சீரியல் பாடல்கள் வாழ்க!

13
சீரியல் பாடல்கள் வாழ்க!

சீரியலால் பலர் கடுப்பாகிக் கொண்டு இருக்கும் போது, சீரியல் பிடிக்காதவர்களும் மகிழ்ச்சியாகிறார்கள் என்றால் நம்புவீர்களா!

சீரியல் பார்த்து நொந்து போய் எழுதிய சோகக்கதையை படித்து விட்டு அப்புறமா எதா இருந்தாலும் உங்க முடிவ சொல்லுங்க. புகழக் காரணம் உண்டு.

சீரியல் பாடல்கள் வாழ்க

நண்பர் லோகன் அழைத்து “கிரி நீங்க செட்டப் பாக்ஸ் வைத்து இருக்கீங்கல்ல அதுல இருந்து சீரியல் பாடல்களைப் பதிவு செய்து கொடுங்க, என் பையன் அந்தப் பாடல்களைக் கேட்டால் ஒழுங்கா சாப்பிடுகிறான்” என்று கூறினார்.

செட்டப் பாக்ஸ் மாற்றி விட்டதால் தற்போதுள்ள வசதியில் அதைச் செய்ய முடியாது என்று கூறினேன்.

அவரும் ‘நான் வேற யார் கிட்டயாவது கேட்டுக்கொள்கிறேன்‘ என்று கூறி விட்டார். அதன் பிறகு நானும் மறந்து விட்டேன்.

இப்ப என் பையன் இந்தப்பாடல்களை கேட்டால் குறும்பு செய்யாமல் சாப்பிடுகிறான்.. என்ன கொடுமை சார் இது!

பாடல் கேட்டு அடம்பிடிப்பதில்லை என்றாலும் பாடல் ஓடும் போது அமைதியாக உள்ளான்.

ஆனால், அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை பாட்டு போட்டால் தான் சாப்பிடவே செய்கிறான் என்று மனைவி கூறியவுடன் பீதியாகி விட்டேன்.

மனைவியும் இணையத்தில் டைட்டில் பாடல் கிடைத்தால் தரவிறக்கம் செய்து கொடுங்கள் என்று கூறினார்.

கூகுளில்  தேடினால் சீரியல் ஆக வர, பாடலே கிடைக்கவில்லை.

கடைசியில் என்னைப் போன்றவர்களின் மனதறிந்து ஒரு புண்ணியவான் அனைத்து சீரியல் பாடல்களையும் ஒரு வலைதளத்தில் வைத்து இருந்தார் YouTube உதவியுடன்.

ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தரவிறக்கம் செய்து விட்டேன்.

சோதனை செய்து பார்ப்போம் என்று இவன் சாப்பிடும் போது மடிக்கணினியில் பாட்டைப் போட்டால்…. ஒரு பிரச்சனையும் செய்யாமல் சாப்பிட்டு விட்டான்.

ஆஹா! எப்படி எல்லாம் டெக்னிக்கலா ஹேண்டில் பண்ண வேண்டி இருக்கு! (வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்) என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தப்பிரச்சனை எங்களுக்கு மட்டுமில்லை பலருக்கும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் 🙂 .

கஸ்தூரி மற்றும் செல்லமே

சீரியல் பாடல்களில் இவனுக்குக் கஸ்தூரி மற்றும் செல்லமே பாட்டுத்தான் ரொம்ப பிடிக்குது.

செல்லமே பாட்டுல மத்தாப்பு மற்றும் வெடி வெடிப்பது காட்டப்படுவதால் பட்டா பட்டா என்று கூறி குஷி ஆகி விடுகிறான்.

கஸ் கஸ் ன்னு எதோ கூற எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பின் அவனோட மொழி பெயர்ப்பாளரான மனைவி கஸ்தூரி சீரியல் பாட்டு போடச் சொல்றாங்க!! என்று கூறியவுடன் தான் இவன் கூறியதே புரிந்தது.

கஸ்தூரி பாட்டை மடிக்கணினியில் போட்ட நேரம் பார்த்து டிவியிலும் அந்தச் சீரியல் விளம்பரம் வரத் திருதிருன்னு விழித்து விட்டு இவனுக்குத் தலைகால் புரியல, தைய தக்கான்னு குதிக்க ஆரம்பித்து விட்டான் 🙂 .

சீரியல் மேல கடுப்புகள் இருந்தாலும் இதைப்போலக் காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

பலரின் குழந்தைகளை மகிழ்விக்கும் சீரியல் பாடல்கள் வாழ்க! வாழ்க!! 🙂 .

