Hostage படத்தின் கதை என்னவென்றால் மூன்று பசங்க ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அவரது வீட்டிற்குள் திருட்டுத் தனமாக நுழைகிறார்கள்.
அந்தப்பெண்ணை அடையத் தான் வருவார்கள் ஆனால், பெண்ணின் அப்பா பணம் நிறைய வைத்து இருப்பதை அறிந்து தங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்வார்கள்.
இதனிடையே இன்னொரு கும்பல் அதே பணக்கார நபரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய DVD ஒன்றை எடுக்கத் திட்டமிடும்.
இந்த இரு கும்பலுக்கு இடையே வரும் காவல் துறை அதிகாரியாக ப்ரூஸ் வில்லிஸ்.
கடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியும் கூட. முடிவில் அந்தப்பெண் காப்பாற்றப்பட்டாரா! DVD என்ன ஆனது?
நம்மை ஏகத்துக்கும் பதட்டப்படுத்தி கூறி இருக்கிறார்கள்.
Hostage
பொண்ணு வேற செம ஃபிகர் இவங்க மூன்று பேர். மூன்று பேரில் வழக்கம்போல ஒருத்தன் அவர்களுக்குத் தலைவன் மாதிரி மீதி இருவர் அண்ணன் தம்பி.
வெளிநாடுகளில் வீடுகளில் பாதுகாப்பு அலாரம் இருக்கும் ஏதாவது ஆபத்து என்றால் அதை அழுத்தி விட்டால் காவல் துறை உடனே வந்து விடும்.
இவர்கள் வீட்டிலும் சந்தேகப்பட்டு விசாரிக்க வந்த இடத்தில் பிரச்சனை ஆக மொத்த காவல்துறையும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து விடும்.
இந்தப் பசங்க அட்டகாசமே நமக்கு வயிற்றை கலக்கும் இதில் இன்னொரு கும்பல் வேறு.. செம டென்ஷன் ஆக இருக்கும்.
பாதுகாப்பு
அந்தப் பணக்காரரின் வீடு அலிபாபா குகை மாதிரி தான். பாதுகாப்பு வசதிகள் எப்படி இப்படி எல்லாம் செய்து வைத்து இருக்காங்க என்று வியப்படைய வைக்கும்.
இதற்கு ப்ரூஸ் வில்லிஸ் கொடுக்கும் கமெண்ட் அருமையாக இருக்கும். பழைய தமிழ்ப் படங்களில் ஒரு பொத்தானை அழுத்தினால் கதவு சுற்றி திறக்கும், இரும்புக்கதவு மூடும் இதைப்போலப் பல வசதிகளைச் செய்து வைத்து இருப்பார்கள்.
ஹாலிவுட் படங்களில் இதைப்போலக் காட்டும் பசங்களை டெர்ரராகத் தான் காட்டுவார்கள். அதாவது கொஞ்சம் கூட எதற்கும் பயப்படமாட்டார்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
தலைவனாக வருபவன் அந்தப்பெண்ணை என்ன செய்யப்போகிறானோ என்று பீதியைக் கிளப்பிக்கொண்டே இருப்பார்கள்.
த்ரில்லர் படங்களை ரசிப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் Hostage.
Directed by Florent Emilio Siri
Produced by Mark Gordon,Arnold Rifkin,Bruce Willis, Bob Yari, David Wally
Written by Doug Richardson
Robert Crais (novel)
Starring Bruce Willis, Kevin Pollak, Ben Foster, Jonathan Tucker
Music by Alexandre Desplat
Cinematography Giovanni Fiore Coltellacci
Editing by Richard Byard, Olivier Gajan
Distributed by Miramax
Release date(s) March 9, 2005 (Philippines), March 11, 2005
Running time 113 minutes
Country United States
Language English
Read : No Escape [2015] திக் திக் நிமிடங்கள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
giri
excellent post.
rajesh.v
இந்த பதிவை படிச்சிட்டு படம் பாத்தேன். நல்ல இருந்துச்சு. Case 39 ட்ரை பண்ணுங்க. நல்ல இருக்கும்.
ஹாய் கிரி, உங்கள் பதிவு அட்டகாசமாக இருந்தது.படம் பார்த்தேன். நல்ல thriller நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த திருப்தி. உங்கள் பதிவுகள் அனைத்துமே நன்று.மேலும் நல்ல thriller , horrer படங்கள் பற்றிய பதிவுகளை விரைவில் எதிர்பார்கிறேன். பதிவு இட நேரம் இல்லாவிடில் hostal , hostage போன்ற நல்ல thriller /crime / suspenceful படங்களின் பெயர் பட்டியலையாவது தாருங்கள்… awaiting your reply.
பரிந்துரைக்கு நன்றி கிரி.
Hostage உண்மையிலேயே ஒரு அருமையான த்ரில்லர் படம் 🙂