சிங்கப்பூர் தொழில்நுட்பப் பூங்கா!

24
சிங்கப்பூர் தொழில்நுட்பப் பூங்கா!

சிங்கப்பூர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சுத்தம், பெரிய அழகான கட்டிடங்கள், அபராதங்கள் ஆகியவை தான். நாம் பார்க்க இருப்பது சிங்கப்பூர் தொழில்நுட்பப் பூங்கா!

சிங்கப்பூர் தொழில்நுட்பப் பூங்கா!

சிங்கையில் நகரத்தின் எல்லையில் விமான நிலையம் அமைந்துள்ள சாங்கி என்ற இடத்தில் மிகப்பெரிய பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது.

இதை Changi Business Park என்று அழைப்பார்கள் சுருக்கமாக CBP.

ஒரு அலுவலக இடம் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அட்டகாசமாக அமைத்து இருக்கிறார்கள்.

அலுவலகத்துக்கு மட்டுமே!

இங்கு வேறு எந்தக் கமர்சியல் கடைகளோ, வீடுகளோ அல்லது பொழுதுபோக்கு இடங்களோ எதுவுமே கிடையாது. அலுவலகங்கள் என்றால் அலுவலகங்கள் மட்டுமே தான்.

எனவே, அனாவசிய போக்குவரத்து எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும்.

பொதுவாகச் சிங்கையில் வாகனங்கள் ஹார்ன் பயன்படுத்தமாட்டார்கள். அதுவும் இங்கே எந்தச் சத்தமும் இல்லாமல் மிக மிக அமைதியாக இருக்கும்.

பிரபல நிறுவனங்கள் பல இங்குத் தங்கள் கிளையை வைத்துள்ளன, இங்கு இல்லாமல் நகரத்திலும் வைத்து இருப்பார்கள்.

கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக மற்றவர்களுக்குச் சிறு தொந்தரவு கூட இல்லாமல் அமைக்கப்பட்டு இருக்கும்.

தொழில் நேர்த்தி

இங்குத் தற்போது பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இவர்கள் கட்டுவதும் தெரியாது முடிப்பதும் தெரியாது. மிகவும் திட்டமிட்டுக் கட்டுவார்கள்.

கட்டி முடித்த பிறகு கட்டி முடித்ததற்கான சிறு அறிகுறி கூடத் தெரியாது (எடுத்துக்காட்டாகப் பலகை, கம்பி, சிமென்ட் போன்றவை இல்லாமல்) சுத்தமாக இருக்கும்.

இதை விட வியப்பு உடன் ஓரளவு பெரிய மரங்கள் ரெடிமேடாகக் கொண்டு வந்து நட்டி விடுவார்கள்.

அதனுடன் சிறு செடிகள் அழாக அமைத்து, இது புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் என்ற அடையாளமே இல்லாமல் சிறப்பாக அமைத்து விடுவார்கள்.

சுத்தம்

இங்கு ஒரு லாரி வந்து மண் எடுத்துச் செல்கிறது என்றால் அதன் டயரை கழுவி விட்ட பிறகு வெளியே அனுமதிக்க முடியும், இல்லை என்றால் அபராதம் விதித்து விடுவார்கள்.

இது சாலை அழுக்காகி விடக் கூடாது என்பதற்காக!

கட்டிடம் கட்டப்படும் போது சுற்றி தடுப்பு அழாக அமைத்து இருப்பார்கள், புழுதி எதுவுமே பறக்காத படி திரை அமைத்துத் தான் வேலை செய்வார்கள்.

இது இங்கு மட்டுமல்ல சிங்கை முழுவதும் இதைப்போலவே தான்.

சிங்கையில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தகுந்த பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் இங்கே பணி புரிய முடியாது.

இனி இங்குள்ள சில கட்டிடங்களைப் பற்றிப் பார்போம்

Signature Building

CBP என்றாலே அங்கு அனைவருக்கும் தெரிந்த கட்டிடம் Signature Building. இந்தப் பகுதியில் உள்ள மிகப்பெரிய கட்டிடம்.

இங்குப் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன, ஆனால் நான் பணி புரியும் SWISS வங்கியின் ஊழியர்கள் தான் அதிக அளவில் இங்குப் பணி புரிகிறார்கள். கட்டிடத்தின் பெரும்பாலான தளங்களை எங்கள் நிறுவனமே வைத்துள்ளது.

