தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்

44
தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்

ரமான தமிழ்ப் படங்கள் வருகின்றன என்று மகிழ்ச்சியடைந்தால் அது வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்ட கதை காட்சி இசை என்று உடனே கூறி விடுகிறார்கள். தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம் சென்று கொண்டுள்ளது. Image Credit

இவர்களை நம்பி ஒரு படத்தைப் பாராட்டி எழுத முடியவில்லை. எழுதிய நம்மை இளிச்சவாயன் ஆக்கி விடுகிறார்கள்.

தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்

நல்ல படங்களைக் காபி அடித்து எடுப்பது தவறில்லை நல்ல படங்கள் கிடைத்தால் போதும்! என்று கூறுபவர்கள் ஒரு சாராரும் இல்லை அது தவறு என்று கூறுபவர்கள் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இதில் நான் இரண்டாவது வகை.

முன்பு வெளிநாட்டுப்படங்களை பார்க்க வாய்ப்புக் குறைவு திரையரங்களிலும் மிகப் பிரபலமான படங்களை மட்டுமே வெளியிடுவார்கள். சிலர் மட்டும் இந்தப்படங்களை VCD ல் பார்த்து வந்தனர் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

இணையம் பிரபலமான பிறகு மிக மிக எளிதாகத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்து விடுகிறார்கள். நகரங்களில் திரையரங்குகளும் அதிகளவில் வெளிநாட்டுப்படங்களை திரையிட ஆரம்பித்து விட்டனர்.

தற்போதெல்லாம் வெளிநாட்டுத்திரைப்படங்களை பலர் விரல் நுனியில் வைத்து இருக்கிறார்கள் அதே போலத் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனால் முன்பு போல வெளிநாட்டுப்படத்தை சுட்டு கதையோ காட்சியில் இசையோ இருந்தால் உடனே கண்டு பிடித்துவிடுகிறார்கள்.

இதனால் இத்தனை நாட்களாகச் சுட்டுப் படமெடுத்துக்கொண்டு இருந்தவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது.

முன்பு ஒன்று இரண்டு பேர் இதைச் செய்து கொண்டு இருந்ததால் பெரிய விசயமாகத் தெரியவில்லை ஆனால், வருகிற பெரும்பாலான படங்கள் சுட்ட கதை, காட்சி, இசையாகவே இருக்கிறது. உண்மையாகவே வெறுத்துப்போய் விட்டேன்.

நந்தலாலா

இதைவிடக்கொடுமை கதையே சுட்ட கதை, காட்சியாக இருக்கும் ஆனால் இவர்கள் என்னமோ இவங்களே கஷ்டப்பட்டு யோசித்து மூளையை கசக்கி உருவாக்கிய கதை மாதிரி பில்டப் கொடுப்பார்கள் பாருங்கள்..!

யப்பா.. வருகிற கொலைவெறி கொஞ்ச நஞ்சமல்ல. எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இதைப்போல இவர்களால் செய்ய முடிகிறதோ!

நந்தலாலா அட்டக்காப்பி படம். இந்த மிஸ்கின் என்னமோ இவரே யோசித்த கதை மாதிரி பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்புறம் எல்லோரும் போட்டு நொக்கியவுடன் தான் வழிக்கு வந்தார்.

இவருடைய அஞ்சாதே படம் அருமையான படம் இன்று வரை எனக்கு ரொம்பப் பிடித்த படங்களில் இந்தப்படம் உண்டு. அஞ்சாதே என்ற நல்ல படத்தைக் கொடுத்ததற்காக இவர் சுட்ட நந்தலாலா சரி என்று ஆகி விடுமா!

கமல் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு அவருடைய நடிப்பு மீது என்றும் எனக்கு மதிப்புண்டு. கமல் நடித்த பல படங்கள் வெளிநாட்டுப்படங்கள் காபி என்று தெரிந்த போது கடுப்பாகவே இருந்தது.

முன்பு வெகு சில படங்களே காபி என்று நினைத்து இருந்தேன் பின் தான் சமீப வருடங்களில் வந்த பெரும்பாலான படங்கள் காபி என்று அறிந்தேன்.

அதிலும் சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில் வரும் நீலவானம் பாடல் காட்சி கூட காபி என்ற அறிந்த போது உண்மையாகவே கமல் மீதான மதிப்பு பெருமளவில் குறைந்து விட்டது.

இவருடைய அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், மகளிர் மட்டும், தெனாலி என்று ஏகப்பட்ட படங்கள் சுட்டப் படங்களே.

காலம் மாற மாறத் தற்போது காபியை நல்ல படம் என்று ஏற்றுக்கொள்ளும் மக்களைப்போல வரும் தலைமுறைகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அவர்கள் தற்போது போலச் சென்டிமென்ட் எல்லாம் பார்க்க மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத்தான் பேசுவார்கள்.

Derailed

Memento ஆங்கிலப்படத்தின் காட்சிகளை வைத்துக் கஜினி, Derailed என்ற படத்தை மொத்தமாகச் சுட்டு பச்சைக்கிளி முத்துச்சரம், அந்நியன் படத்தில் வரும் தண்டனை முறைகள்.

