சிங்கம் (2010) | பட்டய கிளப்புது

30
சிங்கம்

சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்துப் படம் மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் சிங்கம் பட்டாசாக இருக்கிறது. Image Credit

கண்டிப்பாக சிங்கம் வெற்றிப்படம் தான் சந்தேகமே இல்லை.

சிங்கம்

சூர்யா நிஜமாகவே காவல்துறை அதிகாரியாக அசத்தி இருக்கிறார். மிடுக்கிலும் சரி உடல் மொழியிலும் சரி பின்னிப் பெடலேடுத்து இருக்கிறார்.

அவருக்கு வேகம் நன்றாக பொருந்தியுள்ளது. அடிதடி எல்லாம் மிகைப்படுத்தப்பட்டது என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி அவரது உடல்வாகு உள்ளது.

அனுஷ்கா ….யப்பா! அருந்ததி படத்திற்கு பிறகு இப்ப தான் பார்க்கிறேன்.

என் இதயம் பாடலில் பலருக்கும் நெஞ்சு வலி வரவைத்து விடுவார் போல 😉 இதயம் பலகீனமானவர்கள் (ஆண்கள்) என் இதயம் பாடல் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன் 🙂 LOL

அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார், எப்படியும் ஆறடி இருப்பார் போல உள்ளது. நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு.

ஒரு கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள்.

அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசனம் பேசி நடித்து இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில்.

கையெழுத்து போடக் காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல்.

ஏன்டா! சென்னைல நான் எப்படிப்பட்ட ஆளு! என்னை இங்க இப்படி சப்பை ரவுடி மாதிரி ஆக்கிட்டீங்களேடான்னு! என்று எண்ணும்படி அவர் கடுப்பில் பார்ப்பது ரகளையாக இருக்கும் 🙂

சூர்யாவிற்கு சென்னையில் பிரகாஷ்ராஜ் தனது ஆட்களை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுத்துக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கி அவர் அதைப் பார்த்து ரசித்துச் சிரிப்பது கலக்கலா இருக்கும்.

அதிலும் ஒரு கும்பல் கொலைகொலையா முந்தரிக்கா பாடலைப் பாடி செம வெறுப்பேத்தி விடும் ஆனால், அதற்கு சூர்யா அதே ஸ்டைலில் நொறுக்கி எடுப்பது சரவெடி!

அந்த இடத்தில் பின்னணி இசை தூள் கிளப்புது.

விவேக் நகைச்சுவை

விவேக் நகைச்சுவை செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார் போல! இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கிறது.

யாருப்பா இவருக்கெல்லாம் பத்ம ஸ்ரீ கொடுத்து மானத்தை வாங்குறது!

இவருக்கு ஆபாச ஸ்ரீ என்று தான் பட்டம் கொடுக்கணும். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலைப் பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டுக் கடுப்படிக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார் மறுப்பதற்கில்லை. விவேக்கிற்கு வயசாகி விட்டது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

இயக்குநர் ஹரி

இயக்குனர் ஹரியின் பலமே திரைக்கதை தான் உடன் சில புத்திசாலிதனமான காட்சிகள் இவையே படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.

அதை இந்தப்படத்திலும் செவ்வனே செய்து இருக்கிறார்.

அடிக்கடி காட்சிகளை Fast forward செய்வதும் படத்தை வேகமாக்க ஓரளவு உதவி புரிந்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை அதற்குண்டான காட்சிகளும் அமைவதால்.

இவரோட தமிழ் படத்தை (பிரசாந்த் நடித்தது) இதுவரை பார்க்காமல் இருந்தால் பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.

சிங்கம் பாடல் பலர் நன்றாக இல்லை என்று கூறினார்கள் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. இதற்காகவே பாடலை iPod ல் பலமுறை கேட்ட பிறகே பாடல் பற்றி எழுதினேன்.

காரணம், அயன் படம் விமர்சனம் எழுதும் போது பாடல் சுமார் என்று எழுதி இருந்தேன் பின்னர் பலமுறை கேட்ட பிறகு அனைத்து பாடல்களுமே நன்றாக இருந்தது.

