பயணக்குறிப்புகள் [15-03-2012]

9
Gobichettipalayam

ரு வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்து சென்றதின் பயணக்குறிப்புகள் 🙂 .

திருமணம்

னைவியின் அண்ணனுக்குத் திருமணம் என்பதால் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டிய நிலை… இல்லைனா பஞ்சாயத்து ஆகிடுங்க 🙂 .

திருமணத்திற்கு வருவது கூட ஓகே! மாப்பிள்ளைக்குத் துணை மாப்பிள்ளையா வேற இருக்கணும் என்று கூறி விட்டார்கள்.

இது என்னடா வம்பா போச்சு! என்று டென்ஷன் ஆகி விட்டது. வேற யாரும் இல்லை உங்க சேவை எங்களுக்குத் தேவை என்று கூறி விட்டார்கள்.

அங்கே இங்கே நகர விட மாட்டேங்குறாங்க… உடனே துணை மாப்பிள்ளை சரியா கவனிக்கவில்லை என்று கூறி விடுகிறார்கள்.

இதுல என் அண்ணணுக வேண்டாங்க வேண்டாங்க கேட்காம பட்டு வேஷ்டி கட்டியே ஆகணும் என்று கூறி விட்டார்கள். நான் எவ்வளோ மறுத்தும் கேட்கவில்லை.

நமக்கு சாதா வேஷ்டியே இடுப்புல நிற்காது இதுல பட்டு வேஷ்டி! விளங்குன மாதிரி தான்.

எப்படியோ பெல்ட் எல்லாம் போட்டு கட்டி விட்டார்கள் ஆனால், எனக்கு தான் எப்போது கழண்டு விழப்போகுதோ என்று பயம்.

என் பையன் வேற வந்து அப்பான்னு! வேஷ்டிய உருவிடுவானோனு பீதி ஆகிட்டேன்.. இழுத்தால் வேஷ்டி கையோட வந்து விடும்.

அப்புறம் நம்ம மானம் விமானம் ஏறிடும்.

நான் மாப்பிள்ளை பின்னாடி நடக்க என் பின்னாடி என் நண்பர் வந்துட்டு இருந்தாரு நான் நின்று விட்டேன். ஏங்க நின்னுட்டீங்க.. என்று கேட்டாரு.

ஹலோ! முதல்ல கால்ல மிதித்து இருக்கிற வேஷ்டிய விடுங்க என்றேன்… ஹி ஹி கவனிக்கலை என்றார்.

நான் கூறினேன் “நல்லவேளை நான் கவனித்து விட்டேன்” என்று 🙂 .

ஆமா! பெண்கள் எல்லாம் எப்படித்தான் பட்டுப் புடவை கட்டுறீங்களோ! யப்பா சாமி! செம சூடு.. மண்டபம் வேற ஆஷ்பெஷ்டாஷ் சீட்… வெயிலு காச்சுது.

பட்டு என்பதால் ஒரே புழுக்கம். எப்படா வேஷ்டியை கழட்டுவோம் என்றாகி விட்டது. என் கல்யாணத்துல கூட இவ்வளோ சிரமப்பட்டதா நினைவில்லை.

மின்சாரம்

மின்சாரப்பிரச்சனைப் பற்றி கூறுவது காந்தி செத்து போயிட்டாரு இல்லை மம்மம் சிங் பேச மாட்டேங்கறாரு என்று சொல்வதைப்போல இருக்கும் என்பதால் சுருக்கமா கூறி விடுகிறேன் 🙂 .

செய்திகளில் எப்படியோ கோபியில் எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லை.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் போகிறது எப்போது வேண்டும் என்றாலும் குறிப்பாக இரவில்.

கிராமத்தில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது. இரவில் பல வீடுகளில் குழந்தைகள் புழுக்கம் கொசுக்கடி தாங்காமல் அழுகிறதாம்.

நான் ஃபேன் இல்லை என்றால் கூட கவலைப்பட மாட்டேன் ஆனால், கொசுக்கடி தொல்லை தாங்க முடியவில்லை.