அசல் படத்தில் அஜித் துப்பாக்கியை வேகமாக அசெம்பல் செய்யும் காட்சி, எந்திரனில் சில ரோபோ காட்சிகள் என்று இதைப்போல ஏகப்பட்ட படங்கள் காட்சிகள் திருடப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்ட விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் யோஹன்: அத்தியாயம் ஒன்று படப் போஸ்டர் கூடக் காபி.

நல்ல படங்கள் வர வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமாக இருக்கும் ஆனால், அது உண்மையான சொந்த முயற்சிப் படமாக இருந்தால் நமக்கும் பெருமையாக இருக்கும்.

தற்போது தமிழ்படங்கள் வெளிநாடுகளில் அதிக வரவேற்ப்பை பெறுகிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இதைப்போலத் தருணங்களில் காபி அடிக்கப்பட்ட படங்களைப் பற்றிய விஷயம் இன்னும் பலருக்குப் போய்ச்சேரும்.

இதைக்காணும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்… தமிழ்ப் படம் என்றாலே காபி என்று நினைக்க மாட்டார்களா!

நம்ம படத்தைச் சுட்டு நமக்கே இவனுக படம் காட்டுறானுக என்று எண்ண மாட்டார்களா!

என்ன தான் சுட்ட படம் நல்ல படமாக வந்தாலும் அது காலம் இருக்கும் வரை திருட்டுப்படம் என்றே கூறப்படும். உண்மையான உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையே என்றும் நிரந்தரம்.

Oscar

தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சானை அழைத்ததால் பெரிய அளவில் அந்தப்படத்திற்கு விளம்பரம் கிடைத்தது. அதுவே ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு வினையாகிப்போனது.

Oscar என்ற பெயருக்குக் காபி ரைட் பெற்று இருக்கிறோம் அதனால் இந்தப்பெயரை தொடர்ந்து பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று நிஜ ஆஸ்கார் மிரட்டியவுடன் தன்னுடைய நிறுவனப் பெயரை மாற்றி Aascar என்று வைத்து விட்டார்.

இதை எதற்குக் கூறுகிறேன் என்றால் நம் தவறு தெரியாதவரை நமக்குப் பிரச்சனை இல்லை தெரிந்தால் இதைப்போல நிலை தான்.

தற்போது நமது படம் பற்றி வெளிநாட்டில் அவ்வளவாகத் தெரியவில்லை அதனால் யாரும் எதுவும் கூறவில்லை நாளையும் இதே போல நிலை இருக்காது. சுட்டு படமெடுத்தால் இதைப்போல வழக்குப்போடப் போகிறேன் என்று கூறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மணிசித்ரதாழு

இவர்கள் எல்லாம் வெளிநாட்டுப்படங்களை சுட்டு எடுத்தால் P வாசு போன்றவர்கள் மற்ற மாநிலமொழிப் படங்களைச் சுட்டு எடுப்பார்கள்.

மலையாளப் படமான மணிசித்ரதாழு சுட்டு சந்திரமுகி எடுத்து விட்டு அது தன்னுடைய கதை என்று கூசாமல் அவிழ்த்து விட்டார்.

குசேலன் கூட மலையாள இயக்குனர் ஸ்ரீனிவாசனிடம் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகே சரி செய்யப்பட்டது.

படங்களை உரிமைப் பெற்று ரீமேக் செய்கிறார்கள் என்றால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. வாசு போல என்னோட சொந்தக்கதை என்று கூறவும் ஒரு தில்லு வேண்டும் ஊருக்கே தெரிந்த விஷயத்தை.

எந்திரன் படத்தில் புரபசர் ரஜினியும் ரோபோ ரஜினியும் ஐஸ்வர்யா திருமணம் பற்றி பேசுவது ஆரூர் தமிழ் நாடான் என்பவர் எழுதிய புத்தகத்தில் வந்துள்ளது. படித்துப்பார்த்தேன் ஏறக்குறைய வசனங்கள் அப்படியே உள்ளது.

தற்போது இது குறித்து வழக்கு நடந்து கொண்டு இருப்பதால் இது பற்றி மேலும் கூற விரும்பவில்லை.

தெய்வத்திருமகள்

தற்போது வந்த தெய்வத்திருமகள் படம் கிட்டத்தட்ட 70 % காபி அடித்துத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. I am sam படத்தில் வரும் ஹீரோ முடி அலங்காரம் முதற்கொண்டு அப்படியே உள்ளது.

படம் தான் அப்படி என்றால் இசையும் G V பிரகாஷால் காபி அடிக்கப்பட்டு இருக்கிறது.

இது தெரியாமல் திரை விமர்சனத்தில் நாம படம் அருமை இசை கலக்கல் என்று எழுதினால் தெரிந்த பிறகு ரொம்ப அசிங்கமாகவும், கடுப்பாகவும் உள்ளது.

தற்போதெல்லாம் திரைவிமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது. இது எந்தப்படத்தின் காபியாக இருக்கும்? என்ற பயம் வந்து விட்டது.

