“கோலங்களும் அரசியும்” என்னைப் படுத்தும் பாடு :-(

51
கோலங்களும் அரசியும்

லைப்பைப் பார்த்ததும் உன்னை யாருப்பா கோலங்களும் அரசியும் எல்லாம் பார்க்கச் சொன்னதுன்னு தான்னே நினைக்கறீங்க. Image Credit

எனக்குச் சீரியல் என்றாலே அலர்ஜி! ஒரு படிக்கட்டு ஏறி வருவதையே ஒரு எபிசொட் முழுவதும் காட்டி மனுசனை கொலை வெறி ஆக்குவாங்க.

நான் கொஞ்சம் பரபரப்பு ஆள் என்பதால் இதற்கு பொறுமை பத்துவதில்லை.

சீரியல்

எனக்குச் சீரியல் பிடிக்கவில்லை என்றாலும் வீட்டில் அம்மா பார்ப்பதற்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன்.

என்னைப் போன்றவர்கள் வேலைக்குப் போகிறோம் ..வெளியே சுத்த வாய்ப்புண்டு.

பாவம் அம்மா போன்றவர்கள் எங்கே செல்வார்கள் அப்படிச் செல்ல உடலும் ஒத்துழைக்காது.

எனவே, அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சீரியல் தான்.. அதனால் அந்த விசயத்தில் தலையிட மாட்டேன்.

எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சேனல் மாற்ற வற்புறுத்த மாட்டேன்.

இத்தனை நாள் தனியா இருந்தேன், இப்ப அம்மா. மனைவி, பையன் எல்லோரும் வந்துட்டாங்க.. அதனால வழக்கம் போல மறுபடியும் எல்லாச் சீரியலும் பார்க்க வேண்டியதாகி விட்டது .

அதுல வர பாதி சீரியல் சகித்துக் கொள்ளலாம் என்றாலும் இந்தக் கோலங்கள் மற்றும் அரசில வர இம்சையைத் தாங்கவே முடியல.

இது இரண்டுமே ப்ரைம் டைம் ல் வருவதால் வேறு வழியே இல்லை.

அப்படி என்னதான் விசயம்னு கேட்கறீங்களா!

கோலங்கள்

ஆதி, மேனகா அப்புறம் தோழர்னு ஒருத்தர் வருவாரு அவர் பேர மறந்துட்டேன். இவங்க பண்ணுற (பேசுற) கொடுமைய சத்யமா தாங்க முடியலை.

இவங்க பேசுற தமிழ் கேட்டு எனக்கு நான் பேசுற தமிழே மறந்துடும் போல இருக்கு, அந்த அளவிற்கு அநியாயம் பண்ணிட்டு இருக்காங்க.

இந்தக் கொடுமைய கேட்க யாருமே இல்லையா!

அப்புறம் இந்தச் சீரியல் ஆரம்பித்து இடைப்பட்ட காலத்தில் இரண்டு முறை தேவயானி குழந்தையே பெத்துக்கிட்டாங்க..(ஹலோ! சீரியல்ல இல்லைங்க நிஜமாகவே).

இந்தக் காலத்துல இந்தச் சீரியலை முடிக்கிற அபிப்பிராயம் இருக்கிற மாதிரியே தெரியல.

இந்தச் சீரியல் தயாரிப்பு விகடன் குழுமம், பதிவுகளை எல்லாம் அவர்கள் படிப்பார்கள் என்று பலர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்.

விகடனாரே! உங்களுக்குப் புண்ணியமாகப் போகுது எங்களைப் போல ஆட்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்குப் பாவமா தெரியவில்லையா!

கொஞ்சம் கருணை காட்டுங்க!

முதல்ல இந்த ஆதி

யப்பா! சீரியல் ஆரம்பிக்கும் போதே இவரு வாய்க்குள்ள ஸ்பீக்கரை வைத்துத் தைத்து விட்டாங்க போல.. அநியாயத்துக்குக் கத்து கத்துனு கத்துறாரு.

அதுவும் அதுல தேவயானி பேரு “அபி” அதை இவரு அப்பி அப்ப்பி னு கூப்பிட்டு… முடிய்ய்ய்யல.

எதுக்குத் தான் இந்தக் கத்து கத்துறாருன்னு அவருக்குத் தான் வெளிச்சம். இவரு கிட்ட தமிழ் படுற பாடு.. ரொம்பக் கொடுமை.

அப்புறம் மேனகா

இவங்க சீரியல்ல வந்த நேரத்திலிருந்து இப்ப வரை நாட்களைக் கணக்கெடுத்தால் இந்நேரத்திற்கு ஒரு வெள்ளைக்காரனே நல்லா தமிழ் பேசி இருப்பான்.

ஆனால், இவங்க பேசுற தமிழ் (இவங்க வெளிநாடு ரிட்டனாம்) கேட்கிறவன் தலை சுத்தி கீழே விழுந்துடுவான்.

“ஹே! ஆழ்தி….” பயப்படாதீங்க! “ஆதி”யத்தான் அவங்க அப்படி ஸ்டைல் ஆகச் சொல்றாங்களாம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணைக் கட்டுது.

இது சும்மா சேம்பிள் தான், முழுசும் பார்த்தா …

கடைசியா நம்ம தமிழ் ஐயா! (இவரு பேரு சீரியல் ல பாண்டியன் என்று நினைக்கிறேன்).

இவரு சுத்த தமிழ் மட்டும் தான் பேசுவாரு, இவங்க எல்லாம் தமிழ் பேசாம தமிழை(நம்மை) கொலை செய்தால் இவர் தமிழ் பேசி மனுசனை டெர்ரர் ஆக்குறாரு.

இவரு நல்லா தான் தமிழ் பேசுகிறார் என்றாலும் சீரியஸ் டைம்ல கூட இப்படி இவரு நடுவுல பேசினா சிரிப்பு தான் வருது (தமிழ் பற்றாளர்கள் மன்னிக்க).

எனக்கு இவர் வந்தாலே சிரிப்பு வந்திடும்.

இப்ப என்னைப் பார்த்து அம்மாவும் இவர் வந்தா சிரிக்க ஆரம்பித்து விட்டாங்க..ஹா ஹா ஹா அதுவும் இவர் அப்பீபீபீ னு பேச ஆரம்பிச்சாலே எனக்குக் கிச்சு கிச்சுன்னு ஆகிடும்.

உலகப் போலீஸ் ராதிகாவின் “அரசி”

சீரியல்னு எல்லோரையும் திரும்பிப் பார்க்க (அட! நல்லா இல்லைன்னு இல்லைங்க) வைத்த பெருமைக்குரியவர் ராதிகா தான்.

