Avatar (2009) | மிரட்டும் பிரம்மாண்டம்

32
Avatar அவதார்

ஜேம்ஸ் கேமரூன் “டைட்டானிக்” வெளிவந்து 11 (2009*) வருடம் ஆகிறது, அப்படத்தின் பிரம்மாண்டமே இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. அதை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இன்னொரு படம் அவதார்  (Avatar).

அவதார் / Avatar

வேற்று கிரகம் ஒன்றில் “நவி” என்ற இனத்தினர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

விலைமதிக்க முடியாத கனிமங்கள் உள்ளதை இங்குள்ளவர்கள் கண்டு பிடித்து, அதை அபகரிக்கப் படையெடுக்கிறார்கள். என்ன ஆகிறது என்பதே கதை.

படத்தின் சுவாராசியங்கள் சில

  • பெரும்பாலான காட்சிகள் CG எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள். சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள்.
  • இதில் வரும் போர் விமானங்கள் டிராகன்கள் மற்றும் சில மிருகங்கள் இவர்களின் கற்பனையின் உச்சம்.
  • ஜேக்கும் அவரைக் காப்பாற்றும் நவி பெண்ணும் காதலிக்கிறார்கள். அதை மிக இயல்பாக ரசிக்கும் படி எடுத்து இருப்பது அருமை.
  • நம்ம ஊர்ல குதிரையை அடக்குனா வீரன் என்கிற மாதிரி இங்க டிராகனை அடக்க வேண்டும்.. ஒரு பிரம்மாண்டம் வேண்டாமா! 🙂 .
  • இதில் வரும் போர் விமானங்கள் யப்பா! என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது.
  • இவர்கள் “பண்டோரா” காட்டில் உள்ள தாவரங்கள், தரை பரப்பு, கொடிகள், பூச்சிகள் எல்லாம் மின்னுபவையாகச் சொர்க்கலோகம் போலக் காட்சி தருகின்றது.
  • படம் ஆரம்பித்துச் சாதாரணமாகச் செல்லும் படம் இந்த “பண்டோரா” காட்டை அடைந்தவுடன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கிறது.
  • பெரிய மரங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அந்தரத்தில் தொங்கும் மலைகள் என்று ஜேம்ஸ் கேமரூனின் (மற்றும் அவரது குழுவினர்) கற்பனை திறன் புகுந்து விளையாடி உள்ளது.
  • ஜேக் மற்றும் அவரது காதலி தங்களது டிராகானில் ஒரு பயணம் செல்வார்கள் பாருங்க! உண்மையில் நாமே அவர்களுடன் அமர்ந்து செல்வது போல இருக்கும்.
  • மேலே இருந்து ஜிவ்வென்று கீழு தாறுமாறான வேகத்தில் செல்லும் போது நமது அடிவயிறு ஜிலீர் என்கிறது.
  • அவர்களை வேறொரு பயங்கர டிராகன் துரத்தும் போது மரங்களுக்கு இடையே புகுந்து தப்பி செல்வார்கள்.
  • படைகள் இவர்களது ஒரு பகுதியைக் குண்டு போட்டு அழிக்க, அந்த அழகான அமைதியான இடம் நாசமாவதை கண்டு பொறுக்க முடியாமல் ஜேக்கின் காதலி கண்ணீர் விட்டுக் கதறும் போது நம்ம மனது கனத்து விடும்.
  • இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.
  • ‘Avatar’ என்ற வார்த்தை இந்தியச்சொல்.

படத்துல குறையே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்தின் கதையே அரதபழசானது தான், அதைக் கூறிய விதம் தான் விஷயம்.

