இலந்தை வடை சாப்பிட்டு இருக்கீங்களா? :-)

10
Elantha-Vadai இலந்தை வடை

லகத்திலேயே எந்தப் பண்டத்துக்கும் இல்லாத பெருமை இலந்தை வடை க்கு உண்டு.

இலந்தை வடை

எந்த ஒரு பண்டத்திற்கும் ஒரு சுவை தான் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு இனிப்பு காரம் என்று ஆனால் பல சுவைகளைக் கொண்ட ஒரே பண்டம் இலந்தை வடை மட்டுமே! Image Credit

இலந்தப் பழம் பற்றித் தெரியாதவர்கள் கூட இலந்தப் பழம் பாடலான “இலந்தப் பழம் செக்க சிவந்த பழம் தேனாட்டம் இனிக்கும் பழம்” யை கேட்காமல் இருந்து இருக்க முடியாது.

இந்த பாட்டில் வருகிற மாதிரி வெறும் பழத்தை மட்டும் சாப்பிட்டால் அப்புறம் டாய்லெட்டிற்குள்ளேயே உட்கார்ந்துக்க வேண்டியது தான்.

அட! புடுங்கிக்குங்க, அணை போட்டாலும் தடுக்க முடியாது 🙂 .

கிராமத்து பள்ளிகளின் வெளியே இதைச் சிறிய பாக்கெட்டில் விற்பனை செய்வார்கள். சரம் சரமாக வாங்குவேன்.

வீட்டுல கொடுக்கிற காசெல்லாம் இதுக்கே போகும்.

தற்போது இதுபோல விற்கிறார்களா என்று தெரியவில்லை ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வடையாகச் செய்து விற்பனை செய்கிறார்கள் ஆனால், சுவையில்லை.

இலந்தை வடை செய்வது எப்படி?

முதலில் பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தை தேவைப்படும் அளவு சேர்த்து ஆட்டுக்கல்லில் வைத்து நன்கு இடிக்க வேண்டும்.

இவை நன்கு அரைப்பட்ட பிறகு இலந்தப் பழத்தின் காம்புகளை நீக்கி இதில் கொட்டி கொட்டை அதிகம் உடையாமல் உலக்கை மூலம் இடிக்க வேண்டும்.

இதை ரொம்ப கவனமாகச் செய்ய வேண்டும் இல்லை என்றால் கொட்டை அதிகளவில் உடைந்து விடும். பழம் நன்கு இடிபட்ட பிறகு வெல்லம் அல்லது கருப்பு சக்கரையை சேர்த்து இடிக்க வேண்டும்.

சரியான அளவில் இடிபட்ட பிறகு அதை எடுத்துப் பாத்திரத்தில் வைத்துப் பின் மரக்கூடை அல்லது ஒரு பெரிய தட்டத்தில் வடை போலத் தட்டி வெயிலில் வைத்து விட வேண்டும்.

வெயிலின் அளவைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நன்கு காய்ந்த பிறகு சூப்பர் இலந்தை வடை ரெடி 🙂 .

தனிச்சிறப்பு

உலகத்திலேயே இதற்குத் தான் இப்படியொரு சிறப்பு என்று ஏன் கூறினேன் என்றால் பெருங்காயம் துவர்ப்பு, பச்சை மிளகாய் காரம், கருப்பு சக்கரை இனிப்பு, உப்பு உவர்ப்பு, பழம் புளிப்பு இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

ஆனால், இவை அனைத்தும் சேர்ந்து இது அற்புதமான சுவையைத் தரும்.

இனிப்பு காரம் துவர்ப்பு புளிப்பு என்று அனைத்து சுவையும் இருக்கும். இதைக் கூறும் போதே எனக்கு எச்சில் ஊறுகிறது 🙂 .

இதன் சுவை அனைவருக்கும் பிடித்து விடாது ஒரு சிலருக்கு ரொம்பப் பிடிக்கும் சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ம்ஹீம் சுவையின் அருமை அறியாதவர்கள் 🙂 .