ஆதரிக்காதீர்கள்

திருட்டு உழைப்பை எதற்கு பாராட்டி திருட்டு DVD யில் படம் பார்க்காதீர்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று தற்போது தோன்றுகிறது.

நல்ல படங்கள் வர வேண்டும் என்பதற்காக இதைப்போல அனுமதித்தால், தற்போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் விஷயம், நாளை தமிழர்கள் படங்கள் எல்லாம் சுட்டப் படங்கள் என்று பெயரை எடுக்கும் போது தற்போது இதை ஆதரித்ததை நினைத்து வெட்கம் தான் பட வேண்டியிருக்கும்.

எந்த ஒரு நல்ல படம் வந்தாலும் பார்க்காமல் இருந்ததில்லை.  படத்தைத் திருட்டுத்தனமாகக் கூட பார்க்க மாட்டேன் எப்போதும் திரையரங்கு தான்.

திருட்டு DVD யில் படம் பார்க்கும் நண்பர்களைக்கூட திரையரங்கில் படத்தைப் பார்க்கக் கூறி அறிவுறுத்துவேன்.

இப்படிப்பட்ட என்னால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை இதைப் போலக் கேட்பது?

“மச்சி! அவனுகளே திருடித்தான் படம் எடுக்கறாணுக இதை நான் திருட்டு DVD யில் பார்த்தால் என்ன தவறு” என்று கேட்டால் என்ன கூறுவது?

நல்ல படம் வந்தால் போதும் அது சுட்ட படமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிலர் நினைக்கும் அளவிற்கு தமிழ்த் திரையுலகம் இருக்கிறது என்றால் அது இதைப்போல நினைப்பவர்களின் தவறல்ல குப்பைப் படங்களாக எடுக்கும் இயக்குனர்கள் தவறு தான் அது.

திருட்டுப் படங்களை ஆதரிக்கும் நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது இதைப்போல எடுக்கும் இயக்குநர்களின் செயல்களை நியாயப்படுத்த முயலாதீர்கள்.

தற்போது இல்லை என்றாலும் உலகம்  பின்னாளில் தமிழ்ப்படம் என்றால் அது காபி படம் தான் என்று தூற்றும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

44 COMMENTS

 1. Cinema is fully commercialized now. People started saying openly, as long as my producer gets the money I will do the same thing again and again. Indirectly they are saying these fools will watch whatever movie we make. The censor board should ask for copyrights info before giving approval, only then this kind of copying can be controlled( for that we shud have ppl who have knowledge in these areas in CB, that is different issue) Regarding copying music and posters, etc., a separate committee should watch all this and sue them accordingly. But will anybody care for all this?

 2. எந்திரன் படத்தின் மூலம் தமிழ் பட உலகம் உலக அளவில் பெரிய அளவு பணம் பண்ணும் ஓர் இண்டஸ்ட்ரி என்ற ஒரு கருத்து பரவி விட்டது. பணம் இங்கு இருக்கிறது என்று தெரிந்ததால் ஹாலிவூட் நிறுவனங்கள் இதை சட்ட ரீதியாக அணுகும். இதுவரை யாரும் அணுகவில்லை என்பதே ஆச்சர்யம். ஒரு நாலு பேர் பிரச்சனையில் மாட்டினால் திருடி படம் எடுக்க யோசிப்பார்கள்!

 3. நல்ல படங்கள் வர வேண்டும் என்பதற்காக இதைப்போல அனுமதித்தால் தற்போது நமக்கு சந்தோசமாக இருக்கும் விஷயம் நாளை தமிழர்கள் படங்கள் எல்லாம் சுட்டப் படங்கள் என்று பெயரை எடுக்கும் போது தற்போது இதை ஆதரித்ததை நினைத்து நாம் வெட்கம் தான் பட வேண்டியிருக்கும்.

  …..யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

  • போஸ்டர் வடிவமைப்பு கூட காபி அடிக்கப்பட்டுள்ளது என்று தெரியும்போது ரொம்பவே வேதனையாதான் இருக்கு.

 4. நீங்கள் சொல்லியவை எல்லாம் ஒரு பட கோப்பி, இந்திரன் விதிவிலக்காக ஒரு இருவது ஹாலிவுட் படங்களின் கோப்பி, scientist தன்னை போலவே ஒரு ரோபோட் செய்ய ,அவர் காதலி அதை முத்தமிட, ரோபோடிகு காதல் முடி பறக்க கிளம்பும் , இது தமிழ் இல்லை ஆங்கில பட காட்சி, அனால் பதினாறு வருடத்திற்கு முந்தைய படம் கோப்பி rights தேவையில்லை போல,சங்கர் மானவாரியாக கோப்பி அடித்திரு இக்கிறார்

 5. நீங்கள் சொல்வது 100 % உண்மை. ஆனால் கிராமத்து படங்கள் மட்டும் இதற்கு விதி விலக்கு என்று நினைக்கேறேன். நான் சில கிராமத்து படங்கள் உங்கள் விமர்சனைத்தை படித்து தான் படம் பார்த்தேன் (எ.க.மைனா- என்னை கவர்ந்த சிறந்த படம்). உங்கள் விமர்சங்கள்; உங்களின் அனுபவங்கள்; அதனை எங்களிடம் பகிந்து கொள்கிறீர்கள். படத்தின் இயக்குனர் கிரி அல்ல. நீங்கள் விமர்சகர் நாங்கள் வாடிக்கையளர்கள். ஆதனால் உங்கள் பணி இன்னும் சிறப்பாக தொடரட்டும். (தற்போதெல்லாம் திரைவிமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது) பயம் வேண்டாம்….