“அவதார்” படம் முழுவதும் “அதகளம்”

Directed by James Cameron
Produced by James Cameron, Jon Landau
Written by James Cameron
Starring Sam Worthington, Zoe Saldana, Stephen Lang, Michelle Rodriguez, Sigourney Weaver
Music by James Horner
Cinematography Mauro Fiore
Edited by Stephen Rivkin, John Refoua, James Cameron
Release date December 10, 2009 (London), December 18, 2009 (United States)
Running time 161 minutes
Country United States
Language English

தொடர்புடைய கட்டுரை

டைட்டானிக் பற்றி அரிய தகவல்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

32 COMMENTS

  1. தல… 12 வருடமெல்லாம் உழைக்கலீங்க. 2006-ல்தான் ஸ்க்ரிப்டே (இரண்டாம் முறை) எழுத ஆரம்பிச்சாங்க.

    கலக்குங்க! 🙂

    ——

    லிங்கிற்கு நன்றி!;)

  2. அசத்தல் கிரி!

    நேற்றுதான் கேத்தியில் பார்த்தேன். இத படிச்சிட்டு போயிருந்தா இன்னும் ரொம்ப ரசிச்சி பாத்திருப்பேன்…(கதை கொஞ்சம் புரியல… இப்போ, கிரியால எல்லாம் கிளியர்). 3D டிக்கெட் கிடைக்கல, இன்னொரு தடவ பாத்துட வேண்டியதுதான்…

    பிரபாகர்.

  3. கிரி

    உங்களின் “அவதார்” திரை விமர்சனம் அதகளம்….

    அது என்ன இந்த படம் தமிழ் படம் மாதிரி இவ்ளோ நீளம் – 161 நிமிடங்கள்??!!

    புலி உறுமுது
    நான் அடிச்சா

    இது மாதிரி காவிய பாடல்கள் இல்லாததே ஒரு சாதனைதான்….

  4. வெள்ளக்காரனுவ 2012,அவதார்னு நம்ம பணத்தையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போறானுவ

  5. அருமையான விமர்சனம்.

    //இதில் உள்ள தொழில் நுட்பத்தை அவர்கள் 12 வருட உழைப்பை பார்க்கவாவது நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.//

    சரியான பாயிண்ட்தான். பார்த்து விடுகிறோம்:)!

  6. தியேட்டரில்தான்:)!

    //இதன் தொழில்நுட்பத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.//

    அப்போதானே இது சாத்தியமாகும்:)!

  7. Dear Giri,

    Avatar Movie:
    + points:
    ScreenPlay
    Navi Girl Acting
    Background Music(Fantastic)
    Computer Graphics

    – Points:
    3D Effects(I watched in
    IMAX3D,but the 3D effects are not even up to Indian standard).
    Few logical mistakes.

    Despite the negative points it's a good movie to watch.
    For better 3D Effects you can watch Harry Pooter 6.

    Balakumaran.

  8. //ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. //

    I also did the same 🙂

  9. அந்த படத்த பாத்துட்டு வந்ததிலிருந்து ஒரே தலைவலி

    எது எப்படி இருந்தாலும் , படம் அட்டகாசம்.

  10. // eppoodi said…
    இன்னும் srilanka வில ரிலீஸ் ஆகல ; பார்க்கணும் ;)//

    திரைஅரங்கில் பார்த்தால் மட்டுமே சிறப்பு 🙂

    ======================================================================

    பிரபாகர் நான் கூட 3D இல்லாம பார்க்கணும் என்று இருக்கிறேன் 🙂

    ======================================================================

    // ஹாலிவுட் பாலா said…

    தல… 12 வருடமெல்லாம் உழைக்கலீங்க. 2006-ல்தான் ஸ்க்ரிப்டே (இரண்டாம் முறை) எழுத ஆரம்பிச்சாங்க.//

    பாலா எனக்கு மட்டும் என்னங்க தெரியும் செய்திகளில் படித்து தான்..அவர் டைட்டானிக் முன்னாடியே இது பற்றி யோசித்து வைத்து இருந்தாராம் அப்போது இதை போல தொழில்நுட்பம் இல்லையாம்… 🙂

    ======================================================================

    ஜமால் கண்டிப்பா பாருங்க

    ======================================================================

    கோபி வேட்டைக்காரன் மேல செம கோபத்துல இருக்கீங்க போல் 😉

    இது பெரிய படம் தான்… இதை சிறியதாக எடுக்க முடியாது அவ்வளோ விஷயங்கள்

    ======================================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…