தேர்வு நேரம் என்று ஒரு நாள் மட்டும் மின்சாரம் போகவில்லை.

ஆஹா! பரவாயில்லையே என்று மகிழ்ச்சியடைந்தால் அடுத்த நாளே வேட்டு வைத்து விட்டார்கள். ரொம்ம்ம்ப நல்லவங்க!

நாளுக்கு நாள் கொசு அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது. எதிலோ படித்தது போல (விகடன் வலை பாயுதே என்று நினைக்கிறேன்) இனி கொசுவை பறவைகள் இனத்தில் சேர்த்து விட வேண்டியது தான் போல இருக்கு 🙂 .

லிக்குவிடேட்டர் மேலேயே கொசு உட்கார்ந்து இந்த பர்ஃபியூம் சரியில்ல என்று சொல்லுது 🙂 .

உணவகம்

சென்ற முறை வந்த போதே உணவகம் அடிக்கும் கொள்ளையைக் கூறி இருந்தேன். இந்த முறை உணவகம் செல்லவே பயம் ஆகி விட்டது.

அண்ணன் கிட்ட என்ன இவ்வளோ விலை என்றால் இது இங்க குறைவு இன்னொரு கடையைக் கூறி அங்கே இதை விட இன்னும் அதிகம் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஒவ்வொருத்தரும் அநியாயத்துக்கு விலை வைத்து இருக்கிறார்கள்.

கூட்டமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

என்னமோ போங்க! போகிற போக்கைப் பார்த்தால் 20 ருபாய் கொடுத்தால் குடித்த தண்ணீருக்கு சரியாப் போச்சு மீதிக்கு எங்கே என்று கேட்பார்கள் போல அட காஃபி 22 ரூபாய்ங்க!

சகாதேவன் மகாதேவன் படத்துல எஸ் வி சேகர் விழிக்கிற மாதிரி ஆகிடுவோம் போல இருக்கு. கடந்த மூன்று வருடங்களில் விலைவாசி கன்னா பின்னாவென்று எகிறி விட்டது.

சீனா

சென்னை விமானநிலையத்திற்கு கால் டாக்சியில் வந்தேன்.

வரும் போது ஓட்டுனருடன் பேசிக்கொண்டு வந்த போது அவருக்கு IT க்கும் கால் சென்டருக்கும் வித்யாசம் புரியாமல் கேட்டுக்கொண்டு இருந்தார் நானும் விளக்கிக்கொண்டு கொண்டு இருந்தேன்.

அதன் பிறகு பேச ஆரம்பிச்சாரு பாருங்க! அடேங்கப்பா ஒரு விஷயம் விடாம எல்லாத்தையும் வெளுத்து வாங்குறாரு.

சார்! இலங்கைகாரன் சீனாவை உள்ளே விட்டுடுவான்னு இந்தியா அவர்களை ஆதரிக்கறாங்க…

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு பண்ணுறாங்க இதை தட்டிக்கேட்க துப்பு இல்லை என்று இது மாதிரி பல விஷயம் அசால்ட்டா பேசுறாரு.

இணையத்தை நோண்டிட்டு இருக்கிற நாம இது பற்றி பேசுறது பெரிய விசயமில்லை இவர்கள் போன்றவர்கள் பேசும் போது நம்மை வாயடைக்க வைத்து விடுகிறார்கள்.

சார்! நான் ஒரு முறை சீனாக்காரங்களைக் கூட்டி வந்தேன்… அவனுக நம்ம இடத்தை எல்லாம் படம் எடுத்துட்டே கிண்டல் பண்ணிட்டு வந்தாங்க.

ஒரு கட்டத்துல இவங்க Stupid Indian னு சொன்னதும் சண்டைக்குப் போயிட்டேன்.

சுடு தண்ணியில் காலை விட்ட மாதிரி எது செய்தாலும் கேட்டாலும் அவசரப்படுத்திட்டே இருக்கானுக! என்று கொந்தளித்து விட்டார்.

இவர் கூறியதை மட்டும் எழுதினால் ஒரு பதிவைத் தாண்டும்.. அவ்வளோ இருக்கு.