தனது “சித்தி” சீரியல் மூலமா. அதுல பலியான ஒருவரில் நானும் ஒருவன்.

ஆமாங்க! நானும் அந்தச் சீரியல் ரெகுலரா பார்த்தேன்.

அதற்கப்புறம் “செல்வி” னு ஒரு சீரியல் போட்டாங்க அதை எப்படிக் கொண்டு போவது என்று தெரியாம அப்புறம் அதை எதோ டகால்ட்டி வேலை செய்து மூடி விட்டு, அதை அப்படியே அரசி ன்னு ஒரு சீரியல் ஆக ஓட்டிட்டு இருக்காங்க.

இப்படி உட்டாலங்கடி வேலை செய்த அன்னைக்கு முடிவு செய்தேன்.

இனிமே சீரியலுக்கு ஒரு பெரிய கும்பிடுடான்னு, பார்க்க வைத்ததும் அவங்க தான் பார்க்காம வைத்ததும் அவங்க தான்.

அதற்குப் பிறகு அப்பப்ப பார்த்தது எல்லாம் அம்மாவிற்காகத் தான் இன்று வரை.

அரசி

இப்ப “அரசி” க்கு வருவோம்

இவங்க கமிஷனராக இதுல வராங்கன்னு நினைக்கிறேன்.

ஆனால், இவங்க பண்ணுற வேலைய பார்த்தா அதுல வர சரோஜினி, நல்ல சிவம் மற்றும் இன்னொருத்தர் பேரு மறந்துட்டேன் (அஜய் ரத்னம்) மாமா சார் னு சொல்லுவாரு வேணு அர்விந்த்.

இவங்களுக்கு மட்டும் தான் கமிஷனராக இருக்காங்களோன்னு நமக்குச் சந்தேகமா இல்லை உறுதியாகவே முடிவு செய்து விடலாம்.

வேற எந்த வேலையும் பார்ப்பதாகவே தெரியல. சிரிப்புப் போலீஸ் வடிவேல் மாதிரி இவங்க குடும்பப் போலீஸ் ராதிகா.

இவங்க கமிஷனராக நடிப்பதால் அதற்காக இவர் பண்ணுற அலப்பறை ரொம்ப ஓவர்ங்க

கோலங்கள் சீரியல் ஆதியே பரவாயில்லை போல இருக்கு இதுல போலீஸ் ஆக வரும் ராதிகாவிற்கு..யப்பா என்ன சத்தம்.

யாரை பார்த்தாலும் டாய்ய்ய்ய்ய் டூய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் னு சத்யமா இந்தக் கொடுமைய மட்டும் தாங்கவே முடியல.

இதை அம்மா கிட்ட சொல்லிப் புலம்பிட்டேன்.

அம்மா! எந்தச் சீரியல் வேணா தாங்கிக்கிறேன் போலீஸ் ராதிகா சத்தத்தை மட்டும் தாங்க முடியலைனு.

போலீஸ் ராதிகா

போலீஸ் ராதிகா வந்தா (இதுல இரட்டை வேடம்) மட்டும் அம்மா என்னைப் பார்த்துச் சிரிச்சுட்டே இருப்பாங்க..நான் டென்ஷன் ஆவதை பார்த்து.

சும்மா சொல்லலைங்க யாரா இருந்தாலும் பயப்படமாட்டாங்க.

சுள்ளான் படத்துல தனுஷும் பசுபதியும், எதற்கு எடுத்தாலும் கத்துவாங்களே! அது மாதிரி ஒரே சத்தம்.

குழந்தைங்க இந்தச் சத்தத்தைக் கேட்டால் பயத்துல ஒண்ணுக்கு போய்டும்.

ராதிகா பக்கத்துலையே வெடி குண்டு வெடிச்சாலும் அசர மாட்டாங்க.

யாரா இருந்தாலும் ராதிகாவ பார்த்துப் பயப்பட்டே ஆகணும் (இல்லைனா ஒரு வேளை சீரியல் விட்டே தூக்கினாலும் தூக்கிடுவாங்க? ).

இப்ப வேற கோலங்கள் சீரியல் ல மாதிரி தமிழைக் கொலை செய்ய அமெரிக்காவுல இருந்து ஒரு கோஷ்டி வந்து இருக்காங்க.. அடேய்! கிரி நீ செத்தே! ? .

இப்ப சொல்லுங்க தலைப்பு சரி தானே!

ஹலோ! இவ்வளோ பெரிய பதிவிற்கு அந்தச் சீரியலே பரவாயில்ல போல இருக்குனு யாருப்பா சவுண்ட் விடுறது ? சீரியல் என்றதும் அதே பாதிப்புல இப்படி எழுதிட்டேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

51 COMMENTS

 1. //இப்ப வேற கோலங்கள் சீரியல்ல மாதிரி தமிழை கொலை செய்ய அமெரிக்காவுல இருந்து ஒரு கோஷ்டி வந்து இருக்காங்க..//

  🙂 LOL

  அமெரிக்காவில இருக்கிற தமிழர்கள் இப்படித்தான் தமிழ் பேசுகிறார்களா?!

 2. நல்லாத்தான் சீரியல் பார்க்கிறீங்க கிரி…

  பதிவை படிக்காமலே மறுமொழி இடுகிறேன் :-))

 3. ///ஹலோ! இவ்வளோ பெரிய பதிவிற்கு அந்த சீரியலே பரவாயில்ல போல இருக்கு னு யாருப்பா சவுண்ட் விடுறது :-))) சீரியல் என்றதும் அதே பாதிப்புல இப்படி எழுதிட்டேன் ஹி ஹி ஹி.///

  பரவாயில்ல விடுங்க.. உங்க வீடு.. உங்க டிவி.. நீங்க டிவியை உடைச்சிருந்தாகூட நான் ஏன்னு கேக்க மாட்டோமாக்கும்..!

