில்கள் என்று அனைத்தும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கப்பட்டு விட்டது. தப்பித்தது காந்தி சிலை மட்டுமே.

இதை மட்டும் மரியாதை காரணமாக விட்டு விட்டார்கள் போல உள்ளது.

இது கோபி வைரவிழா பள்ளி எதிரில் உள்ளது. இதில் “நம்ம ஊரு வண்டி TVS XL” ல் போனால் என்னமோ பெரிய NH ல தனியா போவது போல உள்ளது.

சென்ற முறை சென்ற போது கன்றாவியாக இருந்த சாலைகள் ஒன்று விடாமல் தார் சாலை போடப்பட்டு பட்டாசாக இருக்கிறது.

கோபியே புதுமணப்பெண் போலப் பளபளப்பாக உள்ளது 🙂 . படங்களை அடுத்து வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.

கோவை

கோவை சென்று இருந்த போது, நண்பர்களுடன் டாஸ்மாக் சென்று இருந்தேன்.

எல்லோரும் தற்போது British என்ற பீர் தான் சூப்பர், KF விட நன்றாக இருக்கிறது என்று கூறியதால் அதை வாங்கினோம்.

பாட்டிலில் 95 போட்டு இருக்கிறது ஆனால் 115 வாங்கினார்கள்.

ஏன் இது அரசு கடை தானே! இவ்வளவு அதிகம் உள்ளது என்று கேட்டால்.. அது அப்படித்தான், அனைத்து இடங்களிலும் இப்படித்தான் உள்ளது என்றார்கள்.

சில இடங்களில் குவாட்டருக்கு 30 அதிகம் வைத்து விற்கிறார்கள் என்றார்கள்.

குவாட்டர், ஹாட் சமாச்சாரம் எனக்குத் தெரியாது என்பதால் ஆர்வம் காட்டவில்லை. British சூப்பராக இருந்தது 🙂 .

அரவிந்த் கண் மருத்துவமனை

ணிப்பொறியையே பார்த்துக்கொண்டு இருக்கும் பணியில் இருப்பதால், நம்ம கண் எப்படி இருக்கிறது என்பதை சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

இதனால் அப்பாவுடன் கோவையின் மிக மிகப் பிரபலமான மருத்துவமனையான “அரவிந்த் கண் மருத்துவமனை” சென்றேன்.

இது அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது.

கேரளாவிலிருந்து அதிகம் இங்கே வருவார்கள், எங்கள் குடும்பம் மற்றும் 90 சதவீத எனக்குத் தெரிந்த குடும்பங்கள் இங்கே தான் தங்கள் கண்களைச் சோதனை செய்து கொள்கிறார்கள்.

மிக வேகமாக, ரொம்பக் காக்க வைக்காமல் நம்மைப் பரிசோதித்து அனுப்பி விடுவார்கள். ரொம்ப நம்பகமான மருத்துவமனையும் கூட.

நீங்கள் கோவைப் பகுதிக்காரர் என்றால் இங்கே சென்று சோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கிறேன்.

கட்டணம் வெறும் 50 தான். அன்னப்பூர்ணா கெளரி ஷங்கரில் காஃபியே 20 க்கு மேலே.

நான் சென்று அமர்ந்ததும் ஒரு பெண் கண்ணாடியை அணிவித்து எதிரில் உள்ள எழுத்துக்களைப் படிக்கக் கூறினார். நான் சர்ர்னு படித்து விட்டேன்.

என்னை ஏற இறங்க பார்த்தார்! உங்களுக்கு என்ன பிரச்சனை? என்றார்.

நான் சும்மா!! சோதனை செய்து பார்க்க வந்தேன் என்றேன்.

சரி நீங்க வேற எந்தச் சோதனையும் செய்ய வேண்டாம், நேராக மருத்துவரைச் சென்று பாருங்கள் என்றார். சரி என்று அவரைப் பார்க்கப்போனேன்.

அவர் என் கண்ணை எதோ கருவியில் வைத்துச் சோதித்து உங்களுக்கு என்ன பிரச்சனை? என்றார். வழக்கமான சோதனை என்றேன்.

சரி! ஒன்றும் பிரச்சனை இல்லை அடுத்த வருடம் வந்து சோதித்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதன் எதிரில் தான் கோவையில் பிரபலமான PSG கல்லூரி உள்ளது.

இதைக் கடந்து செல்லும் போது, எங்களிடம் 50000 பணம் இல்லாததால் இங்கே சேர முடியாமல், கல்லூரி படிப்பை தவற விட்டது நினைவிற்கு வந்து வருத்தமாக இருந்தது.

என் அப்பாவிடம், “அப்பா! இங்கே படிக்காமல் போனது இன்னும் ஏமாற்றமாக உள்ளது” என்று கூறிய போது ஆறுதல் கூறினார்கள்.

வைரவிழா

கோபியில் நான் படித்த பள்ளியான “வைரவிழா” சென்று இருந்தேன்.

அருகில் உள்ள கிராமத்தில் இருந்தாலும் (தற்போது கோபி வந்து விட்டோம்) இங்கே உள்ள வெள்ளாளர் மாணவர் விடுதியில் தங்கித்தான் படித்தேன். பள்ளியைப் போல, விடுதி மிகப்பிரபலம்.

