சித்தோடு Tex Valley Market செல்லும் வழியில், “ஒத்தக்குதிரை” என்ற இடத்தில் உள்ள கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் சென்றோம்.
இக்கோவில் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளேன் ஆனால், தற்போது தான் செல்கிறேன்.
கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில்
கோவில் கூட்டம் இல்லாமல் அமைதியாக அழகாக இருந்தது. கோவில் குருக்களும் இன்னொருவரும் மட்டுமே இருந்தார்கள்.
கடவுளை வணங்கி விட்டு அப்படியே கோவிலை வலம் வந்துவிட்டு கிளம்பி விட்டோம். சக்தி வாய்ந்த கடவுள் என்று அம்மா கூறினார்.


அய்யனார் சிலையையும் மரத்தையும் காணொளியாக எடுக்கலாம் என்று நினைத்தேன், அங்கே ஒரு பெண் அமர்ந்து தீவிரமாக யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.
எனவே, காணொளி எடுக்கும் திட்டத்தைக் கை விட்டுவிட்டேன் 🙂 .
கோபி, கவுந்தப்பாடி பகுதியில் உள்ளவர்களுக்குக் கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் பரிச்சியமானதாக இருக்கும். சென்று இராதவர்கள் செல்ல முயற்சிக்கலாம்.
எளிமையான, கூட்டமில்லாத கோவில்கள் எப்போதுமே மனதுக்கு அமைதியையும், திருப்தியையும் அளிப்பவை. முயற்சித்துப்பாருங்கள், உணவீர்கள்.
கொசுறு

கோமாளிக்கரை
இக்கோவிலில் இருந்து தொடர்ந்தால் கோமாளிக்கரை என்ற இடத்தில் ஒரு கோவில் உள்ளது. புதுப்பிப்பு பணி நடைபெறுவதால், சாமி சிலை வேறு இடத்தில் உள்ளது.
கோமாளிக்கரை கோவில் செல்லும் வழியில் மிகப்பெரிய குளத்தைத் தூர்வாரி சீரமைத்துக்கொண்டு உள்ளார்கள். உண்மையாகவே மிகப்பெரிய குளம் தான் 🙂 .
படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். ஆற்றுத் தண்ணீர் வந்தால் நிரம்பும் என்றார்கள். பல இடங்களில் இருந்து பறவைகள் இங்கே வந்து இடமே ரொம்ப ரம்யமாக, அழகாக இருக்கும் என்றார்கள்.
தற்போது தண்ணீர் இல்லாமல் மொட்டையாக உள்ளது. இன்னும் தூர்வாரும் பணி முடியவில்லை. குளத்தில் தண்ணீர் நிரம்பினால் கடல் போலக் காட்சி அளிக்கும்.
தண்ணீர் நிரம்பினால் அவசியம் இங்கே வந்து பார்க்கணும் 🙂 .
தொடர்புடைய கட்டுரை
புகைப்படங்கள் என்னுடைய கடந்த கால பக்கங்களை புரட்ட வைக்கிறது.. அழகி படமெடுத்த இடம், நான் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில்.. இந்த படங்கள் என்னை பல நாட்கள் பின்னோக்கி செல்ல வைக்கிறது.. நண்பர் சக்திக்கு கோவில் என்றாலே தனி விருப்பம்.. நிறைய கோவில்களுக்கு அவர் செல்வதுண்டு… (தற்போதும்)… கோவையில் ஒன்றாக பணிபுரிந்த சமயத்தில் நானும் சில நேரம் அவருடன் செல்வதுண்டு… “பயணம்” என்ற ஒற்றை வார்த்தை தான் எங்கள் நட்பினை இன்னும் இறுக்க வைத்தது.. அந்த நாட்கள் அழகானவை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
பண்ணாரி கோவில் நீங்க போனதை ஒருமுறை கூறி இருக்கீங்க என்று நினைக்கிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🙂
தோழா trangle,memento போல வேறு ஏதாவது குழப்பமான சுத்தி அதே திரும்ப நடக்குற மாதிரியான படங்கள் இருந்தால் movie name list ஐ தரவும் நான் பார்த்த இரு படங்களும் செம்ம பொழுது போகாவிடடால் இப்படியான படங்கள் பார்க்கலாம்.
நண்பா உங்களிடம் திரைப்படங்கள் பற்றி comment ல் கலந்துரையாடுவதில் தவரில்லையே?
கிரி, பண்ணாரி மட்டுமல்ல!!! மேலும் சில கோவில்களுக்கும் சென்றுள்ளேன் நண்பர் சக்தியுடன்.. வாழ்த்துக்களுக்கு நன்றி..
@pratheeoan தேடி பார்த்துட்டு சொல்றேன்.. தற்போதைக்கு இவற்றை முயற்சித்து பாருங்கள்
Ee adutha kalathu மலையாள படம். செம்மையா இருக்கும். குழப்பமாக இருக்கும் ஆனால், இறுதியில் தெளிவாக முடித்து இருப்பார்கள்.
Mumbai Police இதுவும் மலையாள படம். கடைசியில் இது யார் செய்தது என்று தெரிய வரும். நல்லா இருக்கும்.
Lucia பாருங்க.
திரைப்படம் தொடர்பான பதிவில் கேட்டால், இன்னும் பலருக்கு பயனாக இருக்கும். மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள். இதில் திரைப்படம் தொடர்பான நபர்கள் பார்வைக்கு செல்லாது.
@யாசின் ஊருக்கு வாங்க நாம போவோம் 🙂