இங்கு இந்தியர்கள் பெருமளவில் பணி புரிகின்றனர். முதன் முதலில் நான் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்து, நுழைந்த போது இந்தியாவின் வேறு மாநிலத்தில் நுழைந்ததைப் போலவே இருந்தது.

அந்த அளவிற்கு அதிகளவில் நம்மவர்கள் பணி புரிகிறார்கள்.

உள்ளே ரொம்ப ஹைடெக்காக எதிர்பார்த்தேன் ஆனால் அந்தளவு இல்லை, நகரத்தில் உள்ள எங்கள் கிளை அற்புதமாக இருக்கும்.

இங்கு உணவுக் கூடங்கள் [Food Court] கீழ் தளத்தில் உள்ளது, பல நாட்டு வகை உணவுகளும் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாகக் கொரியா, ஜப்பான், மெக்சிகன், சீனா மற்றும் இந்தியா போன்றவை. ஜப்பான், மெக்சிகன் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன்..(பாம்பு ஐட்டம் எதுவும் இல்லை 😀 ).

இங்கு மேல் தளத்தில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் என்று அனைத்தும் உள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வளாகத்தில் நம்ம ஊர் சரவணப் பவன் வரப்போகிறது 🙂 .

பிற கட்டிடங்கள்

கட்டிடம் வட்ட வடிவமாக முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படிக் கண்ணாடியால் அமைப்பதில் ஒரு வசதி செலவு குறைவு.

இது மிகவும் பிரபலமான IBM நிறுவனத்தின் கட்டிடம்

பிரபலமான வங்கிகளில் ஒன்றான Standard Chartered வங்கியின் அலுவலகம்

இது ஒரு மென்பொருள் நிறுவனம்

இது தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம், கருப்பு கண்ணாடியால் அமைக்கப்பட்டு அட்டகாசமாக உள்ளது.

இங்கு உள்ள கட்டிடங்களிலேயே வெளித்தோற்றத்தில் என்னை மிகவும் கவர்ந்த கட்டிடம்.

எனக்குக் கருப்பு வண்ணம் ரொம்பப் பிடிக்கும், அதனாலே இதன் மீது எனக்கு ஒரு கூடுதல் கவர்ச்சி.

இதை அந்த வழியாகச் சென்றால் ரசிக்காமல் என்னால் செல்லவே முடியாது. இந்த கட்டுரையை எழுத முக்கியக் காரணமே இந்தக் கட்டிடம் தான்.

இங்குப் படம் எடுப்பதில் உள்ள பெரிய பிரச்சனை, கட்டிடங்கள் மிகவும் உயரமாகவும் நீளமாகவும் உள்ளது.

கட்டிடங்கள் அருகருகே இருப்பதால் முழுவதையும் உள்ளடக்கி எடுக்க முடியவில்லை.

நான் வைத்துள்ள நிழற்படக் கருவியை விட தொழில்நுட்பம் அதிகம் உள்ள கருவியாக இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் 🙁 .

இதன் காரணமாக Citi Bank கட்டிடத்தை என்னால் முழுவதும் எடுக்க முடியவில்லை.

இங்குக் குப்பையே போடமாட்டார்கள் என்று கூறமாட்டேன், இங்கேயும் (ஓரளவு) குப்பை போடுவார்கள் ஆனால், சுத்தம் செய்து விடுவார்கள்.

சாலைகள் மிகவும் தரமானவையாக இருக்கும் (இங்கு மட்டுமல்ல சிங்கப்பூர் முழுவதும்), மழை பெய்து பார்த்தால் சாலையைக் காண கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.

சுத்தமான சாலை மேலும் சுத்தமாகக் கழுவி விட்டது போல இருக்கும்.

இந்தப் படத்தில் ஒருவர் விடுமுறை நாளில் கருமமே கண்ணாகச் சுத்தம் செய்து கொண்டுள்ளார்.

சிங்கையில் மரங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கிடைத்த கேப்ல எல்லாம் கிடாய் வெட்டுறதுன்னு நம்ம ஊருல சொல்ற மாதிரி கிடைத்த கேப்ல எல்லாம் இவங்க மரம் வைத்துடுவாங்க.

அதுவும் சமீபமாக மரம் வைப்பதில் இவர்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் சரமாரியாக வைத்து என்னைப் போன்ற இயற்கை விரும்பிகளைத் திக்குமுக்காட வைக்கிறார்கள்.

