2009 ஆண்டு திரைப்படங்களில் ரசித்தவை

19
2009 ஆண்டு திரைப்படங்களில் ரசித்தவை

2009 ம் ஆண்டுப் பல கலவையான படங்களைத் தந்துள்ளது. 2009 ஆண்டு திரைப்படங்களில் ரசித்தவை மட்டும் இதில் கூறுகிறேன். Image Credit

அதிகம் எதிர்பார்த்த ஒரே படம் இயக்குனர் பாலா படமாகிய “நான் கடவுள்“. படம் வெளிவரும் முன்பேயும் வெளிவந்த பின்னேயும் பல சர்ச்சைகளைச் சந்தித்தது.

எனக்குப் பெரிய குறையாக இருந்தது நான் ஆவலுடன் எதிர்பார்த்த “காசி” காட்சிகள் இதில் வெட்டப்பட்டு இருந்தது 🙁 .

நான் எதிர்பாராமல் ரசித்த படங்கள்

வெண்ணிலா கபடிக்குழு

இயல்பாகச் சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். வெண்ணிலா கபடிக்குழு தொடக்கத்திலிருந்து இறுதி வரை சுவாராசியம் குன்றாமல் கொண்டு சென்று இருந்தார்கள்.

இதன் முடிவு நல்ல விதமாகக் கொடுக்கப் பல வாய்ப்புகள் இருந்தும் சோகமாக முடித்து இருந்தது வருத்தம்.

அயன்

அயன் இவ்வளோ பெரிய வெற்றி பெரும் என்று அதன் இயக்குனர் K.V. ஆனந்தே நினைத்து இருக்க மாட்டார். இதை AVM இடம் இருந்து வாங்கிய சன் க்கு செம லாபம்.

இந்த ஆண்டின் ஒரே ஒரு பிளாக்பஸ்டர் படம் இது மட்டுமே. வித்யாசமான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டது.

பேராண்மை

இயக்குனர் ஜனநாதன் இந்த அளவிற்கு பேராண்மை கதையைத் தைரியமாக எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

முதல் பாதிக் கல்லூரி பெண்கள் அட்டகாசத்தால் கொஞ்சம் எரிச்சலடைய வைத்தாலும் பின் பாதியில் அதை ஈடுகட்டி விட்டார்கள்.

தமிழ் திரையுலகில் வித்யாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனரில் இதன் மூலம் ஜனநாதன் தன் முத்திரையைப் பதித்து விட்டார்.

பசங்க

இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பாளர் சசிக்குமாரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பசங்க சேட்டையோடு ஒரு குடும்பப் பிரச்சனையையும் காதலையும் இயல்பாகச் சேர்த்து டாக்குமெண்டரி படம் போல வராமல் சிறப்பாக எடுத்து அனைவரையும் பார்க்க வைத்து இருந்தது திறமையான ஒன்று தான்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பையும் கவர்ந்த படம்.

உன்னைப் போல் ஒருவன்

இந்து முஸ்லிம் பிரச்னையை வைத்துப் பலர் இதைக் கிழித்துத் தொங்க விட்டாலும் அருமையான படம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

ஹீரோயிசம், பில்டப்பு, ஆர்பாட்டமும் இல்லாமல் ஆனால், ரசிக்கும்படி வந்த படம் உன்னைப் போல் ஒருவன். பாடல்கள் இல்லாமல் சிறிய படமாக வித்யாசமாக வந்த படம்.

யாவரும் நலம் மற்றும் ஈரம்

இரண்டு படமுமே தமிழில் தைரியமாக த்ரில்லர் படம் எடுக்கலாம் பார்க்க ஆள் இருக்கிறார்கள் எடுக்கும் விதத்தில் எடுத்தால் என்று நிரூபித்த படங்கள்.

தமிழில் த்ரில்லர் படங்களுக்கு வரவேற்பு குறைவு தான், அதை இந்தப் படங்கள் ஈடு செய்து விட்டன. இதைப்போலப் படங்கள் வர வேண்டும் என்பது என் விருப்பம்.

நாடோடிகள்

இந்தப்படத்தை அனைவரும் கொண்டாடினார்கள்.

என்னைப் படத்தின் கதை பெரியளவில் கவரவில்லை ஆனால், இதன் இயல்பான காட்சியமைப்பு, சினிமாத்தனம் இல்லாத முகங்கள் மற்றும் இடங்கள் ரொம்பக் கவர்ந்தது.

செட்டிங்ஸ் போடாமல் சாதாரணமாக எடுக்கப்படும் படங்கள் பிடிக்கும், நாடோடிகள் அந்த வரிசையில்.

ரேணிகுண்டா

இந்தப் படம் நன்றாக இருப்பதாகப் பலர் கூறினார்கள், ஆனால் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது City of God என்ற படத்தைப் போல இருப்பதாகவும் அதிக வன்முறை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் பார்க்க வேண்டும் வாய்ப்பு கிடைத்தால்.