 4. கிரி நல்லா கதை சொன்னீங்க, எனக்கு ரெம்ப நாளா புரியாம இருந்த கதை இப்பத்தான் புரியுது
  இப்படிக்கு
  முன்னாள் சீரியல் ரசிகன்

 5. //நசரேயன் said…
  கிரி நல்லா கதை சொன்னீங்க, எனக்கு ரெம்ப நாளா புரியாம இருந்த கதை இப்பத்தான் புரியுது //

  அதற்காக மறுபடியும் பார்க்க ஆரம்பித்து விடாதீங்க :-)))

  =============================

  //Oviyaツ said…
  🙂 LOL

  அமெரிக்காவில இருக்கிற தமிழர்கள் இப்படித்தான் தமிழ் பேசுகிறார்களா?!//

  அதென்னமோ சீரியல் காரங்களுக்கு மட்டும் அப்படி தான் ஆகுறாங்க. வெளிநாட்டில் இருந்து வந்தால் இப்படி தான் பேசுவாங்கன்னு இவங்களே முடிவு செய்துக்கறாங்க. படத்துல எல்லாம் சேட்டுக னா “நம்பல்க்கு நிம்பல்க்கு” னு சொல்றாங்களே (அப்படி நிஜமாவே சொல்றாங்களா!!!)அது மாதிரி :-))

  ===============================

  //’டொன்’ லீ said…
  நல்லாத்தான் சீரியல் பார்க்கிறீங்க கிரி…

  பதிவை படிக்காமலே மறுமொழி இடுகிறேன் :-))//

  ஹலோ! இதெல்லாம் நெம்ப ஓவர்..இது சீரியல் கொடுமையை விட பெரிய கொடுமையா இருக்கு

  ==========================

  //உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

  பரவாயில்ல விடுங்க.. உங்க வீடு.. உங்க டிவி.. நீங்க டிவியை உடைச்சிருந்தாகூட நான் ஏன்னு கேக்க மாட்டோமாக்கும்..!//

  :-))))

  உண்மை தமிழன் நீங்க சீரியல் எடுத்தால் அதை மெகா மெகா மெகா மெகா சீரியல் என்று தான் அழைக்க முடியும் ஹா ஹா ஹா பதிவு பெருசா பெருசா எழுதறீங்க …சீரியல் னா சும்மா விடுவீங்களா!

  ==========================

  //நட்புடன் ஜமால் said…
  நல்ல வேலை டீ.வி இல்லை இப்போ.
  தப்பிச்சேன்.//

  :-))) விரைவில் குடும்பஸ்தன் ஆகி அனைத்து “வளங்களையும்” பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன் 🙂

 6. 🙂 ஹலோ நீங்கப் பார்த்த சீரியல் கதைச் சொல்லி……இம்சை படுத்துகிறீர்களா ? யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையம் !

 7. //இதுல பார்த்தீங்கன்னா ஆதி, மேனகா (சூப்பர் பிகர் ங்க ;-)) //

  சும்மா இருக்குறவனையும் சீரியல் பார்க்க வச்சிருவிங்க போலயே!

 8. //இவ்வளோ பெரிய பதிவிற்கு அந்த சீரியலே பரவாயில்ல போல இருக்கு னு யாருப்பா சவுண்ட் விடுறது :-)))//

  வேறுயாரு தாய்குலங்களா தான் இருக்கும்

 9. //பிரேம்ஜி said…
  :-)))))))))))//

  பிரேம்ஜி நீங்க சிரிப்பதை பார்த்தால் சீரியல் பார்ப்பது இல்லை போல இருக்கு :-)))

  ==========================

  //goma said…
  கோலங்கள் அரசி பார்த்து தினமும் இடியட்பாக்ஸுக்குள் கண்ணை நட்டு வைத்திருக்கும் லட்சோப லட்சத்தினர் சார்பாகக் கேட்கிறேன்//

  ஹா ஹா ஹா ஹா

  //அபியின் ’மீ த ஃபர்ஸ்ட் கணவன்’ பற்றி ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி//

  இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் என் பார்வைக்கு அதிகம் வரவில்லை போல இருக்கு ஹி ஹி

  =====================

  //கோவி.கண்ணன் said…
  🙂 ஹலோ நீங்கப் பார்த்த சீரியல் கதைச் சொல்லி……இம்சை படுத்துகிறீர்களா ? யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையம் !//

  ஹா ஹா கோவி கண்ணன் நான் நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. சீரியல் ல உங்களோட சிஷ்யன் நான் :-)))

  ======================

  //ஜோதிபாரதி on 11:52 AM, April 03, 2009 said…
  இதுல பார்த்தீங்கன்னா ஆதி, மேனகா (சூப்பர் பிகர் ங்க ;-))

  :)))))))கிகிகிகிகி!//

  ஜோதிபாரதி அவர்கள் சிரிப்பதை பார்த்தால் என்னை மாதிரி தான் போல இருக்கே ஹி ஹி

  =================

  //வால்பையன் said…
  //இதுல பார்த்தீங்கன்னா ஆதி, மேனகா (சூப்பர் பிகர் ங்க ;-)) //

  சும்மா இருக்குறவனையும் சீரியல் பார்க்க வச்சிருவிங்க போலயே!//

  ஹா ஹா ஹா

  //வேறுயாரு தாய்குலங்களா தான் இருக்கும்//

  இருக்கும் இருக்கும் 🙂

  ====================

  //கைப்புள்ள said…
  சார்லி கூட சொல்லுவாரே “சிஸ்டர் பேரு முத்துப்பேச்சி”ன்னு. இப்ப அந்த படத்துல வர முகம் ஞாபகத்துக்கு வருதா?/

  ம்ஹீம்! நினைவிற்கு வரல..இன்னொரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நோட்டிஸ் பண்றேன்

  //மேக்கப் செய்யற மாயங்கள் தான் எத்தனை?//

  மேக் அப் மட்டும் னு சொல்ல முடியாது..மற்றதுக்கு விளக்கம் கொடுத்தால் ஹி ஹி என்னை அடிக்க வந்துடுவாங்க 😉

  //மத்தபடி உங்க பதிவு சூப்பருங்க//

  நன்றியோ நன்றி

  //வெறுப்பா பாத்தே இவ்ளோ தெரிஞ்சிருக்குன்னா… ஆர்வமா பாத்தா…???//

  அட! நீங்க வேற..அது தான் ஒரு எபிசொட் முடிவதற்குள் ஏகப்பட்ட முறை பேரை சொல்லிட்டே இருக்காங்களே :-((

  ======================

  //Sasirekha Ramachandran on 12:26 PM, April 03, 2009 said…
  unga pathiva padichu vayiru valikka sirichen.veruppa ipdiyuma comedya eludharadhu!!!simply superb!!!//

  :-))) நன்றிங்க சசிரேகா உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

  //oru ottu pottachu ungalukku!//

  நன்றி 🙂

 10. மெகா சீரியல் என்பது மகா கொடுமை…நீங்க எழுதினது கொஞ்சம் தான்..எல்லா சீரியல் இத எழுதுனோம்னா அது ஒரு மெகா பதிவாகிப்போகும்… ஆனா எல்லா வீட்லயும் இது நடக்குது….இருந்தாலும் என்ன பண்ண ….வீட்ல இருக்கிற பெண்களுக்கு இது ஒன்னு தான் பொழுதுபோக்கு…(உங்க வீட்லயும் இந்த டயலாக் டெலிவரி இருக்குமே…?)

