சத்யராஜ்க்கு மூன்று பெண்கள். சத்யராஜ் பெண் யாருடனாவது ஓடிவிடுவார் என்று பந்தயம் கட்டப்பட்டதால், விரைவிலேயே திருமணம் செய்து வைக்கிறார்.
கடைசிப் பெண் சிவ கார்த்திகேயனை காதலிக்க, இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை. Image Credit
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வைத்துத் தலைவராக சிவ கார்த்திகேயனும் செயலாளராகச் சூரியும் இருக்கிறார்கள்.
படத்தின் பலமே திரைக்கதையும் வசனமும் [எடிட்டிங்கும் ஒரு காரணம்] தான்.
ரொம்ப நாளைக்குப் பிறகு படம் முழுக்க சிரித்துப் பார்த்தது இந்தப் படமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வசனம் “ஓகே ஓகே” படத்தின் இயக்குனர் ராஜேஷ்.
படத்தில் எங்குமே போர் அடித்ததாகத் தோன்றவில்லை. துவக்கம் முதல் இறுதிவரை சீராகப் போய்க் கொண்டு இருந்தது.
படத்தின் கதாநாயகி “ஸ்ரீ திவ்யா” என்ற புதுமுகம். இவருக்காகவே படத்தைப் பார்க்கலாம் போல அப்படியொரு அழகு.
ரொம்ப ஆட்டமும் போடாமல் அடக்கியும் வாசிக்காமல் ரொம்ப இயல்பாக வந்து செல்கிறார். கவர்ச்சி இல்லை… இருந்தாலும் ரொம்ப அழகு.
எப்படி சொல்வது என்று தெரியவில்லை. படம் பார்த்தால் தான் உங்களுக்குப் புரியும்.
தாவணியும் புடவையும் அம்சமாகப் பொருந்தி இருக்கிறது. “கருப்பசாமி குத்தகைதாரர்” படத்தில் வந்த மீனாட்சி தங்கச்சி மாதிரி இருக்கிறார்.
துவக்கத்தில் பிந்து மாதவி கொஞ்சம் காட்சிகளில் வந்து செல்கிறார்.
சிவ கார்த்திகேயனும் சூரியும்
சிவ கார்த்திகேயனும் சூரியும் அடிக்கிற லூட்டிக்கு படம் முழுக்க சிரிப்பலை தான்.
சூரி ஓவரா நடித்து இருப்பாரோ என்று நினைத்தேன் ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் பட்டையக் கிளப்பி இருக்கிறார். மனுஷன் படம் முழுக்க நம் வயிற்றை பதம் பார்த்து உள்ளார் 🙂 .
நீண்ட வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் நடிப்பை ரசித்துப் பார்த்த படம் என்று உறுதியாகக் கூற முடியும். படம் முழுக்கவே வந்து, இறுதிவரை தூள் கிளப்பி உள்ளார்.
இமானின் இசை
இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது.
படத்தில் பார்க்கவும் ரொம்ப நன்றாக உள்ளது. அதுவும் “ஊதா கலரு” பாடலில் ஸ்ரீ திவ்யா முகபாவனைகள் கலக்கல். இதில் மட்டுமல்ல படம் முழுக்கவே.
பால சுப்பிரமணியம் ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. பளிச் பளிச் 🙂 . இவர் பற்றித் தனியாக ஒரு பதிவே எழுதி உள்ளேன்.
Read: “நீர்ப்பறவை” – அசத்தலான ஒளிப்பதிவு
சிவகார்த்திகேயனை விட்டு வேறு ஒருவருடன் ஸ்ரீ திவ்யாக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும்.
இவர் சோகமாக இருக்கும் போது, ஒரு சிறுமி இவரிடம் வந்து அக்கா (ஸ்ரீ திவ்யா) கூப்பிடுறாங்க என்று கூறுவாள்.
இதுக்கு சிவ கார்த்திகேயன், அந்தப் பொண்ணோட அக்கா என்று நினைத்து “உன் அக்கா நல்லா இருப்பாளா” என்று கேட்பார் பாருங்க… திரையரங்கமே சிரிப்பில் மூழ்கி விட்டது :-).
இது மாதிரி ஏகப்பட்ட காமெடி உள்ளது.
