3 (2012) | பர்சனாலிட்டி டிசார்டர்

13
3

ரே ஒரு பாடல் “3” படத்தைப் பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. Image Credit

அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள்.

3

கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார்,

இதனால் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே 3.

3 மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார்.

அவருடைய பாதிப்புப் படம் நெடுக உள்ளது க்ளைமாக்ஸ் வரை. துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் கலந்து கட்டி அடித்தது போல உள்ளது.

முதல் பாதி முழுவதும் இவர்கள் இருவர் பள்ளிக்காதலே வருகிறது முக்கியத்திருப்பங்கள் எதுவும் இல்லாமல் நகர்கிறது. தனுஷுக்கு இந்தக் கதாப்பாத்திரம் சொல்லவே தேவையில்லை அடி தூள் கிளப்புகிறார்.

இவருக்கு துணை சிவ கார்த்திகேயன், டைமிங் காமெடியில் கலக்குகிறார். அவ்வப்போது சந்தானம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

பள்ளி மாணவர்கள்

தனுஷும் ஸ்ருதியும் பள்ளி மாணவர்கள் என்பதை எந்தவித சிரமும் இல்லாமல் ஏற்க அவர்களது உடல்வாகு உதவுகிறது.

ஸ்ருதி கதாப்பாத்திரத்தில் முன்பு வந்தவர் அமலா பால் பின்னர் எதோ கால்ஷீட் பிரச்சனை என்று அவர் இல்லை.

அவர் இருந்து இருந்தாலும் பள்ளி சார்ந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இருப்பது சந்தேகம்.

ஸ்ருதியை சைட் அடிக்கத் தனுஷ் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும் உடன் சிவ கார்த்திகேயன்.

இவரை இடைவேளைக்குப் பிறகு கழட்டி விட்டுவிட்டார்கள் ஆனால் இருக்கும் வரை திரையரங்கம் கலகலத்துக்கொண்டே இருந்தது.

ஸ்ருதி நண்பியாக ஜோடி நம்பர் 1 ல் ஆடிய நேபாளி பெண் என்று நினைக்கிறேன்.

பார்த்தால் அவர் மாதிரி தான் இருந்தார். ஸ்ருதி தங்கச்சியாக வரும் சிறுமி செய்யும் கை அசைவுகள் ரசிக்கும் படி இருக்கும்.

தனுஷ் ஸ்ருதி திருமணம்

உலகத்திலேயே யாருமே செய்து இராத இடத்தில் தனுஷ் ஸ்ருதி திருமணம் நடக்கிறது. இந்தக்காட்சிக்காக எத்தனை பேர் திட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

ரஜினி பொண்ணு இயக்கம் என்பதால் தலைவருக்கும் சேர்ந்து திட்டு விழப்போகிறது 🙂 . ஒய் திஸ் கொலவெறி என்று தெரியவில்லை.

ஸ்ருதியின் திருமணத்தை ஏற்க மறுக்கும் அவரது தந்தையிடம் தனுஷ் பேசும் காட்சிகள் அருமை. ரொம்ப எதார்த்தமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல அவர்கள் தனுஷ் வீட்டிற்கு வரும் போது தனுஷ் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். ஸ்ருதியின் அம்மாவாக ரோகிணி.

பாடல்கள்

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மெகா ஹிட் ஆகி விட்டதால் படத்திலும் பார்க்க நன்றாகவே இருந்தது. கொலவெறி பாடல் எடுக்கப்பட்ட விதம் ரொம்ப சுமாராக இருந்தது.

தனக்கு இந்தப் நோய் உள்ளது என்று தெரிய வரும் போது அவரது நண்பரிடம் (மயக்கம் என்ன படத்தில் நண்பராக வருபவர்) கூறி அழுவது, தன் நண்பனையே அடித்து விட்டு பின் அதற்காக வருந்துவது என்று தனுஷ் நடிக்கப் பல வாய்ப்புகள்.

மச்சான்! நான் பைத்தியமாடா! என்று அப்பாவியாகக் கேட்டு கலங்க வைத்து விடுகிறார்.

தனுஷ் தன் பிரச்னையை ஸ்ருதிக்கு தெரியாமலே சமாளிப்பது என்பதும் நம்பும் படி இல்லை. ஸ்ருதி அழுவதைப் பார்க்கக் கொடுமையாக இருக்கிறது.

ஆனால், அவரது துரதிர்ஷ்டம் அவருக்கு அது போன்ற காட்சிகள் அதிகம் என்பது தான்.

அவர் அழும் போது நாம் நெளிய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளைக் குறைத்து இருக்கலாம் இந்தக்காட்சிகளுக்கு பலர் பொறுமை இழப்பார்கள்.

தனுஷ் அப்பாவாக பிரபு அம்மாவாக பானுப்ரியா.