  அப்புறம் ஒரு சின்ன விஷயம்…உங்க எனைப்பற்றி, பிரிவுகள், தமிழில் எழுத, என்று இடபக்கமாக இருக்கும் இன்ன பிற விஷயங்கள் எல்லாத்தையும் வடபக்கமாக மாற்றுங்கள்….பதிவுகள் அனைத்தையும் இடபக்கத்திற்கு மாற்றுங்கள்…
  .காரணம் பெருசா ஏதும் இல்ல… பெரும்பாலும் நாம் வலதுகை பழக்கம் உள்ளவர்கள்..ஆதலால் இடது புறம் நமது கழுத்து திரும்புவதற்கும் கண்ணை கொண்டு வாசிப்பதற்கும் எளிதாக இருக்கும்… ஆனால் தங்களது பதிவில் மாறாக இருப்பதால் படிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்…இருக்கிறது…. இதை கொஞ்சம் கவனியுங்கள்..

  இல்லை..என்னால் மாற்ற முடியாது என்று நினைக்கிறீர்கள் என்றால் தயவு செய்து அந்த இடது பக்க கன்டென்ட் எல்லாவற்றையும் சிறியதாக மாற்றுங்கள்…அதாவது சிறியதாக்குங்கள்… (ஏதோ சொல்லனும்னு தோணிச்சு …சொல்லிட்டேன்…அம்புட்டுதேன்..)

  ராம். R

 11. இது ரெண்டுமே பார்ப்பதில்லை. ’சித்தி’க்குப் பிறகு புத்தி தெளிந்து எல்லா சீரியலையும் விட்டு, சேர்ந்த நேரம் கண்டு வியந்து கவிதை கூட போட்டுட்டேன்ல:))!

 12. //அப்புறம் இந்த சீரியல் ஆரம்பித்து இடைப்பட்ட காலத்தில் இரண்டு முறை தேவயானி குழந்தையே பெத்துக்கிட்டாங்க..(ஹலோ! சீரியல் ல இல்லைங்க நிஜமாகவே), //
  :-)))))))))))

 13. கோலங்கள் அரசி பார்த்து தினமும் இடியட்பாக்ஸுக்குள் கண்ணை நட்டு வைத்திருக்கும் லட்சோப லட்சத்தினர் சார்பாகக் கேட்கிறேன்
  அபியின் ’மீ த ஃபர்ஸ்ட் கணவன்’ பற்றி ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி

 14. கோலங்கள் அரசி பார்த்து தினமும் இடியட்பாக்ஸுக்குள் கண்ணை நட்டு வைத்திருக்கும் லட்சோப லட்சத்தினர் சார்பாகக் கேட்கிறேன்
  அபியின் ’மீ த ஃபர்ஸ்ட் கணவன்’அபிஷேக் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி

 15. //மேனகா (சூப்பர் பிகர் ங்க ;-)) //

  காதலுக்கு மரியாதை படத்தை நல்லா கவனிச்சி பாத்தீங்கன்னா இந்த சூப்பர் பிகரைப் பாக்கலாம். விஜய் ஷாலினியைப் பாத்து தலைவாசல் விஜய் கிட்ட “இது நான் கட்டிக்கப் போற பொண்ணு”ன்னு சொல்லுவாரே…அதுல ஷாலினி கூட இருக்கற பொண்ணு தான் மேனகா. சார்லி கூட சொல்லுவாரே “சிஸ்டர் பேரு முத்துப்பேச்சி”ன்னு. இப்ப அந்த படத்துல வர முகம் ஞாபகத்துக்கு வருதா? மேக்கப் செய்யற மாயங்கள் தான் எத்தனை?
  :))

  மத்தபடி உங்க பதிவு சூப்பருங்க. உங்களை மாதிரி தான் நானும் பாதிக்கப்பட்டவன். அதுலயும் அபியோட அம்மா கேரக்டரா வர்ற சத்தியப்ரியா ஒரு இம்சை திலகம். பேசுன டயலாக்கையே திரும்ப திரும்ப பேசி கொல்லுவாங்க:( தோழரோட பேரு பாலகிருஷ்ணன். வெறுப்பா பாத்தே இவ்ளோ தெரிஞ்சிருக்குன்னா… ஆர்வமா பாத்தா…???

 16. //இவங்க சீரியல் ல வந்த நேரத்தில் இருந்து இப்ப வரை நாட்களை கணக்கெடுத்தால் இந்நேரத்திற்கு ஒரு வெள்ளைக்காரனே நல்லா தமிழ் பேசி இருப்பான்.//

  adhennamo umnaidhann. unga pathiva padichu vayiru valikka sirichen.veruppa ipdiyuma comedya eludharadhu!!!simply superb!!!

 17. //உங்க வீட்லயும் இந்த டயலாக் டெலிவரி இருக்குமே…?//

  அவங்க கஷ்டம் அவங்களுக்கு

  //ஏதோ சொல்லனும்னு தோணிச்சு …சொல்லிட்டேன்…அம்புட்டுதேன்//

  ஃபான்ட் மட்டும் சின்னது செய்து இருக்கேன்..நீங்க சொன்ன படி வலது பக்கம் மாற்றனும் என்றால் நான் டெம்ப்ளேட் தான் மாற்றனும், அது ரொம்ப கஷ்டம். பலர் ஏற்கனவே இது நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க

  உங்க முதல் வருகைக்கு நன்றி

  ====================

  //ராமலக்ஷ்மி on 2:40 PM, April 03, 2009 said…
  இது ரெண்டுமே பார்ப்பதில்லை. ’சித்தி’க்குப் பிறகு புத்தி தெளிந்து எல்லா சீரியலையும் விட்டு, சேர்ந்த நேரம் கண்டு வியந்து கவிதை கூட போட்டுட்டேன்ல:))!//

  ஹி ஹி ஹி நீங்க ரொம்ப நல்லவரு

  ===================

  //கலகலப்ரியா said…
  இதெல்லாம் எதுக்கு பார்க்கறிங்க.. படிக்க பிடிக்கும்னா லைப்ரரில போயி ஒரு டெலிபோன் புத்தகமாவது எடுத்து புரட்ட வேண்டியதுதானே.. //

  உங்க ஊர்ல மாதிரி இங்க ராத்திரி எல்லாம் லைப்ரரி திறந்து வைக்க மாட்டேங்களே! (ஆமா நீங்க எதுக்கு டெலிபோன் புத்தகம் எல்லாம் புரட்டிட்டு இருக்கீங்க..சரி இல்லையே!! ம்ம்ம் )

  //யாரோ அரசி கோலம் போடுறா போலநு நினைச்சேன்//

  நீங்க சொல்வதை கேட்பதற்கு அந்த அந்த சீரியல் வரவங்க சொல்ற புளுகே பரவாயில்ல போல இருக்கு :-)))

  இந்த பேர் எல்லாம் தெரியலைனா உங்க வீட்டுல டிவி இல்லாம இருக்கணும் இல்லைனா தமிழ் சேனலாவது இல்லாமல் இருக்கணும்.