தமிழ் திரை உலகின் மீது எப்போதும் குற்றசாட்டுகள் வைக்கப்படும் தரமான படங்கள் தருவதில்லை என்று ஆனால் அதைப் போன்ற விமர்சனங்களையும் மீறி பல நல்ல படங்கள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவை யானைப்பசிக்கு சோளப்பொறி போலத்தான். இன்னும் பல நல்ல படங்கள் எடுக்கப்பட வேண்டும்.

தற்போது நல்ல படங்கள் வருவது குறைந்து விட்டதால் மக்கள் வெறுப்பாகி மற்ற மொழி படங்களுக்கு என்றும் இல்லா ஆதரவு இந்த வருடம் கொடுத்து இருக்கிறார்கள். அப்படி அசத்திய படங்கள் ஒரு சில

வேற்று மொழிப்படங்கள்

அருந்ததி

வைஜெயந்தி IPS மற்றும் உதயம் படம் மட்டுமே வேறு மொழி படமாக இருந்தாலும் தமிழகத்தில் நன்றாக ஓடிய படங்கள் (வேறு படங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம்).

“இதயத்தைத் திருடாதே” தெலுங்கு படமாக இருந்தாலும் இயக்குனர் மணிரத்னம் என்பதால் அதை யாரும் வேற்று மொழி படமாகக் கருதவில்லை பலருக்கு இது தெலுங்கு படம் என்றே தெரியாது.

அந்த வகையில் அருந்ததி ஒரு வெற்றிப்படமே! மேற்கூறிய படங்கள் அளவிற்கு இல்லை என்றாலும்.

அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன், நல்ல திரைக்கதையுடன், உச்சமாக அழகான அனுஷ்காவுடன் நம்மவர்களைக் கவர்ந்து விட்டது.

2012 – ருத்ரம்

விநியோகஸ்தர் இராம நாராயணன் எதிர்பாராமல் வசூலில் தலை சுற்றவைத்த படம். அந்தளவுக்கு நம்ம மக்கள் இந்தபடத்திற்குப் பேராதரவு தந்து விட்டார்கள்.

இதன் பிரம்மாண்டமான காட்சிகள் குழந்தைகள் பெரியவர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவர்ந்து விட்டது.

இன்னும் கூட இந்தப்படம் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் வந்த பல தமிழ் படங்களே திணறி விட்டன இதற்கு ஈடு கொடுக்க முடியாமல்.

Avatar

2012 படத்திற்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து இதை நாங்களே நேரடியாக வெளியிடுகிறோம் என்று கூறி தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் Avatar வெளி வந்தது.

அவர்கள் நம்பிக்கையை வீணாக்காமல் ஒரே வாரத்தில் பல கோடிகளை வசூல் செய்து விட்டது.

விரைவில் முந்தைய வசூல் சாதனையான டைட்டானிக்கை முறியடித்து விடும் என்கிறார்கள்.

Paa மற்றும் 3 Idiots

“பா” படம் அதன் வித்யாசமான கதையமைப்பின் மூலம் பலரை கவர்ந்து விட்டது. அமிதாப்பின் நடிப்பு பலரை வாய் பிளக்க வைத்து விட்டது.

3 Idiots சிறப்பான துவக்கம் தந்துள்ளது, சமீபமாக ஹிந்தி படங்கள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முக்கியப் பங்கு வகிக்கிறது,

இதற்கு முக்கியக் காரணமாகச் சென்னையில் ஹிந்தி பேசுபவர்கள் அதிகரித்து விட்டது ஒரு காரணமாக இருந்தாலும் அதையும் மீறி அதில் உள்ள வித்யாசத்தைக் காண நம்மவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் உண்மை.

அனைவரின் சார்பாகத் தமிழ் திரையுலகம் பல நல்ல படங்களைத் தர வேண்டும் என்றும் மற்றும் நல்ல படங்களைக் கொடுத்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இந்தச் சமயத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

2009 ஆண்டு திரைப்படங்களில் ரசித்தவை மேற்கூறியவை. உங்களுக்கு?!

தொடர்புடைய கட்டுரை

தமிழ்த் திரைப்படங்களின் சிறு விமர்சனங்கள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

19 COMMENTS

  1. எனது பார்வையில் அயனை தவிர உங்களது தெரிவுகள் அனைத்தும் சூப்பர்,நம்ம அமெரிக்க ஜனாதிபதி டாக்டர் விஜயினது வேட்டைக்காரனையும் வில்லையும் மறந்திட்டீங்களா?