எங்கள் வீட்டில் அனைவருக்குமே ரொம்பப் பிடிக்கும்.

அதிலும் நான் இதற்கு டெர்ரர் ரசிகன். 5 வடை சாப்பிட்டால் நாக்கெல்லாம் உரிந்து விடும் அப்பவும் விடாம ஆ ஊ னு கண்ணுல கண்ணீர் வரச் சாப்பிடுவேன்.

கொட்டை இடிபடக் கூடாது

கொட்டை அதிகம் இடிபட்டு இருந்தால் சப்பி சாப்பிடுவதால் நாக்கில் புண்ணாகி விடும் அதனால் கொட்டை இடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எனக்கும் அக்காவுக்கும் பெரிய சண்டையே நடக்கும். இதனால் ஆளுக்கு இத்தனை வடை என்று அம்மா பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.

பங்குக்கு யாரும் இல்லை

சென்னை வந்தும் சீசன் போது அப்பா கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். அறை நண்பர்களுக்குப் பிடிக்காது அதனால் அப்பாடா! என்று இருக்கும்.

பங்குக்கு எவனும் வரவில்லை என்று 🙂 . இதனுடைய சுவை ஒரு போதை.

சிங்கப்பூர் வந்தும் வருடாவருடம் கூரியர் ல அனுப்பக்கூறி பெற்று இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதைச் செய்ய ஆகும் செலவை விட (செய்யச் செலவு ஒன்றுமில்லை) இதை அனுப்ப ஆகும் செலவு பல மடங்கு இருக்கும்.

கைப்பக்குவம்

இதில் கைப்பக்குவமும் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் முதல் அக்கா செய்தால் செம சுவையாக இருக்கும்.

இலந்தைப்பழம் இரண்டு வகை உள்ளது.

இதில் சிறியதாக உள்ளது தான் சுவையாக இருக்கும் ப்ளம்ஸ் மாதிரி இருப்பது நன்றாக இருக்காது அதில் இப்படி செய்ய முடியாது.

நிறைய இருக்கும் போது ஒரு நாளைக்கு 5, 8 னு சாப்பிடுவேன் எண்ணிக்கை குறைந்து விட்டால் பின் இரண்டு மூன்று என்று மெதுவாகச் சாப்பிடுவேன் இல்லை என்றால் விரைவில் தீர்ந்து விடும் என்று 🙂 .

ஒரு முறை கூட எடுத்த அளவோடு நிறுத்தியதில்லை, ஒன்றோடு நிறுத்தவே முடியாது. போதை மருந்து மாதிரி சாப்பிடக் தோன்றிக்கொண்டே இருக்கும்.

டிவி பார்த்துட்டு சாப்பிட்டால் அதுபாட்டுக்கும் உள்ளே போயிட்டே இருக்கும்.

புதிதாகச் சாப்பிடுகிறவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும் இல்லை என்றால் சிறுகுடல் பெருகுடல் எல்லாம் வெளியே வந்து விடுகிற மாதிரி புடுங்கிரும் 🙂 . பேதி நிற்காது.

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.

தொடர்புடைய கட்டுரை

பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. இந்த ‘ழ’ பிரச்னைல கஷ்டபடுறது நானும்தான். கம்பெனில எல்லாரும் என்ன அஜகேசன் ன்னு குப்டுறாங்க

  2. இப்போ எதுக்கு தேவையில்லாம இலந்தவடையை ஞாபகப்படுத்துறீங்க?

    நியூஸிலாந்து புத்தகத்தின் முன்னுரையின் ஒரு பகுதி பாருங்க.