  //அத விட்டுட்டு இங்க வந்து இப்டி புலம்பினா நாம இத யாரு கிட்ட சொல்லி புலம்பறது.. (ஹும்…)//

  இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு நினைத்தீங்க!!..நீங்க பின்னூட்டத்திலே புலம்பறீங்க..நான் பதிவ போட்டு புலம்புறேன்..அவ்வளோ தான் வித்யாசம் 😉

  //அது உங்க படம் இல்லேன்னா மன்னிச்சிடுங்க//

  பாருங்க! இதுக்கு தான் அதிகமா லைப்ரரி போய் புத்தகம் படிக்க கூடாது என்பது..நீங்க தானே என் படத்தை போடுங்க அப்பாவது இந்த சீரியல் பதிவு படிக்கிறவங்க என்னை பார்த்து நல்லா சிரிப்பாங்கன்னு சொன்னீங்க. நான் தான் படத்தை மட்டும் போட்டா எப்படிங்க கூட கொஞ்சம் கமெண்ட் ம் சேர்த்து போடுறேன்னு சொன்னேன் ..(கமெண்ட் போட்டுட்டு உங்க பேரை போடாததை இப்படி மறைமுகமா கேட்குறீங்க… அப்படித்தானே! மன்னித்துக்குங்க)

  என்னமோ போங்க! புத்தகம் அதிகமா படித்தா அறிவு அதிகமாகும் என்று தெரியும் இப்படி மறதி கூடவா ஆகும்? சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு

  ===================

  //அத்திரி on 7:48 PM, April 03, 2009 said…
  ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

  ஹா ஹா ஹா

 18. //பாலராஜன்கீதா said…
  உங்கள் வீட்டில் ரிமோட் கண்ட்ரோல் உங்களிடம் இல்லையா ?
  டிஸ்கி – இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை
  ;-)//

  :-))))

  சீரியல் டைம் ல மட்டும் என்கிட்டே இல்ல.. 😉

  டிஸ்கி: இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை.//

  =====================

  //VIKNESHWARAN said…
  கிரி நல்லா சிரிச்சேங்க… இது ஒரு பக்கம்னா இந்த மியூசிக்க வேற அங்கங்க கொடுத்து சாகடிப்பானுங்க பாருங்க… கொடுமை…//

  ஹா ஹா ஹா இந்த விக்ரமன் படத்துல வரும் இசை போலவா! :-))))

 19. இதெல்லாம் எதுக்கு பார்க்கறிங்க.. படிக்க பிடிக்கும்னா லைப்ரரில போயி ஒரு டெலிபோன் புத்தகமாவது எடுத்து புரட்ட வேண்டியதுதானே.. எனக்கு இதெல்லாம் சீரியல் பேரான்னு கூட தெரியல.. (யாரோ அரசி கோலம் போடுறா போலநு நினைச்சேன்..) அழுறது ஆரோக்யமான விஷயம்.. ஆனா டென்ஷன் ஆனா கஷ்டம்.. சீரியல் டைம்ல காதில ஹெட்போன் மாட்டிக் கொண்டு திருவாசகம் கேட்கவும்.. அத விட்டுட்டு இங்க வந்து இப்டி புலம்பினா நாம இத யாரு கிட்ட சொல்லி புலம்பறது.. (ஹும்…)

 20. ஆ சொல்ல மறந்துட்டேன்.. ஹெட்போன் கஷ்டம்னா.. இங்க இடது பக்கத்ல காத பொத்தி டெமோ கொடுக்கிறீங்களே (அது உங்க படம் இல்லேன்னா மன்னிச்சிடுங்க) அதைப் பின்பற்றவும்!

 21. //மேனகா (சூப்பர் பிகர் ங்க ;-)) //

  ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 22. //கலகலப்ரியா said…
  இதான்யா லோகம்.. நல்லதுக்கு காலமில்ல//

  :-))) நல்ல சொன்னீங்க ..நல்லதுக்கே காலமில்ல

  //நான் டிவி பக்கம் போறதில்லைங்க, தமிழ் சேனல் இல்லவே இல்லைங்க//

  அப்ப நான் சரியா தான் கூறி இருக்கேன்.. 😉

  //எல்லாம் சீரியல் பண்ற வேலை..//

  சரியா சொன்னீங்க..என்ன பண்ணுறது எங்க வீட்டுல தமிழ் சேனல் இருக்கே :-((

  //ஆமாங்க நான்தான் உங்க படத்த போடச்சொன்னேன்.. அது எப்டிங்க மறக்கும்//

  :-))) என் படத்தை சொன்னீங்களா அப்ப நான் தான் மறந்துட்டேன்..அடடா! மாற்றி உங்க படத்தை போட்டுட்டேனே..ரொம்ப பழைய போட்டோவோ!! உங்களுக்கே அடையாளம் தெரியல உங்களை.

  //கலகலப்ரியாக்கு நன்றின்னு சொல்லி இருக்கத்தான் வேணும்.. ஆனாலும் அவ்ளோ தூரம் நாம எதிர்பார்க்கலிங்க//

  நீங்க கலகலப்ரியா இல்ல கலக்கல் ப்ரியா..உடனே எதை கலக்குனேன்னு கேட்டுடாதீங்க..சும்மா ஒரு ஃப்ளோ ல சொன்னேன்

  உங்களுக்கு ரொம்ப நன்றி ..தாமதமா சொன்னேன்னு கோவிச்சுக்க மாட்டீங்கன்னு நம்புறேன் 🙂

 23. உங்கள் வீட்டில் ரிமோட் கண்ட்ரோல் உங்களிடம் இல்லையா ?
  டிஸ்கி – இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை
  😉

 24. //கலகலப்ரியா said…
  என்னோட படமா எங்க? ஓ.. சூறாவளியா.. ஹிஹி… நான் கவனிக்கல.. //

  ஆஹா! அப்ப நீங்க இனி கலகலப்ரியா இல்ல சூறாவளி ப்ரியா :-))) (நான் வேற உங்க படம்னு “ஒரு” படத்தை போட்டுட்டேன்… எனக்கே தெரியாம உங்களோட பல படம் என் தளத்தில் வந்து விட்டது போல இருக்கே…)

  //இல்லைனா ஐஸ்வர்யா படத்த சொன்னீங்கன்னா .. ஆமாங்க அது பழசு.. நாம 2010 லதான் miss world ல கலந்துக்கலாம்னு இருக்கோம்//

  என்னங்க இத்தனை உருவத்துல வறீங்க…. முதல்ல நீங்க கொடுத்த படம், அப்புறம் சூறாவளி, இப்ப ஐஸ்வர்யா… நிஜமாவே நீங்க கலக்கல்ப்ரியா தான்.