பொழுதுபோக்கு படம்
படத்தில் குறை / லாஜிக் எல்லாம் பார்த்தால், இந்தப் படமே ஒன்றுமில்லை. வெட்டியா திரிபவரை காதலிக்கும் வழக்கமான பெண் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது.
ஆனால், அதற்காக மற்ற படங்களைப் போல ரொம்ப மோசமாகக் கொண்டு செல்லாமல் ஓரளவு நல்ல கதையாக அனைவரும் ரசிக்கும் படி எடுத்து இருக்கும் இயக்குனர் பொன் ராம் பாராட்டுக்குரியவரே!
படம் துவக்கத்திலிருந்து இறுதிவரை எந்தத் தடங்கலும் இல்லாமல் ஒரே சீராக ரசிக்கும் படி செல்கிறது.
ஆபாசமாக எதுவுமில்லை. குடும்பத்துடன் சென்று படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.
Directed by Ponram
Produced by P. Madhan
Screenplay by Ponram
M. Rajesh (dialogues)
Story by Ponram
Starring Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya
Music by D. Imman
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Escape Artists Motion Pictures
Release date(s) 6 September 2013
Country India
Language Tamil
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி வருத்தபடாத வாலிபர் சங்கம் படம் விமர்சனத்துக்கு நன்றி.. நேற்றுதான் 555 படம் முதல் 30 நிமிடம் தான் பார்த்தேன்.ஆனால் எனக்கு பிடித்தமாதிரி இல்லை.. ஆனால் “ஆதலால் காதல் செய்வீர்” நெஞ்சை வருடி விட்டது. (ரொம்ப இயல்பான, நடைமுறை எதார்த்தத்தை, சொல்ல வந்ததை நீட்டி முழக்காமல் சுருக்கமாகக் கூறி இருந்தார்கள்) முற்றிலும் உண்மை..குறிப்பாக எனக்கு ஜெயபிரகாஷ் அவர்களின் நடிப்பின் மீது ஒரு தனி ரசனை எப்பவும் உண்டு… நடிக்க சொன்ன மனுஷன் கலக்குறார்…
நல்ல விமர்சனம் தல. கேப் விடாம எழுதுறிங்க. ரொம்ப நன்றி.
“ஆதலால் காதல் செய்வீர்” ரொம்ப நன்றாக இருந்தது. கடைசியில் கண் கலங்க வைத்து விட்டார்கள்.
————————————————————————-
சில மாதங்களுக்கு முன்னாடி rattinam என்ற படம் வந்தது . ரொம்ப நல்ல இருந்துது . அந்த படத்த பாத்துட்டு இந்த படத்த pathadhala எனக்கு இந்த படம் குப்பை மாதிரி இருந்திச்சு. டைம் கெடச்சா டவுன்லோட் பண்ணி பாருங்க
சூப்பர் பாஸ்……பக்காவான விமர்சனம்……என்னோட views உம் இதே தான்…….செம்ம என்ஜாய் பண்ணி பாத்தேன்…..சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு…நானும் இதே தான் நெனச்சேன்….சத்யராஜ் சமீபமாக நடிச்ச படங்கள்லேயே இது தான் பெஸ்ட்……எல்லாரும் பாக்க கூடிய அருமையான பொழுதுபோக்கு படம்……..
அருமையான விமர்சனம்.
இதுல சிவ கார்த்திகேயன் ஒருத்தரை கலாயித்து இருக்கிறார். அதைச் சொன்னா சண்டைக்கு வருவாங்க.. நமக்கு எதுக்கு வம்பு. ஏற்கனவே பல பஞ்சாயத்து ஓடி விட்டது //
ரஜினி ரசிகன் 🙂
“…இதுல சிவ கார்த்திகேயன் ஒருத்தரை கலாயித்து இருக்கிறார். அதைச் சொன்னா சண்டைக்கு வருவாங்க.. நமக்கு எதுக்கு வம்பு. ஏற்கனவே பல பஞ்சாயத்து ஓடி விட்ட…”
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இது யாரு?
@யாசின் நீங்க சொல்வது சரி தான். ஜெயப்ரகாஷ் ஒரு அருமையான நடிகர்.