 6. i slightly dis agree from your view.. i am having very poor knowledge on world movies.. even though it is copied from other movies, i enjoy it with tamil script.. But as you said, the tamil directors should give credit to the original film makers.. i understood there will be some copy right issues.. atleast they can put , ” this film is inspirational from XXX movie”. my point here is, tamil directors can give foreign movies with tamil script at the same time they have to give some credits to the original film makers.

 7. காப்பி அடித்து விட்டான், திருடி விட்டான் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அன்பர்களுக்கு,
  நான் 2 விஷங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
  1. முதலில் சொல்லுங்கள் எது திருட்டு.
  நாம் பாடசாலையில் பயிலும் கல்வி ஆசிரியரின் சொந்த புத்தியில் வருவாதா? யாரோ எழுதியதைதானே உமிழ்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குப்பெயர் திருட்டா?
  நாம் உண்ணும் உணவு அம்மாவின் சொந்த சிந்தனையில் வடித்ததா? ஏற்கனவே இருப்பதைதானே மாற்றி சமைக்கிறார் இது திருட்டா? இதுவரை சினிமாவில் காட்டாத விஷயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை பட்டால் அது பேராசை.
  2. deivaதிருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால் நம்மில் எந்தனை பேருக்கு I Am Sam பற்றி தெரிந்து இருக்கும். இன்று இதை திருட்டு என்று கதறிக்கொண்டு இருக்கும் 95% பேருக்கு, I Am Sam என்று ஒரு படம் வந்து இருப்பதே தெரிந்திருக்காது. உலகில் உள்ள நல்ல படங்களை பார்த்துவிட வேண்டும் சல்லடை போட்டு தேடும் உலகபட மேதாவிகளா நாம்?பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்கும் சாதாரண இரசிகர்கள்.
  இது ஒரு படத்தின் காப்பி என்பதை, நம் மக்கள் கண்டுபிடித்துவிட மாட்டார்கள் என என்னும் அளவிற்கு இயக்குனர் ஒன்றும் அறிவில்லாதவர் அல்ல. சொல்லப்போனால் உலகப்படம் என்ன உள்நாட்டிலேயே ஹிந்தியில் ஏற்கனவே எடுத்து விட்டார்கள். அதையும் மீறிதான் நமக்காக, நம் மொழியில், நம் இசையில், நம் சுவையில், நம் ரசனை மேம்பட இதைபோன்றதொறு படைப்பை அளித்திருக்கிறார். அமெரிக்காகாரன் பார்த்து காரி துப்புவதற்கோ, லண்டன் காரன் கெக்கலிப்பதற்கோ நாம் படம் எடுக்கவில்லை. ஒரு நல்ல படைப்பு தந்தால் பாராட்டுவதை விடுத்து எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து நக்கீரன் பரம்பரை என்பதை நிருபிப்பதில் நம் தமிழன் கில்லாடிதான்

  • எல்லாம் சரி. யோக்கியமானவர்கள் என்றால் “இது மற்றொரு படத்தின் தழுவல்” என்று வெளியில் சொல்வார்களா நமது இயக்குனர்கள்? “என்னுடைய சொந்த கதை” என்று ஏன் தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும்?

  • சார்,
   நீங்க சொல்ற லாஜிக் கரெக்ட் இல்லை.டீச்சர் பாடம் நடத்தும் போது நியூட்டன் விதி என்றோ archimedis பிரின்சிபல் என்றோ சொல்லி தான் நடத்துகிறார்கள். நான் ஒரு அணுவை fishion செய்தேன் என்று இன்று வரை எந்த டீசெரும் சொல்லி நான் கேட்டதில்லை. அதே போல், என் அம்மாவும் இந்த ரசம் என் சொந்த கண்டுபிடிப்பு என்று சொல்லி கொள்வதில்லை.
   உங்கள் லோக்கல் ரசிகர்கள், அதனால் காபி அடிக்கலாம் லாஜிக் ஒப்பு கொள்ள தக்கது இல்லை – டிரேக்டோர்கள் ஒரிஜினலுக்கு கிரெடிட் தரும்வரை.

 8. நல்ல சினிமா பாத்து அது போன்று நாமும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் தோன்றும் உணர்வு. ஆனா “அதையே” எடுக்க வேண்டும் என்று ஒரு சில திறமை வாய்ந்தவர்களுக்கு தான் தோணும். காப்பி அடிச்சா என்ன கிரி… அதன் நல்லா காப்பி அடிக்கிறாங்க இல்ல.. சும்மா சின்ன பிள்ளை தனமா இப்படி எல்லாம் எழுதாதீங்க. நம்மளோட கேப்பகுட்டிக்கு இது போதும்.