    //இப்போ சில வருசங்களாக இந்த நாட்டுக்குள்ளே கொண்டுவர்ற பொருட்களுக்கு ஏகப்பட்டக் கட்டுப்பாடு இருக்கு. ஏர்போர்ட்லே ‘நாய்’ நம்ம
    பெட்டிங்களையெல்லாம் வாசனை பிடிச்சு, வேண்டாத சாமான் இருந்தாச் சொல்லிருது. ஆனா அப்ப அவ்வளவு
    கடுமை இல்லை.( இப்பத்தான் முழிச்சுக்கிட்டாங்க போலெ)

    இந்த ஏர்போர்ட் நாய்ன்னதுன் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்துருச்சு. அப்புறமாச் சொல்லலாமுன்னு பார்த்தா…எங்கே?
    ‘மருந்து குடிக்கிறப்ப குரங்கை நினைக்காதே’தான். மனசுக்குள்ளெ உக்காந்துக்கிட்டுப் பிராண்டுது. சொல்லிடறேன்.
    ரரத்த்ரி தூங்கணுமில்லே.

    ஒரு சமயம் நானும் மகளும் சென்னையிலே இருந்து இங்கே தனியா வந்தோம். இலந்தவடை’ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?
    மகளுக்கு அது ரொம்பவே பிடிக்கும். அதை அம்பிகா அப்பளம் டெப்போ லே நிறைய வாங்கி கைப்பையிலே வச்சுக்கிட்டு
    நாலைஞ்சு நாளாத் தின்னுக்கிட்டே இருந்தோம். அதோடயே சிங்கப்பூர் வந்து அங்கேயும் கொஞ்சம் தின்னோம். ரெண்டு நாளு
    அங்கே சுத்தினப்ப, அங்கேயிருக்கற தீனிகளையும் விடலை. ஒருவழியா கிறைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்துட்டோம். ஏற்கெனவே
    நல்லா பேக் செஞ்சிருந்த தீனிகளை ‘டிக்ளேர்’ செஞ்சுறலாம். பிரச்சனையில்லை. பிளேன்லே இருந்து இம்மிகிரேஷன்
    வர்ற வழியெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாத சாமான்கள் இருக்கான்னு பாரு. பிடிச்சுட்டா $10,000 அபராதம்னு
    அறிவிப்பா இருக்குல்லே, அதைப் பார்த்துக்கிட்டே வர்றோம். மகள் சொன்னா, தலையெல்லாம் கலைஞ்சிருக்கு.
    ரெஸ்ட்ரூம்லே தலைவாரணும், சீப்பு தாங்க’ன்னு கேட்டாளா, சீப்பை எடுக்கக் கையை விடறேன், கையோடு வருது
    இலந்தவடை பேக்கெட். பக்காவான பேக் இல்லை. சும்மா பாலித்லீன் பேக். பேரு இல்லை, mfg & exp date ஒண்ணும்
    இல்லை. ச்சின்னதுதான். ரெண்டுலேயும் 12+12 வடை இருக்கு. தூக்கிக் கடாசிடலாம்னா மனசு வருதா. மகள் சொல்றா,
    இங்கே இது கிடைக்காதுல்லே. தெரிஞ்சிருந்தா ப்ளேன்லேயே தின்னுருப்பேன். அதான் நல்லா தூங்கிக்கிட்டு வந்தியேன்னு
    சொல்லிட்டு இப்பத் தின்னுடறயான்னு கேட்டேன். சரின்னாளா, ஆளுக்கு ஒரு பேக்ன்னு அவசர அவசரமாத் தின்னுட்டு
    இமிகிரேஷன் வந்தப்ப, எல்லோரும் போயிட்டு காலியா இருக்கு. நாய் கிட்டே வந்து நின்னுது. ஹேண்ட் பேகைக்
    காமிச்சேனா, மோந்து பார்த்துட்டு என் கையை மெதுவா நக்குச்சு. கொஞ்சம் தடவிக் குடுத்து ‘குட் பாய்’ சொல்லிட்டு
    வெளியே வந்து, பெல்ட்டுலே தனியாச் சுத்திக்கிட்டு இருந்த பெட்டிங்களை எடுத்தோம்.

