கமர்சியல் திரைப்படங்கள் மக்களை கவர்வது ஏன்?

24
கமர்சியல் திரைப்படங்கள் மக்களை கவர்வது ஏன்

திரைப்படங்கள் என்றாலே பொழுது போக்குக்குத்தான் என்றாலும் தற்போது கமர்சியல் திரைப்படங்கள் தான் பொழுதுபோக்கு படங்கள் என்றாகி விட்டது.

கமர்சியல் திரைப்படங்கள்

சிறந்த படங்கள் என்றால், நல்ல கதையம்சம், மாறுபட்ட நடிப்பு என்ற பிரிவில் வருபவைகளாகி விட்டன. Image Credit

எனவே, பொழுதுபோக்கு படங்களில் நடிப்பவர்களை ஒரு பிரிவினராகவும் கலைப்படங்களை தருபவர்களை ஒரு பிரிவினராகவும் பிரித்துக்கொண்டனர்.

இவ்வாறு அனைத்து மக்களும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமர்சியல் திரைப்படங்கள் ஏன் அதிகம் வெற்றி பெறுகின்றன?

இங்கு எந்த ஒரு விசயத்திற்கும் கடும் போட்டி நிலவுகிறது. எதைப் பெற வேண்டும் என்றாலும் பெரிய வரிசை அதற்கு இருக்கும்.

காலையில் அலுவலகத்திற்கு செல்லத் தயாராகும் போது சரியான அளவில் தண்ணீர் வருமா?! என்ற அளவிலே நமது வாழ்க்கை போராட்டம் துவங்கி விடுகிறது.

அதன் பிறகு மின்சாரம் இல்லாத அவஸ்தை. எனவே, அதற்குத் தகுந்த மாதிரி முந்தைய இரவே அனைத்தும் தயார் செய்ய வேண்டிய நிலை.

பின் பேருந்தில் கூட்டம் அதில் அடித்துப் பிடித்து அலுவலகம். அங்கு வேலை பின் திரும்பப் பேருந்து கூட்டத்தில் சிக்கி நசுங்கி ஒரு வழியாக வீடு வந்தால் மேலும் பிரச்சனைகள். இது போல ஒரு வாழ்க்கை தான் ஒரு சராசரி குடிமகனுக்குத் தினமும்.

தினமும் வாழ்க்கை என்பதே பெரும் போராட்டமாகத்தான் உள்ளது.

பிரச்சனை என்பது பொதுவாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். மின்சாரம், தண்ணீர், பேருந்து, சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகள்.

இது எதோ ஒரு நாளில் நடக்கும் பிரச்சனை அல்ல. தினம் தினம் ஒரு சராசரி குடிமகன் சந்திக்கும் பிரச்சனைகள்.

எனவே, அவனால் மெதுவாகச் செல்லும், கண்ணீர் அதிகமுள்ள, சோகமான படத்தை ரசிக்கும் மன நிலையில் இருப்பதில்லை.

அவனுக்குத்தேவை கிடைத்த கொஞ்ச நேரத்தை மகிழ்வுடன் கழிக்க வேண்டும். எனவே, தான் பார்க்கும் திரைப்படங்களில் அதை எதிர்பார்க்கிறான்.

வீட்டுல வெளியில தான் ஆயிரம் பிரச்சனை சண்டை, திரைப்படம் சென்றும் அங்கேயும் அழுகை சோகம் பிரச்சனை என்பதை பார்க்க அவன் விரும்பவில்லை.

எனவே, அதில் லாஜிக் இருக்கிறதா கதை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கத் தோன்றுவதில்லை. அவன் எதிர்பார்ப்பு, திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும் படம் பார்க்கும் போது போர் அடிக்கக் கூடாது அவ்வளவு தான்.

அதற்காகக் கண்டபடி எடுக்கும் படங்கள் தோல்வி அடைந்தே வருகின்றன என்பதையும் அறிவீர்கள்.

எப்படி எடுத்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்த படங்கள் பல வந்த வேகத்தில் பெட்டிக்குத் திரும்பிச் செல்கிறது.

பல பெரிய கமர்சியல் கதாநாயகர்கள் நடித்த படங்களே தோல்வி அடைந்தது இதற்குச் சாட்சி. மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

கலை அம்சமுள்ள படங்கள் வெற்றி அடைய முடியாதா?

கண்டிப்பாக முடியும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக எத்தனையோ படங்களைக் கூறலாம்.