பாடலைத் தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. இது நூறு சதவிகிதம் உண்மை , வெளிநாட்டில் இருக்கும் என் குட்டி மருமகள் சீரியல் பாட்டை ரெக்கோட் செய்து டிவியில் போட்டுவிட்டு தங்கை வீட்டுவேலைகளை பார்த்து முடிக்குமட்டும் அதையே பார்த்துக் கொண்டிருப்பாளாம்.

  2. கிரி இந்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும்
    என் மகன் ஹர்ஷவர்தன் பிறந்து ஒரு வருடம் ஆனவுடன் (year 2001) இந்த பிரச்னை எங்களுக்கு வந்தது சீரியல் சாங் போட்டால் டி வி யை விட்டு நகர மாட்டான். மாற்றவும் விட மாட்டான்.

    சீரியல் சாங் வரும் நேரங்களில் என் மனைவி ரெடி யாக சாப்பாடு வைத்து கொண்டு ஊட்டி விட்டு விடுவார். மற்ற நேரங்களில் tape recordaril பாடலை பதிவு செய்து வைத்து அவனை சமாதனபடுத்துவோம். இப்போது அதை பற்றி சொன்னால் சிரிக்கிறான்.

  3. இந்த வகையிலாவது நாடகங்கள் உபயோகம் ஆகுதே…

  4. கிரி, என்னங்க இது? எனக்கும் 1.5 வயதில் மகன் இருக்கிறான். நாங்கள் பெங்கலூரில் இருக்கிறோம். நாங்கள் டிவியை ஆன் செய்வதே இல்லை. வாரத்தில் மொத்தமாக சுமார் 2 அல்லது 3 மணி நேரம் டிவி பார்த்தாலே அதிகம். அதனால் என் மகனுக்கு டிவி அவ்வளவாக பரிட்சையம் இல்லை. ஆனால் ரைம்ஸ் பாடல்கள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம் (தமிழ் & ஆங்கிலம் இரண்டும்) – 1 மணி நேரம் என்றாலும் கம்பியுட்டரை விட்டு நகராமல் பார்ப்பான். அதை விட்டால் அவனுக்கு சினிமா பாடல்கள் கூட சுத்தமாக பழக்கம் இல்லை. இந்த விதத்தில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.

  5. இது உண்மை தான்!!! ஆனா காலப் போக்குல எல்லாம் சரியா போச்சு!! இப்போ என் பையன் (5.5 வயசு), சீனா/கொரியா/ஜப்பான் (Bakugan) கார்டூன் பார்க்குறான்!!
    இதுவும் கடந்து போகும்!!

  6. //கஸ்தூரி பாட்டை லேப்டாப்பில் போட்ட நேரம் பார்த்து டிவியிலும் அந்த சீரியல் விளம்பரம் வர திருதிருன்னு விழித்து விட்டு இவனுக்கு தலைகால் புரியல, தைய தக்கான்னு குதிக்க ஆரம்பித்து விட்டான்//

    கற்பனை பண்ணிக்க முடியுது. ரசித்ததை ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துள்ளீர்கள்.

    இப்போ சீரியல் பாடல்கள். அந்தக் காலத்தில் குறிப்பிட்ட சில விளம்பரங்கள். தூர்தர்ஷனில் ஏழு வண்ணங்களைப் பட்டைபட்டையாய் காட்டி ஒரு ம்யூசிக் வரும் நினைவிருக்கிறதா? என் மகனுக்கு ஒன்றரை வயதில் அது ரொம்பப் பிடிக்கும்:)!

  7. கிரி எம் பொண்ணுக்கு ச்சூ மாரி பாட்டு வேணும். அதுவும் டோரா கார்ட்டூனோட மிக்ஸ் பண்ணின பாட்டு தான் வேணும்… இன்னும் பல ஆங்கில மற்றும் தமிழ் ரைம்ஸ் பாடல்களில் ஆர்வம்.

    என் நண்பருடைய பையனுக்கு பத்து வருடங்களுக்கு முன்பே டிவி விளம்பரங்கள் போட்டத்தான் சாப்பிடுவான். அதுக்காகவே அனைத்து விளம்பரங்களும் வீடியோ டேப்புல பதிவு செஞ்சு வச்சிருந்தார். 🙂

  8. நன்றி கிரி, இந்த வலைபூ ஜூலை 2009 தான் ஆரம்பித்துள்ளர்கள், Too Late for me :). ஆனா இப்போது எல்லாம் எதை காண்பித்தாலும் சாப்பிட மாட்டேன் என்கிறான். அடி உதய் உதவது போல் எதுவும் உதவாது என்று தினமும் எனக்கும் மனைவிக்கும் உணர்த்துகிறான். நீங்களும் ஒரு வருடம் கழித்து உணர்ந்தால் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை.