பிரபு தனுஷிடம் டேய்! நல்லா சாப்பிடுடா உன்னைப் பார்த்தால் யாராவது என் பையன் என்று சொல்லுவாங்களா! என்று நாம் கேட்க நினைத்ததை அவர் கூறி நமக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார் 🙂 .

கோபம்

முகத்தில் கோபத்தை டெர்ரராக காட்டுவதில் ரஜினிக்கு பிறகு நான் தனுஷ் ரசிகன் ஆகி விட்டேன்.

அடேங்கப்பா! என்ன மிரட்டு மிரட்டுகிறார் மயக்கம் என்ன படத்திலேயே கலக்கி இருப்பார் இதிலும் அதே போல் பல வாய்ப்புகள்.

அதிலும் ஒரு சண்டைக் காட்சியில் அவர் அடிக்கும் அடிகள் காட்டும் முக பாவனைகள் சரவெடி தான். அந்தக் காட்சியில் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.

படத்தில் சைக்கலாஜிக்கலாக பல காட்சிகள் வருவதால் அதை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு நம் மக்களுக்கு பொறுமை இருக்காது.

B C சென்டர்களில் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும். தனுஷ் இது போல ஒரே மாதிரி படங்களாக நடிக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது நல்லது.

3 என்பதற்கு அர்த்தம் பள்ளி, கல்லூரி, திருமணம் ஆன பிறகு என்று மூன்று காலங்கள் வருவதால் இருக்கும் என்று நானே முடிவு செய்து கொண்டேன்.

படம் டக்கென்று முடிந்து விட்டது பலர் படம் இன்னும் தொடரும் என்று நினைத்தார்கள் நான் உட்பட.

மயக்கம் என்ன கூட அப்படித்தான் முடியும் ஆனால் அதில் ஒரு அழகு இருந்தது அதற்கே பலர் திட்டினார்கள் இதற்கு!!…

படம் ஹைப்பால் ஓபனிங்கில் வசூல் பார்க்கலாம் மற்றபடி சுமார் ரகம் தான்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

13 COMMENTS

  1. நான் கதையை படிக்கவில்லை. கடைசி வரிகளை வைத்து படம் சுமார் என்று தோன்றுகிறது, பார்க்கலாம்

  2. ரொம்ப நல்ல விமர்சனம். கிட்டத்தட்ட நான் எதிர்பார்த்தது போல தான் படம் இருக்கும் என்று உங்கள் விமர்சனத்தில் இருந்து தெரிகிறது. நீங்கள் பார்த்த தியட்டரில் நானும் திரைப்படம் பார்த்து ரசித்திருக்கிறேன் 🙂
    amas32

  3. கல்யாணத்தை பஸ் ஸ்டாண்ட்
    பொது குளியல் அறை யில் வைத்து நடத்துகிறார்களா

    அல்லது பள்ளிக் கூட ஆய்வு அறையிலா

  4. கோல்டன் தியட்டர் ஒரு டப்பா தியட்டர் மெரினா பாடம் பார்த்தப்ப கொலவெறி ஆகிபோச்சி.அப்பறம் தனுஷ் / செல்வராகவன் பாடம் பாக்றவங்க எல்லாம் ஒரு மாதிரி சைகோ கேரக்டர்னு சொல்லுறது உண்மையா கிரி

  5. கிரி ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க… கண்டிப்பா படத்தை பார்க்கனும்னு போல இருக்கு… மிக்க நன்றி…. விருப்புவெறுப்பற்ற பதிவுக்கு.

  6. விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்கண்ணே…. படம் இந்த வீக் எண்ட் பார்க்கலாம்னு இருக்கேன்…

  7. Giri,

    petrol vilai kuraipai pathi ஒரு கமெண்ட் என்வழி.com la pottu irundheenga. romba arumaiya irundhuchu. Nanum ahey karuthaidhan comment portionla podalamnu irundhen. Ana, neenga pottadhala vittuten.

    rajesh.v

  8. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஆனந்த குமார் (facebook) சிங்கப்பூரில் வியாழக் கிழமையே வெளியாகி விட்டது. நான் வெள்ளிகிழமை தானே எழுதினேன் 🙂

    @வெண்புரவி அருணா (facebook)உங்களுக்கு இந்தக் கதை ஓகே என்றால் செல்லுங்கள் இல்லை என்றால் வேண்டாம்.

    @கமலகண்ணன் என்னை பார்த்தா சைக்கோ மாதிரி தெரியுதா? 🙂 சிங்கப்பூரில் தான் இருக்கிறீர்களா?

    @ராஜேஷ் நன்றி 🙂

  9. கல்யாணம் அப்படி எந்த இடத்தில் நடந்தது கிரி?

  10. ஹ ஹா எதிர்பார்த்தேன் சரி டவுன்லோட் பண்ணிட வேண்டியதுதான்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!