  //பரவால்லிங்க… இப்போ நன்றி சொன்னிங்கல்ல.. அது போதும்..//

  எதோ உங்களை (கொஞ்சமே) கொஞ்சம் என்னால திருப்தி செய்ய முடிந்ததுக்கு ரொம்ப சந்தோசமுங்க..

  அடிக்கடி வாங்க 🙂 நல்லா கலகலன்னு (இந்த கலகல வை வடிவேல் ஸ்டைல் ல் படிக்கவும்) இருக்கு

 25. கிரி நல்லா சிரிச்சேங்க… இது ஒரு பக்கம்னா இந்த மியூசிக்க வேற அங்கங்க கொடுத்து சாகடிப்பானுங்க பாருங்க… கொடுமை…

 26. //PATHSPACE ARCHITECTS//கலக்கல் பாஸ்… இது நிறைய பேருக்கு டெம்ப்ளேட் செலக்ட் பண்ணும் போது பயன்படும் 🙂

 27. //கலகலப்ரியா on 3:09 AM, April 04, 2009 said…
  அதான் சொல்லிட்டிங்கல்ல பட்டாளத்தோட வந்துடுறோம்… //

  வாங்கோ வாங்கோ! (பட்டாளம் படத்துல நடிக்கிறவங்க கூட உங்களுக்கு தெரிஞ்சவங்களா ..ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-)) )

  //வைகைப்புயல் வடிவேலு தெரியும்.. ஆனா அவரோட initial வை அப்டிங்கிறது இப்போதாங்க தெரியும்//

  அப்படி இல்லைனா கலகல வடிவேல் இல்லாம கல “கலவை” வடிவேல் ஆகிடுவாரு..நல்லாவா இருக்கும் ..

  =======================

  //வெட்டிப்பயல் said…
  //PATHSPACE ARCHITECTS//

  கலக்கல் பாஸ்… இது நிறைய பேருக்கு டெம்ப்ளேட் செலக்ட் பண்ணும் போது பயன்படும் :-)//

  நல்ல ஐடியா தான்..நானும் இப்படி நினைத்து இருந்தேன்..ஆனால் அந்த டெம்ப்ளேட்டில் வேறு பிரச்சனை…..அதனால அறியப்படுவது யாதெனில் … :-))

 28. அடங்க்கொக்கமக்கா.. பாவம் இவ்ளோ கஷ்டப்படுறது எதுக்குன்னு ஐடியா கொடுத்தா.. நம்மளுக்கே சொல்றிங்களா.. இதான்யா லோகம்.. நல்லதுக்கு காலமில்ல..

  அட ராவணா.. நான் டிவி பக்கம் போறதில்லைங்க, தமிழ் சேனல் இல்லவே இல்லைங்க.. (உங்க பாட்டி மேல சத்யமா இல்லைங்க)

  அட புலம்பறவங்களுக்கு ஆறுதல் சொல்றது கூட புலம்பலா தோணுது பாருங்க.. எல்லாம் சீரியல் பண்ற வேலை..

  ஆமாங்க நான்தான் உங்க படத்த போடச்சொன்னேன்.. அது எப்டிங்க மறக்கும்.. ஆனா சீரியல் பார்க்கறப்போ.. குறைந்த பட்சம் டென்ஷன் ஆறப்போ அத கடைப்பிடிக்க நீங்க மறந்துடாதிங்கன்னு சொன்னேனுங்க..(கலகலப்ரியாக்கு நன்றின்னு சொல்லி இருக்கத்தான் வேணும்.. ஆனாலும் அவ்ளோ தூரம் நாம எதிர்பார்க்கலிங்க..) புரியுதுங்களாங்…

 29. சும்மா சொல்லலைங்க யாரா இருந்தாலும் பயப்படமாட்டாங்க…இந்த சுள்ளான் படத்துல தனுஷும் பசுபதியும் ..எதற்கு எடுத்தாலும் கத்துவாங்களே அது மாதிரி ஒரே சத்தம். குழந்தைங்க இந்த சத்தத்தை கேட்டால் பயத்துல ஒண்ணுக்கு போய்டும். ராதிகா பக்கத்துலையே வெடி குண்டு வெடிச்சாலும் அசர மாட்டாங்க. யாரா இருந்தாலும் ராதிகாவ பார்த்து பயப்பட்டே ஆகணும் (இல்லைனா ஒரு வேளை சீரியல் விட்டே தூக்கினாலும் தூக்கிடுவாங்க :-))) ) இப்ப வேற கோலங்கள் சீரியல் ல மாதிரி தமிழை கொலை செய்ய அமெரிக்காவுல இருந்து ஒரு கோஷ்டி வந்து இருக்காங்க.. அடேய்! கிரி நீ செத்தே!//

  ஆஹா….செம கடுப்பாகிட்டீங்கள் போல??? இப்பிடியான விசயங்களைப் பற்றித் தெரிஞ்சு தான் நான் உந்த மாதிரிக் கொடுமைகளைப் பாக்கிறதே இல்லை??

  பதிவை நகைச்சுவை கலந்து கொண்டு சென்ற விதம் அருமை கிரி!

  தொடருங்கோ!

 30. என்னோட படமா எங்க? ஓ.. சூறாவளியா.. ஹிஹி… நான் கவனிக்கல.. வாஸ்தவம்.. இல்லைனா ஐஸ்வர்யா படத்த சொன்னீங்கன்னா .. ஆமாங்க அது பழசு.. நாம 2010 லதான் miss world ல கலந்துக்கலாம்னு இருக்கோம்..

  பரவால்லிங்க… இப்போ நன்றி சொன்னிங்கல்ல.. அது போதும்.. *better late than never* ஹிஹி..

 31. நம்மளுக்கு நிறைய முகங்கள்.. லக்கலக்கலக்கலக்க..

  ஐயோ.. நன்றி என் திருப்திக்கில்லைங்க.. நாம இதெல்லாம் எதிர்பார்க்கறதில்ல.. உங்க திருப்திக்கு சொல்லிக்க வேண்டியதுதான்..:p

  அதான் சொல்லிட்டிங்கல்ல பட்டாளத்தோட வந்துடுறோம்… (வைகைப்புயல் வடிவேலு தெரியும்.. ஆனா அவரோட initial வை அப்டிங்கிறது இப்போதாங்க தெரியும்..)