  2. ஒரு பார்வையில் சுருக்கமாக விவரித்திருக்கிறீர்கள் சிறப்பான படங்களை, பார்க்கும் ஆவலைத் தூண்டும் வகையில். பசங்க மட்டும் பார்த்திருக்கிறேன். நாடோடிகள், உ போ ஒ, Paa, 3 idiots and of coruse Avatar:), பார்க்க நினைத்திருக்கிறேன்.

  3. நல்ல அலசல் கிரி…//எனக்கு தெரிந்து வைஜெயந்தி IPS மற்றும் உதயம் படம் மட்டுமே வேறு மொழி படமாக இருந்தாலும் தமிழகத்தில் நன்றாக ஓடிய படங்கள் (வேறு படங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம்)//தலைவா… சாகர சங்கமம் சலங்கை ஒலி என்ற பெயரில் சக்கை போடு போட்டது தெரியாதா…ஜகன் மோகினி (ஜெயமாலினி நடித்த பழைய படம்) அதே பெயரில் தமிழகத்தில் பெரிய வெற்றி பெற்றதே..எ

  4. நடுநிலையா இருந்தது சொல்றது தப்பு, சிறப்பாவே இருந்ததுன்னு சொல்லலாம்!

  5. அட.. யாவரும் நலம் இந்த வருஷம் வந்த படம்தானே..உஙக் தெரிவு வரும் வருடம் விஜய் அவார்ட்ஸுடன் ஒத்துப் போகும் பாருங்களேன்…

  6. கிரி ஸார்..!சத்யம் தியேட்டரில் திரையிடப்படும் சில ஆங்கிலத் திரைப்படங்களை சென்னையில் வேறு எந்தத் தியேட்டரிலும் பார்க்க முடியாது.. இப்படியொரு நிபந்தனையுடன்தான் சில ஆங்கிலத் திரைப்படங்கள் சத்யமில் திரையிடப்பட்டு வருகின்றன.பணம் என்பது நமக்கு ஓகேதான்.. ஆனால் நம்மிலும் குறைவான சம்பாத்தியம் உள்ளவர்களை நினைத்துப் பாருங்கள்.. எட்டிக் கூட பார்க்க முடியாது.. வரவே வராதீர்கள் என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார்கள்..!திரையரங்குகளின் சட்ட விதிகளின்படி பார்வையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டே தீர வேண்டும். இங்கே அது கிடையவே கிடையாது.. கேட்டால் 25 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள்..இதனை எந்த ஹீரோ பறந்து வந்து, பாய்ந்து வந்து கேட்கப் போகிறார்..?சில இடங்களில் சினிமாவையும் தாண்டியும் கொஞ்சம் பார்க்க வேண்டும்..!

  7. அயன், அருந்ததி, பா.. இந்த மூன்றை தவிர, மற்ற எல்லா படங்களுமே கிளாஸ்!! குட் லைக்கிங்!!

  8. சென்ற சிங்கப்பூர் பதிவுக்கும் இந்த அற்புத பதிவுக்கும் சேர்ந்த வாழ்த்துகள் கிரி. மிக சிறப்பு.

  9. நல்ல அலசல் கிரி

    எப்படி இப்படி எல்லா நினைவுகளையும் ரீ கலக்ட் செய்து …

    நல்லாயிருக்கு.

  10. கிரி அருமையான அலசல் என் லிஸ்ட்டும் கிட்டத் தட்ட இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

  11. சில மாறுபட்ட படங்கள் தமிழில் வரத்தொடங்கியிருப்பது நல்லது. ஆனால் தமிழ் திரையுலகம் கொஞ்சம் வெளிநாட்டு எல்லைகளை அதிகரித்தால், இந்தி திரையுலகிற்கு வணிகரீதியாகவும் சவால் விடலாம்

  12. // எப்பூடி … said…

    நம்ம அமெரிக்க ஜனாதிபதி டாக்டர் விஜயினது வேட்டைக்காரனையும் வில்லையும் மறந்திட்டீங்களா?//

    🙂

    ======================================================================

    ராமலக்ஷ்மி நீங்கள் கூறிய படங்கள் அனைத்தையும் கண்டிப்பாக பார்க்க கேட்டுக்கொள்கிறேன்

    ======================================================================

    கோபி நீங்கள் கூறியதில் சலங்கை ஒலி எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை, ஆனால் ஜகன் மோகினி எனக்கு தெரியாது. தகவலுக்கு நன்றி.

    ======================================================================

    ஜமால் நான் படம் மட்டும் தான் எழுதி இருக்கிறேன்..ஒரு சிலர் பல சம்பவங்களை எழுதி உள்ளனர்..அவர்கள் முன் இது ஒன்றுமில்லை.