@முத்துக்குமார் அப்படி இல்ல.. தொடர்ந்து எழுதற மாதிரியான நிலை. அவ்வளோ தான். இதை அப்படியே தொடருவது சிரமம்.
@ராஜேஷ் இதை பற்றி சுசீந்திரன் கிட்ட பேச வாய்ப்பு கிடைத்தா சொல்றேன்.. இந்த மாதிரி ராஜேஷ் ன்னு ஒருத்தர் செம்ம கோபத்துல இருக்காருன்னு 🙂
@ரோஷன் 🙂
@கௌரிஷங்கர் ரைட்டு
@ராஜ் வந்த வேலை முடிஞ்சுதா 🙂
@விஜய் படம் பாருங்க.. உங்களுக்கே புரியும் 🙂
பாட்டுக்காக வே படம் பாத்தேன்
ஒரு டைம் நிச்சயம் குடும்பத்தோட பாக்கலாம்
– அருண்
நல்ல விமர்சனம் இதற்காகவே இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டும் நன்றி அண்ணா
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘ஊதா கலர் ரிப்பனாக’ நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, கோலிவுட்டுக்கு வந்திருக்கும் சுந்தர தெலுங்கு நடிகை. அவரின் தெலுங்கு கலந்த தமிழில் ஓர் உரையாடல்.
சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கிறதா சொல்றாங்களே…?
சிவகார்த்திகேயனோட நான் மட்டும்தான்னு கிடையாது. யார் நடிச்சாலும் கெமிஸ்ட்ரி நல்லாதான் இருக்கும். யாரையும் ஃபாலோ பண்ணாம அவருக்குன்னு ஒரு ஸ்டைலை ஃபாலோ பண்ணி சக்ஸஸ் பண்றாரு.
சிவாகிட்ட நேர்ல பழகினா, ஸ்க்ரீன்ல பண்றா மாதிரியே கேஷுவலா பேசி அந்த இடத்தையே ஜாலியான சூழ்நிலையா மாத்திடுவாரு.” (சிவபுராணம் நல்லாயிருக்குங்க)
சுவாரஸ்யமான ஷூட்டிங் அனுபவம் ஏதாவது உண்டா?
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு மலையில் ஷூட்டிங்குக்காகப் போனோம். நிறைய இடங்களில் மழை வருது. அதனால எப்ப வேணும்னாலும் வெள்ளம் வரலாம்னு அப்பகுதி மக்கள் எச்சரிக்கை பண்ணாங்க. எவ்வளவோ பார்த்துட்டோம், வெள்ளத்தையும் பார்த்துடுவோம்னு நாங்க எங்க வேலையைப் பார்த்துக்கிட்டிருந்தோம். சில மணி நேரம் கழித்து திடீரென தூரத்தில் ஏதோ ஒண்ணு எங்க யூனிட்டைப் பார்த்து வர்ற மாதிரி இருந்தது. பக்கத்துல வரவர மெகா சைஸில் வெள்ளம் வந்துகிட்டு இருந்தது தெரிந்தது. தப்பிச்சோம் பிழைச்சோம்னு யூனிட்டில் இருக்கறவங்களெல்லாம் ஓடி பாதுகாப்பான இடத்துக்குப் போயிட்டோம். சில நிமிஷத்துல வெள்ளம் வடிஞ்சது. ஷூட்டிங்கையும் ஸ்டார்ட் பண்ணிட்டோம். கொஞ்சநேரத்துல எங்களையெல்லாம் ஒரு காட்டுக் காட்டிய வெள்ளத்தை மறக்க முடியாது.
ஊதா கலர் ரிப்பன் பாட்டுக்காக சத்யராஜ், சிவா, நான் உட்பட அனைவரும் ராஜா – ராணி கெட்டப்பில் இருந்தோம். கட்டபொம்மன் டயலாக்கை சத்யராஜ் பேசும்போது, அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்திருந்த 3000 பேரும் ஓ….ன்னு கத்தி ஆரவாரம் பண்ணாங்க. சத்யராஜ்க்கும் இந்த டயலாக்குக்கும் இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைச்சதைப் பார்த்து பிரமிச்சிட்டேன்.”