 9. நான் சொல்வது இது தான்,காப்பியோ,தழுவலோ ,இல்லை inspiration ஒ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ,அதை படத்தின் டைட்டில் கார்டில் போட்டு நன்றி என்று சொல்ல வேண்டும் ,அந்த துணிவும் நேர்மையும் இருக்க வேண்டும் ,உண்மையில் கமல் குறித்தும் ஷங்கர் குறித்தும் இருந்த மரியாதை இறங்கியது .
  காப்பி அடிப்பதால் நான் சொல்லவில்லை -இதை நான் சொந்த மூலையில் சிந்தித்தேன் என்று இவர்கள் விடும் பாவ்லா தான் கொடுமை ,

 10. //
  Prabhushankar
  காப்பி அடித்து விட்டான், திருடி விட்டான் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அன்பர்களுக்கு,
  நான் 2 விஷங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
  1. முதலில் சொல்லுங்கள் எது திருட்டு.
  நாம் பாடசாலையில் பயிலும் கல்வி ஆசிரியரின் சொந்த புத்தியில் வருவாதா? யாரோ எழுதியதைதானே உமிழ்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குப்பெயர் திருட்டா?
  நாம் உண்ணும் உணவு அம்மாவின் சொந்த சிந்தனையில் வடித்ததா? ஏற்கனவே இருப்பதைதானே மாற்றி சமைக்கிறார் இது திருட்டா? இதுவரை சினிமாவில் காட்டாத விஷயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை பட்டால் அது பேராசை.
  2. deivaதிருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால் நம்மில் எந்தனை பேருக்கு I Am Sam பற்றி தெரிந்து இருக்கும். இன்று இதை திருட்டு என்று கதறிக்கொண்டு இருக்கும் 95% பேருக்கு, I Am Sam என்று ஒரு படம் வந்து இருப்பதே தெரிந்திருக்காது.
  //

  ஐயா prabusankar,

  காபி வேறு, Inspiration வேறு, தெய்வ திருமகள் நல்ல ‘Presentation’ ஆக சொல்கிறார்கள், ஆனால் ’75’ விழுக்காடு அதே கட்சியமைப்புகளோடு இருந்தால் எரிச்சல் வராமல் என்ன வரும்,

  ஆடுகளம் படத்தில் “Title Card” இல் அந்த கதையை உருவாக்க பாதித்த படங்களை வெற்றி மாறன் பட்டியலிடுவார்,
  அதுபோல செய்ய இந்த இயக்குனருக்கு எதற்கு தோன்ற வில்லை?

  உங்கள் சொந்த பதிவை திருடிவிட்டு, யாரவது தன் பதிவில், தன் பெயரை போட்டுகொண்டு, ஆத்திசூடியில் உள்ள எழுத்துக்களை தான் போட்டிருக்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்?, அப்படி இருக்கிறது நீங்கள் சொன்ன உதாரணங்கள்.

  • @அன்பு, மிகச்சரியாக சொன்னீர்கள். வெற்றி மாறன் ஒரு முன்னுதாரணம். அந்த மாதிரி சொல்லும் நேர்மையும் நல்லா சொல்ல போனா தைரியமும் நெறைய பேருக்கு கெடையாது.

 11. அருமையான பதிவு!

  // “மச்சி! அவனுகளே திருடித்தான் படம் எடுக்கறாணுக இதை நான் திருட்டு DVD யில் பார்த்தால் என்ன தவறு”//

  உண்மைதான் ! கேட்பதில் என்ன தவறு! திருடுபவனிடம் இருந்து திருடுவது தார்மீகத்தின் படி தவறு இல்லையே!

  @Mohamed Yasin

  // ஆனால் கிராமத்து படங்கள் மட்டும் இதற்கு விதி விலக்கு என்று நினைக்கேறேன். நான் சில கிராமத்து படங்கள் உங்கள் விமர்சனைத்தை படித்து தான் படம் பார்த்தேன் (எ.க.மைனா- என்னை கவர்ந்த சிறந்த படம்) //

  அந்தப்படத்தை நானும் பார்த்தேன். என்னையும் கவர்ந்த படம்… ஆனால் அங்கும் சில காப்பியடிப்புக்கள் உண்டு..

  அப்படத்திலே ஒரு பாடல் ”கையைபுடி ….” அந்தப்பாடல் High School Musical என்ற ஆங்கிலப்படத்திலே வந்த ”Take My Hand …” என்ற பாடல்… வரி கூட மாற்றப்படவில்லை.