    3D கண்ணாடி போட்டு பாத்தீங்களா? //

    ஆமாம்

    //அப்போ அவதார் வேட்டைக்காரனுக்கு ஆப்பா//

    அது வேறு இது வேறு 🙂

    //இங்கெல்லாம் அதுக்கு தனி காசாம் அதுக்கு தான் கேட்டேன்.. உடனே ஒழுங்கா பதிவ படிங்கன்னு திட்ட கூடாது !!//

    🙂 இங்கேயும் தான் ஆனால் வார இறுதியில் மட்டும்.

    ======================================================================

    அருண் என்னைகூட அந்த "பண்டோரா" காட்டை அடையும் வரும் பெரிதாக ஈர்க்கவில்லை.

    ======================================================================

    // கோவி.கண்ணன் said…

    வெள்ளக்காரனுவ 2012,அவதார்னு நம்ம பணத்தையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போறானுவ//

    நம்ம ஆளுங்க மொக்கை படமா கொடுத்தால் இப்படித்தான் ஆகும் 😉

    ======================================================================

    ராமலக்ஷ்மி திரை அரங்கில் மட்டும் பாருங்க… அப்போது தான் அதை முழுவதும் ரசிக்க முடியும்

    ======================================================================

    குமரன் எனக்கு பொதுவா அறிவியல் மற்றும் மாயாஜால படங்கள் பிடிக்காது. விதிவிலக்காக கேமரூன் படங்கள் மற்றும் சில படங்கள். நீங்கள

  11. //இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. கலக்கல், ஆனால் இதைப்போல காட்சிகள் ரொம்ப குறைவு, நான் நிறைய எதிர்பார்த்தேன்.//

    இங்கெல்லாம் அதுக்கு தனி காசாம் அதுக்கு தான் கேட்டேன்.. உடனே ஒழுங்கா பதிவ படிங்கன்னு திட்ட கூடாது !!!

  12. //அவதார்" என்ற வார்த்தை இந்தியச்சொல்//

    "பண்டோரா" என்ற பேரு.. "பண்டாரம்" என்ற தமிழ்சொல்லில் இருந்து வந்திருக்குமோ???
    :-))

    நால்லாயிருக்கு தலைவா விமர்சனம்!!

  13. Giri,

    I too watched 'Avatar' in 3D format. Though the movie was technically brilliant, it lacks a powerful & gripping story/screen-play. Because of that the emotional connect is missing in 'Avatar', which was not the case in Cameron's previous blockbusters like Titanic or Terminator 2 – Judgment Day or Aliens 2.

    Once the initial euphoria of watching it in 3D vanishes in a few minutes, there is nothing in the movie which holds one's interest. May be, Cameron, instead of spending 12 years in perfecting the "performance capture' technology which he used to film the Na'vi scenes in Avatar, should have spent at least a year in perfecting the script with interesting incidents & definitely a unique & a monster kind of a climax.

    I hope he will do that when he embarks on "Avatar 2", which is a very real possibility, according to Hollywood grapevine.

  14. நண்பருக்கு வணக்கம் ,

    இந்த பதிவின் தலைப்பைப் போலவே , (அசரவைக்கும் "அவதர்" – திரைவிமர்சனம் )
    உங்களின் விமர்சனமும் அசத்தல் வாழ்த்துகள் .

    என்றும் அன்புடன்
    சங்கரின் பனித்துளி நினைவுகள்

  15. Giri,

    I expected Cameron to have come up with a better & more interesting & unique kind of incidents in avatar's screenplay. For eg. I would have imagined a climax wherein the Na'vis along with the Hero, "think" of an ingenious way to trap the occupiers from earth. May be use the lack of gravity in Pandora or try to unmask the army invaders so that they are unable to breath & die or some such thing which is Unique to that planet in order to differentiate it from every other movie. The way avatar has been taken now, except the 3D experience, no scene is different from any other movie which you might have seen earlier.