 32. ஹலோ, ஹல்லல்லோ……..

  நீங்க இந்த மாதிரி எல்லாம் சொல்லி, எங்கள் “தல”யின் “தலைவி” நடித்த சீரியல பாக்க விடாம பண்ணிடலாம்னு பாக்கறீங்களா?? (யப்பா, எவ்ளோ பெரிய வார்த்தை, இத சொல்லி முடிக்கும் முன்பே ஒரு எபிசோட் முடிஞ்சுடும் போல இருக்கு)….

  நாங்க பாக்காம விட மாட்டோம் ……….

  (தலைவலியுடனாவது டி.வி.சீரியல் பார்ப்போர் சங்க தலைவர் – குட்டி ஒலி குப்புசாமி)

 33. //கமல் said…

  ஆஹா….செம கடுப்பாகிட்டீங்கள் போல??? இப்பிடியான விசயங்களைப் பற்றித் தெரிஞ்சு தான் நான் உந்த மாதிரிக் கொடுமைகளைப் பாக்கிறதே இல்லை??//

  நல்ல காரியம் செய்தீங்க 🙂

  //பதிவை நகைச்சுவை கலந்து கொண்டு சென்ற விதம் அருமை கிரி!

  தொடருங்கோ!//

  நன்றி கமல் (உங்கள் முதல் வருகை(என்று நினைக்கிறேன்)க்கும் சேர்த்து)

  ============================

  //6:38 AM, April 04, 2009
  R.Gopi on 9:05 AM, April 04, 2009 said…
  ஹலோ, ஹல்லல்லோ……..//

  ஹா ஹா ஹா

  //நீங்க இந்த மாதிரி எல்லாம் சொல்லி, எங்கள் “தல”யின் “தலைவி” நடித்த சீரியல பாக்க விடாம பண்ணிடலாம்னு பாக்கறீங்களா??//

  அரசியிலும் அரசியலை புகுத்தும் கோபி :-)))

  //நாங்க பாக்காம விட மாட்டோம்//

  ஆஹா! தீவிர ரசிகர் போல இருக்கே !!!

  //தலைவலியுடனாவது டி.வி.சீரியல் பார்ப்போர் சங்க தலைவர் – குட்டி ஒலி குப்புசாமி//

  தலைவலியுடன் தலைவி :-))))))))

 34. தலையிடாம பார்த்தே இவ்வளவு விவரமா? சீரியல் பார்க்குறவங்களே கேரக்டர் பேருக்கு தடுமாறுவாய்ங்க. இங்க அசராம வருது. ஜமாய்ங்க. நடுவில 4 விளம்பரம் போட்டிருந்தா இதுவே சீரியல் மாதிரி இருந்திருக்கும். என்னா ஐடியா. பின்னோட்டம் பார்த்து முன்னோட்டமா?

 35. அதென்னமோ சீரியல் காரங்களுக்கு மட்டும் அப்படி தான் ஆகுறாங்க. வெளிநாட்டில் இருந்து வந்தால் இப்படி தான் பேசுவாங்கன்னு இவங்களே முடிவு செய்துக்கறாங்க. படத்துல எல்லாம் சேட்டுக னா “நம்பல்க்கு நிம்பல்க்கு” னு சொல்றாங்களே (அப்படி நிஜமாவே சொல்றாங்களா!!!)அது மாதிரி :-))
  ///
  தட்டுத்தடுமாறி தமிழ் பேசினாத்தானே இங்கு மரியாதை!!

 36. யப்பா! சீரியல் ஆரம்பிக்கும் போதே இவரு வாய்க்குள்ள ஸ்பீக்கரை வைத்து தைத்து விட்டாங்க போல.. அநியாயத்துக்கு கத்து கத்துனு கத்துறாரு.. அதுவும் அதுல தேவயானி பேரு “அபி” அதை இவரு அப்பி அப்ப்பி னு கூப்பிட்டு அவ்வ்வ்வ் முடியல. எதுக்கு தான் இந்த கத்து கத்துறாருன்னு அவருக்கு தான் வெளிச்சம். இவரு கிட்ட தமிழ் படுற பாடு ..ரொம்ப கொடுமை.//

  100க்கு100 உண்மை கிரி காட்டு கத்து கத்தி காதே செவிடாப்போச்சு

 37. சூப்பர் காமெடி,கிரி:-)))))))).சீரியல்கள் எதுவும் பார்க்காத எனக்கே இப்படிச் சிரிப்பு என்றால் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உங்கள் பதிவை இன்னுமே ரசித்திருப்பார்கள்.

 38. //மோகன் said…
  எல்லாரும் இந்தக் கொடுமையை அனுபவிச்சிதான் ஆகணும் போல இருக்கே?//

  தப்பிக்க முடியாது :-))

  ========================

  //பாலா…said…
  தலையிடாம பார்த்தே இவ்வளவு விவரமா?//

  தலையிடாம பார்த்ததால் தான் இத்தனை விவரம்..

  //சீரியல் பார்க்குறவங்களே கேரக்டர் பேருக்கு தடுமாறுவாய்ங்க. இங்க அசராம வருது//

  என்னது தடுமாறுவாங்களா! விட்டா ஆதி டிரைவர் பேரையே சொல்லுவாங்க

  //4 விளம்பரம் போட்டிருந்தா இதுவே சீரியல் மாதிரி இருந்திருக்கும்//

  அதுக்கு தான் கூகுள் ல கேட்டேன் அவங்க இந்த சீரியல் காரங்க மாதிரி தமிழ் னா நாங்க ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க விளம்பரம் நகின்னுட்டாங்க…அதனால வேற வழி இல்லாம கம்முனு இருந்துட்டேன்.

  ==================

  //thevanmayam on 7:54 AM, April 05, 2009 said…
  தட்டுத்தடுமாறி தமிழ் பேசினாத்தானே இங்கு மரியாதை!!//

  இதை கேட்டா நம்ம விவேக் காமெடி நினைவிற்கு வருகிறது “வாலை பல தோல் வலுக்கி வாலிபர் உயிர் ஊஊஷல்” :-)))))))

  =========================

  //jackiesekar on 8:31 AM, April 05, 2009 said…
  100க்கு100 உண்மை கிரி காட்டு கத்து கத்தி காதே செவிடாப்போச்சு//

  அங்கே செட் ல இருக்கிறவங்க நிலைமைய கொஞ்சம் நினைத்து பார்த்தேன் ஹி ஹி ஹி

  =========================

  //ஷண்முகப்ரியன் said…
  சூப்பர் காமெடி,கிரி:-)))))))).சீரியல்கள் எதுவும் பார்க்காத எனக்கே இப்படிச் சிரிப்பு என்றால் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உங்கள் பதிவை இன்னுமே ரசித்திருப்பார்கள்.//

  நன்றி சார். உங்களிடம் இருந்து இப்படி பாராட்டு பெறுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி

  ====================

  //இனியவன் said…
  நல்ல எழுதியிருக்கீங்க நண்பரே//

  நன்றி இனியவன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

 39. ஐ அம் எஸ்கேப், நல்ல வேல எங்கம்மா சீரியல் பாக்கவே மாட்டங்க. இந்த தெக்கத்தி பொண்ணு மட்டும் கொஞ்ச நாள் பாத்தாங்க ஆனா மொக்க தாங்காம விட்டுடாங்க.