சென்னையில் உள்ள Trade Centre போலத் தொழில்நுட்ப பூங்கா அருகிலேயே மிகப்பெரிய Expo என்ற பொருட்காட்சி இடம் உள்ளது.

இங்கு அடிக்கடி தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும்.

இங்கே IT Expo என்ற எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமாகப் பொருட்காட்சி அடிக்கடி நடக்கும், பொருட்கள் தள்ளுபடி விலையில் அனைவரும் வாங்குவார்கள்.

Laptop, Hard Disk, Camera, TV என்று இங்குக் கிடைக்காத பொருட்களே இருக்காது.

நம்ம ஊர் குருவிகள் இந்தச் சமயத்தில் அதிகளவில் பொருட்களை வாங்கி நம்ம ஊருக்கு எடுத்துச் செல்வார்கள். பொதுமக்களும் இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

Expo

இது தொழிநுட்ப பூங்கா வருவதற்கான ரயில் நிலையம்.

இதனை ஒட்டி Expo உள்ளது. இங்கே இருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் தொழில்நுட்ப பூங்காவை அடைந்து விடலாம்.

இந்த ஏரியா முழுவதும் எந்த ஒரு குடியிருப்போ அல்லது கமர்சியல் கடைகளோ எதுவும் கிடையாது (ஒரு சில அனுமதி பெற்ற கடைகளைத் தவிர).

அனாவசியமாக எந்த ஒரு போக்குவரத்தும் இருக்காது. தொழிநுட்ப பூங்கா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது புதிதாக ஹோட்டல்கள் உட்பட மிகப்பெரிய வளாகம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, பொருளாதார மந்தம் காரணமாக வேலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

படத்தில் பார்ப்பது கட்டப்படப்போகும் வளாகத்தின் ஆரம்பக் கட்ட பணிகள்.

ரயில் நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் இது, பின்னணியில் தெரிவது நான் முன்பு கூறிய Signature Building.

இவை தவிர DHL மற்றும் பல நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளது, அவை கொஞ்சம் தள்ளி இருந்ததால் அவற்றை நான் நிழற்படம் எடுக்கவில்லை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

  1. படங்களெல்லாம் நல்லாருக்கு கிரி! அலுவலகக் கட்டிடங்கள் பொறாமைப்பட வைக்குது.

  2. நல்லாருக்கு உங்க எழுத்து நடை.. நிறைய தகவல்கள சேகரிச்சிருக்கீங்க.. பாராட்டுக்கள்…

  3. / பிரபாகர் said…

    கிரி,

    போட்டோ எல்லாம் கலக்கலா இருக்கு பாஸ்… கிருஸ்துமஸ் சம்மந்தமா போட்டோவோட இருகை போட தூண்டுது!/

    இதான் நைட் டூட்டியா பர்த்டே பேபி. அதேன்ன இருகை. எங்க ஸ்பெல்லோன்னாலும் விடமாட்டம்டி.:))

    அழகான படங்களும் விளக்கங்களும் கிரி. தாங்க்ஸ்

  4. கிரி, நல்ல பதிவு. அதுவும் சிங்கையில் மழை பெய்த பிறகு நீண்டு பரவி கிடக்கும் புல் வெளிகளை பார்த்து ரசிப்பது அலாதியான சுகம். முதல் முறை சிங்கையை விட்டு நம்ம நாட்டுக்கு சென்ற பிறகு மீண்டும் சிங்கை வரவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. இதோ,இரண்டாம் முறையும் வந்து இந்த சிங்கை நகர் அழகையும் வசதிகளையும் அனுபவித்தகிவிட்டது. இன்னும் 8 நாட்களில் இந்த நாட்டை விட்டு மீண்டும் இந்தியா போக போகிறேன்.இழக்க கூடாததை இழக்க போகிறோம் என்பது போன்ற ஒரு உணர்வு. எங்கே போகிறேன்? நம் நாட்டுக்கு தானே. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன். – பயபுள்ள.