மம்மம் சிங் பற்றி இவர் கூறியதைக் கேட்டு என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியல 😀 .

ழத் தமிழர்கள்

ழத் தமிழர்கள் பட்ட வேதனையை வெளியிடப்பட்ட காணொளியில் பார்த்தால் அதன் வலி உங்களுக்குப் புரியும்” என்று மத்திய அரசைப் பார்த்துக் கலைஞர் கூறியிருக்கிறார்.

இவர் ஆட்சியில் இருந்த போது… சரி விடுங்க எத்தனை வாட்டி தான் திட்டறது.

கலைஞரை இந்த விசயத்தில் மன்னிக்கவே மாட்டேன். நீ மன்னித்தால் என்ன மன்னிக்காட்டால் என்ன? என்று கேட்கறீங்களா!

என்னங்க பண்ணுறது எங்க தான் புலம்புறது இதை விட்டால்.

சாலை

கோபியில் சாலை அகலப்படுத்தும் பணி 9.5 கோடியில் நடைபெறுகிறது.

வழக்கம் போல மரத்தை எல்லாம் வெட்டி மொட்டையாக்கி விட்டார்கள், வேறு வழி இல்லை ஆனால் மறுபடியும் வைத்தால் நலம்.

சாலை சும்மா நச்சுனு நாலு லாரி ஒன்றாகப் போகிற அளவிற்கு கலக்கலாக இருக்கு 🙂 .

ஏற்கனவே கோபி பெரிய சாலையைக் கொண்டது தற்போது பட்டாசாக இருக்கிறது. மரம் மீண்டும் வைத்தால் அழகாக இருக்கும்.

சென்னை

சென்னையில் ஒரு நாள் என் நண்பன் வீட்டில் இருந்தேன்.

இவனுடைய திருமணத்தின் போது சிங்கப்பூரில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை அதனால் இந்த முறை திருமண ஆல்பத்தைக் காட்டினான்.

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது கடைசியில் “இனி எல்லாம் சுகமே” என்று போட்டு இருந்தது. இதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தாங்கல.

டேய்! இந்த ஆல்பத்தைச் செய்தவன் நிச்சயம் திருமணம் ஆகாதவனாத்தாண்டா இருப்பான் என்று கூறினேன் 😀 .

இன்னொரு இடத்தில் மனைவியின் படங்களைப் போட்டு “பூவே உனக்காக” என்று இருந்தது.

இங்க “பூவுக்குள் பூகம்பம்” னு போட்டு இருக்கணும் மாற்றி இதைப்போட்டுட்டான் போல என்று கூறியதும்.. விழுந்து விழுந்து சிரிக்கிறான். என்ன கொடுமை சார்.

குறிப்பு: இந்த சமயத்தில் அவனது மனைவி வீட்டில் இல்லை 😉 .

வடா தோசா

நான் கொசுறுப் பகுதியில் “வடா” இந்தியர்களைக் கொஞ்சம்!! காய்ச்சியதில் கமெண்ட் போட்டது கொஞ்சம் பேர் என்றாலும் நேரில் பார்க்கும் மற்றும் தொலைபேசியில் பேசிய நண்பர்கள் எல்லாம் எப்போது இதைப் பற்றி எழுதப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

தற்போது உண்மையிலேயே எனக்கு பயம் வந்து விட்டது. அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு எழுத முடியுமா என்று 🙁 .

தற்போது எழுதினால் பலரும் சமீப வட இந்தியர்கள் பிரச்னையை ஒட்டி எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் கொஞ்சம் தாமதமாக எழுதுகிறேன்.

பாட்ஷா மாதிரி எதிர்பார்த்து பாபா மாதிரி ஆன கதையாக மாறாமல் இருந்தால் சரி.

விடுமுறை

ரு வாரம் விடுமுறை எடுப்பது கூடப் பிரச்சனையில்லை ஆனால் அதன் பிறகு வந்து இருக்கிற பிரச்சனைகளையும் மின்னஞ்சல்களையும் சமாளிக்க வேண்டியது இருக்கே… யப்பா சாமி! முடியல.