சினிமா மாதிரி, ரியலில் ஸ்கூல் டீச்சருக்கு லவ் லெட்டர் தரச் சொல்லி யாராவது உங்களை அப்ரோச் பண்ணதுண்டா?
லவ் லெட்டர் தர்றதா இருந்தா லவ் பண்றவங்ககிட்ட நேரிடையா தரணும். தூது அனுப்பக் கூடாது. லவ்வை டைரக்டா சொல்ல முடியாதவங்க லவ் பண்ணக்கூடாது.”
ஸ்கூலில் லவ் லெட்டர் கொடுத்த – வாங்கிய அனுபவங்கள் உண்டா?
அப்பா போலீஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்றார். என்னோட ஸ்கூல் ஆர்மி ஸ்கூல். பேரண்ட்ஸும், ஸ்கூலும் ஸ்ட்ரிக்டா இருந்ததால லவ் லெட்டர் தர, வாங்க சான்ஸ் இல்லை. ஆனா ஒருசில பசங்க லவ் பண்ற ஐடியாவோட உருகி உருகிப் பேசியிருக்காங்க.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு ரசிகர் திடீரென எழுந்து ‘ஸ்ரீதிவ்யா ஐ லவ் யூ’ன்னு கத்தினார். ஷூட்டிங் நடக்கும்போது கூட்டத்தில் நிறைய பசங்க என்னைப் பார்த்து ஐ லவ் யூ ன்னு கத்துவாங்க. இதுக்கெல்லாம் நான் டென்ஷனாக மாட்டேன். ஒருத்தர் நம்மை லவ் பண்றது பெரிய விஷயம். லவ்னா அன்புதானே.”
ஹைதராபாத் பெண்ணான உங்க கருத்து என்ன? ஆந்திர மாநிலம் தெலங்கானா – ஆந்திரான்னு பிரிவது சரியா?
என்னுடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் நான் கருத்து சொல்லக் கூடாது. ஆனா தெலுங்கு பேசக் கூடிய மக்களுக்குள் வேற்றுமைகள் உருவாக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.”
–இந்த வார கல்கியில் வெளியான நேர்காணல் – ஸ்ரீதிவ்யாவின் பரம ரசிகரான நண்பர் கிரியின் பார்வைக்கு 🙂
ஆர்ட் படம், சோஷியல் படம்னு மெரட்சிக் காட்டுவான்க. போய்ப் பார்த்தா டுபாக்கூரா ஆயிரம் பொத்தல் இருக்கும். ஆனா இது அப்படியில்ல மச்சி. விக்கலும், நக்கலுமா ‘மிக்கி மௌஸ்’ மாதிரி இந்தப் படத்தில சிவாண்டி (சத்யராஜ்), போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்) வந்து கலக்குறாங்க. மெலிசா வாழக்காய சீவி மாவுல முக்கி சொய்யுனு பஜ்ஜி சுடுறா மாதிரி சின்னச் சின்ன அட்வைஸ காமெடியில முக்கிச் சொய்யுனு சிரிக்க வெக்குறாங்கடா.”
அப்படியென்ன மாமு சொல்லிட்டாங்க இந்த காமெடி படத்துல?”
படிக்கிற பொண்ண லவ்வுக்குப் பயந்து திடுதிடுப்பின்னு நிறுத்தி கல்யாணத்தை செஞ்சி ஏண்டா காவு வாங்குறீங்க? லவ்வு ஒரு குத்தமாடா? புடிச்சவனோட ஆச தீர வாழட்டுமே. வெத்து கௌரவத்த காட்டி ஏண்டா பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிறீங்க?ன்னு கிச்சுகிச்சு மூட்டியே சொல்றானுக. தியேட்டர்ல ஜாதி கட்சிக்காரங்க கூட உழுந்து உழுந்து சிரிக்கிறாங்க விவரம் புரியாம.”
அட… அப்போ டைரக்டர் பொன்ராம் பாஸாயிட்டாருன்னு சொல்லு.”