  5. "இதான் நைட் டூட்டியா பர்த்டே பேபி"

    Giri thala ungaluku porantha naala sollave illai… Many more happy returns of the day Thala

  6. வெயிலான் அண்ணாமலையான் பாராட்டிற்கு நன்றி 🙂

    ===================================
    // Arun said…
    Appuram yeppa thala Vettaikaran pakka poreenga?//

    அடுத்த வாரம் செல்லலாம் என்று இருக்கிறேன், ஆனால் விமர்சனம் எழுத மாட்டேன் (ஏற்கனவே போதுமான அளவிற்கு ஏகப்பட்ட பேர் எழுதிட்டாங்க)

    //Giri thala ungaluku porantha naala sollave illai… Many more happy returns of the day Thala//

    பிறந்த நாள் என்னக்கில்லை அருண், பிரபாகருக்கு 🙂

    =====================

    பிரபாகர் நான் கூட Ruffles Place ல நிறைய அலங்காரங்கள் பார்த்தேன், கேமரா எடுத்துச்செல்ல மறந்து விட்டேன். நீங்க படங்களை போடுங்க

    =============================

    // வானம்பாடிகள் said…

    இதான் நைட் டூட்டியா பர்த்டே பேபி. அதேன்ன இருகை. எங்க ஸ்பெல்லோன்னாலும் விடமாட்டம்டி.:)//

    ஹா ஹா ஹா

    //அழகான படங்களும் விளக்கங்களும் கிரி. //

    நன்றி சார்

    ==================================

    // paya said…

    கிரி, நல்ல பதிவு. அதுவும் சிங்கையில் மழை பெய்த பிறகு நீண்டு பரவி கிடக்கும் புல் வெளிகளை பார்த்து ரசிப்பது அலாதியான சுகம்//

    உண்மை தான். ரொம்ப அழகாக இருக்கும்.

    நீங்கள் மீண்டும் திரும்பி வர வாழ்த்துக்கள் 🙂

  7. கிரி , CBP விமான நிலையம் அருகில் இருப்பதால் , அந்த சப்தம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன் .

  8. கிரி,

    போட்டோ எல்லாம் கலக்கலா இருக்கு பாஸ்… கிருஸ்துமஸ் சம்மந்தமா போட்டோவோட இருகை போட தூண்டுது!

    பிரபாகர்.

  9. "பிறந்த நாள் என்னக்கில்லை அருண், பிரபாகருக்கு" – AAhaaa vadaaaa pocheeeee… Aaaaavvvvvvvvvv

    Vazhthukall Prabhakar Sir

    Thanks,
    Arun

  10. எல்லாம் படங்களும், தகவல்களும் அருமை!
    அங்க பறக்கும் ரயில் இருக்கா பாஸ்???

  11. விரிவான விளக்கங்கள் அழகான படங்களுடன். நன்று கிரி. இருக்கிற மரங்களையெல்லாம் மெட்ரோவுக்காகவும் சாலை விரிவாக்கத்திற்காகவும் வெட்டி வருகிறார்கள் இங்கு. என்னதான் ‘காலத்தின் தேவை’ என்றாலும் பின்விளைவுகளை எண்ணி மனம் வருத்தமடைகிறது.

    //கிடைத்த கேப்ல எல்லாம் இவங்க மரம் வைத்துடுவாங்க//

    வெட்டுகிற மரங்களுக்கு ஈடாக இதைச் செய்தால் தேவலாம்.

  12. ஒரு பத்து வருஷத்திற்கு முன் என்றால், சிங்கை தொழில்நுட்பப்பூங்கா பிரமிப்பான விஷயம்தான்.. கட்னாய்ங்களா, செஞ்சாய்ங்களா-னு கேட்டிருப்போம்..இங்கேயே கருப்பு கண்ணாடி ’போர்த்திய’ கட்டிடங்கள் நிறைய வந்துவிட்டதால், சென்னையும் ரவுடிதான் சொல்லிக்கிற மாதிரி இருக்கு..கார்த்திகேயன்

  13. //பாஸ்கரன் சுப்ரமணியன் said…
    கிரி , CBP விமான நிலையம் அருகில் இருப்பதால் , அந்த சப்தம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்//

    அப்படியா! நானும் சத்தம் கேட்பேன்..ஆனால் தொந்தரவு தரும் அளவிற்கு இருப்பதாக தோன்றவில்லை. எங்கள் அலுவலகத்தில் ஒரு சிலர் விமானத்தை பார்த்தே நேரம் சொல்பவர்கள் கூட உள்ளார்கள் 🙂