  ஆனா ஒன்னு பார்தீங்கன்னா எல்லா சீரியல்லயுமே ஒரே தீம் தான், ஒரு நல்ல குடும்பம் (குறிப்பா நல்ல ஆன்ட்டி, அதாங்க ஹீரோயின்) அவங்க அழிஞ்சி போகனும்னு துடிக்கிற ஒரு குடும்பம் (கண்டிப்பா கருப்பா இல்லனா கண்ணாடி போட்ட வில்லின் அப்புறம் கூட இருந்து ஒத்து ஊதி காட்டு கத்த ஒரு வில்லி, அடிக்கடி கண்ணு வெளிய வந்து விழுற அளவுக்கு ஒரு பார்வை). ஏன் தான் இத தாண்டி இந்த மாங்கா மடையனுங்க யோசிக்கவே மாட்டேங்கராகளோ.

  ரொம்ப அருமையான பதிவு கலக்குங்கோ. அப்புறம் இன்னும் நிறைய சீரியல் பாத்து என்ஜாய் பண்ணுங்கோனா. :)))))))))))))

 40. //நான் அவன் இல்லீங்கோ said…

  //ஆனா ஒன்னு பார்தீங்கன்னா எல்லா சீரியல்லயுமே ஒரே தீம் தான், ஒரு நல்ல குடும்பம் (குறிப்பா நல்ல ஆன்ட்டி, அதாங்க ஹீரோயின்) அவங்க அழிஞ்சி போகனும்னு துடிக்கிற ஒரு குடும்பம் (கண்டிப்பா கருப்பா இல்லனா கண்ணாடி போட்ட வில்லின் அப்புறம் கூட இருந்து ஒத்து ஊதி காட்டு கத்த ஒரு வில்லி, அடிக்கடி கண்ணு வெளிய வந்து விழுற அளவுக்கு ஒரு பார்வை). ஏன் தான் இத தாண்டி இந்த மாங்கா மடையனுங்க யோசிக்கவே மாட்டேங்கராகளோ. //

  இதெல்லாம் இருந்தால் தாங்க சீரியல் :-))

  //ரொம்ப அருமையான பதிவு கலக்குங்கோ//

  நன்றிங்க

  //அப்புறம் இன்னும் நிறைய சீரியல் பாத்து என்ஜாய் பண்ணுங்கோனா. :)))))))))))))//

  ஏன் இந்த கொலை வெறி :-)))

 41. கிரி,

  இந்த கருமாந்திரங்களை விட..அதற்க்கு ரீ-ரிக்கார்டிங் தான் படு மோசம்… சாதாரணமா லுக் வுடுற சீனுக்கு வயத்துல புளியை கரைக்கிற அளவுக்கு மியூசிக் குடுத்து பில்டப்பு வேற?? இதற்க்கு எங்க மியூசிக் வட்டாரத்தில் “சன் டிவி ரீ-ரிக்கார்டிங்” ன்னு ஒரு பேரு வேற உண்டு…காதை செவிடாக்கி, இசை மேல் வெறுப்பு வரவைக்கும் இந்த மாதிரி இசையை நிறுத்துவார்களா??

 42. கிரி,
  கோலங்கள்ல தமிழ் பேசும் தோழர் பாலகிருஷ்ணண்( சீரியல் பேரு).

  இதெல்லாம் விடப் பெரிய கொடுமை ஒன்னு அரசியில நான் பார்த்தது. அதப் பத்தி பதிவு எழுதனும்னு நினைச்சேன் கிரி. நேரங்கிடைக்காம விட்டுட்டேன்.

  அரசி வீட்டுக்கு வர்ற அமெரிக்க சொந்தக்காரங்க செல்வியப் பார்த்துட்டு யாருன்னு கேட்ப்பாங்க, அடுத்து செல்வி வீட்டுக்கு வேற போவாங்க. அங்க ஜிஜே கூட பேசுவாங்க அந்தக் கொடுமைய நீங்க பார்க்கலை.
  என்னக் கண்றாவித் தெரியுமா அது.

 43. //வெங்க்கி said…
  கிரி,

  இந்த கருமாந்திரங்களை விட..அதற்க்கு ரீ-ரிக்கார்டிங் தான் படு மோசம்… சாதாரணமா லுக் வுடுற சீனுக்கு வயத்துல புளியை கரைக்கிற அளவுக்கு மியூசிக் குடுத்து பில்டப்பு வேற??//

  ஹா ஹா ஹா

  //காதை செவிடாக்கி, இசை மேல் வெறுப்பு வரவைக்கும் இந்த மாதிரி இசையை நிறுத்துவார்களா??//

  இதெல்லாம் நடக்கிற காரியமா! 😉

  =========================

  //ஜோசப் பால்ராஜ் said…
  கிரி,
  கோலங்கள்ல தமிழ் பேசும் தோழர் பாலகிருஷ்ணண்( சீரியல் பேரு).//

  ஹி ஹி மறந்துட்டேன் மன்னிக்கவும்

  //இதெல்லாம் விடப் பெரிய கொடுமை ஒன்னு அரசியில நான் பார்த்தது. அதப் பத்தி பதிவு எழுதனும்னு நினைச்சேன் கிரி. நேரங்கிடைக்காம விட்டுட்டேன். //

  மறக்காம பதிவ போடுங்க

  அப்படின்னு சொல்லிட்டே எல்லாவற்றையும் பார்த்துடுறீங்க போல :-)))

  //அந்தக் கொடுமைய நீங்க பார்க்கலை.
  என்னக் கண்றாவித் தெரியுமா அது.//

  அதை பார்த்தேன் ஒண்ணுமே எனக்கு புரியலை..விசு வசனம் மாதிரி இருந்தது..சரி இதை கவனித்து என்ன ஆகபோகுதுன்னு விட்டுட்டேன்..

 44. Kiri, nalla sonninga. Aadhi eppothum Tie kattiye irukkirare. kudikkum pothum, kulikkum pothum inna pira samacharangal podum. athuppol Abi eppothum handbag.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here