இந்தக் கடுப்புலையே கூற நினைத்த பல விசயங்களை மறந்து விட்டேன் அதனால் நினைவு வரும் போது கொசுறு பகுதியில் கூறி விடுகிறேன்.

நம்ம ஊர்ல இருந்தால் எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருக்குங்க.

இந்த முறை சுத்தமாக நேரமில்லை அதனால் நிறைய பேருக்குத் தொலைபேசியில் அழைக்க முடியவில்லை. இதைப் படிக்கும் நண்பர்கள் மன்னித்தருளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

 1. ஒபாமா மற்றும் மன்மோகன் சிங் படம் அருமை. எங்கடா பத்துநாளா பதிவ காணோமேன்னு எதிர்பார்த்து இருந்தேன்.

 2. நாள்காட்டியில் மின் வெட்டு நேரம் வருங்கால தமிழ் நாட்டின் பரிதாப நிலை இதுதானா ……… கிரி அண்ணா

 3. //. நமக்கு சாதா வேஷ்டியே இடுப்புல நிற்காது இதுல பட்டு வேஷ்டி!//

  வேட்டி தான் சரி, வேஷ்டி இல்லை, ஒரு குழு அவர்களின் வாயில் நுழையமல் போன சொற்களையெல்லாம் கந்தல் ஆக்கிய போது வேட்டியை வேஷ்டி என்று விழித்தார்கள், நாமும் அப்படியேதான் எழுதனுமா ? வடையை வடா …..தோசையை தோசா ன்னு அவிங்க சொல்ல அது தான் சரி என்று நாம ஒப்புக் கொள்ளுவோமா ? நான் தூய தமிழில் எழுத வேண்டும் என்று சொல்லவரவில்லை, ஆனால் நமக்கு தெரிந்து தவறு என்று தெரியவருவதைத் தவிர்கலாம். நாமே திருத்திக் கொள்ளாவிட்டால் வெற மொழிக்காரன் வந்து நமக்காக திருத்தமாட்டான் அது அவனுக்கு தேவையும் இல்லாத ஒன்று.

 4. // கடந்த மூன்று வருடங்களில் விலைவாசி கன்னா பின்னாவென்று எகிறி விட்டது.//

  வெளிநாட்டுக்கு போய் வந்தவர்களும், சிறைக்குச் சென்று வந்தவர்களும் விலைவாசி முன்னை விட ஏறிவிட்டது என்பார்களாம், ஏனென்றால் நாட்டு நடப்பின் சீரான ஓட்டம் தெரியாது இல்லையா ?
  🙂

 5. / அதன் பிறகு பேச ஆரம்பிச்சாரு பாருங்க! அடேங்கப்பா ஒரு விஷயம் விடாம எல்லாத்தையும் வெளுத்து வாங்குறாரு. ……..இவர்கள் போன்றவர்கள் பேசும் போது நம்மை வாயடைக்க/

  பல ஓட்டுநர்களிடமிருக்கும் ஒரு நல்ல பழக்கம், தினம் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்க வேண்டி வரும் சமயங்களில் அன்றைய செய்தித்தாள்களை வரிவிடாமல் வாசித்து விடுவது:)! சென்ற வார இறுதியில் ஒரு பஸ் ஓட்டுநர் சிக்னலில் வண்டியை அணைத்து விட்டுக் காத்திருக்க நேர்ந்த வேளையில் மும்முரமாக செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அருகிலேயே எங்கள் வண்டி நின்றிருக்க, ‘அடடா கேமரா எடுத்து வரவில்லையே’ என நினைத்தேன்.
  ————

  பயணக் குறிப்புகள் சுவாரஸ்யம்.

 6. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கோவி கண்ணன் தமிழில் பிழை இல்லாமல் எழுதுகிறேனே அதுவே நான் தமிழுக்கு செய்யும் பெரிய சேவை 😉

  விலைவாசி பற்றி நான் மட்டும் கூறவில்லை நான் சந்தித்தவர்கள் அனைவருமே கூறினார்கள். அதாவது அங்கேயே இருப்பவர்கள் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here