  எது எவ்வாறு இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக எடுத்தால் சரி.. ஆனாலும் படம் தொடங்கும் முன்னோ அல்லது படம் முடிந்த பின்னோ ஒருஜினலுக்கு ஒரு நன்றியாவது போடலாம்

 12. @பாலாஜி நன்றி

  @சோம்ஸ் இவ்வாறு செய்வது இந்தியாவில் ரொம்ப கஷ்டம் 🙂

  @Bandhu நீங்க சொன்ன மாதிரி நாலு பேரு மாட்டினா அப்புறம் குறைந்து விடும்

  @சித்ரா வெற்றிகரமா வந்துட்டீங்க 🙂

  @ஆனந்த் நான் கொஞ்சம் காட்சிகள் பார்த்தேன்

  @முஹமது யாசின் மைனா பற்றியும் குறிப்பிட நினைத்தேன் ஆனால் இதுவே அதிகம் ஆகி விட்டதால் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். அசால்ட்டு ஆறுமுகம் அசால்ட்டா புட்டு வைத்துட்டாரு பாருங்க 🙂

  @மனோஜ் க்ரிடிட் கொடுத்தா பிரச்சனை வரும்னு பயப்படறாங்கன்னு நினைக்கிறேன்

  @பிரபு ஷங்கர்

  “காப்பி அடித்து விட்டான், திருடி விட்டான் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அன்பர்களுக்கு”

  இதைப் படித்து விட்டு எனக்கு கவுண்டரின் காமெடியான “பாத்துட்டான் பாத்துட்டான்” காமெடி தான் நினைவுக்கு வந்தது 🙂 உண்மைய சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற மாதிரி இருக்கிறதா உங்களுக்கு.

  “முதலில் சொல்லுங்கள் எது திருட்டு.”

  நமக்கு சொந்தமில்லாத ஒன்றை சொந்தம் உள்ள ஒருவரின் அனுமதி இல்லாமல் எடுப்பது திருட்டு ஆகும்.

  “நாம் பாடசாலையில் பயிலும் கல்வி ஆசிரியரின் சொந்த புத்தியில் வருவாதா? யாரோ எழுதியதைதானே உமிழ்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குப்பெயர் திருட்டா?
  நாம் உண்ணும் உணவு அம்மாவின் சொந்த சிந்தனையில் வடித்ததா? ஏற்கனவே இருப்பதைதானே மாற்றி சமைக்கிறார் இது திருட்டா?”

  எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!! 🙂 நீங்க பேசுறதுல ஏதாவது லாஜிக் இருக்குதா. எதையும் எதையும் ஒப்பிட்டு பேசுறீங்க. அம்மா செய்யும் உணவையும் இவங்க திருட்டையும் ஒப்பிடுற உங்களை என்ன சொல்வது!

  “இதுவரை சினிமாவில் காட்டாத விஷயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை பட்டால் அது பேராசை.”

  அது பேராசை இல்லை அது தான் உண்மையான முயற்சி. புதிய கதைகளை சிந்தனைகளை எண்ணங்களை மக்களுக்கு தரும் முயற்சி. இப்படி ஒவ்வொருவரும் நினைத்து இருந்தால் எந்த ஒரு விஞ்ஞான படமும் வந்து இருக்காது.. ஒரு ஜுராசிக் பார்க் டைனோசரை பார்த்து இருக்க மாட்டோம்.

  “இன்று இதை திருட்டு என்று கதறிக்கொண்டு இருக்கும் 95% பேருக்கு, I Am Sam என்று ஒரு படம் வந்து இருப்பதே தெரிந்திருக்காது”

  அப்ப தெரியாமல் திருட்டு வேலை பண்ண சொல்றீங்களா!

  “இது ஒரு படத்தின் காப்பி என்பதை, நம் மக்கள் கண்டுபிடித்துவிட மாட்டார்கள் என என்னும் அளவிற்கு இயக்குனர் ஒன்றும் அறிவில்லாதவர் அல்ல.”

  உண்மை தான் அவங்க அறிவோட தான் இருக்காங்க.. நாங்க தான் அறிவில்லாமல் இது தெரியாமல் இருக்கிறோம்.

  “அமெரிக்காகாரன் பார்த்து காரி துப்புவதற்கோ, லண்டன் காரன் கெக்கலிப்பதற்கோ நாம் படம் எடுக்கவில்லை.”

  ஹா ஹா ஹா ஏங்க என்னமோ சொந்த முயற்சியில் படம் எடுத்தவர்களை விமர்சித்தது போல சொல்றீங்க.. உண்மை தான்.. அவனுக பாராட்டுவதற்க்காக நாம படம் எடுக்கவில்லை.. ஆனால் அவனுக படத்தை திருடி எடுத்தால் பாராட்ட மாட்டானுக.. காறித்தான் துப்புவாணுக.

  @சோம்ஸ் 🙂

  @சுனில் நன்றி கூறினால் வேற பிரச்சனை வருமோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து இருக்கலாம்.

  @அன்பு

  “உங்கள் சொந்த பதிவை திருடிவிட்டு, யாரவது தன் பதிவில், தன் பெயரை போட்டுகொண்டு, ஆத்திசூடியில் உள்ள எழுத்துக்களை தான் போட்டிருக்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்?, அப்படி இருக்கிறது நீங்கள் சொன்ன உதாரணங்கள்.”