ஆனால், அது எதார்த்தமான படமாக இருந்தாலும் திரைக்கதை சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அதைச் சரியாகச் செய்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு சில படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் வேகமான திரைக்கதையை கொடுக்க முடியாது அதைப்போலப் படங்கள் தவிர்க்க முடியாமல் தோல்வி அடைகின்றன.

இப்படங்கள் தோல்வி அடைய கமர்சியல் படங்களை ரசிப்பவர்களே காரணமா?

கண்டிப்பாக இல்லை.

நல்ல கதையம்சம் பொருந்திய படங்களைப் பாராட்டுபவர்கள், பரிந்து பேசுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால், அவர்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள்.

நல்ல படங்கள் வருவதில்லை! மக்களுக்கு ரசனையில்லை! கலையை ரசிக்கத் தெரியவில்லை! இப்படி முட்டாளாக ரசனை கெட்ட ஜென்மங்களாக இருக்கிறார்களே!‘ என்று கூறுபவர்கள் இவ்வகை படங்களைத் திரையரங்கு சென்று பார்ப்பதில்லை.

நல்ல படம் என்று பெரும்பாலனவர்கள் கூறும் படத்தைப் பார்க்காமலே, நல்ல படம் வருவதில்லை என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

ஏன்யா! இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன் நீ திரையரங்கும் வந்து படம் பார்க்க மாட்டே! ஆனால், நல்ல படம் வர வேண்டும் என்றும் சொல்லுவே!

அப்ப படம் எடுக்கிற தயாரிப்பாளர் என்ன இளிச்சவாயனா! உன்னோட பாராட்டை வைத்து ஒரு தயாரிப்பாளர் ஒரு தலைவலித் தைலம் கூட வாங்க முடியாதே!

நல்ல படங்கள்

தற்போது நல்ல படங்கள் என்று பெரும்பாலனவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசங்க, அங்காடித்தெரு, நான்கடவுள், பேராண்மை, நாடோடிகள், சுப்ரமணியபுரம்.

மதராசப்பட்டிணம், மைனா போன்ற படங்களை ஓட வைத்தவர்கள் நல்ல படம் வருவதில்லை என்று கூப்பாடு போடுபவர்கள் கிண்டலடிக்கும் “கமர்சியல் படங்களை ரசிப்பவர்கள் தான்”.

இவர்களுக்குக் கமர்சியல் படங்களையும் ரசிக்கத்தெரியும் இதைப்போல “நல்ல” படங்களையும் ரசிக்கத்தெரியும்.

நல்ல படங்களை ஆதரிக்காமல் வெறும் வாய்ச்சவடால் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி நல்ல படங்கள் வரும்!

வரும் நல்ல படங்களை ஆதரிக்க வேண்டும் ஆனால், இதைப்போலப் பேசுபவர்கள் நல்ல படம் வரவில்லை வரவில்லை என்று கூப்பாடு தான் போடுகிறார்களே தவிர படங்களைப் பார்த்து ஆதரவு தர மாட்டார்கள்.

இவர்களின் வெட்டிப்பேச்சை வைத்து அந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர் என்ன செய்வது? இவர்களே பார்க்காத போது.

நானும் கமர்சியல் படங்களின் ரசிகன் தான் ஆனாலும், நல்ல படங்கள் என்று அனைவராலும் கூறப்படும் படங்களைப் பார்க்கத் தவறுவதில்லை.

நான் எழுதிய விமர்சனங்களில் பல நல்ல படங்களும் அடங்கும்.

நல்ல படங்கள் என்று அனைவராலும் கூறப்படுவையை என்றும் பாராட்டத்தவறுவதில்லை.

நம்ம ஊரில் நல்ல படங்கள் என்றால் ஒரு சிலருக்கு வெளிநாட்டுப்படங்கள் தான்.

என்னதான் நம்மவர்கள் நல்ல படங்களைக் கொடுத்தாலும் ஏதாவது நொள்ளை நொட்டை என்று கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இவர்களைப்போல இருப்பவர்களை என்றும் மாற்ற முடியாது. இப்படியே குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள்.

அனைத்து படங்களையும் எப்போது ரசிப்பார்கள்?

இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். மக்களின் வாழ்க்கை முறை மாற வேண்டும், சிந்தனைகள் மாற வேண்டும்.

காலம் காலமாக இருக்கும் மக்களின் எண்ணங்கள்.

இவை அனைத்தும் நாலு ஆங்கிலப்படங்களை பார்த்து விட்டு இங்கே வந்து ரசனை இல்லை மக்கள் சரி இல்லை என்று அனைவரையும் திட்டுவதால் எந்தப்பயனுமில்லை.