  9. ***பின் அவனோட மொழி பெயர்ப்பாளரான என் மனைவி கஸ்தூரி சீரியல் பாட்டு போட சொல்றாங்க!! என்று கூறியவுடன் தான் இவன் கூறியதே புரிந்தது. கஸ்தூரி பாட்டை லேப்டாப்பில் போட்ட நேரம் பார்த்து டிவியிலும் அந்த சீரியல் விளம்பரம் வர திருதிருன்னு விழித்து விட்டு இவனுக்கு தலைகால் புரியல, தைய தக்கான்னு குதிக்க ஆரம்பித்து விட்டான் சீரியல் மேல கடுப்புகள் இருந்தாலும் இதைப்போல காணும் போது மனதிற்கு சந்தோசமாகவே உள்ளது.***

    குழந்தைகளுக்கு நம்மளமாதிரி ப்ரிஜடிஸ் கெடையாதுனு நெனைக்கிறேன். தனக்குப் பிடிச்சதை ரசிக்கமட்டும் தெரியும்! நம்மளும் உங்க பையன் மாதிரித்தான் ஒரு காலத்தில் இருந்து இருப்போம். 🙂

  10. இங்கயும் இதே கதைதான். என்ன செய்வது. குழந்தை எப்படியாவுது சாப்பிட வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக உள்ளது. எனது ஒரு வயது மகன், மதியம் “அத்திபூக்கள்”, இரவு “தென்றல்” மற்றும் “செல்லமே” பாடல்கள் பார்த்துகொண்டே சாப்பிட்டு விடுவான். அப்புறம் இன்னொன்று. சீரியல் பாடல்களை விட தொலைகாட்சி விளம்பரங்களுக்கு மவுசு அதிகம். குழந்தை அடம்பிடித்தால் விளம்பரம் வரும் சானலை போட்டால் போதும். பையன் அமைதி ஆயிடுவான்.

  11. @jeevatharshan நன்றி

    @சரவணன் பலருக்கு பலத்த அனுபவம் இருக்கும் போல இருக்கே 😉

    @Dinesh பாட்டு மட்டும் 🙂

    @முத்துக்குமார் ஐயையோ வாரத்திற்கு 3 மணி நேரமா! நீங்கள் அதிசய பிறவி தான் 🙂 இதெல்லாம் என் கற்பனையில் கூட நடக்காது LoL இங்கு (சிங்கையில்)வேற பொழுதுபோக்கு இல்லை இருந்தாலும் ரொம்ப செலவாகும். அதனால் எங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்க பையன் பின்னாளில் பிரபல வலைபதிவரா வருவானோ என்னவோ! 😉 சும்மா தமாசு. உங்கள் மகன் இதே போல நல்லபடியாக வளர வாழ்த்துக்கள்.

    @ஜாவா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    @ராமலக்ஷ்மி ..அப்ப இது தொன்று தொட்டு வருதுன்னு சொல்லுங்க 🙂

    @ரோஸ்விக் டெக்னிக்கலா ஹேண்டில் பண்றீங்கன்னு சொல்லுங்க! 😉

    @லோகன் ஐயையோ அடிக்காதீங்க பாவம்! டிவி ஓகே ஆனால் அடி எனக்கு உடன்பாடு இல்லை. நானும் அடிப்பேன் ஆனால் மின்சாரம் பக்கம் செல்லும் போது, அது கூட அவனுக்கு அது தவறு என்று புரிய வேண்டும் என்பதற்காக. இதற்கே எனக்கு வருத்தம் உண்டு.

    @வருண் கண்டிப்பாக! வழிமொழிகிறேன்

    @செந்தில் குழந்தை வளர்ப்பு பெரிய வளர்ப்பு தான் போல இருக்கே 😉

  12. ஹ ஹ ஹ…எதோ நாம மட்டும்தான்னு நினைச்சு வெளில சொல்லாம இருந்தேன், எல்லாருமே இப்படித்தானா…வாங்கோ வாங்கோ…:-)

    நாங்க எல்லாம் “நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது சன் டிவீயின் தமிழ் மாலை” முதல் போறோரோ வரை டி.வீ.டி போட்டு வச்சு இருக்கோம்(லா)… 🙂

  13. கில்லாடி,
    என் பொண்ணுக்கு 1 வயசு ஆகுது. டிவி ல விளம்பரம் வரும்போது யாரும் அவளை தொல்லை பண்ணக்கூடாது, இந்த நேரத்துல என் மனைவி சாப்பாடு எல்லாம் குடுத்துருவ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here