இங்கே மாத மெஸ் கட்டணமாக (மொத்தக் கட்டணமே அவ்வளவு தான்) அதிகபட்சமாக 250 ருபாய் கொடுத்து இருக்கிறேன்.

தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை, இது லாப நோக்கமற்ற விடுதி.

இங்கே இருந்த வார்டன் திரு கந்தசாமி அவர்கள் தற்போது இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று இருப்பதாக என் அப்பா கூறினார்.

இதனால் இவரைச் மரியாதை நிமித்தமாகப் சென்று பார்த்து வந்தேன்.

ஹாஸ்டலில் இருந்த போது இவரிடம் செம அடி வாங்கி இருக்கிறேன் :-). கணக்கில் பெயில் ஆகி, மண்டைக் கொட்டு வாங்கி இருக்கிறேன்.

எப்போது ஊருக்குச் சென்றாலும் இவரை ஹாஸ்டலில் சென்று பார்த்து வருவேன். இந்த முறை பள்ளிக்குச் சென்று பார்த்துப் பேசி வந்தேன்.

கார்பரேட் பள்ளிகளால் தற்போது வைரவிழா சிரமப்படுவதாகக் கூறி வருத்தப்பட்டார்.

திரு ராமகிருஷ்ணன்

கோபியில் எங்களுக்கு நெருங்கிய மருத்துவர் ENT நிபுணர் திரு ராமகிருஷ்ணன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். கோபியில் இவர் ரொம்பப் பிரபலம்.

வயதானவர், சம்பாதித்து விட்டதால் தன்னுடைய திருப்திக்காக இதை செய்கிறார்.

எனவே, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், விருப்பப்பட்டால் விடுமுறை எடுத்து விடுவார்.

காதை சுத்தம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதும் “வாங்க வாங்க” என்று காது, மூக்கு, தொண்டை என்று அனைத்தையும் சோதனை செய்து விட்டார்.

“தற்போது எப்படி உள்ளது” என்றார்.. “டாக்டர் எனக்கு காது பிரச்சனை இல்லை, சும்மா நீண்ட வருடங்கள் ஆகி விட்டதே அதனால் சுத்தம் செய்தேன்” என்றேன்.

பின்னர் அவரிடம் “டாக்டர்! இனி மற்றவங்க மனசுல நினைக்கிறது எல்லாம் எனக்கு கேட்காதே…” என்று விவேக் ஸ்டைல் ல் கேட்க, அவருக்கு ஒரே சிரிப்பு.

கொஞ்ச நேரம் பேசி விட்டுப் பார்வையாளர்கள் பலர் காத்திருந்ததால், பின்னொரு நாள் வருவதாகக் கூறி கிளம்பி விட்டேன். என்ன கூறியும் கட்டணம் வாங்க மறுத்து விட்டார்.

நானும், இனி வரமாட்டேன் என்றெல்லாம் கூறி மிரட்டிப்!! பார்த்தேன், மசியவில்லை.

அரசியல்

கோபியில் உள்ள என் அப்பாவின் அரசியல் நண்பர்களைப் பார்க்கச் சென்று இருந்தேன்.

அதில் ஒருவர் காங்கிரசில் முக்கியமானவர். எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு. இவரல்லாது பல்வேறு கட்சிகளிலும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

இதனால் பலரை சந்திக்க முடிந்தது. கோபியில் இருந்தால் எது வேண்டும் என்றாலும் உடனே செய்ய முடியும்.

அரசியல், ட்ராவல்ஸ், மருத்துவர்கள், கார்பரேட் பள்ளிகள், ஃபோட்டோ ஸ்டுடியோ, திருமண மண்டபம், ரியல் எஸ்டேட், அரசு அதிகாரிகள், கோவில்கள் என்று அனைத்து இடங்களிலும் தெரிந்தவர்களே.

எது நினைத்தாலும் ஒரு தொலைபேசியில் செய்ய முடிகிறது. சென்னை, சிங்கப்பூர் என்றால், ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கம்முனு பேசாம இருக்க வேண்டியதா இருக்கு.

இன்னும் கூற ஏகப்பட்டது இருக்கு… இதுவே போதும் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. நீங்கள் கோவைப் பகுதிக்காரர் என்றால் இங்கே சென்று சோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கிறேன். கட்டணம் வெறும் 50 தான்./////

    திருப்பூர் ல கூட இருக்கிறது ….அதுமட்டுமல்ல அந்த 50 ரூபாய்க்கு நீங்கள் 3
    முறை பரிசோதனை செய்து கொள்ளலாம் .. என்ன கொஞ்சம் கூட்டம் அதிகம்

  2. கோபி ஒரு சிங்கப்பூரா மாறிகிட்டு வருதுன்னு சொல்லுங்க.

    –> //இனி வரமாட்டேன் என்றெல்லாம் கூறி மிரட்டிப்!! பார்த்தேன்//
    🙂 நீங்க, “அப்ப நான் அடிக்கடி வருவேன்”-ன்னு சொல்லி மிரட்டி இருக்கணும்.

  3. ஒரு அழகான பயண கட்டுரை writer ஆகிட்டு இருக்கீங்க

    பதிவு ல அவ்வளவு நேர்த்தி . சூப்பர் தல

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here