  16. Ippa than padam pathutu vanthen… Giri thaaivar soli pogama irupoma… Aana Yenaku padatha kattilum unga vimarsanam romba pudichu iruku:)

    Thanks,
    Arun

  17. அருண் நீங்க கூறியது போல புதிதாக எதுவுமில்லை, இன்னும் சில புதிய உத்திகளை பயன்படுத்தி இருக்கலாம். தற்போது எல்லாவற்றை பற்றியும் படம் எடுத்து விடுகிறார்கள்..புதிதாக எடுக்க வேண்டும் என்றாலே பெரிய சிரமம் தான்.. இவர் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார்.

    ஒரு சில படங்களில் கிராபிக்ஸ் என்பது பட்டவர்த்தனமாக தெரியும் இதில் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் எடுத்து இருக்கிறார்.

    ======================================================================

    சங்கர் சூர்யா வருகைக்கு நன்றி.

    சூர்யா கிறிஸ்த்மஸ் ஐ அவதாருடன் கொண்டாடுங்கள் 🙂

    ======================================================================

    அருண் உங்களுக்கு ரொம்ப குசும்பு.. 😉

    ======================================================================

    ஆதி மனிதன், படத்தில் முதல் பாதி குறிப்பாக பண்டோரா காட்டை அடையும் வரை என்னை கவரவில்லை..சொல்லப்போனால் ரொம்ப போராகத்தான் இருந்தது.. அதன் பிறகு அசத்தி விட்டார்கள்.

  18. எங்கே படத்தின் நிறைகளை மட்டும் கூறி விமர்சனத்தை முடித்து விடுவீர்களோ என நினைத்தேன்.

    அனால் ஒரு நல்ல விமர்சனத்தின் அடையாளமாக அதில் உள்ள பெரிய குறையான "அறுந்த பழசான கதை" என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள்.

  19. முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

    உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

  20. இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
    சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  21. // சிங்கக்குட்டி said…
    முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

    உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.//

    என்னது ஆன்லைனில் பார்க்க நினைத்தீர்களா! ஐயையோ! இதற்கு நீங்க பார்க்காமலே இருக்கலாம்..திரையரங்கில் மட்டுமே பார்க்க கூடிய படம் இது.

    ======================================================================

    // ராமலக்ஷ்மி said…

    விகடன் Good Blog-ல் :)!//

    எப்போதும் என் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் உங்களுக்கு என் நன்றிகள் ராமலக்ஷ்மி

    ======================================================================

    // mohamedkamil said…
    இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
    சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்//

    தேவி தற்போது தான் மறுசீரமைப்பு செய்து இருப்பதாக கேள்வி பாத்தேன்.. நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  22. ஆளாளுக்கு (முக்கியமா ஹாலிவுட் பாலா) படத்தை பிரிஞ்சு மேஞ்சுடறீங்க.புதன்கிழமைக்குத்தான் ஐமேக்ஸ்க்கு டிக்கட்டே கிடைச்சிருக்குது.

  23. கொடுத்த வைத்த ஆளுங்க நீங்க ஐமேக்ஸ் ல பார்க்கறீங்க..இங்க ஐமேக்ஸ் இல்ல :-(( நான் இரண்டாவது முறையாக (3D இல்லாம) சென்று பார்க்க போகிறேன்.

  24. i was fooled by people saaying avatar is average movie with weak story. only after seeing the movie only i came to know the truth.

    MOVIE IS AWESOME. I PLANNING TO GO FOR AVATAR SECOND TIME. IN SATYAM.

    OH PEOPLE DONT GET FOOLED BY PEOPLE SAYING AVATAR IS BAD MOVIE.

    avataar is must watch movie despite average story. visuals, character deveoplment, is very good.

    this is not just another movie go watch it

  25. கிரி அவதார் படம் இன்னும் நான் பார்க்கவில்லை (பார்க்ககூடாது என்று
    இல்லை டயம் இல்லாததால் பார்க்கவில்லை ) உங்கள் விமர்சனம்
    படித்த படித்தேன் கண்டிப்பாக இந்த வாரம் பார்க்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here