    ======================================================================

    வெயிலான் மற்றும் அருண் நன்றி 🙂

    ======================================================================

    // கடைக்குட்டி said…

    அட.. யாவரும் நலம் இந்த வருஷம் வந்த படம்தானே..//

    ஆமாங்க! ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அது சென்ற வருடம் வந்ததை போலத்தான் உள்ளது.. 🙂

    ======================================================================

    // உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

    சத்யம் தியேட்டரில் திரையிடப்படும் சில ஆங்கிலத் திரைப்படங்களை சென்னையில் வேறு எந்தத் தியேட்டரிலும் பார்க்க முடியாது.. இப்படியொரு நிபந்தனையுடன்தான் சில ஆங்கிலத் திரைப்படங்கள் சத்யமில் திரையிடப்பட்டு வருகின்றன.//

    அப்படியா! தகவலுக்கு நன்றி உண்மைத்தமிழன்

    //பணம் என்பது நமக்கு ஓகேதான்.. ஆனால் நம்மிலும் குறைவான சம்பாத்தியம் உள்ளவர்களை நினைத்துப் பாருங்கள்.. எட்டிக் கூட பார்க்க முடியாது.. வரவே வராதீர்கள் என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார்கள்..!//

    நீங்கள் கூறுவது சரி தான்..ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் சங்கம் காம்ப்ளெக்ஸ் போன்றவையும் அப்படித்தான் உள்ளதா!

    //திரையரங்குகளின் சட்ட விதிகளின்படி பார்வையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டே தீர வேண்டும். //

    இதை ஏன் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்று தெரியவில்லை.

    //இதனை எந்த ஹீர�

  13. // கலையரசன் said…

    அயன், அருந்ததி, பா.. இந்த மூன்றை தவிர, மற்ற எல்லா படங்களுமே கிளாஸ்!! குட் லைக்கிங்!//

    கலையரசன் பா நல்ல படம் தானேங்க!

    ======================================================================

    ஜோதிஜி உங்கள் அன்பு பாராட்டிற்கு மிக்க நன்றி

    ======================================================================

    கோவி கண்ணன் 2020 ல விமர்சனம் எழுதினால் கூட கேட்பீங்க போல! 😉

    ======================================================================

    // Ramkumar said…

    I expected "Achamundu Achamundu" also in this list. Otherwise all the rest are well selected.//

    ராம்குமார் அந்தப்படம் இந்த லிஸ்ட் ல் வரக்கூடிய அளவிற்கு எனக்கு தோணலை..ஆனால் இதுவும் ஒரு வித்யாசமான படம் தான்.

    ======================================================================

    தர்ஷன் போடுங்க உங்க லிஸ்ட்டை சீக்கிரம் 😉

    ======================================================================

    // ’டொன்’ லீ said…

    தமிழ் திரையுலகம் கொஞ்சம் வெளிநாட்டு எல்லைகளை அதிகரித்தால், இந்தி திரையுலகிற்கு வணிகரீதியாகவும் சவால் விடலாம்//

    உண்மை தான்.. ஆனால் அதற்க்கு தமிழ் பேசுபவர்கள் அதிகம் வேண்டும். ஹிந்திக்கு அதிகளவில் உள்ளனர். நம்மவர்கள் இந்த ஒரு மாநிலத்தையும் ஈழத்தமிழர்களையும் மட்டுமே நம்பி உள்ளனர். ரஜினி கமல் போன்றவர்கள் படங்கள் மட்டுமே தற்போது தாக்கு பிடிக்கிறது, விரைவில் மற்ற படங்களையும் எதிர்பார்க்கலாம்.

  14. உங்களின் திரை பார்வை சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது . வாழ்த்துகள் நண்பரே !!!!

    என்றும் அன்புடன்
    வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ……………………

  15. nalla pathivu giri.. yenakkuu "Sindhanai Sei" padam romba pudichu irunthuchu.. free time kidaicha techsatish la paarunga nalla oru thriller movie

  16. கிரி நீங்கள் கமல் படத்தை நல்ல படம் என்று therthenduthu விட்டு எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலனை விட்டு vittirgalale , இது தான் நீங்கள் ரஜினி ரசிகர் என்பதற்கு அடையாளமா? கதை kuyappam எதுவும் இல்லாமல் சின்ன பசங்களை கூட reach ஆகி இருக்கும் ரஜினிக்கு salute போடலாம், இனிமேலாவது ரஜினிக்கு மதிப்பு கொடுங்கள், கதை இருந்தாலும் அதை தெளிவில்லாமல் மூக்கை சுற்றி தொடும் கமலை விமர்சனம் செய்யுங்கள், கதை இருந்தாலும் இல்லை என்றாலும் தன் இயல்பான நடிப்பால் நம்மை maghizvithha சூப்பர் ஸ்டார் avargallukku நன்றி, மற்றும் தன் artificial ஆக்டிங் கொண்டு எல்லோரையும் எரிச்சல் மூட்டும் கமல் பற்றி திட்டுங்கள். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!