சிங்கம் படத்தின் பாடல்களில் வெரைட்டி இல்லை ஆனால், கண்டிப்பாக ஹிட் ஆகும்.

பொழுது போகணும் என்று நினைப்பவர்கள் தாராளமாக படத்திற்கு செல்லலாம்.

என்னய்யா! சிங்கம்…. என்னய்யா! பில்டப் என்று லாஜிக் பார்க்கும் பெருமக்கள் எட்டியே பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொசுறு

சிங்கையில் 9 திரையரங்கில் சிங்கம் படத்தை வெளியிட்டு இருந்தார்கள். எனக்கு தெரிந்து அதிகளவில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

சிங்கையில் சூர்யாவிற்கு தற்போது ரசிகர்கள் அதிகம் ஆகி விட்டார்கள்.

இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பலர் தங்கள் விருப்ப நடிகராக சூர்யாவை கூறுவதை கேட்க முடிகிறது.

30 COMMENTS

 1. வார்த்த சும்மா சிங்கம் மாதிரி பாய்கிறது, நண்பரே, நான் முதன் முதலாக உங்க ஸ்பாட்டுக்கு வந்திருக்கேன்.

 2. டிக்கட் எவ்வளவு பத்து டாலரா? இல்லை பனிரெண்டா?

  வாழ்த்துக்கள்

 3. //சிங்கையில் சூர்யாவிற்கு தற்போது ரசிகர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பலர் தங்கள் விருப்ப நடிகராக சூர்யாவை கூறுவதை கேட்க முடிகிறது.//

  உண்மைதான். வசந்தம் டிவி ல எப்பவும் வாரணம் ஆயிரம் பாடல்தான்

 4. உங்கள் விமர்ச்சனம் நன்றாக உள்ளது.
  தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

 5. இந்த படத்துக்கு இந்த விமர்சனம் சரியல்ல —- நீ விமர்சனம் எழுதுவதருக்கும் லாயக்கு இல்ல

  • இப்போ வந்த படங்களிலேயே இந்த படம் தான் கொஞ்சம் தேறுற மாதிரி இருக்குது. அதனால அதை கொண்டாடுவோம். அடுத்து இதை விட நல்ல படம் வரும் போது இந்த படத்தை கிரி மொக்கை என்று சொல்லுவார். அது வரை இந்த படம் நல்ல படமாக இருந்துட்டு போகட்டும்.

 6. வணக்கம் கிரி நலமா?
  சிங்கம் பட விமர்சனம் பற்றி பல பதிவுகளை படித்து இருந்தாலும் இந்த பதிவில் நீங்கள் எழுதியது அருமையாக உள்ளது.

 7. யாழ்ப்பாணத்தில் சிங்கத்திற்கு சுறாவிற்கு கிடைத்த வரவேற்பின் நூறில் ஒன்று கூட இல்லை .அதற்காக சுறா நல்ல படமென்று கூறவில்லை . இங்கு விஜயின் எந்தப்படத்துக்கும் கூட்டம் சேரும்.

  ஏனைய நடிகர்களது நல்ல படமென்றாலும் கூட்டம் சேராது .(ரஜினி விதிவிலக்கு)

 8. உங்கள் பக்கத்தை சிறிது காலமாக படித்து வருகிறேன்.. எனக்கு பிடித்திருக்கிறது… 🙂

  சிங்கம் படம் எனக்கும் பிடித்து இருந்தது… 🙂

 9. தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்!!
  படம் பாத்துற (madura slang) வேண்டியது தான் !!

 10. நீங்களும் ஒரு குடும்பஸ்தன்!! அடுத்த முறை விமர்சனம் எழுதும் போது, “இப்படம் குடும்பத்துடன் காண வேண்டிய குதூகல சித்திரமான்னு? ” சேர்த்து எழுதுங்க!!!.. எம் பையன் எங்க அருவாளு இப்பவே துக்கிடுவானோ… கொஞ்சம் பயமா இருக்கு!!!