    எங்களைக் கூட்டிட்டுப் போகவந்த கோபால், இதென்னடா எல்லோரும் வெளியே வந்துட்டாங்க. இவுங்களைக் காணலையேன்னு
    தவிச்சுக்கிட்டு இருந்தாராம்.//

  3. நானும் கிராமத்தில் பொறந்து வளர்ந்தவன்தான் ஆனால் எனக்கு எழந்த வடை சாப்பிட்ட அனுபவம் இல்லை. ஆனால் காட்டு பகுதிக்கு சென்று நிறைய எழந்த பழம் சாப்பிடுவேன். நான் எழந்த வடையை இப்பொழுதான் கேள்வி படுறேன். எங்கள் விழுப்புரம் பகுதியில் இந்த எழந்த வடை பழக்கத்தில் இல்லை போல.

  4. ரொம்ப நல்ல இருக்கு தல பதிவு
    சாப்பிடனும் போல இருக்கு

  5. இலந்தைப் பழம் அதுவும் பள்ளி நாட்களில் சாப்பிட்டிருக்கிறேன். வடை சாப்பிட்டதில்லை.

    உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் பங்கில் கொஞ்சம் எனக்கு கொரியர் செய்யுங்களேன்:)!

  6. ஹஹா… நாமெல்லாம் ஒரே கட்சி கிரி அண்ணா !! நானும் ஊர்ல இருந்து வரும்போதெல்லாம் கடை எலந்தவடை சரம்சரமா வாங்கிட்டு வருவேன். இப்பவும் ஒரு சரம் பாக்கி வெச்சிருக்கேன். மச்சான் கிண்டல் பண்ணுவாரு.. அவரு கெடக்காரு; camphor ஸ்மெல் ன்னு பதிலுக்கு நானும் பழமொழி சொல்லுவேன். முன்னெல்லாம் வெய்யில்காலத்துல எங்க அம்மாயி வீட்லயே வடை செஞ்சு வெப்பாங்க.. காயறதுக்குள்ள காலி பண்ணிருவேன். இப்பத்த கடை எலந்த வடைக்கு எல்லாம் அந்த கரடு முரடு இல்லையே? அவுங்க நைசா அறைக்கறதுனாலையோ என்னமோ?

  7. @அழகேசன் உங்க நிலை பரிதாபம் தான்.

    @துளசி கோபால்.. என்னை விட அதிகமாக சாப்பிடுவீங்க போல இருக்கே 😉

    @கலாமருதன் இது எங்கள் கொங்கு பகுதியில் ரொம்ப பிரபலம்

    @அருண் தனபாலன் நன்றி

    @ராமலக்ஷ்மி நிஜமாகவே இந்த முறை ஊருக்கு வரும் போது அனுப்பலாம் என்று இருந்தேன்.. ஆனால் நேரமில்லாததால் முடியவில்லை ஆனால் நான் மறக்காம எடுத்துட்டு வந்துட்டேன் 🙂

    @பிரதீபா

    உங்க மச்சானுக்கு பிடிக்காம இருப்பதே நல்லது இல்லைனா உங்க கிட்ட பங்குக்கு வந்துடுவாரு 🙂 இவங்க இதை கிரைண்டரில் போட்டு அரைக்கறாங்க அதனால தான் இப்படி இருக்கு. எங்க வீட்டுல உரல் தான். செமையா இருக்கும். இவங்களுக்கு எங்கே தெரியப்போகுது இதனோட அருமை 🙂

  8. “…கிராமத்து பள்ளிகளின் வெளியே இதை சிறிய பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்வார்கள். நானெல்லாம் சரம் சரமாக வாங்குவேன்….”

    நான் உங்க Facebook ஸ்டேடஸ் பார்த்ததுல விஷயம் புரியலை. நான் எதோ வடை பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.

    ஆனா இந்த பதிவை பார்த்ததுக்கு அப்புறமாதான் தெரியுது இந்த ஐட்டம்.

    நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கேன் கிரி. மறந்தே போச்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here