இவை எல்லாம் உடனே நடக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களைத் திட்டுவதால் எந்தப்பயனுமில்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

 1. கிரியார்
  திரைப்படங்கள் பொறுத்த வரை ,இரண்டு விஷயங்கள் இருக்குது ஒன்னு -தனிப்பட்ட ரசனை ,இன்னொன்னு கூட்டு ரசனை ,கலை படங்கள் பொதுவாக -தனியாக சென்று பார்க்கப்படுகின்றன ,அதனால் கூட பெரிய வருவாய் ஈட்டுவதில்லை என்று சொல்லலாம் ,மேலும் என்தோ ஒரு படமும் நம் ஊரில் ஓட நேடிவிடி முக்கியம்,பாத்திரங்களும்,சூழலும் ஒரு ரசிகனுக்கு வாழ்க்கையில் தொடர்பு ஏற்ப்படுத்தினால் போதும் ..முன்பை விட இப்பொழுது காலம் மாறிக்கிட்டு இருக்கு ,இனி வரும் காலங்களில் மக்கள் எல்லாரிடமும் வித்தியாசத்தை எதிர்ப்பாப்பங்க

 2. அருமை நண்பரே,

  //கமர்சியல் திரைப்படங்களே ஏன் மக்களை அதிகம் கவர்கின்றன?//
  நல்ல ஒரு விரிவான அலசல் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்

  //இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். மக்களின் வாழ்க்கை முறை மாறவேண்டும், சிந்தனைகள் மாற வேண்டும். காலம் காலமாக இருக்கும் மக்களின் எண்ணங்கள் இவை அனைத்தும் நாலு ஆங்கிலப்படங்களை பார்த்து விட்டு இங்கே வந்து ரசனை இல்லை மக்கள் சரி இல்லை என்று அனைவரையும் திட்டுவதால் எந்தப்பயனுமில்லை. இவை எல்லாம் உடனே நடக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களை திட்டுவதால் எந்தப்பயனுமில்லை.//

  நல்ல ஒரு தொலைநோக்குப்பார்வையுடன் மிகச் சரியான கருத்து

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  நன்றி
  நட்புடன்
  மாணவன்

 3. நான் இப்போதுதான் தொடங்கி பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளேன் நண்பரே,

  உங்களைப்போன்ற பதிவுலக ஆசான்கள் வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமாய் அமைந்து எழுத்துக்களையும் வளப்படுத்தும்.

  நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்
  http://urssimbu.blogspot.com/

  நன்றி
  நட்புடன்
  மாணவன்

 4. ////என்னுடைய நண்பன் தமிழ்ப் படங்களையே பார்க்க மாட்டான் கேட்டால் நல்ல படமே வருவதில்லை என்பான்! நான் நல்ல படங்களின் பட்டியலைக் கூறினால் பார்க்கவில்லை என்பான். இவனைப்போல நல்ல படங்களை ஆதரிக்காமல் வெறும் வாய்ச்சவடால் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி நல்ல படங்கள் வரும்!////

  ……. சரியான பாயிண்ட்…… உண்மைதான்!

 5. “”””””இந்த மாதிரி திரையரங்கில் பேசுறவன் வாயில லக்ஷ்மி வெடிய கொளுத்தி போடலாம்னு ஆத்திரமா வருது.””””

  தலைவா சொல்லிட்டீங்கல்ல அவன் வாயில அனுகூந்தே போற்றுவோம்….. எனக்கும் பிடிக்காதது இந்த செயல்……

  நானும் திருட்டு டி‌வி‌டி பார்ட்டி தான் அண்ணாச்சி… இங்க நீங்க சொன்னதுபோல படம் பார்க்க வாய்ப்புகள் இல்லை….

  நாளைக்கு தோலில்நுட்ப பதிவு தானே?????

 6. தல அஜித் கூட கிரீடம் என்று ஒரு நல்ல படத்தில் நடித்தார் ஆனால் வரவேற்பு இல்லாயே அன்னாசி…. நான் நினைக்கிறேன் நல்ல கதை/கலை அம்ச படங்கள் இன்றைய சூல்நிலையில் முன்னணி நாயகர்களுக்கு செட் ஆகாதோ??