 11. நல்ல விமர்சனம் அவசியம் பார்க்கலாம் என்று தோன்றுகிறது
  நல்ல விறுவிறுப்பாக எழுதியுள்ளீர்கள்

 12. ரத்த கலரியே நடக்குது bloggers குள்ள நீங்க இங்க ஜாலி யா சிங்கம் விமர்சனமா … கலக்கு கிரி தல… வானம்பாடிகள் சார் சும்மா கலக்கிட்டாரு உண்மைதமிழன் சார் blog ல .. free யா இருந்தா பாருங்க

 13. பொன்விழி செந்தில் ராமலக்ஷ்மி வெயிலான் யாசவி பிரவின்குமார் ரமேஷ் சந்தர்சிங் செந்தில் புதுவை சிவா எப்பூடி மகேஷ் கனகு அருண் ஜாவா தவநெறிச்செல்வன் அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ யாசவி & ரமேஷ் பதிமூன்று வெள்ளி ..நீங்களும் சிங்கை தானா! 🙂

  @ senthil ரைட்டுங்கண்ணா 😉 மன்னித்து அருளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  @ புதுவை சிவா ரொம்ப நலம் 🙂

  @ எப்பூடி அந்த அளவிற்கா வித்யாசம்! 😮

  @ ஜாவா படம் எல்லாம் ஒவ்வொருவர் பார்வை, நான் கூறுவது மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். Opinion differs 🙂 அப்புறம் இப்பத்த பசங்க எல்லாம் உஷாரு.. கவலையே படாதீங்க.. அப்படி எல்லாம் சிக்கிக்க மாட்டாங்க 🙂

  @ அருண் எல்லாவற்றையும் பார்த்துட்டு படித்துட்டுத்தான் இருக்கேன்.. பதிவுலக அரசியல் பார்த்து வெறுத்து போச்சு! இதனால் தற்போது ஒதுங்கியே இருக்கிறேன். தற்போது கூட கொஞ்சம் விரிவாகத்தான் எழுதினேன். நானே ஒதுங்கி போகும் போது எதற்கு அது பற்றிய விமர்சனம் என்று தற்போது நீக்கி விட்டேன் 🙂

 14. சிங்கம் ட்ரைலர் பார்த்த போது இருந்த அபிப்ராயம் உங்கள் விமர்சனம் படித்தவுடன் மாறி போனது படம் பார்க்கிறேன்

 15. ***கண்டிப்பாக சிங்கம் வெற்றிப்படம் தான் சந்தேகமே இல்லை.***

  நல்லவேளை! நான் கொஞ்சம் பயந்துகொண்டே இருந்தேன். 🙂

  ***ஒரு கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள்,***

  ஹாலிவுட் ஆக்டர் டாம் க்ரூஸும் கொஞ்சம் குட்டைதான். அதனால அவர் மிகக் கவனமாக “காலணி” மற்றும் பலவித மானிப்புலேஷன் செய்து உயரமாகத் தன்னை காட்டுவாராம் 🙂

  -வருண்

 16. சிங்கம் – ரொம்ப ரொம்ப சுமார் ரகம் தான், என்னோடைய பார்வையில்……
  வேறு சில சொதப்பல் படங்களை பார்த்து களைத்து போய் இருந்த வேலையில் இந்த மாதிரி படங்களையும் ரசிக்க வேண்டிய கட்டாயம்..
  ஹரி யின் வழக்கமான அதே மாதிரி Genre படம்..
  படத்தில் எனக்கு பிடித்தது பாடல்கள், ரொம்ப சூப்பர் ஆனால் அதுவும் இந்த மாதிரி கதை களனுக்கு பொருந்த வில்லை.
  அனுஷ்கா ஹ்ம்ம். தனி கட்டுரையே எழுதலாம்
  Cop story பண்ணலாம், ஆனால் இது ரொம்ப மசாலா தனம். Surya மேல இருந்து தானே கீழ குதிச்சுகரார். குற்ற பிரிவு படம் எவ்வளவோ மேல்.

  படம் கூட பரவலை, இந்த விவேக் ஏ கொஞ்சம் எதாவது பண்ணுங்கப..முடியல

 17. இங்க ஒரு படத்துக்கு 13 மலேஷியா வெள்ளி தான். அங்கயும் அதே ரேட் தானா ? ( 13 சிங்கப்பூர் வெள்ளி ). என்ன கொடுமை கிரி இது ?