    ============================

    // ச்சின்னப் பையன் said…

    சூப்பர் படங்கள்//

    நன்றி ச்சின்ன பையன்

    ===================================

    // Arun said…

    "பிறந்த நாள் என்னக்கில்லை அருண், பிரபாகருக்கு" – AAhaaa vadaaaa pocheeeee… Aaaaavvvvvvvvvv//

    அருண் கவலைப்படாதீங்க! அப்படி இருந்தால் உங்களுக்கு வடையோடு முடித்து விட மாட்டேன் :-))) அருணுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தான் 😉

    ==================================

    // கலையரசன் said…

    எல்லாம் படங்களும், தகவல்களும் அருமை!
    அங்க பறக்கும் ரயில் இருக்கா பாஸ்??//

    கலையரசன் பறக்கும் ரயில் என்றால்.. சென்னையில் உள்ளது போல உள்ளது, அதே போல பாதாள ரயில்கள் உள்ளன. நிலத்திற்கு அடியில் மூன்றடுக்கு வரை. அதாவது மாடியில் மூன்று மாடி போல, கீழே மூன்று மாடி அளவு இறக்கம். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு பாதை ரயில். இதை எல்லாம் எப்படித்தான் கட்டினார்களோ! அவ்வளோ பெரியதாக இருக்கும் அதே போல அனைத்தையும் சரியாக எளிதாக இணைத்து இருப்பார்கள்.

    =====================================

    // ராமலக்ஷ்மி said…

    விரிவான விளக்கங்கள் அழகான படங்களுடன். நன்று கிரி. //

    ராமலக்ஷ்மி உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன்..பாருங்க உங்களுக்கு போட்டியா நானும் படங்களை போட்டு இருக்கிறேன்.. எப்ப்பூடி! :-)) நாங்களும் ரவுடி தான் 😉

    நீங்க மரம் பற்றி கூறியது… நாம இப்படியே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். அதிகாரத்தில் உள்ளவர்கள் சரியாக இல்லாதவரை இந்த நிலை தான் தொடரும். வயிறு எரியுது.. என்ன பண்ணுறது! இந்த கம்முனாட்டிகளை நினைத்து ஆத்திர படுவதை தவிர 🙁

    என்னமோ! உ

  14. தல, போட்டோ எடுக்கும்போது என்னையும் சேர்த்து எடுத்துருக்கணும். வன்மையாக கண்டிக்கிறேன். 🙂

    அப்படியாவது இந்த கட்டங்களுக்கு திருஷ்டி சேர்த்த மாதிரி இருந்திருக்கும்.

    ஆமா, தெரியாம தான் கேக்குறேன்… உங்களுக்கு கருப்பு கலர் ரொம்ப புடிக்குதுன்னு சொல்லி இருக்கீங்க. அதுக்கும் உங்க ப்ரோபைலுல இருக்கிற அத்தாச்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குல??? :-))

  15. வாவ் எவ்வளவு அழகான கட்டிடங்கள்.

    கீழே ரோடு கூட என்ன ஒரு சுத்தம்.
    சூப்பர் கிரி.கூகுல் மூலம் இன்று பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

    இதில் உங்கள் அலுவலகம் எது?

  16. // சிங்கக்குட்டி said…
    இதில் உங்கள் அலுவலகம் எது?//

    சிங்கக்குட்டி… இடுகையிலே கூறி இருப்பேனே! அதில் உள்ள Signature Building ல் தான் எங்கள் அலுவலகம் உள்ளது.

    =======================================

    // ரோஸ்விக் said…

    தல, போட்டோ எடுக்கும்போது என்னையும் சேர்த்து எடுத்துருக்கணும். வன்மையாக கண்டிக்கிறேன். :-)//

    :-))

    // தெரியாம தான் கேக்குறேன்… உங்களுக்கு கருப்பு கலர் ரொம்ப புடிக்குதுன்னு சொல்லி இருக்கீங்க. அதுக்கும் உங்க ப்ரோபைலுல இருக்கிற அத்தாச்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குல??? :-))//

    அது வேறு இது வேறு! 🙂 எனக்கு நிஜமாவே கருப்பு வண்ணம் பிடிக்கும்

    ===================================

    // hayyram said…

    உங்க பதிவ விடுங்க. அத விட அவதார் போட்டோ தான் என்னை ரொம்ப கவர்ந்திருச்சி. விழுந்து விழுந்து சிரிச்சேன். விஜய் படத்த சும்மா பாத்தாலே சிரிப்பா வரும். ஒக்காந்து யோசிப்பாங்களோ.//

    ராம் என்னடா இது! யாரும் இது மாதிரி சொல்லவில்லையே என்று பார்த்தேன்! :-)) நீங்க சொல்லிட்டீங்க..