அத விட வசனம் எழுதுன ராஜேஷ் வாயில சக்கரய கொட்டணும்… ‘நீ தலைவனா இருப்ப, அப்புறம் உம்புள்ள, அதுக்கப்புறம் உம்பேரன், நாங்க எப்பவும் இப்படி செயலாளராவே இருக்கணுமா’ன்னு கோடி +2 (பரோட்டோ சூரி) கேக்கும்போது தலையில கொட்டுறா மாதிரி ஜனங்க கைய தட்டுறாங்க மச்சி.”
கடசியா நீ கதய சொல்லிவியா மாட்டியா?”
அட ஓப்பனிங்கில்… காதலிச்ச குத்தத்துக்காக சிவனாண்டி பெத்த பொண்ணையே கண்ட துண்டமா வெட்டினவருன்னு ஸ்டார்ட் பண்றாங்க. என்னடான்னா ஒரு வாய்த்தகராறுல சிவனாண்டி ‘எம் பொண்ணுங்க காதலிச்சு ஓடிட்டா நான் காத அறுத்துக்கிறேன்’னு சபதம் உடுறாரு. அதனால 2 பொண்ணுங்க படிப்பை பாதியில நிறுத்திக் கல்யாணம் பண்ணிடுறாரு. 3வது பொண்ணு(ஸ்ரீதிவ்யா)வுக்கும் அப்படி பண்ணும்போது நம்ம ஹீரோ தடுத்து நிறுத்துறாரு. அந்தப் பொண்ண லவ்வும் பண்றாரு, மோதல் ஸ்டாட்டாகுது. காதல் என்னாச்சு? பொண்ண ஏன் வெட்டுனாரு? இதான் கத.”
அட நாதாரி பெத்த பொண்ண வெட்டிட்டு…”
பதறாத மாமு. பெத்த அப்பனே மனசு மாறி ஊருக்குத் தெரியாம லட்ச ரூபா கொடுத்து ஆசபட்டவனோடு ஊர விட்டு ஓடிப் போய் வாழுன்னு அனுப்பி வெச்சது அப்புறம் தெரியுது. இமான் மியூஸிக்கும் யுகபாரதி பாட்டும் மழகாலத்துல கருவாட்டுக் கொழம்பு மாதிரி நச்சுன்னு இருக்கு. அதுலேயும் எல்லார் வாயிலேயும் பாட வர்றா மாதிரி வார்த்தைங்க போட்டு… ‘ஊதா கலரு ரிப்பன் – யாரு உனக்கு அப்பன், ரோஜா கலரு பொம்மி – யாரு உனக்கு மம்மி’ – அட தூள்.
சிலுக்குவார்பட்டி கிராமத்தை பாலசுப்பிரமணியம் சிலுக்கு மாதிரி அழகா காமிச்சு இருக்காரு. சத்யராஜ் தான் பெரியார் ஆளுங்கிறத காமெடியிலும் சொல்லிட்டாரு. விடிஞ்சா லவ் பண்ண பொண்ணுக்குக் கல்யாணம். நைட்ல சோகத்துல இருக்குறப்ப ஒரு பொண்ணு ‘அக்கா உங்கள அவசரமா வரச் சொன்னாங்க’ன்னு சொன்னதும் சிவகார்த்திகேயன், ‘பாப்பா உங்க அக்கா அழகா இருப்பாங்களா?’ என்று அசால்டா அடுத்த வேலைய பாக்கப் போகும்போது ஜனங்க சிரிக்கிறாங்க. இதுதானே பிராக்டிக்கல் மாமு. எல்லாரும் இப்படி டேக் இட் ஈஸின்னு எடுத்து கிட்டா ஆஸிட் வீசுறதுக்குத் தோணாதே?”
அப்போ படம் ஏ கிளாஸ்னு சொல்லு…”
சிரிக்கத் தெரிஞ்ச எல்லா கிளாஸ் சனங்களும் இந்தச் சங்கத்துல சேரலாம்.”
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சூப்பர் ஹிட் ஆன சந்தோஷத்தில் புது வாய்ப்புகளை ‘கவனிக்க’ மேனேஜரை நியமித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
நானும் பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவுக்கு ரசிகன்தான் இருந்தாலும் பார்க்காதே பார்க்காதே பாடலில் கதாநாயகியின் முகம்மட்டும் ஏன் பல இடங்களில் out of போகஸ். யாருக்கு வேணும் சிவாவின் முகம்.
பிரபாகர்