  அன்பு கலக்கலான உதாரணம் 🙂

  @அசால்ட் ஆறுமுகம் நன்றி 🙂

  @காயத்ரி நாகா 🙂

 13. தெய்வ திருமகன பாத்துட்டு எங்க அம்மா ,,படம் னா இப்படிதாண்ட இருக்கனும் னு சொன்னாங்க ..அவங்க வயசுக்கு im sam லாம் பாக்கமுடியாது

  என்னை பொருத்தவரை தழுவளோ.. வழுவளோ .. ஒரு நல்ல படத்தை தமிழில் டப் பண்ணி குடுத்துருக்காங்கனு சந்தோஷ படுங்க சார் …

  இத நானே சிந்தித்து எடுத்தேன் னு சொல்லுறது தான் கடுப்பா இருக்கு

 14. பதிவை படித்துவிட்டேன், எனக்கும் சேர்த்துத்தான் இந்தப்பதிவேன்று புரிகிறது 🙂

 15. சுபா எழுதிய மாடிப்படி குற்றங்கள் நாவலின் கதையும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த “கேட்ச் மீ இப் யு கேன்” கதையும் ஒரே மாதிரி இருக்கும், க்ளைமாக்ஸ் உட்பட…

  கதை திருட்டு என்பது போய், நடை, உடை, பாவனை, காட்சியமைப்பு, இசை என்று எல்லாவற்றையும் திருடும் போது தான் இன்ஸ்பிரேஷன் என்ற சொல் அடிபட்டு போகிறது…

  • அடங்கொய்யாலே, கதை எழுதறது கூட காப்பியா… சரிதான்..

 16. @ அன்பு
  “காபி வேறு, Inspiration வேறு, தெய்வ திருமகள் நல்ல ‘Presentation’ ஆக சொல்கிறார்கள், ஆனால் ’75′ விழுக்காடு அதே கட்சியமைப்புகளோடு இருந்தால் எரிச்சல் வராமல் என்ன வரும்,”

  75% அதே கட்சியமைப்புகளோடு இருப்பது i am sam பார்த்தவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. உள்ளூர் படம் மட்டுமே பார்க்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இது ஒரு பெரிய விருந்துதானே.

  @கிரி
  கிரி என்னுடைய கருத்து உங்கள் பதிவை போன்றும், இதைவிட மோசமாக திட்டியும் இருந்த பல பதிவுகளை படித்ததின் விளைவாக வந்த கோபமே.
  வா குவாட்டர் கட்டிங்க், பாய்ஸ், நடு நிசி நாய்கள் போன்ற நம் சமூக சிந்தனையை ஊட்ட்ட்ட்ட்டி வளர்த்த நம் தமிழ் திரயுலகம்தான் இதை போன்ற படங்களையும் அவ்வப்போது கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. அந்த முயற்சியை பாரட்டவேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்த படத்தை இவர் எடுக்காமல் இருந்திருந்தால் ஒன்றும் குடிமுழுகி இருக்கப்போவதில்லை. நாம் ஒரு நல்ல படத்தை இழந்து இன்னும் சில குப்பைகளை பார்த்துகொண்டு இருப்போம். அவ்வளவுதான்.

  உள்ளூர் படம் மட்டுமே பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் இந்த முயற்சியை நாம் குறை கூறிக்கொண்டு இருப்பதுதான் எனது வருத்தமே ஒழிய, திருடுவதை நியாப்படுத்துவது அல்ல. இதை தவிர்க்க இயக்குனர் ஒரு நன்றி card போட்டு இருக்கலாம். மற்றபடி இந்த மாதிரி முயற்சிகளை நான் வரவேர்க்கவே செய்வேன்.

  திறமை வாய்ந்த பல புதிய இயக்குனர்கள் அதிகரித்து வரும் இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு Style. இது இவருடைய style என்று வைத்துக்கொள்வோமே.

 17. உங்க ஆதங்கத்துல நியாயம் இருக்கு. ஆனா பாமர மக்கள் எல்லாம் i am sam பாதிருபான்களா? நம்ம பசங்க copyright remake கேட்டு hollywood போன போண்டி ஆயிருவாங்க. inspiration ன்னு positivea சொல்லி தப்பிச்சுக்க வேண்டியது தான்.

 18. ஹலோ கிரி,

  கௌதம் மேனனோட புதிய அலப்பறை copied from Bourne (totally 3) சீரியஸ் . ஸ்டில்ல இந்த அளவுக்கு சுடரங்கான , படம் வந்தாப் தெரியும் எவ்வளுவு பிரமே சுட்ட்ருக்கங்கன்னு !

 19. @Katz நன்றி

  @ஆனந்த் இப்படி எல்லாம் நாம் நினைப்பதால் தான் இவங்க தைரியமா எடுக்கறாங்க.

  @அருண் 🙂 நீங்க என்ன சொல்வீங்கன்னு பார்த்தேன்

  @ஜீவதர்ஷன் 🙂 உண்மையா இதை எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். யோஹன் பட போஸ்டர் பார்த்து டென்சன் ஆகிட்டேன்.. அடப்பாவிகளா! போஸ்டர் கூட விடமாட்டீங்களான்னு! இந்தக்கடுப்புல தான் எழுதினேன்.