  @செந்தில் இப்போ வந்த படங்களிலேயே இந்த படம் தான் கொஞ்சம் தேறுற மாதிரி இருக்குது. அதனால அதை கொண்டாடுவோம். அடுத்து இதை விட நல்ல படம் வரும் போது இந்த படத்தை கிரி மொக்கை என்று சொல்லுவார். அது வரை இந்த படம் நல்ல படமாக இருந்துட்டு போகட்டும்.

 18. ///முதல்லையே சொல்லிடுறேன் காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது.///

  ரைட் !!!நம்பளுக்கான படம் இல்லை ..,ஆமா ”குட்டி பிசாசு” விமர்சனம் எங்கே கிரி ??????ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் …,

  ஷங்கர்

 19. நேற்று தான் படம் பார்த்தேன்.

  ஹரி, “ஆறு, ஆதவன், சாமின்னு” கலந்து அடிச்சாலும் படம் அருமையாக இருக்கிறது.

  நேரம் போவது தெரியாமல் இப்படிதான் ஒரு படத்தை கொண்டு போக வேண்டும் :-).

  நன்றி!.

 20. @சரவணன் பேசுறதோட இல்லாம படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க! 🙂

  @வருண் சூர்யாக்கு என்ன “மானிப்புலேஷன்” செய்தாலும் வேலைக்கு ஆகாது போல இருக்கு 🙂

  @சதா உங்களுக்கு சிங்கம் பிடிக்கலையா! ம்ம்ம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.அப்புறம் சூர்யா தெளிவா தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்..ஒரு வட்டத்துக்குள்ள நிற்க்காம அனைத்து பிரிவிலும் படம் செய்வது என்று! இதை தொடராமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

  விவேக் வாயில வெடி வைத்தால் தான் சரி ஆகும் போல! கிர்ர்ர்ர்

  @ தினேஷ் ஆமாங்க இது படம் வெளியாகி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டும் பிறகு பத்து வெள்ளி மட்டுமே! சுறாவுக்கும் 13 வெள்ளி கொடுத்து போனோம் 🙁

  @ஷங்கர் அப்புறம் எப்படி தலைவர் படம் பார்ப்பீங்க.. தலைவர் படமும் லாஜிக் இல்லாதது தானே! இவர்களை போல ரொம்ப மோசம் மற்றும் அலப்பறை இல்லை அவ்வளோ தான். காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார். இது பற்றி விரைவில் ஒரு பதிவிடுகிறேன்.

  குட்டிப்பிசாசு சிங்கையில் வெளியாகவில்லை ஷங்கர்.

  @ சிங்கக்குட்டி ரிப்பீட்டு! 🙂

 21. கிரி ,

  நான் சுறா மாதிரி இருக்கும் நினைச்சிட்டேன் :)) அப்புறம் தலைவர் படத்தை எல்லாம் compare பண்ணாதீங்க …,அவர் லாஜிக் இல்லாம பண்ணாலும் அது ரசிக்கிற மாதிரி இருக்கும் …,

  அப்புறம் கிரி ,எந்திரன் stunt வீடியோ பார்த்தேன் ALEX MARTIN ஒருத்தர் பண்ணறார் பயங்கரமாய் இருக்குது பார்த்தீங்களா ??????

 22. “நான் சுறா மாதிரி இருக்கும் நினைச்சிட்டேன்”

  அந்த அளவிற்க்கெல்லாம் மோசம் இல்லை. நீங்க சொன்ன வீடியோ பார்த்தேன்..படம் வந்தால் தான் தெரியும் எப்படி இருக்குனு! 🙂

 23. இதுக்கு மேல என்ன வேணும், நல்ல பொழுதுபோக்கு படம்… 🙂

 24. வாவ்.. சூப்பர்.. விமர்சனம்…!!

  அனுஷ்கா உயரம் குறித்த வரிகள்….. :-)))))

  ரசிக்கும் படி உள்ளது.. பகிர்வுக்கு..நன்றி..

 25. @சக்தி பார்த்தாச்சா! உங்க பையன் எப்படி இருக்கான் 🙂

  @ஆனந்தி நன்றி 🙂

 26. சிங்கம் வெரி………………………….வெரி,,,,,,,,,,,,,,,,,,சூப்பர்……………..போலீஸ் கெட்டுப் வெரி பீடிபுள் …………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here