  இப்போ வெற்றி அடைந்த படங்களின் வரிசையை பார்த்தால், ஆர்யா தவிர அனைவருமே புது முகம் தானே அண்ணாச்சி…

 7. கிரி எத்தன பேர் “தமிழ் மணம்” வோட்டு பட்டய காணொம்னு தேடிட்டு இருக்கோம்?? ஜனநாயக கடமையை ஆற்ற விடுங்கப்பா..

 8. சில படங்களை பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே சில பேர் பயங்கர மொக்கை அப்படி இப்படி நு சொல்லி/விமர்சனம் போட்டு மனசுல நெகட்டிவ் எண்ணத்தை உண்டு பண்ணிவிடுகிறார்கள்…. அதனால அவுங்கள போட்டு thallanum mothalla…

 9. கொளுத்தி போடணும்னு முடிவு பண்ணியாச்சு இல்ல…அப்புறம் ஏன் லஷ்மி வெடியோட நின்னுட்டீங்க…

  நல்ல அணுகுண்டா நாலு கொளுத்தி போடுங்க….

 10. அற்புதமான பதிவு 🙂 வழக்கம் போல !!!! இந்த மாதிரி ஓவர் பீலா விடும் பார்டிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது !!!!

  இன்னொரு விஷயம் 🙂 தங்களிடம் முன்பே கூறியதை போல, தங்களின் பாதையில் நானும் பதிவெழுத ஆரமித்து விட்டேன்… நானும் என் நண்பனும் இனைந்து மொக்கை போட தொடங்கியுள்ளோம்

  http://koffee-break.blogspot.com/

  உங்க பிரேக் ல வந்துட்டு போங்க

 11. தெளிவாக அலசியுள்ளீர்கள், அதிலும்

  //இங்கே வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் பதிவுலக அதிமேதாவிகளைக் கேளுங்கள்! பாதிப்பேர் திருட்டு DVD கோஷ்டியாகத்தான் தான் இருக்கும் (திரையரங்கில் பார்க்க வழியில்லாதவர்கள் தவிர்த்து) இல்லை நல்ல படம் என்று பெரும்பாலனவர்கள் கூறும் படத்தை பார்க்காமலே நல்ல படம் வருவதில்லை என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஏன்யா! இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன் நீ திரையரங்கும் வந்து படம் பார்க்க மாட்டே! ஆனால் நல்ல படம் வர வேண்டும் என்றும் சொல்லுவே! அப்ப படம் எடுக்கிற தயாரிப்பாளர் என்ன இளிச்சவாயனா! உன்னோட பாராட்டை வைத்து ஒரு தயாரிப்பாளர் ஒரு தலைவலித் தைலம் கூட வாங்க முடியாதே!//

  இது டாப்பு.

  நான் பல படங்களுக்கு //(திரையரங்கில் பார்க்க வழியில்லாதவர்கள் தவிர்த்து)// இந்த லிஸ்டில்தான் சேருவேன் 🙂

 12. நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை கிரி…
  நீங்க இந்த வார தமிழ்மண நட்சத்திரம் ஆனது உங்களுக்கு சந்தோசமோ / புடிக்குதோ இல்லையோ, எங்களுக்கு இந்த ஒரு வாரமாவது தினம் ஒரு பதிவும் வரப் போவது உறுதி ஆகி விட்டது…

  தொடர்ந்து எழுதுங்கள்…

 13. /(பெரும்பாலான
  கிராமங்களில் சிறு நகரங்களில்
  காலை 7 மணி முதல் 9
  மணி வரை மின்சாரம் இல்லாமல்
  இருந்தது)/

  **
  இப்பவும் எங்க ஊர்ல காலை
  6 -8 மின்தடை தான். பதிவு அருமை giri sir.

 14. கொடுமை கொடுமைன்னு மன சாந்திக்கு ஒரு படம் பாக்க போனா அங்க இவங்க கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுனா எப்படிலா படம் பார்க்க முடியும்.

  எதோ மனசு சந்தோஷ படும் படி கொஞ்சம் கமர்சியலா இருந்தா மனசு ஆறுதல் படும் அதான் காரணம்.

 15. //அனைவரும் வடிவேல் காமெடி நன்றாக உள்ளதாக கூறி இருந்தார்கள் ஏனோ என்னை அவ்வளவாக கவரவில்லை//

  சேம் ப்ளட் 🙂

 16. ஆமாண்ணே !!!

  படத்த அனுபவிங்கடான்னா என்னமோ அப்துல் கலாம் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ணீட்டு …… இந்த களை(!!) உலக விமர்சகர்கள் தொல்ல தாங்க முடியல !!!! விழுப்புரம் பஸ்சுல வித் அவுட் ல போய் படம் பாத்தவனேல்லாம் விமர்சகனாம் !!!