    உள்ளத்தை அள்ளித்தா படத்துல சொல்ற மாதிரி! சார் டெம்ப்போ எல்லாம் வைத்து கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து கொடுங்க என்ற சொல்ற மாதிரி..கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளேன் ..கொஞ்சம் பார்த்து சொல்லுங்க :-)))

  17. எப்படி இருக்கீங்க கிரி?நல்லா ஊர் சுத்துறீங்க போல இருக்குதே:)

  18. படங்கள் கண்ல ஒத்திக்கலாம் போல இருக்குங்க கிரி! ஆனா, கட்டடங்கள் எல்லாமே ப்ளூ கண்ணாடியாவே இருக்கே. அது கொஞ்சம் போரடிக்குது! பை த பை, நீங்க போறபோக்குல ஸ்விஸ் வங்கியில வேலை செய்யறதா சொல்லிட்டீங்க. ஜெயலலிதா, கருணாநிதியெல்லாம் அங்கே எத்தனை துட்டு போட்டு வெச்சிருக்காங்கன்னு ஒரு பதிவு எடுத்து வுடுங்களேன்!

  19. // ராஜ நடராஜன் said…
    எப்படி இருக்கீங்க கிரி?நல்லா ஊர் சுத்துறீங்க போல இருக்குதே:)//

    நடராஜன் நான் எங்கங்க சுத்தினேன்..இந்த படங்கள் எல்லாம் என் அலுவலகம் அருகில் எடுத்தது 🙂

    =================================

    // கிருபாநந்தினி said…

    படங்கள் கண்ல ஒத்திக்கலாம் போல இருக்குங்க கிரி! ஆனா, கட்டடங்கள் எல்லாமே ப்ளூ கண்ணாடியாவே இருக்கே. அது கொஞ்சம் போரடிக்குது! //

    🙂 கருப்பு கலரா நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு கட்டிடம் பாருங்க கலக்கலா இருக்கு.. அதென்னமோ எல்லோரும் நீல வண்ணத்தையே தேர்வு செய்கிறார்கள் ..ஒருவேளை அது ப்ரொஃபசனல் லுக் தருதோ என்னவோ! 😉

    //போறபோக்குல ஸ்விஸ் வங்கியில வேலை செய்யறதா சொல்லிட்டீங்க. ஜெயலலிதா, கருணாநிதியெல்லாம் அங்கே எத்தனை துட்டு போட்டு வெச்சிருக்காங்கன்னு ஒரு பதிவு எடுத்து வுடுங்களேன்!//

    நந்தினி வேலைக்கே வேட்டு வைத்துடுவீங்க போல!

  20. மற்றுமொரு அருமையான தகவல்கள் உங்களது கலக்கலான உரைநடையில்…பதிவுக்கு ஏற்ற புகைப்படங்கள்..இறுதி புகைப்படம் மட்டும் வித்தியாசமாக உள்ளது (இரவு வேலையில் எடுக்க பட்டதா)..பதிவு முடிந்து விட்டதாக கூறும் படி உள்ளது

  21. // Sadhasivam said…
    இறுதி புகைப்படம் மட்டும் வித்தியாசமாக உள்ளது (இரவு வேலையில் எடுக்க பட்டதா)..பதிவு முடிந்து விட்டதாக கூறும் படி உள்ளது//

    ஆமாம் இரவு எடுக்கப்பட்டது ..அலுவலகம் முடிந்த பிறகு வீட்டிற்கு போகும் போது எடுத்தேன் 🙂

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சதா

  22. இங்கே IT Expo என்ற எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமாக பொருட்காட்சி அடிக்கடி நடக்கும், பொருட்கள் தள்ளுபடி விலையில் அனைவரும் வாங்குவார்கள்

    கிரி,த‌ள்ளுப‌டியெல்லாம் அவ்வ‌ள‌வு பிர‌மாத‌மாக‌ இருக்காது அதுவும் சிம் லிம் ஸ்கொய‌ர் விலைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இம்மாதிரி எக்ஸ்போவில் வாங்க‌மாட்டார்க‌ள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!