  @கோபி நீங்க சொல்வது சரி தான்.

  @பிரபு ஷங்கர்

  உங்க கோபம் புரியுது ஆனால் நான் என்னுடைய கருத்தை நாகரீகமான முறையிலே வைத்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

  நீங்கள் திட்டிய நடுநிசி நாய்கள் பற்றி கூட விமர்சனம் எழுதி இருக்கிறேன் ஆனால் திட்டி அல்ல :-). நான் படங்களை அந்த படத்தின் கண்ணோட்டத்தோடு தான் பார்க்கிறேன். நீங்கள் மற்றும் பலர் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள் அவ்வளவே. ரசனைகள் பல விதம் நமக்கு பிடிக்கவில்லை என்பதாலையே ஒரு படம் கெட்ட படம் ஆகி விடாது. ரசனைகள் பல விதம். நான் எழுதிய பல விமர்சனங்கள் பெரும்பாலும் நல்ல படங்கள் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவையே சில தவிர்த்து.

  நீங்கள் கூறியதை வைத்துப்பார்க்கும் போது நம் இருவருக்கும் ஒரு எண்ணம் தான் அது நல்ல படங்கள் வர வேண்டும் என்பது. நமது கருத்துக்களில் மட்டுமே வேறுபாடு ஆனால் நல்ல படம் வர வேண்டும் என்ற மையக்கருத்து ஒன்று தான். இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை.

  மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்.

  @தினேஷ் பாமர மக்கள் என்ன… நானே பார்க்கலை படம் வெளி வந்த பிறகு அனைவரும் கூறிய பிறகு தான் பார்த்தேன். இப்படி எல்லாம் தெரியாமல் இருப்பதால் தான் இவர்கள் மேலும் மேலும் தைரியமாக செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  @Barney ஏற்கனவே அதுல கதையே இல்லை..அதையே திருடி இருக்காங்களா! 🙂

  @பாஸ்கரன் என்னமோ போங்க! இவங்கள பாராட்டிட்டு அசிங்கப்பட்டு நிற்பது தான் மிச்சம்.

  @ராஜன் சார் அந்த டென்ஷன் ல தான் இந்த பதிவே எழுதினேன்.

 20. சும்மா படத்துக்கு போயி என்ஜாய் பண்ணுங்கப்பா( நல்லா இருந்தா) . நிம்மதியா இருங்க, குறை கண்டுபிடிக்காம. அப்படியாவது நல்லா கதை நம்ம ஊருக்கு வரட்டும். இல்லேன்னா அரைச்ச மாவையே அரைப்பாங்க.

 21. நம்ம “கோ”படம் மட்டும் என்ன கே வீ ஆனந்த் சரோட சொந்த கதைய ??? STATE OF play ah காபி அடிச்சு எடுத்த படம் 🙂

 22. எப்படியும் தெரியத் தானே போவுது? ஒருவரி, இன்னார் படம்,.உங்களுக்கும் பிடிக்கும்னு எடுத்தேன்னுட்டா முடிஞ்சு போச்சு.

  இவங்க சொந்தமா சிந்திச்சா தாங்க முடியாது விட்ருங்க.

 23. தமிழ் திரை உலகம் ரொம்ப மோசம் .ஏன் என்றால் பெண்கள் கலாச்சரத்தை அசிங்கமாக விமர்சிக்கிறது. எனவே இவற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .அதிலும் நான் நடிகை sraya ,நடிகை நயன்தாரா இவர்கள் ரொம்ப மோசம்.இவர்கள் வேண்டுமென்றால் தங்கள் வீட்டில் ஆடை பாதியில் அல்லது அம்மணமாகவே இருக்கட்டும்.வெளியில் ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும்,

 24. ஓல்ட் தமிழ் படங்கள் காப்பி adikapadha படங்கள் தான். சிவாஜி மற்றும் ரஜினியின் ஓல்ட் படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை, பாசமலர், பச்சை விளக்கு, முள்ளும் மலரும், vietnam வீடு, புவனா ஒரு கேள்வி குறி, பாலும் பழமும், பூவே உனக்காக, இவை எல்லாம் சுடப்பட்ட படங்கள் அல்ல, கமல்ஹாசன் எப்போதும் ஆங்கில படங்கள் thahuvi தான் eduppan ஏனென்றால் அவன் ஒரு திருடன்.

 25. ennaga pannurathu oorukulla copy adikiravanthan periya directora irukanga…. School la copy adicha mutti poda vaikiranga… Cinemavula copy adicha kodi kodi sambalam tharanga…. Ivangalaluku namma kounder sollura mathiri ,,, oorukulla punnaku vikiravan kunduci vikiravan ellam thozhil athibarnu solluranuga … Ivanuga thoolai thanga mudiyalapa…..
  Tamil nadu la puthusa copy adikama padam eaduka theramai illaya… Enna …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here