 17. சுனில், மாணவன், சித்ரா, RK, தேவராஜன், கோபி, ராமலக்ஷ்மி, ஸ்ரீநிவாஸ், ஜீவதர்ஷன், ஜோ, தினேஷ், Mrs கிருஷ்ணன், சிங்கக்குட்டி, முத்துலட்சுமி மற்றும் ராஜ் வருகைக்கு நன்றி

  @சுனில் நீங்கள் கூறியது போல இனி வரும் காலங்களில் வித்யாசத்தை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

  @மாணவன் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன்.

  @RK தொழில்நுட்ப பதிவு இல்ல. விவகாரமான பதிவு 🙂

  முன்னணி நடிகர்களுக்கு கலை அம்சம் படம் செட் ஆகாது ஆனால் எடுக்கும் விதத்தில் எடுத்தால் செட் ஆகும்

  தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நான் நிறுவவில்லை. எனக்கு யாரும் ஓட்டே இதில் போடுவதில்லை 🙂 அதனால் அதை வைத்து அவசியமில்லாமல் தளத்தின் வேகத்தை எதற்கு குறைக்க வேண்டும் என்று இணைக்காமல் விட்டு விட்டேன். இன்டிலியில் தான் எனக்கு ஒட்டு வரும்.

  அப்புறம் நீங்கள் ஒரு படம் போகும் போது எந்த விமர்சனமும் படிக்காமல் செல்லுங்கள்.

  @தேவராஜன் அதற்கு காரணம் இவர் ஒரு படத்தை சுட்டு எடுத்து விட்டு அதற்க்கு ஒரு நன்றி கூட கூறாமல் தன்னுடைய படம் என்று கதை விட்டுக்கொண்டு இருக்கிறார். ஒரு நன்றி தெரிவித்து இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. அப்புறம் ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கண்ணோட்டம். பெரும்பான்மையானவர்களுக்கு பிடித்து இருந்தால் ஓகே அவ்வளோ தான்.

  @கோபி 🙂

  @ஸ்ரீநிவாஸ் அப்படியா! ரைட்டு வந்துடுவோம். வாழ்த்துக்கள் 🙂

  @தினேஷ் 🙂 நன்றி

  @சிங்கக்குட்டி ஓகே லா! 🙂

  @ராஜ் டேய்! நாராயணா இந்த விமர்சனம் பண்ணுறவங்க தொல்லை தாங்க முடியலடா! 😀

 18. ஏன்யா! இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன் நீ திரையரங்கும் வந்து படம் பார்க்க மாட்டே! ஆனால் நல்ல படம் வர வேண்டும் என்றும் சொல்லுவே! அப்ப படம் எடுக்கிற தயாரிப்பாளர் என்ன இளிச்சவாயனா! உன்னோட பாராட்டை வைத்து ஒரு தயாரிப்பாளர் ஒரு தலைவலித் தைலம் கூட வாங்க முடியாதே

  super giri

  good post

 19. //தயாரிப்பு குஷ்பூ.. அதனால் தான் சுந்தர் C ஒழுங்காக செய்து இருக்காரோ!//

  அவங்க தமிழ்நாட்டு தெய்வமுங்க… அப்படித்தானே பண்ணியாவனும்?

 20. கிரி நீங்கள் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். ரஜினி மக்கள் ரசிக்க ஸ்டைல் மற்றும் லாஜிக் இல்லாத நடிப்பை கொடுக்கிறார். ஆனால் கமல்ஹாசன் எப்போதும் மக்கள் மனதில் புரியும்படி நடித்ததில்லை. அவர் மேல் நீங்கள் எப்படி respect வைத்தீர்கள்? அவர் (கமல்) commercial படத்தில் நடிதல்லும் ஆர்ட் filmil நடித்தாலும் அவர் நடிப்பு மற்றும் editing portion எப்போதும் குழப்பம், ரஜினி commercial மற்றும் நல்ல படங்களில் நடித்தால் அதை புரிந்து கொண்டு மக்கள் விமர்சனம் செய்ய எளிதாக இருக்கும். ஆகவே மக்கள் நடிகர் ரஜினி. குழப்ப நடிகர் கமல். மிக திறமையான நடிகர் திலகம் கூட மக்கள் பாராட்டு தான் award என்று கூறும்போது இந்த சுண்டைகாய் கமல் ஒன்றும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here